in , ,

அவயங்கள் அனுசரிப்பு

அரங்கா உன் அடி வணங்கி நின்றேன்.                              அவயங்களின் அனுசரிப்பைவேண்டி நின்றேன் 

மனமே நீயும் மகிழ்ந்தே இரு மாதவன் அருள் நினைந்து லயித்தே இரு

சிரமே நீயும் தாழ்ந்தேயிரு

சிருங்காரன் திருவடி பணிந்தேயிரு

கண்ணே நீயும் கலங்காதிரு

கண்ணனைக் காண தெளிவாயிரு

நாவே நீயும் புரளாதிரு

நாரணன் திருநாமம் நவின்றேயிரு

செவியே நீயும் சீராயிரு

சுதர்சன் புகழ்தனை கேட்டேயிரு

காலே நீயும் தயாராயிரு

பரந்தாமன் பதம்சேர சித்தமாயிரு

உடலே நீயும் உயிர்ப்போடு இரு

உத்தமன் தனைநாட உதவியாயிரு

காலமெலாம் நானும் பார்த்திருப்பேன்

கருணாகரன் அழைப்பிற்கு காத்திருப்பேன்……

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

நீ அறியாததில்லை

எனை மீட்டும் இயலிசையே -2