நட்பு வட்டங்கள்
சொந்தத்தில் உதித்த நட்புகள் சுகமாய் வந்த சொர்க்கங்கள்
பள்ளிப்பருவ பழக்கம்தான் பசுமை நிறைந்த பக்கங்கள்
துள்ளல் வயதின் தோழியர்
துடிப்புடன் இன்றும் தொடர்கிறார்
தெருவில் வந்த நட்புகள் திருமணமானதும் தொலைந்தன ரே
ஊர் ஊராய் போனதில் உறுத்தாய் தோழியர் வந்தனரே
வேலை நிமித்த வெளியூரில் வேண்டிய நட்பும் கிடைத்தனரே
ஊருக்கு ஒரு நட்பு வட்டம் உவகையுடன் கூடி சேர்ந்தனரே
கணவர் நட்பின் துணைவியர் கலகலவென்று அன்பில் ஆழ்த்தினரே
மகன்களின் நட்பின் அன்னையரோ
மகிழ்வுடன் நேசம்பாசம் காட்டி னரே
எத்தனை எத்தனை தோழிகள்
அத்தனையும் அன்பின் பொக்கிஷங்கள்..