in

அன்பின் அரசனே…. 13

அத்தியாயம் 13

சுந்தரியிடம் சண்டையிட்டு, மதியின் அறைக்கு வந்த தமிழ், அங்கு மதி இருந்த நிலையை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.. அது சில நொடிகளே..‼ உடனே தன்னை சமாளித்து, அவளின் அருகில் பதட்டத்தோடு வந்தவன், மதியை அள்ளி தோளில் போட்டுக் கொண்டு விரைவாக கீழே இறங்கி வந்தான்..

தன் கணவனை போனில் முயற்சித்துக் கொண்டே, மேலே பார்த்திருந்த சுந்தரி, தமிழ் மதியை மயக்க நிலையில், தூக்கி வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் திகைத்து நின்றார்.. கீழே இறங்கி வந்த தமிழ், ”இவளுக்கு மட்டும் எதாவது ஆச்சு.. உங்க எல்லாருக்கும் நரகம்னா என்னனு காட்டிருவேன் ஜாக்கிரதை..” என்று கோபத்தில் எச்ச்ரித்துவிட்டு சென்றான்..

 சுந்தரி, தமிழின் கோபத்தில் ஆடிப்போய் நின்றிருந்தார்..

மதியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த தமிழ் அவளை அவசரப்பிரிவில் சேர்க்க, அவளை பரிசோதித்த மருத்துவர், ”ஏன் சார் பார்த்தா படிச்சவங்களா இருக்கிங்க.. இவ்வளவு காய்ச்சலோடவா கூட்டிட்டு வருவிங்க..? அவங்களுக்கு காய்ச்சல்ல ஜன்னி வந்து அதுல ஃபிட்ஸ் வந்திருக்கு..‼ இன்னும் பத்து நிமிசம் லேட்டானாலும் இவங்களை காப்பாத்துறது கஷ்டமாகியிருக்கும்..” என்று சொல்ல, தமிழுக்கு தூக்கிவாரி போட்டது..

”சார் இப்போ அவ.. எப்படி இருக்கா..? பயப்பட்ற மாதிரி எதுவும் இல்லை தான..?”  தவிப்போடு கேட்க, ” அதான் சொன்னேனே சார் இன்னும் பத்து நிமிசம் லேட்டா வந்திருந்தால், அவங்களை காப்பாத்துருப்பது கஷ்டம்.. இப்போ நோ பிராப்ளம்…” என்று தைரியம் அளித்துவிட்டு சென்றார்..

அதில் லேசாக தளர்ந்தவன், அப்போழுது தான் தன் கூட வந்தவர்களைப் பற்றி யோசித்தான்.. தன் அலைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்து பேசிவிட்டு வைத்தான்… தமிழ் பேசிவிட்டு வைத்த கால்மணி நேரத்தில் மாறன் வந்தான்..

” என்னடா ஆச்சு..? ஏன் இவங்களுக்கு மட்டும் அடிக்கடி எதாவது ஆகிட்டே இருக்கு..?”

வருத்தமாக சொல்கிறானா..? அல்லது கேலிக்குரலில் சொல்கிறானா..? என்று இனம் காண முடியாத குரலில் சொல்ல, தமிழ் அவனை தீயாய் உறுத்து விழித்தான்..

”சரி.. சரி.. எதுக்கு இந்த ரொமான்ஸ் லுக்கு..? இபோ சிஸ்டர் எப்படி இருக்காங்க?” என்று விசாரிக்க.. “ம்ம் இப்போ ஓகே..” என்றவன்..  

”இப்போ நான் கூப்பிட்டது.. இதோ இவங்களை அவங்க வீட்டுல விட்டுட்டு வரணும்..” என்று கவியையும், அவள் அன்னையையும் காட்டிச் சொல்ல,

மாறன் அவர்களை யாரென்று கேட்க, ”அது… மதிக்கு காய்ச்சல்னு அவளை பார்க்க போனேன்.. அந்த நேரத்துல நான் மட்டும் போனால் அவங்க வீட்டுல தப்பா எதாவது நினைப்பாங்கன்னு இவங்களை கூட்டி போனேன்..”

”ஆனால் போன பிறகுதான் தெரியுது.. அவங்க அவ்வளவு வொர்த் இல்லைன்னு..! அதான் இவங்களையும் எதுக்கு கஷ்டப்படுத்தணும்? நீ இவங்களை அவங்க வீட்டுல விட்ரு.. அப்பறம் அவங்ளை சாப்பிட வச்சு கூட்டிடு போ.. ”என்று சொல்லிவிட்டு சேரில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்..

மாறன் தமிழின் தோளை தட்டி கொடுத்துவிட்டு அவர்களை அழைத்து சென்றான்.. இங்கு மதியின் வீட்டில், சுந்தரி ’அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் எங்க வீட்டுக்குள்ளேயே வந்து, எங்க வீட்டுப் பெண்ணை தூக்கிட்டு போவான்..? போலீஸ்க்கு போகலாம்னா இந்த மதி மயக்க போட்டு விழுந்திருக்கா.. ,

அவ்வளவு நேரம் என்ன செஞ்சிங்கனு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்.. இந்த நேரம் பார்த்து அந்த மனுஷன் எங்கேயோ இருக்காரே..‼ ” என்று புலம்பிவயாறே தன் கணவனுக்கு மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தார்..

மதியின் உடல்நிலை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து சிவா, நிலை கொள்ளாமல் தவித்து கொண்டிருந்தவன், மீண்டும் மதியைப் பற்றி கேட்க வேள்லையாளுக்கு போன் செய்ய, அய்யா உங்களுக்கு கூப்பிடத்தான் போனை எடுத்தேன்.. நீங்களே கூப்பிட்டிங்க.. என்று அவர் பதட்டத்தோடு சொல்ல, சிவாவும் பதட்டமானான்..

”மதிக்கு என்னாச்சு வள்ளி அக்கா..? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டப்ப அவ தூங்கறான்னு சொன்னிங்க..! இப்போ  நம்ம மதுக்கு எப்படி இருக்கு..?” என்று கேட்க,

”அய்யா நம்ம மதியம்மா மயக்கம் போட்டுட்டாங்க அய்யா.. என்று அழுது கொண்டே சொல்ல, சிவா அதிர்ச்சியில்  நின்றான்.. அய்யோ அப்பறம் என்னாச்சுக்கா..? இப்போ மதி எப்படி இருக்கா,,?” கவலையோடு கேட்டவன்..

”நீங்க அவ மாத்திரை போட்டு தூங்கறான்ன்னு சொன்னதால நான் அமைதியாக இருந்துட்டேன்.. இப்பா நான் உடனே அங்க வரேன்.. நீங்க எப்படியாவது மதியை வாசல்வரை வர வச்சிருங்க அக்கா.. நான் அவளை ஹாஸ்பிட்டல் கூட்டி போறேன்.. ” என்றுவிட்டு இணப்பை அணைக்க போக

”தம்பி.. தம்பி.. போனை வச்சிராதிங்க.. மதியம்மாவை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி போய்ட்டாங்க” என்று சொல்ல, சிவா தன் காதுகளை நம்ப முடியாமல் திரும்பவும் , “என்னக்கா சொல்றிங்க..? மதிய அவங்க வீட்டுல ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்களா..‼ ” ஆச்சரியமாக கேட்க,

”அட நீங்கவேற தம்பி அவங்க கூட்டிட்டு போய்ட்டாலும்..” என்று சலித்துக் கொண்டவர்.. ”சாயந்திரமே மதிம்மாவுக்கு காய்ச்சல் போல, மதிம்மாவை பார்க்க ஒரு தம்பி வந்தாங்க.. அவங்க மதிம்மா முகத்தை பார்த்தே காய்ச்சல்னு கண்டுபிடிச்சு , மதிம்மாவை ஹாஸ்ப்பிட்டலுக்கு கூப்பிட்டாங்க.. மதிம்மா போகலை.. இந்த சுந்தரி அம்மா வேற அவரை ஒருமாதிரி பேசவும், அந்த தம்பியை மதிம்மா போக சொல்லிட்டாங்க..”

”அப்பறம் அந்த தம்பி போய் ஒரு ஒருமணி நேரம்.. ஒன்றைமணி நேரம் இருக்கும்…

வேற ஒரு தம்பி வந்தாங்க.. அவங்களையும் இந்த சுந்தரி அம்மா தப்பா பேசினாங்க,, ஆனால் அந்த தம்பி, இந்த அம்மாவுக்கு சரியான பதில் அடி கொடுத்தாங்க..”

என்றவரின் குரலில் சந்தோசம் அப்பட்டமாக தெரிய, மதியை மருத்துவமனையில் சேர்த்தாக சொன்னதும் சிவாவின் மனது அமைதி அடைய, வள்ளியின் குரலில் இருந்த மகிழ்ச்சியை கண்டு அவனுக்கும் லேசாக சிரிப்பு மலர்ந்தது..

வந்ததது யார் என்ற யோசனையோடு.. ”அப்பறம் என்னாச்சுக்கா..? ஆவலோடு கேட்க, அப்பறம் என்ன.. சுந்தரி அம்மாவை சுண்டெலி மாதிரி பார்த்து,  அன்புக்கு எதாவது ஆச்சுன்னா.. உங்களுக்கு நரகம் எப்படி இருக்கும்னு காட்டுவேன்.. மிரட்டினாரு பாருங்க.. சுந்தரி அம்மா முகம் நிஜமாவே சுண்டெலி மாதிடி ஆகிருச்சு..” என்று சொல்ல சிவா சிரித்தே விட்டான்

”அக்கா வீட்டுக்கு வந்த ஆள் எப்படி இருந்தான்னு தெரியுமா..” சிவா கேட்க ”யாரை தம்பி கேட்கிறிங்க.? மதிம்மாவை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி போனவங்களையா.. ”என்று கேட்க

”ஆமாக்கா வந்தவங்க பேர் எதாவது சொன்னாங்களா..? மதியை எந்த ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்கன்னு தெரியுமா..?”  என்று விவரம் கேட்க,

”அய்யோ எனக்கு தெரியலையே தம்பி..!அந்த தம்பி தாடி வச்சிருந்தது.. அவர் கூட ரெண்டு பொண்ணுங்க வந்திருந்தாங்க.. வேற எதுவும் சரியா பார்க்கலையே.. அச்சோ தம்பி அந்த பையன் நம்ம மதிம்மாவுக்கு தெரிஞ்ச பையன் இல்லையா..? வந்தது யாருன்னு தெரியலையே.. அவனால மதிம்மாவுக்கு எதுவும் ஆபத்து வருமா..?” பதட்டமாக கேட்க,

 வள்ளி சொன்ன அடையாளத்தை வைத்தே வந்தது யார் என்று யூகித்த சிவா,

”அப்படியெல்லாம் நம்ம மதிக்கு எதுவும் ஆகாதுக்கா… வந்தது நம்ம ஆஃபிஸ்ல வேலை பார்க்கிறவருதான் நீங்க கவலைப்படாதிங்க.. மதி எந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்கன்னு பார்த்துட்டு நான் போன் உங்களுக்கு போன் செய்றேன்.. ” என்றுவிட்டு இணைப்பை துண்டித்தான்.. இந்த தமிழுக்கு ரொம்ப துணிச்சல் தான மனதில் நினைத்தவன், தமிழிற்கு அழைத்தான்,  

கண்மூடி அமர்ந்திருந்த தமிழ் மனதில் ஒரு பெரும் புயல் அடித்துக் கொண்டிருந்தது.. அவன் மதியை அந்த நிலையில் பார்த்திருந்தது.. இன்னுமே மனக்கண்ணில் வந்து அவனை இம்சை படுத்திக் கொண்டிருந்தது.. ’பாவி கொஞ்ச நேரத்தில என்னை எப்படி பதறவச்சுட்ட..!’ மனதில் மதியிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தான்..

’சார்..! அவங்க கண்முழிச்சிட்டாங்க நீங்க போய் பார்க்கலாம் ” என்று நர்ஸ் வந்து சொல்ல, வேகமாக உள்ளே சென்றான்..

 வாடிய மலராக படுக்கையில் இருந்தவளை பார்க்க தமிழுக்கு வருத்தமாக இருந்தது.. கையில் குளுக்கோஸ் எற்றி இருக்க அதை மெதுவாக வருடிக் கொடுத்தான்..

தமிழைப் பார்த்த்தும் சோர்வாக புன்னகை செய்தாள்..தமிழ் அவளின் தலையை மெதுவாக வருடி கொடுத்து, ”இப்போ எப்படி இருக்கு..மா? ”அக்கறையோடு கேட்க . மதி அவன் செயலிலும், ஒருமையான விளிப்பிலும், தமிழை விழிவிரித்து பார்த்தாள்..

அவள் பார்வையில் தொலைந்தவன் ”முட்டக்கண்ணை ஏன் இப்படி முழிச்சு பார்க்கிற..?  என்னடா இவன் என்னை வா போன்னு சொல்லி கூப்பிட்றான்னு பார்க்கிறியா..? எப்படியும் நீ என்னைவிட வயசில் சின்னவளாகத்தான் இருப்ப..! அதான்.. இப்படி.. ஆனால் ஆஃபிஸ்ல அப்படி கூப்பிட மாட்டேன்..பயப்படாத..” என்று கேலி பேசமதியும் புன்னகைத்தாள்.

”சரி நான் எப்படி இங்க வந்தேன்..? யார் என்னை இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க..? உங்களுக்கு எப்படி நான் இங்க இருக்கிறது தெரியும்? ”என்று கேட்க, முதல் கேள்விக்கும், இரண்டாவது கேள்விக்கும் பதில், நான் தான் உன்னை இங்க சேர்த்தேன்.. மூன்றாவது கேள்விக்கான பதிலும் அதிலேயே அடங்கி இருக்கு.. ”என்று சொல்ல, மதி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்..

”என்ன அப்படி பார்க்கிற..?” கேட்ட தமிழை உங்களை பார்த்தால் எனக்கு ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி தானாக வந்து ஒட்டிக்குது  என்றவள், நீங்க வரும்போது என் சித்தி இருந்திருப்பாங்களே.. அவங்க உங்களை எதுவும் சொல்ல்லையா..? ” வியப்பாக கேட்க,

மதி அவளின் சித்தியை பற்றி கேட்டதில், தமிழின் முகம் ஒரு நொடி இறுகி இயல்பானது.. ”என்னை என்ன சொல்ல போறாங்க..? மதியிடமே கேட்க.. உங்களையும் என்னையும் தப்பா பேசுவாங்க..என்று வெளிப்படையாக சொல்ல முடியாமல், இல்லை இங்க நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேனே.. அவங்களுக்கு அது தெரியுமான்னு கேட்டேன்.. ”என்று மாற்றி பேசினாள்

அவளின் தடுமாற்றத்தை உணர்ந்து கொண்டவன்..  ”நீ ரொம்ப டையர்டா இருக்க.. கொஞ்ச நேரம் தூங்கு.”. என்றவன்…திடீரென்று  அச்சுமா.. ன்னா யாரு? என்று கேட்க. அதில் திடுக்கிட்டு அவனை பார்த்து, ”உங்களுக்கு எப்படி அந்த பேர் தெரியும்..? ” என்று கேட்க

”  நான் உன்னை தூக்கிட்டு வரும் போது நீ தான் அந்த பேர் சொன்ன, அதான் கேட்டேன்..” என்று சொல்ல அவன் தன்னை தூக்கி வந்ததாக சொன்னதில் முகம் சிவந்தவள்

”அது என் அம்மா பேர் ”எனக்கு அர்ச்சனா, எனக்கு காய்ச்சல் வந்தால் என் அம்மா என் பக்கத்திலேயே இருப்பாங்க.. அப்பாவும் தான் ரெண்டுபேரும் என் பக்கத்திலேயே இருப்பாங்க அம்மா மடியில் நான் படுத்துக்குவேன் அப்பா என் காலை பிடிச்சுவிடுவாங்க.. எனக்கு அவ்வளவு பாதுகாப்பா தோணும்.. நான் மயக்கத்துல இருந்தப்போ என் அம்மா என் பக்கத்துல இருந்த மாதிரி தோணுச்சு அதானால் அப்படி கூப்பிட்டிருப்பேன், ” உடல் சோர்வில் மனம் பலவீனமாக இருக்க, அதில் தன் கடந்த காலத்தை சொல்லிக் கொண்டிருந்த்த மதி அதை உணர்ந்து அமைதியானாள்.

தமிழும் அவள் மனதை புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான்.. தமிழின் போன் ஒலிக்க, அதை எடுத்து பார்த்தவன் சிவா அழைப்பதை பார்த்தவன் ஒரு நொடி முகம் இறுகி இயல்பானது..அழைப்பை எடுக்காகமல் இருக்க, மதி என்னவென்று பார்க்கவும் என் மச்சான் தான்… என் தங்கச்சியை கட்டிக்க..! என் தங்கச்சியை கட்டிக்கன்னு ஒரே தொல்லை.. அதான் போனை எடுக்கலை.. ” என்று சிரிப்புடன் சொல்ல

”உங்களுக்கு அத்தை பொண்ணு இருக்காங்களா…” ஆச்சரியமாக கேட்க  ”ஏன் அன்பு எனக்கு அத்தை பொண்ணு இருக்க கூடாதா..”? இப்படி ஆச்சரியமாக கேட்கிற..” சிறு சிரிப்புடன் கேட்க, இல்லை அது.. சும்மா கேட்டேன்.. என்றவள், சிறிது தயங்க.. “என்னமோ கேட்க வர்ற.. கேளு..என்கிட்ட என்ன தயக்கம்..?” என்று ஊக்கமளிக்க

”உங்க அத்தை பொண்ணுங்கள்ல யாரையாவது கல்யாணம் செய்ய போறிங்களா..? என்று கேட்க,  தெரியலை இப்போ வரைக்கும் என் மனசு கிளீன் சிலைட்.. சரி பேசினது போதும் கொஞ்ச நேரம் தூங்கு..” என்று சொல்ல தமிழின் அருகாமை மதிக்கு மனம் பேரமைதியை கொடுக்க, கண்ணயர்ந்தாள்..

மதி உறங்கியதை உறுதி செய்தவன் தன் செல்போனை எடுத்து பார்க்க, அதில் சிவாவிடமிருந்து ஐம்பது மிஸ்டுகால்களுக்கு மேல காட்ட, இந்த தண்டனை போதும்.. மனதில் நினைத்து சிவாவிற்கு தமிழே அழைத்தான்..

முழுதாக ஒரு ரிங்க போவதற்கு முன் போனை ஆன் செய்து ”ஹலோ தமிழ்..! எங்க இருக்க..? மதி எங்க இருக்கா..? எப்படி இருக்கா..?காய்ச்சல் இப்பொ எப்படி இருக்கு..? சரி நீ எந்த ஹாஸ்பிட்டல்ல மதியை சேர்த்திருக்க..? சொல்லு நான் வர்றேன்..” கேள்வியாக அடுக்க

”சத்தியத்துக்கு கட்டுப்பட்டவங்க இப்போ மட்டும் எதுக்கு இவ்வளவு துடிக்கிற..? அவ உயிர் போற நிலமையில இங்க கொண்டுவந்து சேர்த்திருக்கேன் நான் மட்டும் சரியான நேரத்துக்கு வரலேன்னா.. இந்நேரம்..” என்ற கோபமாக பேசிய தமிழை, “ போதும் தமிழ் அந்த வார்த்தையை சொல்லாத பிளீஸ் இப்போ எங்க இருக்கிங்கன்னு சொல்லு நான் வர்றேன்.. ” என்று கெஞ்ச, தமிழ் மருத்துவமனையின் பெயரை சொல்ல, பத்து நிமிடத்தில் சிவா அங்கு வந்து சேர்ந்தான்

வந்தவன் உறங்கிக் கொண்டிருந்த மதியை பார்த்து லேசாக கண்கலங்கினான்.. அவள் தலையை மெதுவாக வருடி கொடுத்து வெளியே வந்தவனை ”தமிழ் புன்னகையோடு பார்த்திருக்க இப்பவும் இந்த சிரிப்பு தானா..? ’பொறுமியவன், ” மதியை சரியான நேரத்துக்கு கொண்டு வந்து சேர்த்ததுக்கு தாங்க்ஸ்.. ஆமா நீ எப்படி சரியான நேரத்துக்கு அங்க போன..? அங்க மதி சித்தி இருப்பாங்களே..!”  என்றவனிடம்

”யார் இருந்தால் எனக்கென்ன..? ”விட்டேற்றியாக சொன்னவன், ”அன்புக்கு எதாவது ஒண்ணு என்றால், அது அன்பே தடுத்தாலும் நான் கேட்க மாட்டேன்.. அவளுக்கு அந்த நல்லதை செஞ்சே தீருவேன்,, அப்பதான் அவ மனசில இடம் பிடிக்க முடியும்.. குறும்பாக கண்சிமிட்ட, “ அடேய் ஒரு நிமிசத்துல உன்னை நல்லவன்னு நினைச்சிட்டேன் நீ மாற போறது இல்லை.. அப்படியே நீ மாறினாலும் எனக்கு ஒண்ணும் ஆக போறது இல்லை..! இனி மதியை நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பலாம் ” என்று சொல்ல,

தமிழ்ய்ம், ”உங்களை நம்பி மதியை நான் விட்டு போக தயாரா இல்லை..!  அன்பு ஒரு சத்தியம் கேட்டு போங்கன்னு சொன்னால், நீங்க அப்படியே விட்டு போய்ருவிங்க.. ”என்று சொல்ல சிவா தலை குனிந்தான்..  ”ஆனால் எனக்கு இந்த சத்தியம், சர்கரை பொங்கல் எந்த கட்டுப்பாடும் அன்பு விசயத்துல எடுபடாது.”

”அவஉன்னை வீட்டுக்கு  வரவேண்டாம்னு சொன்னால் நீங்க அப்படியே விட்றுவிங்களோ..? அப்படி விட்டா அந்த அம்மா சொல்றது சரிங்கிற மாதிரி ஆகாதா.. என்று கேட்டு கொண்டிருக்க..

தமிழ் சொன்னதில் குற்ற உணர்ச்சியில் இருந்த , சிவா, ”ஆமா மதி என்கிட்ட சத்தியம் வாங்கினது உனக்கு எப்படி தெரியும்..? சிவா அழுத்தமாக கேட்க.

”ஹான்,.. என்ன கேட்டிங்க..?”  தமிழ் கேட்க இந்த சத்தியம் விசயம் உனக்கு எப்படி தெரியும்..? நான் இதை சித்துக்கிட்ட மட்டும் தான் சொன்னேன்..என்று சொல்ல தமிழ்.. திரு திருவென விழித்தான்..

அரசன் ஆள்வான்..;

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

12 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன

ஆனந்த கவிதை அவள் 3