in , ,

மீனாட்சி உன்னடிமை ஆவேனோ

அலங்கார சுந்தரியின் அடிமை

 ஆவேனோ

கால்கொலுசில்

சலசலக்கும் சலங்கை ஆவேனோ

மேகலையில் மினுமினுக்கும் மணியும் ஆவேனோ

கழுத்தினில் ஆரமதின் பதக்கம் ஆவேனோ

கைவளையல் கலகலக்கும் ஒலியும் ஆவேனோ

மூக்கினிலே புல்லாக்கின் வைரம் ஆவேனோ

காதோர குண்டலத்தில் முத்தும் ஆவேனோ

புருவமிடை ஜொலிஜொலிக்கும் பொட்டும் ஆவேனோ

உன் சிரசின் கிரீடமதில்

கல்லும் ஆவேனோ

அலங்கார சுந்தரியின் அடிமை ஆவேனோ

அனுதினமும் உடனிருக்கும் அதிர்ஷ்டம் பெறுவேனோ

அன்னை அவள் அருகிருக்கும் ஆசி பெறுவேனோ……….

ஸ்ரீமதி வைகுண்டம்……

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

அஸ்தமிக்கும் பொழுதுகள் 5

கொழுக்கட்டை பிரியனே