in , , , ,

8) என்னுயிர் நீதானே

அத்தியாயம் 8

                                  

       

                          💗என்னுயிர்💗

ஷரண்யா சீமானிடம் நடந்தவை அனைத்தும் கூறினால்.. அப்போது ஷரண்யா, “நான் கிளாஸ் க்கு போன, அப்போ லதா மேம் வந்து ஒரு வாலின்டீர்ஸ் வேனும்னு சொன்னாங்க, நானும் அந்த கருத்து கந்தசாமிகிட்ட இருந்து எஸ்கேப்ஆக, நான் வர மேம்னு போன. அப்பறம், ஒரு கும்பல் வந்தது..

அதுல ஒருத்த சொன்னா, டேய் இங்க பாருங்கசுடிதார் போட்ட ஆயம்மா., அத கேட்ட கூட இருக்குறவனுங்களும் சிரிச்சானுங்க.

நான் பொறுமை யா, Welcome சொல்லிஅங்கிருந்து போகும் போது…

அந்த லூசு..  ‘ஹிம்.., இதான் Welcome பன்ற லட்சனமா ஏதாவது என்டர்டைன்மன்ட் பன்னிட்டு போ அப்ப தான் உன்ன விடுவோம்’ என்று சொல்ல, அங்கிருந்த மாணவிகளும்ஆமாம் என கூச்சல் போட… 

சில மாணவர்கள், ‘டேய் குழந்த பாவம் நம்ம லவரவேற்க தான் வந்தா நீங்க என்னடா அவள இப்படி வச்சி கலாய்க்கிரீங்க…’

‘அய்யோ, ஞானபழம். நீங்க சும்மா இருங்க….’

‘சரி, நீ இப்ப ஏதாவது உன் திறமையை காட்டு. உன்ன விட்ருவோம்’ என்று சீனியர் கும்பல் கேட்க… ஷரண்யா முழித்து கொண்டிருந்தாள்…

‘சரி விடு.. உன் நேம் என்ன, எந்த இயர்’ என்று அவர்கள் கேட்க..

‘என்நேம்ஷரண்யா, second year உங்க department தான் …..’

‘ஓ…என் பெயர் வினோத், இவங்க தீபக், சஞ்சீவ்,மேகா,ராகுல், நாங்க எல்லாரும் பிரண்ட்ஸ்….’

‘அப்படியா, ஓகே சீனியர் நாம அப்பறம் பார்க்கலாம்’ என்று அங்கிருந்து நகர…

வினோத் ‘அதெல்லாம் முடியாது.. என்ன ஒரு சீனியர்க்கு மரியாதையே கொடுக்கமாட்டேங்கிற, இரு நா மேம் கிட்ட சொல்ல போரேன். இந்த பொண்ணு எங்கள ரேக்கிங் பன்றான்னு சொல்லுவ, என்ன பிரண்ட்ஸ்?’ அனைவரும் ஆமாம் என கூச்சல் போட..

ஷரண்யா mind voice ல் ‘அட பாவிங்களா, இது உங்களுக்கே அடுக்குமா? எல்லாம் எருமைமாடு மாதிரி இருக்காங்க.. இவங்கள நான் ராக்கிங் பண்றனா, எல்லாம் என் நேரம்.. ஒழுங்கா கிளாஸ்ல  தூங்கியாச்சி இருந்திருப்பேன், வசமா இதுங்ககிட்ட மாட்டிகிட்ட……’

‘என்ன யோசிக்கிற பதில் சொல்லு, பாட்டு பாட போறியா? டான்ஸ் ஆட போறியா….?’

‘ரெண்டும் இல்ல சீனியர், நான் ஒரு ஜோக் சொல்லலாம்னு இருக்கேன்  சொல்லட்டுமா…..?’

‘பரவாயில்லையே, உமனா மூஞ்சி மாதிரி இருக்க.. உனக்கு ஜோக் எல்லாம் சொல்ல தெரியுமா சரி சொல்லு….’

’ஓகே ரெண்டு பேரு த்வின்ஸ்.. ஒரே கிளாஸ் ல படிக்கிறாங்க.. டீச்சர் ஒரு பேப்பரை எடுத்து உங்க அப்பா பேரு எல்லாம் எழுதும் சொல்றாங்க, அதுக்கு அந்த த்வின்ஸ் என்ன பண்றாங்கனா இவன் ஒரு அப்பா பேரு அவன் ஒரு அப்பா பேரு எழுதுறாங்க.. ஏன்…..?’

‘அய்யிய்ய, என்ன நீ  த்வின்ஸ் னு சொல்ற எப்படி? அப்பா பேர மாத்தி, மாத்தி எழுதறது ஏன்…..?’

‘எதுக்கு னா, ஒரே பேர் இருந்தா டீச்சர் காப்பி அடிச்ச னு சொல்ல கூடாது ல..’

என்று சொல்லி முடித்து அனைவரையும் பார்க்க, அவளை கொலை வெறியில்

பார்த்தனர்…..

அப்போது வினோத் ‘நீ இரண்டு சொட்டு கண்ணீர் விட்டிருந்தா கூட உன்ன

அனுப்பிருப்போம், ஆனால் ஜோக்னு ஒன்னு சொன்னல.. அதுக்காகவே உனக்கு தண்டனை’ என்று சொல்ல.

அந்த நேரம் கல்லுரிஆசிரியர் அங்கே வந்து ‘ஷரண்யா, இங்க என்ன பண்ற? கிளாசுக்கு நீ போ. நான் பார்த்துக்குறேன், இங்க என்ன நடக்குது? 

உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்காக செகண்ட் இயர் பொன்ன அனுப்புனா, நீங்க அவள வெச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க? அந்த பொண்ண பத்தி உங்களுக்கு தெரியாது. அந்த பொண்ணோட லெவலுக்கு நீங்கெல்லாம் எங்கேயோ, அவ இந்த காலேஜ் டாப்பர், காலேஜ் பர்ஸ்ட் இயர்லியே யுனிவர்சிடி ரேங்க் வாங்கினவ.  அதனாலதான் ஸ்காலர்ஷிப்ல படிக்க வைக்கிறாங்க, அப்படிபட்ட பொண்ணுகிட்ட நீங்க சீப்பா பிகேவ் பன்னிட்டு இருக்கீங்க. அவ ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா, அவ்வளவு தான்’ என்று அந்த ஆசிரியர் ஷரண்யாவை பற்றி சொல்லி முடித்து, இப்ப தான் 

நீங்க புதுசா ஜாயின் பன்னிறிக்கீங்க சரி.. வினோத், தீபக் நீங்க ஏற்கனவே 

படிச்சவங்கதான. உங்களுக்கு நம்ம காலேஜ் பத்தி தெரியும்ல….

‘மன்னிச்சிடுங்க மேடம், நான் தெரியாம தப்பு பண்ணிட்டோம். இனிமேல் நடக்காது.. 

சரி, கொஞ்ச நேரம் கழிச்சி உங்கள் புரோகிராம் இருக்கு சீக்கிரம்  

வாங்க…முக்கியமா வினோத் நீ….’ ‘ஓகே மேம்…..’

அங்கிருந்து ஆசிரியர் சென்ற பிறகு ‘போச்சு மச்சான் ஏதாச்சும் ஒரு ஜூனியர்கிட்ட  என்டர்டைன்மனன்ட்… பண்ணலாம்னு பார்த்தா, இந்த நான் வந்து கேட்டுருச்சு. ஆனா ஒன்னு மச்சான், அந்த பொண்ணு ஜோக் ஒன்னு சொல்லுங்க  பாரு.. என்நெஞ்சு வெடித்துச் சிதறி போச்சுடா.  ச்சி, இப்படியா ஜோக் சொல்லுவா….’

‘சரி விடு டா மச்சான், இன்னொரு வாட்டி சிக்காமலா போவா விடு…’

‘சரி  வா, ஏதோ ப்ரோக்ராம் இருக்கு அத என்ஜாய் பன்னுவோம். உனக்கு என்னப்பா நீ என்ஜாய் பண்ணுவே, உனக்கு ப்ரைஸ் கொடுப்பாங்க எனக்கு அப்படியா…’

‘முதல் டிகிரியும் ஒரு காலேஜ்ல படிச்ச இரண்டாவது இருக்கும் அதே காலேஜ்ல சேர்ந்தா, இந்த மாதிரி பிரைஸ்லாம்  கடைக்கும் மச்சான்… சரி விடு, நம்ம காலேஜ் முடிச்சு இரண்டு  வருஷம் கழிச்சு எதுக்கு மறுபடியும் போய் சேர்ந்த .? ’

‘எனக்கு வீட்ல போரேன்ேன்டிக்குது.. அண்ணா கூட வேலைக்கு போனு அம்மா தொல்ல, நான் ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். எனக்கு சுத்தமா செட் ஆகல.. அதான், படிக்கிறேன்னு சொல்லிட்டு இந்த ஊருக்கு  ஓடி வந்துட்டேன். இப்ப என்ன அதுக்கு?…..’

‘என்ன அதுக்கா… நீ மட்டும் படிக்க வேண்டி தானே. எதுக்குடா என்ன கூட்டிட்டு வந்த, எனக்கு அடுத்த வருஷம் கல்யாணம் தானே.. இப்படி  கல்யாண மாப்பிள்ளை போய் உட்கார்ந்து படிக்க வைக்கிறியே! உனக்கே அடுக்குமா பாவி பையன்..’ 

‘இப்ப என்னடா  கல்யாணமும் பண்ணிக்கோ, படிப்பையும் பாரு  …’

‘போடா லூசு…’

‘கோபிக்காத வா போலாம்…’

அரங்கத்தில் அனைத்து மாணவர்களும் அமர்ந்தபின் கல்லூரி முதல்வர் வந்து ‘நாம் இன்று விருது வழங்கப் போகிறோம் போன வருடம் சிறந்த மாணவராக இருந்த மிஸ் ஷரண்யா அவர்களுக்கு, அந்த விருதை தரப்போகிறது இதே 

கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் படித்து மீண்டும் கல்லூரியில் பீஜீ

சேர்ந்து இருக்கும் மிஸ்டர் வினோத் ராமச்சந்திரன் அவர்கள்……’

வினோத் விருதை எடுத்து ஷரண்யா அளிக்கும்போது மைக்கை எடுத்து “இந்த மாணவர் வெறும் படிப்பு மட்டும் இல்ல, நகைச்சுவையிலும் சிறந்த வல்லவர் இவங்க திறமையை நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன்… உங்களுக்கும் அந்த திறமையை பார்க்க  ஆசையா இருக்கா?” என்று கேட்க,அனைவரும் ஆமாம் என….

ஷரண்யாவிற்கு தலையே சுற்றி விடும் போல் இருந்தது வேறு வழி இன்றி ஒரு 

ஜோக் சொன்னாரள்.. “ஹோட்டல்ல ஒருத்தர் வந்து டேபிளில் உட்கார்ந்து இருந்தாரு.. சர்வர் வந்து அவருகிட்ட சார் என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டார், அதற்கு அந்த ஆளு இதெல்லாம் ஹோட்டலாக சொல்லிட்டு போய்ட்டாரு ஏன்…..?”

அனைத்து மாணவர்களும் ஏன் என்று கத்த.. ஷரண்யா நானே சொல்றேன் “அவர் ஒண்ணுமே சாப்பிடலை அவர்கிட்ட போய், என்ன சாப்பீரிங்கனு கேட்டா யாருக்கு தான் கோபம் வராது” என்று சொன்னால்…. 

அனைத்து மாணவர்களும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார் கல்லூரி முதல்வர் 

முதல் கொண்டு…. ஷரண்யா வினோத்தை நக்கலாக பார்க்க வினோத்திற்கு தோல்வியே கிட்டியது. ‘ச்ச, அசிங்கப்படுத்தலாம் பார்த்த சிரிக்க ஆரம்பிச்சிடாங்க, எனக்கே சிரிப்பு வந்தது. இந்த மாதிரிலாம்  ஜோக் சொல்றா பாரு, இந்த பொண்ணு’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு சிரித்தான். அவள் சிரிப்பை கண்டு மேலும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்; நல்லாதான் இருக்கா….. 

கல்லூரி முடிந்த பின் ஷரண்யா சென்று கொண்டு இருக்க வினோத் அவளை வழிமறித்து ‘கடி ஜோக் வாங்க, வாங்க..’ ‘சீனியர் இப்படிலாம் பேசாதீங்க, என்ன  நீங்க காலைல வந்ததிலிருந்து  என்கிட்ட இப்படி பண்றீங்க…’ 

‘நான் என்னம்மா பண்ண, சாதாரணமாக நம்ம டிபார்ட்மன்ட் பொண்ணுனு பாத்தா ஓவரா பன்ற..’

‘நீங்க பார்க்கிற பார்வை பேசுற பேச்சு சுத்தமா எனக்கு பிடிக்கல …’

‘இது என்ன வம்பாப் போச்சு, எல்லாம் ஒரு காலேஜ் சீனியரானா இப்படித்தான் இருப்பான். நீ என்னடா இப்படி பண்ற காலேஜ் லைப் 

என்ஜாய் பண்ண மாட்டியா?’ 

‘என்ன என்ஜாய்மென்ட் எல்லாம் பிடிக்காது.. ஒன்லி படிக்க தான் தெரியும். நான் படிக்க தான் வந்த, சரிவழி விடுங்க  நான் வெளியே போனோம்…’

’எங்க போற பியூட்டி பார்லர், ஷாப்பிங்கா….’

‘இல்லையா, நான் வேலைக்கு போறேன்’ 

‘வேலைக்கு போறியா ….?’

‘ஆமா, நான் பார்ட்  டைம்ல வேலை பார்த்துக்கிட்டே படிக்கிறேன். உங்கள 

மாதிரி காரிலேயே வந்து காரில் வீட்டுக்கு போற ஆளு நான் இல்லபா’ என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்…..

இவை அனைத்தையும் ஷரண்யா சொல்லி முடிக்க ஷிவானி வயிறு 

பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.  அவள் மட்டுமில்ல பின்னால் இருந்த லட்சுமி அம்மாவும் அவரது கணவரும் தான் “ஏன் பாப்பா, இப்படியா பண்ணுவ.. நீ ஜோக் சொல்லுவியா, தயவு செஞ்சு 

எங்களுகெல்லாம் சொல்லாதம்மா. நா சில பேர காட்ர எனக்கு அவங்கள சுத்தமாபிடிக்காது. அவங்க கிட்ட ஜோக் எல்லாம் சொல்லு, சத்தியமா என் பக்கம் வரவே மாட்டானா” என்று லட்சுமியின் கணவர் கதறி கதறி சிரிக்க ஷரண்யாவுக்கு கோபம் தான் வந்தது…

“கோச்சிக்காத ஷரண்யா, சரிப்பா டைம் ஆவுது. நாம இப்ப நான் ஆரம்பிச்சா தான் எல்லாரும் வர ஆரம்பிப்பார்கள். சீக்கிரம் வா, இல்ல அந்த நேரத்துக்கு அது வேணும், இது வேணும்னு கேட்டாங்க.. நமக்கு தலைவலி தான் வரும்” என்று  ஷிவானி சொல்ல இருவரும் சேர்ந்து சிற்றுண்டியை தயாரித்துக் கொண்டிருந்தனர்…

இருவரும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டு வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்த லட்சுமி அம்மா “என்னங்க இந்த இரண்டு 

புள்ளைகளும் எவ்வளவு நல்லா இருக்காங்கல, இவங்க  நல்ல மனசுக்கு 

ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் …”

“ஆமாண்டி, கூட பிறந்த அக்கா தங்கச்சி அடிச்சுப்பாங்க.. இவங்க எங்கேயோ இருந்து  இப்ப ஒன்றாயிருந்து, எவ்ளோ அழகா வேலை பார்க்குறாங்க.. அதுவும்  படிச்சிகிட்டே, எத்தனை பசங்க இந்த  மாதிரி செய்றாங்க என் கண்ணே பட்டுரும்…”

“ஆமாங்க, இந்த புள்ளைங்க நல்லா இருக்கணும். இவங்களுக்கு நல்லதுதான் நடக்கும்.. அந்த கடவுள் கிட்ட நான் வேண்டிப்ப.  அதே நடக்கும்….”

தொடரும்……

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

காவ(த)ல் கொண்டேனடி கண்மணி 32

26. எனதழகே[கா]