in , , , , ,

வசீகரனே உந்தன் நெஞ்சில்..!- 6

அன்று வசீகரன் வீட்டிற்கு கிளம்ப வேண்டிய நாள். எப்போதும் போல அவள் காலையிலேயே ஹாஸ்பிடல் வந்துவிட எல்லோரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்..

அவளுக்கு கொஞ்சம் படபடப்பாக இருக்க அதை புரிந்து கொண்டவன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். ஏற்கனவே கீழே ரிசப்ஷனில் பார்மலிடீஸ் முடித்திருக்க ஒரு சில சாதாரண விசாரிப்புகளுக்கு பிறகு வெளியே வந்தார்கள். அப்போது அவர்களின் ஆடி கார் வந்து விட முதலில் அவனது அம்மாவும் அப்பாவும் போய்விட அடுத்த காரில் இவர்கள் இருவரும் ஏறினார்கள்..

அதற்கு அடுத்த இன்னும் இரண்டு கார்களில் அவனுடைய நண்பர்களும் வந்தனர். அவரது வீட்டிற்கு சென்று சேர்ந்தபோது கொஞ்சநஞ்சம் இருந்த தைரியமும் சுத்தமாக போய்விட்டது. கோயம்புத்தூரில் இருந்து ஊட்டி போகிற சாலையில் மிக பிரமாண்டமாக அந்த மாளிகை இருந்தது. அவர்களின் தோட்டம் மிகப்பெரியதாக இருந்தது கிட்டத்தட்ட தோட்டம் மட்டுமே 5 ஏக்கர் இருக்கும்..

வீட்டிற்கு பின்புறம் தொழிலாளர்களுக்கான குவாட்டர்ஸ் இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்து அங்கிருந்து வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். அது சாப்பாடு நேரம் என்பதும் அங்கே வேலை செய்பவர்கள் பற்றியும் அவன் சொல்ல அவளுக்குத் தான் எதுவுமே காதில் விழவில்லை..

அவள் அதிர்ந்த தோற்றமே இது எதையும் அவள் எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது அதனால் அவள் கையை அழுந்த பற்றியவாறு காரிலிருந்து இறங்கினான். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல அவள் தயங்கியவாறு அவன் கையை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றாள். மிகப்பெரிய அந்த ஹாலில் அவர்கள் இருவரையும் சோபாவில் அமரச் சொல்லிவிட்டு காபி எடுத்து வருவதற்காக அவனுடைய அம்மா ரத்னா உள்ளே சென்றார்..

அவர்களுக்கு எதிர் சோபாவில் தான் அவனுடைய நண்பர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லோருமே பொதுவாக ஏதோ பேசிக் கொண்டிருக்க இவள் தான் தர்மசங்கடமாக கையை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவனுடைய செல்வ நிலையை பார்த்த பிறகு அவளுக்கு எல்லாமே தவறாக தோன்றியது. தேவையில்லாமல் வந்து மாட்டிக் கொண்டோமே என்ற உணர்வு இப்போது தோன்ற ஆரம்பித்தது..

அவனது உடல் நிலைக்காக எல்லாவற்றுக்கும் சம்மதித்து இருந்தாலும் உண்மை தெரிந்த பிறகு அவனுடைய பணத்திற்காக என்றல்லவா நினைப்பார்கள் அது எவ்வளவு பெரிய அவமானம். அவனுடைய நண்பர்கள் சொல்லித்தான் நடித்தாலும் எத்தனை பேர் அது உண்மை என்று நம்புவார்கள். அதோடு அந்தப் பெண் திரும்ப வந்து விட்டால் அதை எவ்வாறு நான் பேஸ் பண்ணுவது. அதன்பிறகு வசி அவன் பெற்றோருடன் இதே போல சகஜமாக என்னால் பேச முடியுமா..

வசி அன்பாக இருக்கிறான் தான் ஆனால் அதிகம் இதுவரை பேசியதில்லை அதனால் இதுவரை தான் செய்வது தவறு என்று பெரிதாக அவளுக்கு தோன்றவில்லை. இன்று அவன் கையை பிடித்து இந்த வீட்டிற்கு வரும் போது ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவன் உடல்நிலை சரியானதும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விலகிப் போய்விட வேண்டும்..

ஹாஸ்பிடல் என்பதால் தினமும் போய் வருகிற மாதிரி இருந்தது ஆனால் இப்போது வீட்டிற்கு வந்து விட்டதால் அடிக்கடி பார்க்கிற அவசியம் இருக்காது அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்..

ரத்னகுமாரி அவனிடம், ” உன் ரூமுக்கு அழைச்சிட்டுப் போ வசி அப்படியே வீட்டையும் சுத்தி காட்டு” என சொல்ல ஏற்கனவே அவள் முகத்தை பார்த்து அவளிடம் பேச வேண்டும் என நினைத்திருந்தவன் சரி என சொல்லி அவளை அழைத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றான்..

மாடி முழுவதும் அவனுக்கான இடம் மட்டும்தான் போலிருக்கிறது. நடுவில் சோபாவுடன் கூடிய பெரிய டீப்பாய் இருந்தது அதற்கு இருபுறமும் இரண்டு அறைகளாகப் பிரிந்திருந்தது. இடதுபுறம் அவனது படுக்கை அறையும் அதோடு கூடிய குளியலறை மற்றும் உடைமாற்றும் அறையும் இருந்தது. 

வலதுபுறம் அவனது ஜிம், அதற்கு அடுத்து அவனது முக்கியமான பொருட்கள் அடங்கிய ஒரு அறை பூட்டி இருந்தது அதற்கு அடுத்து அவனது அலுவலக அறை இருந்தது. எல்லாமே பெரியதாகவும் சோபாவுடன் கூடியதாகவும் இருந்தது. அதைத் தவிர அந்தந்த அறைக்கு தேவையான பொருட்கள் மட்டுமே இருந்தது வேறு அனாவசிய எந்த பொருட்களும் இல்லை..

அவனது அறைக்குள் நுழையும் போது சற்று படபடப்பாகத்தான் இருந்தது அதை புரிந்தவன் போல நீ சுற்றி பார்த்துக் கொண்டிரு நான் போய் குளித்து பிரஷ்ஷாகி விட்டு வருகிறேன் என குளியலறைக்குள் புகுந்து கொண்டான். அந்த அறையில் அவனுடைய அவன் அப்பா அம்மாவுடன் இருந்த புகைப்படங்கள் இருந்தது..

சிறுவயதில் இருந்து இப்போது வரை உள்ள அவனுடைய புகைப்படங்களின் கலெக்சன் இருந்தது. ட்ரீ வடிவ அந்தப் பெயிண்டிங்கில் ஒவ்வொரு கிளையிலும் அவன் ஒவ்வொரு வயது புகைப்படம் இருந்தது. நடுவில் இப்போதுள்ள புகைப்படம் இருந்தது ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அதை எடுத்து விட்டு அந்த வருடத்திற்கு உரியதை மாற்றி விடுவார்கள் போல..

அவனையே ரசனையுடன் பார்த்திருந்தவள் அவன் குளியலறை கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு சட்டென்று நகர்ந்து பால்கனி பக்கம் சென்றாள். அங்கிருந்து தோட்டத்தைப் பார்க்க அது ரொம்பவும் அழகாக இருந்தது. வீட்டின் வலது புறம் தோட்டம் மரங்கள் பூக்களுடன் அழகாக பராமரிக்கப்பட்டு இருந்தது. அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அவள் அருகில் வந்தான்..

“என்ன சின்ட்ரெல்லா என்ன பார்த்துட்டுருக்க..?”

இதுதான் அவன் காதலியின் செல்லப் பெயர். அவனோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவளை கண்டுபிடிக்க முடியாததால் இந்தப் பெயரை வைத்தானாம். அதோடு அவளும் அவள் பெயரை சொல்லியிருக்கவில்லை. இவன் அவளை அவ்வாறு அழைத்த பிறகு கொஞ்ச நாள் கழித்து அவள் தன் பெயரை சின்ட்ரெல்லா என பேஸ்புக்கில் மாற்றி இருக்கிறாள்.. 

“ஒன்னும் இல்ல சும்மா வெளியே வேடிக்கை பார்த்தேன் இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு”

வீட்டின் பின்புறம் சிறு குன்று போல சின்ன சின்ன மரங்கள் அழகுக்கு என வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு இருந்தது அதற்கு அருகில் கல்பெஞ்ச் போடப்பட்டிருந்தது. அங்கு உட்கார்ந்து பார்த்தால் மலை அழகாக தெரியும் அந்த அளவுக்கு ரம்மியமாய் இருந்தது கண்டிப்பாக ஒரு நாள் அங்கே போக வேண்டும். அந்தப் பகுதி வீட்டினர் மட்டுமே பயன்படுத்தும் பகுதி வேறு யாரும் அங்கே போக அனுமதி இல்லை. நண்பர்கள் எல்லோரும் வந்தால் அங்கே போய் விடுவார்களாம் அதுபோல அடிக்கடி ஒன்றுகூடி விடுவார்களாம் முக்கியமான நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லோரும் ஒன்றாகவே இருப்பார்களாம் அதனால்தான் இவ்வளவு பாசம் போலிருக்கிறது..

அதற்கு சற்று தூரத்தில் அவர்களின் ஏற்றுமதி தொடர்பான ஏதோ ஒரு கம்பெனி இருப்பதாக சொன்னான். அதற்கு அடுத்து இன்னும் கொஞ்ச தூரத்தில் அங்கேயே அவர்களுக்கான குவாட்டரஸும் இருந்தது..

“என்ன இந்த வீடு இந்த இடம் உனக்கு புடிச்சிருக்கா..? ஏன்னா கல்யாணத்துக்கு அப்புறம் நீ இருக்கப் போறது இங்க தானே”, எனப் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டே சொன்னான்..

ஏற்கனவே கலக்கத்தில் இருக்கிறேன் இவன் வேறு பேச்சிலேயே பயமுறுத்துகிறானே என நினைத்தவள் தயக்கத்துடன் “ம்ம்” என தலையசைத்தாள்..

“அப்புறம் ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு..?” அவன் பார்வை கூர்மையாக அவளையே அளவெடுத்தது..

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஃபர்ஸ்ட் டைம் உங்க வீட்டுக்கு வந்துருக்கேன் அதனால தான்”, தலை நிமிராமல் பதில் சொன்னாள்..

அவளை ஒரு பார்வை பார்த்தவன் வேறு எதுவும் பேசாமல் அவளோடு சேர்ந்து அவனும் வெளியே வேடிக்கை பார்த்தான். ஹாஸ்பிட்டலில் எல்லோரும் இருப்பதால் அவனோடு அதிகம் பேச வாய்ப்பு இருக்காது உடம்பு எப்படி இருக்கிறது சாப்பிட்டீர்களா இப்படித்தான் பேசிக்கொள்வார்கள். தனியாக இருக்கும் போதும் ஒரு சில சமயங்களில் மட்டுமே அவன் ஏதாவது பேசுவான். இருவரும் சேர்ந்து இப்படிப் பேசுவது இப்போதுதான் முதல் முறை அவளுக்கு அதுவே மனதிற்குள் ஏதோ ஒரு புதுவித உணர்வாய் தோன்றியது..

“எதையாவது யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காத” என அவள் கன்னத்தை மெலிதாய் தட்டியவன் “சரி எல்லாரும் நமக்காக காத்துருப்பாங்க வா கீழே போகலாம்”, என அழைத்து சென்றான்.

சற்று நேரம் பேசிவிட்டு ப்ராஜெக்ட் வேலை இருப்பதால் அவளும் நந்தினியும் விடைபெற்று கிளம்பி விட்டார்கள்..

*********************************

அதன்பிறகு அவர்கள் இருவருக்கும் பேச்சு போனில் மட்டுமே தொடர்ந்து கொண்டிருந்தது அவன் வீட்டிற்கு வருமாறு வற்புறுத்தியும் அவள் வர மறுத்து விட்டாள். சும்மா வந்தால் நன்றாக இருக்காது அதனால் பிறகு ஒருநாள் வருகிறேன் என சொன்னாள். நேரில் சந்திக்கலாம் என கேட்டபோது ப்ராஜெக்ட் வேலை இருப்பதால் முடியாது என மறுத்துவிட்டாள். அவன் வசதியைப் பார்த்த பிறகு அவனை விட்டு கொஞ்சம் தள்ளி இருப்பது தான் நல்லது என்ற முடிவுக்கு வந்து விட்டாள். அவனைப் பார்க்காமல் இருந்தது மனதிற்கு என்னவோ கஷ்டமாக இருந்தது போல தோன்றியது ஆனால் இது என்னவிதமான உணர்வு என அவளுக்கு புரியவில்லை அவன் இன்னொருத்தியின் காதலன். தான் நடிக்க மட்டுமே அங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோமோ என தோன்றியது..

அதுவும் அவனை பார்த்தால் துள்ளும் மனதை அடக்கப் பெரும் பாடுபட வேண்டியிருந்தது. அவன் கண்களில் தெரிகிற காதலில் அடிக்கடி கரைந்து போய்க் கொண்டிருந்தாள். இதெல்லாம் மயூரிக்கு புது அனுபவமாக இருந்தது இத்தனை வருடங்களில் இவள் இப்படி இருந்தது இல்லையே ஆனால் இதெல்லாம் வேறு ஒருத்திக்கு சொந்தமானது என்று நினைக்கும்போது அவளறியாமல் வேதனை வந்து ஒட்டிக்கொள்ளும். அதனால் சரியாக சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் அவதிப்பட்டாள். அவனைப் பார்த்தாலாவது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் அதற்கும் தைரியம் வரவில்லை என்ன செய்வது என குழம்பிப் போனாள்..

ப்ராஜெக்டில் ஒரு சின்ன குளறுபடி இருந்ததால் அதைப் பற்றி தெளிவாக பேச வேண்டும் என ஜீவா அவளை நேரில் அழைத்து இருந்தான். அவளுக்கும் அது சரிவர புரியாததால் அவன் சொன்னபடி காலையிலேயே காலேஜுக்கு வந்துவிட்டாள். இருவரும் வெகு நேரம் வரை போராடியும் அதை சரி செய்ய முடியவில்லை அவர்களுடைய ப்ரஃபஸர் வேறு அன்று வரவில்லை..

“ஜீவா இது ஒன்னும் வேலைக்காகது போல நாம நாளைக்கு சாரிடம் போன் செய்து பேசி விட்டு திரும்ப வரலாம்”, என மயூரி சொல்ல வெகு நேரமாக போராடிய ஜீவாவிற்கும் அதுதான் சரியெனப் பட்டது..

“ஓகே மயூரி நீ சொல்றதும் சரிதான் இதுக்கு மேல இதுல போராட முடியாது சார் வரட்டும் அவர்ட்டயே சொல்யூஷன் கேப்போம். எதுக்கும் நான் இன்னொரு டைம் முயற்சி பண்ணி பார்க்குறேன் நீ கெளம்பு சரி ஆயிடுச்சின்னா நான் உனக்கு போன் பண்ணுறேன்”

“ஓகே ஜீவா நான் இன்னைக்கு வண்டி எடுத்துட்டு வரல பஸ்ல தான் போகணும் நான் கிளம்புறேன் பை” என்றபடி அவளும் கிளம்பிவிட்டாள்..

“எதிர்ல இருக்கிற பஸ் ஸ்டாப்புக்கு இவ்வளவு சீனா மேடம் இங்கருந்து ஒரு கிலோ மீட்டர் நடக்குற மாதிரி இருந்தா நீ எல்லாம் என்ன பண்ணுவ..?”

“ஏன்டா உனக்கு இவ்வளவு நல்லெண்ணம்..? பஸ்ல இந்த நேரத்துக்கு வேற கூட்டம் அள்ளும் அதுல இடிச்சிகிட்டு எப்படி வீட்டுக்கு போய் சேர போறேன்னு தெரியல நானே  அந்த கவலைல இருக்கேன் நீ வேற கடுப்ப கெளப்பாத..”

“அம்மா தாயே பத்திரமா போயிட்டு வாம்மா நீ கோபம் வந்தா ஹீரோயின் மாதிரி ஆயிடுவ அத பார்க்க நான் தயாரா இல்ல”, என சிரிப்புடன் விடை கொடுத்தான்..

அவளும் சிரிப்புடன் விடைபெற்று எதிரில் இருந்த பஸ் ஸ்டாப்புக்கு சென்றாள் அங்கிருந்து இருக்கையில் சோர்வுடன் அமர்ந்தாள். அவள் ஜீவாவுடன் பேசிக்கொண்டிருந்ததை வெளியில் காரில் உட்கார்ந்து இருந்த வசீகரன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அவளைப் பார்த்து பத்து நாட்களுக்கு மேல் ஆனதால் அவளை பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்றியது. அன்று அவள் காலேஜ் வருவதாக சொல்லியிருந்ததால் அவளுக்கு முன்னாலேயே வந்து காத்திருந்தான்..

அவள் ஜீவாவுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து மனதுள் அவனுக்கு நெருப்பு கனன்றதுதான். அவள் வெளியே வரட்டும் என காத்திருந்தவன் அவள் வந்து பஸ் ஸ்டாப்பில் அமர்ந்ததும் காரை எடுத்து யுடர்ன் போட்டு அவள் அருகில் வருவதற்குள் ஜீவா அவளை பார்த்து கத்தியபடியே ஓடி வந்தான்..

அவன் ஓடி வந்ததை பார்த்து சிரிப்புடன், “அடப் பக்கி ஏன்டா இப்டி ஓடி வர்ற..? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..?” என்றாள்..

“எவனாவது எதாவது நினைச்சுட்டு போறான் அதுதான் இப்ப ரொம்ப முக்கியம் முதல்ல இங்க பாருடி”, என லேப்டாப்பை திறந்து ப்ராஜெக்டில் எந்த இடத்தில் எரர் என காண்பித்தான்..

இருவரும் அதை சரிசெய்யும் முனைப்போடு இருக்க அருகே வந்து நின்ற காரை கவனிக்கவில்லை. இருவரும் தனித்தனி லேப்டாப்பில் வேலை செய்தபோதே வசிக்கு எரிச்சல் வந்தது. இங்கே பஸ் ஸ்டாப்பில் இருவரும் அருகருகே உட்கார்ந்து ஒரே லாப்டாப்பில் வேலை செய்வதை பார்த்ததும் கோபத்தில் அவன் முகம் சிவந்து போனது..

தான் வந்து காரை நிறுத்தி இவ்வளவு நேரமாகியும் அவள் தன்னை கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கார் ஹாரனை வேகமாக அழுத்தினான் அருகில் கேட்ட ஹாரன் சத்தத்தில் மயூரி ஜீவா இருவரும் பதறி எழுந்தார்கள்..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Contributor

Written by Surya Rajarajan

Story Maker

32 – நான் என்பதே நீதான(டா)டி..!

மனங்கள் இணையும் மணநாள் 29 (pre-final)