in

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 33

 

புதன்கிழமை காலையில் ப்ரதீபன் அலுவலகத்தில் தீவிரமாக வேலையை செய்துக் கொண்டிருந்த போது இண்டர்காம் ஒலித்தது.

அவன் அதை எடுத்து, “ஹலோ” சொன்னதும் மறுமுனையில், “குட் மார்னிங் சார்.. ரிசெப்ஷனில் இருந்து ஷில்பா பேசுறேன்” என்றவளது குரலில் சிறு பயம் எட்டிப்பார்த்தது. 

“ஹ்ம்ம்” 

‘என்னனு கேட்டிரமாட்டாரே!’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவள் அவனிடம், “உங்களை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க சார்” என்றாள். 

“பெயர்?” 

“அது.. வந்து சார்” என்று அவள் தந்தியடிக்கவும்,

அவன் சிறு கோபமும் எரிச்சலுமாக, “பெயர் கூட கேட்காம என்ன வேலை பார்க்குறீங்க! வெட்டிக் கதை பேசும் போது எத்தனை கேள்வி கேட்குறீங்க?” என்று திட்டத் தொடங்கினான்.

ஷில்பா மனதினுள் ‘ஒரே ஒரு நாள் அந்த ஷீபா கிட்ட சீரியல் பத்தி பேசினேன்.. என் கிரகம் அதை இந்த டெரர் கேட்டு தொலைச்சிட்டார்’ என்று புலம்பினாள்.

அவன் ஒருவாறு திட்டி முடித்ததும் ஷில்பா வரவழைத்த தைரியத்துடன், “சார்.. அவங்க உங்க அப்பா அனுப்பின ஆள்னு சொன்னாங்க.. அதான்..” என்று இழுத்து நிறுத்தினாள். 

“யாரா இருந்தாலும் பெயர் கேட்டிருக்கணும்” 

“சாரி சார்” 

“பெயரை கேட்டு சொலுங்க” 

“சரி சார்” என்றவள் தன் அருகில் இருந்தவளிடம், “மேடம் உங்க பெயர் என்ன?” என்று கேட்டாள். 

ஷில்பாவின் அருகில் இருந்தவள் சிறு புன்னகையுடன், “சாரி.. என்னால நீங்க திட்டு வாங்கிட்டீங்க போல.. என்னோட பெயர் ப்ரித்திகா” என்றாள். 

ஷில்பா லேசாக புன்னகைத்துவிட்டு தொலைபேசியில், “சார் அவங்க பெயர் ப்ரித்திகா” என்றாள். 

மறுமுனையில் சத்தமே இல்லை என்றதும் ஷில்பா, “சார்.. ஹலோ.. சார்” என்றதும் சுயஉணர்வு பெற்ற ப்ரதீபன், “ஹ்ம்ம்.. சொல்லுங்க.. வேலையில் கவனிக்கலை.. என்ன பெயர் சொன்னீங்க?” என்று சமாளித்தான்.

அங்கே ப்ரித்திகாவோ மெலிதான புன்னகையுடன் நின்றிருந்தாள். ஷில்பா பலமுறை அவனை அழைத்ததில் இருந்தே அவனது அதிர்ச்சி இவளுக்கு புரிந்தது.

“ப்ரித்திகா” 

“எனக்கு அந்த பெயரில் யாரையும் தெரியாது.. பார்க்க முடியாதுன்னு சொல்லிருங்க” என்றபடி அழைப்பைத் துண்டித்தான்.

ஷில்பா வாயை திறக்கும் முன் ப்ரித்திகா புன்னகையுடன், “என்ன! என்னை தெரியாது.. பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களா?” என்றதும் ஷில்பா ஆச்சரியத்துடனும் சிறு அதிர்ச்சியுடனும் இவளை பார்த்தாள்.

ப்ரித்திகா, “அவருக்கு என்னை தெரியாது.. என்னை அனுப்பியது அவருடைய அப்பானு சொல்லுங்க” என்றாள். 

ஷில்பா தயங்கவும், ப்ரித்திகா, “நான் வேணும்னா இந்த போனில் பேசட்டுமா?” என்று கேட்டாள்.

“ஏன் மேடம் இந்த கொலைவெறி? என் வேலை எனக்கு முக்கியம்” 

“சாரி.. எனக்கும் வேலை முக்கியம்.. ஒரே ஒரு முறை முயற்சி பண்ணுங்களேன்” என்றதும் ஷில்பா கடவுளை வேண்டிக் கொண்டு ப்ரதீபனை அழைத்தாள்.

அவன் அழைப்பை எடுத்ததும், “சார் ரிசெப்ஷனில் இருந்து ஷில்பா.. உங்களுக்கு அவங்களை தெரியாதாம் உங்க அப்..” என்று அவள் முடிக்கும் முன், 

“என் அப்பா யாரையும் அனுபலை.. நான் அவரிடம் பேசிட்டேன்.. அவளை அனுப்பிட்டு உங்க வேலையை பாருங்க” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

 

பெருமூச்சொன்றை வெளியிட்ட ஷில்பா, “சாரி மேடம்..” என்றாள். 

“நீங்க ஏன் சாரி சொல்றீங்க.. அவ..ர் என்ன சொன்னார்னு சொல்லுங்க” 

ப்ரதீபனின் பதிலை ஷில்பா கூறியதும், புன்னகையுடன், “தன்க்யூ” என்றவள் சற்று தள்ளி சென்று நமசிவாயத்தை அழைத்து விவரம் கூறினாள்.

 

நமசிவாயம் ப்ரதீபனை அழைத்தார். அவன், “ஹலோ” சொன்னதும், அவர், “உன்னிடம் இதை எதிர்பார்க்கலை” என்றார். 

“நானும் தான் உங்களிடம் இதை எதிர்பார்க்கலை” 

“எதை?” 

“நீங்க எப்போ இப்படி மாறினீங்க பா?” 

“நான் என்ன மாறினேன்?” 

“அப்பா.. இது ஆபீஸ்.. இங்கே அவளுக்கு என்ன வேலை? இங்கே பெர்சனல் விஷயத்தை பேசுறது எனக்கு துளி கூட இஷ்டம் இல்லை..” 

“அவள் பெர்சனல் விஷயமா தான் பேச வந்திருக்கானு நீயா நினைச்சுக்கிட்டா எப்படி? நானும் அதுக்கு சம்மதம் சொல்ல மாட்டேன்.. ஏன் உன்னை பத்தி தெரிந்த அவளும் அதை செய்ய மாட்டா.. அது உனக்கு தெரியாதா! நிதானமா யோசிச்சா இப்படி டென்ஷன் ஆக மாட்ட” 

ப்ரதீபன் சற்று தணிந்தான். “எதுக்கு வந்திருக்கா?” என்று கேட்டான். 

“அதை அவளை கூப்பிட்டு கேளு” 

“அப்பா!” 

“என்ன?” 

“அவளை வீட்டுக்கு வரச் சொல்லுங்க” 

“அவளுக்கு கொடுக்கும் மரியாதை இது தானா? ரிசெப்ஷனிஸ்ட் ப்ரிதிக்கா பத்தி என்ன நினைப்பா?” 

“ச்ச்.. சரி கூப்பிட்டு பேசுறேன்.. ஆனா அவ எதுக்கு வந்திருக்கானு சொல்லுங்க” 

“அதை அவகிட்டயே கேளு” 

“அவகிட்ட கேட்கிறேன்.. இபோ நீங்க சொல்லுங்க” 

“அவ உன்கிட்ட வேலை கேட்டு வந்திருக்கா” 

“என்னது?” என்று அவன் பெரிதும் அதிர்ந்தான்.

நமசிவாயம் அறியாதவர் போல், “என்ன?” என்றார். 

“எனக்கு இதில் இஷ்டம் இல்லை” 

“ஏன்?” 

“அப்பா!” 

“என்ன?” 

“நீங்களும் அவளுடன் சேர்ந்துட்டு இப்படி பண்ணாதீங்க” 

“உனக்கு அவளை பிடிக்காதா?” 

“அது” 

“உன் மனசுல என்ன நெருடல்?” 

“அப்பா ப்ளீஸ்” 

“சரி இதை பத்தி அப்புறம் பேசலாம்.. இப்போ அவளை கூப்பிட்டு பேசு” 

“என்னால அவளுக்கு வேலை கொடுக்க முடியாது?” 

“ஏன்?” 

“ப்ரித்திகா என்பதால மட்டும் சொல்லலை.. இதுவரை என் கம்பெனியில் ப்ரெஷ்ஷர்ஸ் வேலைக்கு எடுத்தது இல்லை” 

“இனி எடு.. எதற்கும் ஒரு ஆரம்பம் வேணும் தானே!” என்று அவர் இலகுவாக கூறவும்,

அவன் சற்று திணறினான் ஆனால் அடுத்த நொடியே, “இதை நான் மட்டும் செயல் படுத்த முடியாது” என்றான். 

“அது சரி தான்.. உன் பேச்சுக்கு யோகேஷும் கண்ணனும் என்னைக்கு மறுப்பு சொல்லியிருக்காங்க?” 

தந்தையிடம் அதிகம் மறுத்து பேசிராத காரணத்தால், “சரி.. ஆனா இப்படியே அவளை வேலையில் சேர்க்க முடியாது.. நான் ப்ரெஷ்ஷர்ஸ்கு இண்டர்வியூ ஏற்பாடு பண்றேன்.. அதை அவ கிளியர் பண்ணா வேலை தரேன்” 

மகனின் சிந்தனையில் அவரது இதழில் புன்னகை அரும்பியது. அதே புன்னகையுடன், “சரி” என்றவர் “ஆல் தி பெஸ்ட்” என்று சேர்த்து கூறவும்,

ப்ரதீபன் ஆச்சரியத்துடன், “எனக்கு எதுக்கு?” என்று வினவினான்.

“என் மருமகளை சமாளிக்கிறதுக்கு” என்றவர், “சரி நான் வைக்கிறேன்” என்றபடி அழைப்பைத் துண்டித்தார்.

தன் தந்தையின் மாற்றத்தை கண்டு அவன் ‘சும்மாவே இவளை சமாளிக்க முடியாது.. இப்போ எப்படி சமாளிக்கப் போறேனோ?!’ என்று வாய்விட்டே புலம்பினான்.  

அப்பொழுது உள்ளே வந்த யோகேஷ், “என்னடா தனியா புலம்பிட்டு இருக்க?” என்று கேட்டான். 

“உனக்கு தெரியாது?” 

“என்ன டா?” என்ற யோகேஷிற்கு நிஜமாகவே புரியவில்லை. அவனுக்கு ப்ரித்திகாவின் வரவு பற்றி தெரியாது.

நண்பனை கூர்ந்து நோக்கியவன், “இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்றான்.

பின் இண்டர்காம் எடுத்து கண்ணனை அழைத்து, “என் ரூமுக்கு உடனே வா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் அடுத்து ஷில்பாவை அழைத்தான்.

அவள், “ஹலோ” சொன்னதும், “ப்ரதீபன் ஹியர்.. என்னை பார்க்க வந்தவங்க இருக்காங்களா கிளம்பிட்டாங்களா?” என்று அறியாதவன் போல் கேட்டான்.

“இருக்காங்க சார்” 

“சரி.. பைவ் மினிட்ஸ் கழிச்சு என் ரூமுக்கு அனுப்புங்க” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவனது கூற்றில் மண்டை காய்ந்த ஷில்பா ப்ரித்திகாவை பார்த்தாள். அவள் புன்னகைக்கவும் இவள் குழப்பத்துடன் புன்னகைத்தாள்.

 

கண்ணன் வந்ததும் ப்ரதீபன், “பெருசா ரெண்டு புது ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கிறது உங்களுக்கே தெரியும்.. அதனால புதுசா அஞ்சு பேர் எடுக்கலாம்னு இருக்கிறேன்.. அஞ்சு பேர் போதுமா? நீங்க என்ன நினைக்கிறீங்க?” 

“அஞ்சு பேர் சரியா தான் இருக்கும்” என்று கண்ணனும், “ஹ்ம்ம்.. அப்படியே பண்ணலாம்” என்று யோகேஷும் கூறினார்.

ப்ரதீபன், “ப்ரெஷ்ஷர்ஸ் எடுக்கலாம்னு நினைக்கிறேன்” என்றதும் இருவருமே, “என்னடா சொல்ற?” என்று வினவினர்.

ஒரு நொடி மெளனமாக இருந்தவன், “ப்ரெஷ்ஷர்ஸ் சலரி கம்மியா கொடுத்தால் போதும்.. பட்..” என்று மீண்டும் ஒரு நொடி மௌனமானவன், “சாரிடா.. இந்த முடிவுக்கு இது மட்டும் காரணமில்லை” என்றவன் யோகேஷின் முகத்தை பார்த்தான்.

யோகேஷ், “என்னடா? எதுக்கு சாரி சொல்ற? இப்போ எதுக்கு என்னை பார்க்கிற?” என்றதும் ப்ரித்திகாவின் வரவு பற்றி நண்பனுக்கு தெரியவில்லை என்பதை புரிந்துக் கொண்ட ப்ரதீபன் ஏதோ சொல்ல வாய் திறக்கும் முன் கதவை தட்டும் ஒலியுடன், “மே ஐ கம் இன்” என்று ப்ரித்திகாவின் குரலும் கேட்டது.

ப்ரதீபன், “என்னோட இந்த முடிவிற்கான முக்கிய காரணம் இதோ..” என்றவன், “எஸ்.. கம் இன்” என்றான்.

புன்னகையுடன் உள்ளே வந்த ப்ரித்திகா யோகேஷ் மற்றும் கண்ணனை பார்த்து ஒரு நொடி மெளனமாக நின்றாள்.

அவள் சுதாரிக்கும் முன் ப்ரதீபன், “சொல்லுங்க மிஸ் ப்ரித்திகா.. என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கிறீங்க?” என்று கம்பீரமான குரலில் கேட்டான்.

அவனது கம்பீரத்தை மனதினுள் ரசித்துக் கொண்டே அவனை ஒரு நொடி முறைத்தவள் பின் புன்னகையுடன், “என் வேலை விஷயமா உங்களை பார்க்க வந்தேன் சார்” என்றவள் ‘சார்’ என்ற வார்த்தையை அழுத்தத்துடன் கூறினாள்.

யோகேஷும் கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ப்ரதீபன், “நான் சிபாரிசுக்கு மதிப்பு கொடுப்பதில்லை” என்றான். 

“நானும் சிபாரிசுடன் வரலையே!” 

“என் அப்பா பெயரை யூஸ் பண்ணதுக்கு பெயர் என்ன?” 

“உங்களை சந்திக்கிறதுக்கு தான் உங்க அப்பா பெயரை யூஸ் பண்ணேன்.. என் திறமையை பார்த்து வேலையை கொடுத்தால் போதும்” என்று அவள் நிமிர்வுடன் கூறியதை அவன் மனம் ரசிக்கத் தான் செய்தது ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “உங்க திறமையை வெளிக்கிழமை இண்டர்வியூவில் காட்டுங்க.. இப்போ கிளம்புங்க” என்றான்.

அவள் புன்னகையுடன், “தன்க் யூ சார்” என்றுவிட்டு வெளியே சென்றாள்.

 

கண்ணன் ஆச்சரியத்துடன், “அன்னைக்கு பார்த்தவளா இவ?” என்று வினவ,

ப்ரதீபன் புன்னகையுடன், “அவளே தான்” என்றான். 

ஒரு வாரமாக முள்ளாக இருந்தவன் தற்பொழுது ரோஜாவாக புன்னகையுடன் பேசவும் மீளாத ஆச்சரியத்துடன் கண்ணன், “என்னால் நம்பவே முடியலை” என்றான். 

ப்ரதீபன், “எதை?” என்றான். 

“அன்னைக்கு அவகிட்ட இருந்த ஆளுமை என்ன! இன்னைக்கு உன்கிட்ட பணிவுடன் பேசியதென்ன!” 

“இது ஆபீஸ்.. இங்க நான் தானே பாஸ்!” 

“அப்போ வீட்டில் அவ பாஸ்ஆ?” என்று கண்ணன் வினவியதும் வாய்விட்டு சிரித்த யோகேஷ், “சரியா சொன்னடா மச்சான்” என்றான்.

ப்ரதீபன் கடுமையாக முறைக்கவும், கண்ணன், “உண்மையை தானே சொன்னேன்.. அன்னைக்கு நீ அவகிட்ட கெஞ்சிட்டு தானே இருந்த!” என்றான். 

“என் மேல தவறு இருந்ததால கெஞ்சினேன்.. அவ்ளோ தான்.. ஆபீஸ்ஸில் உறவுமுறைக்கு இடம் கிடையாது என்பது என்னோட கொள்கை.. அது அவளுக்கும் தெரியும்.. சரி இண்டர்வியூ பத்தி பேசலாம்” 

கண்ணன், “இவளுக்காக தான் இந்த இண்டர்வியூ?” என்று கேட்டான். 

“சாரி.. உங்க கிட்ட கேட்காம இந்த முடிவு எடுத்தது தப்பு தான்.. சாரிடா” என்று அவன் வருத்தமான குரலில் கூறவும்,

நண்பர்கள் மனம் பொறுக்காமல், “என்னடா சாரியெல்லாம் கேட்டுட்டு.. இண்டர்வியூ பத்தி சொல்லு” என்று ஒன்றாக கூறினர்.

“அப்பா இவளுக்கு வேலை கொடுக்க சொன்னாங்கடா.. ப்ரெஷ்ஷர்ஸ் வேலைக்கு எடுத்தது இல்லை.. உங்களை கேட்காம முடிவு எடுக்க முடியாதுன்னு சொன்னேன்.. அப்பா உங்க கிட்ட பேசட்டுமானு கேட்டாங்க.. அதான்.. சாரி..” 

யோகேஷ், “இன்னொரு முறை சாரி சொன்ன நீ அடி தான் வாங்கப் போற” என்றும்,

கண்ணன், “இப்போ எதுக்கு இவ்ளோ எக்ஸ்ப்ளனேஷன் தர?” என்றும் கூறினர்.

ப்ரதீபன் புன்னகையுடன், “தேங்க்ஸ்டா” என்றதும் இருவரும் செல்லமாக முறைத்தனர்.

அவன் புன்னகையுடன், “ஓகே.. ஓகே.. இப்போ இண்டர்வியூ பத்தி பேசலாம்” என்றான். 

யோகேஷ், “ப்ரித்திகாவை இண்டர்வியூ வைத்து தான் எடுக்கணுமா?” என்றதும் ப்ரதீபன் முறைத்தான்.

கண்ணன் யோகேஷின் காதில், “புன்னகை மன்னனா இருக்கிறவனை ஏன்டா அக்னி குழம்பா மாத்துற?” என்று முணுமுணுத்தான்.

ப்ரதீபன், “எப்போதுமே உறவுமுறைக்கு இங்கே இடமில்லை.. திறமைக்கு மட்டுமே மதிப்பும் மரியாதையும் உண்டு” என்றான். 

“ஓகே டா” என்று யோகேஷ் மெல்லிய குரலில் கூறினான்.

கண்ணன், “இவன் கிடக்கிறான்.. நீ இண்டர்வியூ பத்தி சொல்லுடா மச்சான்” என்றான். 

ப்ரதீபன், “பேபரில் விளம்பரம் கொடுக்கலாம்.. 60% இருந்தா கூட போதும் ஆனா டெக்னிகலி ஸ்டராங்ஆ இருக்கணும்..” என்றான். 

யோகேஷ், “வாக்-இன் மாதிரினா நிறைய பேர் வருவாங்களே டா!” என்றான். 

“முதல் நூறு பேரை மட்டும் ஏத்துக்குவோம்.. இண்டர்வியூ டைம் 8.307.30யில் இருந்து மணிக்குள் இங்கே இருக்கணும்னு சொல்லுவோம்.. கிரேஸ் டைம் பத்து நிமிஷம்.. 8.10 வரை அலோவ் பண்ணலாம்.. 8.11க்கு வந்தா கூட திருப்பி அனுப்பிடலாம்.. நூறுக்குள் தான் வரும்.. அப்படியே நூறு வந்தாலும் சமாளிக்கலாம்” 

“எப்படி டா?” என்று இருவரும் வினவினர்.

ப்ரதீபன், “முதல் ரெண்டு ரவுண்டு டெக்னிகல் ரிட்டன் டெஸ்ட்.. கண்ணா உன்னோட பிரெண்ட் ஒருத்தன் கம்ப்யூட்டர் சென்டர் வச்சிருக்கானே!” என்றான். 

“ஹ்ம்ம்.. விக்னேஷ்” 

“அவன் கிட்ட வெள்ளிகிழமை 8.30 மணியில் இருந்து 3 மணிவரை மூணு ரூமும் 20 கம்ப்யூட்டரும் கிடைக்குமான்னு கேளு” 

நண்பனிடம் பேசிவிட்டு வந்த கண்ணன் உற்சாகத்துடன், “குட் நியுஸ் டா.. அன்னைக்கு அவன் பார்ட்னருக்கு கல்யாணமாம்.. சென்டர் லீவ் தான்.. ஸோ ஃபுல்-டே ஃபுல் கன்ட்ரோல் நமக்கு தான்”  என்றான். 

ப்ரதீபன் உற்சாகத்துடன் திட்டமிட தொடங்கினான்.

“சுப்பர்.. முதல் ரவுண்டு கொஞ்சம் ஈஸியா இருக்கட்டும்.. பத்து கேள்விகள் பத்து நிமிஷத்தில் முடிக்கணும்.. ஆறு கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னவங்களை செலக்ட் பண்ணலாம்.. 

ரெண்டாவது ரவுண்டு பதினைந்து கேள்விகள் பத்து நிமிஷம்.. பன்னிரண்டு கேள்விகளுக்கு சரியான பதிலை சொன்னவங்களை செலக்ட் பண்ணலாம்.. மக்சிமம் இருவது பேரை செலக்ட் பண்ணலாம்.. நிறைய பேர் இருந்தால் அவங்க முடித்த டைம் லிமிட் வைச்சு பில்டர் பண்ணலாம்.. அது பெரிய சென்டர்.. ஸோ ஒரே நேரத்துல எல்லோருக்கும் ஆன்-லைன் டெஸ்ட் மாதிரி வைச்சா குவெஸ்டீன்ஸ் லீக் ஆகாம பார்த்துக்கலாம்..  

மூனாவது ரவுண்டு நீங்க ரெண்டு பேரும் டெக்னிகல் இண்டர்வியூ எடுங்க.. சின்னதா ப்ரோக்ரம் எழுத சொல்லுங்க.. 

நாலாவது ரவுண்டு பைனல்.. அதை நானும் சுரேஷும் பார்த்துக்கிறோம்.. அல்மோஸ்ட் நீங்களே பில்டர் பண்ணிருங்க.. மக்சிமம் எட்டு பேரை செலக்ட் பண்ணுங்க.. பைனலா அஞ்சு பேரை செலக்ட் பண்ணலாம்.. உங்களுக்கு வேற ஏதாவது ஐடியா இருக்கா?” 

கண்ணன், “உன்னை மாதிரி எங்களால் யோசிக்க முடியாது டா! அதானே மனேஜ்மென்ட் அண்ட் டிசிஷன் அதாரிட்டி உன் கிட்ட தந்திருக்கிறோம்” என்றான். 

ப்ரதீபன், “ஹ்ம்ம்.. நாளைக்கு ஈவ்னிங்குள்ள ரெண்டு பேரும் குவெஸ்டீன்ஸ் ப்ரிபர் பண்ணிக்கோங்க.. முதல் ரெண்டு ரவுண்டுக்கு வினோதினி, கார்த்திக் அன்ட் விஷாலை குவெஸ்டீன்ஸ் ப்ரிபர் பண்ண சொல்லுங்க.. அதை நான் பில்டர் பண்றேன்.. 

முதல் ரவுண்டு ஈஸியாகவும் ரெண்டாவது ரவுண்டு கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கணும்.. முதல் ரவுண்டில் ப்ரோக்ரம் வேண்டாம்.. டெக்னிகல் தியரி குவெஸ்டீன்ஸ் போதும்.. ரெண்டாவது ரவுண்டு மிக்ஸ்ஸடா இருக்கட்டும்.. இன்னும் டூ ஹவர்ஸ்-ல குவெஸ்டீன் பேப்பர்ஸ் என் டேபிளுக்கு வந்திருக்கணும்” என்றான். 

“சரி டா” என்று இருவரும் கூறினர்.

ப்ரதீபன், “மறுபடியும் சொல்றேன் திறமைக்கு மட்டுமே மதிப்பு கொடுங்க.. ப்ரித்திகா சரியா செய்யலைனா எனக்காக பார்க்க வேண்டாம்” என்றான். 

யோகேஷ் அரை மனதுடன் ‘சரி’ என்று தலையை ஆட்ட, கண்ணன் உற்சாகத்துடன் ‘சரி’ என்று தலையை ஆட்டினான். 

 

அதே நேரத்தில் ஸ்ரீராமை அழைத்த ப்ரித்திகா, “நான் வீட்டிற்கு வந்துட்டேன்” என்றாள். 

“அதுக்குள்ளேயா?” 

“அவன் கழுத்தை பிடித்து தள்ளாத குறையா வெளியே அனுப்பிட்டான்” 

“நீ சும்மாவா விட்ட?” 

“என்ன பண்றது! அது ஆபீஸ்” 

“..” 

“என்ன அமைதியா இருக்கிற?” 

“இல்லை.. ஆபீஸ் உனக்கு ஒரு தடையானு யோசிச்சிட்டு இருந்தேன்” 

“ஹ்ம்ம்.. அது பெரிய தடை தான்.. ஆபீஸ்குள்ள உறவுமுறை நுழைப்பது அவனுக்கு சுத்தமா பிடிக்காது.. அதான் அதிரடியா நுழையாம, உறவுமுறை பத்தி சொல்லாம ரிசெப்ஷன்ல அனுமதி கேட்டுட்டே அவனை பார்க்க போனேன்.. இருந்தாலும் ஓவரா தான் ஸீன் போடுறான்” 

ஸ்ரீராம் வாய்விட்டு சிரிக்கவும், ப்ரித்திகா, “ரொம்ப சிரிக்காதே! இனி டெய்லி காலையிலும் நைட்யும் என் சமையல் தான்” என்றதும் ஸ்ரீராமின் சிரிப்பு சட்டென்று நின்றுவிட இப்பொழுது அவள் வாய்விட்டு சிரித்தாள். 

ஸ்ரீராம், “எனக்கு ஒரு டவுட்” என்றான். 

“என்ன?” 

“ஆபீஸ்ஸில் உறவுமுறை சொல்லவே முடியாதுன்னு சொல்ற! அப்போ எதுக்கு அவர் ஆபீஸ்சில் வேலை?” 

“எனக்கும் அவனுக்குமான சதுரங்க ஆட்டத்தை ஆட நான் பெங்களூரில் இருக்கணும்.. XXX கம்பெனி என்னை வேலைக்கு கூப்பிட குறைந்தது ஆறு மாசம் ஆகும்.. அதுவரை நான் இங்கே இருக்க எனக்கு ஒரு வேலை தேவை..  அது அவன் கம்பெனியா இருந்தா டெய்லி அவனை சைட் அடிக்கலாமே! சைட் அடிக்க உறவுமுறை தேவை இல்லையே!” 

“சூப்பர் ஐடியா தான்.. ஆனா அவர் பாண்ட் ஏதும் கேட்டால்?” 

“அது என்ன பெரிய விஷயமா! எனக்கு இந்த வேலை பிடித்திருந்தால் இங்கேயே வேலையை தொடர்வேன்.. இல்லைனா இங்கே மூன்று மாத சம்பளம் கொடுத்து வெளியே வந்து XXX கம்பெனியில் சேர்வேன்.. எப்படியும் பணம் ஒரே குடும்பத்துக்குள் தானே போகுது” 

“ஹ்ம்ம்.. ஆல் தி பெஸ்ட்” 

“தன்க்யூ.. பை” என்றபடி அழைப்பைத் துண்டித்தாள். 

தேடல் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by GomathyArun

Story MakerContent AuthorYears Of Membership

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 32

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 34