in , ,

அம்மா தந்தல்லோ

அம்மா மீனாட்சி அம்மா..

கண்ணில் நிறைந்த கற்பகமே …உனை

காண கண்கள் தந்தல்லோ….

எண்ணத்தில் கலந்த என்தாயே…உனை

மனத்தில் பூஜிக்க வைத்தல்லோ

                                              …… கண்ணில்

மழலை பேசும் எந்தனுக்கு ….உனை

பாடும் மொழியும் தந்தல்லோ

தளர்வா நடக்கும் எந்தனையே…நீ

தாங்கிப் பிடிக்க வந்தல்லோ….

                                               ….. கண்ணில்

உலக வாழ்வில் மூழ்கிட்ட …எனை

உய்க்க உன் கரம் தந்தல்லோ….

நாளும் உன் பெயர் சொல்லிட ..எனக்கு

நல்ல வரமும் தந்தல்லோ….

                                             …..கண்ணில்

காலடி வாழ மீனாளே- உந்தன்

கருணை என்றும் வேண்டுமல்லோ

பிறவிக் கடலைக் கடந்திட ….உந்தன்

விழியும் வழியைக் காட்டுமல்லோ ..

                                            …. கண்ணில்

கொச்சைத் தமிழில் பாடுறேன்..எந்தன்

சொச்சத் தமிழையும் சகித்தல்லோ

பச்சைப்புடவை அன்னையே- எந்தன்

இச்சை என்றும் நீயல்லோ…..

வேண்டுதல் வேறொன்றுமில்லையே…நீ

வேண்டும் என்பதே வேண்டுமல்லோ….

ஸ்ரீமதி வைகுண்டம்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 4]

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

அன்பின் அரசனே … 38

தேவை ஒரு தேவதை -2