in , ,

1) 💖என்னுயிர் நீதானே 💖

💗என்னுயிர்நீதானே 

                   உன்னுயிர்நான்தானே💗

அத்தியாயம் 1

    

       “ ச்ச இந்த பஸ்காரன் வேற சரியான நேரத்தில் வரமாட்டான் ஸ்கூல்ல பெல் அடிக்கும் நேரம் ஆச்சு”  என்று புலம்பி தள்ளினாள் நம் கதையின் நாயகி ஷரண்யா…

ஷரண்யா 23 வயதில் திடமான உடல், முட்டை விழிகள், கூர்மையான நாசி,

ரோஜா மலர் போன்ற இதழ்கள்… மேலும், பள்ளி ஆசிரியர் என்பதால் தினமும் புடவை அணிய, காண்பவர்களை  கவரக்கூடிய பேரழகி தான் அவள்…

சிறிது நேரம் கழித்து பஸ் வரேவ அதில் ஏறி நின்று பயணம் செய்து கொள்ள, 

“ஷரண்யா” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தால் அவளுடன் பள்ளியில் பணிபுரியும் பூஜா…

“வாங்க ஷரண்யா மிஸ் என் பக்கத்துல சீட் காலியா  இருக்கு, சீக்கிரம் உட்காருங்க” என்று பூஜா சொல்ல…

“பூஜா மிஸ் ஏன் பஸ் லேட்டு?”

“வர வழியில செக்கிங்.. ஒருத்தன் ஓசியில் வந்தான், வசமா  மாட்னான்! அவனுக்கு அர்ச்சனை  செய்யவே நேரம் ஆச்சு..” என்று பூஜா கடுப்பாக சொல்ல …., 

“சரியான கேன பசங்க, இதுங்க ஓசியில வரதால மாட்டிகிட்டு மத்த அனைவரும் லேட்டா போவங்கனு  கொஞ்சம் கூட அறிவு இல்லை” என்று ஷரண்யா சலித்துக் கொண்டு சொல்ல..

“இன்று  முதல்  க்ளாஸ் 10th maths லேட் ஆச்சுனா பசங்க கொண்டாடுவாங்களே!” என்று பூஜா சொல்ல……,

“என்ன பன்ன  மிஸ், கணக்குனா பயந்து தான் இருக்குறாங்க.. மேலும், சின்ன வயசுல அப்படி தான் இருந்தோம். உங்க பையன்  வரலை  இன்னிக்கு..,  நான் டெஸ்ட் சொன்னேன், எஸ்கேப் ஆயிட்டானா?” என்று ஷரண்யா கேட்க…….

அப்போது பூஜா, “அட பாவி! வயிறு வலிக்குது இன்னிக்கு கிளாஸ்ல ஒன்னுமில்லைனு சொன்னான்.. கேடி இருக்கட்டும், அவனை அப்புறம் கவனிச்சிகிறேன்.. சாரி மிஸ், சாயந்திரம் டியூஷன் அனுப்பி வைக்கிறேன்…”

“பரவாயில்லை மிஸ், சின்ன பையன் தான்.. இப்ப  என்ஜாய்  பன்னாம, எப்ப பன்னுவான்..”

“ஷரண்யா மிஸ், நீங்க  இப்படி பன்றதால தான் பசங்க உங்கள

ஏமாத்துறாங்க… ஆனால், பரிச்சையில் உங்க பாடத்துல எல்லாம் சென்ட் பர்சன்ட் ரிசலட் வருது எப்படி..?”

“தெரியலையே! நானும் எல்லா டீச்சர் மாதிரி தான் பாடம் நடத்துறேன், அதை பசங்க கிட்ட தான் கேட்கனும்…”

இதோ ஸ்கூல் வந்தாச்சு…….

        

            மகரிஷி வித்யா மந்திர் பள்ளி

இருவரும் வேகமாக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று கையெழுத்துப் போட்டுவிட்டு  வெளியே வந்து பெருமூச்சு விட்டனர்….

“அப்பா! இன்னும் பெல் அடிக்கல இல்லனா, நம்ம அந்த அஸிஸ்டன்ட் பிரின்சி கிட்ட வசமா மாட்டிருப்போம்…” என்று பூஜா டீச்சர் மூச்சு வாங்கிக்கொண்டு சொல்ல….

அதற்கு ஷரண்யாவும் பெருமூச்சு வாங்கிக்கொண்டே, “ஆமாம் பூஜா மிஸ், 

ஏற்கனவே உங்களுக்கும் அவங்களுக்கும் ஆகாது,  இல்லனா வெச்சி செஞ்சிருப்பாங்க…

சரி வாங்க நம்ம வேலையை பார்க்கலாம்..”

பள்ளி வழிபாடு முடிந்தவுடன் பூஜா தன் வகுப்பறைக்கு சென்று விட்டாள். 

ஷரண்யா நேற்று வைத்த தேர்வு தாளை திருத்திகொண்டிருக்க, அடுத்த வகுப்பு மணி அடித்தது.

ஷரண்யா 8th B என்ற வகுப்பறைக்குள் சென்றாள். மாணவர்கள் எழுந்து நின்று வணக்கம் கூற, பதிலுக்கு அவளும் வணக்கம் சொல்லிய பின் மாணவர்கள் அமர்ந்தனர்.

திருத்திய தேர்வு தாளை அனைவருக்கும் அளித்து முடித்துவிட்டு, “இந்த டெஸ்ட்ல நிறைய பேர் நல்ல மார்க் எடுத்து இருக்கீங்க.. நல்ல முன்னேற்றம்!” என்று மாணவர்களிடம் கூறினாள்.

“சரி, நாம இன்னிக்கு நலவண்பா பற்றி பார்க்க போறோம். யாருக்கெல்லாம் 

நளன், தமயந்தி  கதை தெரியும்?” என்று பழைய மாணவர்களுக்கு ஒரு கேள்வியை எழுப்ப…

அப்போது ஒரு மாணவன் எழுந்து “மிஸ், அது மாதவன் நடிச்ச படம்! நல்லா 

காமெடியா இருக்கும்..” என்று சொல்ல, அனைவரும் ‘ஹேய்’ என்று சத்தம் போட்டானர்.

“டேய்! டெஸ்ட்டில் மட்டும் முட்டை வாங்குற, சினிமா பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்க…”

“இந்த நளன்,தமயந்தி கதை வேற… மனோஜ், நீ அந்த பாடல் படி, நான் 

உங்களுக்கு அர்த்தம் சொல்லச் சொல்ல நீங்கள் நல்லா கற்பனை செய்து பாருங்க..”

அந்த மாணவனும் படிக்க, அதில் சில  வரிகள் ஷரண்யாவை பழைய 

சிந்தனையில் ஆழத்த, அதிலிருந்து மீண்டு வந்தாள் ஷரண்யா.. பாடல் வரிகள் அனைத்திற்கும் அர்த்தம் சொல்ல……

ஒரு மாணவி எழுந்து, ‘பாவம் தமயந்தி, குழந்தையோட கஷ்டப்படுறா….  மிஸ், இவங்க இரண்டு பேரும் எப்போ ஒன்னு சேர்வாங்க..?’

அதற்குள் மணி அடிக்க, அடுத்த வகுப்பிற்கு சென்று தேர்வுக்கு தயாராக அமர்ந்து இருந்த மாணவர்களுக்கு அவள் வினாத்தாளை கொடுத்தாள்; அதை பெற்றுக்கொண்ட மாணவர்கள்  எழுத ஆரம்பித்தனர்…..

அந்த மாணவி கேட்ட கேள்வி, அவள் மனதில்  நின்றது..  அந்த நளன், தமயந்தி சேர்ந்துக்குவாங்க. ஆனால், இந்த உலகத்தில் எத்தனையோ நளன், தமயந்தி ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்து வாழ்றாங்க.. அவங்கள யார் சேர்த்து வைப்பாங்க….?!

தேர்வு முடித்த மாணவர்கள் விடைத்தாள்களை கொடுக்க, அதை வாங்கி அடுக்கி ஒரு ரப்பர் பேன்ட் எடுத்து கட்டினாள். இன்னும் வகுப்பு முடிய நேரம் இருப்பதால், எதாவது பேசலாம் என்று மாணவர்கள் கேட்க, ஷரண்யாவும் தன் பள்ளி நினைவுகளை கூறினாள். மாணவர்கள் அதை ஆர்வமாக கேட்டு கொண்டிருக்க வகுப்பு முடிந்தது…..

வகுப்பை முடித்து, ஆசிரியர் அறையில் தன் இடத்தில் அமர்ந்து கொள்ள அப்போது ஒருவர் வந்து, “ஷரண்யா மிஸ், உங்களை பிரின்ஸிபல் அம்மா வர சொன்னாங்க” என்றார்.

ஷரண்யா தலைமை ஆசிரியர் அறைக்கு அனுமதி கேட்டு உள்ளே வந்து நிற்க, அப்போது அவர் “ஷரண்யா நம்ம ஸ்கூல்ல Mr.ராமசந்திர வீட்டு பசங்களும் படிக்கிறாங்க, அவங்க ஒரு நல்ல மிஸ் ஹோம் டியூசன் எடுக்க முடியுமான்னு கேட்டாங்க..  எனக்கு உன் ஞாபகம் தான் வந்துச்சி. அதான் கேட்டேன், நீ கவலை பட வேண்டாம், உன்ன அவங்களே பிக்கப், ட்ராப் பன்னிடுவாங்க. உனக்கு ஓகே தான..?”

“அய்யோ! நான் ஷரண் குட்டிய பக்கத்து வீட்டில  விட்டுட்டு தான் ஸ்கூல்க்கு வரேன். இப்ப சாயந்திரமும் அவன விட்டு பிரிந்து இருக்க முடியாது மேம்….”

“உன்ன பத்தி நான் சொல்லாம இருப்பனா.. அவங்ககிட்ட எல்லாம் சொன்னேன்.  பரவாயில்லை, குழந்தையோட உன்ன வர சொன்னாங்க. இப்ப சொல்லு….” 

“எனக்கும் வீட்டில் ஷரணோட தனியா இருக்க பிடிக்கல, இந்த டியூசன் எடுத்தா கொஞ்சம் நேரம் பசங்களோட பொழுது கழிக்கலாம்….. எனக்கு ஓகே மேம்.”

மாலை மூன்று மணிக்கு பள்ளி முடிய, ஷரண்யா தன் வேலைகளை முடித்து 

கொண்டு, வீட்டிற்கு சென்று பக்கத்தில் வீட்டில் இருக்கும் தன் இரண்டு வயது

மகனை தூக்கிக் கொண்டு தன் வீட்டிற்கு சென்று, பிரஷ் ஆகி வேறு உடைக்கு

மாறி ஷரணுடன்  சிறிது நேரம் கழித்தாள். சற்று நேரத்தில் கார் வரவே வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பினாள்.

பக்கத்தில் உள்ள மாமி “ஏன்டிமா, எங்க கிளம்பிட்ட…?” என்று வினவ..

“அதுவா மாமி, ஹோம் டியூசன் எடுக்க…”

“குழந்தையை என்கிட்ட கொடுத்துவிட்டு போகவேண்டியது தானே….”

“உங்களுக்கு எதுக்கு மாமி சிரமம், நானே கூட்டிட்டு போரேன். இல்லனா, இன்னிக்கு மட்டும் அழைச்சின்னு போரேன், நாளைலலிருந்து உங்ககிட்ட விட்டுட்டு போரேன்…..”

“சரிமா, ஜாக்கிரதையா போய்ட்டு வா.., ஹிம்… நல்ல பொண்ணு! ஆனால், அந்த பகவான் ஏன் இந்த பொண்ணுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கறார்‌னு  தான் நேக்கு தெரியலநா” என்று தன் கணவனிடம் புலம்பினார் மாமி.

“கவலைப்படாதடி, அந்த குழந்தைக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது.. அதான் பகவான் சோதிக்கிறாரு….”

ஷரண்யாவிற்கு நல்ல காலம் பிறக்க, நாமும் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்…….

தொடரும்……

🙏🙏🙏🙏🙏🙏🙏

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

காவ(த)ல் கொண்டேனடி கண்மணி 18

அன்பின் அரசனே…. 30