in

💞மறுமண(ன)த்தில் இணைந்த இதயம்💞5

                                 💘5💘

கீர்த்தியின் வார்த்தைகளில் ஆட்டம் கண்டு போனவன் மனதின் ஆட்டம் இரவைத் தாண்டியும் நின்ற பாடில்லை….

அதே நிலையில் தான் அவன் தாய் வேதவல்லியும்.. அவருக்குள் ஏற்பட்ட ஆனந்தத்தில் இதயத்துடிப்பு சீராக இயங்கவில்லை… முன்னுக்கு பின் முரண்பட தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டார் வேதவல்லி….

இது ஒன்றும் அவருக்கு புதிதல்ல…அடிக்கடி நடப்பதுதான் ஆனால் இன்று நடப்பதில் சிறு  வித்தியாசம்…  என்னவென்றால் முன்பு கவலையில்… இன்று முதல் மகிழ்ச்சியில்….தன் மகனுக்கேற்ற துணை கிடைத்ததாக அவர் மனம் கருதுவதால் தான் மகிழ்ச்சி….

கீர்த்தியின் வீட்டில் நடந்தவை அனைத்தும் போலி….  அவள் பேசியவை அனைத்தும் பொய்கள்…. என்று தெரிந்தால் இவர்களின் நிலை என்னவாகும்…

எத்தனை நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியும்….உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெளி வந்தே தீரும் ஆனால் தாமதமாகும்….என்றும் பொய்த்துப் போகாதே இதை அறியாதவளாய் ஒன்றும் இல்லை நாயகியாகிய கீர்த்தி

இந்த உண்மை திருமணத்திற்கு முன் வெளிப்பட்டால் அத்திருமணம் மட்டுமே தடைபடும்…… அதுவே திருமணத்திற்கு பின் தெரிந்தால் இரு மனமும் நோகும்….அத்தோடு நிற்காமல் இருவரின் குடும்பமும் சேர்ந்து நிலை குலையும்….

இங்கு இவர்களது மனம் ஆனந்தத்திலும் அதிர்ச்சியும் ஆட்டம் காண…. அங்கே கீர்த்தி யின் மனம் குற்ற உணர்ச்சியில் ஆட்டம் கண்டது…. நாம் ஏன் அவ்வாறு நடந்து கொண்டோம்…. நடந்தது சரியா…தவறான நம்பிக்கையை விதைத்து விட்டோமோ…என்று அவள் மனமானது அவளிடம் கேள்விகளைக் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தது…. மனசாட்சியின் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை…. “”இதுவும் ஒருவகையான நம்பிக்கை துரோகம் தான்…. கைலாஷ் உனக்குச் செய்ததை நீ வினய்க்கும் அவன் அம்மாவிற்கும் செய்கிறாய்…. இது எந்த வகையில் நியாயம் ஆகும்… உனக்கு அவனைப் பார்க்கவே விருப்பமில்லை என்றாய்….பின் எதற்காக அவன் தாயை அத்தை என்ற ஆசை வார்த்தைக் கூறி வஞ்சித்தாய்….””என்று சராமாரியான கேள்விக் கனைகளைத் தொடுக்க கூனிக்குறுகிப் போய் கட்டிலில் சுருண்டு விழுந்தாள்….கண்களில் ஏனோ கண்ணீர் கசியவில்லை…

இப்படியே பித்துப்பிடித்தவளாய் யோசித்துக் கொண்டே இருந்தாள்
‘எனக்கு கைலாஷ் செய்த துரோகத்தை ஒரு போதும் நான் யாருக்கும் செய்ய மாட்டேன்… அவர்களிடம் சென்று திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறிவிடலாம்’ என யோசித்து மனம் கேட்ட கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்….காலை எப்போது புலரும் என காத்திருந்தாள் கீர்த்தி….

வினய் வீட்டு விலாசத்தை எப்படி கண்டு பிடிப்பது யாரிடம் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்ததில் தூக்கம் கலைந்தது…. அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க வீட்டில் உள்ள மரத்தால் செய்யப்பட்ட அலமாரியை நோக்கித் தானாகவே கால்கள் படையெடுத்தன….காரணம் முக்கியமானது என்று எண்ணி விட்டால் சிறு துரும்பாயினும் அங்குதான் இருக்கும் அவர்கள் வீட்டைப் பொறுத்தவரை….

அலமாரியைத் திறந்தாள் கண்ணில் உடனே பட்டது சிவப்பு நிற ஃபைல்…அதை எடுத்தவள் கண்களில் பட்டது வினய்யின் ஆதார் அடையாள அட்டை…… இதை திருமணத்தை பதிவு செய்வதற்காக நேசன் வாங்கி வைத்திருந்தார்…. தேடிவந்த வேலை சுலபமாய் முடிந்ததில் புன்னகை கூட‌ வந்தது….  கையில் எடுத்தவள் பேரைப் படித்தாள்… “”கலைச்செழியன்….ம்ஹும் செழியன்…சுத்தமான தமிழ் பெயர் நல்ல ரசனையான ஆளா இருப்பாரு போல”என்று மெதுவாய் சிரிப்புடன் கூறினாள் வாய்விட்டே தான்….

விலாசத்தைப் பார்த்தால் வெளியூர் விலாசமாக இருந்தது…. ஒருவித குழப்பத்தில் மூழ்கினாள் ஒளிக்காக தொலைபேசியை எடுத்து வந்தவள் முகவரியையும் தொலை பேசி எண்ணையும் குறித்துக் கொண்டும்… போட்டோவும் எடுத்துக் கொண்டாள் தொலைந்து போகாமல் இருக்க…..

இருந்ததை இருந்த இடத்தில் வைத்துவிட்டு மெதுவாய் தன் அறைக்குள் வந்து தொலைபேசி எண்ணையே குறுகுறுவென பார்த்தாள்….

வினய்யை தொடர்பு கொண்டு தன் மனநிலையை விளக்கி திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என எண்ணியவள் நேரத்தை மறந்து போனாள் என்றுதான் கூற வேண்டும்… அந்நேரம் சரியாக ஒலியை எழுப்பி மணி பதினொன்று எனக் காட்டி அவளுக்கு நினைவு படுத்தியது அவள் அறை கடிகாரம்….

“ஆத்தாடி‌ ந‌ல்ல வேளை இல்லைனா மானம் போயிருக்கும் என்று தன் நெற்றியில் தன் தொலைபேசி உதவிக் கொண்டு கொட்டிக் கொண்டிருக்க அவள் அலைபேசி சைலண்டில் இருந்ததால் வைப்ரேட் ஆனது…
தொலைபேசியை பார்த்துவிட்டு இதயம் ஒரு நிமிடம் நின்று போனது…அவள் அழைப்பதற்காக கண்டெடுத்த  அதே எண்ணில் இருந்து வந்தது…ஆம் அழைத்து வினய் தான்

இணையுமா இருமனம் கொண்ட மறுமணம்…..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

கோம்ஸ் – மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! – மண(ன)ம் 12

மௌனத்தின் மனசாட்சி -19