அத்தியாயம் -1
“தாரா எழுந்துருடி எவ்வளவு நேரம் தான் உன்னை எழுப்பிகிட்டு இருக்குறது ….
தாரா ..!!
அடியே எழுத்துரு டி நீ எழுந்த தான் நான் சமையல் வேலையை பாக்க முடியும்.
நீ காலேஜிக்கு கிளம்ப வேண்டாமா…?
சீக்கிரம் எழுந்திடு தாரா இத்தோட பத்தாவது தடவையாக எழுப்புறேன் உன்ன…
காதுல வாங்குறாளா பாரு
லேட்டா எழுந்து தாம் தூம்னு … !!! குதிச்சி பாரு அப்போ இருக்கு உனக்கு…. அடியே எழுந்து தொலையேன் டி….
படுத்தாத டி ‘ உன் அண்ணனுக்கும் உனக்கும் எதுல ஒத்துப் போதோ இல்லையோ திங்குறதுலயும் , தூங்குறதுலயும் கரெக்டா ஒத்துப்போது ‘சரியான கும்பகர்ணி எழுந்திடு தாரா உன் அண்ணன் வேற காபி கேட்டார் சீக்கிரம் கொண்டு போகலைன்னா கத்துவார் டி …
எழுந்துருடி… “ என தர்ஷிதா என்கின்ற தாராவை எழுப்ப படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள் அவள் அண்ணி…
“என் செல்லம்ல பட்டுல எழுந்திடுடி… ” என அழாத குறையாய் தாராவிடம் கெஞ்சி கொண்டு இருந்தாள் தாராவின் அண்ணி அனுபம நந்தினி..
“அப்ப எனக்கும் காபி கொண்டு வா அனு.. “என தூக்கத்திலேயே தாரா சொல்ல..
“காபி கொண்டு வந்த உடனே எழுந்திருச்சுடுவியா…. “
” ம்கூம்..
காபி குடிச்சிட்டு திரும்ப தூங்கிடுவேன்… “என தாரா அரைத்தூக்கத்தில் சொல்ல
“உன்னைப்போய் எழுப்ப வந்தேன் பாரு.. “
“உன்னை யார் எழுப்ப சொன்னது போய் உன் புருஷன் கூட ரொமான்ஸ் பண்ற வழியை பாரு போ அனு “கொஞ்சமும் அசராது தாரா பதில் சொல்ல
தலையில் அடித்துக் கொண்டு கணவனுக்கு காபி போடச் சென்றாள் அனு
“என்னங்க இந்தாங்க காபி..” என அவள்
“தர்ஷினி எழுந்துட்டாளா..?? “ என யாதேஷ் கேட்க
“அவ இன்னும் எழுந்திருக்கவே இல்லை கும்பகரணி கணக்கா தூங்கிட்டு இருக்கா .
நீங்க இன்னும் கிளம்பாம என்ன பண்றீங்க உங்க அருமை தங்கச்சி எழுந்துட்டா அவளைத் தவிர மத்த யாரும் ரெடியாக முடியாதுன்னு தெரியாதா..
தாரா எழுந்து காலேஜ்ல கிளம்புற வரைக்கும் நம்மை யாரையும் வேற எந்த வேலையும் பார்க்க விட போறதில்லை ….
நீங்களே போய் உங்க அருமை தொங்கச்சியை எழுப்புங்க…..
என்ன விட்ருங்க
அவளுக்கு பிரேக்பாஸ்ட் ரெடி பண்ணனும் கொஞ்சம் ஏமாந்தா பிரேக்பாஸ்ட் சாப்பிடாமலே ஒடிடுவா அவ ரெடி அக்குறதுக்குள்ள நான் அவளுக்கும் பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணிடுறேன்” என அவள் செல்ல முற்பட
“ஹே… !!அனு இங்கவா… “என போக இருந்தவளை அவசரமாக கூப்பிட
“என்னங்க…. “என கதவருகே போனவள் திரும்பி வர
வந்தவளை யாதேஷ் தன் மடியில உட்கார சொல்ல ” மாமா வேலை இருக்குடா நான் போகணும் டா.. “
“போ… நானா வேணாம்னு சொன்ன… அதுக்கு முன்னாடி இங்க வந்து உட்காரு..” என அவன் மடியை காட்ட
அவன் மடியில் வந்து அமர்ந்த மனைவியை கைகளால் சுற்றி அணைத்தபடி அவள் கழுத்து வளைவில முகம் வைத்துக்கொண்டான் அவன் தாடி அவள் கழுத்தில் குறுகுறுத்து கொண்டிருக்க அவள் கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும் அவள் கழுத்தில் முகம் வைத்து கொண்டான் யாதேஷ்..
“உன்னையும் தர்ஷிதாவையும் பார்க்க எனக்கு ரொம்ப பொறாமையா இருக்குடி எல்லா வீட்டுலயும் அண்ணிக்கும் நாத்தனாருக்கும் ஆகாதுன்னு தான் கேள்வி பட்டு இருக்கேன் ஆனா நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு ஒத்துமையா இருக்கீங்க அவளும் உன்னை விட்டு குடுக்க மாட்டேங்கற நீயும் அவளை விட்டுக்கொடுக்க மாற்ற எப்படி இரண்டு பேரும் இப்படி பெஸ்ட் ஃப்ரெண்ட் இருக்கீங்க…”என அணுவை அணைத்தபடியே கேட்க
” நான் உங்கள கல்யாணம் பண்றதுக்கு காரணமே தாரா தான்… உங்க அழகா பாத்து யாரும் உங்கள கல்யாணம் பண்ணிக்கல… “என அனு அவனை சீண்ட
“ஓஹோ… அப்போ மேடம் என்ன பாத்து கல்யாணத்துக்கு ஒத்துக்களை…அய்யாவோட அழகுல நீங்க மயங்கிப்போகலா .. “என்றவனை “ஆமா… “என்று அவனை மேலும் சீண்டினாள்
“உங்க பாக்குறதுக்கு முன்னாடியே தாராவைதான் பார்த்தேன் ….அவ எப்போ எங்க வீட்டுக்கு வந்தாலும் வீடே கலகலன்னு இருக்கும்…. தாராவலதான் நம்ம கல்யாணமே நடந்துச்சினு மறந்துட்டிங்களா பாஸ்
தாராவலதான் நீங்க என்ன பொண்ணு கேட்டு வந்திங்க பாஸ்…
என் தாராவை பார்த்து தானே உங்களையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்….”என்றவள்
“அது என்னவோ உண்மைதான்…
உன் தம்பி மகேஷ் அவளோட பெஸ்ட் பிரண்ட்குற காரணத்துக்காக மட்டும் அவ உன்ன அண்ணியா செலக்ட் பண்ணல டி அனுகுட்டி அவளுக்கு உன் கேரக்டரை ரொம்ப புடிச்சிருந்தது அதனாலதான் உன்ன அண்ணியா செலக்ட் பண்ண என் தங்கச்சி…. அவ அண்ணனுக்கு ஏத்த ராணி நீதானு அவளுக்கு நல்ல தெரிஞ்சி இருக்கு.. “என யாதேஷ் சொல்ல
“எனக்கு தாராகிட்ட ரொம்ப பிடிச்சது என்ன தெரியுமா..??
அவ கோவப்படுறது தான் ஆன அது ரொம்ப அபூர்வம் தான்…
யாதேஷ், “போதும்டி எப்போ பாத்தாலும் தாரா புராணம் பாடாத
அது எப்படி மேடம்க்கு என்ன பிடிக்காமல் தான் என் தங்கச்சி தான் பிடிச்சிருந்ததா..?? என்ன பிடிக்காமல் தான் கல்யாணத்துக்கு முன்னாடியே என்கிட்ட ஃபிளாட் அனீங்களாக்கும்…”
“அது..!! அது..!!”என அவள் இழுக்க
“ஹ்ம்ம் சொல்லு… “என அவளை திருப்பி அவள் இதழை சிறைப்பிடிக்க அந்நொடி மௌனமாய் கடக்க
” அச்சோ விடுங்க… டைம் என்ன ஆகுதுன்னு பார்த்தீங்களா இன்னும் உங்க தங்கச்சி எழுத்துக்களை ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குறதை விட்டுட்டு போய் தாராவை எழுப்பி விடுற வேலையை பாருங்க..”
” லேட்டாயிடுச்சுனு கத்தபோரா….”என யாதேஷ் புலம்ப
” நல்ல வங்கிகட்டிக்கோங்க காலங்காத்தால என் வேலைய கெடுத்தீங்களா உங்களுக்கு தேவைதான்… “அடுத்து தாராவை எழுப்பும் பொறுப்பு யாதேஷ் உடையது..
“தர்ஷி டைம் ஆகுது நீ காலேஜுக்கு கிளம்பு வேண்டாமா..??
நீ மேக்கப் பண்ணவே இரண்டு மணி நேரம் ஆகும் இன்னும் தூங்கிட்டு இருந்தா எப்படி கிளம்பி போவ…. “என யாதேஷ் கத்த கத்த தாரா தலைவரை போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு தூங்க கடுப்பானவன் அவளிடம் இருந்து பெட்ஷீட்டை தூர எறிந்தான்
“ஏய்..!! எருமை உயிரை வாங்காதே டா சும்மா தூங்கும்போது தொல்லை பண்ணிக்கிட்டு… “என் மீண்டும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க
“இருடி அம்மாவ கூப்பிடுறேன்… அம்மாஆஆஆஆ.. தாரா இன்னும் தூங்கிட்டு இருக்க.. “என கத்த
“ஏன்டா இப்படி கத்துற..”என்றார் ராஜேஸ்வரி
“உங்க பொண்ணு இன்னும் எழுந்திரிக்கல.. நீங்களே உங்க பொண்ண எழுப்பி விடுங்க… நான் ஆபீஸ்க்கு கிளம்ப ரெடி ஆகுறேன்.. “என யாதேஷ் சென்றுவிட அடுத்து அவளை எழுப்பும் பொறுப்பு அவளின் அம்மா உடையது
“அடியே இன்னும் எழுந்துகாம அப்படி என்னடி தூக்கம் வேண்டி கிடக்கு ஆம்பள பிள்ளையே எழுந்து ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கான் நீ என்னென்ன தூங்கிட்டு இருக்க தர்ஷிதா மணி எட்டு ஆகுது…… “என கத்த
“என்னது.. !!மணி எட்டா..??
ஐயோ..!! ராஜேஸ்வரி உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா ஒன்பது மணிக்கு காலேஜ் நீ எட்டு மணிக்கு எழுப்பி விடுறியே உனக்கு என் மேல கொஞ்சம் கூட அக்கறையே கிடையாது ராஜி… “என தாரா எழுந்ததும் தாம் தூம்னு கத்த
“என்னது எனக்கு அக்கறை இல்லையா அதை நீ சொல்ற என் நேரம் டி..”என்றார்
“அண்ணிஈஈஈஈஈ….. “
‘ஆரம்பிச்சுட்டா இவ அலப்பறையை இனி வேலை ஆனா மாறித்தான்..’என அனு புலம்பிக்கொண்டே வர
“அண்ணி உனக்கு கூட என்மேல அக்கறையே இல்லை இதோ லைட்டா அசந்து தூங்கிட்டேன் அதுக்குன்னு எழுப்பமாயே விட்டுடுவீங்களா… “
“என்னது லைட்டா அசந்து தூங்கிட்டயா அடியே… கும்பகர்ணி கணக்கா தூங்கிட்டு லைட்டா தூங்கிட்டாளாம்… “
“சரி சரி….
லைட்டா இல்ல கொஞ்சம் அதிகம்தான் தூங்கிட்டேன் கூட
வச்சுக்கோங்க எழுப்பி
விடலாம் இல்ல… “
“உன்ன காலையிலிருந்து நான் முப்பது தடவை எழுப்பினேன் உன் அண்ணன் இருபது தடவை எழுப்பிட்டார் அத்தை ஒரு பத்து முறை எழுப்பியாச்சு மொத்தம் அறுபது முறை எழுப்பியாச்சு நீ யாரையும் சட்டை பண்ணாமல் தூங்கிட்டு…. இதுல நாங்க எழுப்பிவிடலாயம்… “
“சரி சரி வெட்டி கதை பேசாம போய் வேலையை பாரு..”என்றவளை முறைத்து விட்டு
“வேலை செஞ்சுட்டு இருந்தவளை கூப்பிட்டு வெட்டி கதை பேசிட்டு இருக்கானா சொல்ற… “என இடுப்பில் கை வைத்துக் கொண்டு கையிலிருந்த தோசை கரண்டியை தாராவை நோக்கி அடிக்க ஒங்க அவ்வளவு தான் நிப்பேன் அங்கு என்று பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள் தாரா
“இவளுக்கு இதே பொழப்பா போச்சு டைலி காலங்காத்தால இவ பண்ற அலப்பறை தாங்க முடியல அத்தை… “என அனு சொல்ல
“அடியே.. !!அவ பண்ற அட்டகாசத்துக்கு எல்லாம் காரணமே நீங்கள் மூன்று பேரும் தான் அவள் சொல்வதில் புரோஜனம் இல்ல உங்கள சொல்லணும்
‘ஆத்தாடி அத்தை நம்ம பக்கம் திரும்பிட்டாங்களே .. நாம மாட்டினோம் அவ்வளவுதான் இப்டியே எஸ்கேப் ஆயிடு அனு ‘என தனுக்கு தானே மெல்லமாக சொன்னவள்…
“என்னங்க… இதோ வரேன் “என கூப்பிடாத கணவனை கூப்பிட்டா போல் பாவனை செய்து கொண்டு அங்கிருந்து ஓடி விட்டாராள் அனு
“நான் கட்டிகிட்டு வந்ததுதான் சரியில்ல, நான் பெத்ததுங்களும் சரி இல்லனு பாத்த, வீட்டுக்கு வந்ததும் சரி இல்ல எல்லாம் என் தலையெழுத்து இதுங்கள எல்லாத்தையும் வச்சி மேய்க்கணும்னு ” என தலையிலடித்துக் கொண்டடு சமையலை கவனிக்கச் சென்றுவிட்டார்
தர்ஷிதா அவசர அவசரமாக கிளம்பி வர
“ஹே… !!தாரா சாப்பிட்டு போடி” என ராஜேஸ்வரி கத்த
“அம்மா டைம் ஆயிடுச்சு மா நான் கிளம்புறேன்…”என அவசர அவசரமாக கிளம்ப இருந்தவளை காதைப் பிடித்து நிறுத்தி “நீ இப்படிதான் ஓடுவன்னு நான் நினைச்சேன்…”
“ஓடுறதுன்னு முடிவாய் போச்சு தனியா போய் என்ன பண்ண உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க உங்க அண்ணனை கூட்டிட்டு ஓடுறேன்… என்ன அண்ணி?? உங்களுக்கு ஓகேன்னா நான் ரெடி.. “
“அடிப்பாவி..!! அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு அதுக்கு என்ன அண்ணி ஒரு கல்யாணம் தானே ஆச்சு எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறேன்..”
“அவனுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்குடி.. “
“ரெண்டு குழந்தை தானே நான் ரெண்டு புள்ளையை பெத்து கொடுக்கிறேன்
மாம்ஸ்சையும் சேர்த்து அஞ்சு பிள்ளைங்களையும் நானே வளத்துடுறேன்… “
“அடிப்பாவி … !!” என அனு வாயைபில்லாக
“சும்மா சொல்ல கூடாது உன் அண்ணன் அதான் என் மாம்ஸ் ஒன்னுக்கு ரெண்டு குழந்தை பெத்து இருந்தாலும் செம ஹாண்ட்சமாதான் இருக்காரு…
நீங்க ‘உம்…’ன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும் இப்பவே உங்க அண்ணாவை கூட்டிட்டு ஓட நான் ரெடி..என்ன ஓகேவா அனு உனக்கு நீ ஒன்னும் கவலை படாத என் மாம்ஸ் ஹா கண்கலங்காம பாத்துக்குறேன்… “
“அடிப்பாவி உன்ன ஓடுன்னு சொன்ன ஒரே வார்த்தைக்காக என் அண்ணா குடும்பத்துலா இம்புட்டு பெரிய குழப்பத்தை உருவாக்க பக்குறியேடி.. இரு மாமா வரட்டும் சொல்றேன்..”
“தாராமா உனக்கு ஓகேன்னா சொல்லுடா நான் வேணா அனு வீட்ல போய் அவங்க அண்ணாகிட்ட பேசுறேன்” என அப்போதுதான் வீட்டுக்கு உள்ளே வந்த சந்திரசேகரும் தாராவுடன் சேர்ந்து கொள்ள
“அண்ணிக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் அப்பா.. “
“மாமாஅஅஅஅஅஅ … !!
“அவ கூட சேர்ந்துகிட்டு நீங்களும் என்ன வம்பு இழுக்கிறீங்க பார்த்தீங்களா நீங்களே போதும் அவள கெடுக்க நீங்க குடுக்குற செல்லத்துலதான் இப்படி எல்லாம் பண்ற அம்மாடி மருமகளே நான் கொடுக்கிற செல்லத்தலைய இல்ல நீ குடுக்குற செல்லத்தலைய..?? “
” மாமா…!!”
” சரி சரி நான் எதுவும் சொல்லல மருமகளே.. “
அவரிடம் பேசிக் கொண்டே அவளுக்கு காலை உணவினை ஊட்டி விட்டாள்..
ஒரு வழியாய்
தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள்
“தாரா மெதுவா போடி… !!”
“டேய் அஜி வாடா… “என தாரா கூப்பிட
அந்த குடிசைவீட்டிலிருந்து குடுகுடுவென ஸ்கூல் பாக்கை மாட்டிக்கொண்டு ஒரு குட்டி பையன் ஓடிவர அவனை தூக்கி பின் சீட்டில் உட்கார வைத்தாள் தாரா
“உனக்கு ஏன்டா வின் கஷ்டம் “என கேட்டு கொண்டு வந்த அஜித்தின் தாய்
“அஜி குட்டியை ஸ்கூல்ல விடுறதுல்ல அப்படி எனக்கென்ன கஷ்டம் வந்துட போகுது அக்கா… அதெல்லாம் ஒருகஷ்டமும் இல்ல….. “
“இல்லாம நீ செஞ்ச உதவிக்கே நான் என்ன கைமாறு செய்ய போறென்னே எனக்கு தெரில இதுல உன்ன மேல மேல கஷ்ட படுத்த மனசுல கேக்கலாமா… “
“எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல அக்கா நீங்க போய் வேலையை பாருங்க அக்கா… “
“சரி மா “அஜியின் அம்மா சொல்ல
“அஜி குட்டி அக்காவை நல்ல புடிசிபிங்கலம் நாம ஜாலியா கைதை பேசிட்டே ஸ்கூலுக்கு போவோமம் சரியா .. “
“சரிக்கா.. “என அவளை நன்றாக பிடித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டான் அந்த குட்டி வாலு
“டேய்…. அஜி உன் ஸ்கூல்ல பிரண்ட்ஸ்லாம் கிடைச்சிட்டாங்களா டா.. “
“ஹ்ம்ம்ம்.. “என பலமாய் தலையாட்ட
“பாத்திய…!! உனக்கு பிரண்ட்ஸ் கிடைச்சதை என்கிட்ட சொல்லவே இல்ல … சரி சொல்லு யாரு எல்லாம் உன் பிரண்ட்ஸ்… “
“மைதிலி, மீனா, அப்புறம் “தன் ஒன்றைவிரை தாடையில் வைத்துக்கொண்டு யோசிப்பதுபோல் பாவனை செய்து “ஹான் அப்புறம் சரண்யா”என அடுக்கிக்கொண்டே போக
அவள் ட்ராபிக்கில் நின்றுகொண்டு அஜி உடன் வளவளத்துக்கொண்டிருந்தாள் தாரா
“டேய்.. !!என்னடா ஒரு பையன் பேர்கூட சொல்ல மற்ற எல்லாம் பொண்ணுங்கள அடுக்கிகிட்டு போற ..நீ சரி இல்லடா அஜி…. “
“பையன் கூட எல்லாம் யாரது பிரண்ட் அவங்கள… நீ சரியான மக்குக்கா… “
அவளும் அவனை போல் வாயில் கைவைத்து கொண்டு “அடப்பாவி… இரு உன் அம்மாட்ட சொல்றன் உன்ன.. “என திரும்பி தலை சாய்த்து அவனை போல் பாவனை செய்திட அவளின் ஜிமிக்கி அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் ஏற்றார் போல் அவளுடன் சேர்த்து தலம்போட்டது… அஜியுடன் சேர்ந்து அவளும் குழந்தை போல் பேசி கொண்டிருக்க
அவளின் எதிரில் கொஞ்சம் பின்னால் நின்றிருந்தவனின் கண்கள் அவளை ரசனையாய் பார்த்து கொண்டு சிரிக்க அவளின் முகத்தை முழுவதுமாக தெரியாததால் அவளை பார்க்க ஆர்வம் வர அதற்குள் அங்கிருந்த இருசக்கர வாகனம் வந்து அவளை முழுவதுமாக மறைத்து கொண்டு நிற்க “பச்… “என்றான் சலிப்புடன் ஆர்வத்தை அடக்கினான்…
சிக்னல் விழ சிட்டாக பறந்தாள் அவள் அப்போதும் அவளை பார்க்க முடிய வில்லை அவனால் ஏனோ அவளின் செய்கைகள் அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது …அதே புன்னகையுடன் ஆபீஸ்க்கு சென்றான் அவன்..
அஜியை ஸ்கூலில் இறக்கி விட்டுவிட்டு அவள் கல்லூரிக்கு சென்றாள் இது அவளுடைய வழக்கமான ஒன்று….
அஜியை அவள் முதல் முதல் கண்டது அவள் வழக்கமாக போகும் வழியில்தான் அத்தனை சுட்டியாய் பேசுவான் அஜி தினமும் அவனை பார்க்காது அவள் சென்றது இல்லை அவனின் சுட்டி தனமும் அவன் குறும்பு பேச்சும் அவளை ஈர்த்ததோ என்னவோ இல்லை இல்லை சேட்டை செய்வதில் அவளின் மறுஉருவமாய் இருப்பதனாலோ என்னவோ அவளுக்கு அஜியை மிகவும் பிடித்து போனது சில நேரங்களில் வண்டியை நிறுத்திவிட்டு அவனை கொஞ்சிவிட்டு செல்வாள்
அவள் போகும் வழியில் தான் அஜியின் விடு அஜி அவன் அம்மாவுடன் தினமும் ஸ்கூலுக்கு செல்வதை தாரா பார்ப்பாள் கொஞ்ச நாட்களாக அஜியையும் அவன் அம்மாவையும் காணாததால் அவர்கள் வீட்டிற்கே சென்றுவிட்டாள் தாரா…
மிகவும் கஷ்டப்படும் குடும்பம். கல்யாணம் ஆன கொஞ்ச வருடத்திலேயே அஜியின் அப்பா இறந்துவிட அவன் தாய் தான் அவனை தனியாக வளர்க்கிறார் தினமும் கூலிவேலை செய்துதான் சாப்பிடும் நிலை சில நாட்கள் அந்த வேலையும் கிடைக்காது அந்த சமயம் எல்லாம் சாப்பாட்டிற்க்கே வழி இருக்காது.
“அஜியை கொஞ்ச நாளா பாக்கவே முடியறது இல்லையே அக்கா அஜி ஏன் ஸ்கூலுக்கு போகுறது இல்லையா அக்கா “என கேட்போது அஜி திடீரென மயங்கி விழுந்ததால் அவனை மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற அஜியின் தாய் அங்கு அஜிக்கு இதய கோளாறு இருப்பதாகவும் இன்னும் கொஞ்ச நாளில் அவனுக்கு ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து எனவும் சொல்ல அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் முடங்கி கிடந்தார் அஜியின் தாய்… அஜியிடம் கூட முன்பு இருந்த சுட்டித்தனமும், பேச்சும் இப்போது இல்லை அந்த பிஞ்சி குழந்தைக்கு என்ன தெரியும் தனக்கு இப்படியரு நோய் என்றும் சிகிச்சை செய்யாவிட்டால் தான் இறந்து விடுவோம் என்றும்…
அவனுக்கு புரிந்தது எல்லாம் தாயின் வேதனை முகம் மட்டுமே அவனுக்கு ஏதும் புரியாவிட்டாலும் தாயின் வேதனை முகம் அவனையும் தாக்கத்தான் செய்திருந்தது தன்னிடம் இதய ஆப்ரஷன் செயும் அளவிற்கு பணம் இல்லாததை சொல்லி அழ …”அக்கா என்கூட வாங்க.. “என அஜியின் தாயையும் அஜியும் அழைத்து கொண்டு புகழ் பெற்ற மருத்துவமனையின் ஹார்ட் ஸ்பெசலிஸ்ட்டும் தனது நண்பனுமான ஆகாஷிடம் சென்றாள் தாரா
முதலில் தர்ஷிதாவை பார்த்த மகிழ்ச்சியில் நலன் விசாரித்தவன் பின் அவளிடம் மல்லுக்கும் நின்றான் “ஏன் மேடம்க்கு என் நியாபகம் எல்லாம் கூட இருக்க “என மல்லுக்கு நின்றவனை சமாதானம் செய்யும் பொருட்டு தாராவுடையது
“ஆகாஷ்… சாரி டா. யுஜி முடிச்ச கொஞ்ச நாள்லயே நெதர்லாந்தில் இருக்கும் எங்க பிரான்சில் ப்ரோப்லேம் அங்க இருக்க பிசினஸ்ல நிறைய லாஸ் சோ நான் அங்க போக வேண்டி இருந்தது பக்கி “
“ஏன் யதேஷை அனுப்பி இருக்கலாமே எருமை.. “
“ ஃபர்ஸ்ட் யாதேஷ் போறத தான் பிளான் ஆன இங்க இருக்க கம்பெனிலை ஒர்க்கேர்ஸ் குள்ள பெரிய ப்ரோப்லேம் ஆயிடுச்சி சோ யாதேஷ் இங்க இந்தக்கவேண்டிய சிச்சுவேஷன் சோ நான் போனேன்… பிசினஸ் பிசினஸ்னு அப்டியே டூ இயர்ஸ் போயிடுச்சி அப்புறம் இந்தியா வந்துட்டேன் இப்போ இங்க இருந்தே யாதேஷ் நெதர்லாந்து பிசினஸையும் பத்துக்குறான்…. “
“ஏன் நீயே நெதர்லாந்து பிசினஸை பாத்துக்கலாம் இல்ல ஆல்ரெடி யாதேஷ்க்கு இந்தியாவுல இருக்க பிசினஸ்ல பார்த்துட்டு இருக்கானே…..”
“அட போ ஆகாஷ் இவ்ளோ நாள் பிசினஸ் பிசினஸ்னு இருந்துட்டேன் இப்போ நார்மல் லைப்பை வாழணும்னு முடிவு பண்ணிட்டேன்….. “
“ஆமா மச்சி..!! ‘ இன்டர்நேஷனல் என்கஸ்ட் பிஸினஸ் உமன்’அவார்ட் தட்டிட்டு வந்துட்டாயமே.. கேள்வி பட்டேன்…. “
“என்னடா இதோ திருடிட்டு வந்த மாதிரி சொல்ற.. நானே எஸ்பிஎக்ட் பண்ணல அந்த அவார்ட் எனக்கு கிடைக்கும்னு… “
“காங்கிராட்ஸ் மச்சி… “
“தேங்க்ஸ் எல்லாம் சொல்ல முடியாது.. கிளம்பு”என்று அவள் சிரிக்க
அவள் தலையில் கொட்டியவன் “சரி இப்போ என்ன விஷயமா வந்த காரணம் இல்லாம வரமாட்டாயே… “
“எருமை எதை எதையோ பேசி வந்த விஷயத்தையே சொல்லலை பாரு உன்னால.. “என்றவள்
“சரி சொல்லு என்ன விஷயமா வந்த “
“ இந்த குட்டி பையன் பேர் அஜி இவங்க அவனோட அம்மா… அஜி திடிர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டான்னு சொல்லி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க அங்க அஜிக்கு இதயத்துல இதோ ப்ரோப்லேம் இருக்குனு சொல்லி இருக்காங்க… நீதான் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே அதான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்..
“என அஜியை கட்டி அனைத்தையும் சொன்னாள் தர்ஷிதா
“ஓகே தர்ஷி என்னனு நான் பாக்குறேன்…. “என அஜியை அழைத்து செல்ல அதான் பின் பல டெஸ்டுகள் எடுக்க பட்டு அனைத்தையும் மிக கவனமாக பார்த்துக்கொண்டிருந்தான் ஆகாஷ்..
“தர்ஷிதா.. “என்று ஆகாஷ் அழைக்க
“என்னாச்சி ஆகாஷ்.. “படபடப்புடன் கேட்டாள் தர்ஷிதா
“பையனோட அம்மாவையும் கூப்பிடு தர்ஷி… “இருவரும் ஆகாஷ் முன் இருந்த சீட்டில் அமர
“அந்த ஹாஸ்பிடல்ல சொன்னது எல்லாமே உண்மைதான்… அது மட்டும் இல்ல குழந்தைக்கு உடனே ஆப்பரேஷன் சேஞ்ச் ஆகணும் லேட் பண்ண பண்ண குழந்தை உயிருக்கே கூட ஆபத்தாயிடும் …”என ஆகாஷ் சொல்ல
ஓஓஓ… வேணா தலையில் அடித்து கொண்டு அழுதார் அஜியின் அம்மா…
“அக்கா ப்ளீஸ் அழாதீங்க நம்ம அஜியை காப்பாத்திடலாம்… “
“எப்படிமா… என்கிட்ட அவ்ளோ பணம் எல்லாம் இல்லாமா…. “தன் இயலாமையை நினைத்து கதறினார் அவர்
“அக்கா ப்ளீஸ் அழாதீங்க… நான் இருக்கேன் அக்கா.. “என்றவள்
“ஆகாஷ் ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணு உடனே வரேன் “என்றவள் அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு நேராக அவள் அப்பாவை பார்க்க அவர்களின் ஆபீஸ்சுக்கு சென்றாள்
லிபிட்டில் எறியவள் ஐந்தாவது தளத்திற்கான என்னை அழுத்தினாள் லிப்ட் ஐந்தாம் தளத்தில் நிற்க அங்கிருந்து மின்னல்வேகத்தில் வெளிவந்தவள் அதே வேகத்தில் தன் தந்தையின் காபினை நோக்கி நடக்க
அவளை கண்ட அனைவரும் எழுந்து நிற்க “குட் மார்னிங் மாம்… “என்று சொல்ல அனைவருக்கும் எப்போதும் இதழில் குடிகொண்டிருக்கும் புன்சிரிப்பை பதிலாய் தந்து சென்றாள் தாரா
அவளின் இந்த கம்பிரமும் நேர்கொண்ட பார்வையும் எளிமையான பேரழகும் சிலரை பிரமிக்க வைத்தது சிலரை பொறாமைப்பட வைத்தது எத்தனை பெரிய செல்வந்தரின் மகள் இத்தனை எளிமையான உடையை அணித்திருக்கிறாரே என்ற எண்ணமும் தோன்றியது எதையும் பொருட்படுத்தாது அதே வேகத்தில் சென்றாள் தாரா
“டாட்.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. “என்றவள்
“என்ன டா… ஏதும் பிரச்சனையா….. நீ காரணம் இல்லாத வரமாட்டாயேடா ஆபீஸ்க்கு… “
“ஆமா டாட்.. எனக்கு தெரிஞ்ச ஒரு குட்டி பையன் அஜித்துக்கு ஹார்ட்ல ப்ராப்ளம் டாட் சோ இமிடியட்டா ஆப்பரேஷன் பண்ணனும்…. “என அவள் சொல்ல
“ஓகே டா… இமெடியட்டா ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்றதானடா… வேணும்னா நம்ம டிரஸ்ட்ல இருந்து ஃபண்ட் எடுத்துகோடா “
“நோ டாடி… என்கிட்ட அமௌன்ட் இருக்கு டாடி… உங்ககிட்ட பெர்மிசன் வாங்கணும்ல டாடி …”
“என்னடா நீ இதுக்கு எல்லாம் என்கிட்ட பெர்மிஸ்ஸின் வாங்க வேண்டிய அவசியம் இல்லடா நீ எது செஞ்சாலும் கரெக்ட்டா தான் இருக்கும் டா சோ டாடி கிட்ட பெர்மிஸ்ஸின் வகிட்டுதான் செய்யணும்னு அவசியம் இல்லடா.. “என அவள் தலையை வருடிவிட
“ தேங்க்யூ சோ மச் டாடி…டாடி அண்ணாகிட்டயும்… “என அவள் சொல்லும் போதே யாதேஷ் “என் தங்கச்சி எது பண்ணாலும் கரெக்ட்டா தான் இருக்கும் சோ இந்த அண்ணா எப்பவும் உனக்கு சப்போர்ட் தான் சோ நீ என்கிட்ட பெர்மிஸ்ஸின் கேட்க வேண்டியது இல்ல டா வேணும்னா என்னோட கார்டு எடுத்துட்டு போடா.. “என அவன் கார்டை கொடுக்க
“இல்ல டா என் கார்டுல தேவைக்கு அதிகமாவே இருக்கு…
யாதேஷ் நான் கிளம்புறேன் டாட் பாய் “என்றவள் அங்கிருந்து அடுத்த நொடி கிளம்பிவிட்டிருந்தாள் அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்றவள் ஆபரேஷனுக்கு தேவையான பணத்தை ஹாஸ்பிடலில் கட்டிவிட்டு அஜியின் அணைத்து மருத்துவ செலவையும் தர்ஷிதாவே அதற்கான தேவைகளையும் அவளே செய்து வீட…..
அஜியின் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது உயிருக்கு இதற்குமேல் எந்தவிதமான பயமும் இல்லை என்று ஆகாஷ் சொன்ன பிறகே தர்ஷிதாவிற்கு நிம்மதி பெருமூச்சு விட்டாள் அதோடு மட்டும் விட்டுவிடாமல் அஜியின் அம்மாவிற்கு சுய தொழிலை கற்றுக்கொடுத்து அவர் சுயமாக சம்பாதிக்க ஏற்பாடு செய்து கொடுத்த பின்னே தர்ஷிதா மனம் நிம்மதி அடைந்தது அதான் பின் அஜியை அவளே தினமும் ஸ்கூலில் கொண்டு விடுவாள் …