in

தவிப்பு

மழையைக் கண்டதும் ராஜிக்கு ரொம்ப தவிப்பா இருந்தது. 

எப்பவும் மழைன்னா உடனே மாடிக்கு ஓடி நல்லா ஆசை தீர நனைஞ்சு, ஈரம் சொட்ட சொட்ட இறங்கி வரதும், வந்ததும் அம்மா பதறி ஓடி வந்து துண்டு எடுத்துக் குடித்து, தலையைத் துவட்டி விட்டு, அவளுக்கு சிசுருக்‌ஷை எல்லாம் பண்ணுவாள்.

இவள் நல்லா சந்தோஷமா டீ குடு, பஜ்ஜி போடு ந்னு அம்மா கிட்ட வேல ஏவி அதிகாரம் பண்ணிட்டு கையில் ஏதாவது கொறிக்க எடுத்துட்டு டீவி முன்னால நல்லா செட்டில் ஆயிடுவா.

மழைன்னா அதுக்கு ஒரு முறையிருக்கு அவளுக்கு அனுபவிக்க.

இன்னிக்கு நல்ல மழை. மேல சொன்ன எதுவும் இல்லாம தவிப்பும் தயக்கமும் ரொம்ப பயமும் இருக்கு.
இதுவரை எவ்வளவு பெரிய மழைன்னாலும் இவ்வளவு பதட்டமெல்லாம் வரல. இன்னிக்கு ஏன்?

ராஜி இப்ப அம்மா. அவ மக ஸ்கூல் விட்டு இன்னும் வரலையே!! மழை. குடையும் குடுத்து விடல. வேன் தெரு முனையில விடுவான். அங்கேர்ந்து நனைஞ்சு வருவாளே!!!

ராஜியா இருக்கல, இப்ப அம்மாவா இருக்கா. அதான் பரிதவிப்பு

…. கண்மணி
12/6/21மழையைக் கண்டதும் ராஜிக்கு ரொம்ப தவிப்பா இருந்தது.

12/6/21

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

தூக்கணாங்குருவிகள் 14

16,17 – உறங்காத நேரமும் உன் கனா இரண்டாம் பாகம்