in

அன்பின் அரசனே…. 37

அத்தியாயம்….. 37

சித்துவும், மாறனும் பேசிமுடித்து இருக்கைக்கு வர சித்துவின் யோசனை படிந்த முகத்தை பார்த்து மதி என்னவென்று கேட்க, ஆஃபிஸ்ல இருந்துடா.. என்றுவிட்டு உணவை உண்ண, மதியும் ஏதோ யோசனையில் இருந்தாள்.

அனைவரும் உணவருந்தி கொண்டிருக்க, திவிக்கு சிவாவின் மேல் கோபம் இருந்தாலும், அவன் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது.. சிவா உணவை அளந்து கொண்டிருப்பதை பார்த்தவள்.. மாறனுக்கு உணவு பரிமாறுவதை போல சிவாவிற்கும் எடுத்து வைத்தாள்.. அதில் அவன் முகம் மலர, திவியை பார்க்க, அவள் உணவில் கவனம் செலுத்துவதை போல குனிந்து கொண்டாள். ஆர்வமாக உண்டான்.. ம்ம் பக்கத்து இலைக்கு பாயசாமா..? திவி தனக்கு பரிமாறியதை மாறன் கேலிசெய்ய, திவி மாறனை முறைத்தாள்..

சிவா உணவை அளைந்து கொண்டிருப்பதை முதலிலேயே பார்த்த மதி, சிவாவை அழைக்க போக, சித்து மதியை தடுத்து இருவரையும் கவனிக்க சொல்ல, அப்பொழுதுதான் மதி இருவரின் பார்வையை உணர்ந்தாள்.. அவள் ஆச்சரியமாக சித்துவை பார்க்க, அவன் கண்கள் மூடி ஆம் என்றான்.. மதி யோசனையில் ஆழ்ந்தாள்..

மதி யோசனையை பார்த்த சித்து, என்னவென்று கேட்க, நாம வீட்டுக்கு போய் இதை பத்தி பேசலாம்.. இப்போ இவங்க கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிச்சு வைங்க என்று சொல்ல, சித்து திவிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்லவும், இந்த ஸ்கிரிப்ட் எப்போடா.. எழுதின? மாறன் சித்துவை கேள்வியோடு பார்க்க.. ஜஸ்ட் நவ்.! என சொல்ல, ‘நீ நடத்து ராசா..! நமக்கு சோறுதான் முக்கியம்.. என்றுவிட்டு உணவில் கவனமானான்..

சித்து.. நீ எப்ப மாப்பிள்ளை பார்த்த..? திடீர்ன்னு சொல்ற..? சாவித்ரி கேட்க, அவனுக்கே இப்பதான் தெரியும்.. மாறன் முணுமுணுத்த மாறனை சித்து முறைக்க, ஹி..ஹி பிரியாணி செம்ம டேஸ்ட் மச்சி.. என்றுவிட்டு தன்கடமையை செய்தான்..

சித்து இது விளயாட்டு இல்லை.. யார் மாப்பிள்ளை..? சாவித்ரி கேட்க, ம்மா நம்ம குட்டிமா விசயத்துல நான் விளையாடுவேனா..? மாப்பிளை இதே ஊருதான்.. சிட்டில பெரிய நகை கடை வச்சிருக்கார்.. அப்பறம் கார்மெண்ட்ஸும் வச்சிருக்கார்.. இப்போதைக்கு மாப்பிள்ளையோட விவரம் இது மட்டும் தாம் மத்தபடி மாப்பிள்ளையை நேர்ல பார்க்கிறப்போ சொல்றேன்.. அதோடு முடித்து கொண்டு, சித்து அனைவரையும் அழைத்து சென்றான்..

சித்து சொன்ன விசயத்தில் சிவா உள்ளுக்குள் துடித்து வெளியே பொய்யாக சிரித்தபடி வர, மகன் மேல் உள்ள நம்பிகையில், சாவித்ரி அமைதியாக வர, திவி சிவாவின் மனதை பற்றி தெரியாமல், தன் அண்ணனிடம் எப்படி சொல்வது, என்று யோசனையில் வர, திவியையும், சிவாவையும் பார்த்த மதி மிகவும் குழப்பத்தில் வர, இந்த வெடியை கொளுத்தி போட்ட சித்து அடுத்து சூர்யா என்ன செய்வான்..? என்ற சிந்தனையில் வர, இதில் எந்த யோசனையும் இல்லாமல் ஒரு ஜீவன் மட்டும் உண்ட மயக்கத்தில் சுகமான உறக்கத்தில் இருந்தது..

வீட்டிற்கு வந்ததும், சித்து சிவாவை இங்கே தங்க சொல்ல, அவன் மறுத்து குழந்தைகளுடன் இருக்க தோன்றுவதாக சொல்லி ஆசிரமம் கிளம்பினான்.. போகும் போது திவியை பார்த்த ஏக்கம் நிறைந்த பார்வையை.. பார்த்த திவிக்கு உயிர்வரை உருகியது.. தாயை விட்டு போகும் சேயைப் போல திவி கண்களுக்கு தோன்ற, தன் அண்ணனிடம் பேசவேண்டும் என்று உறுதி எடுத்தாள்.

ஏதோ யோசனையில் இருந்த மதி, சிவாவின் இந்த பார்வையை சரியாக கவனிக்கவில்லை.. அனைவரும் உறங்க சென்றனர்.. தன் அறைக்கு வந்த சித்து, அங்கு மதி இல்லாததை கண்டு மொட்டைமாடிக்கு வர, அங்கு மதி ஏதோ யோசித்து கொண்டே இங்கும் அங்கும் நடக்க.. மெதுவாக மதியின் அருகே வந்த சித்து. அவளை பின்னிருந்து அணைத்து, என் அப்பூ சாயந்திரத்தில இருந்து அப்படி என்ன யோசிச்சுட்டு இருக்கா.. இந்த ரெண்டு புருவமும் சுருங்கியே இருக்கே.. என கேட்டு, மதியை தனக்கு முன் நிறுத்தி அவளின் புருவத்தை நீவி விட,

தன்னவனின் கைகளை பிடித்து கன்னத்தோடு அழுத்திக் கொள்ள, அதன் கதகதப்பு தந்த இதத்தில் ஒரு நொடி கண்கள் மூடியவள், ம்ம் ஆமா எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு என்று சொல்ல, என் அப்பூ செல்லத்துக்கு குழப்பமா.. அது என்ன சொல்லுங்க உடனே சரிசெய்யலாம்.. குழந்தையிடம் பேசுவது போல் பேச

ப்ச் விளையாடாதிங்க சித்துப்பா.. என சொல்ல, விளையாட்டை கைவிட்டவனாக.. மொட்டைமாடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து மதியை அழைக்க, அவளும் சித்து அருகில் அமரவும் சரி சொல்லு உனக்கு என்ன குழப்பம்..? சித்து மீண்டும் கேட்க,

 இந்த சிவா என்கிட்ட இருந்து ஒருவிசயத்தை மறைச்சுட்டான்.. மதி தாங்கலுடன் சொல்ல,

மதி, திவிக்கு தான் பார்த்த மாப்பிள்ளையை பற்றி எதாவது கேட்பாள் என்று நினைத்த சித்து, மதி சிவாவை பற்றி பேசவும், சிவாவாவது உன்கிட்ட மறைக்கிறதாவது.. அப்படி எல்லாம் அவன் செய்ய மாட்டான் சித்து உறுதியாக சொல்ல,

அட ஆமா சித்துப்பா நம்ம சிவா ரேணுவை காதலிக்க்கிறதை நம்மக்கிட்ட மறைச்சிட்டான் என்று சொல்ல,  எதே.. சிவா ரேணுவை காதலிக்கிறானா..? இது எப்போ? யார் உன்கிட்ட சொன்னா..?சித்து கேட்க நம்ம ஹோட்டலுக்கு போனோம்ல அப்ப உங்களுக்கு போன் வந்து நீங்க பேச போனிங்கள்ல அப்பதான் ரேணு எனக்கு போன் செஞ்சா.. எனக்கு முதல்ல அவக்கிட்ட பேச பிடிக்கலை.. அவ சிவா பத்தி பேசனும்ன்னு சொல்லவும் நானும் தனியா போய் பேசுனேன்.

அப்போ

மதிக்கா.. பிளீஸ் போனை வச்சுராதிங்க.. நான் உங்கக்கிட்ட இந்த விசயத்தை ரொம்ப நாளா சொல்லணும் தவிச்சுட்டு இருக்கேன்

சாரி ரேணு எனக்கு உன்கூட பேச விருப்பம் இல்லை.. உன்மேல எனக்கு கோபம் இல்லை.. ஆனா உன்னை பார்த்தாலோ பேசினாலோ உன் அப்பா அம்மாதான் நினைவுக்கு வராக்க.. நீ இப்போ சிவாவை பத்தி பேசனும் சொன்னதால மட்டும் தான் உன்கூட பேசிட்டு இருக்கேன்.. நீ நேரடியா விசயத்துக்கு வா..! அது வந்து அக்கா நானும் சிவாவும் ரெண்டுவருசமா காதலிக்கிறோம் என்று சொல்ல, ஒரு நொடி அதிர்ச்சியாக நின்ற மதி,  நீ சொன்னதை நான் எப்படி நம்புவேன்னு நினைக்கிற.. ரேணு..

அக்கா பிளீஸ் என்னை நம்புங்க இந்த விசயத்துல எந்த பொண்ணாவது பொய் சொல்லுவாளா..? நீங்க நம்பலேன்னா நானும் சிவாவும் சேர்ந்து எடுத்த போட்டோ அனுப்பிறேன் பாருங்க.. நீ எந்த போட்டோ அனுப்பினாலும் நான் நம்ப மாட்டேன்.. என் சிவா என்கிட்ட எதையும் மறைக்க மாட்டான்.. அவனுக்கு நான் தான் எல்லாமே.. பெருமையாக சொல்ல

அதனால தான உன்கிட்ட இப்படி கெஞ்சிட்டு இருக்கேன்.. மாமனார் மாமியார் தொல்லை இல்லாத வாழ்க்கைக்கு இந்த சிவாவை தேர்ந்தெடுத்துருக்கேன்.. எங்களுக்கு கல்யாணம் ஆனா நான் செய்ற முதல் விசயமே உன்னை அவன்கிட்ட இருந்து பிரிக்கிறது தான்.. மனதில் கறுவிக் கொண்டு,

அக்கா சிவாக்கு உங்கக்கிட்ட சொல்ல தயக்கம் கா நீங்க அவனை சொந்த அண்ணன் மாதிரி நினைச்சிருக்கிங்க.. என்னை காதலிக்கிறேன்னு சொன்னா நீங்க அவனை தப்பா எடுத்துருவிங்களோன்னு நினைக்கிறான்.. அவன் பாவம் கா இவ்வளவு வருஷம் தனியா வாழ்ந்துட்டான்.. இனி அவனுக்கு துணையா நான் இருக்கனும் ஆசைபட்றேன் அக்கா பிளீஸ் எங்களை சேர்த்து வைங்க அக்கா.. என்று அழ.. மதி ரேணு அனுப்பிய போட்டோவை பார்த்தவளுக்கு, ரேணு அழுகையும், சிவா தனியாக இருக்கான் என்ற வார்த்தையும் அவளை குழம்ப செய்தது.. போட்டோவில், ரேணு உணவுபரிமாற, சிவா அவளை, ஆர்வமாக பார்த்து கொண்டிருப்பதை போல் இருந்தது..

மதியின் அமைதியை கவனித்த ரேணு அக்கா சிவா கல்யாணம்னு  ஒன்னு செஞ்சா அது என்னை தான் செய்வான்.. இல்லன்னா அவன் கல்யாணம் செய்ய மாட்டான் கா அவன் இப்பொ கொஞ்ச நாளா சரியா சாப்பிட்றது இல்லை… எங்க நான் அவனுக்கு கிடைக்க மாட்டேன்னொன்னு ரொம்ப வருத்தப்பட்றான்க.. ஆசிரமத்துல வளர்ந்ததால அவன் என் அப்பா எதாவது சொல்லிருவாரோ என்று அப்பாக்கிட்ட பேச தயங்குறான் ..

அக்கா இத்தனைவருசம் சிவா உங்க கூட இருந்த்துக்கு அவனுக்கு இந்த ஒரு நல்ல விசயத்தையாவது செஞ்சு கொடுங்க.. மதியின் மனதை கரைத்து கொண்டிருந்தாள்..

நான் அவன்கிட்ட பேசுறேன் ரேணூ அவன் உன்னைய விரும்பறேன் சொன்னா கண்டிபா நானும் என் கணவரும் உன் அப்பாக்கிட்ட பேசுறோம்.. என்று சொல்ல

மதி சொன்னதில் ஒரு நொடி திடுக்கிட்ட ரேணூ.. அக்கா தயவுசெய்து அந்த காரியத்தை மட்டும் செஞ்சுறாதிங்க.. அவன் இல்லன்னு தான் சொல்லுவான் ஏன்னா உங்க மேல வச்சிருக்க பாசம் அவனை உண்மையை சொல்லவிடாது.. என் அப்பா வேற உங்களுக்கு செஞ்ச துரோகம் அதை எல்லாம் நினைச்சு உங்களுகாக அவன் என்னை காதலிக்கலேன்னு பொய் சொல்லுவான் கா.. ரேணு ஒவ்வொரு வார்த்தையில் தான் மாதவனின் மகள் என்பதை நிரூபித்து கொண்டிருந்தாள்..

சரி நான் அவங்க்க்கிட்ட பேசிட்டு உனக்கு சொல்றேன் இப்போ போனை வைக்கிறேன்.. என்று மீண்டும் இருக்கைக்கு வர அங்கு சிவா சாப்பிட பிடிக்காமல் உணவை அளைந்து கொண்டிருப்பதை பார்த்து ரேணு சொன்னது உண்மையாக இருக்குமோ என்று எண்ண தொடங்கினாள்..

இது தான் நடந்துச்சு.. ரேணு சொல்றது உண்மையா? பொய்யான்னு தெரியலை..ஆனால் இந்த சிவா கொஞ்ச நாளா மனசுக்குள்ள எதையோ யோசிச்சுட்டு இருக்கான்னு தோணுது.. ஹோட்டல்ல கூட பாருங்க அவன் சாப்பட்டை அளைந்துகிட்டு தான் இருந்தான்.. திவி பரிமாறவும் பேசாம சாப்பிட்டான். என்று சொல்ல,

அட என் அறிவுக் கொழுந்தே..!  சித்து மதியை செல்லமாக கொஞ்சியவன்,

ரேணு சிஸ்டர், நீ மாதவன் பொண்ணு என்று நிரூபிச்சிட்டியே….! ஆனால் நான் சித்தரஞ்சன்கிறதை மறந்துட்டியே.. சிவா உன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்கலேன்னு எனக்கு தெரியும்.. இந்த மக்கு அப்பூக்கும் அதை புரிய வைப்பேன்..!மனதில் நினைத்தவன்,

மதியிடம் சரி அதெல்லாம் இருக்கட்டும்.. நம்ம சாப்பிட்டு இருக்கப்போ ஏன் என்னை அப்படி பார்த்த..? சித்து கேட்க, ஆமா நான் சிவாக்கு பரிமாற போனப்ப நீங்க என் கைபிடிச்சு தடுத்திங்க.. அதான் பார்த்தேன்.. அப்ப இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிச்சு வைங்கன்னு சொன்னது.. சித்து குழப்பமாக கேட்க,

…க்கும் நீங்க தான் அப்ப அப்ப கணை சிமிட்டுனிங்களே அதை தான் சொன்னேன்.. என்று சித்துக்கு விளக்கம் கொடுக்க.. சித்து என விழித்தான்..

“இவ தெளிவா பேசறாளா.. இல்லை நான் தான் குழம்பி இருகேனா..? தன்னயே கேட்டு கொண்டு, நீ திவிக்கு பார்த்த மாப்பிள்ளையை பத்தி எதுவுமே கேட்கலையே..? என்றவனிடம், நம்ம திவிக்குட்டிக்கு நீங்க எப்படி மாப்பிள்ளை பார்ப்பிங்கன்னு தெரியாதா..? ரொம்ப நல்லவனா, திவி மனசை புரிஞ்ச்சு நடந்துக்கிறவனாகத்தான் பார்ப்பிங்க.. என்று சொல்ல தன்னவள் தன் மேல் வைத்திருக்கும் நம்பிகைய நினைத்து பூரிப்புடன் பார்க்க,

மதியே மீண்டும் சித்துவிடம்,  நம்ம சிவாவுக்கும் திவிக்கும் ஒரே மேடையில கல்யாணம் செய்யணும் சொல்லிருந்திங்க, சொல்லி வச்ச மாதிரி ரெண்டுபேருக்கும் ஒரே நேரத்துல மாப்பிள்ளையும் பொண்ணும் கிடைச்சுட்டாங்கள்ல..! என்று சந்தோசத்துடன் சொன்னவளை ஆழ்ந்து பார்த்த சித்து, ஏன் அப்பு அந்த நல்லவன், திவி மனசை புரிஞ்சவன் நம்ம சிவாவா இருக்கக் கூடாதா..? என்று கேட்க,

மதி இமைக்க மறந்து சித்துவை பார்த்தாள்..

சித்துப்பா நீங்க என்ன சொல்றிங்க..? ஆச்சரியமாக கேட்டவள்,  திவிக்கு சிவாவை பிடிக்கனும்.., சிவாக்கும் திவியை பிடிக்கனும்.. ரேணு வேற இதுல சம்பந்த பட்டிருக்கா.. என்று சொல்ல, சித்துக்கு லேசாக கோபம் எட்டிப்பார்க்க நீயெல்லாம் காதலிச்சு கல்யாணம் செஞ்சேன்னு சொல்லிராதடி.. எல்லாரும் சிரிக்க போறாங்க.. என்று எரிச்சலில் சொன்னவன்,

மதி திகைத்து பார்த்தவளுக்கு கணவனின் கோபத்தில் லேசாக கண்கலங்கி உதடுபிதுக்கி அழுகைக்கு தயாராக, அச்சோ செல்ல குட்டி இங்க பாரேன்.. நீ சின்னவயசுல இருந்து சிவாவை பார்க்கிற எப்பவாவது அவன் ரேணுவை ஒரு பார்வையாவது பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கா..? என்று தணிவாக கேட்க, மதி மறுப்பாக தலையசைத்தாள்.. அப்பறம் எப்படி ரேணு சொன்னது நம்பின..? நம்ம வீட்டு பையன் மேல நமக்கே நம்பிக்கை இல்லேன்னா எப்படி டா மத்தவங்க நம்புவாங்க.. என்று கேட்க,

நான் எப்போ சிவாவை நம்பல.. மதி கேட்க

பின்ன ரேணு சொன்னாங்கிற ஒரே காரணத்துக்காக சிவா ரேணுவை காதலிக்கிறான்னு நம்பின தான..?  என்று கேட்க.. அப்போ சிவா ரேணுவை காதலிக்கலையா..?கேட்டவளிடம் அதை அவன்கிட்ட கேட்டு தெளிவுபடுத்திக்கடா.. என்று சொல்ல, அவன் என்மேல உள்ள பாசத்துல இல்லேன்னு சொல்லிட்டா.. என்ன செய்ய..? என்று கேட்க..

நீ அவன்கிட்ட ரேணுவை காதலிக்கிறியான்னு கேட்காமல் சும்மா ரேணு பேர் வர்ற மாதிரி எதாவது பேசு.. சித்து சொல்ல, மதி உடனே சிவாவிற்கு அழைத்தாள்.. போனை ஸ்பீக்கரில் போட, அந்த பக்கம் சிவாவின் சுரத்தே இல்லாத குரல் கேட்க, அதை கேட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, சித்து பேசு என்பது போல சைகை காட்டினான்.

சிவா.. நம்ம ரேணு இருக்காள்ல அவளுக்கு ஒரு உதவி தேவையாம்டா.. அதான் உன்னை கூப்பிட்டேன்.. என்று சொல்ல, ரேணுவா.. யார் அது..? என்ன உதவி வேணுமாம்..? எதுவா இருந்தாலும் நாளைக்கு செய்றேன் மதி.. இப்ப நான் ரொம்ப டையர்டா இருக்கேன்மா தூங்க போறேன் என்றவனிடம்  இங்க இருடான்னு சொன்னதுக்கு மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்ட.. சரி நீ ரெஸ்ட் எடு.. நாளைக்கு பார்க்கலாம்.. என்றவள் சிவா போனை வைக்க போக.. சிவா..!: மதி பாசத்தோடு அழைத்தாள்..

மதி வீட்டிலிருந்து வந்த சிவாவிற்கு தனிமை மிகவும் வாட்டியது.. சித்து திவிக்கு மாப்பிள்ளை பார்த்ததாக சொல்லவும், இதுவரை தனக்கு யாரும் இல்லை என்று வருந்தாதவன், முதன்முறையாக அதற்காக வருந்தினான்.. தன் பெற்றோர் இருந்தால்.. என்னோட ஆசையை நிறைவேற்றி இருப்பாங்க.. எனக்காக சித்துக்கிட்ட பேசியிருப்பாங்க.. என்று வேதனையில் கரைந்தவனை மதியின் இந்த குரல்.. இரண்டு சொட்டு கண்ணீர் அவனறியாமல் வெளிவர,, அடைத்த தொண்டையை சரி செய்து

என்னவென்று கேட்க..

உன் மனசில எதாவது நினைச்சிட்டு இருக்கியா டா எதுவா இருந்தாலும் சொல்லு உன் தங்கச்சி நான் இருக்கேன்.. உன் ஆசையை கண்டிப்பா நிறைவேற்றி தருவேன் டா.. உள்ளுக்குள்ளேயே வச்சு மருகாதடா.. மதியும் கலங்கிய குரலில் சொல்ல, மதியின் இந்த பேச்சு சிவா மனதில் அமைதியை கொடுக்க..

 உன்னோட சந்தோசத்தை கெடுக்கிற மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன் மதிம்மா.. உண்ட வீட்டுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்.. என் காதல் என்னோடவே போகட்டும் என் தர்ஷுமாக்கு இந்த அநாதை வேண்டாம்.. அவ சித்து பார்த்திருக்க மாப்பிள்ளையை கல்யாணம் செஞ்சு நல்லா இருக்கட்டும் என்று உறுதி எடுத்தவன்,

மதியிடம், நீங்கள்லாம் இருக்கும் போது எனக்கென்ன கவலை நீ எப்பவும் சந்தோசமா இருக்கணும் எனக்கு அது போதும் மதி.. என்றுவிட்டு போனை அணைத்தான்..

சிவாவிடம் பேசிவிட்டு வைத்த மதி, இந்த ரேணு ஏன் என்கிட்ட பொய் சொன்னா சித்துப்பா,, அதுவும் அந்த போட்டோ கிராஃபிக்னு சொல்ல முடியாத அளவு உண்மையா இருக்கு சித்துப்பா.. அந்த போட்டோல்ல இருக்கிறது சிவா தான் அதான் நான் கொஞ்சம் குழம்பிட்டேன்.. என்ற மதியிடம் சித்து போட்டோவை காட்ட சொல்ல, மதி காட்டவும் அந்த போட்டோவை பார்த்தவன்,

போட்டோல்ல இருக்கிறது சிவாதான்.. ஆனால் பரிமாறது ரேணு இல்லை.. நம்ம திவி..நீ நல்லா அந்த போட்டோவை பாரு.. என்றுவிட்டு மீண்டும் அந்த போட்டோவை பார்க்க சொல்ல, நன்றாக பார்த்த மதிக்கு உண்மை விளங்கியது,,

அன்று அனைவரும் மதிவீட்டில் உணவருந்தும் போது திவி சிவாக்கு பரிமாறியதை திவி முகத்தை ரேணு அவளின் முகமாக மாற்றி இருந்தாள்.. திவி, ரேணுவின் உடலமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால்.. போட்டோவை உற்று பார்த்தால் மட்டுமே வித்தியாசம் தெரியும்..

இந்த ரேணு எப்படி பொய் சொல்லிருக்கான்னு பாருங்களேன்.. கொஞ்ச நேரத்துல எப்படி குழம்பிட்டேன்.. என்றவள்.. சித்துவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.. இப்ப இந்த குழப்பம் தீர்ந்துருச்சு நீங்க என்னமோ சொன்னிங்களே அது.. என்ன..? கேட்க, சித்து ஏதோ சொல்ல வருவதற்குள் மேலே ஆள்வரும் அரவம் கேட்க இருவரும் அங்கு பார்த்தனர்.. திவிதான் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்..

ஏன் திவிம்மா ஒரு குரல் கொடுத்திருந்தா நாங்க வந்திருப்போம் ல ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மேல வந்த..? மதி கேட்டவாறே திவியை தன் அருகில் அமர்த்திக் கொள்ள, இருவரையும் பார்த்திருந்த திவி,  அண்ணா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் இந்த மாப்பிள்ளையும் வேண்டாம் நேரடியாக விசயத்திற்கு வர,

 அது சிவா என்றாலுமா திவிமா.. சித்து குறுஞ்சிரிப்புடன் கேட்க அதில் திகைத்து விழித்த திவி..

தன்னை சமாளித்து.. ம்ம் பார்த்த உங்களுக்கு புரியுத் என் மனசு ஆனால் அந்த தத்திக்கு புரிய மாட்டிங்குது.. விளையாட்டாக சொல்ல ஓய் என் முன்னாடியே என் அண்ணனை கிண்டல் செய்றியா,,? மதி திவி காதை பிடித்து திருக, அண்ணீ நோ வயலன்ஸ்.. நீங்க எனக்குதான் சப்போர்ட் செய்யணும்.. என்று செல்லம் கொஞ்ச…

திவிம்மா எனக்கு சிவா ஓ கே தான் ஆனால் அவனாக வந்து நான் உன் தங்கச்சியை காதலிக்கிறேன்.. எனக்கு திவியக் கல்யாணம் செஞ்ஜு கொடுன்னு கேட்டா மட்டும் தான் உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம்.. இதுல நானோ உன் அண்ணியோ தலையிட மாட்டோம்.. உங்க காதலுக்கு நீங்கதான் போராடனும்.. எனக்கு தெரிஞ்சு சிவாக்கு உன்னை பிடிச்சிருக்கு ஆனால் அதை ஒத்துக்க வைக்கிறது உன் சாமர்த்தியம்.. என்று சொல்ல,

நான் சித்தரஞ்சன் தங்கச்சி.. அண்ணியை கல்யாணம் செய்றதுக்கு நீ எவ்வளவு ஃப்ராடுதனம் செஞ்ச அதுல பாதியாவது நான் செய்ய மாட்டேனா..? சித்துவை டேமெஜ் செய்ய, அதில் கடுப்பான சித்து திவியை முறைக்க மதியின் காதல் பார்வையில் மயங்கி போய் வா வெற்றி உனதே..! என்று வாழ்த்தி அனுப்பினான்..,

சிவா தன் மனதில் பூத்த காதலை தனக்குள்ளே பூட்டி வைக்க, அந்த பூட்டை திறக்கும் சாவியாக திவி இருப்பாளா..

அரசன் ஆள்வான்

போனபதிவிற்கு கமெண்ட் சொன்ன, காயின் கொடுத்த அனைவருக்கும் ரொம்ப நன்றி ஃப்ரெண்ட்ஸ்..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

தேவை ஒரு தேவதை -1

9) என்னுயிர்