in , , ,

6. நிகழ்வதை உரைத்திடவா…

அதில் ” உன்னை நான் எனது  எஜமானராக ஏற்கிறேன்” என்ற வார்த்தைகள் வர சற்று அதிர்ந்துதான் போனான்.. அவன்….

அதை அதன் இடத்திலேயே வைத்துவிட்டு தன் இடம் நோக்கி நகர்ந்தான்…

வழக்கம்போல் காலையில் தன் இல்லம் வந்தவனுள் அதே தான் ஓடிக்கொண்டு இருந்தது….

மீண்டும் பணிக்குச் செல்ல ஒருவித தயக்கம் அவனுள்  எழத்தான் செய்தது… இருந்தும் தயார்ஆகி  சென்றான்…

அவன் அந்த புத்தகம் இருக்கும் பக்கம் கூட செல்லாமல் கணினியில் தன் பணியை மேற்கொண்டு இருந்தான்.

அப்போது அங்கு உள்ள விளக்குகள் அனைத்தும் அணைந்து அணைந்து ஒளிர என்னவென்று அவன் காண அங்கிருந்து எழுந்து திரும்ப  அங்கு  அந்தப் புத்தகம் அவன் முன் அந்தரத்தில் வேகமாக புத்தகம் திறந்து பக்கங்கள் புரள அதில் ” ஐந்து வருட காத்திருப்பின்  பலனாகதேவதை தோன்றி விட்டால்”.என வரிகள் உருவராகியது  அவன் அதைப்படித்தயுடன் அந்த வரிகள் மறைந்தது….

பின் கண் இமைக்கும்  நொடியில் அந்த புத்தகம் அதன் இடத்தில் இருந்தது.

கனவா இல்லை நினைவா என அவன்  குழம்பியே விடிந்துவிட்டது.

காலை தன் இல்லம்  வந்து சேர்ந்தான் முகிலன்…..

வீட்டில் அவன் அண்ணி மட்டும் தன் பணிக்கு செல்ல தயாராக  அவன் தமையனை காணாது வினா.. வா…
பார்வதி அவன்  தட்டில் தோசையை திணித்துக்கொண்டு ஏதோ வேலை இருக்காம் அதா…. சீக்கிரமா கிளம்பிட்டான் என  அவர் கூற…

அப்ப…. அண்ணி…  எப்படி போவாங்க….

ஆட்டோல…  தா என தமிழ் புன்னகையோடு கூற…

ஆட்டோலையா….

ம்… ஆமா… என்ன.. அதுக்கு…. 

அண்ணி…. வெயிட் பண்ணுங்க நா… சாப்பிட்டு முடிச்சிட்டு கூட்டிட்டு போறேன்..

வேணா… முகில் நீ… இப்பதானே வந்த போய் ரெஸ்ட் எடு என தமிழ் கூற…

அதெல்லாம் ஒன்னும் இல்ல…. அண்ணி…

மா…. நீ.. சொல்லுமா அண்ணிகிட்ட….

அவன்…. தா….  சொல்லுறல   அவனுடைய போயிட்டு… வா…. மா என அவர் கூற…

சரி… என ஒப்புக் கொண்டால் தமிழ்…

பின் இருவரும் முகிலின் இருசக்கர வாகனத்தில் பயணம் ஆனார்கள்.

வழியில் தமிழ் கோவிலுக்கு செல்வது வழக்கம் அவள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய உள்ளே செல்ல….

முகில் வெளியில் தன் நண்பன்  கிஷோர்வுடன்  பேசிக்கொண்டு இருந்தான்.

தன் தரிசனத்தை முடித்து விட்டு  வெளியில் வந்த  தமிழ் வாகனம் அருகில் வர மயங்கி விழுந்தாள்….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

புகழ்ச்சி….

5 – 💕 யுகம் மாறினும் மறவேன் வஞ்சிமுகம்