in , , , ,

9) என்னுயிர்

அத்தியாயம் 9

              மாலை கேன்டீனில் சிவானி ஷரண்யா இருவரும் பணியாற்றிக் கொண்டிருந்தனர்….

அப்போது வினோத் தன் நண்பர்கள் வந்து இருப்பதை கண்ட ஷரண்யா…

”ஐயோ! இந்த லூசு கிட்ட நான் போக மாட்டேன் எனக்கு பயமா இருக்கு” என்று சொல்ல…

அப்போது சிவானி “அவன் ஓவரா பேசினா,  ரெண்டு மூணு ஜோக் 

சொல்லு செத்துருவான்…… ”

“என் ஜோக்க பத்தி பேசினா அவ்வளவுதான்….. ஓகேடா” 

“அப்ப, நீங்க போயி சரவ் பண்ணுங்க.. அப்படியே போய்ட்டு வா….. ”

“உனக்காக பன்ற….என் செல்லம்….”

ஷரண்யா, அவனிடம் “சார், இது ஸ்கூல் & காலேஜ் பசங்களுக்கான கேன்டீன்.  நீங்க இங்க என்ன பன்றீங்க….”

“நான் புதுசா ஜாயின் பன்ன ஹேல்த் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், ஏன் அந்த மேடம் சொல்ல லியா?”

“ஓ….நீங்க தான் அந்த அழகான ஆபிசரா? நான் வந்ததுலிருந்து ஷிவானி உங்கள பத்தி தான் பேசிட்டு இருந்தா. சும்மா சொல்ல கூடாது.. நீங்க அப்படியே  நீங்க ஹிந்தி சீரியல் ஹீரோ மாதிரி இருக்கீங்க, அவளும் அப்படி தான் சொன்னா….”

“ஓகே சார், உங்களுக்கு  என்ன வேண்டும்..?”

“ஒன்னும் வேண்டா, நீ பேசினதே வயிறு நிரம்பி போச்சு.. இதுக்கு மேல சாப்பிட்டு என் வயிறு தான் முடிஞ்சு போகும். சரிமா நான் கெளம்புறேன்.. என்னுடைய வேலை முடிஞ்சிடுச்சு, நாளைக்கு உங்களுக்கு எல்லாம் வந்துரும் அப்புறம் உங்களுக்கு டாக்குமெண்ட் உங்கள் கைக்கு …….”

“ரொம்ப தேங்க்ஸ் சார்!”

”இதுக்கு தான் இவ்ளோ பேசின, சரி அந்த மேடம் எவ்வளவு நேரம்தான் ஒளிஞ்சு இருந்து எட்டிப் பார்ப்பார்கள்.. வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டு போறது” என்று சொன்னன்…

“சிவானி, இந்த அருணாச்சலம் பயங்கரமான ஆள் தான்” 

சிவானி மெல்ல வெளியே வந்து நிற்க, அவளை மேலிருந்து கீழ் வரை ஸ்கேன் செய்தான். 

“நா வர.. எனக்கு ஒரு உதவி….”

“என்ன உதவி சார்….?”

“பக்கத்தில் தான் என் ஆபிஸ், தினமும் எனக்கு லன்ச் இங்கிருந்து தான் வரனும்..”

“அது எப்படி சார் முடியும்? இந்த  கேன்டீன்  ஸ்கூல் பசங்களுக்கும் காலேஜ் 

பசங்களுக்கு மட்டும் தான் லன்ச்  பண்ண முடியும். எப்படி உங்கள மாதிரி ஆபீசர் க்கு  எல்லாம் எப்படி இங்க வந்து சாப்பிட முடியும்.. அதனால், பார்சல் இங்கு அறவே கிடையாது. எங்க  மேனேஜ்மென்ட் தெரிஞ்சா எங்களுடைய கேன்டீனையே எடுத்துட்டு வேற ஒரு ஆள் உட்காரவைத்து வாங்க. நாங்களே ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் ஒரு ஆறு மாசம் தான்  நடத்திக்கிட்டு இருக்கோம் சார், நீங்க வந்து மண்ண போற மாதிரி பண்றீங்க…”

“ஹலோ, 

நான் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பக்கத்தில் இருக்கிற ஹோட்டல் உங்கள பத்தி தான் ஃபர்ஸ்ட் நல்லா  நெருங்கி தெரிஞ்சுக்கணும். அதனால்தான் கேட்டேன் என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது,  எனக்கு லான்ச் வந்தே ஆகணும்” 

“ஓகே சார், நாங்க காலேஜ் போகனுமே எப்படி….?” 

“நீ நல்ல வாய் பேசிறியே ஏதாவது பட்டிமன்றத்திற்கு பேச போ, எதுக்கு ஓட்டலில் சமையல் பண்ற….. ?”

“நானும் என் திறமை எத்தனையோ பட்டிமன்றத்தில் காட்ட ஆசைப்படுறேன் சார். இன்னும் கேட்டால் சூப்பர் ஜோக் லாம் ச சொல்லுவ…. “

“எங்க ஒரு ஜோக் சொல்லு பாப்போம்..?” 

“ஒரு யானை  கோவிலுக்கு போச்சா, மசூதிக்கு போச்சா, போச்சா எல்லாம் கோவிலுக்குப் போகும் எல்லா இடத்துக்கும் போகும் ஏன்…?” 

“நீயே சொல்லு…..” 

“ஏன்னா, அதுக்கு மதவெறி…..”

“ஏய், நீ  இன்னும் ஜோக் சொல்லிக்கிட்டே இருக்கியா.. உனக்கு மனசாட்சி இல்ல, இப்படி கொலை பண்ற மாதிரி ஜோக் சொல்றியே, கேட்கிறவன் மனுஷன்  செத்துக்கிடந்த என்னடி பண்ணுவ?” என்று வினோத் சொல்ல….. 

“இத பாருங்க  சீனியர், டி போட்டு கூப்பிடறது வேணாம்.. ஷிவானி,  நான் சொன்னேனே ஒரு சீனியர் இவன்தான் அந்த லூசு …..”

“ஏய், என்ன பார்க்க லூசு மாதிரி இருக்கா…. ”

“ஹலோ ப்ரெண்ட்ஸ்,  போதும் நிறுத்துங்க. ”

“டேய், நீ என்னடா என்ன பண்ற….. அண்ணா நான் இதே காலேஜ் ல பிஜி சேர்ந்து இருக்க …..”

“என்னடா பிஜி படிக்கிறியா.. ஏண்டா, எருமை மாடு வயசு ஆகுது இப்ப  பண்ற” என்று அருண் கேட்க… 

“என்ன பண்றது வேலைக்கு போக ரொம்ப சோம்பேரித்தனமா இருக்கு.. சரி, 

பெரியம்மா  எப்படி இருக்காங்க?” 

“அவங்களுக்கு என்ன நல்லா இருக்காங்க.. அம்மாக்கு தான் கொஞ்சம் 

உடம்பு சரியில்ல, போய் பாக்கணும்னு ஆசையா இருக்கு ஆனா வேலை இருக்கு என்ன பண்றது….. ”

ஷிவானி  உள்ளே இருந்து வெளியே வரும் “ஹாய், நீங்க தான் வினோத் தா? உங்கள பத்தி வந்ததிலிருந்து இருந்து  பேசிக்கிட்டே இருந்தா….. ”

ஷரண்யா “அடிப்பாவி, நான் உன்னை செஞ்ச அதுக்கு நீ என்ன செய்யுற 

பாத்தியா……”

“நீங்க இரண்டு பேரும் பிரதர்ஸா…..?”

“இல்லை, இது என்னோட கசின் பிரதர். ரொம்ப நாள் கழிச்சு, இப்பதான் மீட் பண்ணும். காலேஜ் படிச்சா, மறுபடி லூசு மாதிரி காலேஜ் படிக்கிறா.. 24 வயசு ஆகுது…”

“ஹலோ 24 இல்ல இப்ப 22 இன்னும் ரெண்டு மாசத்துல 23 ஆகும்….”

“உங்க ரெண்டு பேர் சண்டை வெளியே  போடுங்க, காலேஜ் பசங்க வர 

ஆரம்பிச்சிடுவாங்க… ”

“ஹலோ, நானும் காலேஜ் தான் படிக்கிற. என்ன சீனியருக்கு மரியாதை தர மாட்டியா, மொக்க ஜோக் ஷரண்யா…. “

“சீனியர் ஷரண்யானு கூப்பிடுங்க….”

“பரவாயில்லை, இந்த மொக்கை ஜோக்  வேண்டா ….ஷிவானி நீங்க இவங்க 

தங்கச்சியா…?” 

“இல்ல  ஃப்ரெண்டு, இவக் க்லாஸ்ல தான் படிக்கிற…”

“ரொம்ப சின்ன பொண்ணா இருக்கீங்களா, தங்கச்சினு நினைச்சேன்….”

“ஓகே..ஷரண்யா ஞாபகம் இருக்கட்டும் தினமும் எனக்கு லன்ச் இங்கிருந்து தான்” என்று அருண் கிளம்பி விட …வினோத், “சரி இந்த சாபிட்ற மாதிரி நல்ல ஸ்நாக்ஸ் எடுத்துக் கொண்டு வாங்க….”

ஷரண்யா “முதல பில் பே பன்ன பிறகு, தோக்கன் கொடுத்தா தான் கிடைக்கும்…”

“இங்க என்ன கூட்டமா இருக்கு.. நீயேகொண்டு வா, இது சீனியர் ஆடர்….”

“இதோ பாருங்க கூட்டம் வந்தாச்சு.. லைன்ல நில்லுங்க, இது என்னோட கேன்டீன்.இங்க இந்த சீனியர் பூச்சி காட்றது வேண்டா……”

வினோத்,மனதில் இரு ஒரு நாள் மாட்டாமல போவஎன்று மனதில் நினைத்துப் படி செல்ல…

ஷிவானி யும்,ஷரண்யா வும், ஓடி ஆடி வேலை பார்க்கும் போது, வினோத்திற்குபிடித்திருந்தது. இப்போது இருக்கும் பென்கள், ஒரு பக்கம் படிப்பு ஒரு பக்கம் பகுதி நேர வேலை என்று உள்ளனர்.இப்படி பட்ட பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சினை யும் வராது என்று எண்ணி

கொண்டான். தன் நண்பர்களுடன், பேசி விட்டு நேரம் பார்க்க மணி ஆறு..

“ஓகே, நாங்க வரோம்” என்று வினோத் அவனது நண்பர்கள் விடைபெற்று செல்ல.

ஷிவானி, ஷரண்யா இருவரும் வீட்டில் உறங்கும் போது, “ஏய் அந்த ஆபிஸர்,

உன்ன வெச்ச கண் வாங்காம பார்க்குறாரு….”

“ஷரண்யா என்ன ஆச்சு பா, ஆனால் அந்த வினோத் உன்ன பார்த்த பார்வையேசரியில்லை…..”

“விடு, இந்த ஆம்பைளங்க பத்தி நமக்கு எதுக்கு கவலை…”

“அவர் ஆபிஸர் இப்படி தான் சந்தேகமாபார்ப்பாரு, அந்த லூசு வினோத்  ஓசியில் பப்ஸ் சாப்பிட வந்தவ,சரியா….”

“ஏன் டி இப்படி பேசுற, எல்லாரும் அப்படி இல்ல மா…”

“வேண்டா ஷிவானி நா இப்படியே இருக்க, எங்க அம்மா சாகும் போது 

என் கிட்ட சொன்ன வார்த்தைகள் இன்னும் ஞாபகம் இருக்கு. இந்த 

ஆம்பளைங்கள நம்பிடாத, இல்லனா நீயும் ஏமாந்து என்ன மாதிரி கஷ்டபடுவ. நீ நல்ல பொண்ணு ஷிவானி. அம்மா, அப்பா பேச்ச கேட்டு அவங்க சொல்ற பையன தான் கல்யாணம் பன்னும் னு.. ஆனா, எனக்கு காதல் மேலையும் கல்யாணம் மேலையும் நம்பிக்கை இல்ல…..”

“இப்படி சொல்றவங்க தான்” என ஷிவானி இழுக்க….

“நீ என்ன சொல்ல போரேன்ன்னு தெரியும்  நாளைக்கு செமினார் இருக்கு, சீக்கிரம் தூங்கு…..”

இருவரும் நித்திரா தேவியிடம் சரணடைந்தார்கள்…..

தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

அன்பின் அரசனே…. 37

10) என்னுயிர்