in

தேவை ஒரு தேவதை -1

 தேவை ஒரு தேவதை

அத்தியாயம் 1

தெற்கு புளோரிடாவில் முக்கியமான நகரமான மியாமி இன்டர்நேஷனல் ஏர்போர்ட். அங்குள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் சக்திவேல் மிக அவசரமாக ஏர்போர்ட்டுக்கு நுழைந்தான். அடுத்த அரை மணியில் அவனுக்கு இந்தியா செல்லும் விமானம். அரக்கப்பரக்க உள்ளே நுழைந்தவன் சுங்கச் சோதனைகளை முடித்து விட்டுவிமானத்திற்குள் ஏறி அமர்ந்தான். “உஷ்அப்பாடா…” என்று பெருமூச்சு அவனுள் இருந்து எழுந்தது..

பேச்சிலும் நாகரிகத்திலும் எவ்வளவுதான் அயல்நாட்டுகாரராக மாற முயற்சித்தாலும் சில சமயங்களில் நம்மை மீறி நமது வேர் எது என்பது வெளிப்பட்டு விடுகிறது. அவனது உடைக்கும்அவனது பேச்சிற்கும் சம்பந்தமில்லாததை கவனித்த அவனை அடுத்து அமர்ந்திருந்த அமெரிக்கர் அவனை ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டு தனது கையிலுள்ள லேப்டாப்பை பார்க்க ஆரம்பித்தார்.

நேற்று இரவில் இருந்து எத்தனை டென்ஷன்திடீரென்று “அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. ஐசியூவில் சேர்த்திருக்கிறோம், உடனே கிளம்பி வா.. என்று அப்பா போனில் கூறியபோது ஒரு நிமிடம் அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை.. “என்ன விஷயம்..?” என்று கேட்டதற்கு “நீ நேரில் வா. பேசிக் கொள்ளலாம்..” என்று போனை வைத்து விட்டார். மிகவும் முக்கியமான விஷயமாக இல்லாவிடில் அவ்வாறு கூறுபவர் இல்லையென்பதால் அவனும் அடித்துப்பிடித்து ஏற்பாடு செய்து இதோ கிளம்பி இருக்கிறான்..

ஒரு மாதத்திற்கு முன்னால் தான் அவனது நிச்சயத்திற்கு சென்னை சென்று விட்டு திரும்பி இருந்தான். அதற்குள் இன்னொரு தடவை செல்ல வேண்டுமே..பணம் அதிக அளவில் செலவாகுமேஎன்று யோசித்தாலும்அம்மாவின் உடல்நிலை என்ற சொல் எல்லாவற்றையும் பின் தள்ளி வைத்துவிட்டு அவனைக் கிளம்ப வைத்தது.

சக்திவேல்அம்மா, அப்பா, ஒரே தங்கை சாந்தினி. நடுத்தர குடும்பம்.. அம்மா அப்பா இருவருமே அரசு ஊழியர்கள். வேலையும் படிப்பு மட்டுமே சொத்து, என்று நம்பும் பெற்றோருக்கு பிறந்த பையன். அப்படி சொல்லி சொல்லியே வளர்க்கப் பட்டதால்படித்து வெளிநாட்டில் உத்தியோகம். தங்கை இப்பொழுதுதான் கல்லூரி மூன்றாம் ஆண்டு…

மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான். அவனுக்கு ஏற்ற பெண்ணாக பார்க்க வேண்டுமென்று தரகரிடம் சொல்லிஎல்லா பொருத்தங்களும் பார்த்து தேடிய பெண் சவீதா. சக்திவேலை பொறுத்தளவில் நடுத்தர குடும்பத்திற்கு உரியபெற்றோர் சொல்படியே கேட்டு வளர்ந்ததால் என்னவோபெண்ணைப் பற்றிய எந்த விதமான தனித்த அபிப்பிராயமும் இல்லை.

தன்னைப் போலவே படித்து வெளிநாட்டில் வேலை பார்க்கும் தகுதி ஒன்று இருந்தால் போதும் என்பது மட்டும் அவனது கண்டிஷனாக இருந்தது. மற்றவையெல்லாம் பெற்றோர் விருப்பப்படி விட்டுவிட்டான். 

சவீதா.. வீட்டிற்கு ஒற்றை பெண். அம்மா ஹவுஸ் வைஃப். அப்பா அரசாங்க அதிகாரி. நன்கு படித்து சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேண்டும் என்ற மகளின் பிடிவாதம், அதற்கு ஏற்ப அமைந்ததுதான் இந்த சம்பந்தம். அவர்களுக்கும் அது விருப்பமே. மகள் வெளிநாட்டில் இருந்தால் தாங்களும் வெளிநாடு  சென்று வரலாம். தற்போது உள்ள பெரும்பாலான பெற்றோர்களின் கனவு அவர்களுக்கும் இருந்தது.

ஆகவே நிச்சயத்தின் போது சக்திவேல்சவீதாவின் பேச்சு பெரும்பாலும் வெளிநாட்டில், அவன் பார்க்கும் வேலை இருப்பிடம்அவளது வேலைக்கான வாய்ப்பு இப்படியே சென்றது.. மற்றபடி ஒரு ஆணுக்கும்பெண்ணுக்குமான ஈர்ப்பு இல்லை.. அதன் பிறகு நிறைய தடவை போனில் பேசினாலும்லைப் ஸ்டைல்ப்யூசர் பிளானிங்என்பது மட்டுமே  பேச்சு என்று  ஆயிற்று. (over intelligence will planned only money future.. not life future…)

 நேற்றுக்கு அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்றதும் உடனே அவளுக்கு அழைத்து தகவலை தெரிவித்து இருந்தான். “ஓகே சக்தி.. ஐ வில் கோ..” என்ற பதிலும் அவளிடமிருந்து கிடைத்திருந்தது..

24 மணி நேர பயணம். எப்போதும் அலுப்பும்மகிழ்ச்சியும்ஊரில் உள்ளவர்களைப் பார்க்க போகிறோம் என்ற ஆர்வமுமாய் கழியும் பிரயாணம் இந்த தடவைமுள் படுக்கையில் இருப்பது போல் இருந்தது. அம்மாவின் உடல் நிலை என்னவாச்சோ..என்ன பிரச்சினையாக இருக்கும்..பலவித கவலைகள்அதைத் தொடர்ந்த சிந்தனைகள் வரிசையாக ஓடநிம்மதியாக தூங்கவும் முடியாமல்சாப்பிடவும் பிடிக்காமல் ஒருவழியாக பிரயாணத்தை முடித்துக் கொண்டு  இந்தியா வந்து சேர்ந்தான்..

அடுத்து நான்கு நாட்கள். மிகவும் நரகமாக கழிந்த நாட்கள். ஏகப்பட்ட டெஸ்ட் டாக்டர்ஸ்கன்சல்டேஷன்மருந்துகள்கடைசியாக தீர்ப்பு சொல்லும் நாளை எதிர்நோக்கும் கைதி போல இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரி வராண்டாவில்… மிஸ்டர் சடகோபன் உங்களை டாக்டர் கூப்பிடுகிறார்..!” இந்த நாலு  நாட்களில் மிகவும் தளர்ச்சியடைந்து வயதானவர் போல் தோற்றம் தந்த அப்பாவை பார்த்ததும் சக்திக்கு வருத்தமாக இருந்தது..

இருங்கப்பாநானும் வரேன்..” தானும் அப்பாவின் கூட சென்றான்..

உக்காருங்க..” எதிர் கைகாட்டி இருவரையும்  உட்கார சொன்ன டாக்டர்தனது மூக்கு கண்ணாடியை தூக்கி விட்டுக் கொண்டுரிப்போர்ட்சை கையில் எடுத்துமீண்டும் ஒருமுறை திருப்பிப் பார்த்துவிட்டு, “ஒண்ணுமில்ல.. ஜஸ்ட் ஒரு சின்ன சர்ஜரி பண்ணனும்.. அப்புறம் கொஞ்சம் ஹீமோதெரபி கொடுக்கணும்.. ஒரு ஆறு மாச ட்ரீட்மென்ட்.. கம்ப்ளீட்டா சரி ஆயிடுவாங்க…?” என்று கேசுவலாக சொல்ல, இருவர் முகத்திலும் ஈயாடவில்லை..

சற்றே நிலைமையை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட சக்தி, “ஓ.கே.. டாக்டர்…” என்க..

அதுக்கப்புறம் பயம் இல்லைல..! என்று நடுங்கும் குரலுடன் கேட்ட  சடகோபனை டாக்டர் சற்று  பரிதாபத்துடன்  பார்த்தார். 

நோ நோஅதுதான் பிரஸ்ட் எடுத்திடறோம் இல்ல.. அதுக்கப்புறம்தான் ஹீமோதெரபி.. இப்ப இந்த கேன்சர் எல்லாம் கியூரிபை.. கவலைப்பட வேண்டாம்..” டாக்டர் எளிதாக சொல்லிவிடசக்திவேல் உடைந்து போனான்.. ஆனால் ஏற்கனவே உடைந்து போயிருக்கும் அப்பாவைதங்கையை நினைத்து மனதை திடப்படுத்திக் கொண்டுடாக்டரிடம் மேலும் விபரங்களை கேட்டுக்கொண்டு வெளியே வந்தான்..

அம்மா இன்னும் ஐசியூவில்.. வெளியிலிருந்து பார்த்தவனுக்கு கண்களில் கண்ணீர் துளிர்த்தது.. இவன் வந்திருப்பது தெரிந்ததும்சவீதா அவளுடைய அம்மா, அப்பா மூவரும் வந்தனர்.. அவளது அம்மா, அப்பா சடகோபன் இடம் பேசிக்கொண்டிருக்கசவீதா மட்டும் சக்தியிடம் பேசினாள்..

டோன்ட் வரி சக்தி.. இப்ப இதெல்லாம் சாதாரணம்.. ஆன்ட்டிக்கு க்யூர் ஆயிடும்..” அவளது வார்த்தைகள் சற்றே தெம்பை கொடுத்தாலும்கண் முன்னால் இருந்த பிரச்சினைகள் அவனை தலை சுற்ற வைத்தது..

அடுத்த பதினைந்து நாட்கள் அம்மா இல்லாமல் அவர்கள் மூவருமேதிணறிப் போயினர்.. அம்மா என்ற அச்சாணி குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது அந்த நொடி அந்த குடும்பத்தில் இருந்த மூவருமே உணர்ந்தனர்.. கல்லூரியில் படிப்பதால் சமையல் கற்றுக் கொள்ளாமல் இருந்த சாந்தினிஇப்போது மூன்று நேரமும் சமைத்து வீட்டை கவனித்து கொள்வதற்குள் அரும்பாடு பட்டாள்..

எல்லாமே கையில் வாங்கி சாப்பிட்டுஉடுத்திதூங்கி எழுந்த சடகோபனுக்குதனது டிரஸ்ஸில் இருந்து பர்சனல் பைல் வரை எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை..

ஆபரேஷன் முடிந்து கண்விழித்ததும்சரஸ்வதி கேட்ட முதல் கேள்வி, “டேய் சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க..?”

அது பத்தி இப்ப என்ன..சிலநேரம் ஹோட்டலில் வாங்குறோம்.. சிலநேரம் சாந்தினி ஏதோ பண்றா..! சமாளிக்கிறோம். விடு. முதல்ல நீ குணமான போதும்..” அம்மாவை சமாதானம் செய்தான்.

அதுக்கு இல்லைடா. ஏற்கனவே இந்த வியாதிக்கு நிறைய செலவாகும். இப்ப ஹோட்டல்ல சாப்பிட்டாசெலவு ஒரு பக்கம்உடம்புக்கு சேரணும்..

பரவால்லைம்மாசம்பாதிக்கிறது எதுக்கு..செலவழிக்க தானே..!

அதுக்காக ஆஸ்பத்திரிக்காடா செலவழிக்கணும்.. வேற நல்ல விதமா செலவழிச்சா சந்தோஷமா இருக்கும்..!

ஆஸ்பத்திரிக்கு கொடுக்கனாலும் நம்மகிட்ட சம்பாத்தியம் இருக்குன்னு சந்தோஷப்படுங்கம்மா.. எத்தனை பேர் பேர் கிட்ட அதுக்கு கூட வழியில்லாம இருக்கு..” என்று சொல்லவும் சரஸ்வதி அமைதியானார்.

அடுத்து ஒரு வாரம் கழித்து முதல் சிட்டிங்ஹீமோதெரபிகொடுத்தனர். “சூட்டில் இருக்க கூடாது. நேரத்துக்கு நல்ல சத்தான ஆகாரம் சாப்பிடவும். ஜூஸ் நிறைய குடிக்கணும். ஏன்னா ஹீமோ கொடுக்கும்போது கெட்ட செல்கள் அழியும் போதுநல்ல செல்களும் சேர்ந்த அழிந்துவிடும். அதனால அது உடம்பை  உருக்கும்.. அதுக்கு ஏத்த மாதிரி மருந்து மாத்திரை கொடுப்பாங்க. நல்ல ரெஸ்ட் தேவை.. இப்படி ஏகப்பட்ட இத்தியாதிகள்.. டாக்டர் சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்..

வீட்டுக்கு அம்மாவை கூட்டி வந்துதனியாக ஒரு அறையில் சௌகரியமாக தங்க வைத்துநேரத்துக்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது முதல் இரண்டு நாள் சரியாக இருந்தது..

அடுத்த நாள் முதல் சாந்தினி கல்லூரிக்கு செல்ல வேண்டும். சடகோபன் வேலைக்கு செல்ல வேண்டும், என்றதும் திணறிப் போயினர். வேலைக்கு ஆள் பார்த்து வைத்தனர். எத்தனை சம்பளம் கொட்டிக் கொடுத்தாலும் சரியான முறையில் அம்மாவின் பராமரிப்புசமையல் எதுவும் செட் ஆகாமல் திணறியது அந்த குடும்பம்..

அம்மா பேசாம கல்யாணத்தை சீக்கிரம் வச்சிடலாம். சவீதா வந்து ஒரு ஆறு மாசம் ஹெல்ப் பண்ணாஎல்லா பிரச்சினையும் சால்வ் ஆயிடும். அப்புறம் நான் அவளை கூட்டிட்டு பாரின் போறேன்..

டேய் அதெல்லாம் வேண்டாம்.. கல்யாணம் குறித்த தேதியில்  நாலு மாசம் கழிச்சே  நடக்கட்டும். அவங்களுக்கும் ஒரே பொண்ணு. நல்லா கல்யாணம் பண்ணனும்னு ஆசை இருக்கும். அதை நாம கெடுக்கக் கூடாது.. அம்மா சொல்லிவிட, அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஏதாவது ஆள் கிடைக்குமா என்று  சவீதாவிற்கு போன் பண்ணி விசாரித்தான்..

நான் அம்மாகிட்ட விசாரிச்சு சொல்றேன்..!” என்றவள் தனது அம்மா வசந்தியிடம் கேட்டாள்..

அம்மா வீட்டோட வேலைக்கு ஆள் யாரவது கிடைக்குமான்னு  கேக்குறாங்க.. உனக்கு யாரையாவது தெரியுமா..?”

யாரைத் தெரியும்..?” என்று ஆரம்பித்த வசந்திக்கு டக்கென்று ஒரு யோசனை உதயமாகியது.

நம்ம தேன்மொழியை சொல்லலாமா..!” என்றாள் மகளிடம்.

என்னம்மா சொல்றீங்க..?” என்று கேட்ட மகளிடம்..

ஆமாண்டிஅப்பாவோட ஒண்ணு  விட்ட தங்கச்சி கிராமத்தில் ஒருத்தி இருக்கா இல்ல.. அவளுக்கு ரெண்டு பொண்ணு. அப்பா இல்ல. ஒரு ஓட்டை வீடு இருக்கு. அந்த பொண்ணுகளுக்கு கல்யாணம்  பண்ணி வைக்கணும்.. தங்கச்சி புலம்புதுன்னு  அப்பப்ப சொல்லிட்டே இருப்பாரு.. நான் ஆப் பண்ணி வச்சிருக்கேன். யார்கிட்ட இருக்கு பைசா..ஆனா உங்க அப்பா சென்னைக்கு வந்து வேலை பாக்குறதுக்கு தங்கச்சி மாப்பிள்ளை தான் உதவியாய் இருந்திருக்கிறார்.. அந்த நன்றி அப்பப்ப தலைதூக்கும்.. 

என்னைக்காவது ஒருநாள் சொல்லாம கொள்ளாம ரூபாயைக் கொண்டு போய்க் கொடுத்து கூடாது.. அந்த பொண்ணு ஏதோ நர்சிங் படிச்சிருக்கு. பேசாம இவங்க கிட்ட நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி விடலாம்.. அவங்களுக்கும் ஒரு வருமானம் வந்த மாதிரி இருக்கும். இந்த பொண்ணு கல்யாணத்துக்கு கொஞ்சம் ரூபா சேத்துடலாம்…” பெரிய திட்டமாக வசந்தி யோசித்தாள்.

சரிமா, எதுவா இருந்தாலும் ரெண்டு நாள்ல சொல்லு.. அப்பதான் அவர் ஃபாரின் கிளம்புவார்..” சக்தி ஃபாரின் கிளம்புவது தடை ஏதும் இருக்கக்கூடாது என்று யோசித்த சவீதா அம்மாவிடம் கூறினாள்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 6 சராசரி: 4.7]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

27. எனதழகே[கா]

அன்பின் அரசனே…. 37