in

உன்னில் சரணடைந்தேன்… 10

அத்தியாயம் 10

சத்யனும், வேந்தனும் அந்த காமேஷை நன்றாக கவனித்து விட்டு, சத்யன் ஜீவிக்கு பேசலாமா..? என்று அவளின் அலைபேசிக்கு குறுஞ் செய்தி அனுப்பினான்..  ஜீவி சம்மதம் சொல்லவும், அவளுக்கு அழைத்த சத்யன், அந்தப்பக்கம் ஜீவி எடுத்ததும்,.. அழுதுவிட்டாள், அவளின் அழுகையை கேட்டு திடுக்கிட்ட சத்யன் ஜீவி என்ன ஆச்சுவே யாருக்கு என்ன..? சரவெடி.. தேனு பாப்பா நல்லா இருக்காங்கதான..? பதட்டமாக என்னவென்று கேட்க,

ம்ம் அவங்களுக்கு ஒண்ணும் இல்லை.. எனவும் ஆசுவாசமானவன், அப்பறம் எதுக்கு லூசு அழுது என்ன பயம் காட்டின..? கோபத்தோடு கேட்க பிரின்ஸெஸ் பாவம்டா அவளை எப்படி மாத்தி வச்சிருக்காணுக அந்த மிருகப்பயலுக.. என்று ஆதங்கத்தோடு சொல்லி அழுதவளை எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் சத்யன் திகைக்க,

சத்யன் போனை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால், ஜீவியின் அழுகையை கேட்ட வேந்தன், அவனிடமிருந்து போனை வாங்கி, ஹேய் ஜீனி மிட்டாய்.. எதுக்கு அழறவ.? தேனுக்குட்டீ அதெல்லாம் தாண்டி பத்திரமா நம்மக்கிட்ட இருக்கா.. அதை மட்டும் மனசுல வை.. சமாதானம் செய்து கொண்டிருக்கும் போதே

வேந்தனிடம் இருந்து போனை வாங்கிய சத்யன், என்னாச்சு ஜீவி..? என கேட்க, வேந்தனின் பேச்சில் சிறிது சாமாதானம் அடைந்த ஜீவிகா சத்யனிடம் பிரின்சஸ்க்கு எதை பார்த்தாலும் பயம்.. சின்னதா பாராட்டினா கூட நடுங்க ஆரம்பிக்கிறா.. என்று மாலையில், தேனுவின் உள்ளங்கையின் மென்மையை பற்றி தான் கூறியதையும், அதற்கு தேனின் பிரதிபலிப்பையும் சொல்ல,

கேட்டுக் கொண்டிருந்த சத்யனுக்கு முகம் இறுகியது, வேந்தனோ தன் கோபத்தை அடக்க முடியாமல், அங்கிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான், சில நொடிகள் அமைதியாக இருந்த ஜீவி  சாம்பவி ரொம்ப கிரேட் டா இவ்வளவு சோகத்தையும் மனசுல வச்சிட்டு.. அதுக்குள்ளேயே மூழ்கி போகாம மீண்டு வந்திருக்கா.. என்று பாராட்ட,

இல்லை ஜீவி அவ அதுல இருந்து இன்னும் மீண்டு வரேல்ல.. நான் நினைக்கிறது சரின்னா அவ தேனுக்கு இப்படி ஆனதுக்கு தான் தான் காரணம் நினைச்சு, குற்ற உணர்ச்சில தவிச்சிட்டு இருப்பா.. அந்த எண்ணத்தில இருந்து தப்பிக்க தான் ஓய்வே இல்லாம வேலை செய்து கிடக்கா.. இதுக்கு ஒரே தீர்வு அவ மனசுவிட்டு பேசணும், வாய்விட்டு அழணும்.. அப்போதான் அவ இயல்பா இருப்பா.. அதை நான் கூடிய சீக்கிரம் நடத்தி காட்டுவேன் என்றவனிடம்,

எனக்கேனாமோ அப்படி தெரியலை..அவ ரொம்ப தெளிவா ஒரு நிமிர்வோடு இருக்கா உன் கண்ணுக்குதான் அப்படி தெரியுது போல, ஜீவி சத்யன் பேச்சை மறுக்க, நீ அவளை வெளி தோற்றத்தை வச்சு பார்க்கிற.. நான் அவ மனசுக்குள்ள இருந்து பாக்குதேன்… என சொன்னவன், வாய்ப்பு கிடைச்சா அவ கண்களை பார்ரு.. என்றுவிட்டு இன்று காமேஷ்க்கு தாங்கள் கொடுத்த தண்டனையை சொல்ல

கேட்டு கொண்டிருந்த ஜீவிக்கு, அவனை அடிக்க சொன்ன காரணத்தை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்தாள்.. ஆனாலும் இது ரொம்ப அருமையான காரணம் டா.. என்றவள் சரி சரி உன் ஆளு வரா நான் போனை கட்பண்றேன்.. சத்யன் ஏதோ சொல்வதற்குள் போனை அணைத்துவிட்டாள்..

சரவெடி குரலை கேட்கலாம் நினைச்சேன் அதுக்குள்ள போனை கட்பண்ணிட்டா.. முணுமுணுத்தவன்,

ஏதோ நினைவு வந்து வேந்தனிடம், எடே பங்கு அது என்னடே ஜீவிய ஜீனிமிட்டாய்ன்னு கூப்பிடுத..? இது எப்போடே நடந்துச்சு..? ஆச்சரியமாக கேட்க, நான் எப்போடே அப்படி சொன்னேன்..? நழுவ பார்க்க,..  ஆஹான்..! சத்யன் நக்கலாக கேட்டான்.. எடே பங்கு அது நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லடே.. என சொல்ல, சத்யன் அவனை நம்பாமல் பார்த்தான்..

அடே ரொம்ப கற்பனை பண்ணாத.. நானும் அவளும் மதியம் சாப்பாடு கொடுக்க போனோம்ல..அப்போ.. என்றுவிட்டு மேலே பார்க்க, நான் தூங்கிட்டேன் டே.. நீயே ஃப்ளாஷ்பேக் ஓட்டு.. நான் நம்ம ரீடர்ஸ்க்கூட அடிச்சு தெரிஞ்க்கிடுதேன்.. என்றுவிட்டு உறங்க சென்ற சத்யன்.. மீண்டும் வேந்தனிடம் வந்து.. எடே பங்கு இந்த காமேஷை செய்ற மாதிரி அவன் அப்பனையும் எதாவது செய்யணும்டே.. வயசானவன் கொடூரமா கொடுக்க வேண்டாம்னு நினைச்சேன்.. ஆனா ஜீவி பேசினதுல இருந்து அவனை பெத்த இவனும் தண்டனை அனுபவிக்கனும் முடிவு பண்ணிட்டேன் டே.. அதனால் இவனையும் கண்காணிக்க ஆள் போடு எனவும்

மிகச்சிறப்பாக செய்யலாம் டே பங்கு… என்றுவிட்டு தன் போனை எடுத்து யாருக்கோ அழைத்து சொன்னவன், தன் பெருவிரலை உய்ர்ந்தி வெற்றி குறி காட்ட சத்யன் சிறு புன்னகையுடன்.. நீ உன் ட்ரீமை கண்ட்டினியூ பண்ணுடே.. என்றுவிட்டு உறங்க சென்றான்..

வேந்தனுக்கு ஜீவியை எந்தவகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை..

இன்று மதியம் நடந்த்து நினைத்து பார்த்தான்.. சத்யனும் சாம்பவியும், பவிக்கு உணவு கொடுக்க கிளம்பி செல்ல, ஜீவியும், வேந்தனும் மட்டுமே இருந்தனர்.. ஜீவி இயல்பாக இருக்க வேந்தன் தான் முதல் முறையாக ஒரு பெண்ணுடன் தனியாக இருப்பது சங்கடத்தை கொடுத்தது, அதோடு தங்களை யாராவது இப்படி பார்த்தால், தவறாக நினைக்க கூடும் என நினைத்து நான் வெளியே இருக்கேன் நீ சாப்பிட்டு வா.. என்றுவிட்டு வெளியே வந்து அமர்ந்தான்..

சில நிமிடங்களில் அவன் கைகளில் உணவு தட்டு கொண்டு வந்து கொடுத்த ஜீவி தானும் சிறிது தள்ளி அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்.. எனக்கு பசி தாங்காது.. என்ற சொல்லோடு.. அவள் ரசித்து உண்பதை ஆச்சரியமாக பார்த்து..  நீ இதுக்கு முன்னே சோத்தையே பார்த்தது இல்லையா..? கேலியாக கேட்க, அதை கண்டு கொள்ளாமல்,

பார்த்திருக்கேன் சாப்பிட்டிருக்கேன்.. ஆனால் இப்படி சாவகாசமா உட்கார்ந்து ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டது இல்லை.. என்றுவிட்டு உணவில் கவனமாக, ஜீவி சொன்னதில் ஒரு நொடி திடுக்கிட்டவன்.. அவள் எப்பொழுதும் போல் விளையாட்டுகிறாள் என்று நினைத்து, அவனும் உண்ண தொடங்கினான்..

ஜீவி குழம்பில் உள்ள சுண்டைக்காயை கீழே போட போக.. அதை எதுக்கு கீழ போட்ற உடம்புக்கு நல்லது சாப்பிடு.. என்று அதட்டல் போட.. அது கசக்குது கர்லாகட்டை… என்று முகத்தை சுளித்து சொன்னவளை சிரிப்புடன் பார்த்தவன், அது சுண்ட வத்தல் அப்படி தான் கசக்கும்.. கொஞ்சம் வெறுஞ்சோறு எடுத்து அதுக்குள்ள வச்சு சாப்பிடு கசப்பு தெரியாது என சொல்ல,

முகத்தை சுளித்தவளை முறைத்து பார்க்க, நான் சாப்பிட்டு முடிச்சுட்டேன்.. என சொன்னவள், வேந்தன் ஒதுக்கி வைத்திருந்த் குழம்பு சேர்க்காத சோற்றை அள்ளிக் கொள்ள, வேந்தன் திகைத்து அவளை பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஜீவி, அதில் சுண்டைகாயை வைத்து உண்ண,  இப்படி சாப்பிட்டாலும் கசக்கதான் செய்யுது எனக்கு வேணாம்.. பிளீஸ் முகத்தை சுருக்கி கேட்டவளை பார்த்த வேந்தனுகு, தேனுவை விட சிறுபிள்ளை போல் தெரிந்தாள்..

அவனே அறியாமல், தன் உணவை சிறிது எடுத்து, அதன் உள்ளே சுண்டைகாயை வைத்து ஜீவிக்கு கொடுக்க, அவனையே பார்த்தவாறு வாங்கி கொண்டாள்.. ஏனென்றே தெரியாமல் வேந்தனுக்கு ஜீவியிடம் இயல்பாக உரிமை உணர்வு வந்தது.. ஆனால் அதை அவன் உணரவில்லை.. உணரும் போது..?

இருவரும் உண்டு முடித்து வர, வேந்தன் அமைதியாக வந்து அமர, என்ன உட்கார்ந்துட்ட கர்லாகட்டை..? கேட்டவளிடம் போனவிய திரும்பி வார வரைக்கும் இங்க தான இருக்கணும்.. வீட்டை அப்படியே வீட்டு போக சொல்லுதியா..? கடுப்பாக கேட்க,

சுற்றும் முற்றும் பார்த்த ஜீவி அந்த வீட்டின் இடது சுவற்றில் உள்ள ஆணியில் பூட்டும் சாவியும் தொங்க விட்டிருப்பதை பார்த்து அதை எடுத்து வந்தவள்,

உள்ள சாம் வச்சிருக்க சாப்பாடு கூடையை எடுத்துட்டு வாங்க நம்ம கிளம்பலாம்.. என்றவளை எரிச்சலோடு பார்த்து, இப்பதான சாப்பிட்ட் இன்னும் என்ன..? அதுவும் அது மத்தவியளுக்கு கொடுக்க வச்சிரூக்கா அதை எடுத்து வர சொல்லுத.. என்றவனை முறைத்து பார்த்தவள், யோவ் அவசர குடுக்கை.. நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுக்காம நீ பாட்டுக்கு பேசிட்டே போற..! வேந்தனிடம் பொறிந்தவள்

சாம் வச்சிட்டு போன சாப்பாட்டை நாம போய் குடுக்கலாம் சொல்ல வந்தேன்.. அது புரியாம சும்மா கத்திக்கிட்டு சும்மா உட்கார்ந்து சாப்பிட்டால் அது டைஜெஸ்ட் ஆகாது.. அதோட சாம் பாவம் ரொம்ப சோர்ந்து போய் தெரியறாங்க.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு தான்.. போங்க போய் உள்ள இருக்க அந்த கூடையை எடுத்துடு வாங்க.. நம்ம அவங்களுக்கு கொடுத்துட்டு வரலாம்.. என அழைக்க,

சே இது நமக்கு தோணலையே.. தன்னையே திட்டிக் கொண்டு சாம்பவி செய்து வைத்திருந்த அனைத்தயும் எடுத்து சைக்கிளில் வைக்க ஜீவி வீட்டை பூட்டிவிட்டு சாவியை பழைய இட்த்திலேயே வைத்துவிட்டு வேந்தனோடு இணைந்து கொண்டாள்…

செத்த ஓய்வெடுக்க வேண்டியது தான.. நான் இதெல்லாம் பாத்துக்கிடுதேன்.. கரிசனையாக சொல்ல, வந்த்துல இருந்து எரிஞ்சு விழுந்துட்டு இப்பா என்ன கரிசனை வேண்டிகிடக்கு, நொடிக்க, எனக்கு இது தேவை தான்.. என்றுவிட்டு சைக்கிளை தள்ளி கொண்டு சென்றான்..

ஜீவி அவனோடு நடந்தவாறே.. இந்த ஊர் மனசுக்கு ரொம்ப அமைதி தருது கர்லா கட்டை.. பெங்களூரும் குளிர்ச்சியான ஊர்ந்தான் ஆனால் இங்க கிடைக்கிற அமைதி அங்க கிடைக்கல.. நல்லவேளை சத்யா என்னை இங்க கூப்பிட்டான் இல்லேனா நான் அங்க மூச்சுமுட்டி.. சொல்லிக் கொண்டு வந்தாள் தன்னை சுதாரித்து நிமிர வேந்தன் ஜீவியையே பார்த்திருந்தான் .. ஆனாலும் மேற்கொண்டு எதூவும் கேட்கவில்லை..

இருவரும் பேசிக்கொண்டே வயலுக்கு வரவும், அங்கு உணவு நேரமும் வர சரியாக இருக்க, வேந்தனை அனைவருக்கும் தெரிந்த்தால், அவனோடு வம்பு பேச, வேந்தனும் அவர்களுக்கு சரிக்கு சரியாக வம்பு பேசி சிரிக்க.. சரியான ஜி எம் என்கிட்ட மட்டும் தான் உர்ராங்கொட்டான் மாதிரி இருக்கு மத்தவங்கக்கிட்ட எப்படி பேசுது பாரு..! வேந்தனை பார்த்து ஜீவி பழிப்புக்காட்ட, சரியாக அதே நேரம் வேந்தனும் ஜீவியை பார்க்க, ஹி..ஹி.. என்று சிரித்து வைத்தவளை பார்த்த வேந்தனுக்கு இதழ் ஓரம் சிரிப்பில் துடித்தை பாவம் ஜீவி அறியவில்லை..

வேந்தன் அருகில் இருந்த ஜீவியை பார்த்து என்ன ராசா யாரு இவிய..? அப்படியே தங்க சிலையாட்டம் இருக்காவ.. ஒரு பெண்மணி கேட்க, அது வந்து ஆண்ட்டி.. நான் ஸ்கூலுக்கு புதுசா வந்திருக்க டீச்சர்… வேந்தன் பதில் சொல்வதற்குள் ஜீவி முந்திக் கொண்டு சொல்ல, நான் ஆண்டி இல்ல.. எங்கிட்ட ஆடு கோழி எல்லாம் இருக்குது.. அந்த பெண்மணி ரோசத்தோடு சொல்ல, ஜீவி புரியாமல் வேந்தனை பார்த்தாள்..

அவளின் பாவனையை பார்த்த வேந்தன் சாம்பவி சிரித்தது போல் வாய்விட்டு சிரிக்க.. அவன் சிரிப்பதை பார்த்த பிறகுதான்.  தான் சொன்ன வார்த்தையை தவறாக நினைத்துவிட்டார்கள் என்று உணர்ந்து.. அடி ஜீவி உனக்கு வாயடக்கம் வேணும் டி..  அதான் அவங்க கர்லாக்கிட்ட கேட்கிறாங்கள்ல உன்னையார் முந்தி போய் மொக்கை வாங்க சொன்னது..  தன்னை தானே கடிந்து.. அந்த பெண்ணை பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்.

வேந்தன் அவர்களிடம் ஜீவியை பற்றி சொல்லி, அவள் சாம்பவியின் வீட்டில் தங்கியிருப்பதாக சொல்லிவிட்டு, அவர்களிடம் உணவிற்கான பணத்தை வாங்கிக் கொண்டு ஜீவியை அழைத்து சென்றான்.. போகும் போது அனைவருக்கும் உணவு கொடுக்க வேண்டுமே என்று அவசரத்தில் எதையும் கவனிக்காமல் சென்ற ஜீவி வரும் போது கண்ணில் பட்ட தின்பண்டங்களை எல்லாம் வேந்தனை நச்சரித்து வாங்கி உண்டவள், அந்த பண்ட்த்தின் பெயரையும் தெரிந்து கொள்ள வேந்தனை இம்சைக் உள்ளாக்கினாள்..

அந்த இம்சையரசி ஜீவி கேட்டதை வாங்கி கொடுத்து, அவள் சந்தேகங்களை திட்டிக்கொண்டே தீர்த்து வைத்தவன் டேய் துரோகி பங்கு நீ மட்டும் இப்போ என் கண் முன்னாடி வந்த இந்த வேந்தனை கொலைகாரனா பார்ப்படே..! மனதில் சத்யனை எண்ணை போடாமலே வறுத்தெடுத்தவன் ஒரு வழியாக ஜீவியை சாம்பவி வீட்டில் விட்டு செல்ல அங்கு சாம்பவி வந்திருந்ததால், நிம்மதியோடு வீடு நோக்கி சென்றான்.. நடந்ததை நினைத்து பார்த்திருந்த வேந்தன் அப்படியே உறங்கிவிட்டான்..

மறுநாள் எப்பொழுதும் போல் அதிகாலையில் விழித்த சாம்பவி தன் அன்றாட வேலையை பார்க்க, சத்தம் கேட்டு விழித்த ஜீவி, என்னை எழுப்பிருக்கலாம்ல சாம்.. தாங்கலுடன் கேட்டவள், சாம்பவி மறுத்தும் அவளுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தவள், என்னால சமைக்க முடியாது ஏன்னா எனக்கு சமைக்க தெரியாது.. அப்படியே கத்துக்கிட்டு சமைச்சாலும் உன் ருசி வராது.. சோ நீ சமையல் வேலை நீயே பார்த்துக்க.. சாம்பவியின் தாடையை தொட்டு கொஞ்சியவள்..

தேனை எழுப்ப போக அவ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் ஜீவி.. நான் வேலையெல்லாம் முடிச்சுட்டு தான் அவளை எழுப்புவேன்.. என சொல்ல, அப்ப சரி நான் தோட்டத்துக்கு தண்ணீர் ஊத்தவா..? கேட்க சாம்பவி சம்மதம் சொல்லவும், தோட்டத்திற்கு சென்றாள்..

தேனு எழுந்ததும் அவளையும் கிளப்பி, இரு பெண்களும் கிளம்பி வெளியே வர, சாம்பவிக்கு ஜீவியை எப்படி அழைத்து செல்வது என்று யோசித்தாள்..

சாம் நானும் தேனும் ஒரே ஸ்கூலுக்கு தான போறோம் நான் அவளை கூட்டிட்டு போகவா..? என கேட்க, இல்லை அவ்வளவு தூரம் எப்படி.. போவிய..?” சாம்பவி தயங்க  காலையில கிளைமேட் நல்லாதான இருக்கு அப்படியே நடந்து போறோம்.. ஜீவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே சத்யனின் ஜீப் அந்த பக்கம் வந்து கொண்டிருந்தது..

அவன் ஒரு கையில் போன் பேசிக் கொண்டு இன்னொரு கையில் ஸ்டேரிங்கை பிடித்து ஓட்டி கொண்டிருக்க

இது என்ன பழக்கம் போன் பேசிட்டே வண்டி ஓட்டிட்டு இருக்காவ..? தனக்குள் முணங்கியபடி சத்யனை சாம்பவி பார்க்க, சத்துமாவு..!! ஜீவி சத்யனை அழைத்தாள்.. ஜீவி குரலில் திரும்பி பார்த்தவன், சாம்பவியையும், தேனுவையும் பார்த்துவிட்டு, என்ன ஜீவி..? கேட்டபடி வர,

அது நானும் பிரின்ஸும் ஸ்கூலுக்கு போகணும்.. சாம் தான் எப்பவும் கூட்டி போவா.. இன்னுக்கு நானும் இருக்கதால என்னை விட்டு போக மனசில்லை.. என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கப்ப நீ வந்த.. எங்களை கொஞ்சம் ஸ்கூல்ல விட்றுயா.. என கேட்க

ஜீவி அப்படி கேட்டதும் சாம்பவி திகைத்து தேனுவை பார்க்க, அவள் இயல்பாக இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவள், ஜீவி நீ வேணா இவிய கூட போ நான் தேனுவை கூட்டி போய்க்கிடுதேன்.. என்று மறுத்த சாம்பவியிடம்,

ஏன் சாம் நானும் பிரின்ஸ்சும் ரெண்டுபேரும் ஒரே இடத்துக்கு தான் போறோம் அப்பறம் எதுக்கு உனக்கு வீண் அலைச்சல்.. நீ போய் எப்பவும் பார்க்கிற வேலையை பாரு இனி பிரின்சஸை ஸ்கூலுக்கு கூட்டி போறது என் வேலை… உரிமையாக அதட்டியவள்…

தேனுவிடம் பிரின்ஸஸ் நம்ம இந்த அங்கிள் வண்டில போகலாமா..? நீயும் நானும் ஜாலியா பின்னாடி உட்கார்ந்து.. இல்லை இல்லை நின்னுக்கிட்டே போகலாம் அப்படியே பறக்கிற மாதிரி இருக்கும்.. போகலாமா.. என உற்சாகமாக கேட்க ஜீவி சொன்ன தோரணையில் தேனுவிற்கு ஆசை இருந்தாலும், அவள் சாம்பவியை பார்க்க, உன் இஷ்டம்ட்டீ… சாம்பவி சொல்லவும்..

இவ்வளவு நேரம் இவர்களின் சம்பாஷ்ணையை அமைதியாக பார்த்திருந்தான் சத்யன், அவனுக்கு தேனு தன்னுடன் வர சம்மதம் சொல்ல வேண்டுமே என்று தவிப்பாக இருந்தது.. நிஜமாவே நல்லா இருக்குமா..? நீங்களும் என்ககூட வரியளா..? அப்போ அக்கா எப்படி போவா..? பல சந்தேகம் கேட்க.. நானும் உன்கூட தான் வரப்போறேன்.. அக்கா எல்லார் வீட்டுக்கும் பால் வித்துட்டு வருவா..அக்காவும் நம்ம கூட வரட்டுமா..?என கேட்க,

தேனு தன் வண்டியில் வருவதற்கு சம்மதம் சொல்லியதில் மகிழந்த சத்யன், அவள் சாம்பவியையும் அழைக்க.. மகிழ்ச்சியில் தன்னை அறியாமல் துள்ளி குதிக்க போனவன் கடைசி நொடியில் தன்னை சுதாரித்து அமைதியாக நின்றான்..

சாம்பவி மறுக்க அப்ப நானும் உன்கூட சைக்கிள்ல வாரேன்.. என்று அடம்பிடிக்க, தேனு உனக்கு தெரியுமேடா அக்கா பால் ஊத்துற வீட்டுல குட்டி பாப்பா இருக்குல்ல நம்ம போக லேட்டாச்சுன்னா பாப்பா பசியில அழும் தான டா.. நீ ஜீவி அக்காகூட போ நான் நாளைக்கு வர்றேன்…. சமாதானம் செய்ய,

நிஜமா நாளைக்கு வருவியா..? என உறுதி படுத்தி கொள்ள கேட்க, ஆமா டா கண்டிப்பா நாளைக்கு நம்ம மூணுபேரும் இதே வண்டில போகலாம்.. என சொல்ல. சம்மதமாக தலையாட்டினாள்..

சாம்பவி வராததில் சத்யனுக்கு சிறிது வருத்தம் இருந்தாலும் தேனு தன்ண்டன் வர சம்மதித்ததே மிக சந்தோசமாக இருந்தது.. சத்யன் தேனு ஜீப்பில் ஏறுவதற்கு தடுமாற சத்யன் வேகமாக முன்னால் வந்து அவளை தூக்க போக அவளின் நிலை உணர்ந்து கையை பின்பக்கமாக கட்டிக்கொண்டான்..

இதை பார்த்த சாம்பவி ஒன்றும் செய்ய முடியாமல் வருத்தமுடன் நிற்க.. நம்ம ஜீவி விடுவாளா என்ன..? அவளும் ஜீப்பில் ஏறுவதற்கு தடுமாறுவது போல் நடித்தவள் ஏ சத்துமாவு என்ன வேடிக்கை பார்க்கிற.. ஜீப்ல ஏற இவ்வளவு உயரமா ஃபோட்போர்ட் வச்ச எப்படி ஏறுவதாம் ஒழுங்கா கையை கொடு.. என அதட்டி சத்யனின் உதவியோடு ஏற,

அப்படியே பிரின்ஸையும் தூக்கிவிடு.. என சொல்ல சாம்பவி வேகமாக வந்து அவளை தூக்க முயல சத்யன் அவளை தடுத்து பாப்பாவை உன் கைக்குள்ளேயே வக்காதடே.. கொஞ்சம் ஃப்ரீயா விடு என்னை மீறி பாப்பாக்கு எதுவும் நடக்காது.. நடக்கவும் விடமாட்டேன் தீவிரத்தோடு சொன்னவன்.. தேனிடம் வந்து,

ஹனி பாப்பா நான் உன்னை தூக்கி உட்கார வைக்கவாடே,, தயக்கத்தோடு கேட்க.. தேனு அமைதியாக நிற்க, சத்யன் சிறிது தைரியத்தை வரவழைத்து, தேனுவின் அருகில் வந்து அவளை மென்மையாக தூக்கி உட்கார வைக்க.. சாம்பவிக்கும் ஜீவிக்குமே தேனு எப்படி ரியாக்ட் செய்வாளோ என்று பதட்டத்துடன் இருந்தவர்கள் அவள் இயல்பாக இருக்கவும் நிம்மதி அடைந்து.. நான் கிளம்புதேன்.. என்று விட்டு சைக்கிளை எடுத்த சாம்பவி..,

சத்யனிடம் வண்டி ஓட்டும்போது என்னத்துக்கு போன் பேசுதிய..? ஒண்ணு வண்டியை நிப்பாட்டி பேசணும்.. இல்லை போனை எடுக்க கூடாது.. இனி இப்படி செய்யாதிய.. என்றுவிட்டு சைக்கிளை எடுத்து சென்றுவிட்டாள்.. சரவெடியின் உரிமையான அதட்டலில் உதட்டில் உறைந்த அழகான புன்னகையுடன் ஜீப்பின் முன்பக்கம் அமர்ந்தான்..

ஜீப்பை ஸ்டார்ட் செய்ய போக.. அடே பங்கு அதெப்படி என்னை விட்டு போகலாம்.. இந்த ஸ்டோரில உன் வேதாளம் நான் தான் டே.. என்றுவிட்டு வேந்தன் ஜீப்பில் அமர

வேதாளம் மட்டும் இல்லடே.. நீ விடாது கருப்பு,, என்றுவிட்டு ஜீப்பை ஸ்டார்ட் செய்தவன்.. ஜீவியிடம் திரும்பி.. ஜீவி நீ மட்டும் எனக்கு மெஸேஜ் அனுப்பலேன்னா நான் இங்க வந்துருக்க மாட்டேன்.. இப்படி ஒரு அழகான வாய்ப்பை மிஸ் செஞ்சிருப்பேன் ரொம்ப நன்றி டே.. உணர்ந்து சொல்ல,

நீயும் எத்தனை நாளைக்கு தான் இப்படி தூரத்தில் இருந்து பார்த்துட்டு இருப்ப அதான் ஒரு முயற்சி ஆனா நானே எதிர்பார்க்கல.. டா தேனு சீக்கிரம் உன்னை புரிஞ்சுப்பா.. என்று சொல்ல.. அதை ஆமோதிப்பது போல தேனு உங்க பேர் சத்துமாவா..? சத்யனை பார்த்து சிறு புன்னகையுடன் கேட்க.. தேனு சத்யனிடம் பேசியதில் மூவரும் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்..

சரணடைவா(ன்)ள்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 30

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 31