in , , ,

வாழ்வு தந்த குறள்

வாழ்வு தந்த குறள்

வேலன் மனசெல்லாம் வாங்க வேண்டிய சாமான் பற்றியே இருந்ததால் ….வண்டியில் பெட்ரோல் அளவு பார்க்கவில்லை…..

வண்டி தட்டு தடுமாறி நிக்கவும் தான் பார்த்தான்.. பெட்ரோல் காலியா போச்சு….இன்னும் எம்மா தொலவு இருக்கு….பெட்ரோல் பங்க்..

அலுப்பும் சலிப்புமா தள்ளிகிட்டு போறப்ப வாழ்க்கையே வெறுப்பா இருக்கு…..சே வயசுல ஒழுங்கா படிச்சிருந்தா ….நல்லா வேலைக்கு போய் முன்னுக்கு வந்திருக்கலாம்.

இப்படி ரோட்ல  பரோட்டா கடை போட்டு .அடுப்பு சூடுல  அவதிப்பட வேண்டாம்…..தன்னையே நொந்து கிட்டான்…வேலன்

நம்ம பையன் சூர்யா கூட நல்லாதான் படிக்கான்….பெரிய பள்ளிக்கூடத்துல படிக்க வச்சா ….நல்லா பெரிய ஆளாக வருவான்….

கடவுள் அவன் தலையில என்ன எழுதி இருக்கானோ….. பங்க் ல பேட்ரோல் போடுறப்ப தான் பார்த்தான்……ஒரு சின்ன பொண்ணு திக்கி திக்கி திருக்குறள் சொல்லுது…பங்க் முதலாளி கிட்ட….

அந்த பிள்ளை 20 குறள் சொன்னதும் முதலாளி எல்லாரும் கைதட்டி பாராட்டியது மட்டுமல்ல 1லிட்டர் பெட்ரோல் ப்ரீயா போடச் சொன்னார்….

வேலனுக்கு ஒண்ணும் புரியலை…..இதன்னடா கூத்து…..அந்த பங்கா பையனிடம் விவரம் கேட்க…..

20 குறள்  பள்ளிக்கூடம் படிக்கிற பிள்ளைகள் சொன்னா 1லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ னு எழுதி போட்டு ஒரு வாரமாச்சு பாக்கலியா….இன்னும் இரண்டு நாள் தான் பாக்கி..அப்புறம் அந்த ப்ரீய நிப்பாட்டிடுவாங்க….

தினம் வரோம் பாக்கலையே…..படிக்காத கூமுட்டை….நொந்த வேலன் அவசர அவசரமாக பெட்ரோல் போட்டு கடை கண்ணி போயிட்டு வீட்டுக்குப் போய் மகனை அழைத்து வர்றான்

8 வயது மகனை பங்க் முதலாளி கிட்ட திருக்குறள் சொல்லச் சொல்றான்…..அவரும் சரி ஒரு 20 குறள் சொல்லி ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க வந்திருக்காங்கனு ….சொல்லப் சொல்றார்…..

சூர்யா குறள் சொல்லி ஒரு 100 ரூபாய் மிச்சமானா நல்லது தானே நினைத்தான்

 வேலன்….

சூர்யா திருக்குறளை கனீருனு சொல்ல ஆரம்பிச்சதும் நிமிர்ந்து உட்கார்ந்த முதலாளி…நேரமாக நேரமாக மலைச்சுப் போயிட்டார்…….

நிக்காமா தங்கு தடையின்றி….20,30…50

சொன்னான்…..வேலனுக்கே ஆச்சர்யம் …..

நல்லா படிப்பானு மனைவி சொல்லித் தெரியும்…..

இவ்வளவு அருமையா சொல்றானே…பெட்ரோல் போட வந்த கார்களில் பைக்குகளில் இருந்தவங்க எல்லாரும் வந்த வேலை மறந்து…… சூர்யா வை ஆச்சரியத்தோடு பார்த்தாங்க……

முதலாளி அர்த்தம் தெரியுமா கேட்க ….கடகடனு

பொருளும் சொல்றான்…..எத்தனை குறள் தெரியும்…..500….எப்படிப்பா……

லாக்டவுன் ல பள்ளிக்கூடம் இல்லை…..ஆன்லைன் வகுப்புக்கு போன் இல்லை…… ராத்திரி அப்பா கூட பரோட்டா கடையில் வேலை செய்வேன்…..

பகலில் போன வருடம் ..பேச்சுப் போட்டியில் முதல் பரிசாக பள்ளிக்கூடத்துல கொடுத்த திருக்குறள் புத்தகம் தான் துணை…..

எங்க டீச்சர் திருக்குறளில் இல்லாத விஷயமே இல்லை இதை மட்டும் படிச்சாலே வாழ்க்கைக்கு தேவையான எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கலாம் சொன்னாங்க……

அதான் படிச்சேன்…..அர்த்தமும் படிச்சேன்…..

நான் உனக்கு போன் வாங்கித் தரேன்…..இனி ஆன்லைன் வகுப்பில் நல்லா படி…..முதலாளியின் உற்சாகக்குரலை……அதுமட்டுமல்ல…..னு ஒரு குரல் இடைமறித்தது……

இவ்வளவு நேரம் நடந்ததை  தன் காரிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ……”கல்வித்தந்தை” …..

என்று அந்தப்பகுதி மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட

பல கல்வி நிறுவனங்களின் அதிபர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்கள்…குரல்

இனி சூர்யா மற்றும் அவன் கூடப்பிறந்தவங்க படிப்பு செலவு  முழுதும்..என் பொறுப்பு……என் கல்வி நிறுவனம் ஒன்றில் வேலனுக்கு கேண்டீன் போட ஏற்பாடு செய்றேன்…..

எந்த தூண்டுதலும் இல்லாம தானா விரும்பி இவ்வளவு படிக்கறபிள்ளை இனிமேலும் கஷ்டப்படக்கூடாது…..

இவ்வளவு சிறந்த மாணவனுக்கு என்னாலான உதவி…….

கைதட்டல் அடங்க ரொம்ப நேரமாச்சு….

வேலனுக்கு ஒண்ணும் புரியலை……. சூர்யாவை பெருமையாக கட்டிபிடித்துக்கொண்டான்….

“மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல்

…தன் அம்மா நினைவாக குழந்தைகளை குறள் சொல்லச்சொல்லி பெட்ரோல் கொடுத்தது…..

ஒரு குடும்பம் உயர வழி வகுத்ததை நினைந்து

சந்தோஷத்தில் மூழ்கினார்….பங்க் முதலாளி…..

ஸ்ரீமதி வைகுண்டம்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

தூக்கணாங்குருவிகள்30

20 – 💙 உறங்காத நேரமும் உன் கனா இரண்டாம் பாகம்