in , , ,

புன்னகை மன்னன்

சிறுகதை

    புன்னகை மன்னன்…..

      மாலினி ஷ்யாம் இரண்டு பேரும் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஷ்யாம் ஆபிஸ் டூர் போக  ஆசையா கிளம்பினாங்க……..

திருவனந்தபுரம் கன்னியாகுமரி திருநெல்வேலி எல்லாம் பிளான்….ஆபிஸ் ல எல்லாரும் குடும்பத்தோடு வரணும் சொல்லிட்டாங்க….

மாலினி க்கு ரொம்ப சந்தோஷம்…. அடுத்தடுத்து இரண்டு பையன்கள்….. கண்ணா (5)… முகுந்த்(3)… ரொம்ப நாளாக எங்கேயும் போகலை….

ஆண்கள் ஒரு பஸ் பெண்கள் ஒரு பஸ்….ஷ்யாம் கண்ணாவையும் மாலினி முகுந்த் தையும் பொறுப்பேத்துக்கிட்டாங்க……

நல்லபடி எல்லா இடமும் பார்த்து டூர் முடிந்து ரிட்டர்ன் வர்றப்ப கோவில்பட்டி பைபாஸ் ல ஆரியாஸ் ஹோட்டல் ல இரவு உணவு சாப்பிடும் நேரம் கண்ணா நான் அம்மா பக்கத்துல சொன்னான்…

சரின்னு ஷ்யாம் முகுந்த என்கிட்ட கொடு கேட்க சின்னக்குட்டி தூக்கக் கலக்கத்தில் வரமாட்டேன் சொல்ல ….சரி விடுங்க நான் பார்த்துக்கறேன் மாலினி சொல்ல…. ஷ்யாம் பிரெண்ட்ஸ் கூட பேசிட்டே வெளில போயிடுறான்……

மாலினியும் பக்கத்துல இருந்த உஷா கிட்ட சின்னக்குட்டி ய கொடுத்துட்டு கண்ணா கூட்டிட்டு ரெஸ்ட் ரூம் போயிட்டு வரதுக்குள்ள சின்னவன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டான்…..

கண்ணாவ ப்பார்த்துக்கோ சொல்லிட்டு சின்ன குட்டிய ரெஸ்ட் ரூம் கூட்டிட்டு போறா…..கண்ணா அப்பாட்ட போறேன்னு உஷா கைய உதறி ஓடவும் உஷா …..நில்லுடா பின்னாடியே ஓடவும்…..

புதுசா ஒரு  பஸ்ல நிறைய குழந்தை குட்டியோட ஆட்கள் வந்து இறங்கவும் சரியா இருக்கு…..கண்ணா தெரியாம அந்த பஸ்ல ஏறிட்டான்….கூட்டத்துல கண்ணா புது  பஸ்ல ஏறினதை உஷா பாக்கலை……

உஷா ஜன்னல் ல தெரிந்த ஷ்யாமிடம் கண்ணா வந்துட்டானா கேட்க……அவன் காதில் அண்ணா வந்துட்டானானு கேட்க….அவனும்  தன் நண்பனும் உஷாவின் அண்ணனுமான பரணி இருக்கானா செக் பண்ணிட்டு வந்துட்டான் சொல்றான்….

உஷா போய் மாலினி கிட்ட கண்ணா ஷ்யாம் கிட்ட போயிட்டான் சொல்ல அவளும் சின்ன குட்டியோட பஸ் ஏறி உட்கார்ந்தாச்சு…..ஷ்யாம் அந்த பஸ்ல இருந்து எல்லாம் ஓகே வா கேட்க இவளும் சிரித்து தலையாட்ட…. இரண்டு பஸ்ஸூம் மதுரை நோக்கி கிளம்பியது……

பஸ்ல இருந்த கண்ணா எல்லாம் புது முகமா இருக்கவும் குழம்பி இறங்கி சுத்தி சுத்தி பார்க்கான்…..அம்மா அப்பா உஷா ஆன்டி ஒருத்தரையும் காணோம்….

ஹோட்டல் ல இரவு உணவுக்கு கூட்டம்…..வாட்ச்மேன் வண்டிகள் பார்க்கிங்கில் பிஸி….கண்ணா வை யாரும் கவனிக்கலை….

சுத்தி பார்த்த கண்ணா  கண்ணில் ஹோட்டல் அடுத்து இருந்த கிருஷ்ணன் கோவில் பட்டது……பாட்டி சொல்ற கதைகளில் எல்லாம் கிருஷ்ணலீலைகளை கேட்ட நினைவு…..அம்மா அப்பா அங்க இருப்பாங்களோ….

மெதுவா …..கம்பௌண்டு சுவர் இல்லாததால் கிருஷ்ணன் கோவில் போறதில் கஷ்டமில்லை…..

போய் பார்த்தா யாரும் இல்லை… அழ ஆரம்பித்தான் கண்ணா….சரி ஹோட்டல் போகலாம் திரும்பினா சடசடனு மழை ……

அப்படியே கோவில் திண்ணையில் உட்கார்ந்து

அழதிட்டிருந்தான்……அம்மா அம்மா…அப்பா….

அப்ப …மணிகள் ஒலிக்க நான்கு ஐந்து மாடுகள் கன்றுக்குட்டிகள் ஓட்டிட்டு ஒரு பையன் வந்தான்……மாடுகளை மரத்தடியில் விட்டுட்டு கண்ணா கிட்ட வந்தான்….

தம்பி எதுக்கு அழற… அம்மா அப்பா விட்டு தனியா வந்திட்டயா…..பயப்படாத நானிருக்கேன்….

காலையில் உங்க அம்மா அப்பாகிட்ட கூட்டிட்டுப் போறேன்……..

நீங்க யாரு….கண்ணா கேள்விக்கு…..நான் இங்க மாடு மேய்க்கிறவன்….மழை வந்ததா அதான் இந்த கோவிலில் ராத்திரி இருக்கலாம் வந்தேன்…..

நம்ம இரண்டு பேரும் இந்த கோவில் திண்ணையில் படுத்துக்கலாம்….வா

ஆமா   ….சாப்பிட்டயா…இரு …பால் குடினு அங்க நின்ன பசுவிடமிருந்து பால் கறந்து மண்குவலையில் கண்ணாக்கு குடிக்க கொடுத்தான்…..

கண்ணா பால் குடித்ததும் கண்ணாவைத்தூக்கி தன் தோளில் போட்டு தட்டிக்கொடுக்கவும்…..அழுத அசதியிலோ….அந்த அண்ணா பார்த்த தைரியத்திலோ….கழுத்தைக்கட்டிகிட்டு..கண் அசந்தான் கண்ணா…..

பஸ்ஸில் கண்ணயர்ந்த மாலினி ஷ்யாமிற்கு மதுரையில் இறங்கும் போது தான் கண்ணா இல்லாததே தெரிந்தது…பதறி துடித்து ஒருத்தரை ஒருத்தர் திட்டி …..அழுது….திரும்ப நடந்ததை பேசிப்பார்த்து உஷாவிடம் விசாரித்ததில் தான் ஹோட்டலில் குழந்தை தவறியது தெரிந்தது….

ஷ்யாம் அம்மா அப்பா கார் எடுத்துட்டு வந்து ஸ்டாப்ல காத்திருக்காங்க…. குழந்தை காணோம் தெரிந்ததும் துடித்துப் போயிட்டாங்க…..

காரில் ஏறி திரும்ப அந்த ஹோட்டல் விரைந்தனர்…..பாட்டி மகன் மருமகளை  திட்டினாலும் கிருஷ்ணா என் குழந்தையை காப்பாத்துனு வேண்டி கண்ணீர் விட்டழுதாள்…..

மணி 3 ஐ தாண்டியது….. ஹோட்டல் போனால் லைட் அணைத்து மூடியாச்சு…… வாட்ச்மேனைத் தட்டி எழுப்பினால்…..அப்படி எந்த குழந்தையையும் பார்க்கலை சொல்றார்…..அதுக்குள்ள போலீஸ் வந்தாச்சு……

ஹோட்டலைத்திறந்து எல்லா இடமும் பார்த்தாச்சு…… ரெஸ்ட் ரூம் கூட செக் பண்ணியாச்சு…… மாலினி மயங்கி விழ விழுந்துட்டா…

.வேற பஸ் ல மாறி ஏறிப்போயிட்டானா…..யாரும் கடத்தி இருப்பாங்களா….

போலீஸ் விசாரணை ஆரம்பிச்சுட்டாங்க….

பாட்டி கண்ணில் கிருஷ்ணன் கோவில் லைட் பட்டதும்….கிருஷ்ணா காப்பாத்து ….கும்பிட்டுட்டே கோவில் நோக்கிப் போக ஆரம்பித்தாள்….

அம்மா நீ வேற இருட்டுக்குள்ள எங்கயாச்சும் போகாத அப்புறம் உன்னைத்தேடணும்…..ஷ்யாம் கத்தினான்……

போலீஸ்…வாட்சுமேன் ….ஹோட்டல் பின்னாடி என்ன இருக்கு……எதுவும் கிடையாது சார்…ஒரே பொட்டல் காடு தான்…..சமைக்கறவங்க ஆறுபேரும்…நானும் மட்டும் தங்கியிருக்கோம்….காலை 5 மணிக்கு திறந்தா இரவு 11 மணிவரை திறந்திருப்போம்…..

Cctv இருக்கா…. ஆமா சார்….நேத்து ராத்திரி 9 மணிக்கு மேல் நடந்ததை பார்க்கலாம்……

கண்ணா புது பஸ்ல ஏறியதும் இறங்கியதும்…சுத்தி சுத்தி தேடுவதும்  வீடியோல இருக்க….எல்லாருக்கும் கொஞ்சம் நிம்மதி….ஆனா அதுக்கப்புறம் வீடியோவில் கண்ணா வைக் காணோம்…..

போலீஸ்ல ஒரு குரூப்  வீடியோ ல இருக்கற பஸ்கள் நம்பர் வச்சு விசாரணை செய்ய போறாங்க

மணி 6.. பாட்டி…ஷ்யாம் நீங்க தேடுங்க நான் அந்த கோவிலில் சாமி கும்பிட்டு வர்றேன்…என்னைத் தடுக்காத…..

அழுதுட்டே கோவில் போன பாட்டி….திண்ணையில் தனியா படுத்து தூங்குறப் பேரனைப் பார்த்ததும்….. கண்ணா….கத்திட்டு ஓடிப்போய் தூக்கிக்கிட்டாள்…..

சத்தம் கேட்டு ஓடிவந்தவங்க கண்ணாவைப்பார்த்ததும் நிம்மதி ஆனாங்க…..

மாலினி ஷ்யாம் …கண்ணாவைத் தூக்கிக் கொஞ்சித் தள்ளிட்டாங்க…..தனியா இருந்தியாப்பா…… பயந்துட்டயாப்பா…

இல்லப்பா ஒரு அண்ணனும் மாடுகள் கன்னுக்குட்டி எல்லாம் இருந்தது …..எங்கப்பா அந்த அண்ணன் ..மாடுகள் எல்லாம்….கண்ணன் கேள்வி….எல்லாருக்கும் அதிர்ச்சி அளித்தது..

ஏன்னா ராத்திரி மழை பெய்து ஓய்ந்த அந்த இடத்தில் ஈரத்தரையில் மாடுகள் நின்ற தடமும் இல்லை…..

பையன் வந்த காலடித் தடமும் இல்லை….

தாத்தா தான் கண்ணாவைத்தூக்கி

யாருப்பா உங்கூட இருந்தாங்க….

சுத்தி சுத்தி பார்த்த கண்ணா…அந்த கோவில் போர்டுல… “ஸ்ரீ நந்தகோபாலன் திருக்கோவில்.”…எழுதி இருப்பதற்குப் பக்கத்தில் உள்ள கிருஷ்ணன் படம் பார்த்து இந்த மாதிரி தான் அந்த அண்ணன் இருந்தாங்க…… பாட்டி தினமும்பாடுற …..ஆயர்பாடி ….பாட்டுப்பாடினாங்க நான் தூங்கிட்டேன்…..

நிஜமா இந்த மாதிரியா இருந்தான் அந்த அண்ணன்…. பாட்டி திரும்பத்திரும்ப கேட்டாள்….ஆமாம் பாட்டி நல்லா பார்த்தேன்….

அந்த அண்ணன் இது  கொடுத்தாங்க சொல்லி உள்ளங்கை காட்டினான் ….. சின்னதா மயில்தோகை…….

வாட்சுமேன்…..மாடுகள் இங்க மேய்ச்சலுக்கு வர வாய்ப்பே இல்லை….எல்லாம் பொட்டல் காடு…..பாட்டு சத்தம் கேட்கவே இல்லை….மயில் ரெக்கை இங்க கிடைக்கவே கிடைக்காது…..ஏதோ அதிசயம் தான்……

பாட்டி..ஆமாம்பா எல்லாம் அவன்லீலை…என் வேண்டுதலைக் கேட்டு…. கிருஷ்ணா என் பேரனைக்காப்பாத்தி கொடுத்துட்ட..சொல்லி விழுந்து கும்பிட்டாங்க……..

அனைவரும் மெய்சிலிர்க்க கிருஷ்ணனை வணங்க…….அவன் முகத்திலோ….குறும்பு புன்னகை……..

ஸ்ரீமதிவைகுண்டம்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

கயல்விழி அழகி

அம்மாவின் அன்பு