in

மௌனத்தின் மனசாட்சி -19

அத்தியாயம் 19

அரசுவும் குமணனும் அதிகாலை வாக்கிங்கில் வழக்கம் போல சந்தித்துக் கொண்டனர்.. சார் வேலை முடிஞ்சிட்டுது…

சரிநீங்க எதுவும் நேரடியா தலையிடலையே…?’

இல்லை சார். இதுக்குன்னு உள்ள ஆட்கள்தான். அதுவும் வேற ஒரு ஆள் மூலம் தான் பேசி இருக்கேன்…

அந்த ஆள் உங்க நம்பிக்கைக்கு உரியவரா..?”

ஆமாம்.. சார். அவரோட தொழிலே இதுதான். நம்மை மாதிரி உள்ளவங்களுக்கும்அந்த மாதிரி ஆட்களுக்கும் இடையில் உள்ளவர். தொழில் என்பதால் வாக்கு சுத்தம்..

ஓ.கே.. சார் ஆனால் கொஞ்சம் காஸ்டிலி. இதே வேற ஆட்கள் இருக்காங்க. அவங்க மூலம்  என்றால்  கொஞ்சம் கம்மி ஆகும்..

வேண்டாம் பணம் போனால் போகட்டும்.. இரண்டு மூன்று  பேர் தாண்டி செய்வதுதான் நல்லது. அப்பத்தான் நம்ம பெயர்  வெளியில் வராமல் இருக்கும். ஓ.கே.. இப்ப நம்ம  கம்பெனி ஷேர்ஸ் என்ன விலை போகுது..?’

நல்ல ரேட்டிங் தான் சார்..

புதுசா நான் போன வருடம் ஆரம்பித்த கம்ப்யூட்டர் கம்பெனி இப்ப நல்லாத்தானே போகுது..?

ஆமா சார்” 

அதை விற்பதற்கு ஏற்பாடு பண்ணு..” பதில் கேள்வி எதுவும் கேட்காமல் குமணன் தலையாட்டினான்..  

மார்க்கெட் ரேட் கிடைக்கணும். நிறைய பணத்தேவை இருக்கு. கவனம்..

ஓகே சார்..

இன்னைக்கு எதுவும் முக்கியமான மீட்டிங் இருக்கா..?”

இல்லை சார்..

சரி அப்ப நீங்க பார்த்துக்கோங்க..”  பேச்சு வார்த்தை முடிந்ததன் அடையாளமாக இருவரும் வேறுவேறு வழியில்  பயணப்பட்டனர்.

வீடு வந்ததும் தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டவன்,  ஏற்கனவே குமணன் சேகரித்து தந்த விஷயங்களை மறுபடியும்   கூர்மையாக கவனித்துபடித்து மேலும் சில திட்டங்களை தீட்டினான்.  அதை மறுபடியும் தனது மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்து,  அதில் எந்தவிதமான  பிசிறும் இல்லைஎன்பதை தெளிவாக தெரிந்து கொண்டுஅடுத்த அடியை எப்பொழுது ஆரம்பிக்கலாம் என்பதையும் தீர்மானம் செய்து கொண்ட பின்பே அறையை விட்டு வெளியே வந்தான்.

நேரம் பத்து மணிக்கு மேலாகி இருக்ககீழே  மயூராவின்  அறைக்கு சென்றான். வழக்கம்போல பதுமையாக ஜன்னல் ஓரம் நாற்காலியை போட்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்து  ஒரு சில நொடிகள் தயங்கியவன், “மயூரா..’ என்று அழைத்தான்.

 திரும்பிய மயூரா அரசுவை  கண்டதும் எழுந்து நின்றாள்.  உட்காரு…” என்று கூறிவிட்டு எதிரிலிருந்த படுக்கையில் ஒரு ஓரமாக அமர்ந்தவன், “சாப்பிட்டாச்சா..?” என்று கேட்க,

 தலையை மட்டும் ஆமாம்’  எனும் விதமாக தலையசைத்தாள்.. 

இப்படியே அறைக்குள்ள எத்தனை நாள் அடைந்து கிடக்க போற..?”  அவனது கேள்விக்கு பதில் வராமல் போகவே திரும்பவும் அழுத்தமாக அதே கேள்வியை கேட்டான்.

எனக்கு வெளில வரவே பிடிக்கல..

உன்னை யாரு இந்த வீட்டை விட்டு வெளியே வர சொன்னது..வீட்டுக்குள்ளேயே எத்தனையோ வேலை இருக்கு. அதை எல்லாம் செய்யலாமே. வேலை செய்யாட்டி கூட பரவாய் இல்லை. அறையை விட்டு வெளியில வா. சீதாம்மா கிட்ட சமையல் பத்தி பேசு. அல்லது அவங்க கிட்ட சமையல் கத்துக்கோ.  தோட்டக்காரனை வரச் சொல்றேன்தோட்டத்தை உன் இஷ்டப்படி அழகு படுத்து. இந்த வீடு ரொம்ப நாளா பூட்டி இருந்தது. இதுல எதவது மற்றம் பண்ணனுமா யோசி. அல்லது உன்னோட டான்ஸ் கண்டிநியூ பண்ணு. டீச்சர் வேணா வர சொல்றேன்..

அவன் சொல்ல சொல்லஎந்த வித முக பாவனையும் காட்டாமல் பாறை  மாதிரி இறுகிப் போய் இருந்தவளை பார்த்து, “நீ இப்படியே எதுவும்  பதில் பேசாமல் இருந்தால்எனக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு.  பேசாம கிருஷ்ணா கிட்ட உண்மையை  சொல்லி அவன்கிட்ட என்ன முடிவு எடுக்கலாம்..அப்படின்னு  வேணா கேட்கலாம்..

இல்லை வேண்டாம்..” அவசரமாய் கண்ணீருடன் பதில் சொன்னவlளிடம், “அப்ப இதுக்கு ஒரு முடிவு சொல்லு.  உங்க அம்மாவை வேணா  வர சொல்லவா…?”

வேணாம்எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கல,  பேச பிடிக்கல,  உயிரோடு இருக்கவே பிடிக்கல. என்னை ஏன் காப்பாத்துனீங்க. யாருக்கும் உபயோகம் இல்லாமல்,  எங்க அப்பாவுக்கும்அம்மாவுக்கும்  அவமானத்தை வாங்கிக் கொடுத்துட்டு நான் ஏன் உயிரோட இருக்கணும்…?”

இந்த கேள்விக்கு என்னால ஒரே ஒரு பதில்தான் சொல்ல முடியும்..  உன்னோட அவமானத்தை நீ  பெருசா நெனைச்சது தெரிஞ்சுதான் எதையும் யார்கிட்டயும் சொல்லாமல் நான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கேன். இல்லைனா எப்பவோ இந்த உண்மை கிருஷ்ணாவுக்கு தெரிஞ்சிருக்கும்..

வேண்டாம்,  அவருக்கு எந்த உண்மையும் தெரிய வேண்டாம்.  ஏற்கனவே ஒரு தடவை என்னால பட்டது போதும். இனியும் வேண்டாம்..

நான் சொல்றபடி கேளு.  கடவுள் கொடுத்த உயிரை,  அவரா எடுத்துக்கிற வரை  இந்த பூமியில நாம வாழ்ந்து தான் ஆகணும்.  நமக்கு நடக்கிற  நல்ல விஷயங்களுக்கு எப்படி அவர் பொறுப்பு ஏத்துப்பாரோ,  அதே மாதிரி கெட்ட விஷயங்களுக்கும் பொறுப்பு ஏத்துப்பார்.  சில விஷயங்களை மறந்துடணும்,  சில விஷயங்களை சகிச்சுக்கணும். இப்ப உனக்கு நடந்திருப்பது  எதிர்பாராதது. அதை மறக்க பார்..

முடியலையே..  கண்ணை மூடுனாலே அந்த காட்சிதான் என் கண்ணுக்குள்ள வந்து நிக்குது.  இதுவரை டாக்டர் கொடுத்த தூக்க மாத்திரை போட்டு தான் தூங்குறேன். இல்லேன்னா  என்னால தூங்கவே முடியாது..” முகம் கசங்க வெறுப்புடன் பதில்  கூறினாள்.

நாளைக்கு எனக்கு தெரிஞ்ச யோகா மாஸ்டர் லேடி ஒருத்தங்க இருக்காங்க. அவங்களை  உனக்கு யோகா கற்றுத் தர சொல்றேன்.  ஆரோக்கியமாக இருக்க கொஞ்சம் இயற்கை உணவுகளையும் சிபாரிசு பண்ண சொல்றேன்.   யோகா உன்னோட மனதையும் உடம்பையும் குணப்படுத்தும்.   இது நான் உன்கிட்ட அனுமதி கேட்கல. கட்டாயம்  நீ செஞ்சுதான் ஆகணும்.  

எப்படி உங்க அப்பா வார்த்தைக்கு கட்டுப்பட்டு எனக்கு மனைவியானியோ  அதுமாதிரி,  உன்னோட கணவனாநான் சொல்றதை கேட்டுத்தான்  ஆகணும்.  அதோட இன்னொரு விஷயம். நாளைக்கு திரும்ப அதே லேடி டாக்டர் கிட்ட போய் செக்கப்  பண்ணிட்டு வரணும்..  ரெடியாயிரு..” சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் வெளியே சென்றான்.

அவன் சென்றதும் தன் நிலையை நினைத்து அவமானத்தில் முகம் கருக்கபடுக்கையில் விழுந்த அழுதாள்  மயூரா.  கடவுளே என்னை ஏன் படைச்ச..இப்படி  கஷ்டப்படுத்தி அதை நீ வேடிக்கை பார்ப்பதற்காக..உனக்கு விளையாடுவதற்கு வேறு எதுவும்  கிடைக்கவில்லையா…? எனக்கு எதுக்கு இந்த நிலைமை..பெத்தவங்க முகத்துல கூட முழிக்க முடியாமல்வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா..ஐயோ கடைசி வரை என்னை இந்த பழி துரத்துமே..?’ மனதில் எண்ணங்கள் அலை அலையாய் கிளம்பி அவள் கண்ணீரை வரவழைத்தது.

இனி வாழ்நாள் முழுவதும் இந்த சோதனை தொடருமாதலைக்குள் 24 மணி நேரமும் ஓடுகின்ற இந்த எண்ணங்களின் பிடியிலிருந்து எப்படி தப்பிப்பது..?’ இரு கைகளால் மண்டையை பிடித்துக் கொண்டவள்அப்படியே நாற்காலியின் பின்பக்கம் சாய்ந்தாள்..

அப்போது உள்ளே வந்த சீதாம்மா, “அம்மா உங்களை  தேடி ஒரு பொண்ணு வந்து இருக்காங்க..” என்றதும் நிமிர்ந்து பார்த்து யார்’ என்று பாவனையோடு கண்களைச் சுருக்க, “பெயர் இதயான்னு சொன்னாங்க…” என்றார்.

அந்த பெயரைக் கேட்டதும் கண்கள் கலங்க வரவேண்டாம் என்று சொல்வதற்காக வாயைத் திறக்கும் முன் அறையின் வாயிலில் அவள்  நிற்பதை  கண்டாள். உள்ளே நுழைந்த பின்பும் மயூரா வாயைத் திறக்காமல் இருக்க, “நீங்க போங்க நான் பாத்துக்குறேன் அவ என்னோட பிரண்டு தான்..” என்று சொல்லி சீதாவை அறையை விட்டு வெளியே அனுப்பிவிட்டு கதவை தாள் போட்டு விட்டு மயூராவின் அருகில் வந்தாள்.

அவள் அருகில் வரும் வரை கண்ணீருடன் விழி அகலாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மயூராவை கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். அதிர்ச்சியில் கன்னத்தை பிடித்துக் கொண்டவளை   பார்த்து என்னடிஏன் அடிச்சேன்னு  பாக்குறியா…? இந்த அடி நான் அடிச்சது இல்லை. அவனுக்கு  பதில்  நான்  அடிச்சேன். எப்படிடி  அவனுக்கு துரோகம் பண்ண உனக்கு மனசு வந்தது…? உன்னோட துரோகத்தால் இன்னைக்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க தெரியுமா…?” ரௌத்ரமாக நின்றாள்.

தெரியும்ஏன் ஒரு அடியோடு நிறுத்திட்டே..இன்னும் அடி, அல்லது கழுத்தை நெரிச்சு ஒரேடியா கொன்னுடு.. நீ  அதை செய்யலாம். உனக்கு அந்த உரிமை இருக்கு. எனக்கு நிம்மதியா போகும். ஏண்டா உயிரோட இருக்கோம்னு நித்தம் சாகுற இந்த வேதனை வேண்டாம்…” என்று கூறிவிட்டு கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழுதவளை  அணைத்துக் கொண்டாள்.

என்னடி என்ன நடந்தது..?”

பதில் சொல்லாமல் மேலும் அழுதவளின் முகத்தை நிமிர்த்தி இப்ப நீ பதில் சொல்லப் போறியா..அல்லது நான் அவனை  இங்க வரவழைக்கவா…? 

வேண்டாம்அதை மட்டும் செஞ்சிராதே. என்னால அவர் முகத்தை பார்க்க முடியாது. அன்னைக்கு ஒரு நாள் பார்த்ததேஎன் ஆயுசுக்கும் போதும். அன்று அவர் என்னைப் பார்த்த பார்வை இந்த நிமிஷம் கூட என் நெஞ்சை குத்தி கிழிக்குது…!”

இப்படி அவனுக்காக உருகுறவஏன் அரசு அத்தானை  கல்யாணம் பண்ணினே..?” 

விரக்தியுடன் அவளை பார்த்த மயூரா, “நான் என்ன வேணும்னா இவரை தேடிப்பிடிச்சு கல்யாணம் பண்ணுனேன்..அதுவா நடந்தது. அதுமட்டுமல்ல. வேற என்ன எல்லாமோ நடந்துச்சு. ஆனா எதுவுமே என் விருப்பப்படி நடக்கல…!” 

ஏய் எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு. கொஞ்சம் புரியும்படியா பேசு..!”

இது என்னோட போக வேண்டிய விஷயம். என்கிட்ட எதுவும் கேட்காதே..” அதற்கு மேல் சொல்ல மறுத்து மீண்டும் அழுதவளை திட்ட மனமில்லாமல் நெருங்கி அணைத்துக் கொண்டாள்..

இத்தனை நாள் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்ததும்கேட்க  ஆள் இருந்தும் சொல்ல முடியாமல் தவிப்பதும் மயூராவின் முறை யாயிற்று.

என்ன கேட்டாலும் அவளிடமிருந்து பதில் வராது என்பதும்மேலும் கேட்பது அவளது உடல் நலத்தைப் பாதிக்கும் என்று தெரிந்ததால் ஒன்றுமே கூறாமல் மௌனமாக அவளை அணைத்தபடி இருந்தாள் இதயா.

கதவு நாசுக்காக தட்டப்படும் சத்தம் கேட்டதும்அவசரமாக தன் கண்களைத் துடைத்துக் கொண்டவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுஇதயாவே எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

வெளியில் அரசு அத்தான் நிற்பதைப் பார்த்ததும் கோபத்தோடு வழிவிட்டு விலகி நின்றாள். உள்ளே வந்தவன்இருவரையும்   பார்த்தான். 

இதையா நீ எப்ப இந்தியா வந்தே..?”  எதுவுமே நடக்காதது போல் அவளை  விசாரித்தான்.

சரியான ராட்சசன். எதையாவது முகத்துல காட்டிக்கிறானா பாரு..’ மனதுக்குள் அர்ச்சனை செய்தாள்.

நான் வந்து ஒரு வாரம் ஆச்சு..” 

என்ன லீவு எடுத்துட்டு வந்திருக்கியா..?”

இல்ல ரிசைன் பண்ணிட்டேன்.  சென்னையில் இன்னொரு கம்பெனில போஸ்டிங் கிடைச்சிருக்கு. நாளைக்கு ஜாயின் பண்ணணும்..”

அந்த வேலை என்ன ஆச்சு..?”

பிடிக்கலை. வேலை தானே. அதனால தூக்கி கடாசிட்டு வந்துட்டேன்..!” அவள் கூறியதன் மறைபொருளை அவன் உணராமல் இல்லை. அதையெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு மேலும் விசாரித்தான்.

எதுவுமே நடக்காதது என்பது போல் பாவனையில்அவன் மேலும் பேசப்பேச ஆத்திரமடைந்தவள்  “என்னத்தான் கல்யாணம் ஆனதும் ரொம்பத்தான் மாறிட்டீங்க போல இருக்கு…? அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை..?” குத்தலாக அவள் வினவியது m,

விசாரிக்க என்ன இருக்கு..அவங்க எல்லாரும் நல்லா இருப்பாங்க என்ற நம்பிக்கைதான்..” தன்னம்பிக்கையான பதிலில் அவளை சமாளித்தான். மேலும் அவள் கேள்வி கேட்பதற்கு முன், “எனக்கு ஒரு உதவி பண்ணு இதயாஅடிக்கடி வந்து உன் பிரண்ட பாத்துட்டு போ…” அவன் சொன்னதும் ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்தினாள் இதயா.

அவளது ஆச்சரியத்தை பார்த்துவிட்டு, “மயூராவுக்கு கொஞ்சம் போரிங்கா இருக்கு. நீ கொஞ்சம் வந்துட்டு போனா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.”

ஏன்அதான் வேலைக்கு போயிட்டு தானே இருந்தாஇப்பவும் அதை கண்டினியூ பண்ண சொல்ல வேண்டியது தானே…”

என்னோட மனைவி வேலைக்கு போகணும்னு அவசியமில்லை..” அழுத்தமான குரலில் கூறியவன் உன்னோட பிரண்டுக்கு உதவி செய்யணும்னு நெனச்சேன்னா வா. இல்லைனா எனக்கு ஒன்றும் இல்ல..” தோளைக் குலுக்கி விட்டு மயூராவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்றான்.

அவன் சென்றதும் தோழியிடம் திரும்பியவள், “புருஷனும் பொண்டாட்டியும் சாமர்த்தியமா பேசுறீங்க. நான் வரேன்..” கோபத்துடன் மொழிந்து விட்டு கிளம்பினாள் இதையா.   அவள் செல்வதையே கையாலாகாத தன்மையுடன் பார்த்து இருந்து விட்டு மயூரா நிராசையுடன் கண்களை மூடிக்கொண்டாள்.

தனது எதிரில் அமர்ந்திருந்த இதயாவையே இமைக்காமல் பார்த்தார் பிரபாகரன். 

சொல்லுமா உன் பிரண்ட பார்த்தியா..?”

ஆமா அங்கிள்பார்த்தேன்..?”

என்ன சொன்னா..?”

எதுவுமே சொல்லல. அவளை பார்த்தா சொல்லக்கூடிய நிலையில் கூட இல்லை. சதா அழுது அழுது அவன் மூஞ்சியை ஒரு மாதிரி இருக்கு. ஆள்பாதி ஆயிட்டா. என்ன கேள்வி கேட்டாலும் அழுகையை தவிர எந்த பதிலும் இல்லை.  தான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட்னு புலம்பறா. அவ கிட்ட எதையும் என்னால வாங்க  முடியல…”

நீ போறப்ப அரசு இருந்தானா..?”

இல்லை அங்கிள்.. நான் போறப்ப  அத்தான் இல்லை. கொஞ்ச நேரத்தில் வந்துட்டாங்க…”

உன்னைப் பார்த்ததும் என்ன சொன்னான்..?”

அவங்க ஒண்ணும்  தெரியாத மாதிரி என்னோட வேலை பத்தி விசாரிச்சாங்க. அப்புறம் உன்னோட ஃப்ரண்ட் பார்க்க அடிக்கடி வான்னு சொல்லி அனுப்பினாங்க..” 

ஆக மொத்தம் நீ போயும் ஒண்ணும்  தெரிஞ்சிக்க முடியல. ம்ம்  என்றவர்,  மேஜை மீதிருந்த டேபிள் வெயிட்டை உருட்டினார்.

மாமாஎனக்கு தெரிஞ்சு மயூரா தப்பான பொண்ணு கிடையாது. அத்தானும் தப்பான ஆள் கிடையாது. இரண்டு பேருக்கு இடையிலே என்னமோ நடந்திருக்கு. அது மயூராவுக்கு பிடித்தம் இல்லாத விஷயம் தான். ஆனா வேற வழி இல்லாம இருக்கான்னு தோணுது..”

சரிம் மா பார்க்கலாம். நீ கிளம்பு. கார்ல தான வந்தே. அதிலேயே வீட்டுக்கு போயிடு..” அவளை அனுப்பிவிட்டு யோசிக்க ஆரம்பித்தார். அதற்குள் அவரது பிஏ தியாகராஜன் உள்ளே நுழைந்தார்.

அவரது காதுக்கு அருகில் வந்து சில விஷயங்களை ரகசியமாக சொல்ல, “அப்படியா எத்தனை நாள் ஆச்சு..?”

இரண்டு நாள் தான் இருக்கும் சார்.. யார்கிட்டயும் சொல்லாமல் கமுக்கமா காரியத்தை முடித்து இருக்காங்க..!”

விஷயம் கன்ஃபார்ம் தானே..!”

ஆமாம் சார். உறுதியான தகவல் தான்..”

சரி நீங்க போங்க.. வேற ஏதாவது விஷயம் நடக்குதான்னு கவனித்து வந்து  சொல்லுங்க..!” அவரை அனுப்பி விட்டு யோசனையில் ஆழ்ந்தார்.

சரியாக ஒரு வாரம் கழித்து ஐந்து நண்பர்களின் பாண்டியன் தவிர மீதி நான்கு பேரும்அதே ரெஸ்டாரண்டில் சந்தித்தனர்.. நண்பனை இழந்த சோகம் மனதினுள்  இருக்க அமைதியாக மது அருந்தி கொண்டிருந்தனர்..

டேய் நிதானம் தவறாமல் தண்ணி அடிங்கபாண்டியனுக்கும் நடந்தது ஞாபகத்தில் இருக்கட்டும்..” 

இல்லடா எவ்வளவு அடிச்சாலும் அவன் நிதானம் தவறக்  கூடியவன்  இல்லைஎனக்கு என்னவோ அந்த லாரி டிரைவர் மேல தான் சந்தேகமா இருக்கு…” சம்பத் கூறினான்.

அந்த டிரைவருக்கு இவனுக்கும் என்ன பிரச்சனை நமக்கு தெரியாமல்..?” 

நமக்கு தெரியாம வேற எதுவும் காரியம் அவன் பண்ணினானா..?”

இல்ல எந்த விஷயமும் நம்மகிட்ட அவன் மறைத்தது கிடையாது.. எப்படி இருந்தாலும் நம்ம எல்லாரும் ஒரே பிசினஸ் தானே பண்றோம்.. எங்கேயோ இடிக்குது மச்சி…”

அடுத்த வாரம் முக்கியமான வெட்டிங்டே பார்ட்டி இருக்கு.. எல்லாரும் கரெக்டா வந்து விடுவீங்க தானே..

கண்டிப்பாஅந்த இன்விடேஷன் நாளைக்கு உள்ள கிடைக்கும்..” அவர்கள் பேசிக் கொண்டனர் அதன் பின்னர் அரை மணி நேரம் வேறு ஏதோ பேசிவிட்டு அனைவரும் கிளம்பினர். அதுவரையிலும் அவர்களது பின்பக்கம் உள்ள டேபிளில் அமர்ந்து கூல்ட்ரிங்ஸ் ஒன்றை குடித்துக்கொண்டே போனில் கவனமாக இருந்த ஒருவன் பேரரை அழைத்து பில்லை செட்டில் பண்ணிவிட்டு வெளியில் சென்றான்.

தனது பைக்கை எடுத்துக்கொண்டு சற்று தூரம் சென்ற அவன் ஆள் அரவம் இல்லாத இடத்தில் நிறுத்தி போனை எடுத்து பேசினான்.. தான் அதுவரையிலும் கேட்ட விஷயங்களை எதிர்ப்புறம் இருந்த நபரிடம்  ஒப்பித்து விட்டு அவர் கூறிய விஷயங்களை காதில் வாங்கிக்கொண்டு தனது பைக்கை கிளப்பி சென்றான்.

கிருஷ்ணாவும் சத்யஜித்தும் கமிஷனர் தங்களுக்கு கொடுத்த கேஸ் பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தனர். நான் நினைச்சது சரிதான்டாஅந்த ஐந்து பேருக்கும்  போதை மருந்துபெண்கள் கடத்தல் விவகாரத்திற்கும்  நிச்சயம் தொடர்பு இருக்கு. ஆனால் அவங்க  தனிச்சு இதை செய்யல. வேற யாரோ ஒரு பெரிய கை அவங்களுக்கு மேல இருக்கு அதைத்தான் நாம கண்டுபிடிக்கணும்..” என்றான் கிருஷ்ணா.

இதுவரை காணாம போன பொண்ணுங்க யாராவது திரும்பி உயிரோட வந்து இருக்காங்களா..சத்யஜித்தின் கேள்விக்கு கிருஷ்ணா இல்லை எனும் விதமாக தலையாட்டினான்.

ஒண்ணு ரெண்டு தான் பாடி கிடைச்சிருக்குஅப்ப மத்த பொண்ணுங்க..

நிச்சயமா பாம்பேக்கு கடத்தி இருக்கணும்அல்லது பாடியை எங்காவது டிஸ்போஸ் பண்ணியிருக்கணும்…” கிருஷ்ணா உறுதியாகக் கூறினான்.

பாண்டியன் கொலை வழக்குக்கும் இந்த விஷயத்திற்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்கு…!” யோசனையுடன் கூறிய கிருஷ்ணாவை பார்த்து

நீ என்ன சொல்ல வர..?”

அந்தக் கேஸ் ஆக்சிடெண்ட் கிடையாது.. ஆக்சிடெண்ட் மாதிரி உள்ள கொலை.. ஆனா ரொம்ப தெளிவா ஸ்கெட்ச் போட்டு பண்ணி இருக்காங்க..”

யாராயிருக்கும்..?”

இந்தமாதிரி தொழில் பண்றவனுக்கு எல்லாம் ஆயிரம் எதிரிங்க இருப்பாங்க. நாமதான் கண்டு பிடிக்கணும்..” பேசிக் கொண்டிருக்கையிலேயே கமிஷனர் இடமிருந்து கிருஷ்ணாவுக்கு போன் வந்தது..

மிஸ்டர்  கிருஷ்ணா பாண்டியன் கேஸ் எந்த அளவில் இருக்கு..?”

சார் அது கன்ஃபார்மா ஆக்சிடென்ட் தான். அவர் குடிச்சிட்டு வண்டி ஓட்டி இருக்கிறார். சோ நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மேல   மோதிட்டார்…? இன்சூரன்ஸ் கூட கிடைக்க வாய்ப்பில்லை சார். கேஸ் தெளிவாக இருக்கு. லாரி டிரைவரை பிடிச்சாச்சு. விசாரிச்சதில் அவன் மேல தப்பு இல்ல…!” கிருஷ்ணா பேசுவதையே   சத்யஜித் யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் போனை வைத்ததும், “என்னடா என் கிட்ட ஒண்ணு  சொன்னே…, கமிஷனர் கிட்ட வேற  சொல்றே…?”

ஆமாம் இப்பவே என் சந்தேகத்தை சொன்னா அதுக்கு ஆதாரத்தை கேட்பார்.. கண்டு பிடிச்சிட்டே சொல்லுவோம்..!” நண்பனின்  பேச்சு வித்தியாசமாக தெரிந்தது. ஆனாலும் பதில் ஒன்றும் சொல்லவில்லை..

அன்று இரவு வெகுநேரம்வரை அலுவலகத்தில் அமர்ந்து பழைய குற்றவாளிகளின் பைல்களை எடுத்து அவர்களின் தற்போதைய கேஸ் ஹிஸ்டரிஎல்லாவற்றையும் விசாரித்து தனிப்பட்ட முறையில் ஒரு பைல் உருவாக்கினான். இரவு 11 மணிக்கு மேல் வீட்டுக்கு சென்றவன் படுக்கும் போது நள்ளிரவு தாண்டிற்று.

அதிகாலை நாலு மணிக்கு அவனது அலைபேசி ஒலித்த சத்தத்தில் விழித்துக்கொண்டான்.. ஸ்டேஷனிலிருந்து தான்கான்ஸ்டபிள் தான் பேசினார். “சார் ஆக்சிடென்ட்டுன்னு தகவல் வந்து இருக்கு சார்..” 

எங்க..எப்ப…?”

எப்பன்னு தெரியல சார். சிட்டியை விட்டு அவுட்டர். கார் ஒரு தோப்புக்குள்ள இருக்கிற மரத்தில் மோதி ஆள் ஸ்பாட் அவுட்…”

யார் பார்த்து தகவல் சொன்னா..?”

ரோட்டிலிருந்து கொஞ்சம் இறக்கம். அதனால ரோட்டுமேல போற கார் எதுவும் கவனிக்கல.. இப்பதான் காலையில தோப்புக்குள்ள ஒதுங்க போனவங்க பாத்துட்டு போன் பண்ணி இருக்காங்க..?”

யார் ஸ்பாட்டுக்கு போயிருக்கா..?”

அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கனி போயிருக்கிறார் சார்…? அந்த ஸ்டேஷனில் இருந்து தான் எனக்கு தகவல் வந்தது சார்..”

சரி அவர் வந்ததும் எனக்கு பேச சொல்லு..” என்றவன் எழுந்து ஜாக்கிங் செல்வதற்காக ட்ராக் சூட்டை மாட்டிக்கொண்டுவெளியில் கிளம்பினான். ஏதோ தோன்ற கார் சாவி எடுத்துக் கொண்டவன் நேராக கடற்கரை செலுத்தினாள். அங்கு சற்று நேரம் ஜாக்கிங் சென்றான். திரும்பி வரும்போது ஓரிடத்தில் அரசுவும்அவனது பிஏ குமணனும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தான். சற்று தூரத்திலேயே அவர்களை பார்த்து விட்டதால்பார்த்ததை வெளிக்காட்டிக் கொள்ளாதுதொடர்ந்து ஓடி தனது கார் நிற்கும் இடம் சென்றான்.

கார் கதவை திறந்து உள்ளிருந்து டவலை எடுத்து முகம் கைகளை துடைத்துக் கொண்டே,  அண்ணன் நின்றிருந்த இடத்தை பார்க்கஅந்த இடம் இப்போது வெறுமையாக இருந்தது. அவர்கள் இருவரையும் காணவில்லை.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 10 சராசரி: 4.6]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by Ajudhya Kanthan Stories

என்னுடைய பெயர் உமா பாக்கியம். சிறு வயதில் இருந்தே கதைகள் வாசிப்பது என்றால் மிகவும் பிடித்தமான விஷயம். வாசித்து முடித்ததும் அதே கதைக்கு வேறு சில கற்பனைகளை பொருத்தி பார்ப்பது வழக்கம். அந்தக் கனவு தற்போது நனவாகி இருக்கிறது. எனது கனவுகளை எனக்குள் புதைந்து போக விடாமல் சிலவற்றிற்கு வடிவம் கொடுத்து இருக்கிறேன். எனது மனதில் தோன்றும் எல்லா கருத்துக்களும் கதை வடிவம் பெற்று விடுவதில்லை.. சில எண்ணங்கள் என்னை மீறி எனக்குள்  அழுத்தும் போது அவை கதையாக உருவெடுக்கிறது.. என்னுடைய கற்பனை மனிதர்களை உங்களுடன் உலாவ விடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.. அவர்களை நிரந்தரமாக உங்கள் மனதில் வைத்து பூட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் அஜுத்யா காந்தன்...

Story MakerList MakerContent AuthorVideo MakerYears Of Membership

💞மறுமண(ன)த்தில் இணைந்த இதயம்💞5

காதல் துளிரே -5