in

அஸ்தமிக்கும் பொழுதுகள் 12

நிலவன் மூலமாக விசயத்தை கேள்வி பட்ட யாதவ் கிருஷ்ணன் மருத்துவமனைக்கு வந்து விட்டான். ஜீவிதா பணத்தை கட்டியதோடு ஒதுங்கிக் கொண்டாள். சேந்தனை நினைத்து வள்ளியம்மையும் நறுமலரும் கண்ணீர் வடிக்க நிலவனும் மைமூனும் ஆறுதல் கூறினர்.

கார்த்திக் ஜீவிதாவிடம் வந்தான்.

“கார்த்திக் எனக்கொரு ஹெல்ப் பண்ணுறியா? அந்த வீட்டுக்கு திரும்ப போக எனக்கு விருப்பம் இல்ல. என் லக்கேஜ் எல்லாம் வெளிய தான் இருக்கு. எடுத்துட்டு வந்துடுறியா?” – ஜீவிதா.

“இந்த நிலமையிலயும் போய் தான் ஆகனுமா?”

“எனக்கு அங்க இதுக்கு மேல இருக்க முடியாது. ப்ளீஸ்”

அதற்கு மேல் கார்த்திக் வாதம் செய்யவில்லை. அவன் கிளம்ப அவனோடு வெளிய வந்தாள். கார்த்திக் காரை எடுக்க செல்ல அவள் முன்னால் யாதவ் வந்து இறங்கினான். அவனை பார்த்ததும் பதறிப்போய் ஜீவிதா அவனிடம் ஓடினாள்.

“ஹேய் இங்க என்ன பண்ணுறீங்க? யாராவது பார்த்துட போறாங்க. கார்ல உட்காருங்க”

“உங்க அப்பாவுக்கு…”

“யார் சொன்னா?”

“நிலவன் தான்”

“இப்போ ஒரு பிரச்சனையும் இல்ல. நீங்க முதல்ல உள்ள உட்காருங்க” என்று அவன் வந்த காரில் அவனை பிடித்து உள்ளே தள்ளி விட்டாள்.

அவன் அமர்ந்து விட மறு பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள்.

“லூசா நீங்க? இப்ப உங்கள தெரிஞ்ச யாராவது பார்த்துட்டா மொத்த ப்ளானும் சொதப்பிடும்”

“உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. செலவாகும் னு தான் பார்க்க வந்தேன்”

“அதெல்லாம் எல்லா பில்லும் கட்டியாச்சு”

“கட்டியாச்சா?”

“ஆமா. ரெண்டு நாள்ல ஆப்ரேஷன்”

“அதுக்கும் கட்டியாச்சா? அவ்வளவு பணம் உங்க கிட்ட இருந்துச்சா?”

“ஏன் என்ன பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு? அதெல்லாம் எல்லாத்தையும் கொடுத்துட்டு பத்து லட்சத்த கையில கொடுத்துட்டேன். இனி நிலா எல்லாத்தையும் பார்த்துப்பேன். நான் இங்க இருந்து அப்படியே கிளம்பனும்”

“ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே?”

“என்ன கேட்க போறீங்க னு தெரியும். நான் என்ன வேலை பார்க்குறேன் னு தான? ஏரோனாட்டிகல் முடிச்சுட்டு ஆர்டிஃபீஸியல் இன்டலிஜண்ட்ஸ் படிச்சுட்டு இஸ்ரோல வொர்க் பண்ணுறேன். இப்போ சந்தேகம் போச்சா?”

“உங்க வயசு ஒரு இருபத்தி அஞ்சு இருக்குமா?”

“ஏன்?”

“இவ்வளவு சின்ன வயசுல அவ்ளோ பொறுப்பான வேலையில இருக்கீங்களே னு சந்தேகம்”

“நான் வேணும் னா என் ஐடி கார்ட காட்டட்டுமா?”

“ச்சே ச்சே வேணாம். சும்மா தோனுச்சு கேட்டேன்”

“அரை வேக்காடு ஜீனியஸா இருக்காளே னு தோனுதா?” என்று கேட்டு விட்டு ஜீவிதா சிரித்து வைத்தாள்.

உண்மையில் அப்படி தான் யாதவ் நினைத்தான். அவள் கண்டு பிடித்து விட்டதை நினைத்து ஒரு மாதிரியாக இருந்தது.

“இப்போ தான் உங்க தம்பி என் லக்கேஜ் எடுக்க கிளம்பினார். அவர் வந்ததும் ஒன்னா ஹோட்டல் போகலாம். அது வர கார விட்டு வராதீங்க. இல்ல அவ்ளோ தான்” என்று கூறி விட்டு கீழே இறங்கினாள்.

“ஆமா சாப்டீங்களா?” என்று யாதவ்வை பார்த்து கேட்டாள். அவன் மறுப்பாக தலையசைத்தான்.

“இங்க கேண்டின் இருக்கும் சாப்டுக்குறேன்” – யாதவ் கிருஷ்ணன்.

“ஒன்னும் வேணாம். எல்லாருக்கும் சாப்பாடு வாங்க தான் வந்தேன். உங்களுக்கும் இங்கயே கொண்டு வரேன். வெளிய வராதீங்க” என்று கூறி விட்டு வேகமாக சென்று விட்டாள்.

சில நிமிடங்களில் எல்லோருக்கும்‌ உணவை வாங்கிக் கொண்டு வந்தாள். யாதவ்விற்கு தேவையானதை அவனிடம் கொடுத்து விட்டு மருத்துவ மனைக்குள் சென்றாள்.

தூரமாக நின்று கொண்டு நிலவனை அழைத்து‌ உணவை கொடுத்தாள். 

“எல்லாரையும் சாப்ட வை. நான்‌ மைமூன் அக்காவ கூப்பிட்டதா சொல்லு” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றாள்.

மருத்துவ மனையில் வரவேற்பு பகுதியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்களில் மைமூன் வந்தார். கண்ணில் அனல் பறக்க அவர் பார்க்க ஜீவிதா‌ புன்னகையுடன் “வாங்க சாப்டலாம்” என்று அழைத்தாள்.

“ரொம்ப முக்கியம். எனக்கு ஒன்னும் வேணாம்”

“ஏனாம்?”

“உன் மேல கோவமா இருக்கேன்”

“அது தான் ஏன்?”

“பெரியவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா?”

“அவங்கள மரியாதை குறைவா எதுவும் நான் பேசலையே? எனக்கு நடந்த அநியாயத்த தட்டி கேட்டேன். அது தப்பா?”

“ஆனா உன் கேள்வி அவங்கள காய படுத்திடுச்சே. பாரு ஹாஸ்பிடல் வர வந்துட்டாங்க”

“உண்மை கசந்தா நான் பொறுப்பு இல்ல. சாப்டுங்க”

ஜீவிதா நீட்டியதை முறைப்போடு வாங்கிக் கொண்டார்.

“அவங்க கிட்ட போய் நீங்க நல்ல அம்மா இல்ல. எனக்கு பிடிக்காத இட்லிய சாப்ட கொடுத்தீங்க னு சண்ட போடுற? ஏன் சொல்ல வேண்டியது தான? எனக்கு இது புடிக்காது மா னு. வாய்ல கொழுகட்டயா வச்சு இருந்த?”

“இந்த பதினஞ்சு வருசத்துல எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது னு உங்க கிட்ட வாய திறந்து சொல்லி இருக்கனா? என் முகத்த வச்சே கண்டு பிடிச்சுருவீங்க. அதான அம்மா பாசம்?”

“என்ன இருந்தாலும் நானும் அவங்களும் ஒன்னா? அவங்க தான் உன்ன பெத்தவங்க”

“என்ன தான் கிருஷ்ணன தேவகி பெத்தாலும் யசோதா பிள்ள னு தான் சொல்லுவாங்க”

“உன் பாயிண்ட்க்கே வரேன். கிருஷ்ணன் பேருக்கு பின்னாடி வாசுதேவ் தான போட்டாங்க. நந்தன் மகாராஜாவா இருந்தும் அவரு பேர போடலயே?”

“உங்களுக்கு என்ன மடக்க எப்படி தான் பாயிண்ட் கிடைக்குமோ தெரியல. இதுல நான் ஜீனியஸ் னு ஊரு நம்பிட்டு இருக்கு” என்று ஜீவிதா தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“அதெல்லாம் விடு. நீ அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு தான் ஆகனும்”

“இத விடுறீங்களா? நானே இன்னைக்கு தான் எல்லாத்தையும் தொலச்சுட்டோம் னு நிம்மதியா இருக்கேன். நீங்க வேற அதயே பேசி கிட்டு. முதல்ல நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?”

“உன்ன இந்த ஊருக்கு அனுப்பிட்டு அங்க நிம்மதியா எப்படி இருக்கது? அதான் பார்க்க வந்தேன்”

ஜீவிதா உடனே சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

“இப்போ என்ன சிரிப்பு உனக்கு?”

“இல்ல.. வெறும் ஒரு வாரம் இவங்கள நம்பி என்ன உங்களால விட முடியல.. இதுல போதனை வேற.. இவங்க பெத்தவங்க மன்னிப்பு கேளு னு”

“ரெண்டுமே உண்மை தான்”

“ஆமா ஆமா.. என்னா அடி… கன்னம் ஐஸ் மட்டும் வைக்கலனா சிவந்து போயிருக்கும்”

“நீ பேசுனது தப்பு னு தோனுச்சு. இனியும் நீ தப்பு பண்ணா அப்படி தான் அடிப்பேன்.”

“இனி பண்ண ஒன்னும் இல்ல”

ரெண்டு பேரும் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டனர். குப்பைகளை குப்பை தொட்டியில் போட்டு விட்டு கை கழுவிக் கொண்டனர்.

“வா.. அங்க உன் அம்மா சாப்டாங்களா னு தெரியல. போய் பார்ப்போம்” என்று மைமூன் கூற “அத அவங்க பிள்ளைங்க பார்த்துப்பாங்க. முதல்ல நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? அத சொல்லுங்க” என்று கேட்டாள்.

“மெலினா போன் பண்ணா”

“போட்டுக் கொடுத்தாட்டாளா நான் லீவ் எடுத்தத”

“தாரண்யா விபினும் போன் பண்ணாங்க”

“அட பைத்தியங்களா.. யாருக்கும் சொல்லாதீங்க னு சொன்னேன். இருக்கு அதுங்களுக்கு”

“நீ எனக்கு பதில் சொல்லு. என்ன தைரியத்துல இங்க இன்னும் இருக்க நீ? உடனே கிளம்பு என் கூட”

“இப்ப தான் பெத்தவங்க அது இது னு சொன்னீங்க? உடனே கூட்டிட்டு போக பார்க்குறீங்க?”

“எல்லாம் விளையாட்டு தானா? பேசாம கிளம்பு”

“முடியாது கா.‌ பல வருச பிரச்சனைக்கு பழி வாங்க இது தான் சான்ஸ். விட்டுட்டு எல்லாம் வர முடியாது”

“புரியல”

“இங்க பேச வேணாம். கார்ல பேசலாம்” என்று யாதவ் இருந்த காருக்கு அழைத்து சென்றாள்.

யாதவ் அப்போது தான் சாப்பிட்டு முடித்து விட்டு அமர்ந்து இருந்தான். ஜீவிதாவோடு வேறு யாரோ வருவதை பார்த்து விட்டு புருவம் சுருக்கினான்.

“சாப்டாச்சா?” – ஜீவிதா.

“ம்ம்” – யாதவ்.

“உள்ள உட்காருங்க” என்று மைமூனை காரில் அமர வைத்து விட்டு அவளும் அமர்ந்து கொண்டாள்.

“இவங்க எனக்கு அக்கா. இவங்கள பத்தி அப்புறமா உங்களுக்கு விளக்கமா சொல்லுறேன்” என்று யாதவ்விடம் கூறினாள்.

மைமூன் “இவரு யாரு?” என்று கேட்க “இவரா? இவர் தான் கதையோட வில்லன்” என்றாள்.

யாதவ் அவளை முறைத்துக் கொண்டே “ஆமா.. என்ன தான் வில்லன்னு நினைச்சுட்டு இருந்தாங்க” என்று கூறினான்.

“ஆனா கடைசில தான் தெரிஞ்சது இவரு டம்மி வில்லன் ஒரிஜினல் வில்லன் வேற ஆளு னு”

“அந்த ஒரிஜினல் வில்லன பிடிக்காம என்ன பிடிச்சு கார்ல உட்கார வச்சசுருக்காங்க”

“அட பொறுங்க பா. அவன பிடிச்சுடலாம்”

“ரெண்டு பேரும் தெளிவா என்ன விசயம் னு சொல்லிட்டு பேசுங்க” – மைமூன்.

“நான் சொல்லுறேன். இதுக்கெல்லாம் காரணம் அந்த வீட்டுல ஒரு கிழவி இருக்கே அது தான்”

“ஜீவி மரியாதையா பேசு”

“அதெல்லாம் முடியாது. நீங்க முதல்ல கதைய கேளுங்க. சும்மா இருக்க மாட்டாம என் ஜாதகத்த தூக்கிட்டு போய் எவனோ ஒரு தருதலை கிட்ட காட்டி தொலைச்சுருச்சு. அந்த தருதலை முதல்ல நறுமலர் பிறக்குற வர பிரிஞ்சு இரு னு சொல்லிட்டான். அதோட விடாம திரும்ப போய் அவன் கிட்ட காட்டி இருக்கு.

அவன் என்ன சொல்லிருக்கான் தெரியுமா? இந்த பிள்ள உன் பேத்திக்கு மட்டும் இல்ல உன் உயிருக்கும் ஆபத்து. இருபது இருபத்தஞ்சு வருசத்துக்கு இந்த பிள்ளைய வீட்டுல விடாத னு சொல்லிருக்கான்.

தான் உசுரு தான் வெல்ல கட்டி னு முடிவு பண்ணி அந்த கிழவி என்ன பெத்தவங்க கிட்ட இருந்து என்ன நிரந்தரமா பிரிச்சு வச்சுடுச்சு. அப்பவாது என்ன பெத்தவங்களுக்கு மூளை வேலை செஞ்சு வேற ஜோசியர தேடி போயிருக்கலாம்.

அந்த கிழவி சொல்லுறத முழுசா நம்பி என்ன ஒதுக்கிட்டாங்க. கதை இதோட நிக்கல. திரும்ப இந்த கிழவி என் ஜாதகத்த எடுத்துட்டு போய் அந்த தருதலை கிட்டயே கொடுத்துருக்கு.

இந்த பொண்ண கடைசி வர எங்க கிட்ட வரவிடாம பண்ணிடலாமா இல்ல வேற எதுவும் வழி இருக்கா னு கேட்ருக்கு. அவனும் ஜாதகத்த வாங்கி வச்சுட்டு ஒரு வாரம் கழிச்சு வாங்க னு சொல்லிட்டான்.

ஒரு வாரத்துக்கு அப்புறம் போனா அவன் அங்க இல்ல. அப்பவே தெரிய வேணாம் அவன் எப்படி பட்ட ஆளு னு. அத கூட புரிஞ்சுக்க தெரியாம இந்த கிழவி என்ன யாரும் பார்க்கவே கூடாது னு கட்டளை போட்டு வச்சுடுச்சு.

ஓடுனானே அந்த ஜோசிய காரன் அவன் தான் வில்லன் னு நினைச்சுட்டு அவனுக்கு வலைய போட்டு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க இவங்க எல்லாம்.

தெரியாம தான் கேட்குறேன் மிஸ்டர்.யாதவ் கிருஷ்ணன். நான் அரைவேக்காடா? நீங்க பிடிக்க நினைச்ச ஆளு டம்மி பீஸு. உங்களுக்கும் மூளை வேலை செய்யல உங்க கூட சுத்துற மூணு பேருக்கும் மூளை வேலை செய்யல. இதுல ஒருத்தர் போலிஸ் வேற.

உங்கள எல்லாம் வச்சுகிட்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாது னு மூணாவது நாளே தெரிஞ்சு கிட்டேன். அதான் வேற ப்ளான் போட்டேன்.

நீங்க தேடுற ஆளு நேத்து நைட் காணாம போயிருப்பானே? தூக்குனது என் ஆளுங்க. அவன காணோம் னு தெரிஞ்சதும் உங்க மேல தான் சந்தேகம் வரும் னு தான் உங்கள நேத்து காலையிலயே அரஸ்ட் பண்ணுற போல செட் பண்ணேன்.

உண்மையான கொலை காரன் இவன் இல்ல. இவனோட குரு. அவனும் இங்க இல்ல. கேரளா பார்டர்ல இருக்கான். இப்போ உங்க மாமா கூட அங்க தான் இருக்கார்.

அவரு அந்த கொலை காரன் கிட்ட மாட்டுறதுக்கு முன்ன என் ஆளுங்க பிடிச்சு காப்பாத்த ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. அவர முடிஞ்சா பிடிக்க ஹெல்ப் பண்ணுங்க.

ஆல்ரெடி நீங்க தேடுற விசயம் அந்த இடத்துக்கு லீக் ஆகிடுச்சு. எந்த நேரம் வேணா உங்கள உண்டு இல்லனு ஆக்கிடுவாங்க. அதுக்கு தான் இந்த அரஸ்ட் டிராமா.

அத விடுங்க. அந்த தருதலை எப்படியோ என் ஜாதகத்த அதோட குருகிட்ட காட்டி இருக்கு. அத பார்த்துட்டு அந்த குரு என்ன சொல்லி இருக்கான் தெரியுமா?

இந்த பொண்ணு பலி கொடுக்க சிறந்த கன்னி னு சொல்லிருக்கான்”

பொறுமையாக கேட்டுக் கொண்டே வந்த இருவரும் கடைசி வார்த்தையில் அதிர்ந்து போயினர். ஜீவிதா அவனை திட்டும் போது கூட யாதவ் அவ்வளவு கோபப்படவில்லை. அவளுக்கு தெரிந்ததை கேட்கும் ஆர்வத்தில் இருந்தான்.

“அல்லா… நீ முதல்ல இப்பவே என் கூட கிளம்பு” என்று மைமூன் பதற “ரிலாக்ஸ் ரிலாக்ஸ்” என்றாள்.

“இல்ல இதுக்கு மேல இங்க எதுக்கு நீ இருக்கனும்?”

“என் வாழ்க்கைல இத்தன வருசம் நான் வலி அனுபவிக்க காரணமானவன சும்மா விட்டுட்டு வரதா?”

“அதுக்காக உன் உயிர பணயம் வைப்பியா?”

“எனக்கு ஒன்னும் ஆகாது கா. நான் பார்த்துக்குறேன்”

“இவ்வளவும் எப்படி தெரிஞ்சது உனக்கு?” என்று யாதவ் கேட்க அவன் பக்கம் திரும்பினாள்.

“நீங்க விசயத்த மேலோட்டமா பார்த்தீங்க. இந்த மனுசன் ஜாதகம் சொல்லுற பொண்ணுங்க தான் செத்து போறாங்க னு நினைச்சீங்க. அதுல குறிப்பிட்ட சிலர் தான் சாகுறாங்க. அவன கையும் களவுமா பிடிச்சு விசயத்த வாங்கிடலாம் னு நினைச்சீங்க சரியா?”

யாதவ் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

“சும்மா பார்த்தா நீங்க கூட தான் கொலை காரனா தெரிவீங்க. ஆனா நீங்க இல்லயே. அது போல அவனும் கொலை காரன் இல்ல னு அவன பார்த்த உடனே என் ஃப்ரண்ட்ஸ் சொல்லிட்டாங்க.

அவங்க இந்த கொலைய ஆதாரமே இல்லாம பண்ண எத்தனை ட்ரிக் யூஸ் பண்ணுறாங்க தெரியுமா? தெரிஞ்சா நீங்களே சாக் ஆகிடுவீங்க.

முதல்ல ஊரு ஊரா போய் ஜாதகம் பார்க்குறது. நம்ம ஊருல தான் தொட்டதுக்கெல்லாம் ஜாதகம் னு கிளம்பிடுவாங்களே. அப்படி வரவங்க எல்லாரும் கிழவன் கிழவிக்கா பார்ப்பாங்க? எல்லாம் கல்யாண வயசுல இருக்க பசங்க பொண்ணுங்களுக்கு தான். அவங்கள்ல பலி கொடுக்க ஆள செலக்ட் பண்ணிக்குவாங்க.

இத ஆர்டரா சொல்லுறேன் . அப்போ தான் உங்களுக்கு புரியும். முதல் முதலா அந்த குருக்கு என் ஜாதகம் த் கிடச்சு இருக்கு. அதுல என்ன கருமத்த பார்த்தான் னு தெரியல. என்ன பலி கொடுக்கனும் னு ஆசை வந்துடுச்சு.

இருபத்தஞ்சு வருசம் அந்த ஊருக்கு நான் வர மாட்டேன். ஆனா நான் எங்க இருக்கேன் னு தெரிஞ்சு வச்சுக்கிட்டாங்க. நான் பெரிய பொண்ணாகி ஏழு வருசம் கழிச்சு பலி கொடுக்கனும் னு முடிவு பண்ணி இருக்காங்க.

என் நல்ல நேரம் பத்து வயசுலயே நான் உங்க கிட்ட வந்துட்டேன். என் பெத்தவங்களுக்கே நான் இருக்க இடம் தெரியல. அப்படி‌ இருக்க இவனுங்க எப்படி கண்டு‌பிடிப்பாங்க? நாமலும் நாலஞ்சு இடம் மாறிட்டு போயிட்டோம்.

யாராலையும் கண்டு பிடிக்க முடியல. ஆனா அந்த குரு பைத்தியத்துக்கு பலி பைத்தியம் தெளியல. என்ன போல வேற பொண்ணுங்க கிடைப்பாங்களா னு தேடி இருக்கான். கிடைக்கல.

அப்புறம் தான் அவனுக்கு கடவுள் கனவுல வந்து சொன்னாங்களாம். அந்த பொண்ணோட இன்னும் எட்டு பொண்ண‌ சேர்ந்து ஒன்பதா பலி கொடு னு.

இவனும் எட்டு பொண்ணுங்கள தேட அவன் சிஸ்யன கிளப்பி விட்டுட்டான். அவனும் ஊர் ஊரா தேடி அவனுக்கு‌ தேவையான எட்டு பொண்ணுங்கள எடுத்துட்டான்.

எட்டு பொண்ணையும் சும்மா வெட்டி சாகடிச்சா போலிஸ் கேஷாகிடும்ல?‌அதுக்கு தான் இவனுங்க வேற டெக்னிக் கையாண்டது.

மெஸ்மரிஸம்‌ கேள்வி பட்டு இருக்கீங்களா? ஒருத்தர மயக்க நிலைக்கு கொண்டு போய் அவங்கள உண்மையெல்லாம் சொல்ல வைக்கிறது. நமக்கு தேவையான வேலைய அவங்கள வச்சு செய்ய வைக்கிறது.

தேவையான பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் நடக்கனும் னா பூஜை செய்யனும் னு சொல்லிடுவானுங்க. இது வரை தானே உங்களுக்கு தெரியும்?

ஆனா உண்மையா பூஜைக்கு பதிலா இது தான் நடந்துருக்கு. அவங்கள மயக்க நிலைக்கு கொண்டு போய் அவங்களே அவங்கள காளிக்கு பலி கொடுக்கனும் னு மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க.

தொடர்ந்து இது அந்த மாசம் ஆரம்பிச்சதுல இருந்து பௌர்ணமி வரை நடக்கும். அந்த பொண்ண மட்டும் இப்படி பூஜை னு உட்கார வச்சா சந்தேகம் வந்துடும் னு கூட சிலர உட்கார வச்சுப்பாங்க.

ஆனா பூஜையில என்ன நடந்துச்சு னு மத்த பொண்ணுங்கள கேட்டா தெரியல னு சொல்லுங்க. செலக்ட் பண்ண பொண்ணு மைண்ட் செட்ட மாத்திட்டு பௌர்ணமிக்கு முடிச்சுடுவாங்க.

அந்த பொண்ணு அதுக்கப்புறம் வீட்டுல அமைதியாவே சுத்த ஆரம்பிக்கும் அம்மாவாசை நெருங்க நெருங்க அது கிட்ட மாற்றம் தெரியும். சாக போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடியே தான் சாக போறேன் னு வீட்டுல சொல்லிடும்.

எதோ காத்து கறுப்பு னு வீட்டுல இருக்கவங்க பெருசா எடுத்துக்காம மத்திரிச்சுட்டு அமைதியா விட்ருவாங்க. அந்த பொண்ணுங்க அம்மாவாசை அன்னைக்கு வீட்ட விட்டு எது சாக கூடிய இடமோ அத தேடி ஓடுங்க. அங்க அவளுக்காக ஒரு ஆடு இருக்கும்.

அத வெட்டிட்டு அதோட ரத்தத்த உடம்புல பூசிக்கும். காளியே உடம்புல வந்த மாதிரி ஆடிட்டு உயிர விட்ரும். கிணத்துலயோ ஆறுலயோ இல்ல எதாவது பாறையில இருந்து குதிச்சோ அதுங்களே உயிர விட்ரும்.

சோகம் என்னனா சாகுற வரை அதுங்களுக்கு நினைவு இருக்காது. நினைவு இல்லாமலே செத்து போயிடுங்க. அந்த ஆட்ட அங்கயோ இல்ல பக்கத்துல எங்கயாவது புதச்சுட்டு அந்த பொண்ணோட ஆவிய காளிக்கு காணிக்க பண்ணிட்டு அந்த ஜோசிய கும்பல் போயிடும்”

கேட்க கேட்க மைமூனுக்கு உடல் சிலிர்த்தது. யாதவினால் நம்பவே முடியவில்லை. வெறும் ஒரே வாரத்தில் இவ்வளவு விசயங்களை எப்படி தெரிந்து கொண்டாள் என்று ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.

“ஒரே வாரத்துல எப்போ இதெல்லாம் தேடுனீங்க? எப்படி கண்டு பிடிச்சீங்க?”

“ஒரே ரீசன். என் ஃப்ரண்ட்ஸ் உங்க ஃப்ரண்ட்ஸ் மாதிரி மக்குங்க இல்ல”

யாதவ் முறைக்க ஜீவிதா வாய் விட்டு சிரித்தாள்.

“அவங்கள எதுவும் சொல்லாதீங்க.”

“அப்போ உங்கள மக்குனு சொல்லட்டுமா?”

“விசயத்த சொல்லுங்க முதல்ல”

“சிம்பிள்.. என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் இன்டலிஜன்ஸ். அவங்க எல்லாரும் பல ஃபீல்டுல இருக்காங்க. இங்க வந்தது ஆறு பேரு தான். மூணு பேர் நான் இந்த ஊருக்கு வந்த ரெண்டாவது நாளே வந்துட்டாங்க.

அவங்க பக்கத்துல இருக்க எல்லா ஊருலயும் விசாரிச்சு அந்த ஜோசியன ஒரே நாள்ல பிடிச்சாங்க. அவங்களுக்கு‌ மட்டும் தான் மெஸ்மரிஸம் தெரியுமா? என் ஃப்ரண்ட் சைக்காலஜி ஸ்பெஷலிஸ்ட். அவனுக்கு மைண்ட் ரீடிங் வேற தெரியும்.

நைட்டோட நைட்டா எல்லாத்தையும் வாங்கி எனக்கு‌ சொல்லிட்டான். அப்பவே ப்ளான் போட ஆரம்பிச்சுட்டேன். நீங்க அந்த வீட்டுல கேமரா பிக்ஸ் பண்ணுறதுக்கு நடு ராத்திரி கார்ல நிலாவ வேற கூட்டிட்டு போனீங்க போல?

அதெல்லாம் வேஸ்ட். அடுத்த ஆளு நான் தான் னு தெரிஞ்சதும் அங்க போய் பார்ப்போமே னு போனேன். உங்க போலிஸ் வந்து தடுத்துட்டார். சரி னு நேரா என் ஃப்ரண்ட்ஸ பார்க்க கிளம்பிட்டேன்.

அவங்க எல்லாத்துக்கும் டாகுமெண்ட் போட்டு கமிஸ்னருக்கு அனுப்ப ரெடியா இருந்தாங்க. எனக்கு தான் உடனே அத செய்ய பிடிக்கல. அப்புறம் தான் வேற ப்ளான் உங்கள வச்சு போட்டு உங்கள தூக்கிட்டு வர சொல்லிட்டேன்.

இங்க மூணு பேரு இருக்காங்க. அடுத்த மூணு பேரு கேரளா பார்டர்ல இருக்காங்க. ப்ளான் பாதி முடிஞ்சது. மீதி இனி தான் ஆரம்பிக்கும்”

ஜீவிதா சொல்வதை சொல்லிட்டு விட்டு தீவிர யோசனையில் இறங்க மைமூனுக்கு பயத்தில் உடல் நடுங்கியது. சிலநிமிடங்கள் அவருக்கு பேச்சே வரவில்லை.

யாதவ் அவளது அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க கார்த்திக் ஜீவிதாவின் உடமைகளோடு வந்து விட்டான்.

தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

Story MakerContent AuthorYears Of Membership

மௌனத்தின் மனசாட்சி -22

2) 💖என்னுயிர்💖