in ,

கண்ணா வாராய்

மீண்டும் ஒரு பாடல் முயற்சி…

சரியா தப்பா தெரியாது

ராகம் தாளம் பாவம் புரியாது

கொஞ்ச நாளாக சாமிப்பாடல் எழுத ஆசை

முயற்சி பண்ணியிருக்கேன்…..தவறு என்றால் மன்னியுங்கள்

நள்ளிரவில் தான் நிம்மதியாக என்னால் யோசிக்க முடிகிறது…

மீனாக்ஷி அம்மன் பத்தி எழுதிய இரண்டு பாடல் பதிவுகள் மத்யமர் திரு.தியாகராஜன் சார் கவனம் பெற்று ரொம்ப அருமையாகச் பாடி பதிவிட்டிருந்தார்….எனது பாக்கியம்…..

முருகன் நாமங்கள் சொல்லி ஒரு பாடல் பதிவிட்டிருந்தேன்…..இப்ப என் வெகு நாளைய ஆசையாக கண்ணன் பாடல் ஒன்று….. பெரியவர்கள் பிழையிருந்தால் பொறுத்தருளுங்கள்…….

                  *********************

நீல வண்ண கண்ணா வாராய்

நெஞ்சில் நிறைந்த மன்னா வாராய்

நித்தம் உன்னை பூஜை செய்வேன்

நிம்மதியாய் நின்பதமும் பணிவேன்

நீல மயில் பீலி அழகா ……

நெக்குருக குழலும் இசைப்பாய்

நாதம் அதில் நானும் தொலைவேன்

நாமம் சொல்லி நானும் கரைவேன்…

                                                          ( நீல வண்ண)

நீள்விழி கோதை அன்பா

நெகிழ்ந்தே அவள் பக்தியில் கலந்தாய்

 நீர்க்குமிழி வாழ்வில் தவித்தேன்

நிச்சலன மனமும்  அருள்வாய்

நீல வேணி தேவி தலைவா

நீல கடலில் சயனம் கொள்வாய்

நின்னையே சரணம் அடைவேன்

நின்னடி சேர் வரமும் தருவாய்..  

                                                        ( நீல வண்ண)

கிருஷ்ணபக்தர்கள் அனைவருக்கும் …….

ஸ்ரீமதி வைகுண்டம்…….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 2 சராசரி: 5]

2 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

ஆனந்த கவிதை அவள் 4

ஆலயம் வரவோ..