in , , ,

8. நிகழ்வதை உரைத்திடவா…

அவளைக் கண்ட  முகிலனுள்” காண்வாய்  அவள் கண்களைகருத்தில் வைத்து முழுமை செய்வாய்”  என அந்தப் புத்தகத்தில் மிளிரிய வரிகள் நினைவுக்கு வந்தது.

அவளின் கண்களை கண்டவன் அதிர்ந்தான்.

ஆம்…  அந்த  ஓவியத்தில் உள்ள கண்களை போலத்தான் அவள் கண் இருந்தது அதை  கண்டவன் அதிர்ந்தான்…..

மருத்துவமனை விட்டு வீடு வந்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

பின் எழுந்து தொலைக்காட்சியை உயிர் பித்தான் அவன். 

அதில் பிரபல தொல் துறை ஆய்வாளர். நிறைமதி  மரகதபுரம்  அருங்காட்சியகத்தில் உள்ள புத்தகத்தைப் பற்றி சில விஷயம் கூறினார்.

அந்தப் புத்தகத்துக்கு எந்த ஒரு மாயாஜால சக்தியும் இல்லை அதில் இருப்பது வெற்றுப் பக்கங்கள்  தான்..

அதை நாங்கள் பத்து நாள் எங்கள் கண்காணிப்பில் தான்  வைத்து இருந்தோம்…

ஆனால்…. அதில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை என்பதே உண்மை என அவர் கூற..

அதை கண்ட முகில்  அதிர்ந்தான்.

எப்படி… அது… நமக்கு மட்டும் தினமும் அடுத்த நாள் நடக்கிறத காட்டுது என குழம்பினான்…

ஒரு மனதாக அது நமக்கு ஒண்ணும் கெடுதல் செய்யவே இல்லையே அப்புறம் அத நினைச்சு நம்ம  எதுக்கு பயப்படனும்.
என தன்னைத்தானே தேற்றிக் கொண்டு தன் பணிக்கு சென்றான்.

தனக்கு நிகழயிருப்பதை அறியாமல் ….

காலையில் கண்ட டாக்டர் முகத்தை நினைவில்  கொண்டு அந்த ஓவியத்தை வரைந்து முடித்தான்.

எப்போதும் போல் விளக்குகள் அனைத்தும் அணைந்து அணைந்து எரிய இன்று பயமில்லாது  புன்னகை முகமாக  திரும்ப அந்தப் புத்தகம் வழக்கம்போல் அதன் பக்கங்களைப்  புரள அதில்” என்னை களவாட கள்வர் கூட்டம்உள் நுழைந்து விட்டது” என இருக்க…

அதைப் படித்தவன் அதிர்ந்தான்.

அதே சமயம் புத்தகங்கள் அடுக்கப்பட்ட அறையில் ஏதோ சத்தம் வர அங்கு விரைந்தான்..

ஒரு பத்து பேர் கொண்ட கள்வர் கூட்டம் அங்கு மறைந்திருந்தது…

அவன் அங்கு விரையும் போதே ……

மின் விளக்கு ஒளி அணைய அதே சமயம் ஒருவன் அவனை தாக்க…..

அவ்வறையில் இருந்து வெளியில் வந்த முகிலன் தவறி படியில் உருண்டு கீழே விழ…

விளக்குகள் மீண்டும் எரிய ஆரம்பித்தது….

அவர்கள் ஒருவர் பின் ஒருவராக படியில் இறங்கி வர…..

முகிலன் அருகில் வந்த அந்த புத்தகம் …

அதன் பக்கங்களை வேகமாக  புரள…விட்டது..
அதில் ”  உன் ஐ விரலை என்னில் பதி நான் உன்னை காப்பேன்” என வரிகள் அவன் படிக்கப் படிக்க மறைந்தது…

அந்த புத்தகத்தின் முகப்பு பக்கத்தில் அவன் அவனின் கையை பதிக்க…….

வானில் அதிபயங்கரமாக இடி முழங்க…..

பகல் போல் மின்னல் ஒளிவீசி மறைய…..

புகை போல் ஏதோ ஒன்று அங்கு சூழ…..

அனைவரும் மயங்கி சரிந்தனார்..  
முகிலன் உட்பட…

கண்ணைத் திறக்க பெரும்பாடுபட்டு கண் விழித்தான் முகிலன்.
                                 – தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

மனதின் வசந்தம்….

14. என்ன சொல்லி என்னை சொல்ல…