in ,

34 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன

தன்னவளை எண்ணியபடியே சுவற்றை வருடிட, தன்னவன் தன் அருகில் இருப்பது போன்றே உணர்ந்த மானஸ்வியும் ஆழ்ந்த நித்திரைக்குள் புகுந்தாள். 

இடையில் கண் விழித்த கௌசிக்கிற்கு ரிக்ஷிதாவை காண வேண்டும் போல் இருக்க, மெல்ல படுக்கையில் இருந்து எழுந்தான். பக்கத்துக்கு அறையை திறக்க போகையில், “உள்ள நாலு பொண்ணுங்க தூங்குறாங்க தேனுவ மட்டும் எப்படி பாக்குறது. ப்ச்… முதல்ல இதுக்காகவே நாலு பெட் ரூம் இருக்குற வீடா பார்க்கணும்…” என்று யோசித்தபடி நின்றவன், எதிரில் சமர் அவனை முறைத்து பார்த்து கொண்டிருப்பதை கண்டு திருதிருவென விழித்தான்.

“என்ன?” என விழி உயர்த்தி சமர் வினவ, “சும்மா மாப்ள. உள்ள ஒரே புழுக்கமா இருந்துச்சு. அதான்…” என்று எச்சிலை விழுங்கிட, சமரோ, “ஓ! இந்த ரூம் வாசல்ல நின்னா காத்து வருமா? எனக்கு எதுவும் வரல?” என்றான் நக்கலாக.

“ஐயோ…” என நொந்த கௌசிக், “எனக்கும் வரல மாப்ள. அதுனால நான் நம்ம ரூமுக்கே போய் தூங்குறேன்…” என்று நகர போக, அவனை தடுத்தவன், “உன் நடவடிக்கை எதுவும் சரி இல்லடா மாப்ள! தேவை இல்லாத பிரச்சனையை கிளப்பாத…” என்று அதட்டினான். 

அதில் கௌசிக் முகம் தான் வாடி விட, அவனை அமைதியாக நோக்கியவன் “நீ ரிக்ஷியை விரும்புறியா?” எனக் கேட்டான்.

அக்கேள்வியில் விழுக்கென நிமிர்ந்தவன், “ம்ம்…” என தலையாட்டினான் பாவமாக. “சுத்தம்… என தலையில் அடித்த சமரிடம், “அவளுக்கும் என்னை பிடிக்கும்டா. என்னமோ தெரியல. அவள் மேல எனக்கு அவ்ளோ அன்பு! ஏதோ நான் இழந்தது அவள் மூலமா கிடைச்ச மாதிரி இருக்குடா. என் மனசுல இருக்குற குற்ற உணர்ச்சி கூட இந்த அஞ்சு வருசமா அவள் என்கூட இருந்தப்போ சுத்தமா இல்ல. என்ன உணர்வுன்னு புரியல மாப்ள. ஆனால் அவள் என்கூட இருக்கும் போது நான் நிம்மதியா இருக்கேன்…” என்றவனின் விழி பதிலின்றி கலங்கி இருந்தது.

அவன் பேச்சில் உருகிய இருந்த சமர் தான், நீர்த்திரையிட்ட கண்ணீரை மறைத்துக் கொண்டு, அவனை சமன் செய்திட, “அதெல்லாம் சரி தான். அந்த புள்ள உன்ன விரும்புனாலும் உன் கல்யாணம் இந்த ஜென்மத்துல நடக்காது” என்றான் சலிப்பாக.

“ஏன்?” என கௌசிக் விழிக்க, “அவள் சம்மதிச்சாலும் அவளுக்கு அக்காக்காரி ஒருத்தி இருக்காளே. அவள் சம்மதிக்கணும்” என கடுப்படிக்க, கௌசிக் தான், “ஏன் ஏன்? அவள் ஏன் சம்மதிக்கணும் ? தேனு சம்மதம் தான் எனக்கு முக்கியம்” என சிலுப்பிக்கொண்டான்.

அதில் அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்த சமர், “இதே மாதிரி கடைசி வரை சொல்றியான்னு நானும் பார்க்குறேன்…” என்று விட்டு, அவன் மேலும் குழம்பியதும், “இல்ல டா… முத்து விஷயத்துலையே அவள் இம்சை தாங்கல. என் அம்மா என் தாத்தா கிட்ட பேசி, ராசாத்தியை முத்துவுக்கு கல்யாணம் பண்ணிக்கிறதை பத்தி முடிவே எடுத்துட்டாங்க. ஆனால் இவள் அதை ஒத்துக்க மாட்டேங்குறா. ராசாத்தி இதை பத்தி வாயே தொறக்க மாட்டேங்குறா…? இவன் என்னன்னா மன்னி சொன்னா தான் கல்யாணம் பண்ணுவேன்னு அமைதியா இருக்கான். என் தம்பியே அவள் சொல்றதை கேக்குற அளவுக்கு இருக்கான். அப்போ ரிக்ஷி…?” என இழுத்தான்.

கௌசிக் தான், “உன் தம்பி லூசு டா…! அதான் இன்னும் கரெக்ட் பண்ண தெரியாம இருக்கான். நான் எல்லாம் அப்படி இல்ல” என்றவன் வீராப்பாக அறைக்கு சென்றான். நாயாய் பேயாய் அலைய போவதை அறியாமல். 

‘பாப்போம்டி மாப்ள…’ என புன்னகைத்துக் கொண்ட சமர், அடுக்களைக்குள் பாத்திரம் உருட்டும் சத்தமும், கூடவே அறையில் குழந்தை சிணுங்கும் சத்தமும் கேட்டிட, அடுக்களைக்கு வந்தவன், அங்கு அவனின் துணைவியார் தான் தட்டு தடுமாறி அடுப்பை பற்ற வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதை கண்டான்.

“என்ன அரக்கி பண்ற?” எனக் கேட்டவனை, திரும்பி முறைத்தவள் மீண்டும் தன் வேலையில் கவனமாக, சமருக்கு தான் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. 

“உன்ன தான்டி கேக்குறேன் என்ன பண்ற?” என மீண்டும் அவன் அழுத்தமாக கேட்க, “பார்த்தா தெரியல…? பால் காய்ச்சுறேன்… அந்த பாப்பா அழுகுது!” என்றவள், ஏதோ யோசித்து பின், பாலை பாக்கெட்டின் முனையை வெட்டி பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு மீண்டும் முயற்சிக்க அடுப்பு மட்டும் எரியவே இல்லை.

“ப்ச்… உன் பிரெண்டு ஒரு அடுப்பை கூட ஒழுங்கா வைச்சுக்க மாட்டானா?” என கடுப்படித்தவளை, ரசனையாக பார்த்தவன், மெதுவாக அவள் அருகில் சென்று அவளின் காலருகில் அமர்ந்தான்.

அதில் திடுக்கிட்ட மானஸ்வி, பின்னால் நகர்ந்து என பேந்த பேந்த விழிக்க, அவனோ மேலும் பொங்கிய புன்னகையுடன், “உதவி பண்ணனும்னு நினைக்கிறது பெருசு இல்ல. அதை கேச ஆன் பண்ணிட்டு பண்ணணும்…!” என்று நக்கலாய் பார்த்தபடியே, கேஸை ஆன் செய்து அடுப்பை பற்ற வைக்க, “அரிய பெரிய கண்டுபிடிப்பு பாரு!” என்று முணுமுணுத்தாள்.

அவனோ அதனை கண்டுகொள்ளாமல், “ஆமா, அவள் பால் கூடையா காய்ச்சி வைக்காம இருந்துருப்பா. பால் பாட்டில்ல பால் இல்லையா?” என வினவ, அதற்கும் திருதிருவென விழித்திட, குழந்தை சிணுங்கும் சத்தமும் அடங்கி விட்டது.

குழந்தை லேசாய் சிணுங்கியதுமே கண் விழித்தவள், ராசாத்தி உறங்குவதை கண்டு குழந்தையை தூக்க தான் போனாள். ஆனால் பசிக்கு தான் அழுகிறது போல என எண்ணி, வேகமாக பால் காய்ச்ச வந்தவள் அருகில் இருந்த பால் பாட்டிலை கவனிக்கவே இல்லை.

இப்போது சே… இதை கவனிக்கலையே என்று அசடு வலிந்து நின்றவளின் பாவனையை கை கட்டி ரசித்திருந்த  சமரின் போன் அடித்ததில் எதுவும் பேசாமல் அவன் அறைக்கு சென்றான். போனை ஆன் செய்யும் முன்பே அவன் பின் வந்திருந்த மானஸ்வி அதனை வெடுக்கென பிடுங்கி பார்க்க, அதில் அவளின் பாடி கார்ட்டின் எண் தான் மின்னியது.

அவனை முறைத்தபடியே போனை காதில் வைக்க, எதிர்முனையில் “சார்… நிகிலேஷையும் மத்த மூணு லேண்ட் ஓனர்சயும் நாக்பூர்க்கு தூக்கிட்டு வந்தாச்சு. நாலு பேரும் மயக்கத்துல தான் இருக்காங்க…” என்ற தகவலை கொடுக்க, “ஹோ… என்ன மிஸ்டர் பாலு! எப்போ இருந்து இந்த சாருக்கு அடியாளா மாறுனீங்க” என்ற மானஸ்வியின் குரலில் திடுக்கிட்டான்.

“மேம்… மேம்… அது… நீங்க தான மேம் சொன்னீங்க. அவர் என்ன சொன்னாலும் செய்ய சொல்லி” என்றான் மென்று விழுங்கி. “என்ன சொன்னாலும் செய்ன்னு சொன்னா என்கிட்ட கூட சொல்லாம செய்வியா? உனக்கு சம்பளம் நான் குடுக்குறேனா? இல்ல அவன் குடுக்குறானா?” என்று பல்லைக்கடித்து கடிந்தவள் போனை வைத்து விட்டு சமரை தீயாக முறைத்தாள்.

“உன் மனசுல நீ என்ன தான் நினைச்சுட்டு இருக்க…? ரிக்ஷிதா உயிரோட இருக்கான்னு என்கிட்ட சொல்லவே இல்ல.  இப்போ நிகிலேஷை தூக்கிட்டு வந்துட்ட? பத்தாததுக்கு கை குழந்தையோட அந்த பொண்ணையும் கூட பிகினிக் வர்ற மாதிரி கூட்டிட்டு வந்துருக்க…?” என்றாள் காரமாக.

அதில் அவளை மீண்டும் அடுக்களைக்கே இழுத்து வந்தவன், “மனு… ரிக்ஷி பத்தி ஏன் சொல்லலைன்னு நான் நைட்டு தான் காரணம் சொன்னேன். அப்பறம் அந்த நிகிலேஷ ரிக்ஷி கையாள இங்கயே சாவடி அடிக்க வைக்கனும். மறுபடியும் அவள் சென்னைக்கு வரும்போது நிகிலேஷ் அப்படின்ற அத்தியாயம் முடிஞ்சு போனதா இருக்கணும். அதான் அவனை இங்கயே தூக்கிட்டு வரவைச்சேன்” என்றான் முடிவாக.

மானஸ்வி தான், அவனை மென்மையாக நோக்கி, “அது சரி காட்டான். ஆனால், நீ இதுல நேரடியா தலையிடாத. போலீஸ் கேஸ் அது இதுன்னு ஆனா பிரச்சனை ஆகிடும். அது மட்டும் இல்ல. நிகிலேஷ தான் நம்ம லாக் பண்ணிருக்கோம். அந்த ஜேபி இந்நேரம் நம்மளை சுத்தி வலை விரிச்சுருப்பான். நான் விசாரிச்சது வர, ஒரு பெரிய அரசியல்வாதியோட பினாமி அவன்” என்றதில் “ஓ!” என்றான் ஏளனமாக.

“என்ன ‘ஓ'”? என அவளை முறைத்தபடி வினவ, அவனோ சிறு சிரிப்புடன் ‘நீ சொன்னதுக்கு தான் ஓ சொன்னேன்…” என்றான் நக்கலாக. 

“ப்ச்… மறவா! நீ என்ன பண்ணாலும் நான் அமைதியா இருந்தது உன்னோட இழப்பும் அதிகம்ன்ற நால தான். ஆனால் நீ என்கிட்டயே சொல்லாம என்னென்னமோ பண்ணிட்டு இருக்க…? நீ முன்னாடியே இதான் பண்ண போறேன்னு சொன்னா தான் நான் லீகலா எல்லாம் பிளான் பண்ண முடியும். இல்லைன்னா, உன்ன தூக்கி உள்ள போட்டுருவானுங்க. உனக்கு புரியுதா இல்லையா?” என்றாள் சற்றே கோபமாக.

அதில் அவளை நெருங்கியவன், “சரிடி அரக்கி. நான் எது பண்ணாலும் சொல்லிட்டு பண்றேன்… சரியா…?” என்றவனின் குரல் தேய்ந்து கொண்டே செல்ல, “இப்போ ஒரு முத்தம் குடுக்க போறேன்… நீ சட்டப்படி என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ…” என்றவனின் குரலில் குறும்பு கூத்தாட, தன்னிச்சயாய் அவளின் இதழிலும் குறுநகை பிறந்தது.

ஆனால் உடனே அதனை மறைத்து, “நான் கேட்ட மூணாவது கேள்விக்கு பதில் வரல…” என்றாள் அவனை தள்ளி விட்டு.

“சரியான இம்சைடி… நீ! ஹ்ம்ம்… ராசாத்திக்கு ஒரு மனமாற்றமா இருக்கும்ன்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன். அவளுக்கு முத்துவை பிடிச்சுருக்கு. இப்போ வரை அவனை முழுசா நம்புறா…! ஆனால் ஒரு குழப்பம், இப்போ இருக்குற சூழ்நிலை அவளை முடிவெடுக்க முடியாத மாதிரி தடுக்குது. இதே மனநிலையோடு ஊருக்கு போனா, அவ மாமியார் பேசுற பேச்சுல மறுபடியும் அவள் இறுகிடுவா…! ஒரு விஷயத்தை புரிய வைக்கனும்னா சொல்லி புரியவைக்கலாம். ஆனால் அவளை பொறுத்தவரை எல்லாமே அவளுக்கு புரியும். மன முதிர்ச்சி அதிகம் அவளுக்கு. எப்போவுமே நம்ம பிரச்சனையை விட அடுத்தவங்க பிரச்சனையை பார்த்தா நம்ம பிரச்சனை ஒன்னும் இல்லைன்ற மனநிலை வரும். அதே மாதிரி இங்க நடக்குறது பார்த்து ரிக்ஷி பத்தி தெரிஞ்சு அவளும் ஒரு தெளிவான முடிவுக்கு வருவா… அது தான் காரணம் போதுமா?” என்றான் ஆழமாக.

அவளோ அவனை அமைதியாக பார்த்து, “சோ, சார் மேட்ரிமோனி ஸ்டார்ட் பண்ணிட்டீங்க?” என நக்கலுடன் வினவ, அவன் முறைத்தான்.

“ஆனால் ஒன்னு, அப்படி நீ உன் தம்பிக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணா அந்த குழந்தையை ஏதாவது ஆஸ்ரமத்துல கொண்டு போய் விட்டுடு…” என்று கூறி முடிக்கும் முன் கண்ணில் ரௌத்திரத்தை கக்கி இருந்தான்.

“அறைஞ்சுருவேன் மானஸ்வி. இங்க யாருமே ரெண்டாவது கல்யாணம் பண்ணி நல்லா இல்லையா? உனக்கு அப்பாவா வந்தவன் அப்படி இருந்தான்னு எல்லாரையும் அப்படியே நினைக்கிறது முட்டாள் தானம்…” என்றான் கடும் கோபத்துடன்.

அவன் வார்த்தையில் அவள் அடிபட்ட பார்வை பார்க்க, அதில் சட்டென கனிந்தவன், “இல்ல மனுமா…! நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற? உண்மையான அன்பு இருந்தா எந்த குறையும் நம்ம கண்ணுக்கு தெரியாது. யாரையும் கஷ்டப்படுத்தவும் தோணாது. இத்தனைக்கும் அவள் அவனை காதலிச்சுருக்கா. நீ இப்படி நம்பிக்கை இல்லாம பேசுனா அவள் குழம்புன மனசு இன்னும் காயப்படும்” என்று புரியவைக்க முயன்றான்.

“ஓ… உண்மையான அன்பு இருந்தா குறை கூட கண்ணுக்கு தெரியாதா? ஐ ஆம் நாட் அக்ரீ வித் திஸ் சமர். ஒருத்தர் மேல நம்ம வைக்கிற அன்பே அவங்க மேல எந்த குறையும் இல்லன்னு நினைச்சு தான். அப்படி இருக்கும் போது குறை கூட நம்ம கண்ணனுக்கு தெரியாதா? சரி நான் தெரியாம தான் கேக்குறேன். நீ என்னை கோபத்துல தான கல்யாணம் பண்ண…? அப்பறம் ஏதேதோ நினைப்புல நானும் என்ன பத்தி உங்கிட்ட சொன்னேன். ஒருவேளை அந்த விபச்சார விடுதியில் நான் தப்பிக்க முடியாம மாட்டி இருந்து, அங்க சீரழிஞ்சுருந்தா கூட  நீ இப்படி தான் இருந்துருப்பியா?” என அவள் கேட்ட அடுத்த நொடி அவன் கை பழுத்திருந்தது.

பின்னே, எழுந்த பெரும் சினத்தை அடக்க இயலாது அடுப்பில் இருந்த பால் சட்டியை வெறும் கையால் சிதறவைத்ததோடு, ஆற்றாமையில் எரிந்திருந்த அடுப்பில் அல்லவா கையை வைத்திருந்தான். 

அதில் அதிர்ந்து திகைத்த மானஸ்வி, காட்டான் என்னடா பண்ணி வைச்சுருக்க? என பதறி உடனே அடுப்பை அணைத்து விட்டு, அவன் கையை பிடிக்க போக, அதற்குள் ராசாத்தியும் அருகில் வந்திருந்தாள். “ஐயா என்ன ஆச்சு?” என அரண்டு. 

அவளும் இத்தனை நேரமும் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். ஆனால் அவனோ கோபம் சிறிதும் அடங்காமல் “போ…” என உறுமினான் அவன் மனையாளிடம்.

“மறவா… கையை காட்டு வெந்து போயிருக்கு என்ன பண்ற நீ?” என்று அவள் திக்கி திணறி, நீர்த்திவலைகள் வழிந்தோட அவன் அருகில் வர, அவனோ “பக்கத்துல வராத… கீழ பால் கொட்டிருக்கு கால்ல பட்டுடும். போ முதல்ல…” என்றான், அப்பொழுது அவளை காக்க. இத்தனை கலவரத்திலும் பால் பாத்திரத்தை அவளுக்கு எதிர் திசையில் தான் பறக்க விட்டிருந்தான்.

இந்த சத்தத்தில் உறங்கி கொண்டிருந்த அத்தனை பேரும் அங்கு ஆஜராகி அதிர்ந்து நோக்க, மானஸ்விக்கு தான் கண்ணை கரித்தது. “மறவா… ஹாஸ்பிடல் போலாம் ப்ளீஸ்…” என்று அவள் கெஞ்சிட, “உன்ன போ ன்னு சொன்னேன். இப்போ நீ போறியா… இல்லையா?” என்றான் வெகுவாய் கண்ணெல்லாம் சிவந்து.

கௌசிக், வேகமாக முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு வர, முடிவாய் அவனின் கையை நீட்ட மறுத்தான். ஆர்யவோ “உனக்கென்ன பைத்தியம் புடிச்சிருக்கா சமர்…? மருந்தை போடு. செப்டிக் ஆகிடும்” என்றான் பதற்றத்துடன். 

அவனோ மானஸ்வி புறம் கையை நீட்டி “முதல்ல அவளை போக சொல்லு. அவள் என் கண்ணு முன்னாடி இருந்தா நான் மனுசனா இருக்க மாட்டேன்…” என்றான் ஆர்யவை அழுத்தமாக பார்த்து.

அதில் அவன் தான் செய்வதறியாது நின்றான். ரிக்ஷியோ கண்ணில் நீர் ததும்ப நின்றிருந்த மானஸ்வியை சற்றே வியப்பாய் பார்த்து விட்டு, “அண்ணா!” என ஆரம்பிக்க, “சொன்னது யார் காதுக்கும் விழுகலையா?” என்றான் வீடே அதிரும் சத்தத்தில். 

இதில் கௌசிக் தான் ‘இவனால நம்ம நாளைக்கு வீட காலி பண்ண போறது உறுதி…! வாடகை வீடுடா கத்தாதடா!’ என மனதில் புலம்பியவன், “நீ தான் போயேன் சொர்ணாக்கா” என மானஸ்வியை கடுப்பாக பார்த்தான். 

ஆனால் அவள் உதட்ட்டைக்கடித்த படி கலங்கிய முகத்துடன் வெளியேறியதில் அவனுக்கு தான் ஏதோ போல் ஆகி விட்டது. “ஏன்டா… கத்துற… பாவம் அந்த பொண்ணு…” என உடனேயே பேக் பல்ட்டி அடித்து சமரின் ரௌத்திர பார்வைக்கு ஆளாகி பின் மௌன விரதத்தை கையாண்டான்.

சமருக்கு தான் நெஞ்சம் தீயாய் எரிந்தது. “என்ன கேள்வி கேட்டு விட்டாள்…?” என ஆதங்கம் தாளாது பொழுது நன்றாக விடியும் வரை எங்கோ வெறித்திருந்தவன், பின் சுயத்திற்கு வந்து அவனையே பார்த்திருந்த ரிக்ஷிதாவிடம் “கிளம்பு வெளிய போகணும்!” என்றான் இறுக்கமாக.

அவளோ புரியாது விழிக்க, ஆர்யவ் “எங்க?” எனக் கேட்டதும் “நான் அவளை கிளம்ப தான் சொன்னேன்…!” என கர்ஜித்தவன் அறைக்கு சென்றான். பின், சட்டென வெளியில் வந்து “என் போன் எங்க?” என்று பொதுவாய் வினவ, கௌசிக்கும் “ரூம் ல தானடா வைச்சுருப்ப?” என்றான் குழம்பி.

“ப்ச் இல்ல” என்று அங்கும் இங்கும் தேடியவன் அதன் பிறகே அது மானஸ்வியின் கையில் இருந்தது நினைவு வர, “சே…” என கோபத்துடன் காலை தரையில் உடைத்தவன், ஆர்யவிடம் இருந்து போனை பிடுங்கி வேகமாக அவனின் எண்ணிற்கு அழைத்தான். அவன் செயலில் மற்றவர்கள் தான் பீதியுடன் அவனையே பார்த்திருந்தனர்.

சில நொடியில் அவன் போன் எடுக்கப்பட, “அரக்கி?” என்றான் கேள்வியாக. 

ஆனால் அவனுக்கு எதிரொலித்ததோ ஒரு ஆண் குரல் தான். என்ன சமர்? உன் பொண்டாட்டிய தேடுறியா? என் மேலயே கையை வைச்சு, என் அஸ்திவாரத்தையே ஆட்ட பார்க்குற உன்ன…? என வெறியாய் ஒருவன் உறுமிட, துடிதுடித்த மனதை வெகு சிரமப்பட்டு அடக்கிய சமர் “மானஸ்வி எங்க?” என பல்லைக்கடித்துக் கொண்டு வினவினான்.

அதில் அவன் தான் சமரால் காயமான காயமான நெற்றியை நீவிய படி, விகாரமாய் ஒரு சிரிப்பை சிந்தி, “நீ என்னை கடத்தி வைச்ச இடத்துல தான், என் பொண்ணு என்கிட்ட பத்திரமா இருக்கா…! ப்ச் ப்ச்… இல்ல இல்ல… பொண்ணுன்னு எந்த உறவு முறையில சொல்றது…? ஹ்ம்ம்? நான் போட்ட வலையில இருந்து தப்பிச்சு என் கண்ணுல மண்ணை தூவுனவ… தொக்கா என்கிட்ட உன்னாலேயே மாட்டிக்கிட்டா… என் பழைய கணக்கை இங்கயே இப்போவே முடிச்சுடுறேன்!” என்றவனின் குரலில் வெறி மிஞ்சி இருக்க, இங்கோ சமருக்கு வெறியே பிடித்திருந்தது.

“என் மனு மேல உன் சுண்டு விரல் பட்டா கூட நான் நினைச்சதை விட உன் சாவு கொடூரமா இருக்கு ஜெயப்ரகாஷ்…” என மிரட்டியவன் அடுத்த கணம் அங்கு செல்ல பரபரக்க, அப்பெயரை கேட்ட ஆர்யவ் உறைந்து நின்றான். 

ரிக்ஷிதாவோ “அக்கா எங்கண்ணா? என்ன ஆச்சு அவளுக்கு?” என்று பதறிவிட, “சொல்றேன்… ஆரி வா!” என அவனை அழைத்தவன் என்ன நடக்கிறது என புரியாமல் நின்றிருந்த கௌசிக்கை “நீயும் வா!” என கட்டளையிட்டு வெளியில் செல்ல, கௌசிக் தான் “என்ன ஏன் கூப்புடுறான்?” என்று முணுமுணுத்தான்.

முத்துவை ராசாத்தியுடன் இருக்க சொல்லி விட, முத்துவோ, “ஒருவேளை அடிதடி பண்ண ஆள் இல்லைன்னு அண்ணே உங்களை கூப்பிடுது போலண்ணே” என யோசனையுடன் கூற, “ஏன் அவன் பொண்டாட்டிகிட்ட அடி வாங்குனது பத்தலையா…? ஆமா ஏண்டா திடீர்னு எல்லாரும் ப்ரீஸ் மோடுக்கு போயிட்டு பரபரன்னு இருக்காங்க” என்றான் தலையை சொரிந்து.

“என்னை கேட்டா…? சீக்கிரம் போங்க. அண்ணே கத்த போக போவுது…!” என்றான் அவசரமாக. இதில் எழில் வேறு ஆர்யவை பதட்டமாய் பார்த்தபடி “மாமா நானும் வரேன்” என்று காரி ஏறி அமர, கௌசிக்கோ ‘மாப்ள நமக்கு தெரியாம டூர் எதுவும் பிளான் பண்ணிருக்கானா?’ என்றே அறியவிருக்கும் அதிர்ச்சி புரியாது குழம்பினான்.

அங்கோ, உதட்டில் இருந்தும் நெற்றியில் இருந்தும் உதிரம் வழிய ஜெபி என்கிற ஜெயப்ரகாஷை கண்டு விழியால் நெருப்பை உமிழ்ந்தாள் மானஸ்வி.

சற்று நேரம் முன்பு, சமர் திட்டியதில் கண்ணீருடன் வெளியில் வந்து விட்ட மானஸ்விக்கு, சமரின் போன் அடித்ததும் தான் அவன் போனை தானே கையில் வைத்துக்கொண்டிருக்கிறோம் என்றே உரைத்தது.

பின், அதனை எடுத்து விட, எதிர்முனையில் அவளின் பாடி கார்ட் தான் பேசினான் பதற்றமாக. 

“சார், நம்ம கடத்திட்டு வந்த ஜேபி மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்சுட்டான் சார். எப்படியோ கட்டி இருந்த கயற வேற அவுத்துருக்கான். அவனோட ஆளுங்க வந்து நம்ம ஆளுங்கள அடிச்சுட்டானுங்க சார். நீங்க சீக்கிரம் வாங்க…” என்றிட, அவளோ “நீங்க எங்க இருக்கீங்க இப்போ?” எனக் கேட்டாள்.

மானஸ்வி குரல் கேட்டதும் “மேம், சார் எனக்கு லொகேஷன் அனுப்பி இருப்பாரு” என்று கூறும் முன் அவன் அலறல் சத்தம் கேட்க அவள் திடுக்கிட்டாள்.

“ஷிட்…படிச்சு படிச்சு சொல்லியும் ஜேபியை கடத்துனதை என் கிட்ட சொல்லவே இல்ல இவன்…” என நொந்தவள் மறு கணம், அவன் போனில் இருந்து இடத்தை கண்டறிந்து அங்கு விரைந்தாள். ஏதோ பழைய வீடு போன்று இருந்திட, ‘யாரு அந்த ஜேபின்னு தெரிஞ்சு, இன்னைக்கு அவனை கண்டம் துண்டமா வெட்டல…’ என கடும் கோபத்துடன் உள்ளே சென்றவள், அங்கு ஜெயப்ரகாஷ் நிற்பதை கண்டு அதிர்ந்து போனாள்.

அவளை கண்ட ஜெய்பிரகாஷும், “வருக… வருக…! நான் நினைச்ச ஒரு நாள் இன்னைக்கு வந்துடுச்சு. உன் புருஷன் எனக்கு விரிச்ச வலைல, என்கிட்ட நீ வந்து விழுந்துட்டியே மானஸ்வி. இந்த சித்தப்பாவை உனக்கு ஞாபகம் இருக்கா?” என கண்ணைக்கசக்கி பாவப்படுவது போல் வினவியவரின் முன்னே காளியாய் நின்றிருந்தாள்.

“எப்படிடா மறக்க முடியும்? என் அம்மாவை என் முன்னாடியே கொன்னு… என் மொத்த சந்தோஷத்தையும் அழிச்சு… தலைமறைவா ஜேபின்னு பேரை மாத்திட்டு கோழை மாதிரி ஒளிஞ்சு இருந்த… உன்ன நான் எப்படி மறப்பேன்…?” என கடினத்துடன் பேசியவள், கட்டையை எடுத்து அடிக்க போக, அவளை தடுத்த ஜேபி ஓங்கி அவளை அறைந்தார். அதில் சுவற்றில் சென்று மோதியவளின் நெற்றியிலும் உதட்டிலும் ரத்தம் வழிந்தது. 

“ஹா ஹா… உனக்கு இன்னும் புரியல மானஸ்வி. என் அடையாளத்தை மறைச்சுட்டு நான் தலைமறைவா இருக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. சொல்ல போனா, என் அடையாளைத்தை மறைச்சது ஜெய ப்ரகாஷுன்ற பேரை உபயோகிச்சு தான். நான் யார் தெரியுமா? நான் ஏன் உன் அம்மாவை கல்யாணம் பண்ணி, டார்ச்சர் பண்ணேன் தெரியுமா?” என ஆங்காரத்துடன் வினவ, அவள் கொலை வெறியுடன் விழி இடுங்க பார்த்தாள்.

அவரோ “நான் ஜெயின் பிரதாப்… உன் அப்பா கவின் பிரதாப் ஓட அண்ணன். இங்க என் குடும்பம் எவ்ளோ கவுரவமான குடும்பம் தெரியுமா? என் அப்பா அம்மா இறந்தப்பறம் என் தம்பியை நான் அவ்ளோ செல்லமா வளர்த்தேன். 

ஆனால் அவன், போயும் போயும் எங்க கௌரவத்துக்கு பொருந்தாத உன் அம்மாவை காதலிச்சு கல்யாணம் பண்ணி சென்னைக்கு போய்ட்டான். அவனை நான் தேடாத இடமே இல்ல. கிட்ட தட்ட மூணு வருஷம் கழிச்சு  அவன் இருக்குற இடத்தை கண்டு பிடிச்சா ஆக்சிடென்ட்ல செத்துட்டான்னு தெரிஞ்சுது. 

என் தம்பிய ஆக்சிடென்ட்ல சாவடிச்சுட்டு உன் அம்மா அவனோட பிசினெஸ் எல்லாம் ஆட்டைய போட்டு சொகுசா வாழ்ந்துட்டு இருந்தா. உன்னையும் அவளையும் பார்க்க பார்க்க எனக்கு ஆத்திரம் தான் வந்துச்சு. என் தம்பிய என்கிட்ட இருந்து பிரிச்ச உங்களை அணு அணுவா சித்திரவதை பண்ணனும்னு நினைச்சேன்… 

நான் நினைச்ச மாதிரி உன் அம்மாவை கல்யாணம் பண்ணி, நரகத்தை காட்டுனேன். ஆனால் அன்னைக்கு நானும் என் தம்பியும் ஒண்ணா இருந்த போட்டோவை என் போன்ல பார்த்து அவள் என்னை யாருன்னு கண்டுபிடிச்சுட்டா. 

அதான் அவளை அன்னைக்கே துடிக்க துடிக்க கொன்னுட்டேன். உன்னையும் கொல்லலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனால் உனக்கு திமிரு ரொம்ப அதிகம். அதான் உனக்கு வேற பனிஷ்மென்ட் குடுக்கலாம்ன்னு விபச்சார விடுதில சேர்த்தா அங்க இருந்து தப்பிச்சுட்ட… 

இதுல இடையில் ஆர்யவோட அப்பா என் மேல கம்பளைண்ட் குடுத்து, கெடுத்துட்டான். நான் என் பவர் யூஸ் பண்ணி மறுபடியும் நாக்பூர் வந்துட்டேன். இதுனால என் எல்லா பிஸினஸும் முடங்குனதுல, நான் இங்க வரவேண்டியதா போச்சு. ஆனா நீ என் கண் பார்வையில தான் இருந்த. உன்னை ஒன்னும் இல்லாம ஆக்கலாம்ன்னு நினைச்ச நேரத்துல நீ திடீர்னு பிசினெஸ்ல வளர்ந்து நிக்க ஆரம்பிச்சு, உன் பக்கத்துல கூட வரமுடியாத மாதிரி பண்ணிட்ட. அந்த நேரத்துல தான், அந்த முட்டாள் நிகிலேஷ் சமர் ப்ராஜக்டை உங்கிட்ட கொடுத்ததை தெரிஞ்சுக்கிட்டேன்.

உன் மூலமா அவன் இடத்தை வாங்குறதோட, நீ போட்ட ஸ்கெட்சை உனக்கு போட்டு உன்ன தூக்கலாம்ன்னா, நீ அவன் ஊருக்கே மருமகளா போய், அவன் பண்ற விவசாயத்தை காவல் பண்ண ஆரம்புச்சுட்ட… இதுல அவனோட நட்ட நாடு ராத்திரியில கையை புடிச்சுகிட்டு காதல் வேற… 

அந்த காதலை சுக்கு நூறா உடைச்சு உன்ன அவன் கிட்ட இருந்து பிரிச்சு அலைய வைக்கணும்னு தான், நீ பொய்யா அறுவடை அன்னைக்கு இடத்தை எரிப்பேன்னு சொன்னதை நான் செஞ்சே முடிச்சேன். ஆனா அப்பவும் அந்த சாருக்கு உன் மேல ரொம்ப தான் காதல் பொங்கி வழியுது போல. உன் பின்னாடி சுத்தி சுத்தி வந்து என் பார்ட்னர்ஸ கடத்தி, என் தொழில்லையே கைய வைச்சு, கடைசியா நான் யாருன்னு கண்டுபிடிச்சு, நான் அசந்த நேரத்துல என்னை நைட்டோட நைட்டா இங்க கடத்திட்டு வந்துட்டான்…” என்று மூச்சு வாங்க பேசி முடிக்க, மானஸ்விக்கு மயக்கம் வராத குறை தான்.

தலையை பிடித்து தள்ளாடி கீழே அமர்ந்தவளுக்கு நினைக்கவே அசிங்கமாக இருந்தது. காதலிச்சு கல்யாணம் பண்ணது ஒரு தப்பா… அப்படி கல்யாணம் பண்ணதும் ஆக்சிடென்ட்ல அப்பா இறந்ததுக்கு என் அம்மா என்ன பாவம் பண்ணாங்க…? ஏன் இவ்ளோ பெரிய தண்டனை அனுபவிக்கனும்? அதுவும் புருசனோட அண்ணனை கல்யாணம் பண்ணது தெரிஞ்சு, எவ்ளோ மனசளவுல நொந்துருப்பாங்க. கடவுளே… இது கூட புரியாத அளவு அவ்ளோ பெரிய முட்டாளா இருந்தோமா? என் அப்பாவுக்கும் இவனுக்கும் முக ஜாடை கூட ஒண்ணா இல்லையே. அதான் இவன் இவ்ளோ தைரியமா அம்மாகிட்ட பிளே பண்ணிருக்கான்” என சிந்திக்க சிந்திக்க அவளுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. 

கோப பெருமூச்சுக்களுடன் அவனை தீயாய் முறைத்தவளை ஜேபி மீண்டும் கட்டையால் ஓங்கி அவள் தலையில் அடிக்க போக, அடிவயிற்றில் விழுந்த மரண குத்தில் சுருண்டு விழுந்தான்.

சமர் தான் அவன் முன் சீற்றம் சுமந்த முகத்துடன் கனலாய் நின்றிருக்க, கீழே விழுந்திருந்த மானஸ்வியின் அருகில் சென்றவன், “எந்திரிடி!” என்றான் கர்ஜனையாக. மானஸ்வியோ எதுவும் புரியாது சட்டென எழுந்து விட்டு தலையை பிடிக்க, “பெரிய இவள் மாதிரி பேசுவ… அவன் அடிக்கிற வர வேடிக்க பார்த்துட்டு இருந்தீயாளோ? போ! போய் அவன நாய் அடிக்கிற மாதிரி அடிக்கிற… போ!” என குரலில் அழுத்தத்தை ஏற்றி அவளை தள்ளிவிட, நீர் சுமந்த கன்னங்களுடன் “மறவா…!” என்றழைத்தாள் சக்தி எல்லாம் வடிந்து. 

அந்நேரம், மீண்டும் ஜேபி அவர்களை தாக்க வர, “அப்பா!” என்ற ஆத்திர குரல் கேட்டதில் வாயில் புறம் பார்த்தவர், அங்கு கௌசிக் அருவருப்புடன் அவரை பார்ப்பதை கண்டு திகைக்க, அவனின் அழைப்பில் மானஸ்வியும் சிலையாகி, சமரை சலனமின்றி நோக்கினாள்.

மூங்கில் குழலாகும்
மேகா

…😍 Next ud on Thursday… Nalaiku ooruku poren😉 good night sweet மறவா டிரீம்ஸ் 😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 3 சராசரி: 4.7]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Megavani

Story MakerContent AuthorYears Of Membership

இன்று அன்றி(ல்)லை 36

அஸ்தமிக்கும் பொழுதுகள் 3