in

கை நீட்டி அழைக்கிறேன்- Part 45

விடியற்காலையில் கோகிலா கண்டது, உறங்கும் மகளையும், அருகே கவிழ்ந்து மெத்தையில் தலை மட்டும் வைத்து, மகளின் கையை பற்றியபடி உறங்கிவிட்டிருந்த விஷ்வாவையும். ஒரு தாயாக அவர்கள் இருவரின் வாழ்வையும் நினைத்து கலங்கினார். அடுத்த அறையை விட்டு வெளியே வந்த பரந்தாமன் மனைவி கண்கலங்குவதை பார்த்து, மகளின் அறையை பார்த்தார் அவர் இதயம் கனத்து போனது. ஓசை படாமல் வீட்டு வேலைகளை கவனிக்க தொடங்கினார் கோகிலா.

 “அவங்க எல்லாருக்கும் என்னங்க பதில் சொல்லுறது? தம்பி இங்க இருக்கிறது தெரிஞ்சா எதும் தப்பா நினைக்கமாட்டாஙகளா? அவங்களுக்கும் இப்படி ஒரு குறையோட பொண்ணை..”

 மனைவியின் கையில் அழுத்தம் கொடுத்தார்,”பாப்போம்! நாம உண்மையை மறைக்கலை விஷ்வாவும் முழு மனசோட தான் அவளை ஏத்துக்கிட்டு இருக்கான்.” யோசனையில் நெற்றியை நீவி விட்டுக்கொண்டார், “இப்ப இவங்களை எழுப்புறதா வேண்டாமா?”  அந்த குழப்பம் இருவருக்குமே இருந்தது.

 “நான் குளிச்சுட்டு கீழே போய் மூர்த்திகிட்ட பேசிட்டுவரேன். நீ இன்னிக்கு வேலைக்கு லீவு சொல்லிடு, டாக்டர் அப்பாயிண்ட்மனட் வாங்கிட்டு அம்முலுவை அழைச்சிட்டு போகலாம்.”

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

இடது கையில் மறத்து போன உணர்வு வர, கண்விழித்த விஷ்வா முதலில் கண்டது தன் செல்லம்மாவின் முகத்தை  தான்.  உறக்கம் முழுதும் கலையாத நிலையில் இருந்தவன் முதலில் குழம்பினாலும் பின்னர் அனைத்தும் நினைவு வந்தது. 

 அவன் கையை விடாமல் பற்றிக் கொண்டு கவிழ்ந்து படுத்திருந்தாள்; பின் இரவில் நடந்த மனப் போராட்டத்தின் எந்த சுவடும் இல்லாமல் அவள் முகம் உறங்கும் பச்சிளங்குழந்தயை ஒத்திருந்தது.  அவள் முகத்தை பார்த்து ரசித்த வண்ணம் அசையாமல் படுத்திருந்தான். 

‘அந்த கன்னத்துக்கு போய் ஹல்வானு கேவலமாவா ஒரு கம்பேரிஸன் – ரஸகுல்லா தான் கரெக்ட். நல்லா வெள்ளை வெளேர்னு, புசு புசுனு… கன்ட்ரோல் டா விஷ்வா’!  அந்த கன்னங்களை கிள்ளி கொஞ்ச மனம் விழைந்தது. இன்னும் மலராத ரோஜா மொட்டை போல இதழ்கள் – ஏக்கத்தோடு நீண்ட பெருமூச்சை வெளியிட்டான். இதயம் குட்டி கரணம் அடித்து கும்மாளமிட்டது, தன்னை தானே அதட்டி கொண்டான். ‘ஜானு இந்த அழகு முகத்தை டெய்லி காலைல இப்படி பாத்துகிட்டே பொழுது விடிஞ்சா எனக்கு என்ன கசக்குமா?’  பூரணி உறக்கத்தில் மெல்ல புரண்டு படுக்க, அணிந்திருந்த சுடிதாரின் முன் கழுத்து எல்லைக்கோடு தாண்டி கீழிறங்கி, பாதுகாத்து வந்த அபாயகரமான அழகின் தரிசனத்தை சற்றே உடயவனுக்கு காட்டிட, அவனோ உறைந்தான், தடுமாறினான், நாவும், தொண்டையும்  வரள; உள்ளுக்குள் ஹார்மோன்கள் தங்கள் பணியை சிறப்பாக செயலாற்றியது.

 ‘ஐயோ! பேபி கொல்ற டீ! ஆமா விஷ்வா, இதுக்கு பிறகு நீ இன்னிக்கு எதாவது வேலைல கவனம் செலுத்துவ?’ ஒரு பக்கம் மனம் ஜொள்ள, மறுபக்கம்  ஹார்மோன்களின் போராட்டம் எல்லாவற்றையும் சற்று சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்து பார்வையை வேறு புறம் திருப்பினான். தூக்கத்தில் அவள்  கைப்பிடியை சற்று தளர்த்தவும், மெல்ல எழுந்து போர்வையை போர்த்தி அறையை விட்டு வெளியேறினான்.  

“அத்தை இதுக்கு மேல நான் இங்க இருக்கிறது நல்லாயிருக்காது. நான் வீட்டுக்கு போறேன். மாமா எங்க?” 

“உங்க சித்தப்பா கிட்ட பேச போயிருக்காங்க. காபி சாப்பிட்டு போ தம்பி.”

“இல்லை அத்தை பரவாயில்லை. நான் வரேன்”.

“போய் கொஞ்சம் ஓய்வெடு… ரொம்ப தாங்கஸ் விஷ்வா” குரல் கம்ம, கண்கள் பனித்தது. 

“அத்தை டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் கிடைச்சதும் சொல்லுங்க நானே கூட்டிட்டு போறேன்” மறுத்து பேச வந்தவரிடம், “என்னால நிம்மதியா ஆபிஸ்ல கவனம் செலுத்தமுடியாது அத்தை ப்ளீஸ்” என்றதும் அவர் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

 வீட்டிற்கு சென்று தன் காலை கடன்களை வேகமாக முடித்து, குளித்து தயாரானான். பூரணியின் மனநிலை அனேகமாக அமைதி அடைந்திருக்க கூடும் என தோன்றியது. அன்னையிடம் நடந்தவற்றை விவரித்தான். 

“மா, அவ இருந்த நிலையை பார்த்து ரொம்ப கஷ்டமாயிடுச்சு. பிரிஞ்சுடுவோமோங்கிற பயம் அவளை இவ்வளவு தூரம் பாதிச்சிருக்கு. சீக்கிரம் கல்யாணத்துக்கு தேதி பாருங்கனு மாமா கிட்ட சொன்னேன் ஆனா அது  அவளுக்கு நல்லதானு உண்மையா தெரியலை மா. நான் செஞ்சது சரியா? ஒருவேளை நல்லது செய்யிறதா நினைச்சு…” பதட்டமாக அர்ஜுன் உள்ளே நுழைய பேச்சு தடை பட்டது. 

“விச்சு என்னடா? இவ்வளவு காலைல பூரணி அப்பா வந்து பேசிட்டிருக்காரு. என்னடா ஆச்சு?” தம்பியிடமும் நடந்ததை கூறி முடித்தான். “இப்ப அடுத்து என்ன ப்ளான்?”

“அவ எழுந்த பிறகு கௌன்ஸலிங்க்கு கூட்டிட்டு போகணும். நான் லீவ் எடுக்கலாம்னு இருக்கேன். அட்லீஸ்ட் பர்மிஷன் போடணும். ஆனா இன்னிக்கு லீவ் எடுத்தா, நெக்ஸ்ட் டூ டேய்ஸ் காலைல நடக்குற ஷம்ஸோட பங்க்ஷனுக்கு நான் வரமுடியமானு தெரியலை. ஈவ்னிங்க் தான் வர முடியும். காரணத்தை சொன்னா அவ புரிஞ்சுப்பா. நீ ஆபிஸ் கிளம்பு, டேய் பைக்ல போகாத, ஆபிஸ் பஸ்ல போ”.அர்ஜுன் அவள் மீது கொண்டிருந்த பாசத்தை அறிந்திருந்தான். “ஒண்ணுமில்லை அர்ஜுன், நான் டாக்டரை பாத்துட்டு  உனக்கு தகவல் சொல்றேன். நீ கவலை படாத. ஆபிஸ் கிளம்புறதுக்கு முன்னாடி வேணும்னா அவளை பாத்துட்டு போ”.

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

வழக்கமாக சந்திக்கும் நரம்புசார் உளவியலாளரையும் (Neuro psychologist) மற்றும் நரம்பியல் (Neurologist) நிபுணரையும் சந்தித்தனர். நாள் முழுவதும் ஒரு சோர்வுடனே பூரணி காணப்பட கவலை தொற்றியது விஷ்வாவிற்கு.

 “இந்த மாதிரி உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் போது மூளையும், நரம்பு மண்டலங்கள்னும் சோர்வடையும் அதனால உடல் சோர்வு ஏற்படுறது சகஜம் தான். மெடிசன்ஸ் இப்ப நான் குடுக்கலை, இன்னும் மூணு நாள் பொறுத்து வா அன்னப்பூரணி அது வரை நான் முன்ன சொல்லி குடுத்த தெரபி, எக்ஸர்ஸைஸ் ரெகுலரா பண்ணு.” 

அவரை தன் அன்னையின் சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என தனியே சந்திக்க அனுமதி கேட்டான் விஷ்வா, மாலை சந்திக்க கூறினார். 

மருத்துவர் அறையிலிருயிலிருந்து வெளியே வந்ததும், “நான் கேப் புக் பண்ணிடுறேன் மாமா. நான் ஆட்டோ பிடிச்சு ஆபிஸ் கிளம்பறேன்”. வாசலில் கேட் அருகே இருவரும் பேசிகொண்டிருக்க, கோகிலாவும் பரந்தாமனும் சற்று தள்ளி நின்றனர். “ஜானு வீட்டுக்கு போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடு மா. சரியா?” 

“ம்ம்..”

“இங்க பாரு எனக்கு உன் மேல கோவம் இல்லை, வருத்தம் தான். அதுவும் ஓவரா கண்டதையும் நினைச்சு உன் ஹெல்த்தை இந்த அளவுக்கு கெடுத்து வச்சிருக்கியேனு தான் வருத்தம். ஸாரி தாங்கஸ் இதை சொல்ல வாயை திறந்த, அடி விழும்” என்றதும் அவனை முறைத்தாள். “முறைக்காத முட்டை கண்ணி! ஷம்ஸ் கல்யாணத்துக்கு போகணும்னா, ஒழுங்கா சாப்பிட்டு உடம்பை கவனிச்சுக்கோ”. 

“சிவா நான் என்ன குழந்தையா? சாப்பிட்டா தான் மிட்டாய், டாடானு சொல்ற மாதிரி சொல்ற?” 

“முதல்ல சொன்னதை செய், நீ குழந்தையா குமரியானு சாவகாசமா  ஆராய்ச்சி பண்ணலாம்” கண்ணடித்து கூறியதும் அர்த்தம் விளங்கியது.

“சீ போடா” முகத்தில் தோன்றிய பொய் கோபமும், நாணமும் அவளை மேலும் அழகாய் காட்டியது அவனுக்கு. 

“நீ சொல்ற சீ போடா ல செம கிக்கு இருக்கு பேபி” கிறங்கிய குரலில் அவன் பேசியதில் அவள் மேலும் நாணம் கொண்டாள். 

“ஐயோ சிவா அப்பா அம்மா எதிர்ல..” அடி குரலில் கெஞ்ச

“அது சரி, நீ பண்ண அலப்பறைல என் கற்புக்கு உத்திரவாதம் இல்லனு நேத்து தோணிப்போச்சு, நீ பேசறியா?”

“அடப்பாவி…”அவள் பதில் கூறும்முன் கைபேசி ஒலித்து கவனத்தை கலைத்தது. டாக்ஸி வந்ததும் அவர்களை அனுப்பிவிட்டு, பன்னிரண்டு மணிக்கு அலுவலகம் சென்றடைந்தான். 

மாலை மூர்த்தி, யமுனா, பரந்தாமன், கோகிலா, காவேரி அனைவரும் ஜோசியரை பார்க்க சென்றனர். இரவு திரும்பியதும், இரண்டு நாளைக்கு பிறகு ஜோசியர்  வர சொன்னாதாக கூறியதும் பூரணிக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. 

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

காலை மகளை எழுப்பிய கோகிலா, “அன்னம் குளிச்சு ரெடியாகு, கோவிலுக்கு போகணும், இந்த புடவையை கட்டிக்க”

“ஏன் அம்மு..”

“சொன்னா செய் அன்னம், நேரமாகுது. ஒரு பிரார்த்தனை அப்பாவுக்காக. போ டா” என்றதும் மறுக்காமல் தயாரானாள். 

குளித்து வந்ததும் புடவையை உடுத்த, மஞ்சளும் அரக்கும் கலந்த டபுள் ஷேட் புடவையில் அரக்கு பார்டர் அதில் மெல்லிய இழை ஜரிகை வைத்த சில்க் காட்டன். கோகிலாவின் பிறந்த நாளைக்கு மூன்று மாதங்கள் முன்பு அவள் பரிசளித்த புடவை அது. புடவையின் நிறத்திலேயே கண்ணாடி வளையல்கள், காதில் சிறிய தங்க ஜமிக்கி, வழக்கம் போல தளர்வான ஒற்றை ஜடை.

 அடுத்த பத்து நிமிடத்தில் தயாராகி வெளியே வந்த மகளை பார்த்த பரந்தாமன், “அம்முலு..” என ஆர தழுவி உச்சிமுகர்ந்தார், கண்கள் கலங்கியது. மகளின் தலையில் பூவை சூட்டிய கோகிலாவும் உணர்ச்சிவசப்பட்டார்.

ஆனால் கண்ஜாடையில் கணவரை கட்டுபடுத்தினார். “காபி குடிங்க ரெண்டு பேரும் நான் அஞ்சு நிமிஷத்துல வரேன். அன்னம் ஆட்டோ புக் பண்ணிட்டேன், கரெக்டா ஏழு மணிக்கு கிளம்பணும்” என உடை மாற்ற சென்றார்.  ஞாயிறு காலை நேரம் என்பதாலும் மறுநாள் புது வருடம் என்பதாலும் சாலையில் வாகன நெரிசல் இல்லை, கோவிலிலும் அதிக கூட்டம் இல்லை, அவர்கள் வழக்கமாக செல்லும் அம்மன் கோவிலில் விசேஷ அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார் கோகிலா. பூஜை பிரார்த்தனை எல்லாம் முடிந்து இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பினர். 

“அன்னம் வீட்டு வேலையை நான் பாத்துக்கறேன் நீ டிபன் சாப்பிட்டு காலேஜ் வர்க் இருந்தா பாரு போ. இல்லைனா ஷம்மு கல்யாணத்துக்கு போக உன்னோட பேக் பண்ணு” என சமையலறை உள்ளே வர விடாமல் தள்ளினார். 

“உனக்கு நான் ஹெல்ப் பண்றேன் கலா. அப்படியே என் பொண்டாட்டி கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்…” என பரந்தாமன் சிரித்து கொண்டே கூற, கோகிலா தலையில் அடித்துகொண்டார். 

“ம்ம்ம்..டாடி சண்டே ரெமான்ஸா? நடத்து நடத்து” என அவர் மீசையை வழக்கம் போல முறுக்கி விட்டாள். கிச்சனுக்குள் சென்று தண்ணீர் பாட்டில் எடுத்தபடி, “கலா டார்லிங்க், உங்க காதலுக்கு நான் குறுக்க நிக்கலை நான் சுகு வீட்டுக்கு போறேன். அடுத்த வாரம் ஒரு செமினார் இருக்கு, ப்ரிபேர் பண்ணணும்.” 

“அடி கழுதை!” என்றுவிட்டு கணவரிடம் “ஏங்க இப்படி மானத்தை வாங்கறீங்க? பெண்ணுக்கு கல்யாணம் பண்ற வயசுல..” என்று சலித்து கொள்ள, அவர் சிரித்து விட்டு அமைதியாக இருந்தார். 

இருவரையும் அணைத்து கொண்டு முத்தமிட்டு, “செம ஹாப்பியா இருக்கு, உங்களை இப்படி பாக்க” என்று கூறி விலகினாள்.  “எதுக்கும் வீட்டுக்கு வரதுக்கு முன்ன ஒரு போன் பண்ணி கேட்டுறு டீ பூரி. எதுனா அடல்ஸ் ஒன்லி ஓட போகுது” என தனக்கு தானே பேசி கொண்டு அன்னையின் அடியிலிருந்து தப்பி சுகந்தி வீட்டுக்கு ஓடினாள். அன்னை தந்தையின் வாழ்வில் மீண்டும் சந்தோஷம் துளிர்ப்பது பெரும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் அளித்தது. ‘கவி மா கிட்ட சொல்லி சுத்தி போட சொல்லணும்’ என தீர்மானித்தாள்.

 கருத்தரங்கத்திற்கான ஆய்வு தகவல்களை சேகரிக்க, கணினியில் மூழ்கினர் இருவரும். கார்த்தி உள்ளே நுழைந்தான், “ஹாய் பூரி கா” என அவளை அணைத்து கொண்டான். 

“ஹை! வெல்லக்கட்டி எப்படா செலக்ஷன் முடிஞ்சு வந்த? வந்து பாக்கவேயில்லை பாத்தியா நீ?” அவனை கொஞ்சினாள். 

“ஏய் என்ன வெல்லக்கட்டி மண்ணாங்கட்டி? எருமை வயசாகுது அவனுக்கு.” சுகந்தி தம்பியை சீண்டினாள். 

“உன்னை கூட தான் மாமா கொஞ்சறாரு நாங்க கேட்டோமா?” 

“அப்படி சொல்லு டா வெல்லக்கட்டி!” ஹைபை கொடுத்து கொண்டார்கள். “அப்படியே கொஞ்சம் யூனிட் டெஸ்ட் ஆன்ஸர் ஷீட்டை எடு டா ராசா” பூரணி  கைநீட்டினாள். “என்ன லுக்கு பிரதர்? பேப்பர் வந்தாச்சுனு தெரியும் மரியாதையா எடு”. 

கடுகடு வென்று முகத்தை வைத்து கொண்டு பேப்பரை எடுக்க, அடுத்த அரைமணி நேரம் அந்த ஆய்வில் கடந்தது. சுகந்தியை பத்மா அழைத்ததும், அறையை விட்டு வெளியேறினாள். 

இறுதியில் “ம்ம்ம் நாட் பேட் இவ்வளவு டிஸ்ட்ராக்ஷன் இருந்தும் நல்ல மார்க் வாங்கியிருக்க. இந்தா” பையில் இருந்த இரண்டு பெரிய பார் சாக்லெட்டுகள் கை மாறியது. 

“யெஸ்!” என ஆரவாரம் செய்து “இரு அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்”. 

“ஃப்ளவர் பேபி…” என உச்சஸ்தாயியில் அழைத்து கொண்டு ஓடி வந்தாள் ஷம்மு.  

“அக்கா நீங்க எங்க..” 

“ஏண்டி நேத்து உடம்பு சரியில்லையாம். சொல்ல மாட்டீங்களா? சைத்தான்” அவளை பட்டென அடித்தாள். 

“இல்லைகா உங்க கல்யாண நேரத்துல..” 

“இப்ப எப்படி டீ இருக்க?” அவளை கட்டி கொண்டு “என் கல்யாணம் முக்கியம்னா நீயும் எனக்கு முக்கியம் டீ.” உண்மையான அக்கறையில் இருவரின் கண்களும் பனித்தது.

“பூ குட்டி உன்ன கூப்பிடுறாங்க கோகிமா” அழைத்த சுகந்தி அவள் எழுந்ததும் சேலையை ஆங்காங்கே கசங்கி இருந்ததை நீவி விட்டு தலை முடியை ஒதுக்கி விட்டாள்.

“என்னடி என்னை பொண்ணு பாக்கவா வராங்க” என்றவளிடம், கண்சிமிட்டி சிரித்து தள்ளி கொண்டு நடந்தனர் இருவரும் . அவள் வீட்டு வாயிலை அடைந்ததும், மூச்சு, பேச்சு எல்லாம் நின்று சிலையாகி போனாள். அங்கே ஹாலில்  கீழே பாய் போடப்பட்டு   மூர்த்தி, யமுனா, அர்ஜுன், காவேரி, விஷ்வா அனைவரும் ஒரு பக்கம் அமர்ந்திருக்க…  சுரேஷ், பத்மா, கார்த்தி பரந்தாமனும் கோகிலாவும் மறு புறம் அமர்ந்திருந்தனர். தாம்பாளங்களில் பூ, பழம், வெற்றிலை பாக்கு, இனிப்பு என அடுக்கபட்டிருக்க.. எதற்காக என்று ஒரு யூகம் இருந்தாலும் நடப்பது கனவா என சந்தேகம். 

“பூரணி உள்ள போடீ” என தோழிகள் காதில் சொல்லி அவளை உள்ளே அழைத்து வந்தனர். ஒரு படபடப்பு, பயம்.. என நடப்பதை முழுவதுமாய் உள் வாங்கி கொள்ளாமல் பிரமிப்பில் இருந்தாள். அவளை உள் அறைக்கு அழைத்து சென்று ஒர் முறை அவள் அலங்காரத்தை சரி செய்தனர்.

 “ஏய் ஃப்ளவர், இங்க பாரு” பூரணியின் கண்களில் கண்ணீர் மின்னியது. “என்ன டா? எதாவது பேசு” லேசாக உலுக்கினாள். 

சுகந்தி, “பூ குட்டி, என் டாரிலிங்க்” என அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சந்தோஷம் ஒரு சிறு கோடாக கன்னத்தில் வழிந்து ஓடியது. தலை கவிழ்ந்து புன்முறுவல் பூத்தாள். உள்ளுக்குள் சந்தோஷம் பொங்கி எழுந்தது. 

 “அன்னம்” கதவை திறந்து உள்ளே வந்தார் கோகிலா. வாஞ்சையாக மகளின் தலை கோதி, உச்சிமுகர்ந்து, “உன்னை முறையா பொண்ணு கேட்டு வந்திருக்காங்க.” அனைவர் கண்ணும் கலங்கியது. “பிரகாஷையும் வர சொல்லியிருக்காங்க அப்பா, உனக்கு அண்ணன் முறையாச்சே.” அமோதித்து தலையாட்டினாள். அவனிடம் நேரில் மன்னிப்பு கேட்க நினைத்திருந்தாள்.

“ஜோசியர் வருவாரு கொஞ்ச நேரத்துல நிச்சயதார்த்த தேதியும் கல்யாண தேதியும் முடிவு பண்றோம் இன்னிக்கு” ஆச்சரியத்தில் விழி விரிய, தன்னை சுற்றியிருந்த மூவரையும் ஒரு முறை ‘நிஜமா’ என்பது போல பார்த்தாள்.

“நேத்தே முடிவாயிடுச்சு, மூர்த்தி அண்ணன் தான், இதுங்க யார்கிட்டேயும் சொல்லாதீங்க. நாளைக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு சொல்லிக்கலாம்னு சொன்னாங்க. சரி வா” மீண்டும் ஒரு மகளை அணைத்து கொண்டு விடுத்தவர், ஷம்முவையும் சுகந்தியையும் அணைத்து “தாங்கஸ் மா எல்லாத்துக்கும்’.

ஷம்முவும் சுகந்தியும் அவளை ஹாலுக்கு அழைத்து வந்தனர். சிறு வயது முதலே இங்கு இருப்பவர்கள் மத்தியில் தான் வளர்ந்திருக்கிறாள். உரிமையாய் சண்டையிடுவதும், பாசம் காட்டுவதும், சேட்டைகள் செய்து செல்லம் கொஞ்சுவதும், அக்கறையாய் கவனித்து கொள்வதும் என அன்பிலிருந்து அராஜகம் வரை அவளின் அனைத்து முகங்களையும் கண்டிருந்தவர்களுக்கு முதல் முறையாக வெட்கத்தில் தலை கவிழ்ந்து பேசாமடந்தையான பூரணியின் இந்த முகம் முற்றிலும் புதிதாக இருந்தது. 

“ஷம்மு, இந்த பொண்ணு யாரு உங்க ரிலேட்டிவா? நம்ம குடும்பத்துல ஒரு அராத்து ஒண்ணு இருக்குமே அது எங்க? இந்த ஓட்டை ஒடசல் சாமான் குடுத்து புது குக்கர் வாங்குற மாதிரி எகஸ்சேஞ்ச் ஆஃபர்ல எதும் மாத்திட்டியோ” அர்ஜுன் சீண்ட அனைவரும் சிரித்தனர். 

“அர்ஜுன்.. நீ அவகிட்ட தனியா சிக்குவ அப்ப நாங்க யாரும் உதவிக்கு வர மாட்டோம்” ஷம்மு எச்சரித்தாள். அவன் மேலும் எதோ பேச, பரந்தாமனின் கைபேசி ஒலித்தது, அவர் எழுந்து வாயிலுக்கு சென்றார். 

“ஷர்மிளா உக்காரு மா எவ்வளவு நேரம் நிப்பீங்க? மருமகளே உக்காரு” என்றார் மூர்த்தி. சற்று பொறுத்து, “மூத்த மருமவளே – உன்னையும் தான் மா” என்றதும் சுகந்தியும் ஷம்முவும் ‘உன்னை தான்டீ’ என்பது போல கையில் சுரண்டினர். தயக்கத்தோடு நிமிர்ந்து அவரை பார்த்தாள், “என்ன பூரணி? விஷ்வா தான் எங்க குடும்பத்துக்கு மூத்த வாரிசு, அவனை கட்டிக்கிட்டா நீ தான மூத்த மருமக?” என புன்னகைத்து கொண்டே கூற, மீண்டும் தலை கவிழ்ந்தாள் புன்னகையோடு. விஷ்வா ஒவ்வொரு வினாடியையும் மனதில் பதியவைத்து பத்திர படுத்திகொண்டான். தம்பியோ அண்ணனின் மனமறிந்து கைபேசியில் படமாய் பதிந்து அவன் கைபேசிக்கு பகிர்ந்தான். பரந்தாமனோடு பிரகாஷும் ஜோசியரும் உள்ளே நுழைந்தனர். ஜோதிடருக்கு இடமளித்து மற்றவர்கள் சற்று இடம் மாறி அமர்ந்தனர். 

“ஹாய் சிஸ்டர்!” என்றான் பிரகாஷ் அவள் அருகே வந்து எவ்வித தயக்கமும் இன்றி. 

“அண்ணா ஸாரி” சட்டென கண்ணில் குளம் கட்ட 

“ஏய் நல்ல நாள் அதுவுமா என்ன இது? கண்ணை துடைச்சிக்க. நான் எதையுமே மனசுல வச்சிக்கல டா, சந்தோஷமா இருக்கணும்” ஆதூரமாக தலை வருடி கூறிவிட்டு விஷ்வா அருகில் போய் அமர்ந்தான். பெண்கள் மூவரும் கோகிலா அருகே அமர்ந்தனர். அப்பொழுது தான் தன்னவனை கவனித்தாள், கறுப்பு ஃபார்மல் பேண்ட்டும், ஆலிவ் க்ரீன் ஃபார்மல் ஷர்ட்டும் அணிந்திருந்தான். உள்ளே இதயம் தடம் புரண்டு, சுவாசம் வேகமெடுத்தது பூரணிக்கு ‘பூரி இன்னிக்கு நாம அனகோன்டாவா மாறிடுவோமா’ அவள் மனம் வெட்கமில்லாமல் சைட்டடிக்க.

“பூரி ஷட்டர் போடு டீ” என சுகந்தி காது கடிக்க நினைவு மீண்டாள். 

ஜோசியர் பேச்சை தொடங்கினார்,  “ரெண்டு பேரோட ஜாதகமும் நல்லா பொருந்தியிருக்கு. நிச்சயத்துக்கு நாள்… தை மாசத்துல வர முதல் முகூர்த்தம், தை மாசம் அஞ்சாம் தேதி, அதாவது ஜனவரி பதினெட்டு. ஒரு முக்கியமான விஷயம்!  பையனுக்கு குரு பலன் இந்த வருஷம் முடிஞ்சுடுது… அதுக்கு மேல அவர் ஜாதகப்படி குரு பலன் அமையல, குரு பலன் இல்லாம கல்யாணம் பண்ணுறது அவ்வளவு சிறப்பா வராது. என்னை தவறா நினைக்க வேண்டாம். ஜாதகத்துல உள்ளதை தான் சொன்னேன்.” அனைவரும் சற்று நேரம் விவாதித்தனர், ஜோசியரிடம் சந்தேகங்கள் கேட்க பட்டது.

 “அண்ணன் தம்பி கல்யாணத்தை ஒண்ணா நடத்தகூடாதுனு சித்தர் ஐயா சொல்லியிருக்காருனு  நீங்க சொன்னீங்க. ரொம்ப நாள் தள்ளினா, விஸ்வநாதன் ஜாதகத்துல குரு பலன் போயிடுது. இதெல்லாம் வச்சு பாக்கும் போது பங்குனி மாசம் முடியறதுக்குள்ள கல்யாணம் வைக்கணும். அதாவது ஏப்ரல் பதிமூணு தேதிக்குள்ள டைம். ஏன்னா சித்திரை மாதம் முதல் முகூர்த்ததுல அர்ஜுன் சுகந்திக்கு தேதி குறிச்சிருக்கு”. 

பூரணி அன்னையை சுரண்டி ஏதோ சொல்ல, “அது… பங்களுக்கு கடைசி செமஸ்டர் வேற அதே நேரம் தான் வருது”. அனைவரும் யோசனையில் ஆழ்ந்தனர்.

“சம்மந்தி..” காவேரியின் குரல் கேட்டு அனைவரும் அவர் புறம் திரும்பினார். “நிச்சயதார்த்தம் ஜோசியர் சொல்ற தேதியில நடத்துவோம். தள்ளி போடுற கேள்விக்கே இடமில்லை.  இவங்க பரிட்சை தேதி தெரிஞ்ச பிறகு கல்யாண தேதியை  முடிவு பண்ணிக்கலாம். இப்ப நல்ல நேரம் முடியறதுக்கு முன்ன நிச்சயதார்த்ததிற்கு தேதி முடிவு பண்ணிக்குவோம். உங்களுக்கு இதுல சம்மதமா?”

“எங்களுக்கு சம்மதம் மா” என்றார் பரந்தாமன் மனைவியிடம் ஆலோசித்து. அனைவரும் ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியிட்டனர். மேற்கொண்டு சில சந்தேகங்களை பெரியவர்கள் ஜோசியரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டார்கள். பரந்தாமன் அவருக்கான மரியாதையை செய்ததும் அவர் புறப்பட்டார். பிரகாஷ் டிரைவரிடம் அவரை வீட்டில் விட்டு வரும்படி பணித்தான்.  

“டேய் கோட்டான்! கங்கிராட்ஸ் டா!” என ஷம்மு விஷ்வா  கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தாள்.
“என் செல்ல ஃப்ளவர் பேபி! கங்கிராட்ஸ்! ” என அவளை கட்டி கொண்டு கொஞ்சி “ஏய் சேந்து நில்லுங்க ரெண்டு பேரும்” என தன் கைபேசியில் படமெடுத்து கொண்டாள்.
“சரி உங்க நிச்சயதார்த்தம் ரெண்டு வாரத்துல என் கல்யாணம் ரெண்டு நாளுல இப்ப நான் வீட்டுக்கு போகலை மொத்த குடும்பமும் விளக்குமாறு தூக்கிட்டு வரும். அங்கிள்ஸ் ஆன்டீஸ்,  எல்லாரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துருங்க. ஏய்! நீங்க எல்லாரும் மூணு மணிக்கு கரெக்டா வீட்டுல இருக்கீங்க, இல்லை…”

“ஏ ஆத்தா சந்திரமுகி நீ கிளம்பு. சந்தீப் இங்க வந்துடபோறான் தாலி கட்ட”

 அர்ஜுனின் கிண்டலில் “நீ வாடா அங்க உன்னை..” என்றவள் விடைபெற்றாள்.

பெரியவர்கள் மீண்டும மாலை சந்தித்து பேசுவது என தீர்மானித்தனர். அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் கண்களால் கவ்விக்கொண்டு காதலை பரிமாறி கொண்டிருந்தனர் விஷ்வாவும் பூரணியும். அவர்கள் கவனத்தை திசைதிருப்பியது பிரகாஷின் கைபேசி ஒலி, அதை எடுத்து கொண்டு அவன் வெளியே சென்றான். 

மூர்த்தி பூரணி அருகே வந்து தலையில் கைவைத்து ஆசிர்வதித்து, “எனக்கு ரொம்ப சந்தோஷம் டா, நீ வேற வீட்டுக்கு கல்யாணம் ஆகி போனா எங்க யாராலையும் உன்னை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான் கடவுள் உங்க ரெண்டு பேரையும் சேத்து முடிச்சு போட்டுட்டாரு போல இருக்கு. இவ வயித்துல பிறந்த ஒரு மகளை பறிச்சுகிட்ட கடவுள் ரெண்டு மகளை மருமக ரூபத்துல குடுத்துட்டான்” சுகந்தியையும் தலையில் கைவைத்து ஆசி வழங்கினார், கண்கள் கலங்கியிருந்தது.
காவேரி விஷ்வாவை ஆசி பெறுமாறு சைகை செய்ய, பூரணியும் விஷ்வாவும்  பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து ஆசி பெற்றனர். அனைவரும் நெகிழ்ந்து போயினர். உணர்ச்சிவசப்பட்ட யமுனா இரண்டு பெண்களையும் தன்னருகே அழைக்க இருவரும் அவரை அணைத்து கொண்டனர்.

சிறிது நேரமாகியும் அவர் விடாததால், “பெரிய அம்மு, என் மாமியார் பாவம் அவங்களையும் கொஞ்சம் கட்டிகிறேனே!” வழக்கம் போல அவரிடம் வம்பிழுத்தாள்.

“போடி போக்கிரி கழுதை!” என கன்னத்தை கிள்ள போக அவள் நழுவி அருகில் இருந்த காவேரியை அணைத்து கொண்டாள். காவேரி மகனையும் சைகை காட்டி தன்னிடம் அழைத்து கொண்டார்.

பத்மா அவளை அணைத்து கொண்டு, “என் ராஜாத்தி! நல்ல ஜோடி பொருத்தம்” என இருவரையும் பார்தது கூறிவிட்டு “ரெண்டு பேருக்கும் சுத்தி போட்டுருங்க மறக்காம”.

“பூரி கா…கங்கிராட்ஸ்..” என கார்த்தி அவளை கட்டிகொண்டான்.

“டேய் போதும் டா” என அவனை தள்ளி விட்டு பூரணியை அவன் ஒரு பக்கமும் சுகந்தி ஒரு பக்கமும் அணைத்து கொண்டனர். ‘ராட்சசி சொக்குபொடி போட்டு எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா’ என உடையவனின் பார்வை காதலோடும் ஏக்கத்தோடும் அவளை வருடியது.
“அண்ணாத்தை என்ன ஒரே புகையிற வாசனை வருது. உன்னை யாரும் சீண்டலைனா?”

“டேய் என் பிள்ளைக்கு என்ன டா?” என யமுனா, காவேரி இருவரும் அணைத்து கொள்ள. “நானும் இருக்கேன் என் மாப்பிள்ளைக்கு” என பிரகாஷ் இடை புகுந்தான்.

 “பூரி மா, ஒவ்வொருத்தரையா கட்டி பிடிச்சு, இதுதான் சாக்குன்னு அண்ணனையும் கட்டிபிடிக்கதான ப்ளான் பண்ணுற?” என வாரினான் அர்ஜுன் .

“அர்ஜுன்” என பல குரல்கள் அவனை அதட்ட.
“டேய் அடங்கு டா” என அண்ணனிடமிருந்து கூடுதலாக முதுகில் இடியும் இறங்கியது.

“சரி சரி கிளம்பலாம்” மூர்த்தியின் குரல் கேட்டதும்,

“அதான, எங்கடா டாடியை காணுமேனு நினைச்சேன். எம்டன்!” என்றபடி விலகினான்.
 அனைவரும் விடைபெற்று, கீழே நின்று பேசி கொண்டிருந்தனர். 

வாசல் கதவின் அருகே தேங்கி நின்ற விஷ்வா அவளை பார்வையால் வருடினான். விழிகளில் தன் காதல் மொத்ததையும் தேக்கி அவனை நோக்கினாள். இதழில் பூத்த மென்னகையும், முகத்தில் நிறைந்திருந்த பரவசமும் அதோடு சற்றே கலந்திருந்த வெட்கச்சிவப்பும் தன்னவளை பேரழிகியாக அவனுக்கு காட்டியது. பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் தூய்மையான அன்பால் கட்டி வைத்திருக்கும் இந்த பேரழகி என் சொந்தம், என் காதலி, என் மனைவி என்பதை நினைத்து நெஞ்சம் பூரித்து நின்றான்.  
ஆணுக்கு அவனின் கண்ணியமும், ஒழுக்கமுமே கம்பீரம், அழகு என்பது அவளின் நம்பிக்கையாக இருந்தது. இதில் நூறு சதவிகிதம் தன்னவன் முழுமை பெற்றவன் என்பதை ஒவ்வொரு முறையும் அவள் உணர்ந்த தருணங்களில், அவனுக்காக மேலும் மேலும் வார்த்தையில் விவரிக்க முடியாத அளவு காதல் பொங்கியது உள்ளத்தில்.
சூழலை மறந்து, ஒருவரில் ஒருவர் மூழ்கி போய் நிற்க, இவர்களை கண்ட பரந்தாமனும் கோகிலாவும் அவர்களை விலக்க மனமில்லாமல் வெளியே நின்றனர். இதை கண்ட அர்ஜுனும் பிரகாஷும் உள்ளே எட்டி பார்த்துவிட்டு இந்த அழகிய தருணத்தை கைபேசியில் சப்தமில்லாமல் பதிவு செய்து கொண்டதும், “விச்சு” என குரல் கொடுத்தான். சட்டென நினைவு மீண்டதும், பூரணி உள்ளே சென்று மறைந்தாள். அவள் பெற்றோரை கண்டு அசடு வழிந்தான் விஷ்வா.

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by அனு

வணக்கம்! என் பெயர் அனு. நான் housewife, இரண்டு குழந்தைகளின் தாய். புத்தகம் வாசிக்க மிகவும் பிடிக்கும். எழுதும் ஆர்வமும் உண்டு. பள்ளி கல்லூரி நாட்களில் எழுதியது உண்டு, டைரியில். நீண்ட இடைவேளைக்கு பிறகு எழுதும் ஆர்வம் தலைதூக்க, இந்த வலைதளம் வடிகாலாய் அமைந்திருக்கிறது. எனது எழுத்துக்களை வாசிக்கும் அனைவரைககும் நன்றி. 

Story MakerContent AuthorYears Of Membership

வைரத்தாரகை 10

11 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன