in , , , ,

கல்யாண சாப்பாடு

கல்யாண சாப்பாடு

கல்யாணம் போனாலே சொந்தம் பந்தம் பார்த்து பேசி சிரித்து நட்புகளுடன் அரட்டை என்று மனதுக்கு பிடித்த நாளாக மாறின காலம் போய்

கடனேனு வேகமாய் போய் மொய் செய்யவே வந்தது போல் பணம்  அல்லது பரிசு கொடுத்து படம் எடுத்து

வேலை முடிந்ததுனு வேகமா திரும்புறமாதிரி ஆகிட்டு வருது………

இதுல கடகடனு கல்யாண சாப்பாடு ..

..ஒரு வாய் அள்ளிக் போட்டு ஓடி வர்றோம்…..இதுல பெரிய இடத்து கல்யாணம்  அல்லது வேலை நாள் கல்யாணம்னா  அவசரமா போற கூட்டம் ஜாஸ்தி …..சாப்பிடுறப்பவே பின்னாடி நின்னுட்டு ரசம் சாப்பிட்டாங்க சீக்கிரம் இடம் கிடைக்கும்னு வெய்ட் பண்றவங்க ரசிச்சே சாப்பிட விட மாட்டாங்க

சூழ்நிலையாலே… இரண்டு மூன்று கல்யாண வீட்டில் சாப்பிடாம வந்திட்டோம்…….

பலபேர் கூட ஒரே நேரத்துல பந்தில் உட்கார்ந்து பேசி சிரித்து ரசித்து ருசித்து சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும்……..

அந்த ஏக்கத்துல இந்த சாப்பாட்டு கவிதை….

இது திருநெல்வேலி கல்யாண சாப்பாடு…….. சீசன் தக்க பலாப்பழம் போளி பிரட் அல்வா பஜ்ஜி இருக்கும்……….எல்லாரும் ரசிப்பீங்க நம்புறேன்……..

வாங்க சாப்பிடலாம்………

கல்யாணசாப்பாடு

வாழையிலை போட்டு

வடகம் உப்பு வைத்து

அப்பளம் வடை கூட

பழமும் இனிப்பும் வைத்து

கேரட் பீன்ஸ் உசிலி தான்

தேங்காய் மணக்கும் அவியலு

காலிபிளவர் ரோஸ்டு

கார சார உருளையும்

அரைத்து விட்ட கூட்டு

மயக்கும் மாங்கா பச்சடி

மணமணக்கும் பிரியாணி

பக்கத்துல தயிர் பச்சடி

வடிச்ச சாதம் போட்டு

நெய்யும் பருப்பும் சேர்த்து

முருங்கை காய் சாம்பாரு

பூண்டு போட்டு ரசம் பாரு

ஆசைக்கு அடைபிரதமன்

அள்ளி குடிக்க பால் பாயாசம்

பாயாசத்துல பூந்தி

பக்கத்துல அப்பளம்

வத்தக்குழம்பு வாசம்தூளு

கட்டி தயிரின் ருசியப்பாரு

தொட்டுக்க ஊறுகாய்

சுருசுருனு புளிமிளகாய்

வாய் மணக்க பீடா

வயிறு குளிர் ஐஸ்கிரீம்

வகை வகையாய் பழத்துண்டு

வக்கனையாய் இங்குண்டு

விருந்தும் இனிதே முடிந்தது

மனமும் முழுதும் நிறைந்தது…..

ஸ்ரீமதி வைகுண்டம்………

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

2 Comments

Leave a Reply
  1. பாட்டு பாடலாம் உங்கள் கவிதையை. அருமையான கவி வருந்து. கண்ணும் மனதும் நிறைந்த கருத்து. அருமை அக்கா.👑👑🌹🌹🌹

  2. பாடு கேட்கலாம்……. உற்சாகமூட்டும் வார்த்தை படிக்க சந்தோஷம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

அங்க என்னமோ இருக்கு!

இழைந்த நூலிடையாள்