in

அன்பின் அரசனே…. 30

அத்தியாயம்….30

சித்து மதியின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிய, மதியின் வீட்டிற்கு வந்தவர்கள், தங்கள் அறைக்கு வந்ததும், மதி தன் பெற்றோரின் பட்த்தின் முன் நின்று கண்மூடி வேண்ட, சித்துவும் அவள் அருகில் நின்று கண்மூடி வேண்டினான்..

 அத்தை , மாமா.. நான் என் அப்பூக்கிட்ட சில உண்மைகளை மறச்சு கல்யாணம் செஞ்சிருக்கேன்,

அவளுக்கு உண்மை தெரிய வரும் போது என்மேல எவ்வளவு வேண்டுமானாலும் கோவபடட்டும்.. ஆனால் அவ ரொம்ப அழக்கூடாது.. மனவேதனைப் படக்கூடாது.. இது சாத்தியம் இல்லன்னாலும் எனக்காக காட்கிட்ட (God) சண்டை போட்டாவது இந்த வேண்டுதலை நிறைவேத்திடுங்க.. பிளீஸ்.. என்று வித்தியாசமான வேண்டுதலை வைத்த தங்கள் மருமகனை.. மாறா புன்னகையுடன் பார்த்திருந்தனர்..

தன் வேண்டுதலை முடித்து கண்திறந்த சித்து, மதி இன்னும் வேண்டிக் கொண்டிருப்பதையும், அவள் கண்ணீரையும் பார்த்தவன், கண்ணீரை துடைத்து விட்டு, அம்முக்குட்டி எதுக்கு அழறிங்க..? உங்களுக்கு தான் ஸ்மார்ட்டான.. சூப்பரான மாப்பிள்ளை கிடைச்சிருக்காரே..! நாங்க இங்க கடவுள் பக்கத்துல உட்கார்ந்து உங்களை பார்த்துட்டு இருக்கோம்.. இங்க நாங்க ரொம்ப சந்தோசமா இருக்கோம்..!

நீயும் மாப்பிளைக்கூட சந்தோசமா வாழ்ந்தால், எங்களோட மகிழ்ச்சி முழுமையடையும்.. நாங்க எங்கேயும் போகலை மாப்பிள்ளை உருவத்துல உன் பக்கத்தில தான் இருப்போம்.. அதனால அழுகாச்சியை முடிச்சுட்டு சிரிங்க..  என்று மதியின் பெற்றோரை போல் பேசிய சித்துவை பார்த்த மதிக்கு உண்மையாகவே தன் அன்னை, தந்தை பேசியது போல் உணர்ந்தாள்..

கண்ணீரும் புன்னகையும் கலந்து தன்னவனை பார்க்க, அவன் கைகளை விரித்து கண்களை சிமிட்டி வா என்று அழைக்கவும் அவனிடம் தஞ்சமானாள்.. தன் மார்பில் சாய்ந்திருந்தவளை இறுக அணைத்து, அன்புமா இரண்டு நாட்கள் சரியாக தூங்கவில்லை சோ கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்.. என்று சொல்லி மதியை அணைத்து கொண்டு உறங்கினான்..

சித்துவின் மூச்சு காற்று அவள்மேல மோத உடல் சிலிர்த்தாள்.. மதிக்கு கணவனின் அணைப்போ முத்தமோ புதிதல்ல, ஆனால் அந்த அணைப்பில், ஒரு பாதுகாப்பை உணர்ந்திருக்கிறாள், அவன் இடும் முத்தத்தில் தாய்மையை உணர்ந்திருக்கிறாள். அதிகபட்சமாக   அவன் கொடுக்கும் கன்னத்து முத்ததில்.. காதலை உணர்ந்திருக்கிறாள்..

ஆனால் உடல் முழுவதும் அவன் தேகம் உரசும்படி, சித்து இயல்பாக அணைத்து படுத்திருக்க, அதைவிட இயல்பாக கணவனின் அணைப்பை தான் எற்றுக் கொண்டதை.. ஆச்சரியமாக எண்ணிக் கொண்டாள்.. சித்துவின் தலையை கோதி கொடுத்தவாறே, மதி யோசனையில் இருந்தாள்..  எப்படி இருந்த என்னை இப்படி மாத்திட்டாங்களே..! அச்சுமா என் வாழ்க்கையில வந்து மூணு மாசம் தான் ஆகுது என்று என்னால நம்பவே முடியலை..

ஏதோ ஜென்ம பந்தம் சொல்வாங்களே அதுபோல இருக்கு..! ஆனால் அச்சுமா ஏன்.. அடிக்கடி என்னை நம்பறதான..? என்று கேட்கிறாங்க..

நிறய பேசணும் வேற சொன்னாங்க, அப்படி என்ன பேச போறாங்க.. என்ன ஓடிட்டு இருக்கு இவங்க மனசில..? யோசித்தவாறே கணவனின் முகம் பார்க்க, அவனோ அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான்..

 ஆழ்ந்த உறக்கத்திலும், புருவங்கள் சுருங்கி  ஏதோ யோசனையில் இருப்பது போல் தோன்ற, ஏனோ மதிக்கு இவ்வளவு நாள் தன்னை குழந்தை போல் பார்த்துக் கொண்ட தன் கணவன் இப்பொழுது அவன் அவளுக்கு குழந்தையாக தெரிந்தான்,

நீங்க என்ன தப்பு செஞ்சிருந்தாலும், ஏன் கொலையே செஞ்சிருந்தாலும், நான் உங்களைவிட்டு போகமாட்டேன்.. அச்சுமா..‼  என்னோட தனிமையை போக்க வந்த எனக்கு கிடைத்த வரம் நீங்க.. உங்களை எப்படி விட்டு போவேன்..? மனதோடு தன்னவனிடம் பேசி கொண்டிருந்தவளுக்கு அப்பொழுதுதான் அனைவரும் கீழே ஹாலில் இருப்பது உணர்ந்து, அச்சோ எல்லாரும் கீழ இருக்காங்களே.. தனக்குள் சொல்லியவாறே

 அவசரமாக எழ, ஆனால் அது முடியாமல் அவளவனின் கரம் உடும்பாக வளைத்திருக்க,  இவங்க தூங்கறாங்களா..? இல்லையா.. சந்தேகமாக பார்த்தாள்,

 அவனோ ஆழந்த உறக்கத்தில் இருக்க அந்த உறக்கத்திலுல் தன்னை விடாமல் இறுக அணைத்திருந்த மன்னவனின் காதல் மங்கையவளுக்கு சுகமாக தாக்க, அவன் நெற்றியில் முத்தமிட்டு,  அச்சுமா நான் எங்கேயும் போகலை.. கீழ சிவா, திவி ஆண்ட்டி, மாறன் அண்ணா, எல்லாரும் இருக்காங்க.. நம்ம ரெண்டுபேரும் இங்கேயே இருந்தால் அது தப்பு,, நீங்க தூங்குங்க, நான் அவங்களை கவனிச்சிட்டு ஓடி வந்துடுறேன்.. சித்துவின் காதில் மெதுவாக சொல்ல, அவனின் பிடி தளர்ந்தது..

கீழே வந்த மதி, அனைவரிடமும் மன்னிப்பு பார்வை பார்த்தவள், அவர்களிடம் பேசி கொண்டிருந்தாள்.. திவி, மதியின் கையில் தன் கையை கோர்த்தபடி பேசிக்கொண்டிருக்க, மதி பளிச்சென்று புன்னகையுடன், திவிக்கு பதில் சொல்லி கொண்டிருந்தாள்.. இடையிடையே சாவித்ரியுடனும் சிரித்தவாறு பேசிக்கொண்டிருக்க, மதியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்த சுந்தரிக்கு, பொறாமை தீ பற்றிக்கொண்டு வந்தது, எங்க வீட்டுல உட்கார்ந்துட்டு எப்படி சிரிச்சு பேசிட்டு இருக்காங்க..,

சிரிக்கவே தெரியாத இந்த மதி, யாருன்னே தெரியாதவங்கக்கிட்ட இப்படி சிரிச்சு பேசறா.. மனதில் பொருமியவர், அவர்களிடம் அதான் கல்யாணம் முடிஞ்சிருச்சுல்ல.. இன்னும் எதுக்கு.. என்றவரின் பேச்சு பாதியிலே நின்றது.. ஏனென்றால், கீழே அவரையே பார்த்தபடி சித்து வந்து கொண்டிருந்தான்..

வள்ளி அனைவருக்கும் காஃபி போட்டு கொடுக்க, அதை குடித்தபடி பேசி கொண்டிருந்தனர், கீழே வந்த சித்து, மதியின் அருகில் அமர்ந்தவன், மதி குடித்துக் கொண்டிருந்த காபியை இயல்பாக வாங்கி தான் குடிக்க,  அச்சோ அது நான் குடிச்சது, உங்களுக்கு வேற போட்டு தரட்டுமா..? அவன் காதில் கிசுகிசுக்க ஸ்வீட்டெஸ்ட்..! ரசித்து குடித்தவன்,

எனக்கு இது போதும் உனக்கு வேற போட்டுக்க.. என்றுவிட்டு,

அப்பறம் தினமும் எனக்கு இதேமாதிரி காபீ போட்டு கொடு அன்புமா..! என்று கண்ணடித்து சொல்ல, மதி தன் சிவந்த முகத்தை மறைப்பதற்கு பெரும் பாடுபட்டாள்.., இவர்களை கவனித்தாலும், கண்டுகொள்ளாமல் தங்கள் பேச்சில் அனைவரும் மூழ்கியிருக்க, சுந்தரியால் அங்கிருந்தவர்களின் மகிழ்ச்சியை தாங்க முடியாமல், சித்து இருப்பதை மறந்து, இது என்ன வீடா..? இல்ல சந்தைக் கடையா..? சத்தம் காதை பிளக்குது.. கொஞ்சம் கூட டீசண்டே இல்லாம.. இருக்கிங்க..! என்று பொறிய, அங்கு ஒரு நிமிடம் அமைதி நிலவியது..

சுந்தரியின் இந்த பேச்சில் திகைத்த மதி, சித்தி பிளீஸ்..! கோவப்படாதிங்க, நம்ம வீட்டுல சிரிப்பு சத்தம் கேட்டதே இல்லை..! கலகலப்பாக இருந்ததும் இல்லை.. இப்போதான் இது வீடு மாதிரி இருக்கு, தயவு செய்து எதுவும் சொல்லாதிங்க.. உங்களுக்கு பிடிக்கலேன்னா நீங்க உங்க ரூம்ல இருக்க சித்தி..!  என்று சொன்ன மதியை சுந்தரி,  மதி நீ இப்போல்லாம் என்னை மதிக்கிறதே இல்லை.. இந்த சித்தி மேல இருந்த அன்பு போயிருச்சு.. ம்ம் என்ன இருந்தாலும் நான் உன் சித்தி தான..! அம்மா இல்லையே..! என்று கண்ணை கசக்கி, எப்பொழுதும் தான் வீசும் அம்பை எய்ய அது சரியாக மதியை தாக்கியது,

சுந்தரியின் கண்ணீரை பார்த்த, மதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..!, மதி சுந்தரியின் அருகில் போகப் போன, அவளை தடுத்த சித்து, தான் பார்த்துக் கொள்வதாக கண்மூடி திறந்தவன், சுந்தரியின் அருகில், சுந்தரி அத்தை..குரலில் தேனொழுக அழைக்க, அவ்னின் அத்தை என்ற அழைப்பில் திகைத்த சுந்தரி திருதிருவென பார்க்க,

 என்ன வார்த்தை சொல்லிட்டிங்க, அன்புமா உங்களை அப்படி நினைப்பாளா..?! இல்லை.. நான் தான் அப்படி நினைக்க விடுவேனா..? என்று குரலில் கேலியா..? அன்பா? என்று பிரித்தறியாத முடியாத நிலையில், வினவ,

சுந்தரி வில்லங்கம் புடிச்சவன் இருக்கிறதை மறந்துட்டு எதாவது சொல்லி மாட்டிக்கிறேனே..! தனக்குள் புலம்பியாறே சுந்தரி அசட்டு சிரிப்பை உதிர்த்து சித்துவை பார்க்க,

அவர் நினைத்தது சரியே என்பது போல, உங்களுக்கு இதயத்துல ஓட்டை எதும் இருக்கும் போல..? என்று சுந்தரியின் தலையில் இடியை இறக்கினான்,

 என்ன இதயத்துல ஓட்டையா..? சுந்தரி அதிர்ச்சியோடு கேட்க

ஆமா.. ஹார்ட்ல ஒட்டை இருக்கிறவங்களுக்கு, சத்தம் போட்டால், பிடிக்காது, யாராவது சந்தோசமா இருந்தால் பிடிக்காது, அடிக்கடி கோவம் வரும்.. சிரிச்சு பேசவே மாட்டாங்க.. என்று அடுக்கி கொண்டே போனவன், அவன் சொன்ன விசயங்கள் எல்லாம் தனக்கு ஒத்து போவது போல் தோன்ற, சுந்தரி அதிர்ச்சியில் உறைந்து நின்றார்..

அந்த சேட்டைக்காரனோ மீண்டும்,

 இவங்களை பாருங்க என்று சாவித்ரியை காட்டியவன், அவங்க எவ்வளவு சந்தோசமா சிரிச்சு பேசிட்டு இருக்காங்க.. அப்படின்னா அவங்க ஆரோக்கியமா இருக்காங்கன்னு அர்த்தம்.. ஆனால் உங்களுக்கு?, கோவமா வருதே.. சோ எதுக்கும் உங்கள செக் செய்யணும்.. அதனால இப்ப நீங்க போய் ரெஸ்ட் எடுங்க அத்தை.. மாமா வந்ததும் உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டி போக சொல்றேன்..! என்றுவிட்டு, ரேணுவை அழைத்து சுந்தரியை அவர் அறையில் விட சொன்னான்..

சிவா, சித்து பேசிக்கொண்டிருந்ததை வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான்.. அவனை பற்றி தெரியுமாதலால், மற்ற மூவரும் கண்டுகொள்ளாமல் இருக்க, மதி, அச்சுமா சித்திக்கு நிஜமாகவே ஹார்ட்ல பிராப்ளமா..? சிறிது கவலையோடு கேட்க, அவளை வியப்பாக பாத்து,  அன்பு மா நல்லவங்களா இருக்கலாம், ஆனால் முட்டாளாக இருக்க கூடாது.. என்ற கணவனை, மதி புரியாமல் பார்த்து, இப்ப எதுக்கு இதை சொல்றிங்க..? கேட்க  உனக்கு ஒரு நாள் புரியும்.. என்று பூடகமாக சொன்னவனுக்கு தெரியவில்லை தான் சொன்ன வார்த்தை பூமராங் மாதிரி தன்னையே தாக்கும் என்று…

தன் அறைக்கு வந்த சுந்தரி, ஏன் டி ரேணு.. அந்த ரௌடிப்பையன் சொல்றதெல்லாம் உண்மையா..? எனக்கு இதயத்துல எதாவது பிரச்சினை இருக்குமோ..? பயத்துடன் கேட்க, ம்மா.. அவர் ஏதோ உன்னை பயமுறுத்திறதுக்காக சொல்றார்.. உனக்கு கண்டிப்பா இதயத்துல பிரச்சினை இருக்காது.. என்று உறுதியாக சொன்ன ரேணு, உனக்கு தான் இதயமே இல்லையே..! என்று முணுமுணுக்க.,

என்னடி முணுமுணுக்கிற..? சுந்தரி கேட்க, அது ஒண்ணும் இல்லைம்மா.. அப்பா இன்னும் காணோமேன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.. என்ற ரேணுவிற்கு வெளியே கேட்ட திவியின் சிரிப்பு சத்தம் கோபத்தை கொடுத்தது.. அதே கோபத்தோடு கோவிலில் நடந்ததை நினைத்து பார்த்தாள்.. கோவிலில் சிவா, ஐயர் கேட்டதை எடுத்து கொடுத்து படி வந்தவர்களையும் கவனித்து கொண்டு ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருந்தான்..

சற்று தள்ளி ஒரு சேரில் அமர்ந்து ரேணு, அவனையும், அவன் அழகையும் ரசித்துக் கொண்டிருக்க, எங்கிருந்தோ வந்த திவி அவனுக்கு குடிக்க குளிர்பானம் கொடுப்பதை பார்த்து எரிச்சல் வர, முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டாள்.. திவி அதோடு விடாமல், அவன் முகத்தில் இருந்த வேர்வையை துடைக்க சொல்லி, தன் கைக்குட்டையை கொடுக்க, சிவாவிற்கு திவியின் அக்கறை, மனதை நிறைத்தாலும், திவியை உனக்கு ஏன் அலைச்சல்..? என்று கடிந்தவாறே அவள் சொன்னதை செய்தான்..

நீங்க அலையறதை விட என் அலைச்சல் கம்மிதான்.. என்று கழுத்தை நொடித்துக் கொண்டு சென்றவளை சிரிப்புடன் பார்த்திருந்தான்..

சிவாவின் பார்வை திவியின்மேல் ஆர்வமாக படிவதை உண்ரந்த ரேணு, இவ்வளவு நாளாக இந்த சிரிப்பை எங்க ஒளிச்சு வச்சிருந்திங்க..? பொறாமையோடு நினைத்தவள், திவி சிவாவிற்கு ஏதோ குடிக்க கொடுத்ததை எண்ணி.  சே இவ்ளோ நேரம் இது எனக்கு எப்படி தோணாமல் போச்சு..? தன்னையே கேட்டு கொண்ட ரேணு, திவி நகர்ந்ததும் இவள் சிவாவின் அருகில் வந்து அவனிடம் பேச வர, சிவா ரேணுவின் முகத்தை கூட பார்க்காது, அவளை கட்ந்து சென்றுவிட்டான்..

அதில் ரேணுவின் தன்மானம் பெரிதும் அடிவாங்கியது.. என்னை கண்டுக்காம போறிங்களா..? போங்க எவ்வளவு தூரம் போறிங்கன்னு நானும் பார்க்கிறேன்.. நீங்க எங்க போனாலும் என்கிட்ட தான் வரனும்.. ஏன்னா உங்க அன்பு தங்கை மதி பேச்சை நீங்க தட்ட மாட்டிங்கள்ல..

மதியக்கா வாயாலையே என்னை கட்டிக்க சொல்ல வைப்பேன் அப்போ நீங்க என்னை மறுக்க முடியாது.. மிஸ்டர் சிவக்குமார்..! மனதில் கறுவிக்கொண்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்து சிவாவை ரசித்து கொண்டிருந்தாள்..

 தன் விருப்பத்தை மதியிடம் சொல்வதற்காக நேரமும் பார்த்துக் கொண்டிருந்தாள்..

மதியம் உணவருந்திவிட்டு அனைவரும் கிளம்ப போகையில் சித்து இன்று அனைவரும் ஒரு நாள் இங்கு தங்கிவிட்டு செல்லுமாறு சொல்ல, மாறன் சித்துவை கூர்மையாக பார்த்தான்.. அவன் பார்வையை உணர்ந்து, பிறகு சொல்வதாக ஜாடை செய்தவன், மற்றவர்கள் தன்னை கேள்வியாக பார்ப்பதை உணர்ந்து, அது ஒண்ணும் இல்லை காலையில இருந்து கலகலப்பா இருந்தது திடீர்ன்னு நீங்க கிளம்பினால் அது ஒரு மாதிரி கஷ்டமா இருக்கும்.. அதான்.. என்று சொல்ல மதியும் அவ்வாறு உணர்ந்ததால் அவளும் இன்று தங்கள் வீட்டில் தங்குமாறு கேட்டு கொண்டாள்..

லேசாக தயங்கிய சாவித்ரி, சித்துவின் யோசனை படிந்த முகத்தை பார்த்து சம்மதம் சொல்ல, ஐ, ஜாலி அப்போ நம்ம எல்லாரும் மொட்டை மாடியில படுத்துக்கலாமா.. நான் அண்ணி பக்கத்துல படுப்பேன். இப்பவே சொல்லிட்டேன் என்று மதியை திவி அணைத்து கொள்ள, ஏனோ மதிக்கு திவியை பார்க்கும் போதெல்லாம் ஒரு குட்டி பெண்ணாகவே அவளின் கண்களுக்கு தெரிந்தாள்.. திவியின் நெற்றியில் முத்தமிட்டு.. கண்டிப்பா திவிக்குட்டி..! என்று சொல்ல சாவித்திரிக்கு இருவரின் பிணப்பு மகிழ்ச்சியை கொடுக்க, சிவாவிற்கும், சித்துவிற்கும் பொறாமையும் மகிழ்ச்சியும் ஒரு சேர கொடுத்தது..

இரவுக்கு என்ன சமைக்கலாம்..? என்று பெண்கள் பேசி கொண்டிருக்க, சிவா ஆசிரமத்து நிர்வகியிடம் போனில் பேசி கொண்டிருந்தான்.. சித்து மாறனிடம் கண்ணை காட்டி தோட்டத்திற்கு வருமாறு சொல்லி சென்றான்.. அங்கு வந்த மாறன்.. என்னாச்சு சித்து நீ ஏதோ யோசனையில இருக்கிற மாதிரி தெரியுது.. எதுக்காக எல்லாரையும் இங்க தங்க சொன்ன..? எதாவது பிரச்சினையா..? என்று கேட்க..

பிரச்சினை என்று சொல்ல முடியாது.. ஆனால் அதே சமையம் இத அலட்சியப்படுத்தவும் முடியாது.. என்று தாடையை தடவியவாறே சொல்ல, என்னடா என்ன யோசிக்கிற..? மாறன் கேட்க அந்த சூர்யா தான் டா.. என்ற சித்து சற்று முன் அறையில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்..

 நான் நல்லா தூங்கிட்டு இருந்தேன் போன் ரிங்காகிற சத்தம் கேட்டுது யார்னு பார்த்தால் நம்ம வில்லன் சார்..

தூங்கிட்டு இருக்கவன ஏண்டா எழுப்பினேன்னு கேட்டால், இனி நீ தூங்காம இருக்கிறதுக்கு தான்னு சொல்லி பஞ்ச் டயலாக் விட்றான்.. அதோட எனக்கு நெருக்கமானவங்க எல்லாரையும், கொன்றுவானாம்.. அதுல முதல்ல இருக்கிறது என் அப்பூ..! என்று சொல்ல,

ஏன் அவனோட மிரட்டலுக்கு நீ பயப்பட்றியா..? மாறன் ஆச்சரியமாக கேட்க, இது பயம் இல்லடா முன்னெச்சரிக்கை.. நான் என்னோட பிஸினெஸ்ல ரிஸ்க் எடுப்பேன். ஆனால் வாழ்க்கையில நோ சான்ஸ்.. நான் என் அப்பூவை எவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்ச்ருக்கேன்னு தெரியும்ல..! அவ மேல ஒரு சின்ன கீறல் கூட படக்கூடாதுனு நான் கவனமா இருக்கேன்..!சித்து சொல்ல,

அதை ஏற்றுக்கொண்ட மாறன்,

சரி இப்போ நான் என்ன செய்யணும்..? அவன்மேல ஒரு கம்ப்ளெயிண்ட் கொடு மத்த்தை நான் பார்த்துக்கிறேன்.. மாறன் சொல்ல, இல்லை வேண்டாம்.. அவன் ஆஸ்பத்திரில இருக்கிறதால அதை காரணம் காட்டி ஈஸியா தப்பிச்சிருவான்டா அவனை கொஞ்சம் ஆட விடுவோம், அவன் ஆட்டத்துல நம்ம குடும்பத்துல யாரும் பாதிக்க கூடாது..

நீ அந்த சூர்யாவோட நடவடிக்கைகளை நல்லா வாட்ச் பண்ணு, நான் நம்ம ஃபேமிலிக்கு செக்க்யூரிட்டிக்கி ஏற்பாடு செய்றேன்.. என்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பற்றி பேசி கொண்டிருக்க

சரி நீ மதிக்கிட்ட எப்போ உண்மையை சொல்ல போற..? மாறன் கேட்க, இவ்வளவு நேரம் எதிரியை எப்படி வீழ்த்துவது என்று, சரளமாக பேசிக்கொண்டிருந்தவன், மாறனின் கேள்வியில் ஒரு நொடி அமைதியாக இருந்தான்…

சொல்லணும்..! என்றுவிட்டு, ஆனால் சொன்ன பிறகு அப்பூ எப்படி எடுத்துக்குவான்னு சத்தியமா என்னால யோசிக்கவே முடியலை டா.. மதிக்கிட்ட சொல்ல ஏதோ ஒரு தயக்கம், என்னை தடுத்துட்டே இருக்கு..! நான் என்ன செய்ய..? என்று கேட்ட நண்பனை மாறன் வியப்பாக பார்த்தான்..

 சித்து இந்த விசயம் வேற யார் மூலமாக மதிக்கு தெரிஞ்சா அது இன்னும் பிரச்சினை ஆகும்.. அதனால நீயே சிக்கிரம் சொல்லிரு..! மாறன் சொல்ல சித்து மௌனமாக தலையசைத்தான்..

இரவு வீடு வந்த மாதவன், வீட்டில் இருந்த ஆட்களை பார்த்து, கேள்வியாக மனைவியை பார்க்க, எல்லாம் உங்களால வந்த்து பொறுமியபடி, முகத்தை திருப்பிக்கொண்டார்.. அனைவரையும் பார்த்து ஒரு சம்பிரதாய சிரிப்புடன் தன் அறைக்கு வந்தவரை சுந்தரி. இங்க பாருங்க வீடா இது சந்தைக்கடையான்னு தெரியலை, உங்க தங்கச்சி டூர் போறேன்னு சொல்லி, தப்பிச்சிட்டா.. உங்க மச்சான் எங்க போனாருன்னே தெரியலை,

 இவங்க அடிக்கிற கொட்டம் தாங்க முடியலை, எனக்கென்னமோ நாம் இந்த வீட்டை விட்டு போகிற நாள் வெகுதூரம் இல்லைன்னு தோண்ட்து..! சுந்தரி ஆரூடம் சொல்ல

வீட்டை விட்டு போறதுக்கா நான் இவ்வளவு பிளான் செஞ்சிருக்கேன்.. பார்ப்போம் யார் இந்த வீட்டை விட்டு போறாங்கன்னு.. மனதில் நினைத்து வெளியே பொறுத்தது பொறுத்த.. இன்னும் ஒரே நாள் பொறுத்துக்க சுந்தரி..! உனக்கு எல்லாம் புரியும்..

அதுவரை யாரையும் எதையும் சொல்லாத, முக்கியமா மதியையும், அந்த தமிழையும்..!என்று எச்சரிக்கை செய்து விட்டு உறங்கி போனவரை கடுப்புடன் பார்த்திருந்தார்..

 அப்படி என்ன தான் நடக்கும் மலையவே புரட்டி போடுவிங்களோ கிண்டல் குரலில் பேசிய மனைவியை முறைத்து பார்க்கதான போற..! என்றுவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டார்..

இரவு உணவு தடபுடலாக சமைத்திருக்க, சுந்தரி ஆர்வத்துடன் சாப்பிட அமர்ந்தார்..

அவரின் முன் வைக்கப்பட்ட உணவை பார்த்து திகைத்து நிமிர்ந்து பார்க்க, சித்து சிரித்த முகத்துடன் அவருக்கு ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் கஞ்சியை கொண்டுவந்து வைத்திருந்தான்..

அத்தை உங்களுக்கு ஹார்ட் பிராப்ளம் இருக்குல்ல (முடிவே பண்ணீட்டியா ராசா) நைட் நேரத்துல ஹெவியா சாப்பிட்டு உங்க இதயத்திற்கு எதாவது ஆச்சுன்னா.. புதுசா வந்த மருமகன் ராசியில்லை.. அவன் வந்த ராசிதான் நீங்க போயிட்டிங்கன்னு எனக்கு கெட்ட பேர் வந்திரும்.. அதுக்கு தான் இந்த ஓட்ஸ்.. அது மட்டும் இல்லாம…… தம்பி நான் ஓட்ஸ் க்ஞ்சி குடிச்சுக்கிறேன்.. நீங்க போய் சாப்பிடுங்க,, சித்து இன்னும் என்னவெல்லாம் சொல்வானோ என்ற பயத்தில், அந்த கஞ்சியை வாங்கி குடித்தார்..

அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வர ரேணுவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.. உணவு உண்ணும் போது ரேணு சிவாவிற்கு பரிமாற வர, பரவாயில்லங்க நான் பார்த்துக்கிறேன்.. என்று மறுத்தவன், திவி அவன் தட்டில் காலியாகும் உணவை அறிந்து வைக்க மறுக்காமல் ஏற்றுக் கொண்டான்.. இங்கு நடந்ததையும், கோவிலில் நடந்ததயும், இரு கண்கள் கவனித்து கொண்டு இருந்தன..

கைகழுவ செல்லும் இடத்தில், ரேணு மதியிடம் பேச வர, அன்புமா.. இங்க கொஞ்சம் வாயேன்.. சித்து அழைக்கவும் மதி அங்கு செல்ல, ரேணுவிற்கு எரிச்சலாக வந்தது.. மொட்டை மாடியில் அனைவரும் குழுமி இருக்க, புதிதாக இருந்த இந்த சூழல் மதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

அதற்கு காரணமான தன்னவனை பார்க்க, அவனோ போனில் யாருடனோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான்.. மீசை நுனியை திருகிக்கொண்டே போனில் பேசுவது சித்துவிற்கு தனி கவர்ச்சியை கொடுக்க, மதி தன்னையறியாமல் அவனை ரசித்துக்கொண்டிருந்தாள்.. ஏதோ தோன்ற, நிமிர்ந்து பார்த்த சித்து தன் மனையாள் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பதை கண்டு. ஒற்றை கண்சிமிட்டி பறக்கும் முத்தமிட

மதி விதிர்த்து நிமிர்ந்தாள்..

அந்த கண்கள், சித்துவை நியாபகப்படுத்த, இந்த கண்கள் ஏன் சித்துவை நியாபகப்படுத்துது.. சித்துவை நான் எப்படி தான் நினைக்கிறேன்.. என் கணவன் கண்களில் ஏன் சித்து கண்களை பார்க்கிறேன்.. நான் தப்பான பெண்ணா..? மதிக்கு வேர்க்க ஆரம்பித்தது.. மதியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த சித்து அவளின் முக மாற்றத்தை கவனித்து.. அன்பு என்னாச்சுடா..? என்று கேட்க..

ஒண்ணும் இல்லை கொஞ்சம் தலை சுத்திருச்சு.. இப்ப பரவாயில்லை என்றவள் தவிப்போடு கணவனை பார்க்க அந்த பார்வையில் உருகி.. என்னடா..? என்று கேட்க, நான் தப்பான பொண்ணு இல்லை.. என்று தன்னை மறந்து சொல்ல, என்ன..? சித்து திரும்பவும் கேட்க

ஒன்றும் இல்லை என்று தலையசைத்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

 ஒரு கையால் மனைவியை அணைத்தவாறே நான் சொன்ன மாதிரி எல்லாத்தையும் மாத்தி வைங்க இன்னும் ஒருமணிநேரத்தில் இது நடக்கனும்.. என்றுவிட்டு போனை அணைத்தவன் திடீர்ன்னு என்னாச்சு..? என்று யோசித்தவாறே மதியை பார்த்தான். ஏதோ யோசனையில் இருந்த மதி சித்துவின் பேச்சு தோரணையை கவனிக்கவில்லை..

 அனைவரும் உறங்க ஆயத்தமாக, முதலில் ரேணு, அடுத்து சாவித்ரி, திவி, மதி, சித்து, சிவா மாறன்.. என்று வரிசையாக படுத்திருந்தனர்.. மதி கணவனின் கையை இறுக பிடித்து கண்மூடிக் கொண்டாள்..

திவி, மதியை எதுவும் யோசிக்க விடாமல் தன் கலகலப்பானெ பேச்சால், மதியின் சிந்தனையை திசைதிருப்பினாள்.. பேசிக்கொண்டே அனைவரும் உறங்கி போக, கணவனின் அருகாமையில் சிறுவயதில் இருந்து இரவில் தனிமையை துணைகொண்டு உறங்கி இருந்த மதி, முதன் முதலாக, தன் துணையின் பாதுகாப்பில் நிம்மதியாக உறங்கினாள்..

ஆழந்த உறக்கத்தில் இருந்த சித்துவின் கைப்பேசி சத்தமிட, அதை எடுத்து பார்த்தவன் நகைக்கடை செக்கியூரிட்டியிடமிருந்து அழைப்பு வருவதை கண்டு, எடுத்து காதில் வைத்தவன்… நான் இன்னும் அரைமணி நேரத்தில் அங்க இருப்பேன்.. என்றுவிட்டு எழ, மதி திவியின் கையை பிடித்துக்கொண்டு அவன் மார்பில் தலைவைத்து உறங்கி கொண்டிருந்தாள்.. திவியோ மதியின் இடுப்பில் கைபோட்டு உறங்கி கொண்டிருந்தாள்..

சிறு சிரிப்புடன் இரு பெண்களையும் பார்த்தவன், மை ஸ்வீட் செல்லம்ஸ்.. மனதில் கொஞ்சயபடி மதிக்கு உறக்கம் கலையாதவாறு எழுந்து சென்றான்..

செல்போன் சத்தத்தில் மாறன் விழித்து கொள்ள. சித்து எழவும் என்னவென்று கேட்க,  எல்லாம் நம்ம எதிர்பார்த்தது தான் சூர்யா அவன் வேலையை காட்டிட்டான்..

 கடைக்கு ஃபையர் ஆக்ஸிடெண்ட்.. நான் போய் பார்த்துட்டு வர்றேன்.. என்றவனிடம் மாறன் தானும் வருவதாக சொல்ல, இல்லடா இங்க நீ இருக்கனும்.. நான் பார்த்துக்கிறேன்.. என்றவன் உறங்கி கொண்டிருந்த மதியை பார்த்து நாளைக்கு எல்லா உண்மையும் சொல்லிட்றேன் அன்புமா.. என்றுவிட்டு சென்றான்

நல்ல உறக்கத்தில் இருந்த மதிக்கு தண்ணீர் தாகம் எடுக்க மேலே தண்ணீர் எடுத்துவர மறந்த தன் மறதியை நொந்தவாறே.. கீழே வர, மாதவன் சுந்தரியை ஏதோ திட்டிக்கொண்டிருக்க, மதி அவர்களை சமாதானம் செய்ய அங்கு செல்ல இப்போ உனக்கு என்ன.. நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு தெரியணும் அது தான.. நாளைக்கு மதியோட சொத்து எல்லாம் நம்ம கைக்கு வந்துரும்..

அது எப்படின்னா மதி கல்யாணம் செஞ்சிருக்க தமிழரசு நான் ஏற்பாடு செஞ்ச ஆள்.. மூணு மாசத்துல இதை நடத்தி காட்றேன்னு சொன்னான் சொன்ன மாதிரியே நடத்தி காட்டிட்டான்.. அவனுக்கு பணம் முக்கியமில்லை அவனுக்கு சவாலான விசயத்தை செய்றது ரொம்ப பிடிக்கும்.. நான் மதியை பத்தி சொன்னேன்.. அவன் உடனே ஒத்துக்கிட்டான்..

என்று சொல்லிக்கொண்டே போக, அதை கேட்டுக்கொண்டிருந்த மதி திக்பிரமை பிடித்து அங்கேயே அமர்ந்துவிட்டாள்..

அரசன் ஆள்வான்..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

1) 💖என்னுயிர் நீதானே 💖

அஸ்தமிக்கும் பொழுதுகள் 10