in

அன்பின் அரசனே… 44

அன்பின் அரசனே 44

சித்து வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருந்து விட்டு உறங்க செல்ல, சித்துவின் அறைக்கு வந்த மதி.. அதிரிச்சியில் உறைந்து நின்றாள்.. மதி பின்னோடு வந்த சித்து, அவள் அதிர்ச்சியை உணராமல்,  பின்னிருந்து அணைத்தவாறே அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன், “கொஞ்ச நேரத்துல மனுசனை சாகடிச்சிட்டடி..! “ என கோபமாக சொல்லி மதியின் முகத்தை பார்க்காமல், குளியலறை புகுந்து கொண்டான்..

அதை கூட உணராமல் , அங்கு சுவர்முழுதும் மாட்டியிருந்த தன் புகைப்படங்களை ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் பார்த்துக் கொண்டிருந்தாள்.. குளித்து வந்த சித்து, மதி அந்த நிலையிலிருந்து மாறாமல் நின்றிருப்பதை, அப்பொழுதுதான் அவளின் நிலையை உணர்ந்து,

’என் கோபத்தை பார்த்து பயந்துட்டாளா..’ என்று நினைத்து, “அப்பூ என்னடா ஏன் இப்படி நிக்கிற..?” கேட்டவாறு மதியின் தோளை தொட, அதில் உணர்வு பெற்ற மதி,

“சித்துப்பா..!” குரல் நடுங்க அழைத்தவள், இந்த போட்டோ எல்லாம்  என்னோடது தானே  எப்போ எடுத்தது..? ஆனால் நான் இந்த மாதிரி ஒரு நாள் கூட இருந்தது இல்லையே.. அப்பறம் எப்படி இந்த போட்டோக்கள்..”? என்று ஆர்வத்தோடும் குழப்பத்தோடும்  கேட்க

“ இவ்ளோதானா..? நான்  நீ ஃபரீஸாகி நிக்கிறத பார்த்து பயந்துட்டேன்.. ” என்ற சித்து.. ” இந்த படங்கள் எல்லாம் என் கற்பனையில வரைஞ்சது..” என்றவனை விழி அகலாமல் பார்த்தவள், அருகே சென்று அந்த படங்களை உற்றுப்பார்த்தாள்.. ஒவ்வொரு படத்தின் கீழே ”அன்பின்அரசன்” என்ற பெயர் இருப்பதை பார்த்த மதி, அந்த பெயரை ஆசையாக வருடி கொடுத்தவளுக்கு,  தன்னவனின் காதலை எண்ணி சந்தோசத்தில் அழுகை தான் வந்தது..

அழுகையும், சிரிப்புமாக சித்துவை நெருங்கியவள், “ நீங்க என்மேல இவ்வளவு காதல் வைக்கிற அளவுக்கு நான் என்ன செஞ்சேன் சித்துப்பா..?  ஓவ்வொரும் தடவயும் உங்க காதல் என்னை புதிதாக பிறக்க வைக்குத்து சித்துப்பா.. நான் எதாவது தப்பு செஞ்சால் என்னை அடிங்க திட்டுங்க ஆனால் எங்கூட பேசாம மட்டும் இருந்திராதிங்க சித்துப்பா.. இந்த காதல், இந்த அன்பு உங்க அக்கறை எனக்கு எப்பவும் வேணும் சித்துப்பா..” என்று உணர்ச்சியில் ஏதேதோ பேசியவாறே.. சித்துவை இறுக அணைத்து அவன் முகம் முழுதும் முத்தத்தால் ஈரமாக்கினாள்..

தன்னவளின் அணைப்பும், அந்த முத்தமும் சித்துவை பித்தம் கொள்ள செய்ய, தானும் இறுக அணைத்து கொண்டு மனைவியின் செயலை தனதாக்கினான்.. ஒரு கட்டத்தில் சித்து எல்லை மீற, அப்பொழுதுதான் கணவனின் வெற்று மார்பில் தன் முகம் அழுந்திக்கிடப்பதை உணர்ந்த மதி, அவன் மணமும், சோப்பின் மணமும் சேர்ந்து வேறு உலகத்துக்கு கொண்டு செல்ல,

இங்க தான என்னை பத்திரமா பூட்டி வச்சிருங்க” கேட்டவாறே அவன் மார்பில் அழுந்த இதழ்பதித்தாள்,,” டீ அப்பூ என்னை டெம்ப்ட் பண்னாதடி.. ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ஃப்..” என்றவன் மதியின் இதழில் இதழ் பதிக்க போக.. நொடியில் தன்னை சுதாரித்து விலகினான்..

கணவனின் இதழணைப்பிற்காக கண்மூடி நின்றிருந்த மதி, அவனின் விலகலில் திகைத்த்து கண்திறந்து என்னவென்று  பார்க்க, ”நான் உன்மேல கோவமாக இருக்கேன்.. நீ என்னை பத்தி கொஞ்சம் கூட நினைச்சு பார்க்காமல் அந்த சூர்யாக்கிட்ட வேணுமின்னே மாட்டி இருக்கேல்ல.. உனக்கு எதாவது ஆச்சுன்னா நான் என்னடி செய்வேன்.. அந்த கொஞ்ச நேரத்துல நான் எப்படி துடிச்சேன் தெரியுமா..” ஆதங்கத்தோடு சொன்னவன் மதியை இறுக அணைத்து கொண்டான்..

”ஏன் டி இப்படி செஞ்ச..? அந்த மாறன் சொன்னான்னு இப்படி போய் ஆபத்துல மாட்டுவியா..?” சித்து ஆதங்கமாக கேட்க, மிருதுவாக அவன் கன்னத்தை வருடிய மதி, “ அவ்வளவு சீக்கிரம் நான் உங்களை விட்டு போகமாட்டேன் சித்துப்பா.. நான் இருக்க வேண்டிய இடத்துல அந்த சூர்யாவை வச்சுருந்திங்க.. அது எனக்கு பிடிக்கலை..அதான்..” முகத்தை சுருக்கி சொன்ன மதியிடம், “அடியே என்ன உளர்ற..?” சித்து கோபமாக கேட்க

“ஆமா.. நீங்க என்னை விட அந்த சூர்யாவை பத்தி தான நினைச்ச்சிங்க..” என்றவளிடம், “அடிப்பாவி..! நான் அவனை எந்த மாதிரி நினைச்சிட்டு இருக்கேன்.. நீ எப்படி நினைச்சுட்டு இருக்க..” என்ற சித்துவை அசடுவழிய பார்த்தவள்..”எப்படி பார்த்தாலும் அவன் உங்க மனசுல் இருந்தான்ல.. அதான் அவனை உங்க மனசில இருந்து தூக்கணும் முடிவுசெஞ்சு திட்டம் போட்டோம்..” என்று சொல்ல,

“ஆமா பெரிய திட்டம் தான்..அஞ்சு நிமிசம் லேட்டா வந்திருந்தால் உங்க திட்டம் எல்லாம் மட்டமாகிருக்கும்..” என்று நக்கல் செய்தவன், “ உன்னை சொல்லி குத்தமில்லை எல்லாம் போலீஸா இருந்துட்டு கிரிமினல் வேலை பார்க்கிறானே அந்த மாறன்.. அவனை சொல்லனும்..” என்று கறுவ

  மாறன் அண்ணாவை எதுவும் சொல்லாதிங்க சித்துப்பா..! நான் தான் அவர்க்கிட்ட வலுக்கட்டாயமாக கேட்டேன்.. நீங்க எப்படி எனக்காக ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்றிங்க.. அது மாதிரி தான் இதுவும்..  நீங்க அந்த சூர்யா எனை என்ன செய்வானோ என்று நினைச்சு சரியாவே தூங்கிறது இல்லை.. எப்பவும் ஒரு எச்சரிக்கையோட இருந்திங்க.. எனக்கு உங்களை இப்படி பார்க்க முடியலை..! இதுக்கு ஒரு முடிவு கட்டணும் நினைச்சேன்.. அதான்.. ஆனால் திவியையும் கடத்துவாங்கன்னு நினைக்கவே இல்லை” என்ற மதி மீண்டும், ”இப்போ உங்களுக்கு ’அப்பாடா‼’ ன்னு ஒரு ஃபீல் வருது தானே..?” என்று கேட்க.. “மனமே இல்லையென்றாலும் உண்மையை ஒத்துக் கொண்டான்..

“ அவ்ளோதான்.. இது தான் எனக்கு வேணும்… இதுக்கு தான் இத்தனை கஷ்டம்” என்று சித்துவை  சமாதானம் செய்தவள்,  ஆனால் மாறன் அண்ணா கிரேட் தெரியுமா? நான் எப்படி கேட்டும் அவர் உண்மை சொல்லவே இல்லை.. “உனக்கு எதாவது ஆச்சுன்னா சித்து ஒடைஞ்சு போயிருவான்.. இதை நாங்க பார்த்துக்கிறோம் ‘ சொன்னார்.. நான் தான் அவனுக்காக காத்திருக்கிறதுக்கு பதிலாக நாமே அவனை நம்ம வலையில சிக்க வைக்கலாம் சொன்னேன். மனசே இல்லாமல் தான் இதுக்கு சம்மதிச்சார்.. எனக்கு ரொம்ப பாதுகாப்பு கொடுத்தாங்க

நிஜமாவே சொந்தங்களால வஞ்சிக்கப்பட்ட எனக்கு, மாறன் அண்ணா, சிவா இந்த மாதிரி உறவுகள் கிடைச்சது வரம்.. என்றால் நீங்க எனக்கு கிடச்சது நான் செஞ்ச புன்னியம்..! உங்களை எப்படி நான் விட்டு போவேன்..” என்ற மதியை இறுக அணைத்து கொண்டவன்.. ” இனி இது மாதிரி வேலை எதுவும் செய்ய மாட்டேன்னு எனக்கு  சத்தியம்செய்து கொடு..!” என்று கேட்க.. மதியும் அப்படியே செய்தாள்.

மதியை தன்மீது போட்டு உறங்க வைத்தவன், அவள் ஆழ்ந்து உறங்கிய பின், மாறனை அழைத்து மொட்டை மாடிக்கு வரசொல்லிவிட்டு, தானும் அங்கு சென்றான்.. அங்கு மாறன், சித்துவிற்கு முன்பே வந்திருந்தவன், “டேய் சித்து ஒரு தப்புக்கு எத்தனை தடவை டா திட்டுவ..? அதுவும் நடுஜாமத்துல நான் என் ஆளு கூட டூயட் பாடிட்டு இருக்கும் போது கால் செஞ்சு,  திட்டு வாங்கிறதுக்காக என்னை மொட்டை மாடிக்கு வர சொல்றதெல்லாம்.. த்ரீ ஃபோர் ஃபைவ் மச்.. (டூமச்சை அதிகம்.. சொல்றதை தான் மாறன் சார் திரீ ஃபோர் மச்..சொல்றார்) மி பாவம்..” என்று தன் பாட்டுக்கு ப்லம்பியவனை  சித்து, தாவி அணைத்தான்..

“ மச்சி நீ செஞ்சது அதிகபிரசித்தி என்றாலும், நல்லது தான்டா நடந்துருக்கு..”  என்ற சித்துவை முறைத்த மாறன்.. ” அது அதிகபிரசித்தி இல்லை.. அதிகபிரசங்கி” என்று திருத்த.. ” பார்ததியா நான் அந்த வார்த்தை  தப்பா சொன்னாலும் நீ சரியாக சொல்லி,  நீ செஞ்சது அதிகபிரசங்கி என்று ஒத்துக்கிட்ட ” என்று கிண்டல்செய்த சித்துவை, ”   இதை சொல்றதுக்கு நீ நல்ல நேரம் பார்த்தடா..! நீயெல்லாம் நல்லா வருவ டா..” என்று புலம்ப,

“ஹி..ஹீ  பாராட்டனும் என்று முடிவு செஞ்சுட்டா நான் நேரம் காலம் எல்லாம் பார்க்க மாட்டேன் டா..அப்படியே பாராட்டி தள்ளிருவேன் யூ சீ,,” என்று சித்து எதுவோ சொல்ல வர, மாறன் வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்குமாறு சொல்ல.. “இல்லைடா  இன்னும் நான் உன்னை பாராட்டவே ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள போதும் நு சொல்ற.. ரொம்ப தன்னடக்கம்.. டா” என்று மேலும் மாறனை வம்பிழுத்த சித்துவை ”நீ என்னை பாராட்டுறேங்கிற பேர்ல பாய்சனை கொடுக்கிற மச்சி.. வேண்டாம்  என் உடம்பு தாங்காது..” என்றவனை பார்த்து சித்து சிரிக்க, மாறனும் இணைந்து கொண்டான்..

“சாரி டா உனக்கு தெரியாமல் இதை செஞ்சிருக்க கூடாது ..” விளையாட்டை கைவிட்டவனாக மாறன் உணர்ந்து மன்னிப்பு கேட்க, “ டேய் என்னடா மன்னிப்பு பெரிய வார்த்தை எல்லாம் கேட்டுக்கிட்டு.. உன்னை பத்தி எனக்கு தெரியும்.. நீ தகுந்த பாதுகாப்பு இல்லாமல் மதியை இதுல கொண்டுவந்திருக்க மாட்ட.. என் கோபம் அந்த நொடி நேரம் கோபம் தான்.. “ என்று  சொன்ன சித்துவிடம்,

“ஆமா நீ ஏன் அந்த ரேணுவை எதுவும் செய்யலை.. அந்த சூர்யாவுக்கு இவ்வளவு கேவலமான ஐடியா கொடுத்தது.. அவ தான் ஆனால் நீ அவளை எதுவுமே செய்யாமல் இருந்தது குழப்பமாதான் இருக்கு.. ரொம்ப வருத்தமாகவும் இருக்கு.. அட்லீஸ்ட் என்னையாவது விட்ருக்கலாம்.. என்னையும் தடுத்துட்ட..” ஆதங்கத்துடன் சொன்னவன், “ஆனால் நமக்கு பதிலா சிவா நல்லா வெளுத்து வாங்கிட்டான்.. அதை நினைச்சு மனசை தேத்திக்கிட்டேன்..  ஆனால் இவனுக்கு எங்க இருந்துடா இவ்வளவு கோபம் வந்துச்சு.. எப்பா என்னா அறை..!” என்ற மாறனிடம் “தன் இணைக்கு ஒரு துன்பம் வந்தால், சாது கூட சத்திரியன் ஆவான் டா இது தான் காதலோட மகிமை உனக்கு எங்க புரிய போகுது.. நீ தான் முரட்டு சிங்கிள் ஆச்சே..” சித்து கிண்டல் செய்ய,

“நீங்க பட்ற பாட்டை பார்த்தும் நான் காதல் செய்வேன்னு நினைக்கிற.. நோ நெவெர்.. புலி பசித்தாலும் புல்லை திங்காது மச்சி இந்த மாறன் எப்பவுமே முரட்டு சிங்கிள் தான்..” கெத்தாக சொல்ல, “அடேய்ய் அது அப்படி இல்லைடா.. புலி பசித்தாலும் பிள்ளைய திங்காதுன்னு அர்த்தம் அதாவது வேட்டையாட்ற மிருகங்கள் குட்டி போட்டுச்சுன்னா அதுக்கு பயங்கர பசி எடுக்குமாம்.. அப்போ அது போட்ட குட்டிகள்ல சிலதை அதுவே சாப்பிட்றும்.. ஆனால் புலி மட்டும் அப்ப்டி செய்யாதாம்.. அதனால தான் இந்த பழமொழி.. நீ என்னாடான்னா புள்ளைக்கும், புல்லுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிற. நீயெல்லாம் எப்படி தான் எ சி பி ஆனயோ..”  சித்து கிண்டல் செய்ய,

”    அதை என்னடா செய்றது எனக்கு  கொடுத்த ட்ரெயினிங்க்ல திருடனை எப்படி பிடிக்கிறது, கொலைகாரனை எப்படி கண்டுபிடிக்கிறது இதெல்லாம் சொல்லி கொடுத்தாங்க.. ஆனால் புள்ளைக்கும், புல்லுக்கும் வித்தியசம் சொல்லி தரலயே டா.. நான் என்ன செய்ய..?”  பாவம் போல் சொன்ன மாறன்

” பேச்சை மாத்தாத.. நீ  ஏன் ரேணுவை சும்ம விட்ட?”   மீண்டும் கேட்க,  சித்து ஒரு பெருமூச்சுடன்.. “அந்த ரேணுவோட முகத்தை நல்லா கவனிச்சு பார்த்திருக்கியா..?” என்று கேட்க, மாறன் மறுப்பாக தலைத்தவன், ஏதோ நினைவு வந்தவனாக,

“டேய் அவ ஒரு சாயல்ல நம்ம மதி மாதிரி இருக்காடா..” ஆச்சரியமாக சொன்ன மாறனிடம், “இது தான் நான் அவளை சும்மா விட்டதுக்கான ரீசன்.. மதி ஜாடையில இருக்கிற அவளை என்னால கஷ்டப் படுத்த முடியலை..   அது மட்டும் இல்லாமல் அவ இப்படி ஆனதுக்கு ரேணுவோட அம்மா அப்பா தான் காரணம்..  ரேணு கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து அவ ஆசைப்பட்டது கிடைக்காத பட்சத்துல அவளை இப்படி மாத்தி வச்சிருக்கு.. அவளுக்கு கவுன்சிலிங்க தேவைப்படுது டா..” சொன்ன சித்துவிடம்

மதியையும் அவங்கதான வளர்த்தாங்க.. ஆனால் மதி இப்படி இல்லையே..” மாறன் கேட்க

“ மதியை அவங்க எங்க வளர்த்தாங்க..? அவளா தான வளர்ந்தா.. அவளையும்     பார்த்துக்கிட்டு அவளை சேர்ந்து இருந்தவங்களையும் பார்த்துக்கிட்டு சுயமாக வளர்ந்த சுயம்புடா என் அப்பூ..! சில குழந்தைகள் அவங்க கண்னுக்கு முன்னாடி நடக்கிற கெட்ட விசயங்களை உதாரனமா எடுத்து அதுமாதிரி வளர்றாங்க.. சில குழந்தைகளும்.. அந்த காரணத்தை தான் உதாரணமா எடுத்துக்கிறாங்க.. ஆனால் இந்த மாதிரி கெட்ட செயல்கள் நாம செய்ய கூடாதுன்னு பாஸிட்டிவா எடுத்துக்குறாங்க.. என் அப்பூ இதுல ரெண்டாவது ரகம்..” பெருமைபொங்க சொன்னவனை வியப்பாக பார்த்திருந்தான்..

”சரி ரேணு மதி மாதிரி இருக்கான்னு ஒரு காரணதுக்காக அவளுக்கு நீ தண்டனை தரல.. அப்போ தப்பு உனக்கு தெரிஞ்சவங்க, இல்லை பிடிச்சவங்க செய்தால் தப்பில்லையா..? அவங்களை காப்பாற்ற பார்ப்பியா…? ஒருவேளை இதையே மதி செஞ்சிருந்தால் என்ன செஞ்சிருப்ப..?’ சந்தேகம் கேட்ட மாறனிடம் “டேய் மதி மாதிரி இருக்கிறதால ரேணுவையே ஒண்ணும் செய்யல.. என் மதியை வா நான் எதாவது செய்வேன்..? அவ தப்பே செஞ்சாலும் அவ கூட நான் இருப்பேன்.. அவ தப்புசெஞ்சு அதால வரும்

பின்விளைவுகளை நான் வாங்கிப்பேன்.. அவளை எதுக்காகவும் யாருக்காகவும் தலைகுனிய விடமாட்டேன்.. ஆனால் இதுக்கெல்லாம் வாய்ப்பில்லை ஏன்னா என் அப்பூ அந்த மழை நீரை போல் தூய்மையானவ” பெருமையாக சொல்ல, மாறனும் அதை ஆமோதித்தான்..

நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு உறங்க சென்றனர்,,

     மறுநாள், சிவா, திவியையும், சாவித்ரியையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்றான்.. போகும் போது டேய் சிவா.. உனக்கு இப்போ எல்லாம் ரொம்ப கோபம் வருது கொஞ்சம் குறைச்சுக்க.. சொன்ன சித்துவை சிவா முறைத்து பார்த்துக் கொண்டே சென்றான்..

நாட்கள் அனைவருக்கும் அழகாக செல்ல, சித்து, மதி, சிவா, திவி காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்ல, கணவனின் அன்பிலும், காதலிலும் மதியின் முகம் உண்மையாகவே அந்த மதியை ஒத்திருந்தது.. இந்நிலையில் திவியின் படிப்பு முடிய.. சிவாவிற்கும், திவிக்கும் திருமணம் பேச அடுத்த வரும் வாரத்தில் சித்து, மதி, மற்றும் மாறன் மூவரும் டெல்லி செல்வதாக முடிவானது..

சொன்னது போலவே மூவரும் டெல்லி செல்ல, அங்கு சிவா திவி, நிச்சயமும் மற்றும் சித்து மதியின் திருமண வரவேற்பும் ஒரே நாளில் வைக்க முடிவு செய்தனர்.. அதன்படி வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்க.. நிச்சயத்திற்கு முதல் நாள் இரவு, தங்கள் அறையில் உறங்கி கொண்டிருந்த, சித்துவை கதவை தட்டி எழுப்ப.. அரை தூக்கத்தில் வந்து கதவை திறந்தவன், அங்கு மாறன் காவல்துறை சீருடையில் கம்பீரமாக நின்றிருந்தான்..

டேய் என்னடா இந்த நேரத்துல, அதுவும் இப்படி..? குழப்பத்தோடு கேட்க, சாரி மிஸ்டர் சித்தரஞ்சன்.. தமிழ்நாட்டுல மிஸ்டர் சூரியக்குமார்ங்கிற தொழிலதிபர் தீவிரவாதியாக எங்க சந்தேக லிஸ்ட்ல இருக்கார்.. அவர்க்கிட்ட விசாரணை செஞ்சதுல.. நீங்களும் அவரோட கூட்டாக சதி செய்திருக்கிறதாக தகவல் வந்திருக்கு.. சோ உங்களை நான் விசாரணைக்கு கூட்டி போக வந்திருக்கேன்.. என்று உணர்ச்சி இல்லாத குரலில் சொல்ல, சித்து திகைத்து நின்றான்.

அரசன் ஆள்வான்..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

21 – கனவே கலைவதேனோ?

தூக்கணாங்குருவிகள்12