in ,

15 – 💙உறங்காத நேரமும் உன் கனா இரண்டாம் கனா

இரு ஜோடி கன்னங்களும் விழி நீரைத் தாங்கி இருக்க, சரண் ஒரு புறம் வேதனையிலும், ஷிவானி ஒரு புறம் சோகத்திலும் துவண்டிருந்தனர்.

சரணின் அழுகையைக் கண்ட நண்பர்கள் தான் பதறி அடித்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

“சரா! என்னடா இது? நீயே இப்படி அழுதா எப்படி…?” என்று தர்ஷன் அவன் முகத்தை நிமிர்த்த, சரண் தான் விசும்பியபடி, “என்னால… என்னால என் டெடி கஷ்டம் மட்டும் தான் அனுபவிச்சு இருக்காள்ல? என்னால தான் எல்லாம் தர்பூஸ்…” என அவன் நெஞ்சில் சாய்ந்து மீண்டும் அழுகையைத் தொடர்ந்தான்.

அதில் அவனுக்கும் கண்ணீர் சுரந்திட, யாதவ், “என்ன பேசுற? 10 வயசுல என்னடா தெரியும் உனக்கு? அதுவும் அப்படி ஒரு சூழ்நிலை அவளுக்குப் பதிலா உனக்குக் கூட வந்து இருக்கலாம். எங்களுக்குக் கூட வந்து இருக்கலாம். அதுக்கு எல்லாம் காரணம் விதி மட்டும் இல்ல… அந்த நாசமா போனவனுங்களோட சதியும் தான். அதுக்கு எப்படி நீ பொறுப்பாக முடியும். முதல்ல நீ அழுகுறத நிறுத்து சரா. எங்களுக்கு எப்போவும் தைரியம் சொல்லி, சோர்ந்து போகாம தாங்குற நீயே உடைஞ்சு போனா… எங்களுக்கு இவ்ளோ நாள் இருந்த தைரியம்லாம் மொத்தமா போகுதுடா…” என்றான் உதட்டை பிதுக்கி.

ஆனால், சரணின் குற்ற உணர்வும், அழுகையும் மட்டும் நிற்கவே இல்லை. அப்படியே தன்னுயிர் சென்று விடாதா என்றிருந்தது அவனுக்கு. 

பொறுத்து பொறுத்து பார்த்த தேஜுஸ்ரீ, பின் பொறுமையிழந்தவளாக, “சரிடா. அப்போ நீ அழுதுகிட்டே இரு. குற்ற உணர்ச்சியில நீ ஒரு பக்கம் சாவு. அவள் கடைசி வர அவளுக்கு எல்லாமா நினைச்ச அப்பாவோட ஆதரவும் இல்லாம, உன்னோட ஆதரவும் இல்லாம இப்படியே காலத்தை ஓட்டட்டும். உன்ன பார்த்ததுக்கு அப்பறம் அவள் லைஃப்ல எல்லாமே கிடைக்கும்ன்னு நினைச்சோம். ஆனா, உனக்கு இப்போ பரிதாபமும் கில்டியும் தான இருக்கு…” என்று சற்றே முறைப்பாய் பேசிட, அதில் நிமிர்ந்து அவளை அடிபட்ட பார்வை பார்த்த சரண் தான், “நான் பரிதாபம்ன்னு சொன்னேனா?” என்றான் ஆதங்கமாக.

“இல்லைல… அப்போ இனிமே என்ன பண்ணன்னு யோசி!” என்று அழுத்தமாய் உரைத்தவளுக்குப் பதில் கூறாது, வெளியில் சென்று விட்டான்.

“ப்ச்… லூசா உனக்கு? ஏன் அப்படிப் பேசுன ஜு” எனத் தர்ஷன் எகிற, அவளோ “வேற என்ன பண்ண சொல்ற? அழுக விட்டு வேடிக்கை பார்க்கவா?” என வினவியளுக்கும் கண்ணைக் கரித்தது.

பின் அவளே, “அவன் வெளிய போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரட்டும்! நீ யுவன் அங்கிள்க்கு போன் பண்ணு…” என்றிட, அவனோ “எதுக்கு ஜு?” என்றான் புரியாமல். 

அவள் தான், “நானே பண்றேன்” என்று விட்டு, மாயாவிற்கே அழைத்து விவரத்தை கூறாமல் சரணிடம் பேச சொல்ல, தர்ஷனோ கொலை வெறியாகி விட்டான்.

“இருக்குற பிரச்சனை பத்தாதா? நீ புதுசா கிளப்புற தேஜு” என்றவனுக்கு, அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தான் பயமாக இருந்தது. ஷிவானி வேறு எடுத்தெறிந்து பேசி விட்டாள். இது தெரிந்து அவளைக் காயப்படுத்தி விட்டால்? என்ற எண்ணமே சற்று கிலியை ஏற்படுத்தியது. இத்தனை நாட்கள் பார்த்த மனிதர்கள் அப்பாடத்தைத் தானே கற்றுக் கொடுத்தார்கள்…!

அதில், மேலும் அவளிடம் அவன் எரிந்து விழுக, யாதவ் தான் சிந்தித்து விட்டு, “இல்லடா அவள் பண்ணது கரெக்ட் தான்…” எனத் தோழிக்கு வக்காலத்து வாங்கியதில், “என்ன கரெக்டு? இதுனால ஏதாவது பிரச்சனை மட்டும் ஆகட்டும் பார்த்துக்கிறேன் இவள…” எனக் கடிந்து தீயாய் சுட்டு விட்டு அறைக்குள் சென்று கதவை டொம்மெனச் சாத்திக் கொண்டான்.

இங்கோ, மாயா தான் செல்போனையே யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன மோஹி! அவசரமா ஆபிஸ் போகணும்னு கிளம்பிட்டு போனை உத்துப் பார்த்துட்டு இருக்க?” என்று புருவம் சுருக்கி வினவ, அவளோ “இல்ல யுவா. திடீர்னு தேஜு போன் பண்ணி சரணுக்கு போன் பண்ணி பேச சொன்னா அதான் ஒரு மாதிரி பக்குன்னு இருக்கு…” என்றாள் குழம்பி.

அவனும் புரியாமல், வேகமாகச் சரணுக்கு போன் செய்திட, அவனோ இன்னும் இன்னும் உடைந்து சிதைந்து கொண்டு தான் இருந்தான். அதோடு, ‘நான் எப்படி என் டெடிய பரிதாபமா பார்ப்பேன். எப்படி இருந்தாலும் அவள் டெடி தான?’ எனப் பழையதை என்னும் போதே, கண்கள் கலங்கும் வேலையை மட்டும் நிறுத்தவில்லை.

அப்பொழுது தான், யுவனிடம் இருந்து போன் வந்ததில், மேலும் தேம்பியவன், “அப்பா…” என்றான் போனை எடுத்து. 

அவன் குரலிலேயே யுவனுக்கு இதயம் அதிகபட்சமாகத் துடிக்க, “சரண், என்னாச்சு டா? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?” என்று பதறிவிட, அவன் “ப்பா… ப்பா… நான் நான்… என் டெடி…” என்று தேம்பி தேம்பி அழுததைக் கேட்டு அவனுக்கு ஒன்றும் ஓடவில்லை.

மாயாவிற்கும் தான். அவன் இதுவரை இப்படி அழுதது என்ன… குரல் இடறிப் பேசி கூடப் பார்த்தது இல்லை. 

“சரண் என்ன ஆச்சு? எதுக்கு இப்படி அழகுற?” என அவளுக்கும் விழி கலங்கிவிட, அவனோ திக்கி திணறி ஏதோ கூறியதில், அவளும் விஷயம் அறிந்து அதிர்ந்து போனாள். சில நாட்களாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த கேள்வி இப்போது அவளை மேலும் திகைக்க வைத்திட, யுவனோ மேலும் குழம்பி போனான்.

“என்னடா சொல்ற? அப்போ ஷிவானி பிஸிக்கல் கண்டிஷன் பத்தி உனக்கு முன்னாடியே தெரியாதா?” எனக் கேட்டிட, சரண் அழுவதை நிறுத்து விட்டு, “அப்போ உங்களுக்குத் தெரியுமா ப்பா?” என்றான் புருவ முடிச்சுடன்.

“தெரியும் டா. நான் அந்தப் பொண்ணை முதல் முதல்ல பார்க்கும் போது, அவள் லெக் வைக்கல. ஸ்டிக் தான் வைச்சுருந்தா. அவள் ஹேண்டிகேப்ன்ற நால தான் நான் அன்னைக்கு ஹெல்ப் பண்ணவே போனேன்…” என்றவன் சட்டென நாக்கை கடித்துக்கொண்டான்.

‘ஹேண்டிகேப்’ என்ற வார்த்தை சரணின் அணுவினுள் நுழைந்து சுள்ளென்ற வலியை கொடுத்ததில், உதட்டை அழுத்திக் கடித்துக்கொண்டான்.

“ப்ச்… சாரி டா… நான்…” என யுவன் தான் ஒரு நிமிடம் தடுமாறிட, மாயா, “ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்… சரண் நீ முதல்ல என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்லு” எனக் கூர்மையாக வினவ, அவனும் தன்னைத் தேற்றிக்கொண்டு நடந்ததை விளக்கினான்.

ஆனால் உடனே,” மா நான் வேணும்னு பண்ணலமா… இத சொன்னா நீங்க என்ன வெறுத்துடுவீங்களோன்னு பயந்து தான் இவ்ளோ நாள் இதைச் சொல்லல. ஆனா, அவள் அவளோட வீட்ல நல்லா இருப்பான்னு நினைச்சு தான்மா நான் அமைதியா இருந்தேன்… என்னாலேயே அவள் இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கான்னு என்னால ஏத்துக்கவே முடியல…” எனத் தவிப்பாய் வெளி வந்த வார்த்தைகள் இருவருக்கும் வலியை கொடுத்தது.

அதிலும் தன்னைப் பற்றியே தெரியாமல் தன் மேல் இந்த அளவு அன்பு வைத்திருக்கும் தன் மகனின் அன்பில் மாயா தான் நெக்குருகி போனாள். அதே நேரம், இன்னதென்று அறியாத வயதில் பூப்படைந்த ஷிவானியை எண்ணி இருவரும் மேலும் வருந்தினர்.

பின், சில நொடிகளில் தன்னை நிலைப்படுத்திய மாயா, “சரண், முதல்ல நான் சொல்றத பொறுமையா கேளு! நீ ஊசி போட்டேன்னு சொன்னப்போ, முதல்ல நீ என்ன ஊசி போட்டன்னு எனக்குத் தெரியல. ஆனா அவனுங்க நீ ஊசி போட்டதை மட்டும் வீடியோ எடுத்ததுல அவனுங்க அறியாமையே ஒரு ஓரத்துல அந்த மருந்தோட பேர் தெரிஞ்சுது. அந்த வீடியோ அவளோ க்ளியர் ஆ இல்லாத நால ரொம்ப நாள் ஆச்சு அதைக் கண்டுபிடிக்க… பட் அது என்ன மருந்துன்னு தெரிஞ்சதும், அதைப் பத்தி விசாரிச்சேன்.

நீ சொன்ன மாதிரி அது டேஞ்சரஸ் தான். சைட் எஃபக்ட் வரும் தான். லைக் நீ சொன்ன மாதிரி ஏஜ் அட்டன்ட் பண்றதும், இன்னும் நிறைய. ஆனா பாரலைஸ் ஆகுற அளவு அது வீரியம் மிக்கது இல்ல…! அப்படியே பாரலைஸ் ஆனா கூட, உடனே ட்ரீட்மென்டன் பார்த்துட்டா அத சரி பண்ண முடியும்!” என நிறுத்தியதில் சரண் வெகுவாய் குழம்பி விட்டான்.

இப்போது, இத்தனை நேரம் வேலை நிறுத்தம் செய்த மூளையும் விழிகளும் சுறுசுறுவெனச் சிந்திக்கும் பணியைச் செய்தது. “என்னமா சொல்றீங்க…? ஆர் யூ சியூர்?” என்றவனின் குரலில் கம்பீரம் சற்றே மீண்டிருந்தது.

யுவன் தான் புரியாமல் மாயாவை காண, அவளோ “யுவா! நான் உன்கிட்ட கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு மெடிசின் பத்தி கேட்டேன் ஞாபகம் இருக்கா? அப்போ நீ தான் இதைச் சொன்ன…!” என்றதில் திகைத்தவனுக்கு இப்போது அது நினைவு வந்தது.

ஆனால், அந்த ஊசியையா போட வைத்தார்கள் என்று நெற்றியை தேய்த்தவன், “இதை ஏன் என்கிட்ட அன்னைக்குச் சொல்லல மோஹி சரண் அந்த ஊசி போட்டான்னு” என்று கேட்டான் சற்றே கோபமாக.

மாயாவோ, “இல்ல யுவா! உங்கிட்ட சொன்னா பீல் பண்ணுவன்னு தான் நான் சொல்லல. அது மட்டும் இல்ல நீ அதைக் கியூர் பண்ணலாம்ன்னு சொன்ன தான. சோ நான் ஷிவானி வீட்டிற்குப் பல வருஷத்திற்கு முன்னாடி போனேன். அவள் அப்பாவை மீட் பண்ணேன்…” என்றதும் சரண் யோசனையுடன், “வாட்? அப்போ அவள் வீட்ல இருந்தளாம்மா?” என்று கேட்டான் கூர்மையாக.

“இல்ல சரண். அப்போ நான் ஷிவானிய பார்க்கல. அவள் அப்பாகிட்ட மட்டும் தான் பேசுனேன். அவரும் அவளுக்கு எந்த சைட் எபெக்ட் உம் ஆகலன்னு சொன்னாரு. கொஞ்ச நாள் கை கால் வலி இருந்துச்சு, பட் டேப்லெட்ல சரி பண்ணிட்டோம்ன்னு சொன்னாரு. நான் அவளைப் பார்க்கணும்னு சொன்னப்போ, அவள் ரொம்ப டிஸ்டர்ப்ட் ஆ இருக்கா… சோ உங்கள பார்த்தா பயப்படுவான்னு சொன்னாரு. சோ நானும் அவளுக்கு ஒன்னும் ஆகலைன்னு நினைச்சேன். அப்பறம் அவங்க ஆஸ்ரமத்துல இருந்தாங்கன்னு தெரிஞ்சதும், ஒரே குழப்பம் எனக்கு… 

சரி எப்படியும் நீ அவள் கிட்ட பேசுவன்னு நினைச்சு தான் அமைதியா இருந்தேன். அப்போ பாரலைஸ் ஆன பொண்ணுக்கு ஏன் ட்ரீட்மென்ட் பார்க்காம இருந்தாங்க? முன்னாடி நாள் நீ ஊசி போட்டு இருக்க. அடுத்த நாள் நான் சேவ் பண்ணிட்டேன். அப்படிப் பார்த்தா அவளுக்கு உடனே ட்ரீட்மென்ட் நடந்து இருக்கனும்? என்ன நடக்குது இங்க?” என்று வெகுவாய் குழம்பி போனாள்.

யுவன் யோசனையுடன், “ஒருவேளை ஃபினான்சியல் ப்ராப்லம்… அந்த மாதிரி இருக்குமோ?” என்று கேட்க, மாயா, “ஹ்ம்ம்… பணம் இல்லாதவன் பங்களாவும், பென்ஸ் காருமா வச்சு இருக்கான்… அது மட்டும் இல்லாம ரெஸ்க்யூ பண்ண பசங்க எல்லாருக்கும் கவர்மெண்ட் தான ட்ரீட்மென்ட் ப்ரொவைட் பண்ணாங்க” என்றதில் அங்குப் பேரமைதி நிலவியது.

சரண் தான், “அப்போ! கண்டிப்பா ஏதோ நடந்து இருக்கு! சம்திங் ராங்!” எனப் பின்னந்தலையைக் கடும் சிந்தனையுடன் கோதிக் கொண்டவன், “ப்பா… இப்போ அவளுக்குச் சரியாகச் சான்ஸ் இருக்கா?” என வினவினான் சற்று ஆர்வமாக.

யுவன் தான் அக்கேள்வியில் தயங்கி, “இல்ல டா. அதை அப்போவே சரி பண்ணி இருக்கணும். இட்ஸ் டூ லேட்!” என்று மெல்லிய குரலில் கூறியதில் அவனுக்கு நெஞ்சை அடைத்தாலும் இப்போது மனம் தெளிவாகவே இருந்தது.

மேலும் சிறிது நேரம், அவன் சிம்லா கிளம்புவதைப் பற்றிக் கூறிவிட்டுப் போனை வைத்தவன், மீண்டும் உள்ளே வந்தான். அங்குத் தேஜுவும் யாதவும் தான் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க, அவள் சொல்லி தான் மாயா பேசியதை அறிந்திருந்தவன் சிறிதாய் முறுவலித்துக் கொண்டான்.

ஆனால், எதுவும் பேசாமல் ஷிவானியின் அறைக் கதவை தட்ட, அத்தனை நேரம் அழுதிருந்தவள், அப்போது தான் குளித்து விட்டு வந்திருந்தாள். தேஜு என எண்ணி, “கதவு திறந்து தான் இருக்கு தேஜு…” என்றவளின் குரல் அப்போதும் கமறியபடியே தான் வெளி வந்தது.

அதில், அவன் உள்ளே வர, ஒரு காலை நீட்டி சேரில் அமர்ந்தபடி புடவைக்குக் கொசுவம் வைத்துக் கொண்டிருந்தவள், அவனைக் கண்டு பேந்த பேந்த விழித்தாள். 

“நீ எதுக்கு வந்த?” எனக் கேட்டவள், தேஜு வருவாள் என்றெண்ணி கதவை வெறுமனே சாத்தி இருந்தாள். மற்ற இருவரும் எந்நிலையிலும் அறைக்குள் அனுமதி இல்லாமல் வரமாட்டார்கள் என்பதால், அவள் அசட்டையாக இருக்க, இவனை அவள் எதிர்பார்க்கவில்லை.

அவனும் அவளை இந்நிலையில் எதிர்பாராமல் ஒரு கணம் விழித்து விட்டு, “மே ஐ ஹெல்ப் யூ?” எனக் கேட்டான் குறும்பாக. ஆனால், அக்குறும்பு வார்த்தை அவன் கண்ணில் பிரதிபலிக்கவில்லை. அது அவளின் காலினை தான் வாஞ்சையாய் வருடியது.

“ப்ச்… மொதோ வெளிய போ!” என அவள் எச்சரித்திட, அவனோ அவளைத் தான் நெருங்கினான். அதில் அவளின் கரங்கள் தான் சில்லிட்டு, புடவை மடிப்பை நழுவ விட எத்தனிக்க, அதனை அவன் பிடித்து விட்டான். அவள் முன் முட்டியிட்டு அமர்ந்து, கலைந்த கொசுவ மடிப்புதனை சரியாக வைத்து, அவளின் இடையில் சொருக சென்றவன், பின் குறுஞ்சிரிப்புடன் அவளிடமே கொடுத்தான்.

தலையைக் குனிந்தே இருந்த ஷிவானி, “திரும்பு…” என மட்டும் கூறியவள், “கண்டிப்பா திரும்பணுமா?” என்றவனின் பேச்சில், நிமிர்ந்து முறைத்தாள். அதில் முறுவலித்தவன், எழுந்து மறுபுறம் திரும்பி நிற்க, அவள் புடவையைக் கட்டி விட்டு, “ம்ம்” என்றாள்.

அவளுக்கு அருகில் ஒரு வாக்கிங் ஸ்டிக்கும், ஆர்டிஃபிசியல் லெக் உம் இருக்க, தொண்டையை அடைத்தாலும் முயன்று எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள எத்தனித்தவன் சில நொடிகளில் அதில் வெற்றியும் கண்டான்.

“இதை மாட்டிக்கலையா டெடி…?” என மென்மையாய் வினவியவனிடம், “குளிக்கப் போனேன்…” என ஒத்தை வார்த்தையில் பதிலளித்தவள், “இப்ப என்ன வேணும் உனக்கு?” எனக் கேட்டாள் நேரடியாக.

அவன் அதற்குப் பதிலளிக்காமல், “நான் மாட்டி விடவா டெடி…? காலை நீட்டியே தான் வைச்சு இருக்கணுமா சேர்ல உட்காந்தாலும்?” எனக் கேட்டவனுக்குச் சிறிதாய் பிசிறு தட்டியது.

“ம்ம்… லெக் வைச்சா கையாள மடக்கி உட்காரலாம்…!” என விளக்கம் அளித்தவளுக்கு, சங்கடமான நிலைதான். அவன் மேல் கோபத்தையும் காட்ட இயலாமல், தவிர்க்கவும் இயலாமல், சாதாரணமாகவும் பேச இயலாமல் தவித்துத் தான் போனாள்.

“அப்போ ஸ்டிக் எதுக்கு டெடி?” எனப் புரியாமல் கேட்டிட, “ரொம்ப நேரம் இத மாட்ட முடியாது. இத கழட்டி வைக்கும் போது நடக்கனும்னா ஸ்டிக் யூஸ் பண்ணிக்குவேன்… இப்போ இதெல்லாம் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?” என்றாள் விழி உயர்த்தி.

“நான் தான தெரிஞ்சு வைச்சுக்கணும்…” எனக் கண் சிமிட்டியவன், “தலையை ஏன் துவட்டாம வைச்சு இருக்க…! இந்தக் குளிர்ல?” என்றவன் துவாலையை எடுத்து அவளுக்குப் பின் நின்று துவட்டி விட, அவள் தான் அவனைத் தட்டி விட்டு, “போதும் சரண் உன் அக்கறை! சிம்பதி எல்லாம்! இதெல்லாம் என்னாலேயே பண்ணிக்க முடியும். நான் ஒண்ணும் ஒண்ணுத்துக்கும் ஆகம போகல… போறியா முதல்ல!” எனக் கடுமையாகக் கத்தி விட, அவன் பதிலேதும் பேசாமல் வேலையைத் தொடர்ந்தான்.

ஷிவானியின் கூந்தலில் ஈரம் சற்று வற்றியதும், அவளின் தலையைச் சாய்த்து நெற்றியில் இதழ் பதித்தவன், “நம்ம சிம்லா கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. கிளம்பும் போது லெக் மாட்டிக்கிறியா…? இல்ல இப்போவே போட்டு விடவா!” என வினவ, அவளோ அவன் முத்தத்தில் திணறி, “நான் உங்கிட்ட தான் பேசுறேன்… வெளிய போ!” எனப் பல்லைக்கடித்தாள்.

அவன் அப்போதும், தலையைத் தாழ்த்திக் கொண்டு, “சரி… தரை ஐஸா இருக்கு. கால்ல சாக்ஸ் மாட்டிக்கோ…” என்றவன், அங்கிருந்த சாக்ஸையும் எடுத்து முதலில் உணர்வுள்ள காலினில் போட்டு விட்டவன், அதில் அவன் அணிந்து விட்ட கொலுசு அப்படியே இருப்பதைக் கண்டு மெதுவாய் தடவிப் பார்த்தான்.

“டேய்… தர்பூஸ் எவ்ளோ நேரம் தான் கோபமா இருப்ப…! வெளிய வந்து கோபமா இருடா!” என யாதவ் அறைக்கதவை தட்ட, கதவை திறந்த தர்ஷன் தான், தேஜுவை கண்டு சிலுப்பிக்கொண்டு வெளியில் சென்றான்.

“இவன் வேற கோபப்படுறேன்னு காமெடி பண்றான் யானை…! ஆனா, ஒரு டவுட்டு?” என மேலே பார்த்து சிந்தித்த தேஜுவை, “என்ன டௌவுடு” எனப் பார்த்தான் யாதவ்.

“இல்ல லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணி இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் அவன் கோபப்படுறான். இந்த ஊடலை எப்படிச் சரி பண்றது…” எனக் கேட்டிட, “லவ் பெயிலியர் ஆனவன் கிட்ட கேட்குற கேள்வியா இது? ஓடி போய்டு ஒழுங்கா…” என்று வெறியானான்.

வாசலுக்கு வந்த தர்ஷன், காலில் ஷூவை மாட்டிக்கொண்டு இருக்க, “அண்ணா” என்ற அமைதியான அழைப்பில், சுற்றும் முற்றும் தேடினான். 

பின் தலையை உலுக்கிக்கொண்டு மீண்டும் ஷூ லேசில் மூழ்கியவனுக்கு மீண்டும் “அண்ணா” என்ற அழைப்பே கேட்க, அதில் திருதிருவென விழித்தவன், இருக்கும் கோபம் மறந்து, “ஸ்ரீ! ஸ்ரீ… இங்க வா சீக்கிரம்!” என்று கத்தினான்.

‘எதுக்கு இவன் கத்துறான்…!’ என எண்ணியபடி வந்தவள், “என்னடா?” என வினவ, அவனோ “உன் மேல கோபம்ன்னா, என் ஆளான நீ தான பிரம்மைல வரணும். எனக்கு ஏன் யானையோட ஆளு கண்ணு முன்னாடி தெரியுது…” என்று பின்னந்தலையைச் சொரிந்தான்.

பே வென விழித்த தேஜு, அதன் பிறகே அங்குப் பையுடன் தீக்ஷிதா நிற்பதை கண்டு திகைக்க, இப்போது தீக்ஷிதாவோ “அக்கா…” என்றழைத்தாள்.

அதில் அவளோ நெஞ்சை பிடித்துக்கொண்டு, “டேய், தர்பூஸ்! நேத்துல இருந்து அதிர்ச்சியில் நெஞ்சை பிடிச்சு பிடிச்சு எனக்கு ஹார்ட் அட்டேக் வந்துடும் போல டா! ஆனா, ஒன்னுடா… எனக்குக் கூட யானை ஆளு தான் கண்ணு முன்னாடி நம்மளை பாசமா கூப்புடுற மாதிரி தோணுது பாரேன். ஒருவேளை இதெல்லாம் தனுஷ் சொல்ற மாதிரி, சப் கான்ஷியஸ் மெமரி பவரா இருக்குமோ?” என அவன் தோளில் கை போட்டு யோசனையாக வினவ, அவனும் அதனை ஆமோதித்தான்.

பின், “ஆனா, அந்த மாதிரி பவர் ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்திலயா வருது?” என அவன் சந்தேகம் கேட்க, தேஜு தான், “ப்ச், ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல லவ் வரல. ஒரே நேரத்தில பசி வரல… அந்த மாதிரி தான்” எனப் புரிய வைக்க, தீக்ஷிதா தான் “அய்யோஓஒ… ஒரு பவரும் இல்ல. இது பிரம்மையும் இல்ல. நான் உண்மையா வந்து இருக்கேன்!” என்றாள் நொந்து.

“என்ன வெளிய சலசலப்பு!” எனக் கேட்டுக்கொண்டே அங்கு வந்து யாதவ், தீக்ஷிதாவை கண்டு மிரண்டு நின்றான். 

‘பாலோ பண்றியாடா பாடி சோடா…’ என்றே உள்ளுக்குள் மகிழ்ந்து வெளியில் முறைத்துக் கொண்டிருக்க, அவளோ அவனைக் கண்டதும் விழிகள் மின்ன, “சாரி யாதவ்” என மெல்லிய குரலில் கூறினாள்.

இவர்களைப் போல் அவனுக்கும் இது பிரம்மையோ என்று தான் தோன்றியது. அதில் சுற்றும் முற்றும் தேடி, ஒரு கட்டையை எடுத்து தர்ஷனின் முதுகில் ஒரு அடி அடிக்க, அவனோ துள்ளி குதித்து, “நாசமா போறவனே எதுக்கு டா அடிச்ச?” என்றான் முதுகைத் தேய்த்த படி.

“ஈ… இல்லடா. இது கற்பனையா இல்ல உண்மையான்னு தெரிஞ்சுக்கத் தான்…” என்று இளித்தவனை, “ஏன் அதுக்குத் துப்பாக்கி எடுத்து சுட்டு பார்த்து தெரிஞ்சுருக்க வேண்டியது தான!’ என்று முறைத்திட, தேஜு கெக்க பெக்க வெனச் சிரித்தாள்.

அதில், உதட்டை மடித்து புன்னகையை அடக்கிய தீக்ஷி, “அத்தான்…” எனத் தர்ஷுவை அழைக்க இப்போது மிரண்டு நிற்பது அவனின் முறையானது. 

“மீ?” என எச்சிலை விழுங்கி கேட்டிட, அவளோ “ம்ம்” எனத் தலையை ஆட்டி, “நீங்க இந்த அக்காவ லவ் பண்றீங்கன்னு இப்போ தான் தெரிஞ்சுது. அப்போ உங்கள அண்ணான்னு கூப்பிட்டா முறை மாறிடும்ல. எங்க ஊர்லலாம் அக்கா ஹஸ்பண்டை அத்தான்னு தான் கூப்பிடுவாங்க. சாரி அத்தான். நான் எதுவும் புரியாம என்னென்னமோ பேசிட்டேன். இந்தக் கொழுந்தியாவை இந்த ஒரு தடவை மன்னிச்சுடுங்க… ப்ளீஸ்…” எனக் கண்ணைச் சுருக்கி கெஞ்சலாகக் கேட்க, அவனோ உறைந்து நின்றான். 

ஆனால் உண்மையான வருத்தத்தில் சாயல் அவள் முகத்தில் தெரிந்ததை உணர்ந்தவன்,

“சே சே! நீ சின்னப் பொண்ணு தான. அதான் எதுவும் புரியாம பேசிட்ட. இதுக்குலாம் போய் சாரி கேட்டுட்டு. நீ எங்களைப் புருஞ்சுக்கிட்டதே போதும் மா…” என ‘பேக் பல்டி’ அடித்தான்.

அவன் பேச்சில் யாதவ் தான் தீப்பார்வை பார்த்தான். தேஜுவோ அவளின் “அத்தான்” என்ற வார்த்தையிலேயே தர்ஷனை கொலை வெறியாய் முறைத்தாள்.

அதில் புன்னகைத்த, தீக்ஷி இப்போது தேஜுவைக் கண்டு, “அக்கா… ரொம்ப சாரிக்கா… உங்களைத் தப்பா பேசுனது ரொம்பத் தப்பு தான். இந்தத் தங்கச்சியை ஒரு தடவை மன்னிச்சுருக்கா… இனிமே இப்படிப் பண்ணவே மாட்டேன்” என்று உதட்டை பிதுக்கி, பாவமாகக் கேட்க, 

அவளோ மறுநொடி, “ஹே! நாங்க உன்ன தப்பாவே நினைக்கல. நீ பீல் பண்ணாத. ஏதோ ஒரு மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் அது அவ்ளோ தான்…” என்று தன்னை மீறி அவளைச் சமன் செய்தாள்.

அவள் தான், விழி கலங்கி, “தேங்க்ஸ் கா…” என அவளின் கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தத்தை வேறு கொடுத்து விட்டு, “ஷிவானி அக்கா எங்க உள்ளேயா? நான் போய்ப் பாக்குறேன்!” என்று விட்டு, உள்ளே செல்ல போனவள், யாதவை லேசாக உரசி விட்டு போனாள்.

அவனின் தீப்பார்வை தான் இப்போது தேஜுவை சுட்டது. “என்ன ரெண்டு பேரும் அன்னை தெரசாக்கு அத்தை பசங்களா ஆகிட்டீங்களா…? என்னமோ அவன் கொஞ்சுறா… நீங்க ரெண்டு பேரும் கரையுறீங்க…? முடிஞ்சு போனது முடிஞ்சு போனது தான்…!” எனக் கோபமாகக் கூறி விட்டு உள்ளே சென்றதில் இருவரும் தான் செய்வதறியாமல் விழித்தனர்.

 ஷிவானியோ அவன் காலை பிடித்ததில் கூச்சத்தில் நெளிந்து, அவனின் அமைதியில் கடுப்பாகி, “சரா! அவ்ளோ தான் லிமிட் உனக்கு! நான் தான் சொல்றேன்ல… இதெல்லாம் நானே பண்ணிப்பேன்!” என மீண்டும் கத்தி விட, அவன் பொறுமையாய் நிமிர்ந்து அவளை நோக்கினான்.

கன்னங்கள் அவள் வார்த்தைகளில் கண்ணீரை தாங்கி இருக்க, விழிகள் ஏக்கத்தைச் சுமந்து இருந்தது. இன்றளவும் அவனின் கலங்கிய முகத்தைக் காண அவளுக்குத் திராணியில்லையே. அதில் திகைத்த ஷிவானி தான், அவனைக் காண இயலாமல் கண்களைத் திருப்பிக்கொண்டாள் தன்னிச்சையாய் நீர் வரத் துடித்த கண்களை அவனுக்குக் காட்டாமல்.

அதில் அவன் தான், “நம்ம குழந்தைக்கு உடம்பு சரி இல்லைன்னா, நம்மளே தான் பார்த்து பார்த்து எல்லாம் பண்ணுவோம் டெடி. அதுக்கு அர்த்தம் குழந்தையால எதுவும் பண்ண முடியாதுன்னு இல்ல. அப்படிப் பண்றதுனால, நம்ம குழந்தைக்கும் அந்த அக்கறை மனசை சாந்தப்படுத்தும். நமக்கும் ஆத்ம திருப்தி… அதே மாதிரி தான் எனக்கு நீயும்!” என்று விட்டு மெலிதாகப் புன்னகைத்தான்.

அவள் தான் லேசாய் திடுக்கிட்டாள். எப்படி மனதை படித்தவன் போல் கூறுகிறான்? உண்மையில் அவனின் தீண்டலும் மென்மையும் மயிலிறகாய் அவள் காயங்களுக்கு மருந்திட்டு தானே இருந்தது. ஆனால், அதனை ஒப்புக்கொள்ளத் தான் அவள் முயலவில்லை.

விரக்தி புன்னகை ஒன்று அவள் இதழில் உதிக்க, “ஆனா, குழந்தைக்கு உடம்பு சரி இல்லைன்னா, தூக்கி போடுறவங்க தான இருக்காங்க…!” என்றவளை, அழுத்தமாகப் பார்த்தவன், “அப்போ உடம்பு சரி இல்லாதது அந்தக் குழந்தைக்கா இருக்காது டெடி. அந்தக் குழந்தையோட பெத்தவங்களுக்கா தான் இருக்கும்!” எனக் கூறிட, அவள் மௌனமானாள்.

பின், அவனே அவளின் முகத்தை நிமிர்த்தி “அங்க இருந்து போனதும் ப்ளீடிங் ரொம்ப இருந்துச்சா ஜெஸி!” எனப் பாவமாகக் கேட்டிட, அவளும் அவனைப் பாவமாகத் தான் பார்த்தாள்.

“ம்ம்… ஹாஸ்பிடல் போனதும் தான் அங்க இருந்த நர்ஸ் எல்லாம் ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டேன்னு சொன்னாங்க…” என்றவள் அவனின் வேதனை முகம் தாளாது, “ஆனால், ப்ளீடிங் கம்மியா தான் இருந்துச்சு சரா…” என்றாள் வேகமாகத் தலையை ஆட்டி.

தனக்காகச் சொல்கிறாள் எனப் புரிந்தவன், பொங்கி எழுந்த அன்பில் “சாரி ஜெஸி… ஐ ஆம் சோ சாரி!” என அவள் முகம் முழுதும் முத்தமிட்டவன், தேனிதழ்களில் இளைப்பாறினான்.

அந்நேரம் “ஷிவானி அக்கா…” என அழைத்தபடி கதவை திறந்து தலையை மட்டும் உள்ளே எட்டிப் பார்த்த தீக்ஷிதா தான் ‘தங்கச்சிய காணோம்னு தானடா தேட வந்த?’ என்ற ரீதியில் திகைத்து நின்றாள்.

கனா காண்போம் வா
மேகா

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by Megavani

Story MakerContent AuthorYears Of Membership

நேசம்….

யார் நீ