
பாரம் சுமந்த நெஞ்சமிது
பாதித்த ஊனம் கற்றுத்தந்த பாடமிது
பாலின மாற்றம் பக்குவப்படுத்தியது
பாதுகாப்பாய் கற்ற கல்வி பலப்படுத்தியது
பாசமாய் சில கூர்விழிகள் கை நீட்டியது
பாலமாய் அமைப்புகள் கதவு திறந்தது
பாங்கனாய் (தோழன்) நம்பிக்கையை உரமேற்றியது
பான்மையாய் பதவிகள் தந்து கௌரவித்தது
பாலைவனப் பாதையின் முட்கள் பூக்களாகியது
பாத்தியமாய் (உரிமை )பாதம் பதித்தனர் *திருநர்கள் *சமூகத்தின் மேம்பட்ட பார்வையால்…….