என்ன எழுத சொல்லுங்க
சாமி பாட்டெழுத
சாஸ்திரம் அறியவில்லை
திரில் கதை எழுத
திக் திக் னு இருக்கு
காதல் கதை எழுத
கொஞ்சமும் வரலை
கருத்துகதை சொல்ல
கடுகளவும் தெரியலை
நகைச்சுவை எழுதிடவே
நாலுவரிகூட வரலை
இலக்கிய பதிவா
இம்மியும் முடியாது
அரசியல் எழுத
அணுவும் தெரியாது
சமையல் குறிப்பு
சரிப்படுமா தெரிலை
அனுபவம் எழுத
வயசும் ஆகலை(?)(என்றும்16)
என்ன எழுத
எங்காதுக்குள்ள சொல்லுங்க…..
ஸ்ரீமதி வைகுண்டம்
அருமையான பதிவு