in

காற்றே என் வாசல் வந்தாய் 5

அத்தியாயம் 5

அது ஆர்.ஜே.அஞ்சலியா.? சந்திரன் எஃப்.எம்ல.? விஷ்ணு நீ நிஜமாலுமே தான் சொல்றியா.?” என்று நம்ப முடியாமல் விஷ்ணுவிடம் கேட்க

ஆமாண்டாநிஜமாத்தான் சொல்றேன்அவதான் ஆர்.ஜேஅஞ்சலிஇப்போ கூடஅவளுக்கு 9 டூ 11 ப்ரோக்ராம் இருக்குஅதுக்கு அர்ஜண்ட்டா போகணும்னு தான் உன்ன ட்ராப் பண்ண சொன்னேன்.” என்றான்.

ஒரு நிமிடம் மனதுள் சிலையாய் நிற்பதைப் போன்றதொரு உணர்வு. “கடவுளேஎன்ன முட்டாள்தனம் செய்து விட்டேன்எந்த தேவதையை சீக்கிரம் நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேனோஅவளைக் காணும் வாய்ப்பு கிடைத்தும் நான் அதை வேண்டுமென்றே நழுவ விட்டிருக்கிறேனே.? என்னதான் செய்வது.? இது முன்னமே தெரிந்திருந்தால்இந்த ஃபங்ஷனைக் கூட விட்டுவிட்டு அவளுடன் எஃப்.எம் ஸ்டேஷனில் சென்று நேரடியாகவே அவளது நிகழ்ச்சியை பார்த்தும்கேட்டும் இருப்பேனேஅய்யோ இது தான் கடவுளின் திருவிளையாடலா.?” என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கவிஷ்ணு அவனின் தோள்களில் தட்டினான்.

என்னாச்சு சூர்யா.? ஏன் திடீர்னு ஒரு மாதிரி ஆயிட்ட.? ஏதாவது ப்ராப்ளமா.?” என்றான்.

இல்லஎனக்கு அவங்க தான் அஞ்சலின்னு தெரிஞ்சிருந்தாஅவங்ககிட்ட கண்டிப்பா பேசிருப்பேன் விஷ்ணுநான் ஆக்சுவலி வேறொரு டென்ஷன்ல இருந்தேன்அதனால அவங்க முகத்தைக் கூட பார்க்கலச்சே.. நான் எப்படி அவங்கள மிஸ் பண்ணேன்.? நான் அவங்களோட தீவிர ஃபேன்.” என்று சொன்னான் சூர்யா.

      “அடப்பாவிஅவளோட ஃபேன்னு சொல்லிட்டு இப்படிமுகத்தைக் கூட பார்க்காம வந்திருக்கியே சூர்யாஉன்னோட பேட் லக்னு தான் சொல்லணும்.” என்றான் விஷ்ணு அவனைப் பாவமாய் பாத்தவாறு.

டெய்லியும்இந்த டைம்க்கு அவங்க ப்ரோகிராம் கேட்காம இருந்ததே இல்லஇன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் மிஸ் பண்றேன்ஆனாஅவங்கள நேர்ல மீட் பண்ண சான்ஸ் கிடைச்சும் நான் அதை வேணும்னே மிஸ் பண்ணதுதான் கஷ்டமா இருக்குஎனக்கு அவங்க வாய்ஸ்அவங்க பாடற பாட்டுஅதோட அவங்க செலக்ட் பண்ணி போடற பாட்டுன்னு எல்லாமே ரொம்பப் பிடிக்கும்.” என்று அவளின் புராணமாய் பாடிக்கொண்டிருந்தான்.

டேய்நீ ஒரு கம்பெனிக்கு சி.. சூர்யாஆனாநீ பேசறதப் பார்த்தா ரொம்ப நார்மலான பர்சன்ஸ் பேசற மாதிரி பேசிட்டிருக்கஉன்ன மாதிரி பிஸினஸ் மேன் எல்லாரும் ரொம்ப பிஸியான ஆளுங்கன்னு நினைச்சாநீ அப்படியே ஆப்போசிட்டா இருக்க.” என்று விஷ்ணு ஆச்சர்யமாகக் கேட்க.

ஹூம்ம்யாருக்கு வேணும் இந்த கம்பெனி சி.. பதவி ஆம் நாட் லைக் பீயிங்க்  பிஸினஸ்மேன்சிம்பிளா சொல்லணும்னா ஆம் ஆன் ஆர்டினரி பெர்சன்அது தான் எனக்குப் பிடிக்கும் விஷ்ணுஅதுல கிடைக்கிற சுதந்திரம் மாதிரி வேற எதுலயும் கிடைக்காதுஅதுவும் இல்லாமஎன்னோட இண்ட்ரஸ்ட் என்னன்னு உனக்குத் தெரியாதா.?” என்று சூர்யா சொல்ல

மியூசிக் தானே.?” என்று சொன்னான் விஷ்ணு.

எக்ஸாக்ட்லிஎனக்கு மியூசிக் தான் பிடிக்கும்என்னோட ப்ரொஃபஷன் கூட அது ரிலேட்டட்  இருக்கணும்னு ஆசைப்பட்டேன்ஆனாஅப்பாவோட கம்பல்ஷன்ல இந்த பிசினஸ்ல அவர் கூட இருந்து ஜஸ்ட் சப்போர்ட் பண்றேன்அவ்ளோதான்மத்தபடி எந்த ஒரு முக்கியமான டெசிஷன்னாலும் அப்பாதான் எடுப்பார்.” என்று சூர்யா விஷ்ணுவிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தான்

பிடிக்காத ஒரு வேலையை எதுக்கு நீ செய்யணும்.? பேசாம உனக்கு எது பிடிச்சிருக்கோஅதையே செஞ்சுட்டு போ சூர்யா.” என்றான் விஷ்ணு சாதாரணமாக.

நீ ரொம்ப ஈஸியா சொல்லிட்ட விஷ்ணுஆனாஎங்க அப்பா இருக்காரேஅவர் சொல்லணுமேநீ உனக்கு பிடிச்சத செய் அப்படின்னுஅதுவும் இல்லாமஇன்னும் கொஞ்ச நாளைக்கு நான் எல்லாத்துக்கும் வெயிட் பண்ணித்தான் ஆகணும்என் தம்பி வந்துட்டா ஓரளவுக்கு நான் ஃப்ரீ ஆயிடுவேன்.” என்று சூர்யா சொல்லிக்கொண்டிருந்தான்.

உன் தம்பி என்ன பண்றான்.? அவன் வந்தா மட்டும் உன் பிரச்சினை தீர்ந்திடுமா என்ன.?” என்று விஷ்ணு கேள்விக்குறியாய் பார்க்க.

நான் வெயிட் பண்றதே அவனுக்காகத்தான் விஷ்ணுஅவனுக்கு பிஸினஸ்ல பயங்கர இண்ட்ரஸ்ட்நான் எல்லாம் என்ன.? அவனோட மூளையெல்லாம் அப்படியே அம்பானி மாதிரி.” என்றான் சூர்யா.

உங்கப்பா மாதிரியா.?” என்றான் விஷ்ணு.

ம்ஹூம்ம்எங்க தாத்தா மாதிரிஅவரும் கிட்டத்தட்ட அம்பானி மாதிரி தான்பயங்கர வியாபார உத்திஅவரை மாதிரி யாராலையும் பிஸினஸ் பண்ண முடியாதுன்னு அப்பா அடிக்கடி சொல்வார்அவரெல்லாம் பிஸினஸ்ல ஊறிப்போன மனுஷன்அப்படி ஒருத்தர் இனிமேல் பிறந்து தான் வரணும்னு அப்பா சொன்ன நேரமோஎன்னமோ.? என் தம்பியே அவரோட அச்சு அசலா வந்திருக்கான்னு தான் சொல்லணும்.” என்றான் சூர்யா பெருமையாக.

எதை வைச்சு நீ இப்படி சொல்ற.? எப்பவுமேமூத்த பசங்க தான் வீட்டுக்கு ரொம்ப பொறுப்பாநீ சொல்ற மாதிரி இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்ஆனாநீ சொல்றதப் பார்த்தாஅப்படியே ஆப்போஸிட்டா இருக்கு.” என்று கேள்விக்குறியுடன் பார்த்தான் விஷ்ணு.

அவன் சொன்னதுக்கு சிரித்தபடியே தொடர்ந்தான் சூர்யா, “இல்ல விஷ்ணுஉனக்கு ஒரு சாம்பில் சொல்லணும்னாஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு முக்கியமான கிளைட்ஸ் ஃபாரின்ல இருந்து எங்க கம்பெனியோட டை அப் வைச்சுக்க ஜஸ்ட் விசிட் பண்றதா சொல்லிருந்தாங்கபட்அந்த டைம்ல எனக்கு வைரஸ் ஃபீவர் வந்துடுச்சுஎன்னால சுத்தமா முடியலஅப்பாவும் ஒரு முக்கியமான விஷயமா பாம்பே போயிட்டார்அப்பா நான் இருக்கேன்ற தைரியத்துல கிளம்பிட்டார்எனக்கு ஃபீவர்ன்னு கேள்விப்பட்டதும் அவருக்கு என்ன பண்றதுன்னே புரியலஅவராலயும் சட்டுன்னு வர முடியாத சிச்சுவேஷன்ஆதித்யா அப்போபி.பி. ஃபைனல் இயர் படிச்சிட்டிருந்தான்அவன் என்கிட்ட எதுவுமே சொல்லலஎனக்கு முடியலன்னு தெரிஞ்சதும் அவனே கிளம்பி போய் அந்த கிளையண்ட்ஸோட எல்லா விஷயங்களையும் பேசி முடிச்சிட்டான்ஜஸ்ட் விசிட் பண்ண வந்தவங்கள அப்போவே டை அப் வைச்சுக்க வச்சுஎல்லா சைனும் பண்ணிட்டான்எனக்கும்அப்பாக்கும் ஒரே ஆச்சர்யம்அவனுக்குள்ள என்னமா திறமை இருந்திருக்குன்னு தோணுச்சுஆனாஅப்பா அவன ரொம்ப என்கரேஜ் பண்ண மாட்டார்அவரோட எதிர்பார்ப்பெல்லாம் என் மேல தான்எங்க அவர விட்டு நான் விலகி போயிடுவேனோன்னு ஒரு பயம் எப்பவுமே அவருக்கு இருக்குஇப்பவும்ஆதித்யா சொல்வான் அப்பாக்கு இந்த பிஸினஸ்ஸ அவருக்கு அப்பறம் நீ தான் பார்த்துக்கணும்னு நினைக்கறார்ன்னுஆனாஅத நெக்ஸ்ட் நீ தாண்டா ரன் பண்ணனும்என்னை ஆள விட்டுடு டான்னு அவன் கிட்ட கெஞ்சுவேன்சரிஒரு ரெண்டு வருஷம் வெயிட் பண்ணுநான் லண்டன்ல எம்.பி. முடிச்சதும் கண்டிப்பா வந்து எல்லா பொறுப்பையும் ஏத்துக்கறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்அவன் வரதுக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும்அதனால தான் எல்லாத்தையும் பொறுமையா ஹேண்டில் பண்ணிட்டிருக்கேன்இப்பவும்எனக்கும் அப்பாவுக்கும் நிறைய மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க் இருக்குஆனாஅதை பெரிய விஷயமா நான் எடுத்துக்கறதில்லஎதுவானாலும் அப்படியே மறந்துடுவேன்அடுத்த நாள் நார்மலாயிடுவேன்ஆனாஅப்பா போன வாரம் நான் பண்ண தப்ப மனசில வைச்சுட்டு அதுக்கு என்னைத் திட்டுவார்அதுவே பெரிய விஷயமாகும்என்ன பண்றதுன்னு தெரியாமயே போயிட்டிருக்க லைஃப்ல எனக்கு இருக்கற ஒரே ஆறுதல் இந்த எஃப்.எம்ல பாட்டு கேக்கறதுதான்எனக்கு அஞ்சலியோட வாய்ஸ் கேட்கும் போதுஎந்த விஷயமானாலும் அது அப்போவே மறந்து போகும்அவங்க ப்ளே பண்ற சாங்க்ஸ் எல்லாம் கேட்டாஏதோ சொர்க்கத்தில மிதக்கற ஒரு ஃபீல் தெரியுமா.? சான்ஸே இல்ல.” என்று அவன் எல்லாத்தையும் சொல்லி முடித்தான் விஷ்ணுவிடம்.

அடப்பாவிஇவ்ளோ விஷயம் இருக்கா உன் லைஃப்ல.? நான் இதை எதிர்பார்க்கல சூர்யாஅதுவும்நீ அஞ்சலியோட இவ்ளோ தீவிர ஃபேன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் அவள உனக்கு இண்ட்ரோடுயூஸ் பண்ணி வைச்சிருப்பேன்சரிவிடு இன்னொரு நாள் நீ ஃப்ரீயா இருந்தா நாங்க உன்னை மீட் பண்றோம்.” என்று கிண்டலாக சிரித்தான் விஷ்ணு.

ஹேநீ வேறநான் பிஸின்னு சொல்லாதநீ எப்போனாலும் சொல்லுகண்டிப்பா அவங்கள மீட் பண்றேன்அதுதான் எனக்கு ரொம்ப முக்கியம்மத்ததெல்லாம் அப்பறம் தான்.” என்று சூர்யா கண்ணடித்துச் சிரித்தான்.

இத மட்டும் உங்க அப்பா கேட்கணும்அப்பறம் பாரு.” என்றான் விஷ்ணு.

அதெல்லாம் அப்போ பாத்துக்கலாம்சரி விஷ்ணுரொம்ப நாள் கழிச்சு உன்கிட்ட பேசினதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்இவ்ளோ பிஸில நீ என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணிருக்கரொம்ப தேங்க்ஸ்கண்டிப்பா அஞ்சலிய மீட் பண்ண என்னைக் கூப்பிடுசரியாநான் கிளம்பறேன்அட்லீஸ்ட் கார்ல போகும் போது எஃப்.எம் கேட்டுட்டு போறேன்ஓகேபை..” என்றபடி அவசரமாகக் கிளம்பினான்.

ஓகேசூர்யாடேக் கேர்பை..” என்று அவனை வழியனுப்பி வைத்த விஷ்ணுஅஞ்சலியின் இத்தனை தீவிர ரசிகனா இவன் என்று அவனை நினைத்தான்.

என்றும் இல்லாமல் இன்று சூர்யா மிக மெதுவாகவே ட்ரைவ் செய்து கொண்டிருந்தான்அதே போல் சந்திரன் எஃப்.எம்மின் இன்னிசை இரவு ஒலித்துக்கொண்டிருந்ததுஅவன் அதனை ஆன் செய்த உடனேயேஅஞ்சலியின் குரல்,

நேயர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்இதோ வந்து விட்டேன்எப்பொழுதும் போல உங்கள் ஆர்.ஜே அஞ்சலிஇன்றும் உங்களை மகிழ்விக்கபல பாடல்களுடன் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்அவை அனைத்தையும் கேட்டு ரசிக்க நீங்கள் ஆவலாக உள்ளீர்களா.?” இடையில் ஒரு அழகான சிரிப்பு சத்தம்

இன்று முதல் பாடலாகஒரு அற்புதமான பாடலை உங்களுக்காக போடப் போகிறேன்இந்த பாடல் என் மனதிற்க்கு மிக நெருக்கமான ஒரு பாடல்இந்தப் பாடலின் விஷேஷம் என்னவென்றால் இப்போதுதான் இந்தப் பாடலை ஒரு விஷேஷத்தின் மேடையில் நான் ஒரு சில வரிகள் பாடிவிட்டு வந்தேன்அனைவருக்கும் பிடித்தமான பாடல்முக்கியமாக காதலர்களுக்கு பொருத்தமான பாடல்இதோ உங்களுக்காக…” என்றபடி

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே…” என்று சில வரிகளைப் பாடிவிட்டுத் தான் அந்தப் பாடலை அவள் அனைவருக்காகவும் அந்த நிகழ்ச்சியில் ஒலிக்க விட்டாள்.

அதைக் கேட்டதும்சூர்யாவுக்கு அப்போதுதான் அவளை அந்த விஷேஷத்தில் எந்த அளவு மிஸ் செய்து விட்டோம் என்று நினைத்தபடியே காரை செலுத்திக் கொண்டு வந்தான்அதே போல்அந்தப் பாடலின் ஆண் பாடும் வரிகள் வந்த போது அந்தப் பாடலைப் பாடிக் கொண்டே அவளை நினைத்தபடி சென்றான்அவன் நினைவில் அவள்திரும்ப சந்திக்கும் நேரம் தான் எப்போது.? 

 (தொடரும்…)

 

 

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Contributor

Written by Aathirai Mohan

Story Maker

1 – 💙உறங்காத நேரமும் உன் கனா பாகம் 2

18) என்னுயிர் நீதானே