in , , , ,

மகிமை

நாயகி நான்முகி நாராயணி…… பழக்கத்தில் வாய் அபிராமி அந்தாதி சொல்லிக்கிட்டே இருந்தாலும் கல்யாணி மனசு முழுக்க மக மல்லி… ஏன் இன்னும் கூப்பிடல அப்படின்னு அதிலேயே இருந்தது …..

மகள் மல்லி ….சுந்தரி….னு 7.30 க்கு ஒரு கத்து கத்துவா……..வீடே அலர்ட் ஆகிடும்……

வேலை செய்யும் சுந்தரிக்கும் மல்லி வயசுதான்…..10 வயசுல வறுமை காரணமாக கிராமத்திலிருந்து வேலைக்கு வந்த பொண்ணு….. ஆனால் லட்சணமான அமைதியான சுறுசுறுப்பான பொண்ணு

5 மணிக்கு  எழுந்து எல்லா வேலையும் செய்து ..கல்யாணிக்கு பூஜை சாமான் எடுத்து வைத்து…. சமையல் பண்ணி சுறுசுறுப்பா சிரிச்ச முகத்தோட வேலை செய்வா…

 மல்லி…, சுந்தரினு கத்துற கத்துல ஓடிப்போய் அவளுக்கு காபி கொடுத்து அவளோட தேவை எல்லாமல் பக்கத்தில் இருந்து பாத்துக்குவா…மல்லி இப்படி சோம்பேறியாக திமிரா வளர்ந்ததுக்கு முக்கிய காரணம் அவ அப்பா சேகர் தான்…… அவர் பெரிய தொழிலதிபர் கோடி கோடி சொத்துக்கு ஒரே பொண்ணு …

 ரொம்ப செல்லம் ….கஷ்டம் கவலை ..

.என்னனு தெரியாது வளர்த்தார் .மகளை….கொஞ்சம்  கூட மக முகம் வாடி இருக்க விடமாட்டார்…..

கல்யாணிக்கு தான் ரொம்ப கோவம் வரும் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய அடக்கமும் அமைதியும் இல்லையே..சாமி நினைப்பு துளியும் இல்லையே..

நம்ம வீட்ல வேலை பார்க்கிற சுந்தரி  எப்படி இருக்கிறா… செவ்வாய் வெள்ளி அம்மன் கோவில் போறா….பூஜை பண்ணும் போது கூடவே இருந்து உதவி பண்றா….நம்ம பொண்ணு அப்படி எல்லாம் இல்லையே என்ற ஏக்கம் இருக்கும் …சுந்தரிய ரொம்ப பிடிக்கும்…..

சுந்தரிக்கு மல்லி எத்தனை கத்தினாலும் அவ கூப்பிட்டா ஓடிப்போயிடுவா….. மல்லி மேல் கொள்ளை பாசம்..

இன்னிக்கு என்ன சத்தமே இல்லை…. 8 மணிக்கு சினிமாபாட்டுச் சத்தம் வீடே அதிருமேனு சுந்தரி கல்யாணி அம்மா…மத்த வேலை பார்ப்பவர்கள் எல்லாருக்குமே ஆச்சரியமா இருந்துச்சு….

டமால்னு ஏதோ உடையற சத்தம்…அவ்வளவு தான் சுந்தரியும் கல்யாணியும் வேகவேகமாக மாடிக்குப் போய் பார்த்தால்….

மல்லி பேயறைந்தவ போல முழிச்சு கிட்டு இருக்கா….. கல்யாணி பதறி என்ன ஆச்சு என்ன ஆச்சு கேட்டதும்…மல்லி கண்ணீர் விட்டுட்டே.  ….பேச முடியலைனு சைகை காட்டுனா….உலகமே ஒரு நிமிஷம் நின்னுபோச்சு இரண்டு பேருக்கும்……

சேதி கேள்விபட்டு டாக்டர் குழுவோடு வந்த சேகர் சோகத்தின் உச்சிக்கே போயிட்டார்…..

ஆஸ்பத்ரி டெஸ்ட் னு ஒரு வாரம் ஓடிப்போச்சு….ஒரு பிரயோசனமும் இல்லை….டாக்டர்களுக்கு ஒண்ணும் புரியலை…எல்லாம் நார்மல் ஆனா பேச முடியலை..வீடு வீடா இல்லா…..யார் முகமும் சரியில்லை….

சேகரும் வெளிநாட்டு  பெரிய பெரிய ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் எல்லாம் வரவழைத்து பார்த்தார் ……எதுவும் சரியாக லை…

ஆரம்பத்தில் ஆர்பாட்டம் பண்ண மல்லி நாளாக நாளாக அடங்கி போயிட்டா…சாப்பாடு  Tv எதிலும் இஷ்டமில்லை…….

கல்யாணி சுந்தரியால மல்லி நிலமையை பார்க்க முடியலை…..எல்லா சாமிக்கும் நேர்ந்தாச்சு……

திடீருனு சுந்தரிக்கு தன் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் அம்மன் நினைவு வந்து அம்மனுக்கு தீச்சட்டி எடுக்கலாமா  தோணுச்சு……ஆத்தாதான் மல்லிய காப்பாத்துவானு தோணுச்சு…..

உடனே விளக்கு முன்னாடி போய் மாரியம்மனை மனமார கும்பிட்டா…..

மறுநாள் யாரும் எந்திரிக்க றதுக்கு முன்னாடி சீக்கிரம் கிளம்பி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு போயிட்டா சுந்தரி ….கூடவே வீட்ல பல வருடங்களாக வேலை பார்க்கும் வேலம்மா பாட்டியும்…

காலை எழுந்ததிலிருந்து கல்யாணி அம்மா விற்கு சுந்தரிய காணாமல் ஒரே கவலை….எங்க போனா தெரியலையேனு….8 மணிக்கு ஆட்டோல வந்து சுந்தரி இறங்குனா…

கல்யாணிக்கு மயக்கம் வராத குறை தான்…..ஏன்டி இப்படி பண்ண….என்ன கோலம் இது….கல்யாணி சத்தத்துல வீடே கூடிருச்சு….

மல்லியும் ஓடி வந்து பார்த்தா….சுந்தரிக்கு கல்யாணி ஆசையா ஒத்தச்சடை பின்னி அழகு பாத்த நீண்ட முடி காணோம்…..

வேலம்மா பாட்டி சொன்னாங்கனு மதுரை தெப்பக்குளம் மாரியம்மனுக்கு ….மல்லிக்காக மொட்டை போட்டுட்டா…..சேகருக்கு எப்பவும் கல்யாணி சுந்தரி பத்தி பேசுனாலே கோபம் வரும்….ஆனா இன்னிக்கு தன் மகளுக்காக அவ செய்ததைப் பார்த்து..

கல்யாணி … சேகர்.. இரண்டு பேரும் கண்கலங்கி நின்னாங்க….

சுந்தரி மெதுவா அம்மா மல்லிக்காக எங்க ஊர்ல  மாரியம்மனுக்கு தீச்சட்டி ஏந்தப் போறேன்…நீங்களும் என்கூட வரணும்…..அம்மனை வேண்டி ட்டு வருவோம் ஆத்தா குரல் கொடுப்பானு சொன்னா……

..ஏண்டி இப்பத்தான் மாரியம்மனுக்கு முடி காணிக்கை கொடுத்திருக்க…..அதுக்குள்ள எதுக்கு ….

.கல்யாணி கேட்டதற்கு ….எனக்காக வாங்க …. ப்ளீஸ் ஒருதரம் போய் வருவோம்….வேலம்மா பாட்டி நம்பிக்கை நான் செய்தேன்….என் திருப்திக்கு எங்க ஊர் வாங்க சொன்னப்ப….யாராலும் மறுக்க முடியலை…

மல்லியால் தாங்க முடியலை…..எனக்காக பெண்ணுக்கு அழகு தரும் முடியவே இழந்திருக்கா….இன்னும் தீச்சட்டி  எப்படினே தெரியாது…..

ஏதோ கஷ்டமான வேண்டுதல்னு மட்டும் புரியுது…..இவ இவ்வளவு அன்பா இருக்க நான் என்ன செய்தேன்…

அவளை எவ்வளவு கஷ்டப்படுத்தினேன் என்று யோசிக்க ஆரம்பித்தாள்…..

அன்னிக்கு செவ்வாய்கிழமை அதனால்

உடனே எல்லாரும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளம்பியாச்சு…..

மல்லி மட்டும் சுந்தரி செய்யப்போற வேண்டுதல்களை பார்க்க தைரியமில்லாமல் ரோட்டிற்கு எதிரில் முருகன் கோவில் வாசலில் காருக்குள் பிடிவாதமாக உட்கார்ந்துட்டா…..

நேரம் போயிட்டே இருக்கு….கோவில்ல சரியான கூட்டம்……மல்லியால் தனியாகவும் இருக்க முடியலை

உள்ள போனவர்கள் என்ன ஆனார்கள் ரொம்ப நேரமாச்சே….சரி போய் பார்ப்போம்னு இறங்கி  போறா….

கொடிமரம் தாண்டி போனப்ப .,..குறுக்கு ஓடி வந்த குழந்தைய பிடிக்க குனிந்தவள் கால் தடுமாறி குப்புறவிழ…அங்க மாவிளக்கு எடுத்துட்டு யாரோ வாழைப்பழத்துல சொருகிவச்சிருந்த பத்தி அவ வலது உள்ளங்கையில் பட……அம்மா….என்ற  மல்லி குரல் கோவில் முழுக்கக்கேட்டது…..

மல்லியால நம்பவே முடியலை…நானா கத்தினேன்….ஆஸ்பத்ரியில் எத்தனை டெஸ்ட்…கரண்ட் ட்ரீட்மெண்ட்….வலிக்க வலிக்க ஊசிகள்……எதுக்கும் வராத சத்தம் ஒரு பத்தி கங்குக்கா……நம்பவே முடியலை……

சுத்தி முத்தி பார்த்தா

குறுக்க வந்த குழந்தையும் காணோம்……

நேர் எதிரில் புன்னகையுடன்… அம்மா மாரியம்மா

மல்லி எழுந்து நின்று வாய் நிறைய மாரியாத்தா…..சொல்றப்ப ….சுந்தரியும் வேப்பிலை மேல்

தீச்சட்டி ஏந்தி பிரகாரம் சுத்தி மாரியாத்தா னு சொல்லிட்டே வரவும் சரியாக இருந்துச்சு

கோரஸா இரண்டு பேரும் சொன்னது கேட்ட கல்யாணி சேகர்  வேலம்மா பாட்டி எல்லாரும் அம்மனைப் பார்த்து….. அம்மா.தாயே…சொன்னப்ப தான்…..மல்லி கூப்பிட்டதை கவனிச்சாங்க….

மல்லி பேசுறா….அம்மா பெயர் சொல்றா….நம்பவே முடியலை….

மல்லி..தன்னை அறியாமல் கைகூப்பி அம்மா தாயே..பராசக்தி….அபிராமி…சிவகாமி…….

சொல்லிட்டு  இருக்கா சத்தமா……

கல்யாணி அம்மாக்கு தான் இத்தனை நாள் கெஞ்சியும் சாமி கும்பிடாத தன் பெண் தன்னைப் போலவே அம்பாள் பேர்களை பக்தியோடு சொல்றதக்கேட்டதும்

சுந்தரி ரூபத்துல ……….மாரியாத்தா …

மல்லிய கோவிலுக்கு வரவச்சு  மாத்தியிருக்கானு புரிஞ்சு மேனியெல்லாம் புல்லரிச்சுப்போச்சு……

எல்லாம் அவள் விளையாடல் தானே…….

நல்லதே நடக்கும்……

ஸ்ரீமதி வைகுண்டம்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

என்ன இருக்கு

30) என்னுயிர் நீதானே