in

அன்பின் அரசனே 12

அன்பின் அரசனே 12

 காஃபீ ஷாப்பில் சித்துவும், சிவாவும் பேசி கொண்டிருந்தனர்.. சிவா தமிழைப்பற்றி சித்துவிடம் சொல்லிக் கொண்டிருக்க, சித்து முகம் இறுகக் கேட்டு கொண்டிருந்தவன், தாடையை தடவி “அப்படியா..!?” என்று கேட்க, சித்துவின் செய்கையை பார்த்த சிவா, “ஹேய் சித்து..‼ இப்போ நீ செஞ்ச மாதிரி தான் அந்த தமிழும் செஞ்சான்.. கொஞ்சம் கூட மாற்றமே இல்லை..‼ ரெண்டுபேரும் ஒரேமாதிரியே செய்றிங்க.. ” என்று ஆச்சரியமாக சொல்ல,  சிவா சொன்னதில். ஒரு நொடி திகைத்து  விழித்த சித்து,

“சிவா.. நீ என்னை ரெண்டு அடி கூட அடிச்சிக்க..‼ ஆனால், என்னை அந்த தமிழ் கூட கம்பேர் செய்யாத.. அவனை நான் பார்க்கிறதுக்கு முன்னாடியே என் ஜென்ம விரோதி ஆகிட்டான்.. தாடையை யார் தடவினாலும் ஒரே மாதிரி தான் தெரியும்..! நீ எந்நேரமும் அந்த தமிழ் பத்தியே நினச்சிட்டு இருக்கிறதால உனக்கு அப்படி தோணுது போல..! வீட்டுக்கு போய் கண்ணாடி முன்னாடி நீ செஞ்சு பாரு..! நீயும் அப்படி தான் தெரிவ” என்று சொல்ல, ‘அப்படியும் இருக்குமோ..?’  என்று சிவா குழம்பினான்..

சிவாவை சிறு புன்னகையோடு பார்த்திருந்த சித்து, “ நீ ரொம்ப குழப்பத்தில் இருக்க சிவா..! நீ எதை பத்தியும் கவலைப்படாத நான் கொஞ்ச நாளைக்கு இங்க தான் இருக்க போறேன்.. நான் பார்த்துக்கிறேன்..‼ அந்த தமிழை நீ ஆஃபிஸ்ல கவனிச்சுக்க.. நான் வெளிய கவனிச்சிக்கிறேன்.. நம்மளை மீறி அவன் என் அப்பூவை எப்படி நெருங்கிறான்னு பார்க்கிறேன்..”  என்று சிவாவிற்கு திடம் அளித்து அவனை அனுப்பி வைத்தான்..

அவன் வெளியேறும் வரை பார்த்திருந்த சித்து.. “ஷப்பா.. இப்போவே கண்ணைக்கட்டுதே.. அடேய் தமிழ்..! நீ என்னை வச்சு செய்ற..! இருக்கட்டும்..! உன்னை வேறவிதமா கவனிச்சுக்கிறேன்..‼” மனதில் புலம்பியவாறே.. காஃபீ ஷாப்பிலிருந்து வெளியேறினான்..

சித்துவிடம் பேசிவிட்டு அலுவலகம் வந்த சிவா, தன் இருப்பிடம் வந்தவன், கண்ணாடி முன்னே நின்று சித்து செஞ்சது போல தாடையை தடவி பார்த்தான்.. “ ம்ம்கூம் ரெண்டுபேரும் செஞ்ச மாதிரி இல்லையே..!” என்று யோசித்தவாறே வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அலுவலகம் முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த மாதவன் வந்த காரை, ஒரு கார் மோதுவது போல வந்து வழிமறித்து நிறுத்தியது.. திடீரென்று நடந்த செயலில் மாதவன் திடுக்கிட்டு காரை நிறுத்தி இறங்கி அந்த நபரை திட்டுவதற்கு வாய் திறக்க.. காரிலிருந்து இறங்கியவனை பார்த்து அவர் வாய் தானாக மூடிக்கொண்டது..

”சித்து சார்..! நீங்களா..? நான் யாரோன்னு நினச்சு திட்ட போனேன்.. நீங்க எப்போ டெல்லியில இருந்து வந்திங்க..”” அசடுவழிய பேசி சித்துவை விசாரிக்க.. அவரை ஒரு சிரிப்போடு பார்த்த சித்து..” ஓ நான் என்று தெரிஞ்சால் காரை ஏத்தி கொன்னுருப்பிங்களோ…?” புருவம் உயர்த்தி கேலிபேச.. “சார். நான் உங்களை..” என்று மாதவன் தடுமாற..”கூல்.. கூல் மிஸ்டர் மாதவன்..  பதட்டப்படாதிங்க.. முதல் முயற்சி தோல்வியில முடிஞ்சது.. இப்ப நானே உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தேன்.. கிடச்சத மிஸ் பண்ணிட்டிங்க மிஸ்டர். மாதவன்..” என்று கிண்டல் செய்ய

சித்துக்கு உண்மை தெரிந்ததில் மாதவனுக்கு வேர்த்து வழிந்தது.. ”என்ன மிஸ்டர் மாதவன், எனக்கு உண்மை தெரிஞ்சிருச்சேன்னு பயமா இருக்கா..? கவலைப்படாதிங்க உங்களை ஒண்ணும் செய்ய மாட்டேன்..  நான் இங்க இருக்கிற வரைக்கும் எனக்கு பொழுது போகணும் இல்லை.. என்னோட டைம் பாஸ் நீங்க தான்..! ஆமா ஏன் ஒரு அட்டெம்ட்டோட நிறுத்திட்டிங்க…? இன்னும் நான் உங்கக்கிட்ட நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.. ஐ வாண்ட் மோர்.. மிஸ்டர் மாதவன்..!! ” அவரை வெறுப்பேத்திவிட்டு..

”மதிக்கிட்ட நான் பேசறேன்னு தான.. என்னை கொல்ல முயற்சி செஞ்சிங்க…. நான் மதியவே கல்யாணம் செய்ய போறேனே..!! என்ன செய்ய போறிங்க மிஸ்டர் மாதவன்..? ம்ம் நான் ஆர்வமாக இருக்கேன்..” அவரை வெறுப்பேத்திவிட்டு காரில் ஏறிச்சென்றான்..

சித்து பேசுவதை பயத்துடன் கேடிருந்தவர், அவன் மதியை கல்யாணம் செய்ய போறேன்’ என்று சொன்னதில் சிரிப்பு வந்தது.. “உன்னால இந்த விசயத்துல மட்டும் என்னை ஜெயிக்க முடியாது சித்தரஞ்சன்.. அதுக்கு நான் ஏற்கனவே ஒரு ஆளை தயார் செஞ்சுட்டேன்..!! அவன் உன்னைவிடக் கேடி..!! நிச்சயம் அவன் மதியோட மனசை மாத்தி கல்யாணம் செய்வான்..” மனதில் சித்துவோடு சவால்விட்டு.. காரை கிளப்பி சென்றார்..

 மாலை வீடு வந்த மதிக்கு லேசாக உடல்சோர்வாக இருக்க,  ஒன்றும் செய்ய தோன்றாமல் அப்படியே படுத்து கொண்டாள்..  மாலை ஒரு வேளையாக வெளியே சென்றிருந்த, சிவா மதியிடம் சொல்லிக்கொண்டு நேராக தன் இடத்திற்கு சென்றிருக்க, மதியின் உடல்நிலை பற்றி அவனுக்கு தெரியவில்லை..

மதிக்கு காய்ச்சல காரணமாக, எப்பொழுதும் துணை இருக்கும் தனிமை  இன்று அவளை பயமுறுத்த,  சிவாவிடம் சிறிதுநேரம் பேசலாம் என்று நினைத்து, சிவாவிற்கு அழைத்தாள், அவன் ஆசிரமத்து பிள்ளைகளோடு இருந்ததால், போனை சைலண்ட்டில் போட்டிருக்க, மதி அழைத்தது அவனுக்கு தெரியாமல் போய்விட்டது..  சிவா போனை எடுக்காமல் போனதும்.. மதிக்கு அழுகையாக வர, விசும்பி கொண்டே படுத்திருந்தாள்..  

சுந்தரியிடம் இருந்து அழைப்பு வர, அதை எடுத்து காதில் வைத்தாள், :உன்னை பார்க்க யாரோ வந்துருக்காங்க.. கீழ வா..! ” என்று அழைக்க.. மிகவும் கஷ்டப்ப்பட்டு கீழே இறங்கி வந்தவள் அங்கு சித்து இருப்பதை பார்த்து, தன்னை நிலைப்படுத்தி கொண்டு கீழே வந்தாள்..          

சித்து இருப்பதை பார்த்த மதி, “வாங்க.. சித்து..!” என்று அழைத்தவள், அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.. மதி கீழே வரும்போதே அவளின் முகத்தில் இருந்த சோர்வை கண்டு கொண்ட சித்து, “ அப்பூ..‼ என்னாச்சு..? ஏன் முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கு..? உடம்பு சரி இல்லையா.?அக்கறையோடு கேட்க, சித்துவின் அக்கறை மனதை வருட, அவனுக்கு பதில் சொல்ல போகையில்..

 “இது என்ன வீடா..? இல்லை சத்திரமா..?” யார் யாரோ வந்துட்டு போறாங்க..  வயசு பொண்ணுங்க இருக்கிற வீட்ல கண்ட நேரத்துல.. ஆம்பளைங்க வந்து போறது நல்லாவா இருக்கு..? எத்தன தடவை தான் சொல்றது..? அது சரி இது என்ன என் வீடா..? யார்.. யார் வரணும்.. யார் வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு..!” சுந்தரி கிச்சனில் இருந்து ஜாடையாக பேச

சித்துவின் முகம் கோபத்தில் இறுக, மதியின் முகம் பார்த்தான்.. மதி முகமோ சுந்தரி பேசியதில் அவமானத்தில் கன்றிச் சிவந்திருந்தது.. சித்து சுந்தரியை முறைத்து பார்த்தான்.. அவன் பார்வையில் லேசாக நடுக்கம் வர.. “அது தம்பி.. காலம் கெட்டு கிடக்கு இல்லையா..? நம்ம பொண்ணுங்களுக்கு நம்மதான எடுத்து சொல்லணும்..‼” என்று அசடு வழிந்து..

“ வள்ளி..! தம்பி குடிக்க காஃபி எடுத்துட்டு வாடி.. அவர் காபி குடிச்சிட்டு கிளம்பணும். !” வேலையாளை ஏவினார்..அவர் பேசுவதை தாங்க முடியாமல், “சித்து நீங்க கிளம்புங்க..‼” மதி சொல்ல..

“ அப்பூ உனக்கு உடம்பு..” என்று அவன் மறுக்க

”என் மேல உண்மையான அக்கறை இருந்தால், தயவுசெய்து நீங்க போங்க சித்து.. என் சம்பந்தமாக இங்க நீங்க அவமான பட்றது எனக்கு கஷ்டமா இருக்கு.. பிளீஸ்.. ” என்று கெஞ்ச, சுந்தரி நொடித்து கொண்டார்..  “அப்பூ.. நீ அங்க ஆஃபீஸ்ல அவ்வளவு கம்பீரமாக எல்லாத்தையும் நிர்வாகம் பண்ற..‼ இங்க ஏன் அடங்கி போற..? அதுவும் தப்பே செய்யாம..  ” என்றவனிடம் சில விசயங்களை ஆராயமல் அப்படியே ஏத்திக்கிறது பல நேரங்கள்ல நன்மை தரும் சித்து சார்..” என்றவளை ஆழ்ந்து பார்த்த சித்து

 உனக்கு உடம்பு சரியில்லேன்னு நினைக்கிறேன்.. அதை கூட கவனிக்காம எல்லாரும் அசால்ட்டா இருக்காங்க உன்னை இப்படியே விட்டு என்னால எப்படி போக முடியும்..? அம்மா இங்க இருந்தாலாவது இங்க கூட்டிட்டு வந்து உன்னை பார்த்துக்குவேன்.. இல்லைன்னா உன்னை எங்க கூட கூட்டி போவேன்.. இப்ப எதுவும் செய்ய முடியலை… அட்லீஸ்ட் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி போய்ட்டு வந்து விட்றேனே..‼” என்று கெஞ்சுவது போல கேட்க, மதி உறுதியாக மறுத்தாள்..

” சித்து நீங்க என்மேல காட்டுற அக்கறைக்கு ரொம்ப நன்றி ஆனால் எனக்காக பார்த்து நீங்க கெட்ட பேர் வாங்கிறது எனக்கு கஷ்டமாக இருக்கு..! இவ்வளவு நாள் நான் என்னை எப்படி பார்த்துக்கிட்டேனோ அதே மாதிரி என்னை நான் பார்த்துக்குவேன்..! உங்க அக்கறை என்னை பலவீனப்படுத்துது.. சோ” என்று பேச்சை நிறுத்த.. சித்து முகம் கசங்கி எழுந்து போனான்.. சுந்தரி ஒரு குரூர சிரிப்போடு இருவரையும் பார்க்க,

சித்து அதைவிட குரூரமாக அவரை பார்த்து சிரித்துவிட்டு சென்றான்.. அவன் சிரிப்பு சுந்தரியின் மனதில் கிலிபரப்பியது.. இருந்தும் தன்னை சமாளித்து. “ஏன் டா மதிம்மா உனக்கு காய்ச்சலா..? என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல.. போன தடவை நம்ம ரேணுக்கு காய்ச்சல் வந்தப்போ அவளுக்கு டாக்டர் கொடுத்த மாத்திரை இருக்கு.. எடுத்து தர்றேன்..” என்றுவிட்டு உள்ளே சென்றார்..

அடக்கடவுளே.. அந்த மாத்திரை எப்போ வாங்கினது.. அவங்க பொண்ணுக்குன்னா உடனே டாக்டர வரவழைச்சு பார்த்தாங்க.. இந்த வீட்டு முதலாளி இவங்க.. இவங்களுக்கு காலாவதியான மாத்திரையா..?  என்ன கொடுமை.. சாமி.. இது.. ம்ம் இந்த பொண்ணு அவங்க பாசத்துக்காக இப்படி அடங்கி போகுது.. குதிர்ரைக்கு கொம்பு கூட முளைச்சிரும்.. இவங்கக்கிட்ட உண்மையான அன்பு கிடைக்காதுன்னு.. எனக்கு தெரிஞ்ச விசயம் கூட மதிம்மாவுக்கு தெரியலையே..

ஆங்க ஆஃபீஸ்ல ஆயிரம் பேரை கட்டி மேய்க்கிறாங்க.. இங்க இந்த ஒத்தை மனுசிக்கிட்டஇப்படி அடங்கி போறாங்களே.. மனதோடு அங்கலாய்த்த அந்த வீட்டு வேலையாள்.. ஒரு பெருமூச்சோடு அடுப்படிக்கு சென்றார்..

சுந்தரி கொடுத்த மாத்திரையை வாங்கி கொண்டு தன் அறைக்கு வந்த மதி, அந்த மாத்திரையை விழுங்கிவிட்டு படுத்து கொண்டாள்..

 மதியின் வீட்டை விட்டு வெளியே வந்த சித்து, கோபத்தோடு நேராக சிவா இருக்கும் ஆசிரம்ம் வந்தான்.. அங்கு சிவா பிள்ளைகளோடு விளயாடி கொண்டிருப்பதை கண்டு, அந்த பிள்ளைகளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, சித்துவின் கோபத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தியது..

பிள்ளைகளோடு விளையாடி கொண்டிருந்த சிவா, சித்துவை அந்த நேரத்தில், அங்கு எதிர்பார்க்கத சிவா.. “ஹேய் சித்து.. என்ன இந்த நேரத்தில வந்திருக்க.. நான் இருக்கிற இடம் உனக்கு எப்படி தெரியும்..?” ஆச்சரியமாக கேட்க, “ இப்ப இது ரொம்ப முக்கியம்..? முதல்ல மதி வீட்டுக்கு வா போகலாம்.. அங்க அவளுக்கு காய்ச்சலா இருக்கு. என்று அழைக்க

“மதிக்கு காய்ச்சலா..? என்கிட்ட சொல்லவே இல்லை..” என்றுவிட்டு மதிக்கு அழைக்க செல்லை எடுத்தான்.. அபோதுதான் மதியிடமிருந்து வந்த  பத்து மிஸ்டுகாலை பார்த்தவன்..”இத்தன தடவை கால் செஞ்சிருக்கா என்னாச்சுன்னு தெரியலையே..?” புலம்பியவாறே மதிக்கு அழைக்க

அது எடுக்கப்படாமல் இருக்கவும், சிவா பதட்டமானான்.. உடனே அங்கு வேலை செய்யும் பணியாளுக்கு அழைத்து விவரம் கேட்டவன் அவர் இங்கு நடந்ததை சொல்ல . கோபத்தோடு கேட்டிருந்தவன்.. மதியின் குடும்ப மருத்துவரை அழைத்தான்.. அவர் கான்ஃப்ரன்ஸிற்காக தான் மும்பை வந்திருப்பதாக சொல்ல, சிவா எரிச்சலோடு போனை வைத்தான்..

”சித்து என்னவென்று கேட்க அவனுக்கு பதில் சொன்ன சிவா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி இருந்தான்.. “நீ இங்கேயே நின்னா வேளைக்காகது.. வா நம்ம ரெண்டுபேரும் மதி வீட்டுக்கு போகலாம்.. நான் மட்டு போனால் அந்த லேடி எதாவது சொல்லும், அதான் உன்னையும் கூப்பிட்றேன்..நீ அங்க ரொம்ப வருஷம் பழக்கம் தான சோ உன்னைய ஒண்ணும் சொல்லமாட்டாங்க.. வா..!” என்று அழைக்க

சிவாவின் முகம் பாறையாய் இறுகி இருந்தது.. “ என்னடா மசமசன்னு நின்னுட்டு இருக்க.. சீக்கிரம் வா..! மதியை ஹாஸ்பிட்டல் கூட்டி போகணும்..” சித்து அவசரப்படுத்த.. “நான் மதி வீட்டுக்குள்ள வரமாட்டேன்..” என்று சொன்னவனை சித்து அதிர்ச்சியாக பார்த்தான்..

“ஏன்..? என்னாச்சு..?” என்று கேட்க

”மதி என்னை அவ வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கா..” என்னால, மதி பேச்சை மீற முடியாது..” என்று சிவா உறுதியாக சொல்ல, சித்து சிவாவை கோபமாக முறைத்து பார்த்தான்..

சித்து பார்வையில் தலை குணிந்த் சிவா.. “இன்னைக்கு மதி வீட்டுல உனக்கு ஏற்பட்ட அதே நிலைமைதான்.. எனக்கு மூணுவருசத்துக்கு முன்னாடி ஏற்பட்டுச்சு.. அதுல இருந்து மதி என்னை அவ வீட்டுக்கு வர கூடாதுன்னு சொல்லிட்டா.. இப்ப் நான் மதிக்க்கு உதவ முடியாத கையாலாகாதவனாக இருக்கேன்..” என்றுவிட்டு மீண்டும் மதிக்கு அழைக்க.. அது எடுக்கப்படவில்லை..

சித்துவிற்கு சிவாவின் நிலை புரிய.. கோபம் முழுவதும், மடியின் வீட்டு ஆட்களின் மீதும், அவர்களுக்கு அடங்கி போகும் மதியின் மீது திரும்பியது..” அப்படிஉஎன்ன எங்களை விட அவங்க முக்கியமாக போய்ட்டாங்க..?” மனதில் பொறுமியவாறே.. ஆசிரமத்திவிட்டு வெளியே வந்தான்..

சித்து மதியின் வீட்டை விட்டு வெளியேறிய ஐந்து நிமிடத்தில், தமிழ் அழைத்திருந்தான்.. மதி எடுத்ததும்..

” ஹலோ அன்.. மதி..”

“ஹ்ம்ம்..”

”  நீங்க காலையில  ‘சாப்பாட்டை வேஸ்ட் செய்ய கூடாதுன்னு..” ஒரு மெஸ்சேஜ் சொன்னிங்களே.. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. அதான் உங்களுக்கு நன்றி சொல்ல தான் போன் செஞ்சேன்..”

“ஹ்ம்ம்..”

”உன்ன்.. ஹ்க்கும் உங்களை தொல்லை செய்றேனா..?”

ம்ம்கூம்..”

”ஏன் எதுவும் பேசாம ’ம்ம்ம்..ம்ம்’ சொல்றிங்க..?”

”அ..து..”

”அன்பு.. என்னம்மா ஆச்சு..? ஏன் குரல் ஒரு மாதிரி டல்லா இருக்கு..?”  தவிப்போடு கேட்க,

“காய்ச்சல் அடிக்குது அரசு..” என்னால பேச முடியலை.. நான் நாளைக்கு பேசவா..?”  பாவம் போல கேட்க

“ஹாஸ்பிட்டல் போனியா டா..? வீட்டுல யாரும் இல்லையா.. நான் வரவா..?”  வேண்டாம் இங்க வந்தால் உங்களையும் தப்பா பேசுவாங்க.. நானே பார்த்துக்கிறேன்.. இப்போ போனை வைக்கிறேன்.. ரொம்ப டையர்டா இருக்கு அரசு..!” என்றுவிட்டு போனை அணைத்தாள்.. இந்த பக்கம் தமிழ்ழ் அழைத்து கொண்டு இருந்தான்..  

மாத்திரை போட்டும் கய்ச்சல் குறையாமல் மதி அனத்தி கொண்டு படுத்திருந்தாள்.. தமிழிடம் பேசிவிட்டு வைத்ததில் போன் கைத்தவறி சைலண்ட் பட்டனை அழுத்தியிருக்க சிவா அழைத்தது மதிக்கு கேட்கவில்லை..

“ உங்க வீட்டு ஆட்களை பத்தி எனக்கு தெரியாதா.. அப்.. அன்பு செல்லம்.. இப்போ உன் மாமன் எப்படி என்ட்ரி ஆகறேன்ன்னு பாரு..!”  என்றுவிட்டு தன் செல்லை எடுத்து, காலையில் மதியின் அலுவலகத்தில் கடலை வறுத்த, அந்த ரிஷப்ஸ்னிஸ்ட்டிற்கு கால் செய்தான்.. அவளிடம் சில விசயங்கள் சொல்லிவிட்டு போனை அணைத்த

அரைமணி நேரத்தில் அந்த பெண் தமிழின் முன்னால் நின்றாள் அவளின் அன்னையோடு..  ”உங்களை இந்த நேரத்தில் தொல்லை செய்றதுக்கு என்ன மன்னிச்சிருங்கம்மா.. எங்க பாஸ்க்கு உடம்பு சரியில்ல. அதான்.. உங்களை தொல்லை செய்யவேண்டியதாகிருச்சு” என்று தயங்கி சொன்ன தமிழை சிரிப்புடன் பார்த்து..

”தெரியும் தம்பி..! கவி எங்கக்கிட்ட சொன்னா, உங்க மனசு எனக்கு புரியுது.. வாங்க போகலாம்..” என்று சொல்ல, “அப்பாடா  வேற எதுவும் துருவி கேட்கல..! நல்ல அம்மாவாதான் இருக்காங்க” மனதில் அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிவிட்டு.. வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டு, தமிழ் மதியின் வீட்டு முகவரி சொல்ல, ஆட்டோ மதி வீட்டிற்கு சென்றது..

மூவரையும் உள்ளே விட செக்யூரிட்டி மறுக்க, தமிழ் தன் கை முச்டியை மடக்கி கொண்டு அவரை முறைத்து பார்த்தான்.. ”சார் மேடத்துக்கு காய்ச்சல் அதனால இப்போ யாரையும் பார்க்க மாட்டாங்க..” என்று சொன்னவனை. “ நீங்க உங்க மேடத்துக்கு காய்ச்சல் சரியாகணும் என்று நினைச்சா எங்களை உள்ளே விடுங்க..” என்று சொல்ல, அவர் அவர்களை உள்ளே போக அனுமதித்தார்.. “அன்பு..! என்று அழைத்துக் கொண்டே உள்ளே வந்த தமிழை உறங்க தன் அறைக்கு செல்ல போன சுந்தரி..! தமிழ் மதியை அழைத்து கொண்டே வருவதை பார்த்து, “ டேய் யார் நீ தொறந்த வீட்டுக்குள்ள.. ஏதோ நுழஞ்ச மாதிரி வர்ற..?” என்று சத்தம் போட..

“என்ன மேடம் என்னை தெரியலையா..? உங்களுக்கு உங்க வீட்டு பொண்ணே கண்ணுக்கு தெரியாதப்போ என்னை எப்படி தெரியும்..! அன்புக்கு உடம்பு சரி இல்லன்னு சொன்னாங்க அவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டி போக வந்தேன்.. அவங்க ரூம் எது..?” சுந்தரியை நக்கல் பேச்சு பேசியவன்.. அவரிடமே மதியின் அறைப்பற்றி கேட்டான்..

அதில் கடுப்பான சுந்தரி. ” கொஞ்ச நேரத்துக்கு முந்தி தான் ஒருத்தன் வந்து வாங்கி கட்டிட்டு போனான்.. நீயும் என்கிட்ட வாங்காம போக மாட்ட போல..! ஆமா அது என்ன அவளை பார்க்க ஆம்பி.” மேலே என்ன சொல்லியிருப்பாரோ.. “ஏய்..!” என்ற தமிழின் கர்ஜனையில் வாயை மூடி கொண்டார்.. “ தம்பி பிரச்சினை வேண்டாம்பா நாம காலையில வந்து பார்க்கலாம்.. “ என்று சொல்ல, “அம்மா உள்ள ஒரு ஜீவன் உடம்புக்கு முடியாம படுத்திருக்கு.. இவங்க அவளுக்கு சாப்பாடு கூட கொடுத்தாங்களான்னு தெரியலை.. அவங்களை பார்த்துட்டு போயிரலாம் மா..” என்றுவிட்டு மேலே படியில்

” அடேய் நீ அத்து மீறி உள்ள வந்து கலாட்டா செய்ற..? என் வீட்டுக்காரை கூப்பிட்றேன்..” என்றுவிட்டு போனை எடுத்து மாதவனுக்கு அழைக்க..அவர் போனை எடுக்கவில்லை.. அடுத்து வரதனுக்கும் அழைக்க அவரும் எடுக்காமல் போக.. “என்ன ரெண்டுபேரும் போனை எடுக்கலையா,,? என்று நக்கலாக கேட்டவன் ” அவங்க..”  என்று விட்டு ” கவி.. (மதி அலுவலக ரிஷப்ஸ்னிஸ்ட்) காதை மூடிக்க..” என்றவன் கவி காதை மூடவும்.. உங்க வீட்டு ஆம்பளைங்களை ஹோட்டல்..*** போய் பாருங்க பரமானந்த நிலையில இருப்பாங்க..” என்று சொல்ல

“என்ன..பரமானந்தமா..?” சுந்தரி குழப்பமாக கேட்டார்.. “உங்க கூடபேச எனக்கு நேரம் இல்லை..” அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மதியின் அறையை தேடி சென்றான்..

உள்ளே சென்றவன் கண்ட காட்சியில் ஒரு நொடி உறைந்து நின்றான்.. அங்கு மதி வாயில் நுறை தள்ளி கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்தாள்.. “அன்பூ..” என்று கதறியவாறே மதியை நெருங்கி  அவள் தூக்கி தன் மடியில் கிடத்தியவன், அவள் வாயிலிருந்த நுரையை துடைத்து விட்டு கன்னத்தை பலமாக தட்ட.. அதில் லேசாக கண்விழித்தவள்.. தன் எதிரே அழுத விழிகளோடு தமிழை பார்த்தவள்.. “அச்சும்மா.. என்னை கூட்டி போக வந்துட்டிங்களா.. நான் உங்க கூடவே வர்றேன்..!” என்று மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்..

அரசன்ஆள்வான்….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 2 சராசரி: 3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

என் நெஞ்சமே உன் வாழ்வின் எல்லை 22

ஆனந்த கவிதை அவள் 1