in , , ,

9. நிகழ்வதை உரைத்திட வா ( நிறைவு பகுதி…)….

கண்ணைத் திறக்க பெரும்பாடுபட்டு கண் விழித்தான் முகிலன்.

அவன் முன் அவன் குடும்பம்….

தலையில் கட்டுடன் அந்த மருத்துவமனையில் அவன் படுத்திருக்க…

அனைவரும்  சூழ்ந்து நலம் விசாரிக்க…  

அவன் தலை மட்டும் சற்று வலிப்பதாக கூறினான்.

மூவரும் அதாவது முகிலின் அண்ணன், அண்ணி, தாய் என  மூவரும் முகிலின்  தந்தையிடம் ஒருவர் பின் ஒருவராக சீறிக் கொண்டு இருந்தார்கள்.

எல்லாம் உங்களால….. தா…..அவனை அந்த வேலைக்கு அனுப்ப வேண்டாம்னு நாங்க எவ்வளவு சொன்னே…. கேட்டீங்களா…. என பார்வதி ஆரம்பிக்க…

அந்த ரவுடிங்க இப்படி ஆக்கி வெச்சிருக்காங்களே …

அவனுக்கு பெருசா எதுவும் ஆகலனு  சந்தோஷப்படுறதா…

இல்லை இப்படி ஆகிடிச்சேனு  கவலைப்படுறதனு  தெரியல… என தமிழ் புலம்ப…

இனி… என்… தம்பி… அந்த வேலைக்கு போக மாட்டான் என அமுதன் உறுதியாகக் கூற…

இராமலிங்கம் தான் அவனை அந்த வேலைக்கு அனுப்பியது தவறு தான் போல என கண் கலங்கி வருத்தப்பட்டு கொண்டு இருந்தார். 

அவரைக் கண்ட முகில்  தன்னால் தான் தன் தந்தை இன்று கண் கலங்கி இருக்கிறார் என்பதை எண்ணி அவன் துடித்து தான் போனான்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு…

முகிலின் இல்லம் திருமணக்கோலம் கொண்டிருந்தது..

அங்கு ஐயரிடம் என்னென்ன வேண்டும் என தமிழ் கேட்டு கேட்டு செய்துக்கொண்டு இருக்க…

அமுதன் சமையல் வேலைக்கு வந்தவர்களிடம் சமையல் குறித்து பேசிக்கொண்டு இருக்க….

இராமலிங்கம்,பார்வதி அனைவரையும்  வரவேற்க…

மணமேடையில் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்தான் முகில் எனும் முகிலன். 

அவன் அருகில் அமர்ந்து தன் மழலை மொழியில் ஏதோ பேசிக்கொண்டு இருந்தால் அமுதனின் தவப்புதல்வி “தமிழ் அமுதினி “
சற்று நேரத்தில் மணமகள் கோலத்தில் முகிலன் அருகில் வந்து அமர்ந்தாள் சீத்தலை…

ஆம்…. டாக்டர். சீத்தலை தான்..

(அருங்காட்சியகத்தில் முழுமைபெற்ற ஓவியத்தை கண்டவள் அதிர்ந்தாள்…

ஆம்… அதில் இருந்தது அவள் உருவம் தான்..

அதன் கீழ் வரைந்தவர் முகிலன் என இருக்க….

அவனைக் கண்டுபிடித்து அவள் நன்றி கூற….

அவன் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் நீங்க இல்லனா என்னால அத வரைஞ்சு இருக்க முடியாது.

நீங்க என் மேல கோவமா இருப்பீங்கன்னு   நினைச்ச….

அப்படி எல்லாம் இல்ல… என்னா இந்த மரகதபுரம் ஃபுல்லா பேமஸ் ஆக்கி இருக்கீங்க.. 

அப்படி இருக்கும் போது நான் எப்படி உங்க மேல கோப படுவேன் சொல்லுங்க…

அன்று தொடங்கியது அவர்கள் நட்பு…

  பின் நட்பு காதலாகி இன்று திருமணத்தில் முடிந்துவிட்டது…

இல்லை இல்லை தொடங்கிவிட்டது…..)

இராமலிங்கம் அடிக்கடி கலெக்டர் கலெக்டர் என்று கேட்டுக் கேட்டே இன்று முகிலன் மரகத புரத்தில் கலெக்டர் ஆக மாறி விட்டான்…

“கலெக்டர் வெட்ஸ் டாக்டர் “…

இருவரும் தங்கள் வாழ்வை இனிதாக   வாழவும்  நாட்டுக்கு தங்கள் பணியின் மூலம் நல்ல சேவையை செய்ய வேண்டும் என வாழ்த்தி விடைபெறலாம்.
நன்றி…

*************************************

இந்த கதையை முலமாக வைத்து வேறு  ஒரு கதையை முயற்ச்சித்து  கொண்டு  இருக்கிறேன் அதை முடித்தயுடன் பதிப்பிக்கிறேன் அதில் உள்ள  நிறை குறைகளை கூறினாள் திருத்தி கொள்கிறேன்….
        நன்றி….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

மாயத்திரை….

நீயின்றி நானில்லையே