in

அன்பின் அரசனே 27

அத்தியாயம்….27

சித்து மதியிடம்  “நாம் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கலாமா..? ”என்று விளையாட்டாக கேட்க, அவன் விளையாட்டை உணராமல், மதி சம்மதமாக தலையசைக்கவும், சித்து அதிர்ந்து மதியின் முகத்தை பார்த்தான்..

 அவள் முகத்தில் இருந்த சந்தோசத்தை பார்த்து,’ தன் அருகாமைக்கு எவ்வளவு ஏங்கியிருக்கிறாள் ’ என்பதை உணர்ந்தவன், தன் விளையாட்டை கைவிட்டவனாக.. ”அன்பு.. நீ நிஜமாக சொல்றியா..? நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா..? ” மீண்டும் கேட்க

 ”அச்சுமா நான் உங்க பக்கத்திலேயே இருக்கணும்..! அதுக்கு என்ன செய்யனுமோ செய்ங்க..!” என்று சொல்ல, சித்து அவளை இறுக அணைத்து கொண்டான்..

 மதியின் இவ்வளவு அன்பையும், காதலையும் சித்துவாக இருந்து பெறமுடியாமல் போன தன் நிலையை வெறுத்தான்.. ’அப்பூ உனக்கு ஏன் சித்துவை பிடிக்காமல் போனது..? ’ஒரு நொடி தன்னை நினைத்து கழிவிறக்கம் கொண்டவன், மறு நொடி தன்னை நிலைப் படுத்திக் கொண்டு..

”இந்த சித்து எதிலேயும் தோற்க மாட்டான்.. இந்த தமிழைவிட சித்து தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல வைக்கிறேன்.. அப்பூ’.. என்று உறுதி எடுத்தான்..

சித்துவின் அமைதியை பார்த்த மதி, ”நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா..?” தயக்கமாக கேட்க, மதி சொன்னதை முதலில் புரியாமல் பார்த்த சித்து , அவள் கண்களில் கலக்கம் தெரியவும், எதனால் என்பதை புரிந்தவன்,  

”அன்பு நீ உடனே சம்மதம் சொன்னதும் நீ கல்யாணத்திற்கு ஏங்கி கொண்டிருக்கிற.. என்று தப்பாக நினைப்பேன் நினைச்சியா..? என் செல்லக்குட்டி.‼ உன்னை எப்படி தப்பா நினைப்பேன்..?

நான் தான உன்கிட்ட சம்மதம் கேட்டேன்..” என்று சொல்ல,

”நீங்க எதுவும் பேசாம அமைதியா இருந்திங்க..” மதி குறைபட,” அது..  நீ என் மேலவ்ச்சிருக்கிற காதலில் நான் மெய்சிலிர்ட்து நிக்கிறேன்..! உன்னை ஒரு ஏஞ்சல் மாதிரி எப்படியெல்லாம் பார்த்துக்கணும் என்று யோசிச்சிட்டு இருந்தேன்..!” என்ற சித்து

”இங்க பாரு செல்லக்குட்டி..! நீ எங்கிட்ட எப்பவும் வெளிப்படையாகவே இரு..! என்கிட்ட என்ன கேட்க தோணுதோ கேளு டா.. ஒரு முத்தம் வேணுமா கேளு.. இல்லை நான் மொத்.. ” என்றவனின் வாயை அவசரமாக மூடிய மதியின் முகம் செஞ்சாந்தாக மாற, தன் வாயை மூடியிருந்த விரல்களில் மென்மையாக முத்தமிட்டவன்..

”அன்பு..!  நமக்கு இடையில காற்றே வரக்கூடாதுன்னு நினைக்கிறேன் நீ வெட்கத்தை நமக்கு இடையில் விட்ற.. இது எல்லாம் நம்ம கல்யாணம் வரைக்கும் தான்.. அப்பறம் இந்த வெட்கத்திற்கு அங்கு வேலை இல்லை..! சீக்கிரமே இந்த சங்கு கழுத்துல பொன் தாலியை கட்டி.. இந்த பொக்கிஷத்தை என் கைகளில் அள்ளி.. ஆளில்லாத தீவுக்கு கடத்திட்டு போய்..” என்று மதியின் காதில் கிசுகிசுப்பாக கூற..

”அய்யோ போதும்.. அச்சூ. நான் போறேன் போ.. ”என்று முகம் சிவக்க சித்துவிடமிருந்து விலகி ஒடினாள்..

மதி செல்வதை சிரிப்புடன் பார்த்திருந்த சித்துவின் முகம், அவள் சென்றதும் யோசனையை தத்தெடுத்தது.. ’மாதவனிட்ம் எப்படி பேசுவது என்று மனதில் திட்டம் போட, நானும் இருக்கேன் என்னையும் சமாளிக்கணும்..!’ என்று சூர்யா சித்துவின் மனதில் ஆட்டம் போட்டு கொண்டிருக்க..,

’இந்த மாதவனை கவனிச்சிட்டு உன்ன கவனிக்கிறேன் தம்பி.. அதுவரைக்கும்.. நீ மருத்துவமனையில் ஒரு மாசம் மட்டும் விருந்தாளியா இரு..!’ எள்ளலாக நினைத்தவன், யாரிடமோ போனில் அழைத்து பேசிவிட்டு வைத்தவன்.. தற்காலிகமாக ஒரு கொசு தொல்லையை நீக்கியாச்சு.. என்று கூறிக்கொண்டு,

மீண்டும் தன் யோசனையில் ஆழ்ந்தவனை சிவா அழைக்க,

தன் யோசனை கலைத்து, சிவாவை பார்த்த சித்துவிற்கு நான் அவ்வளவு எச்சரித்தும் அஜாக்கிரதையாக இருந்த சிவாவை நினத்து லேசாக கோபம் வந்தது.. அதன் விளைவாக சிவாவை முறைத்து பார்க்க, பதிலுக்கு சிவாவும் சித்துவை முறைத்தான்..

’நீ செஞ்சதுக்கு நான் தான் உன் மேல கோபப்படனும்.. நீ என்னை முறைக்கிற..?” சித்து கேட்க..” உண்மையை சொல்லு இப்போ நடந்த தாக்குதல் உனக்கு எப்படி தெரியும்..? சரியான நேரத்துல் அங்க எப்படி வந்த..? அதுவும் மதியை பத்திரமா பார்த்துக்கன்னு ஆயிரம் தடவை எச்சரித்த..? ஏன்..?”  

”மறுபடியும் இது போட்டி கம்பெனி ஏற்பாடு செஞ்ச ஆளுகன்னு சொல்லாத.. கொஞ்ச நாளாகவே உன் முகத்துல ஒரு டென்சன் தெரியுது.. நீ என்கிட்ட இருந்து ஏதோ உண்மையை மறைக்கிற..! என்ன என்று என்கிட்ட சொல்லு சித்து..” சிவா கேட்க சித்து அமைதியாக இருந்தான்..

”டேய் உன்கிட்ட தான் கேட்கிறேன்..! என்ன உனக்குள்ள வச்சு மறைக்கிற.. ”அழுத்தமாக கேட்க, ”அடேங்கப்பா ரொம்ப பெரிய கண்டுபிடிப்பு தான்..!!” நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.. நம்ம கம்பெனியோட போட்டி கம்பெனி தான் மதியை தாக்க வந்தாங்க.. என் அப்புக்கு ஒரு ஆபத்துனா நான் எப்படி சும்மா இருப்பேன்..? அதான் டென்சன்.. அப்பறம் நான் எப்படி சரியா வந்தேன்னு கேட்டேல்ல.. டிரைவர் தான் கால் செஞ்சார்..”

”மதியோட பாதுகாப்புக்காக நான் தான் ஏற்பாடு செஞ்சேன்.. அவர் தற்காப்பு கலையில நல்ல பயிற்சி பெற்றவர்.. இருந்தாலும் அவருக்கு சந்தேகம் படும்படி எதாவது நடந்தால் எனக்கு போன் செய்ய சொல்லியிருந்தேன்.. அவர்தான் எனக்கு கால் செஞ்சார்.. ” என்று விளக்க சில நொடிகள் அமைதியாக இருந்த சிவா,

  ”அந்த போட்டி கம்பெனி யாரு..? இவ்வளவு ரிஸ்க் எடுத்து எதுக்கு இதெல்லாம்.. நமக்கு எதாவதுன்னா பரவாயில்லை.. ஆனால் மதிக்கு எதாவது ஆச்.. ” ” என் அப்புக்கு எதுவும் ஆகாது.. நான் ஆக விடமாட்டேன் ”சிவாவின் பேச்சை  பாதியில் நிறுத்தி உறுதியாக சொன்னவன்,

”நீ கேட்டதுக்கான விளக்கம் போன பதிவிலேயே சொல்லிட்டேன்.. இது வியாபார உலகம்.. நாம இது போதும்னு இருக்க கூடாது..! பிறந்தோம் ! வாழ்ந்தோம்! என்று இருக்காம வாழ்க்கையை அட்வென்ச்சராக எடுத்துக்கணும்.. ஒவ்வொரு நிமிசமும், ஒவ்வொரு நொடியும் சுவாரஸ்யத்தோட கழிக்கணும்..!”

 ”அடுத்து என்னங்கிற எதிர்பார்ப்போட இருக்கணும்..! அப்புவோட சேர்த்து உன்னையும் காப்பது என் கடமை.. இந்த வியாபார  உலகத்துல இருக்கிற நெளிவு சுளிவு உனக்கு தெரியாது சிவா.! நீ மதியை பார்த்துக்க.. நான் உங்க ரெண்டுபேரையும்  பார்த்துக்குவேன்.. நீ  எதை பத்தியும் கவலைப்படாமல் போ.. ”என்று சமாதானம் சொல்ல,

சித்து நீ வந்த பிறகுதான் நான் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்திருக்கேன்.. அது நான் உன் மேல வச்சிருக்கிற அதீத நம்பிக்கை.. இப்பவும் அந்த நம்பிக்கையோட போறேன்..! மதிக்கு எதுவும் ஆக கூடாது என்றுவிட்டு தன் பகுதிக்கு சென்றான்..

இங்கு அலுவலகத்தில், சூரியா கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.. சே.. ஜஸ்ட் மிஸ் ஆகிருச்சே..! திமிர் பிடிச்சவன் சரியான நேரத்துக்கு வந்து மதியை கூட்டி போய்ட்டானே.. பேசாம சித்துவை பற்றின உண்மையை மதிக்கிட்ட சொல்லலாமா..? என்று யோசித்தவன்.. உடனே நோ அதுதான் அந்த சித்துவை தாக்க இருக்கிற கடைசி பிரம்மாஸ்திரம்.. அதை இப்ப பயன்படுத்தக் கூடாது..

ஆனாலும் இதிலேயும் ஒரு சின்ன நன்மை இருக்கு!

இனி மதி என்னை எங்க பார்த்தாலும் ஒரு புன்னகை செய்வாள்ல அது போதும் அதை வச்சு நான் சிறப்பாக செய்றேன்..  என்று மனதில் திட்டம் போட்டவாறே.. சித்துவின் பலவீனம் எது என்பதை யோசிக்கலானான்..

எங்கு சுத்தினாலும் சித்துவின் பலவீனம் மதியிடமே வந்து நிற்க, சரி என்னால உன்னை ஜெயிக்க முடியலேன்னா மதியை முடிச்சிற வேண்டியதுதான்.. என்று முடிவு செய்ய

செல்போன் சத்தம் அவன் யோசனையை கலைத்தது.. எரிச்சலுடன் அதை காதில் வைக்க.. ஹாய் பேப்..  ஒரு கிள்ளை குரல் கொஞ்சி அழைக்க..

அந்த குரலில் தற்காலிகமாக மதியை மறந்து, ஹாய் நேகா டியர்..! ஃபாரின் டூர் முடிச்சு எப்ப வந்த..? உற்சாகமாக கேட்க, ஹேய் பேப் அங்க ஒரே போர்.. எதை பார்த்தாலும் உன் நினைப்பு தான்.. அதான் எல்லா ப்ரோகிராம் கேன்சல் செஞ்சுட்டு உன்னை பார்க்க வந்தேன்.. ‼ ஐயம் வெயிட்டிங் ஃபார் யூ பேப் கம் ஃபாஸ்ட்.. என்று கட்டளையிட்டு போனை அணைத்ததுஅந்த கிள்ளை குரல்.

போனிலேயே ஒரு முத்தம் பதித்தவன்.. அவசரமாக கிளம்பி வெளியே வரும் நேரம்.. மதியின் புகைப்படம் கண்ணில் பட,  சாரி மதி அந்த சித்து உன்கிட்ட நெருங்க விடாமல் என்னை டார்ச்சர் செய்றான்.. அவனை ஜெயிக்கிறதுக்கு எனக்கு கொஞ்சம் மைண்ட் ஃப்ரெஷ் ஆகணும்.. சோ நான் என் நேகா டார்லிங்கை பார்த்துட்டு வர்றேன் என்று விட்டு சென்றான்…

காரை ஓட்டி வந்த சூர்யாவின் செல்போன் சத்தமிட, புளூடூத்தை ஆன் செய்து காதில் வைத்தவன், ஹாய் பேப்.. எப்படி இருக்க..?அந்தே கிள்ளை குரல் பேசவும், குழப்பமடைந்த சூர்யா.. என்னாச்சு டியர் இப்போதான் பேசிட்டு வச்ச அதுக்குள்ளேயும் திரும்ப கால் பண்ற.. என்றவனிடம்…

வாட் பேப் நான் எப்போ கால் செஞ்சேன்..? கேட்டவளை ஒரு நிமிடம் லைனில் காத்தைருக்க சொன்னவன் இப்போது வந்த அழைப்பை பார்த்தான் அது வெளிநாட்டு அழைப்பாக இருக்க.. அப்போ முதல பேசினது யாரு..? என்று குழப்பத்தோடே காரை ஓட்ட,

ஹாய் ப்ரோ.. நீ மதியோட காருக்கு வச்ச அதே ஆணிக்கட்டையை உன் காருக்கு வச்சிருக்கேன்.. முடிஞ்சா தப்பிச்சிக்கோ..! என்று சித்துவின் செல்லில் இருந்து குறுந்தகவல் வர, சூர்யா சுதாரிப்பதற்குள் காரின் டையர் எதன் மீதோ ஏறி படார் என்று வெடிக்க நிலை தடுமாறி மரத்தின் மீது மோதினான்..

நேகாவை பார்க்கும் ஆர்வத்தில் சீட்பெல்ட் அணிய மறந்ததால், முன்புறம் மார்பில் இடித்து, கால் எதிலோ மாட்டிக்கொள்ள, வலியில் முணங்கினான்.. மெதுவாக காரில் இருந்து இறங்க முற்பட வலது காலை அவனால் அசைக்க கூட முடியவில்லை.. தன் மொபைலை தேடி எடுத்து, தன் பிஏவை அழைத்து சொல்லிவிட்டு மயக்கத்தில் ஆழ்ந்தான்..

மறுநாள் சித்து மாதவனை அவரின் அறையில் பார்க்க சென்றான்.. சித்துவை புன்னகையுடன் வரவேற்று இருக்கையில் அமர சொல்ல, அவன் உட்கார்ந்ததும்.. சொல்லு தமிழ் இவ்வளவு காலையிலேயே என்னை பார்க்க வந்திருக்க… சித்து எதற்காக வந்திருக்கிறான் என்று யூகித்திருந்தாலும் சித்துவின் வாயாலையே சொல்லட்டும் என்று கேட்க,

இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து டேபிளில் இரண்டு விரல்களில் தாளம் போட்டவாறே.. அது ஒண்ணும் இல்லை உங்களை பார்த்து பேசி ரொம்ப நாளாச்சே அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்..! வந்தேன்.. பார்த்தேன்.. கிளம்பறேன்.. என்று நக்கலாக பேசிவிட்டு எழ போக..

மாதவன் என்ன செய்வதென்று திகைத்தார்.

சே சரியான திமிர் பிடிச்சவன்.. மனதில் கறுவியபடி..  மதி விசயம் எவ்வளவு தூரம் வந்திருக்கு..? என்று அவராகவே பேச்சை ஆரம்பிக்க.. மாதவனின் கேள்வியில் வாய்க்குள்ளே சிரித்தவன் அவரை கூர்மையாக பார்க்க, இல்ல.. அன்னைக்கு மதி எல்லார் முன்னாடியும் உன்னை..கட்.. அவனின் பார்வையில் சொல்ல வந்த வார்த்தையை பாதியில் நிறுத்தி,

 மதி உன்னை காதலிக்கிறாங்கிறது தொண்ணூறு சதவீதம் எனக்கு உறுதி ஆகிருச்சு.. உன் வாயால கேட்டால்..அந்த பத்து சதவீதமும் உறுதி ஆகிரும்..! என்று சொல்ல

அந்த பத்து சதவீதத்தையும் ஏன் விட்டு வைக்கணும்..? உங்க சந்தேகம் நூறு சதவீதம் உண்மை..! மதி என்னை காதலிக்கிறா.. நானும்.. என்றவன், மாதவன் பார்வையில் தன்னை திருத்தி நானும் காதலிக்கிற மாதிரி நடிச்சிட்டு இருக்கேன்..  அடுத்து என்ன..? என்று கேட்க மாதவன் நீ என்ன நினைச்சிருக்க..?சித்துவை ஆழம் பார்க்க பதிலுக்கு கேட்டார்..

என் வேலையை நான் முடிச்சுட்டேன்.. அடுத்து என்ன செய்யணும்.. என்று நீங்க தான் சொல்லணும்..  எங்கே தான் அவசரப்பட்டு கல்யாணத்தை பற்றி பேசினால், மாதவனுக்கு சந்தேகம் வந்துவிடுமோ என்று அவரிடமே கேள்வியை திருப்பிவிட, மாதவன் யோசித்தார்..

சில நிமிடங்கள் யோசித்தவர், சரி உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிரலாம்.. ஆனால் அதுக்கு முன்னாடி நீயும், மதியும் இந்த பத்திரத்தில கையெழுத்து போடனும்..! உனக்கு மதிக்கிட்ட கையெழுத்து வாங்கிறது பெரிய விசயமா இருக்காது.. என்று கூறி சித்துவின் முன் இரண்டு பத்திரங்களை எடுத்து கொடுக்க.. மாதவன் திருமணத்தை முடிச்சரலாம் என்று சொன்னதில் அவரை நம்பாமல் பார்த்தவன்..

அவர் பத்திரத்தை கொடுக்கவும் அதை வாங்கி படித்து பார்த்தவன் தன்னை மீறி நோ என்று சத்தமிட மாதவன் அவனை கேலியாக பார்த்தார்..

என்ன தமிழ் காசை பார்த்ததும் உனக்கு மனசு மாறிடுச்சா..? நான் இதுல புதுசா எதுவும் எழுதலையே.. உனக்கும், மதிக்கும் வர்ற சொத்தை என்பேரில எழுதி கொடுக்கணும் என்று தான போட்டிருக்கேன்..! எதுக்காக நோ சொல்ற..! என்று கேட்டவர், சித்து அமைதியாக இருப்பதை பார்த்து

உனக்கு ஒண்ணு தெரியுமா..? எனக்கு கொஞ்ச நாளாகவே உன் மேல சந்தேகமாக இருந்தது..

நீ மதி மேல உண்மையான அன்பை காட்றியோ என்று கல்யாணம் ஆன பிறகு உன் மனசு மாறிட்டா.. அதுக்காகத்தான் இந்த முன்னேற்பாடு இப்போ இதுல நீ கையெழுத்து போடு.. உனக்கும் மதிக்கும் கல்யாணம் ஆனதும் இன்னொரு பத்திரத்துல மதிக்கிட்ட கையெழுத்து வாங்கி கொடு..! என்றவரை கேலியாக பார்த்தவன்..

என் மேல நம்பிக்கை இல்லேன்னு சொல்றிங்க.. அப்பறம்  நான் இந்த பத்திரத்தில கையெழுத்து போடுவேன்னு எப்படி இவ்வளவு உறுதியா நம்பறிங்க.. மிஸ்டர் மாதவன்.? என்று சித்து ஆச்சரியமாக கேட்க.. ஒரு நொடி சித்துவின் கேள்வியிலும், அவனின் பாவனையிலும் திகைத்த மாதவன் தன்னை சமாளித்து.. உனக்கு தான் இந்த சொத்து மேல எந்த ஆசையும் இல்லேல்ல அப்பறம் என்ன கையெழுத்து போட வேண்டியது தான..! என்றவரை அற்பமாக பார்த்தவன்,

என்மேல நம்பிக்கை இல்லாத உங்க கூட இனியும் நான் இருக்க மாட்டேன்.. என்னோட வேலை . அன்பை என்னை காதலிக்க வைக்கிறதோட முடிஞ்சது.. அதுவும் இது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்ததால உங்க திட்ட்த்திற்கு  சம்மதம் சொன்னேன்.. மதியும் என்னை விரும்ப ஆரம்பிச்சுட்டா.. என் வேலை அதோட முடிஞ்சது.. சரி உங்களுக்காக மதியை கல்யாணம் செஞ்சு சொத்தை உங்களுக்கு எழுதி கொடுக்கலாம்னு நினைச்சேன்..

எப்ப என்மேல சந்தேகப்பட்டிங்களோ இனி நான் எதுவும் செய்ய முடியாது.. இனி நீங்களே பார்த்துக்க்குங்க.. அப்பறம் இன்னொரு விசயம் நான் நோ என்று சொன்னது பத்திரத்தில சொத்தை உங்க பேர்ல மாத்துறதுக்காக இல்லை.. செந்தமிழ் அரசன் என் பேர் போட்றதுக்கு பதிலாக  சென்னை தமிழரசன் போட்ருக்காங்க.. அதுக்காகத்தான் அப்படி கத்தினேன்..

நீங்க எல்லாம் என்னத்தை படிச்சு பார்த்து வாங்குனிங்களோ..?என்று என்று கேலியாக பேசியவன்..

சரி நான் வந்த வேலை முடிஞ்சது.. இனி உங்களுக்கு எனக்கும்.. குறிப்பாக மதிக்கும்  எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.!. என்றுவிட்டு எழப்போக,

 மாதவன் தன் அவசரப்பட்டு செய்த தன் முட்டாள்த்தனத்தை எண்ணி நொந்தவாறே.. அவசரமாக சித்துவிடம் வந்தவர் அவன் கைகளை பிடித்துக் கொண்டு,  சாரி தமிழ்..! நீ மதிக்கிட்ட நடந்துக்கிறதை வச்சு உன்மேல லேசா சந்தேகப்பட்டுட்டேன்.. அதுக்காகத்தான் இந்த பத்திரத்தை ரெடி செஞ்சேன்..!

நான் செஞ்சது தப்பு தான் அதுக்காக எல்லாத்தையும் விட்டு போவியா..? அதுவும் எல்லாம் கைகூடி வர்ற நேரத்துல..! இப்ப என்ன  கல்யாணத்துக்கு முன்னால் இந்த பத்திரத்துல போடமாட்ட அவ்வளவு தான்..! போட வேண்டாம்.. வர்ற முகூர்த்த்தில உனக்கும் மதிக்கும் கல்யாணம் போதுமா.. வேகமாக பேசி அவனை சமாதானம் செய்ய, ‘அப்பாடா..! நிம்மதி பெருமூச்சு விட்டவன், இருந்தும் தன் கெத்தை விடாமல்,

நான் எப்பவும் சொல்றதுதான்.. இப்பவும் சொல்றேன்.. என்னை நம்பறதை தவிர உங்களுக்கு வேற வழியே இல்லை.. இந்த ஒருதடவை விட்றேன்.. என்னை சந்தேகப்பட்றது இதுதான் கடைசியாக இருக்கனும் என்று எச்சரித்துவிட்டு அவரின் கண் முன்னாலையே தன்னுடையை பேர் உள்ள பத்திரத்தை மட்டும் கிழித்து குப்பையில் போட்டவன்,

 சரியான பேர் எழுதி கொண்டுவாங்க, மதி கழுத்துல தாலி ஏறுன அடுத்த நாள் நீங்க ஆசைப்பட்டது நடக்கும்.. கூடவே ஒரு டைவர்ஸ் பத்திரமும் ரெடி செஞ்சு எடுத்துட்டு வாங்க..! என்றுவிட்டு வெளியே சென்றவனை  ஒன்றும் சொல்ல முடியாமல்  எப்ப்வும் போல அமைதியாக பார்த்திருந்தார்..

சித்து டைவர்ஸ் பத்திரம் கொண்டுவர சொன்னது அவருக்கு லேசாக நம்பிக்கையை கொடுத்த்து அந்த நம்பிக்கையுடன்..  பற்றிகொண்டு அமைதியாக ஒருந்தார்..  

மாதவன் அறையிலிருந்து வெளியே வந்த சித்து தனக்கு எதிரே வந்து கொண்டிருந்த வரதராஜனை பார்த்த்தும் ஒர் எண்ணம் தோன்றியது..

அதை உடனே செயல்படுத்தாவிட்டால் அவன் சித்து அல்லவே..! வரதராஜன் சித்து அருகில் வந்ததும், த்ச்..த்ச்.. பாவம் சார் நீங்க.. என்று வரதனை பார்த்து பாவப்பட, அவர் புரியாமல் விழித்தார்.. என்ன சொல்ற..? நான் எதுக்கு பாவம் கேட்டவருக்கு பதிலாக..

நீங்களும், உங்க மச்சானும் சேர்ந்து தான் அன்போட சொத்தை அபகரிக்க திட்டம் போட்டிங்க.. என்று கேள்வியுடன் நிறுத்த, வரதன் ஆம் என்று சொல்லவும், இப்ப நீங்க போட்ட திட்டம் நிறைவேற போகுது.. ஆனால் பாருங்க உங்க மச்சான் சொத்தை எல்லாம் அவர் பேருக்கு மாத்தி எழுத பத்திரம் ரெடி செஞ்சிருக்கார்..

 நல்லவேளை பத்திரத்தில என் பேர் மாறி இருக்கிறதால நான் கையெழுத்து போடலை..! இல்லேன்னா  என்று தோளை குலுக்கியவன்.. உங்க மச்சான் கிட்ட பார்த்து ஜாக்கிரதையா இருங்க.. என்று எச்சரித்தவனை நம்பாமல் பார்க்க…

நீங்க என்னை நம்பலேன்னா.. மதியிடம் கையெழுத்து வாங்கிறதுக்காக ஒரு பத்திரம் வச்சிருப்பார்.. அதை படிச்சு பாருங்க அப்போ புரியும்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்.. அதுக்குமேல உங்க விருப்பம் என்று அனுகுண்டை கொளுத்திவிட்டு போக.. சித்து சொன்னதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் மாதவனின் கேபினுக்கு சென்றார், அங்கு டேபிளின் மேல் பத்திரம் இருப்பதை பார்த்தவர்..

இது என்ன பத்திரம்..? என்று கேட்க, மாதவன் ஏதோ சிந்தனையில் இருந்ததால், வரதராஜன் வந்ததையோ, அவர் பேசியதையோ கவனிக்க வில்லை, வரதன் அந்த பத்திரத்தை எடுத்து படிக்க தொடங்க, சித்து சொன்னது போல, அதில் மாதவன் பேர் மட்டுமே இருப்பதை அறிந்து,  இது என்ன..? வரதன் மாதவனிடம் அழுத்தி கேட்க,

அந்த குரலில் தன் யோசனையை நிறுத்தி  ப்ச் அதான் படிச்சேல்ல அப்பறம் எதுக்கு கேட்கிற..? தன் திட்டம் வீணாகி போன சலிப்புடன் சொல்ல, நீ சொன்னது சரிதான் அந்த தமிழ் பையன் சரியான் கிரிமினலா இருக்கான்..

இனி நம்மளால எதுவும் செய்ய முடியாது.. அந்த தமிழை நம்பறதை தவிர வேற வழி இல்லை..! எல்லாம் இந்த சொத்து கைக்கு வரவரைக்கும் தான்.. அப்பறம் இருக்கு அவனுக்கு..! என்று கறுவியபடி வரதனை பார்க்க

அவர் அமைதியாக இருந்தார்..

 என்ன வரதா அமைதியா இருக்க..? கவலைப் படாத அந்த மதி சொத்தை கண்டிப்பா வாங்கிரலாம்.. என்று சொல்ல, சொத்து வாங்கிரலாம்.. ஆனால் அதை யார் பேருக்கு வாங்கிறதுன்னு சொல்லவே இல்லை..வரதன் எள்ளலாக கேட்க.. வரதனின் குரலில் இருந்த கிண்டலை உணர்ந்து அவரை நிமிர்ந்து பார்க்க,

என்ன வரதா பேச்சு ஒரு மாதிரி இருக்கு.. என்று கேட்க

 நம்பினவங்க எல்லாம் ஏமாத்தினால் பேச்சு ஒரு மாதிரிதான் வரும்.. பூடகமாக பேசியவரை புரியாமல் பார்த்த மாதவன்..  வரதா‼ நான் டென்சன்ல இருக்கேன்னா.. நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியலை.. சுத்தி வளைச்சு பேசாம; எதுவா இருந்தாலும் நேரடியாக பேசு.. மாதவன் சொல்ல,

 ஓ உனக்கு நீ என்ன செஞ்சேனு தெரியலையா..? இது என்ன சொத்து முழுவதும் உன் பேர்ல வர்ற மாதிரி எழுதி இருக்க.. அப்பறம் எனக்கு என்ன இருக்கு..? என்று கோபத்தோடு கேட்க, மற்ற நேரமாக இருந்திருந்தால், வரதராஜனிடம் பொறுமையாக பேசி இருப்பாரோ என்னவோ.. சித்து பேசிவிட்டு போனதில், கோபமாக இருந்தவர்..

அதனால என்ன கெட்டு போச்சு.. அதான் உங்களுக்கு செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சாச்சே இன்னும் என்ன சொத்து வேண்டி கிடக்கு.. அதுவும் வீட்டோட மாப்பிள்ளையா சொகுசாத்தானே இருக்க.. வேற என்ன வேணும்..? பதிலுக்கு மாதவனும் கோபமாக பேச, வீட்டோட மாப்பிள்ளை என்று சொன்னதில் வெட்கப்படாமல், சொகுசா இருக்கேனா.. யார் சொன்னது நான் சொகுசாக இருக்கேன்னு..? உன் தங்கச்சி வெளிநாட்டில இருந்து என்னை ஆட்டி வைக்கிறா.. இப்போ நேர்ல ஆட்டிவைக்க அடுத்தவாரம் இந்தியா வர்றாளாம்.. நீ என்னை வேண்டுமால் ஏமாத்தலாம்.. ஆனால் உன் தங்கச்சியை ஏமாத்த முடியாது..

வர்ற சொத்துல எனக்கு சரிபாதி வரலேன்னா.. நான் மதிக்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிருவேன்.. என்று மிரட்ட மாதவன் தலயில் கைவைத்து அமர்ந்து கொண்டார்.. இங்க பாரு வரதா அவசரப்படாத.. இப்ப என்ன சொத்து நம்ம ரெண்டுபேர் பேர்லயும் சரிபதி எழுதணும் அவ்வளவுதான.. செய்யலாம்.. ஆனால் அதுக்கு முன்னால ஒரு பெரிய தடை ஒண்ணு இருக்கு அது மதியோட கல்யாணம்.. என்று சொல்லி கொண்டு வந்தவர்..,

கடவுளே இந்த சித்துவை மறந்துட்டேனே..! இன்னும் அவனை வேற சமாளிக்கணும்..! தனக்குள்ளே புலம்பியபடி வரதனிடம் தமிழை அழைத்து வர சொல்ல போட்டுக்கொண்டிருந்த சண்டையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, தமிழை அழக்க சென்றார்..

தமிழ் வந்ததும் அவனிடம்.. தமிழ் நம்ம சித்துவை மறந்திட்டோம்..! அவனும் மதியை விரும்பறான்.. நீ அன்னைக்கு சொன்னியே மதி கழுத்தில நான் தான் தாலி கட்டுவேன்னு.. இப்போ என்ன செய்ய போற..? கேட்டவரை புன்சிரிப்புடன் பார்த்தவன்..

எனக்கும் இடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இனி நீங்களாச்சு, அந்த சித்துவாச்சு.. நான் நீங்க என்னி சந்தேகப்பட்டதிலிருந்து எனக்கு இதுல ஆர்வம் இல்லை.. சோ கல்யாணம் நல்லபடிய முடிஞ்சால் சொத்து உங்களுக்கு.. இல்லேன்னா..  என்று நிறுத்தியவன் வெளியே செல்ல போக..

தமிழ் தெரியாம அதை செஞ்சுட்டேன்.. அதை விடேன்.. இப்போ இதுக்கு என்ன வழி சொல்லு? என்று கேட்க, சரி சொல்றேன்.. நீங்க சிவாக்கிட்ட இந்த விசயத்தை சொல்லுங்க அவன் பார்த்துப்பான்.. என்று சொன்ன சித்துவை, நம்பாமல் பார்த்தவர்..அந்த சிவா பையனுக்கு சித்து ஃப்ரெண்ட் அவன் எப்படி சித்துவை வரவிடாமல் செய்வான்..: என்று கேட்க,

சிவாக்கு சித்துவைவிட, மதி முக்கியம்.. அவ சந்தோசம் முக்கியம்.. மதியோட சந்தோசம் என்கிட்ட தான் இருக்குன்னு அவனுக்கு தெரியும்.. சோ அவன் சித்துவை எங்க கல்யாணத்திற்கு வரவிடாமல் செய்ய முடியும்.. என்று உறுதியாக சொல்ல, மாதவனுக்கும் அதில் உடன்பாடு இருக்க.. தான் சிவாவிடம் பேசுவதாக கூறினார்..

மதி தன் கேபினில் வேலை செய்து கொண்டிருந்தவள் அவ்வப்பொழுது முகத்தில் இளம்புன்னகை வந்து போனது.. ஒரு கிளையன்டை பார்ப்பதற்காக வெளியே போகவேண்டிய வேலை இருப்பதால், மதியிடம் சொல்லிக்கொண்டு போக வந்த சிவா.. அவளின் அந்த புன்னகையை கண்டு அவளை தொல்லை செய்யாமல் சென்றான்..

 எதிரே வந்த சித்துவிடம்.. மதியை யாரும் தொல்லை செய்யாமல் பார்த்துக்கொள்ள சொன்னவன், தான் வெளியே போவதாக சொல்லி சென்றான்.. டேய் சிவா நான் உன்கிட்ட முக்கியமான விசயம் பேசணும் டா எங்க போற..? கேட்ட்ட சித்துவிற்கு எதுவா இருந்தாலும் நான் வந்த பிறகு பேசிக்கலாம்.. என்றுவிட்டு செல்ல,

 முக்கியமான விசயம்னு சொல்றேன் கண்டுக்காம போகுது பாரு பக்கி..! சிவாவை அர்ச்சனை செய்தவாறு மதியை பார்க்க சென்றான்..

சிவா சொல்லி சென்றதில் மதி உறங்குவதாக நினைத்து அவளின் அறைக்கதவை ஓசைப்படாமல் திறந்தவன்.. மதியின் கண்களும் முகமும் மலர்ந்து விகசிக்க சிரிப்புடன் வேலை செய்து கொண்டிருந்தவளை பார்த்திருந்த சித்துவிற்கு கண்களை விலக்க முடியவில்லை..

தன்னை அறியாமல் மதியை நெருங்கியவன் அவளின் எதிரே அமர்ந்து கன்னத்தில் கைவைத்து இமைக்காமல் பார்க்க எதேட்சையாக நிமிர்ந்த மதி அங்கு சித்து இருப்பதை பார்த்து அச்சுமா நீங்க எப்ப வந்திங்க..? நான் உங்களை பார்க்கலை  என்றவளுக்கு பதில் சொல்லாமல்.. அன்பு ரொம்ப அழகா இருக்கடா..!! பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.. ரசனையுடன் சொன்னவன் மதியை நெருங்க..

தன்னவனின் ரசனை பார்வையில் தலைகுனிந்த மதியின் மதி முகத்தை பற்றி அவள் இதழ்நோக்கி குணிந்தான்.. ஒரு நொடி மதி முகத்தை பார்த்தவன் அவள் முகத்தில் இருந்த சிறு பயத்தை பார்த்து தன்னை கட்டுப்படுத்தியவன், வழக்கம் போல அவளின் நெற்றியில் முத்தமிட்டான்..

 நீ எப்பவும் இப்படி சந்தோசமா சிரிச்சுட்டே இருக்கணும் டா செல்லா குட்டி.. என்று அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்..

நீங்க என் பக்கத்தில் இருக்கிற வரைக்கும் என் சிரிப்பு குறையாது அச்சுமா.. என்றவள் சுகமாக தன் அரசனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.. தன்னவளின் ஆசையை நிறைவேற்றுவதை போல அவளை இறுக அணைத்து கொண்டான்..

பாவம் அவளின் கண்ணீருக்கு தானே காரணம் ஆவோம் என்று அறிந்தால்….?

அரசன் ஆள்வான்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

என் நெஞ்சுநேர்பவளே -5

காதல் துளிரே -6