in , , ,

நிகழ்வதை உரைத்திடவா….

       நிகழ்வதை உரைத்திடவா… 

    எங்கும் இருள் சூழ்ந்து காட்சி அளிக்க. மேக கூட்டத்துக்குள் இருந்த வெண்ணிற வெண்ணிலா  கொஞ்சம் கொஞ்சமாக எட்டி பார்க்க இருள் மீது கொண்ட பயத்தை விட்டு வெளியில் வர தயாராகி வெளியில் தன்னை முழுமையாக கொண்டு வந்து தன் ஒளியை இருள் படிந்த தார் சாலையில் பரவவிட …….

    மேகக்கூட்டங்கள் தங்களுக்குள் ஓடிப் பிடித்து ஆடுவது போல் நிலவை சூழ்ந்து மாறிமாறி ஓடிக்கொண்டு இருக்க….

     அந்நேரம் அந்த பழைய பேருந்து  நிறுத்தத்தில் பல உயிர்களையும் உறவுகளையும் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு தள்ளாடியபடி தன்னகம் புகுந்தது அந்த பேருந்து.

    அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்க அவர்களோடு அவனும் இறங்கினான். 

அதில் சிலர் அருகில் உள்ள பரோட்டா கடைக்கும் டீ கடைக்கும் தஞ்சம் புக…….

    அந்த கடைகளில் வானொலியில் அந்த தொகுப்பாளினி ஏதோ ஒரு கதையை கூறிக் கொண்டு இருக்க அவன் அங்கு இருந்து தன் இல்லம் நோக்கி அந்த சாலையில் பயணமாக. அந்த வானொலியில் பாடல் ஒலிர….

அதை ரசித்துக் கேட்டு கொண்டே நகர்ந்தான் .

பாடல் ஒலி குறைய குறைய அந்த பாட்டை முணுமுணுத்துக் கொண்டு அந்த நீண்ட தார் சாலையில்  தன் கண்ணைப் பாதித்தான் ஒரு வண்டியை கூடக் காணவில்லை.

ஆட்டோக்கு காத்திருந்து காத்திருந்து கால்மணி நேரம் விணானதுதான் மிச்சம் நடந்து சென்று இருந்தால் இந்நேரம் பாதி தூரமாவது சென்று இருக்கலாம் என தோன்ற நடக்க ஆரம்பித்தான் வெறிச்சோடிய அந்த தார் சாலையில் இருமருங்கிலும் உயர்ந்தோங்கி வளர்ந்திருந்தது அந்த சவுக்கு மரங்கள் அதற்கு இணையாக உயர்ந்தோங்கி நின்று சீரான ஒளியை தன்னுள் இருந்து பரப்பிக் கொண்டிருந்தது அந்த மின்விளக்கு தனது ஒளியை அப்ப இப்ப என நிறுத்திக் கொள்ளும் நிலையில் அது இல்லை தான்..

அவன் நடக்க நடக்க அடிகள் நீள்வது போல் ஒரு  உள் உணர்வு அவனுள் எழத்தான் செய்தது.

       தன்னை யாரோ பின் தொடர்வது போல் தோன்ற பின் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு நடந்தான்.

     அங்கு தார் சாலையில் போடப்பட்டு இருந்த வேகத்தடையில் கால் தடுக்கிக் கீழே விழுந்தான்…

மெல்ல மேலே எழுந்தவன் கண்ட காட்சியில் அதிர்ந்தான்.

ஆம்…..   தார் சாலைகள் கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனமாக மாறியது பின் திரும்பி பார்க்க அவன் வந்த வழியில் உள்ள மின் விளக்குகள் வரிசையாக அணைய பயம் தொற்றிக்கொண்டது.

கடைசி விளக்கு அணைய வானில் அதிபயங்கர ஓர் இடிமுழக்கம் இருள் படர்ந்திருந்த அந்த தார் சாலை கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனமாக மாறுவதை கண்டு வேகமாக ஓடினான்.

     பின் ஒரு கட்டத்திற்கு மேல் ஓட முடியாமல் கண் மூடி மூச்சு இறைக்க… அவன் தோள்மீது ஒரு கையை கண்டவன்  அதிர்ந்து  வேகமாக கண்விழித்தான் எதிரில் இருப்பவரை ஒரு வித பயத்தோடு கண்டான். 

   டேய்…. முகில்…. என்ன… டா…. ஆச்சு…. இப்படி பயமுறுத்துற மாதிரிய எழுந்துப்ப நல்லவேல…… நா…. வந்து எழுப்புனா உங்க அப்பா வந்து எழுப்பி இருந்தா….

என்ன…. ஆகுறது… ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்த மனுஷன் டா… அவரு  நினைவில இருக்கட்டும்.

ஏய்…. என்ன….. டா…  சித்த பிரம்ப புடிச்சவ மாதிரி இருக்க என அவன் தாய் பார்வதி அவனை  உளுக்க…… நினைவுக்கு வந்தவன்  போல் சுற்றும் முற்றும் பார்த்து   விட்டு….

ஓ…. கனவா… என பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட…..

என்ன…. டா….. என அவன் தாய் பார்வதி கேட்க ஏதோ கெட்ட கனவு மா… 

அவர்களது சம்பாஷையினை வெளியில் செய்தித்தாளை படித்தபடி கேட்டுக்கொண்டு இருந்தார் அவனின் தந்தை இராமலிங்கம்.

ஏன்…. வராது…. அர்த்த ராத்திரில ஊரெல்லாம் சுத்திட்டு நைட் ஷோ படத்துக்கு  போயிட்டு  1.30 மணிக்கு வந்து படுத்த…. ஏன் வராது…. அதுவும் பாக்குறதெல்லாம் பாரு…. ஒரே பேய் படம் என பொரிந்து தள்ளி கொண்டு இருந்தார் அவர்  பங்குக்கு.

நா…… என்ன…. பா….. பண்ண அவங்க பேய் படமா எடுக்குறாங்க என தந்தைக்கு பதில் சொல்ல….

இந்த வாய்க்கு  ஒன்னும் குறைச்சல் இல்ல டா…..

ஏன்ன…. ப்பா….. என் வாய்க்கு நல்லாதான  இருக்கு …

தோளுக்கு மேல வளந்த புள்ளைய அடிக்க கூடாதுன்னு பார்க்கிறேன் டா…….

அர்த்த ராத்திரில பேய் படம் பார்த்துட்டு வந்தது மட்டுமில்லாமல் காலையிலேயே அலறி அடிச்சுட்டு எழுந்து ஓக்காந்துட்டு பேச்ச பாரு…..

தெரியாம தான் கேக்குறேன் பகல்ல போய் படம் பார்த்த ஆகாதா என…. அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே….

  கணவனின் பேச்சை இடைமறித்தார் பார்வதி ….

ஏங்க…. நீங்க வேற….. புள்ளைக்கு  திரும்பத் திரும்ப அதையே ஞாபகப் படுத்துறிங்க என கூறி….

  அவன் கையில் காபியை திணித்து அவன் நெற்றியில் திருநீர் இட்டார் அவர்.

    ஆமா…. உனக்கு உன் புள்ளையே ஒன்னு சொல்லிட  கூடாதே….

ம்…. விடுங்க மாமா…  காபியை எடுத்துக்கோங்க என்று புன்சிரிப்போடு வந்த நின்றாள் “தமிழ்” முகிலின் அண்ணி….

    அத்த…. போன….. வாரமே….. சொன்னலா…… பெரியம்மா வீட்டு கிரக பிரவேஷத்துலா பார்க்குறவங்க எல்லாம் தமிழ் கல்யாணத்துல சின்ன பையனா இருந்த அஞ்சாறு வருஷத்துல ஆள் அடையாளம் தெரியாத மாதிரி கிடுகிடுனு வளந்துடான்னு சொன்னாங்கனு. 

அப்பவே….. சொன்னா….. அவனுக்கு திருஷ்டி சுத்தி போடுங்கனு….. கேட்டிங்களா….

ஆமா… டா… தமிழ்…. நீ சொன்னது தான் சரி என மருமகள் கூறியதை அவரும் அமோதித்தார்…..

அதை கண்டு தன் தலையில் அடித்துக் கொண்டார் இராமலிங்கம்.

அங்கு நடப்பதை கண்டு சிரித்தபடி வந்து தம்பியுடன் அமர்ந்தான் “அமுதன்” முகிலனின் அண்ணன்…

என்ன…. ண்ணா… இவ்ளோ சிரிப்பு என்றான் இளையவன். 

ம்… உன்ன பார்த்து தா… டா….  

ம்…. என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது என அவன் கூற…..

சார்….. எந்த கலேக்டர் ஆபீஸ்ல கிழிக்கிறிங்க பொழப்பு சிரிப்பா சிரிக்கிற அளவுக்கு என அவன் தந்தை இராமலிங்கம் கூற….

( இராமலிங்கம் ஓர் தமிழாசிரியர், அவர் மனைவி பார்வதி இல்லத்தரசி.

மூத்த மகன் அமுதன் இளையவன் முகிலன் இருவருக்கும் ஆறு வயது இடைவேளி முதலில் பெண் குழந்தை தான் என அக்குழந்தைக்கு தமிழ் அல்லது அமுதினி என பிறப்பதற்க்கு முன்பே பெயர் வைத்தே விட்டார்கள்.

ஆனால் பிறந்தது மகன் அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

பின் அமுதினியை அமுதனாக மாற்றி தங்கள் மகனுக்கு பெயர் வைத்தார்கள் .

முகிலன்  பிறக்கும்போதும்  அதே தான்.

ஆம்…  முதலிலேயே பெண் குழந்தையை எதிர்பார்த்தவர்கள் இந்த முறை எதிர்பார்ப்பதில் அதிசயம் இல்லை தானே.

இந்த முறையும் ஆண் குழந்தை.

இரு மகன்களில்  பெரியவன் அமுதன் அமைதி, பொறுமையின் மறுஉருவம்.

ஆனால்….. இளையவன் முகிலன் அவனுக்கு  நேர் எதிர் குறும்பும், கோபமும் ஒன்றே கலந்தவன்… அவன். 

அமுதன் எம். பி. ஏ.  முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான் .

அவன் மனைவி தமிழ் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள்.

தமிழ் இராமலிங்கத்தின் நண்பனின் மகள் அவளுக்கு தமிழ் என பெயர் வைத்ததே அவர்தான்.

அமுதன், தமிழ் இருவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான்.

திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கழிந்து விட்டது இன்னும் குழந்தை இல்லை.

தமிழ் அவ்வப்போது அதை எண்ணிக் கலங்குவது வழக்கம்.

அவள் கலங்கும் போது எல்லாம் தாய்க்குத் தாயாக பார்வதி ஆறுதல் கூறி தேற்றுவார்.

தமிழ் ஒருநாள் தன் மாமியாரிடம் கேட்டே…. விட்டால் எல்லாம் மாமியாரும் கல்யாணம் ஆன ஒரு வருஷத்திலேயே  குழந்தை இல்லங்குறத பெருசா பேசுவாங்க.

ஆனா… நீங்க இந்த அஞ்சு வருஷத்துல ஒரு நாள் கூட அப்படி எதுவும் பேசினது இல்லையே அத்த…

எப்படி… இப்படி இருக்கீங்க என அவள் தன் சந்தேகத்தை கேட்க….

அவங்க…  எல்லாம் மருமகள… மருமகள… தா….  பாக்குறாங்க நா…. என் மருமகள என் மகள  பாக்குற..

மக கவலடுறத எந்த தாயால தாங்க முடிவும்  சொல்லு….. என அவர் கூற நெகிழ்ந்து தான் போனால் அவள்.

முகில் என அழைக்கப்படும் முகிலன்     எம். ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்யும் வேலை இல்லா பட்டதாரி என்பதை விட வேலை  கிடைக்காத பட்டதாரி என்பதே பொருந்தும்…)

முகிலனின் முகம் சற்று மாறியது…

நா… நா……. போகமாட்டேன்னு சொல்லுற என அவன் கேட்க…

பின்ன….. நா……. நா….. என அவர் அவர் பங்குக்கு கேக்க…

………….

( ஒரு கனத்த அமைதி நிலவியது )

என்ன…. பேச்சைக் காணோம் நேத்து போன இன்டர்வியூ என்ன ஆச்சு….

போன் பண்றேன்னு சொன்னாங்க…..அவங்க….

போனா வராமும் இதே தா சொன்னா…..

நான் என்ன பண்ண அவங்க அதா சொல்றாங்க….

அவனின் முக மாற்றத்தைக் கண்ட தமிழ் மாமா… முகில் வேலைக்கு போகலனாதா என்ன மாமா .

அவன் ட்ரை பண்ணலனா பரவால்ல நீங்க கேக்கலா….. அவன் டிரை பண்ணிட்டு தான இருக்க….. வேலை கிடைக்கல….. அதுக்கு அவன் என்ன பண்ணுவா சொல்லுங்க.

நம்ம வீட்டுல மூணுபேர்  சம்பாதிக்கிறோம் அப்புறம் என்ன மாமா ……

ஆமா…… பா…. தமிழ்…. சொல்றது சரிதானே.

முகில்  இப்ப தான டிகிரி முடிச்சா அதுக்குள்ள என்ன அவசரம்.

அவனுக்கு ஏத்த மாதிரி வேல கிடைச்ச போகட்டும் இல்லனா…  ஏதாவது கிளாஸ் போகட்டும் அப்படி இல்லன்னா  பி. எச். டி பண்றதுனா பண்ணட்டும் விடுங்க என தன் தந்தையின் மனதை மாற்றினான். 

அவரும் அதற்கு சரி என ஆமோதித்தார்..

அப்பா சொல்றாறேனு வேலைக்கு போகாத உனக்கு அந்த வேலை புடிச்சிருந்தா போ…. ஓ… கே….

பி. எச் . டி பண்ற ஐடியா இருந்தா கைடு பத்தி தமிழ் கிட்ட சொல்லி விசாரிச்சு வச்சுக்கோ …..

ம்….. 

இளையவனிடம் ஒரு புன்னகையை வீசி அவன் தலையை கலைத்து விட்டு டோன்ட் வொரி…  டா…. நா…… இருக்கலா. மூஞ்ச இப்படி வைக்காத  சரியா…..

ம்…. என தமையனை  பார்த்து  சிரித்தான் .

தன் மனைவியிடம் கண்களால் அவனை சமாதானம் செய்யும் படி கூறி அலுவலகம் செல்ல தயாராக  தன்  அறை நுழைந்தான் முகிலின் அண்ணன் அமுதன். 

முகில் உனக்கு பிடிச்ச பன்னீர் கிரேவி சப்பாத்தி…தா… அண்ணி  இன்னிக்கு உனக்காக செய்ய போறேன்…

  இன்னைக்கு எனக்கு லீவ் சோ  மதியம் என்ன வேணும் சொல்லு என அவள் கேட்க…..

உங்க இஷ்டம் அண்ணி ….

ம்…..  இப்பதான உங்க அண்ணா சொல்லிட்டுப் போனாரு… சிரி….

ம்….  இ….  இ….. 

இப்பதான் நல்ல பையன் போய்  ஃப்ரேஷ் ஆக்கிட்டுவா அண்ணி உனக்காக சூடா சப்பாத்தி போட்டு வைக்கிறேன் போ…

என கூறி அவனை அறை அனுப்பி வைத்தால் தமிழ்…

தன் மாமியார் புறம் திரும்பியவள் அத்த முகிலுக்கு சப்பாத்தி எல்லாருக்கும் என்ன பண்ணட்டும் என்று கேட்க….

நீ….. எதுக்கு…. மா… நா… னே …. பன்ற என அவர் கூற….

அத்த….  எல்லா நாளும் நீங்க… தா… னே…. செய்றிங்க இன்னைக்கு நான் சொய்றேன்  என சமையல் அறையின்னுள் நுழைந்தாள்.

ம்…. நீங்க மூணு பேரும் மாத்தி மாத்தி அவன இப்படி கொஞ்சுனா…..

அவ…. இப்படியே….  தா… இருப்ப…. என இராமலிங்கம் மீண்டும் ஆரம்பிக்க….

  உங்களால…  தா… புள்ள… முகமே மாறி போச்சி  மறுபடியும் ஆரம்பிக்காதீங்க….. என தன் கணவரின் பேச்சுக்கு தடை விதித்தார்… பார்வதி…..

முகிலின் அண்ணாணும், தந்தையும்  உண்டு முடித்து தங்கள் பணியை செவ்வனம் ஆற்ற கிளம்பிவிட்டார்கள்.

தன் அறை விட்டு வந்த முகிலன் அண்ணி…. அப்பா, அண்ணா எங்க என வினாவ ……

அவங்க…. கிளம்பிட்டாங்க…. நீ… வா…. வந்து சாப்பிடு என அழைக்க…

அவன் சென்று உண்ண ஆரம்பித்தான்.

அண்ணி…..

ம்

  சம்…. மேஜிக்…..  இன்…. யுவர் …. ஹேண்ட் என கூற… 

பார்வதி  அவன் காதை திருக….

ச்…..  மா…… வலிக்குது ….

துரைக்கு புடிச்சத சமச்சா மட்டும் இந்த பேச்சு இல்லனா உங்களுக்கு சமைக்க கூட தெரியாதுனு சொல்றது…..

அய்யோ…. அம்மா… நான் அப்படி சொல்லுவேனா……

ம்….  பின்ன…   நீ…. சொல்லாம வேற யாரு சொன்னா…..

அத்த… விடுங்க…. அவன் சாப்பிடட்டும் என தமிழ் கூற…

ம்…. சரி…. சரி…  என அவர் விட…

முகில் உண்டு முடிக்க….

பார்வதியே தொடங்கினார்   தமிழ்…. முகில…. கூட்டிக்கிட்டு எங்கேயாவது போயிட்டு வாம்மா…..

எவ்வளவு நேரம் வீட்டிலேயே இருப்ப…..

பரவால்ல…. அத்த…. இன்னிக்கு தானே வீட்டிலேயே இருக்க..

  ம்…. பேசாம நீங்களும் வாங்க நாம மூணு பேரும் எங்கையாவது போயிட்டு வரலாம்…

முகில் அவசரமாக ஆமா மா… மியூசியம் போகலாம் என ஆர்வமாக கூற….

எப்ப…. பாத்தாலும் மியூசியம் தானா… டா… உனக்கு வேறு எதுவும் உன் கண்ணுக்கு தெரியாதா என அவர் கூற…..

இந்த மரகதபுறத்துல மியூசியம் விட்டா வேற என்ன இருக்கு…….

(ஆம்… அவர்கள் இருப்பது மரகதபுரம்(கற்பனை) நகரமும் இல்லை கிராமமும் இல்லை இரண்டும் கேட்டான் ஊர்… 

ஒரு   புறம் பச்சை பசேல் என வயல் வெளி இருக்க… 

மறுபுறம் கண்ணாடி மாளிகை கட்டடாங்களும் தனி வீடுகளும், அடுக்குமாடி வீடுகளும் என நிரம்பி இருக்க…..

தெருவிற்கு தெரு கோவில்கள் சிறுசிறு பழக்கடைகள் பூக்கடைகள்  சூப்பர் மார்க்கெட் என சராசரியானவை மட்டுமே இருக்கும் ஊர்…

சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் அது மரகதபுரம் அருங்காட்சியகம் தான் அந்த ஊரின் ஒரே சுற்றுலாத்தளம் . சிறப்பாகச் சொல்ல வேறு எதுவும் இல்லை… )

பின் மூவரும் ஒரு மனதாக அருகிள் உள்ள சிவன் கோயில் சென்று வந்தார்கள்…… நிமிடங்கள் நொடியாக கரைய அந்த நாள் முடிவுக்கு வந்தது…….

சூரியனிடம் இருந்து வானமெனும் ராஜியத்தை தன் வசமாக மாற்றி தன் ராஜாங்கத்தை  தொடங்கினான்  சந்திரன் எனும் சாணக்கியன் …..

இரவு உணவை உண்ண அனைவருக்கும் அமர்ந்திருக்க இராமலிங்கம் பேச்சை மெல்ல ஆரம்பித்தார்….

அவரது நண்பர் ஒருவர் மியூசியமில்  இரவு காவலுக்கும் கணக்கு வழக்கு பார்ப்பதற்கும் ஆள் தேவை எனக் கூறியதை  கூற…..

இதுக்கு என்ன…. பா….. என அமுதன் கேட்க…

என்ன….. வா….. 

ம்…… 

வேலை இருக்கு நாளிலிருந்து உன் தம்பிய போகச் சொல்லுனு சொல்றா….

என்ன…. பா….. சாதாரண வாட்ச்மேன் வேலைக்கு போய் அவன போக சொல்றீங்க……

போனா… என்ன…. உன் தம்பி போனா  கலெக்டர்   வேலைக்குத்தான் போவானா…. என அவர் கேட்க…..

ராத்திரில போய் யாராவது புள்ளைய வேலைக்கு அனுப்புவாங்களா…… என பார்வதி கேட்க……

ராத்திரில சினிமாக்கு மட்டும்  அனுப்புற   வேலைக்கு மட்டும்  அனுப்ப மாட்டியா என அவர் மீண்டும்….  தன் கருத்தில்
உறுதியாக இருக்க…..

மா… மா….    நல்ல வேலையா இருந்தா  அவனுக்கு   புடிச்சா போகட்டும்…. மா…  மா..    இல்லனா…. அவன் பி. எச்.  டி  பண்ணட்டும் என தமிழ் தன் பங்குக்கு கூற…..

பி . எச் . டி  சேர…  இன்னும் நாலஞ்சு மாசம் ஆகும்… அது வரைக்கும்  போகட்டும் என அவர் தன் வாதத்தில் உறுதியாக இருந்தார்…

டேய்….  உன்ன பத்தி தானே பேசுறோம் நீ வாய மூடிட்டு இருந்தா என்ன அர்த்தம் சொல்லு….. என அவர் கேட்க …..

ம்… ஓகே… பா…  போறோன் என அவன் கூற…

பாத்திங்களா…. நீங்க மூணு பேரு தான் எல்லாத்தையும் பெருசா எடுத்துக்கிறிங்க ….

எதுவும் சின்ன வேலையும் இல்ல பெரிய வேலையும் அல்ல அத புரிஞ்சிக்கோங்க… என அவர் கூற …

அவன் சின்ன பையன்  நீங்க வேலைக்கு போனு சொன்னா உடனே ஒத்துக்கிட்டா…

  ராத்திரி  வேலைக்கு எல்லாம் எப்படி அனுப்புறது அது எல்லாம் சரியா வராது என பார்வதி கூற….

ம்…. இந்த காலத்துல பொம்பள பிள்ளைங்களே ராத்திரில வேலைக்குப் தைரியமாக போகுதுங்க….. நீ….. என்ன…னா… பையனா அனுப்புறதுக்கே இப்படி யோசிக்கிற…

நாளைக்கு அவன் வேலைக்குப் போறா… என அவர் உறுதியாக கூறி சாப்பிட்டு ஏழ…. 

இதுக்கு மேல நாம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என அனைவரும் அமைதியாக இருக்க….

இயற்கை தனது பணியை எப்போதும் போல் சிறப்பாக செய்ய…

அன்றைய காலை பொழுது அழகாக விடிந்தது வழக்கம்போல் அனைவரும் அவர்கள் பணிக்கு செல்ல…

அன்றைய நாளும் இனிதே…… சென்று மாலை 6 மணி வர…. 

இராமலிங்கம் மகனிடம் 8 முதல் 8 வரை வேலை என கூற….

ம்….  என மட்டும் அவன் கூற…

என்ன…. ம்…. போய் ரெடியாகு என அவர் அவனை அவன்  அறை அனுப்ப…..

ம்….. என கூறி சிறிது நேரத்தில் அவன் தயாராகி வர….

வந்து சாப்பிடு….. என அவர் கூற அவனும் சென்று அமர….

  பார்வதி மகனுக்கு பிடித்த புலாவ்… பன்னீர் கிரேவி…. என பரிமாறினார்…..

அவன் உண்டு முடிக்க இராமலிங்கம் அவனை தனது ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு அருங்காட்சியகம் நோக்கி பயணமானார் .

ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு அவர்களது ஸ்கூட்டர் அருங்காட்சியகத்தின் வாசலை அடைந்தது…..

பிரம்மாண்டமான மரகதபுரம் அரண்மனை தான் அந்த அருங்காட்சியகம் ….

சிறு வயதில் இருந்து பல முறை அங்கு வந்து இருக்கிறான் தான்….

ஆனால் இன்று அது அவனுக்கு புதியதாக தோன்றியது…..

(இந்த அருங்காட்சியகத்தில் மரகதபுறத்தில் வாழ்ந்த அரசர்கள் படங்கள் , தொல்லியல் துறையின் உதவியோடு கிடைத்த பொருட்கள் என இருக்கும்….. அங்கு அதிகம் பிரபலம் அந்த மாய புத்தகம் தான் அதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மாயாஜாலம் தனது மொத்த சக்தியையும் திரட்டி தன் வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என கணிக்க பயன்படுத்தினானாம்…

அதை பலமுறை களவாடா முயற்சிகள் நடந்ததாம்.

ஆனால்…. அதை களவாடா முடியவில்லையாம் .

அது… அதற்கு உரிமையான இடத்தை விட்டு வேறு எங்கும் இருக்காது என பலர் கூறுவர்…. அடுத்தது ஒரு பெண்ணின் ஓவியம் முழுமையாக வரைய படாமல் இருக்கும்…. அதை பலரும் முயற்சித்தும் முடிக்கவில்லை .

ஆதலால் அந்த அருங்காட்சியத்தில் அந்த படத்தின் நகல் வைக்கப்பட்டு இருக்கும் அதை யவர் வேண்டுமானாலும் முயற்சித்து அந்த ஓவியத்திற்கு உருவம் கொடுக்கலாம்….. எனவும் அதை முழுமையாக முடிப்பவர்களுக்கு பரிசும் அவர்கள் வடித்த ஓவியத்தை அவர்கள் பெயரோடு அங்கு வைத்து அவர்களை கௌரவபடுத்துவர் என அறிவித்தும் இதுவரை எவரும் அதை சரியாக வரைந்ததே இல்லை… அதில் ஒரு பெண்ணின் உருவம் சரிவரத் தெரியாத நிலையில் கண்கள் மட்டும் தெளிவாக தெரியும்படி இருக்கும்…. அது மட்டுமில்லை அங்கு அந்த மாயாஜாலாகாரன் பயன்படுத்திய புத்தகங்கள் என அனைத்தும் இருக்கும்.  அதுமட்டுமில்லாமல் அங்கு அவனின் சக்திகள்  இருப்பதாக பலர் கூறுவர்…)

முகிலின் உள் அவனது சிறுவயதில் அங்கு வந்தது நினைவுக்கு வந்தது..

ஆம்…. அவன் பள்ளியில் வருடம் வருடம் அங்கு அழைத்து வருவர்.

அந்த அரண்மனையின் சிறப்புகள் என பல கூறுவர்… 

முகில் என அவனின் தந்தை அவனை அழைக்க நினைவில்  இருந்து நிகழ்வுக்கு வந்தான்…

என்ன…. பா….

  டியூட்டி  நோட்ல  சைன் பண்ணுடா….

ம்… என தன் கையெழுத்தை போட்டு முடித்தான். 

பின் மகனுக்கு பல அறிவுரைகளை கூறி விட்டு சென்றார் இராமலிங்கம்.

அவர் சென்று அரை மணி நேரத்தில் முகில் தன் கைபேசியில்  ஆன்லைனில்   லூடோ விளையாடிக்கொண்டு இருந்தான். 

பின் அவனுக்கு பிடித்த இடங்களில் எல்லாம் நின்று கைபேசியின் உதவியோடு புகைப்படம் எடுத்துக் கொண்டான்…

பின் தனக்கு கொடுக்கப்பட்ட இடத்திற்கு சென்று கணினியில் சில பல கணக்குகளை சரிபார்த்து முடித்தான்.

தன் தாய்  கொடுத்து  அனுப்பிய டீயை   பிளாஸ்கில்  இருந்து எடுத்து  அருந்தி  அங்குள்ள  புத்தகங்களை  சில  எடுத்து படித்தான்.

அன்றைய நாள் நன்றாகக் கழிய…  காலை தன் இல்லம் வந்தவன் உண்டு உறங்கி மீண்டும் ஆறு மணி அளவில் எழுந்து தன் பணிக்கு தயாராகினான்.

முதல் நாள் போலவே அந்த வாரத்தை கழிக்க….

அது அவனுக்கு பிடிக்காமல் போக… 

அந்த ஓவிய நகல்கள் அவன் கண்ணுக்கு தெரிய அதை  எடுத்து முயற்சித்து பார்த்தான். 

சரியாகவே வரவில்லை என அதை விடுத்து அங்கு நடக்க அந்த புத்தகம் அவன் கண்ணில் பட… ஆம்… அது அந்த மாயாஜாலனின் புத்தகம் தான்..

அதை எடுத்து கையில் வைத்து பார்த்தான்…

அது…. எப்படியோ பல பக்கங்களைக் கொண்ட புத்தகம் தான்…

அதை பிரித்துப் பார்க்க அதில் ஒன்றும் இல்லை அனைத்தும் வெற்று  காகிதங்கள் ஆகவே இருந்தது.

சரியான அவன் மூடி  வைக்க…. 

அதன் மேல் கை தடம் பொரிப்பது போல் இருந்தது.
அதைக் கண்டவன் அதில் தன் கையை பொருத்தி பார்க்க….

அந்த புத்தகம் மிளிர ஆரம்பித்தது.

அதை கண்டு அதிர்ச்சியில் கையில் இருந்ததை நழுவவிட்டான்.

ஆனால்…. அது…. கீழே விழவில்லை…

அதை எடுத்து அவன் அதன் இடத்தில் வைக்க முயல வேகமாக அதில் உள்ள பக்கங்கள் புரள ஆரம்பித்தது அது ஒரு பக்கத்தில் நின்றது..

அதில் “ உன்னை நான் எனது   எஜமானராக ஏற்கிறேன்” என்ற வார்த்தைகள் வர சற்று அதிர்ந்துதான் போனான்.. அவன்….

அதை அதன் இடத்திலேயே வைத்துவிட்டு தன் இடம் நோக்கி நகர்ந்தான்…

வழக்கம்போல் காலையில் தன் இல்லம் வந்தவனுள் அதே தான் ஓடிக்கொண்டு இருந்தது….

மீண்டும் பணிக்குச் செல்ல ஒருவித தயக்கம் அவனுள்  எழத்தான் செய்தது… இருந்தும் தயார்
ஆகி  சென்றான்…

அவன் அந்த புத்தகம் இருக்கும் பக்கம் கூட செல்லாமல் கணினியில் தன் பணியை மேற்கொண்டு இருந்தான்.

அப்போது அங்கு உள்ள விளக்குகள் அனைத்தும் அணைந்து அணைந்து ஒளிர என்னவென்று அவன் காண அங்கிருந்து எழுந்து திரும்ப  அங்கு  அந்தப் புத்தகம் அவன் முன் அந்தரத்தில் வேகமாக புத்தகம் திறந்து பக்கங்கள் புரள அதில்
 ஐந்து வருட காத்திருப்பின்  பலனாக தேவதை தோன்றி விட்டால்”.
என வரிகள் உருவராகியது  அவன் அதைப்படித்தயுடன் அந்த வரிகள் மறைந்தது….

பின் கண் இமைக்கும்  நொடியில் அந்த புத்தகம் அதன் இடத்தில் இருந்தது.

கனவா இல்லை நினைவா என அவன்  குழம்பியே விடிந்துவிட்டது.

காலை தன் இல்லம்  வந்து சேர்ந்தான் முகிலன்…..

வீட்டில் அவன் அண்ணி மட்டும் தன் பணிக்கு செல்ல தயாராக  அவன் தமையனை காணாது வினா.. வா…

பார்வதி அவன்  தட்டில் தோசையை திணித்துக்கொண்டு ஏதோ வேலை இருக்காம் அதா…. சீக்கிரமா கிளம்பிட்டான் என கூற… 

அப்ப…. அண்ணி…  எப்படி போவாங்க….

ஆட்டோல…  தா என தமிழ் புன்னகையோடு கூற…

ஆட்டோலையா….

ம்… ஆமா… என்ன.. அதுக்கு…. 

அண்ணி…. வெயிட் பண்ணுங்க நா… சாப்பிட்டு முடிச்சிட்டு கூட்டிட்டு போறேன்..

வேணா… முகில் நீ… இப்பதானே வந்த போய் ரெஸ்ட் எடு என தமிழ் கூற…

அதெல்லாம் ஒன்னும் இல்ல…. அண்ணி…

மா…. நீ.. சொல்லுமா அண்ணிகிட்ட….

அவன்…. தா….  சொல்லுறல   அவனுடைய போயிட்டு… வா…. மா என அவர் கூற…

சரி… என ஒப்புக் கொண்டால் தமிழ்…

பின் இருவரும் முகிலின் இருசக்கர வாகனத்தில் பயணம் ஆனார்கள். 

வழியில் தமிழ் கோவிலுக்கு செல்வது வழக்கம் அவள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய உள்ளே செல்ல….

முகில் வெளியில் தன் நண்பன்  கிஷோர்வுடன்  பேசிக்கொண்டு இருந்தான்.

தன் தரிசனத்தை முடித்து விட்டு  வெளியில் வந்த  தமிழ் வாகனம் அருகில் வர மயங்கி விழுந்தாள்….

அவளது கைப்பையில் இருந்து தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் அடித்தும் அவள் கண்விழிக்கவில்லை.

அதற்குள் கிஷோர்  அவ்வழியில் சென்று ஆட்டோ ஒன்றை நிறுத்தி அதில்  ஏற சொல்ல  முகிலும் சரியான ஏறினான். 

பின் கிஷோர் முகிலின் இருசக்கர வாகனத்தை வீட்டில் விட்டுவிடுவதாக கூற..

ம்…  சரி… ஆனா… அம்மாகிட்ட அண்ணி மயங்குன  விஷயத்தை சொல்லாத… கவலைப் படுவாங்க என தன் நண்பனிடம் கூறி விடைபெற்றான்..

அருகில் உள்ள  மருத்துவமனைக்கு 15 நிமிடங்களில் வந்து சேர்ந்துவிட்டனர்.

பின் தமிழை பரிசோதித்த மருத்துவர்….

அவள் கருவுற்று இருப்பதாக கூற….

ஆனந்தக் கடலில் தத்தளித்து முழுகினான்  முகிலன்.

மருத்துவர் அரை மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும். அப்பொழுதுதே   வீட்டுக்கு அழைத்து செல்லலாம்… எனவும்….

டாக்டர். சீதலை   நாளைக்கு தா  வருவாங்க ரிப்போர்ட் எல்லாம் கூட நாளைக்கு தான் கிடைக்கும்.
நாளைக்கு வந்து   ரிப்போர்ட்  எல்லாம் வாங்கிட்டு  அவங்க கிட்ட  கன்சிடர் பண்ணிட்டு போங்க… எனக் கூறி விடை பெற்றார்.

அரை மணி நேரத்தில் தமிழ் கண் விழிக்க… 

கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு இருவரும் ஆட்டோவில் தங்கள் இல்லம்   பயணமாக….

அங்கே இன்னும்  முகில் வீட்டுக்கு  வராததை எண்ணியும்  முகிலின் வண்டியை  கிஷோர் வந்து விட்டு விட்டு சென்றதை  எண்ணியும் பயந்து கொண்டு இருந்தார் பார்வதி ….

வெளியில்  ஆட்டோ சத்தம் கேட்க…

வெளியில் தமிழையும் முகிலையும் கண்டவர்  சற்று நிம்மதி பெருமூச்சு விட்டார் .

  உள்ளே வந்தவர்களின் கை கால்களை பார்த்து எதுவும் இல்லல்ல… என…. வினா.. வா…

என்ன…  மா… 

என்ன…  மா….  தமிழ் காலேஜ் போகலையா என்ன ஆச்சு என  பதற்றமாக வினாவ….

அண்ணி…. நீங்க முதல்ல உள்ள போய் ரெஸ்ட் எடுங்க…

நா… அம்மா… கிட்ட.. சொல்றேன் போங்க என முகில் கூற…

அவளும் தன் அறைக்கு செல்ல….

பின் முகில்  பார்வதியிடம் விஷயத்தை கூற மகிழ்ந்தார் அவர்.

உடனே தன் கணவனுக்கும் மகனுக்கும் கைபேசியில் அழைத்து கூற அவர்களை விடுப்பு எடுத்து வர சொல்ல அவர்களும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருக்க..

அந்த நாள் இனிதே கழிந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியில் முகிலன் குடும்பமே தத்தளித்துக்கொண்டிருந்தது…

இரவு தன் பணிக்கு சென்றான் முகிலன் அவனுள்  நேற்று அந்த புத்தகத்தில் இருந்த  வரிகளே அவனுள் ஓடிக்கொண்டு இருந்தது தன் நினைவில் இல்லாமல் இருந்தான் அவன்…

சிறிது நேரத்தில் தன் பணியை துவங்க நேற்று இரவு போல் மின் விளக்குகள் அனைத்தும் அணைந்து அணைந்து எரிய மீண்டும் அவன் முன் அந்தப் புத்தகம் தோன்றி வேகமாக பக்கங்கள்  புரள அதில்
” காண்வாய் அவள்  கண்களை கருத்தில் வைத்து முழுமை செய்வாய்”  எனவும் அதற்கு கீழ் ஒரு அம்புக்குறி இருக்க அது காட்டிய திசையில் பார்க்க அந்த முழுமை பெறாத ஓவியம் இருந்தது….

இன்று கண்டது கனவல்ல நினைவு தான் என அவனால் உணர முடிந்தது….

பின் நிமிடங்கள் நொடியாக கரைய விடிந்தது…..

விடிந்தவுடன் தன் இல்லம் சென்றவன் குளித்து தயாராகி வந்து தமிழை   மருத்துவமனை அழைத்து சென்றான்….

மருத்துவர் அறை வாசலில் அமர்ந்து இருந்தார்கள்…

அவர்களின் முறை வர உள்ளே செல்ல….

டாக்டர். சீத்தலை ….என  பெயர் பொறிக்கப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்றனர்.

அங்கு இவர்களை இன்முகத்தோடு வரவேற்றார் டாக்டர்.  சீத்தலை முகிலனின்  வயதை ஒற்ற  பெண்தான்..

  தமிழின்….  ரிப்போர்ட்டுகளை  பார்த்து பல பேசிக்கொண்டு இருந்தார்….

அவளைக் கண்ட  முகிலனுள்
 காண்வாய்  அவள் கண்களை கருத்தில் வைத்து முழுமை  செய்வாய்”  என அந்தப் புத்தகத்தில் மிளிரிய வரிகள் நினைவுக்கு வந்தது.

அவளின் கண்களை கண்டவன் அதிர்ந்தான்.

ஆம்…  அந்த  ஓவியத்தில் உள்ள கண்களை போலத்தான் அவள் கண் இருந்தது அதை  கண்டவன் அதிர்ந்தான்…..

மருத்துவமனை விட்டு வீடு வந்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

பின் எழுந்து தொலைக்காட்சியை உயிர் பித்தான் அவன். அதில் பிரபல தொல் துறை ஆய்வாளர். நிறைமதி  மரகதபுரம்  அருங்காட்சியகத்தில் உள்ள புத்தகத்தைப் பற்றி சில விஷயம் கூறினார்.

அந்தப் புத்தகத்துக்கு எந்த ஒரு மாயாஜால சக்தியும் இல்லை அதில் இருப்பது வெற்றுப் பக்கங்கள்  தான்..

அதை நாங்கள் பத்து நாள் எங்கள் கண்காணிப்பில் தான்  வைத்து இருந்தோம்…

ஆனால்…. அதில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை என்பதே உண்மை என அவர் கூற..

அதை கண்ட முகில் .

எப்படி… அது… நமக்கு மட்டும் தினமும் அடுத்த நாள் நடக்கிறத காட்டுது என குழம்பினான்..

ஒரு மனதாக அது நமக்கு ஒண்ணும் கெடுதல் செய்யவே இல்லையே அப்புறம் அத நினைச்சு நம்ம  எதுக்கு பயப்படனும்.

என தன்னைத்தானே தேற்றிக் கொண்டு தன் பணிக்கு சென்றான்.

காலையில் கண்ட டாக்டர் முகத்தை நினைவில்  கொண்டு அந்த ஓவியத்தை வரைந்து முடித்தான்.

எப்போதும் போல் விளக்குகள் அனைத்தும் அணைந்து அணைந்து எரிய இன்று பயமில்லாது  புன்னகை முகமாக  திரும்ப அந்தப் புத்தகம் வழக்கம்போல் அதன் பக்கங்களைப்  புரள அதில்
 என்னை களவாட கள்வர் கூட்டம் உள் நுழைந்து விட்டது” என இருக்க… 

அதைப் படித்தவன் அதிர்ந்தான். 

அதே சமயம் புத்தகங்கள் அடுக்கப்பட்ட அறையில் ஏதோ சத்தம் வர அங்கு விரைந்தான்..

ஒரு பத்து பேர் கொண்ட கள்வர் கூட்டம் அங்கு மறைந்திருந்தது…

அவன் அங்கு விரையும் போதே …… மின் விளக்கு ஒளி அணைய அதே சமயம் ஒருவன் அவனை தாக்க…..

அவ்வறையில் இருந்து வெளியில் வந்த முகிலன் தவறி படியில் உருண்டு கீழே விழ… 

விளக்குகள் மீண்டும் எரிய ஆரம்பித்தது….

அவர்கள் ஒருவர் பின் ஒருவராக படியில் இறங்கி வர…..

முகிலன் அருகில் வந்த அந்த புத்தகம் …

அதன் பக்கங்களை வேகமாக  புரள…விட்டது..

அதில் ”  உன் ஐ விரலை என்னில் பதி நான் உன்னை காப்பேன்” என வரிகள் அவன் படிக்கப் படிக்க மறைந்தது அந்த புத்தகத்தின் முகப்பு பக்கத்தில் அவன் அவனின் கையை பதிக்க…….

வானில் அதிபயங்கரமாக இடி முழங்க…..

பகல் போல் மின்னல் ஒளிவீசி மறைய….. 

புகை போல் ஏதோ ஒன்று அங்கு சூழ…..

அனைவரும் மயங்கி சரிந்தனார்..   முகிலன் உட்பட… 

கண்ணைத் திறக்க பெரும்பாடுபட்டு கண் விழித்தான் முகிலன்.

அவன் முன் அவன் குடும்பம்….

தலையில் கட்டுடன் அந்த மருத்துவமனையில் அவன் படுத்திருக்க…

அனைவரும்  சூழ்ந்து நலம் விசாரிக்க…   அவன் தலை மட்டும் சற்று வலிப்பதாக கூறினான்.

மூவரும் அதாவது முகிலின் அண்ணன், அண்ணி, தாய் என  மூவரும் முகிலின்  தந்தையிடம் ஒருவர் பின் ஒருவராக சீறிக் கொண்டு இருந்தார்கள்.

எல்லாம் உங்களால….. தா…..
அவனை அந்த வேலைக்கு அனுப்ப வேண்டாம்னு நாங்க எவ்வளவு சொன்னே…. கேட்டீங்களா…. என பார்வதி ஆரம்பிக்க…

அந்த ரவுடிங்க இப்படி ஆக்கி வெச்சிருக்காங்களே …

அவனுக்கு பெருசா எதுவும் ஆகலனு  சந்தோஷப்படுறதா… இல்லை இப்படி ஆகிடிச்சேனு  கவலைப்படுறதனு  தெரியல… என தமிழ் புலம்ப…

இனி… என்… தம்பி… அந்த வேலைக்கு போக மாட்டான் என அமுதன் உறுதியாகக் கூற…

இராமலிங்கம் தான் அவனை அந்த வேலைக்கு அனுப்பியது தவறு தான் போல என கண் கலங்கி வருத்தப்பட்டு கொண்டு இருந்தார்.

அவரைக் கண்ட முகில்  தன்னால் தான் தன் தந்தை இன்று கண் கலங்கி இருக்கிறார் என்பதை எண்ணி அவன் துடித்து தான் போனான். 

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு….

முகிலின் இல்லம் திருமணக்கோலம் கொண்டிருந்தது..

அங்கு ஐயரிடம் என்னென்ன வேண்டும் என தமிழ் கேட்டு கேட்டு செய்துக்கொண்டு இருக்க…

அமுதன் சமையல் வேலைக்கு வந்தவர்களிடம் சமையல் குறித்து பேசிக்கொண்டு இருக்க….

இராமலிங்கம்,பார்வதி அனைவரையும்  வரவேற்க…

மணமேடையில் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்தான் முகில்…

அவன் அருகில் அமர்ந்து தன் மழலை மொழியில் ஏதோ பேசிக்கொண்டு இருந்தால் அமுதனின் தவப்புதல்வி “ தமிழ் அமுதினி

சற்று நேரத்தில் மணமகள் கோலத்தில் முகிலன் அருகில் வந்து அமர்ந்தாள் சீத்தலை…

ஆம்…. டாக்டர். சீத்தலை தான்..

(அருங்காட்சியகத்தில் முழுமைபெற்ற ஓவியத்தை கண்டவள் அதிர்ந்தாள்… 

ஆம்… அதில் இருந்தது அவள் உருவம் தான்..

அதன் கீழ் வரைந்தவர் முகிலன் என இருக்க அவனைக் கண்டுபிடித்து அவள் நன்றி கூற அவன் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் நீங்க இல்லனா என்னால அத வரைஞ்சு இருக்க முடியாது.

நீங்க என் மேல கோவமா இருப்பீங்கன்னு   நினைச்ச….

அப்படி எல்லாம் இல்ல… என்ன இந்த மரகதபுரம் ஃபுல்லா பேமஸ் ஆக்கி இருக்கீங்க.. அப்படி இருக்கும் போது நான் எப்படி உங்க மேல கோப
படுவேன் சொல்லுங்க…

அன்று தொடங்கியது அவர்கள் நட்பு…

  பின் நட்பு காதலாகி இன்று திருமணத்தில் முடிந்துவிட்டது இல்லை இல்லை தொடங்கிவிட்டது)

இராமலிங்கம் அடிக்கடி கலெக்டர் கலெக்டர் என்று கேட்டுக் கேட்டே இன்று முகிலன் மரகத புரத்தில் கலெக்டர் ஆக மாறி விட்டான்…

“கலெக்டர் வெட்ஸ் டாக்டர் “…

இருவரும் தங்கள் வாழ்வை இனிதாக   வாழவும்  நாட்டுக்கு தங்கள் பணியின் மூலம் நல்ல சேவையை செய்ய வேண்டும் என வாழ்த்தி விடைபெறலாம்.

நன்றி…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

விண்வெளி கனவு…

நிலாச்சோறு