in , ,

அம்மாவின் அன்பு

சிறுகதை

அம்மாவின் அன்பு

    சரவணன் எப்பவும் போல ஒரு சலிப்போட ஆபிஸ் ல ஜி.எம் ரூம்   பெரிய ஆண்டாள் படத்துக்கு பழைய மாலை எடுத்துட்டு  படம் துடைத்து புது மாலை போட்டு பத்தி பொருத்தி வைத்து….

தன் இடம் வந்து அன்றைய வேலையை ஆரம்பித்தார்….மனதிற்குள் வழக்கம் போல..

. எத்தனை பியூன் இருக்காங்க ….ஏன் இந்த ஜி.எம் நாம் தான் இந்த மாலை போடுற வேலையை தினம் செய்யணும் அடம் பிடிக்கறாரோ …..என்ற கேள்வி வந்தது…….

சரவணன் அந்த ஆபிஸ் ல மேனேஜராக வேலை சேர்ந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டது….வந்த அன்னிக்கே  ஜி.எம்.நாராயணன் கறாராக சொல்லிவிட்டார்…

தினமும் நீங்கள் ஆண்டாள் தாயாருக்கு மாலை போட்டு கும்பிட்டபின் தான் அலுவல் ஆரம்பிக்கணும்னு……

சரவணனும் கடவுள் பக்தி உள்ளவர் தான்….ஆனாலும் இந்த வேலை எல்லாம் பியூன் செய்யவேண்டியதுனு ஒரு நினைப்பு….

வீட்டிலும் பூஜை ரூம்  உள்ள போறதே….. முருகா சரணம் சொல்லி விபூதி பூசுவதற்கு மட்டும் தான்…..

காலையில் எழுந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தது சரவணனுக்கு…..இடது கை வலி லேசாக…..ஆபிஸ்ல முக்கியமான வேலைகள் இருக்கு….போய் முடிச்சுட்டு  அப்புறம் ஆஸ்பத்திரிக்கு போலாம் முடிவு பண்ணி…. மனைவியிடம் சொன்னா பயந்து ஆர்பாட்டம் பண்ணி இப்பவே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிடுவானு ஒண்ணும் சொல்லாம கிளம்பிட்டார்….

பாதி தூரம் போனபின் ரொம்ப நெஞ்சுவலி வந்து கண்ணு சொருக ஆரம்பித்தது…… இதுக்கு மேல கார் ஓட்றது….. சரியில்லை னு…..வண்டிய ஓரங்கட்டி அப்படியே ஸ்டீயரிங் மேல் சாஞ்ட்டார்……

கண்தொறந்து பார்த்தா ஆஸ்பத்திரியில் பெட்ல இருக்கார் பக்கத்தில் மனைவி…..என்னங்க இப்ப எப்பிடி இருக்கு…..

யார் என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு வந்தது….. சரவணன் கேள்விக்கு ….யாரோ ஒரு கால் டாக்சி டிரைவர் பாத்து அட்மிட் பண்ணி ஆபிஸ்  லயும் சொல்லிட்டாங்க…..

ஓ அப்படியா….. சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஜி.எம் உள்ளே வந்தார்….

“என்ன சரவணன் எப்படி இருக்கீங்க…..தாயார் உங்கள் காப்பாத்திட்டா……தினம் மாலை போட்டு கும்பிடும் பக்தனை கைவிடுவாளா என்ன…..”

நம்பிக்கை இல்லாம பார்த்த சரவணனிடம்…..உங்கள சரியான நேரத்தில் அட்மிட் பண்ணி …..எங்களுக்கு தகவல் கொடுத்து…..உங்க லேப்டாப்….ஆபிஸ் முக்கிய பைல்ஸ் எல்லாம் பாதுகாத்து ஆபிஸ் ஸ்டாப்ஸ் வந்ததும் ஒப்படைத்தது…….

அந்த கால்டாக்சி டிரைவர் ஆழ்வார்….. ஆண்டாள் கால்டாக்சி ……. இதுக்கு மேல அவ கருணை சொல்லமுடியுமா…….

சரவணனின் மனைவி ….எல்லாம் ஆண்டாள் தாயார் அருள்… உடம்பு சரியானதும்..ஒரு முறை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு போயிட்டு வந்திடுவோங்க….நெகிழ்ந்து சொல்லிகிட்டு இருக்காள்…

ஜி.எம் போனபின்பும்…..சரவணனால் நம்ம முடியலை…..ஒரு நாள் கூட மனசார கையெடுத்து கும்பிட்டதில்லை …..அப்புறம் எப்படி …..கேள்வி உதித்தது…..

பாத்ரூம் கழுவ வந்த பாட்டி யாரிடமே போனில் சொல்றது காதில் விழுது……

என் மகன் குடிகாரன் தான்….ஒத்த பைசா செலவுக்குக்கு தரமாட்டான்…அதுக்காக நான் விட முடியுமா…..ஏதோ என் சம்பாத்தியத்தில் அவனுக்கு தினமும் வாய்க்கு ருசியா சமைச்சு வச்சுட்டு வாறேன்……

” அம்மாவை காப்பாத்தாத பிள்ளை இருக்கலாம்

பிள்ளையை காப்பாத்தாத அம்மா இருப்பாளா”

தன் கேள்விக்குப் பதில் கிடைத்த திருப்தியில் கண் மூடினால்…..

சிரிக்கிற தாயார் முகம் …..”சீக்கிரம் புது மாலை போட வா”…..சொல்வது போலிருக்கிறது…..

கண்ணில் வழியும் நீரை துடைக்கவும் தோணலை சரவணனுக்கு………

ஸ்ரீமதி வைகுண்டம்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

புன்னகை மன்னன்

ரோட்டில் நடந்த விபத்தை பார்த்ததினால் இவர் வாழ்க்கையே மாறிவிட்டது. | Nalla Seithi – 168 | Sri TALKS