in , ,

காவ(த)ல் கொண்டேனடி கண்மணி 17

ஹாய் பிரண்ட்ஸ்,

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு

தொடர்கதைக்கான 17, 18 அத்தியாயங்களை பதித்திருக்கிறேன் படித்துப் பார்த்து தங்களுடைய கருத்துக்களை மறவாமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே….

காவ(த)ல் கொண்டேனடி கண்மணி

அத்தியாயம் : 17

அஸ்வினியிடம் தன் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டிய ரிஷி நேரம் தாண்டுவதை உணர்ந்து தோளோடு அணைத்து அழைத்துச் சென்றான்.

“கொஞ்ச நேரமாவது தூங்கி ரெஸ்ட் எடு, இல்லாட்டி காலையில் ரொம்ப கஷ்டமாக இருக்கும். இன்று இரவு பேசலாம் சரியா?” அவளது முகத்தைப் பார்த்தான்.

“சரி!” தலையசைத்தாள் அஸ்வினி

“ஏசிபி மேம் இப்படி அநியாயத்திற்கு வெட்கப்படுறிங்களே.. எனக்கு அந்த வாயாடி, குறும்புக்காரி, சேட்டை செய்றவ தான் வேணும். இந்த அடக்கம் ஒடுக்கம் நடுக்கமான பொண்ணு வேணாம்!” கேலியாகப் பேசி சன்ன சிரிப்பை வெளிப்படுத்தினான். ரிஷியின் பேச்சைக்கேட்டு மேலும் நாணியவள் அவனுக்குள்ளே புதைந்து விடுவாள் போல நின்றாள்.

” என்னடா கிடைக்குமா? “

“ம்ஹூம்!”

“ஏன்? பதில் சொல்லுங்க ஏசிபி மேம்!”

“ஏங்க ஒரு பொண்ணு கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கணும்னு நினைச்சா விடுறீங்களா. அப்புறம் முன்ன போல ஏதாவது சொல்லிடப் போறேன்…!” வாயை இறுக மூடிக் கொண்டாள் அதைக்கேட்டவன் சத்தமாக சிரித்தான்.

வேகமாக ரிஷியின் உதட்டில் விரல் வைத்து மறித்து “உஷ்!” என்று விழிகளை சுழற்றி காட்டினாள்.

“ஏசிபி சார் இப்படி அதிகாலை சுபவேளையில் அதுவும் கடல் சூழ் பிரதேசத்தில் தனியாக நின்று சிரித்துக் கொண்டிருந்தால் வானத்தில் மிதந்து போகிற பேய், வனதேவதை, மோகினி… எல்லாம் நீங்கள் அவங்களை பார்த்து தான் சிரிக்கிறிங்கனு நினைச்சு கீழே இறங்கி வந்திடப் போறாங்க!” கிண்டலாகச் சொன்னாள்.

“வந்தால் என்னவாம்?” அவளை

கிறக்கமாக பார்த்த ரிஷியை கண்டு நாணிய அஸ்வினி ” எனக்கு வேணாமா?” மென் குரலில் சொன்னாள்.

” இந்த ரிஷி என்றும் என் வினிமாக்கு மட்டும் தான் சொந்தம். வேறு யாரும் அவனிடம் உரிமை கொண்டாட ஒருபோதும் விட மாட்டான்!” உறுதியாக சொன்னவன் அவளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தான். தன்னவனின் பேச்சில் மகிழ்ந்த பெண்ணவளும் தன்னை மறந்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு விலகி அவளை அழைத்து வந்து வீட்டு வாசலில் விட்டான்.

“வினி நைட் வரேன். எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு அதனால் காலையில் கிளம்பனும். வரும் போது உனக்கு என்ன பிடிக்கும் சொல்லு வாங்கிட்டு வரேன்!”

“எனக்கு என் ஏசிபி சாரை தான் பிடிக்கும். அவருக்கு பிடிக்கிற எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!” நாணத்துடன் சொன்னவளைப் பார்த்து சிரித்தான்.

“இந்த ரிஷிக்கு பிடிக்கிறது எல்லாம் உனக்கும் பிடிக்குமா?” இடக்காக வந்த கேள்வியை கவனிக்க தவறிய அஸ்வினி “ஆமாம்!” என்றாள்.

அப்போ என்று உதட்டை சுண்டி காட்டினான் முடியாது என்று அவள் மறுத்தாள்.

” எனக்கு பிடித்தது எல்லாம் உனக்கும் பிடிக்கும்னு சொன்ன? பிறகும் மறுப்பானேன்?”

“அது அது என விழித்தாள். அதை தவிர வேறு கேளுங்க செய்கிறேன் ப்ளீஸ்!” கெஞ்சியவளை கண்டு சிரித்தான்.

“ஓகே இப்போது அது வேணாம் விட்டிடலாம். எனக்கு லாங் டிரைவ் போறது ரொம்ப புடிக்கும். என் பின்னாடி இரு புறமும் காலை போட்டு அமர்ந்து கொண்டு அப்படியே என்னை இடையோடு கட்டி தோளோடு சாய்ந்து கதை பேசிட்டு வரணும். என்ன நைட் வருவியா?”

“அச்சோ இது அதை விட வம்பு!” பாவமாக உதட்டை பிதுக்கினாள். அதைப் பார்த்த ரிஷி “அப்போ முதலில் சொன்னது ஓகேவா!” குறும்பாக கேட்டு கண்சிமிட்டினான்.

“காலையிலே தப்பு தப்பாக பேசுறிங்க ஏசிபி சார். ரொம்ப கெட்டுப் போயிட்டிங்க போய் தூங்கிட்டு டியூட்டிக்கு கிளம்புற வழியைப் பாருங்க குட் நைட் ஓ….சாரி குட் மார்னிங்!”

“கெட்டுப் போயிட்டனா அது சரி சும்மா இருந்தவன் மீது வந்து மோதி, விழுந்து, உரசி, திட்டி, சிரிச்சு பேசி மாத்தி விட்டிட்டு பேசவா செய்ற, கல்யாணம் முடியட்டும் அப்புறம் உன்னை என்ன செய்கிறேன் பார்!” மீசையை திருகி விட்டுக் கொண்டு கண் சிமிட்டினான்.

இரு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து வணங்கியவள் “அப்போது பார்த்துக்கலாம் ஏசிபி சார் இப்போது பை!” விடை கொடுத்தாள்.

அஸ்வினியின் பேச்சைக் கேட்டு சிரித்த ரிஷி “சுடி போட்டுட்டு தயாராகி இன்று போல வந்திரு நான் வெயிட் பண்ணுறேன்!” அவளிடம் விடை பெற்று தன்னுடைய அறை நோக்கிச் சென்றான்.

தங்களுடைய அறை நோக்கிச் சென்றவர்கள் சில நிமிடங்களாக அவர்களை பற்றியே நினைத்துக் கொண்டு பிறகு ஒருவாறு தூங்கிப் போயினர்.

ஏழு மணிக்கு அலாரத்தின் சப்தத்தில் விழித்த ரிஷி விழிகளை கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தான். இதற்கு மேல் தூங்கினால் கிளம்ப முடியாது என்று நினைத்து தன்னுடைய பைல்களை எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.

அப்படியே கைப்பேசியை எடுத்து பரத் எண்ணிற்கு அழைப்பை விடுத்து செவியில் வைத்தான்.

“குட்மார்னிங் சார்!”

“குட் மார்னிங் மிஸ்டர் பரத்!”

” சொல்லுங்க சார்!”

“கன்னியா குமரி காவல் நிலையத்தில் சந்தேகப் படும் விதமாக ஒருவரை பிடித்து வைத்திருப்பதாக சொன்னார்களே அவர் கிட்ட நான் விசாரணை பண்ணனும். ஸோ கொஞ்சம் வேகமாக கிளம்பிடுங்க!”

“ஜஸ்ட் ஹாப் அண்ட் அவர் ல கிளம்பி வந்திடறேன் ஸார்!”

“குட் பரத்!” கைப்பேசியின் அழைப்பை துண்டித்து விட்டு பைல்களை மூடியவன் தான் முன்பு பணிபுரிந்த அலுவலகத்திற்கு பேசி சில தகவல்களை பெற்றுக் கொண்டு அழைப்பைத் துண்டித்தான்.

அரைமணி நேரத்தில் வேகமாக கிளம்பிய ரிஷி காவலன் உடையில் கம்பீரமான நடையுடன் காரில் ஏறினான்.

ஐந்து நிமிடங்களுக்குள்ளாக அங்குள்ள அதிகாரி ஏசிபி ராஜசேகரை சந்தித்தான்.

“மிஸ்டர் ரிஷி உங்களைப் பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இப்போது தான் பார்க்க முடிகிறது !” சிரித்து கை குலுக்கினார்.

” நானும் தான் சார்!” என்று சிரித்தான்.

உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்ந்து வழக்கைப் பற்றி விசாரித்து தான் வந்திருக்கும் விஷயம் குறித்து பேசி அவனைப் பார்க்க அனுமதி வேண்டினான்.

“என்ன சார் இது!, இந்த சிறு வயதில் எத்தனை துணிச்சலாக பல வழக்குகளை விசாரணை செய்து நல்ல அதிகாரினு பெயர் எடுத்திருக்கிங்க. நீங்க என்கிட்ட போய் அனுமதி கேட்டுட்டு வாங்க சார்!” என அழைத்துச் சென்றான்.

“எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் இது உங்களுடைய ஸ்டேஷன். நீங்கள் தான் அந்த வழக்கு விசயமாக விசாரணை செய்கிற அதிகாரி அத்துடன், அது சம்மந்தமான குற்றவாளியை உங்களுடைய பாதுகாப்பில் வச்சிருக்கிங்க ஸோ பர்மிசன் கேட்பதில் தவறில்லை மிஸ்டர் ராஜசேகர் கமாண்!”

புன்னகையுடன் தலையசைத்து ரிஷியை அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டிய நபரை அடையாளம் காட்டினார்.

“மிஸ்டர் ராஜசேகர் விசாரணை செய்யும் போது இவன் ஏதாவது தகவல்கள் சொல்லியிருக்கிறானா?”

“நோ சார் வாய் திறக்க மாட்டேங்குறான். அதான் நாலு தட்டு தட்டி உள்ளே போட்டு அடைச்சு வச்சிருக்கேன்!”

“சீ மிஸ்டர் சேகர் துப்பாக்கி எங்கோ இருக்கும் போது அதில் இருந்து பாய்ந்து வரும் சாதாரண புல்லட்டின் மீது கோவம் கொண்டு என்ன செய்ய முடியும். அதை இயக்குபவர் யார் என்பதை பற்றி அல்லவா முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்….!”

“எஸ் சார்!”

“நான் பேசிக்கிறேன்!” அருகே சென்று முகத்தை நிமிர்த்திப் பார்த்தான். வாடிய அச்சம் கலந்த அவனது முகம் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது.

” சாப்டியா?”

அவன் பதில் கூறாமல் அமர்ந்திருந்தான்.

“கேட்கிறேன்!” ரிஷியிடம் இருந்து விழுந்த அழுத்தமான வார்த்தையில் மறுப்பாக தலையசைத்தான்.

” ஏன்?”

“நான் கேட்டால் எனக்கு உடனடியாக பதில் வர வேண்டும் புரிந்ததா?”

ரிஷியின் விழிகளில் தெரிந்த கோபத்தில் , நாவில் உதிர்த்த வார்த்தையின் கர்ஜனையில் மிரண்டவன் “பசியில்லை!” மெதுவாக சொன்னான்.

“ஐ சீ!” அவனை மேலும் கீழுமாக அளவெடுத்தான்.

“மிஸ்டர் சேகர் இவன் சாப்பிட தேவையான அனைத்தையும் இமீடியட்டாக ஏற்பாடு பண்ணுங்க!” அவரிடம் சொல்லிக் கொண்டு மறுபடியும் திரும்பினான்.

” மிஸ்டர் வேலு உங்களுக்கு பத்து நிமிடம் தான் டைம் அதற்கு முன்பாக சாப்பிட்டு முடித்து நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க தயாராக வந்திருக்கணும்!” அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் கண்ணசைத்து வெளியே வந்தான்.

” சொல்லுங்க மிஸ்டர் சேகர் இவன் எப்படி கிடைச்சான். எத்தனை நாளாகுது உங்க கஸ்டடிக்கு வந்து? இவன் சார்பாக யாராவது பேச அல்லது தேடி வந்தார்களா?”

“இல்லை மிஸ்டர் ரிஷி. இவன் கன்னியா குமரி பீச் ஹவுசில் தங்கியிருக்கிறான். பகல் முழுவதும் உள்ளே இருந்து விட்டு இரவு நேரம் வெளியில் வந்து நல்லா தண்ணி அடித்து விட்டு ஹோட்டலில் நிறைய பணத்தை செலவு செய்திருக்கிறான். பிறகு தன்னுடைய இடத்திற்கு போவதற்காக ஆட்டோவில் ஏறி ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்தவன் மீதிப் பணத்தை வாங்காமல் அப்படியே போயிருக்கிறான். ஆட்டோவில் இருந்த போது கைப்பேசியில் பேசிய அவனது உளறல் வார்த்தைகளை கேட்டுச் சென்ற ஆட்டோ டிரைவர் நண்பர்களிடம் இதைப் பற்றி பேசி பணத்தைக் காட்டி சிலாகிக்க அது நம்முடைய டியூட்டி போலீஸ் காதிற்கு சென்றிருக்கிறது. உடனடியாக விசாரித்து ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்திருக்காங்க. எனக்கு வந்த தகவலின் படி ஆட்டோ டிரைவரை விசாரித்து அங்கே சென்றால் அவன் நல்ல தூக்கத்தில் இருந்தான்.

              கதவை தட்டி மணியடித்து பார்த்தும் அவன் திறக்க வில்லை. சந்தேகத்தின் பெயரில் வீட்டை சுற்றி சோதனை செய்து உள்ளே நுழைந்து அவனை பற்றி விசாரிக்கும் போது தூக்கம் போதை மயக்கத்தில் ஏதேதோ பிதற்றினான். அதனால் அவனை அழைத்து வந்து விசாரணை செய்ய முயன்ற போது தப்பியோடினான். அவனை துரத்தி சென்ற நம் காவலர்களால் பிடித்து வரப்பட்டு அதற்காக பரிசும் பெற்றுக் கொண்டான். எத்தனையோ முறை கேட்டும் பதில் தராமல் போகவே உள்ளே அடைத்து வைத்தோம். நேற்று தான் கிடைத்தான்!” என்று ரிஷியைப் பார்த்து சொன்னார்.

“ஓகே சார் அவன் கிட்ட எப்படி விசாரணை செய்யணுமோ அப்படி செய்து விசயத்தை வெளியே வாங்கிடலாம் நோ பிராப்ளம்!”

“மிஸ்டர் ரிஷி சாப்டிங்களா? இவ்வளவு காலை நேரத்தில் வந்திருக்கிங்களே அதான் கேட்கிறேன்!” அக்கறையோடு விசாரித்தார்..

அப்போது ஒரு கவர் வாட்டர் பாட்டில் சகிதம் பரத் வந்தான்.

மூவரும் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டு உண்டு முடித்தனர்.

கை கழுவி துடைத்தவர்கள் மறுபடியும் அங்கு சென்றனர்.

இவர்களை பார்த்த வேலு மிரட்சியுடன் எழுந்து நின்றான்.

“சாப்டாச்சா வேலு இனி பேசலாம் இல்லையா?”

அவன் பதில் கூறாமல் அமைதியாக நின்றான்.

“அப்புறம் உன்னை லாட்டியால் அடிக்கிறது, ஐஸ் கட்டி மீது படுக்க வைப்பது, கரண்ட் சாக் கொடுக்கிறது, இல்லை விரலை கட் பண்ணி அகற்றுவது இதை எல்லாம் செய்து உன்னை கஷ்டப்படுத்த நான் விரும்பலை. என்னுடைய பாணி என்று ரிவால்வரை எடுத்துக் காட்டியவன் என்கவுண்டர் மட்டும் தான்!” சிரித்துக் கொண்டு அவனைப் பார்த்தான்.

“எஸ் வேலு ஐ அம் எ என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், உங்களை மாதிரிப் பட்டவங்க கிட்டப் போய் மயிலே மயிலே இறகு ஒண்ணு போடுனு கெஞ்சிக் கிட்டு நிற்கிற ஆளு இந்த ரிஷி கிடையாது. மொத்தமா போட்டு தள்ளிட்டு சத்தம் இல்லாமல் போயிட்டே இருப்பேன்!” தனது வலது புருவத்தை உயர்த்தி சொல்லி கால் மீது கால் போட்டுக் கொண்டு சாய்ந்து அமர்ந்தான்.

அச்சத்தில் நடுங்கியவன் அப்படியே நின்றான்.

“வேணாமா அப்போ சொல்லு நீ யாரு? எதற்காக அப்படி ஓடின? நீ தங்கியிருந்த பீச் ஹவுஸ் வசதியானவங்க வந்து தங்கும் இடம். அதில் ஒரு சாதாரண கூலி வேலை பார்க்கிற உனக்கு எப்படி அனுமதி கிடைச்சது. நீ கொடுத்திருக்கும் முகவரி பொய்யானதுனு எனக்குத் தெரியும் ஏன் அப்படி செய்த. உன்னுடைய மொபைலில் இருக்கின்ற குறிப்பிட்ட சில நம்பர்கள் யாருடையது? அதாவது அன்வான்டர்டு நம்பர். பாரில் வைத்து அத்தனை பணம் செலவு செய்தது மட்டுமின்றி ஆட்டோவிற்கும் கொடுத்திருக்கிற அது மட்டுமின்றி உன்னுடைய அக்கவுண்டில் லட்சக் கணக்கான பணம் எங்க இருந்து வருகிறது. நீ யாருடைய கைக்கூலி?”

ரிஷியைப் பார்த்த ராஜசேகர் ஆச்சர்யத்தில் புருவங்களை உச்சி மேட்டிற்கு உயர்த்தினார் என்றால் எதிரிலும் நின்றவன் உடல் பலம் முழுவதும் போவது போல தொய்ந்து விழுந்தான்.

“என்ன வேலு இதற்கே விழுந்திட்டா எப்படி. மீதி விசயங்களை பற்றி தெரிஞ்சுக்க வேணாமா? நீ யார் எதற்காக இங்கே வந்திருக்கிற? உனக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் உன் தலைவன் இப்போது எங்கே இருக்கிறான் இவ்வளவு மட்டும் நீ சொன்னால் போதும் மற்ற தகவல்களை நான் கண்டு பிடிக்கிறேன்!” கூலரை விழிகளில் இருந்து கழற்றி வலது புருவத்தை உயர்த்தி இறக்கினான்.

அச்சத்தில் நடுங்கியவன் மெதுவாக சொல்ல ஆரம்பிக்க அவர்கள் மூவரும் உள் வாங்க ஆரம்பித்தனர்.

“ஓஹே வேலு அப்படின்னா அண்ணன் தம்பி இருவர் தான் இந்த கடத்தல் திருட்டு எல்லாவற்றிற்கும் காரணம் அப்படித்தானே.?”

“ஆமாம் சார்!”

“அப்போ அவங்க ரெண்டு பேரும் யார் எங்க இருக்கிறாங்க போன்ற தகவல்கள் உனக்குத் தெரியுமா?”

“இல்லை சார் நான் முகத்தை பார்த்தது இல்லை . எதாவது காரியம் ஆகணும்னா எனக்கு கால் பண்ணி சொல்வாங்க. அப்படியே அக்கவுண்டில் பணமும் மாதா மாதம் போட்டு விடுவாங்க. அப்புறம் இந்த கைப்பேசிக்கு வரும் அழைப்பு என்னைப் போன்ற ஆட்களுக்காக மட்டும் பயன்படுத்துவதால் எங்களை தொடர்பு கொள்ளக் கூடாதுனு சொல்லியிருக்காங்க . அவங்க வேறு நம்பர் சாதாரண நேரம் பயன் படுத்தலாம். மற்றபடி எனக்கு தெரியலை அவ்வளவு தான் சார்!” அவனை பார்த்து அச்சத்தோடு சொன்னான்.

“ஓகே….. அவங்க எங்க இருக்கிறாங்கனு உனக்கு தெரியாது…. ம்… என்று யோசனையில் ஆழ்ந்தான். உனக்கு தெரிந்த வேறு நபர்கள் யாரெல்லாம் அங்கு வேலை செய்றாங்க. அதாவது அவனுடைய எடுபிடி ஆட்கள் யாரையாவது உனக்குத் தெரியுமா?”

“ஒருத்தன தெரியும் சார். அவன் இப்போ சென்னை போயிருக்கான்!. “

“ஓ… !”என்று முகம் வாடிய ரிஷி

அவனது எண், முகவரி போன்ற தகவல்களை கேட்டுக் கொண்டு வழக்கு விசயமாக சில நிமிடங்கள் விசாரணை செய்து விட்டு வெளியே வந்தான்.

“மிஸ்டர் ரிஷி இந்த வழக்கின் ஆரம்பம் இடை முடிவு பற்றி ஏதாவது ஐடியா இருக்கிறதா?”

“ஸ்யூர் சார், கோவில் சிலை திருட்டு, இறந்த உடல், பெரிய நீளமான மீன் வழியாக தங்கம், கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலின் படி என்னை மதுரைக்கு அனுப்பி வச்சாங்க. அங்கே இது பற்றிய விசாரணையை முடுக்கி விட்டும் இதுவரை ஒரு பலனும் இல்லை. அப்போது தான் சொந்த விஷயமாக கன்னியா குமரி வரும் வாய்ப்பு கிடைக்க சும்மா இருக்க தோணாமல் வழக்கை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போது வேலு விஷயம் செவிக்கு கிட்டியது. உடனே அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து விட்டேன். எதற்கும் வேலு கவனம் வேறு யாரையும் பார்க்க அனுமதிக்காதிங்க. அவன் அளித்த வாக்குமூலம், என்னிடம் இருக்கு நீங்களும் ஒரு காப்பி வச்சிக்கோங்க. நமக்கு பின்னால் உதவியாக இருக்கும்.!” சில நிமிடங்கள் பேசிய ரிஷி அடுத்த கட்டத்தை பற்றி ஆலோசனை நடத்தி வேலையில் மூழ்கினான்.

அறைக்கு வந்து கட்டிலில் படுத்த அஸ்வினி சிறிது நேரம் ரிஷியின் நினைவிலே புரண்டு கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள்.

மாலை குளியலை முடித்து சுடிதார் அணிந்து ஷேம்பு பூசிய கேசத்தை விரித்திட்டவள் சிறிதளவு மல்லிகைப் பூவை தொங்க விட்டு நேரத்தை நெட்டித் தள்ளினாள்.

இரவு எட்டு மணிக்கு அனைவரும் உண்டு முடித்து பேசிக் கொண்டிருந்தனர்.

“அஸ்வினி தியேட்டரில் புது மூவி வந்திருக்கு போயிட்டு வரலாமா எல்லோரும். நீ கூட இங்கு வந்ததில் இருந்து கேட்டுட்டே இருந்தியே போகலாமா !”

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

38 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன

காவ(த)ல் கொண்டேனடி கண்மணி 18