in

அன்பின் அரசனே…11

அன்பின் அரசனே 11

  சிவாவிடம் சவால் விட்டு வெளியே வந்த தமிழ், மீண்டும் சிவாவின் கேபின் வந்தான், அங்கு சிவா கோபத்தில் குறுக்கும் ,நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்தவனை மேலும் வெறுப்பேத்துபவன் போல,  ” மச்சான்.. ஒருவிசயம் சொல்ல மறந்துடேன்..” என்ற  தமிழை சிவா, கோபத்தோடு பார்க்க,

”நமக்குள்ள இருக்கிற அதை..” என்று ஹஸ்கி வாய்சில் பேசியவனை பாதியில் நிறுத்தி.. “ முதல்ல இப்படி ஹஸ்கி வாய்சில பேசறதை நிறுத்தி தொலை..” என்று எரிச்சலில் கத்த, ஏனோ தமிழிற்கு , சிவாவின் கோபம் சுவாரஸ்யத்தை கொடுக்க

“ அது ஒண்ணும் இல்லை மச்சான்.. நான் என் அப்… அன்புவை காதலிக்க வச்சு கல்யாணம் செஞ்சு காட்றேன்னு சவால் விட்டு, இது நமக்குள்ளேயே இருக்கட்டும்னு சொன்னேன்ல..“ என்று நிறுத்திய தமிழை, ‘மேலே சொல்லி தொலை..’ என்பது போல் சிவா பார்க்க,

“ம்ம்..  அதுல ஒரு சின்ன மாற்றம்.. நீங்க இந்த விசயத்தை உங்க எருமை.. ச்சே சாரி  உங்க அருமை.. சித்துக்கிட்ட சொல்லிக்கலாம்.. ஐ ஹாவ் நோ அப்ஜெக்‌ஷன்.”  என்று பெரிய மனதோடு சொன்னவனை கேலிப்பார்வை பார்த்து,

” பாவம் அவனை எதுக்கு டென்சன் பண்ணிக்கிட்டு உனக்கு நான் போதும்..‼ இன்னும் ஒரு வாரத்துல நான் உன்னை இந்த கம்பெனியை விட்டே துரத்தல..‼” என்ற சிவாவை

 “உங்க பேரை மாத்தி வச்சிருவிங்களா.. மிஸ்டர் மேனேஜர்..? ஆனால் சிவாங்கிற பேரே நல்லா தான் இருக்கு..!” என்று யோசனை சொன்ன தமிழை சிவா. முறைக்க.. “அவன் முறைப்பில் “வந்த வேலை திருப்தியா முடிஞ்சது.. இப்போ நான் நிஜமாவே உங்க ரூம்மை விட்டு போறேன்.. டார்லு..” என்று கண்சிமிட்டி கொஞ்சியவன் சிவாவின் எரிக்கும் பார்வையில் இருந்து தப்பி ஓடிவிட்டான்..

சிவாவின் அறையை விட்டு வந்ததும் அவனால சிரிப்பை அடக்கவே முடியவில்லை..  உள்ளே பேசியதை நினைத்து வாய்விட்டு சிரித்தான்.. “ ”சிவா சார் நீங்க இவ்வளவு புத்திசாலின்னு எனக்கு தெரியாம போச்சே..‼ ம்ம் இதுவும் நல்லா இருக்கு..’ தனக்குள்ளே சொல்லி கொண்டவன்.. தனக்கென ஒதுக்கியிருக்கும் கேபினுக்கு சென்றான்..

சிவாவையும், தமிழையும் அனுப்பிய மதி குழப்பத்தில் இருந்தாள் ‘ நான் அரசுக்கு வேலை கொடுத்தது. சரியா..? தப்பா?   அவங்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று தோணுச்சு…  பணமாக கொடுத்தால் வாங்க மாட்டாங்க..எனக்கு அவங்களை பார்த்தால் எதுவும் யோசிக்க வரமாட்டிங்குதே..” தனக்குள்ளே குழம்பியபடி இருந்தவள்.. “மூணு மாசம் தான..! அதுக்குள்ள என்ன ஆகிட போகுது..? பாப்போம்..’ தனக்கு தானே சமாதானம் செய்து வேலையில் மூழ்கி போனாள்..

ஒரு மணி நேரம் கழித்து எதேச்சையாக தன் அறையில் இருக்கும் சிசி டிவி யை பார்த்தவளின் முகம் புன்னகையில் மலர்ந்தது.. ஆம் அங்கு தமிழ்,  ஒரு  தொழிலாளிக்கு துணி பண்டல் தூக்க உதவி செய்து கொண்டிருந்தான்.. அதே வாடாத புன்னகையோடு… ஒரு இடத்துல ஒழுங்கா உட்கார மாட்டாங்க போல!!” தமிழின் துறுதுறுப்பை பார்த்தவளுக்கு இதுதான் தோன்றியது  

 தமிழ், அவருக்கு உதவி செய்து முடித்துவிட்டு அந்த தொழிளாளர்களிடம் ஏதோ பேசி கொண்டிருந்தான்..

அங்கு தொழிலாளர்களுக்கு வந்த டீ யை அவர்களுடன் சேர்ந்து தமிழும் குடித்தான்.. அவன் ஒவ்வொரு செய்கையையும் மதி உற்று கவனித்துக் கொண்டிருந்தாள்..  தமிழின் முகத்தில் சிறு சுளிப்பாவது  தெரிகிறதா..? என்று,

ம்ம்கூம் அதே புன்னகை முகம் அவன்  புன்னகையை அங்கிருக்கும் தொழிலாளர்களுக்கும் கடத்தி கொண்டிருந்தான் அந்த புன்னகை மன்னன்….

மதிய உணவு நேரம் வரவும், சிவா மதிக்கு உணவு வாங்கி கொண்டு வந்து கொடுத்து, அவனும் அங்கு அமர்ந்து உண்ண

ஆரம்பித்தான்..  இரண்டு வாய் உண்டவன், மதி உணவை பிரிக்காமல் இருப்பதை

பார்த்து, “ என்ன மதிம்மா இன்னும்  சாப்பிடாம இருக்க..?” இன்னும் கொஞ்ச நேரம் போனா சாப்பாடு ஆறிடும்..  அப்பறம் சாப்பிட நல்லா இருக்காதுடா..  அதனால சூடு ஆறும் முன்னாட்டி சாப்பிடும்மா..” என்றுவிட்டு உணவை உண்ண,

”நம்ம எப்போ சிவா வீட்டு சாப்பாடு நிம்மதியா சாப்பிடுவோம்ம்..?” என்று ஏக்க்கமாக கேட்ட மதியை திகைத்து பார்த்திருந்தான்.. அந்த   பார்வை ஒரு நொடிதான்… பின்பு  சமாளித்து,

“இதுக்கு பாதி காரணம் நீதான் மதிம்மா.. நீ நினைச்சா இதை சரி செய்ய முடியும்..  அட்லீஸ் என்கிட்ட விட்டாலாவது நான் சரி செய்வேன்.. ஆனால் நீ..? “ ஆற்றாமயுடன்  கேட்டு மதியின் முகத்தை பார்க்க, அவள் உணவை பிரித்து கொண்டிருந்தாள்..

“இதுக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டியே.. ” என்று அலுத்து கொண்டான்..

சிவா மதிக்கு  உணவு  கொண்டுவந்த அதே நேரம்,  நம்ம  தமிழ் சார் என்ன  செய்றாங்கன்னு  பார்ப்போம்.. தமிழ் தொழிலாளர்களிடம் பேசிவிட்டு அறைக்கு வர, அவன் வயிறு தான் இருப்பதை அவனுக்கு கோபத்தோடு உணர்த்த “ அடேய் தம்பி  ஜப்பான்காரனுக்கு அடுத்த் சரியா டைம் கீப் அப் பண்றது நீதான் டா.. வா உனக்கு  எந்த இளிச்சவாயானாவது  கிடைப்பானான்னு பார்க்கிறேன்..” தன்  வயிறை சமாதானம் செய்தவாறே வெளியே வர, சரியாக அதே நேரம்  மாதவனுக்கும், வரதராஜனுக்கும் வீட்டிலிருந்து உணவு வருவதை பார்த்தான்..

“அடேய் தம்பி நீ அதிர்ஷ்டசாலி டா..  உனக்குநம்மாளு வீட்டில இருந்தே  சாப்பாடு வருது.. வா போய் ஒரு கை பார்ப்போம்..“ என்றவாறே மதியின்  அறைக்கு செல்ல போனவனை மதியின் பேச்சு தடை செய்தது.. அப்போ அந்த சாப்பாடு யாருக்கு..?’ என்று யோசித்தவனுக்கு பொறி தட்ட மாதவன் அறைக்குஶ்ரீ சென்றான்..

ஓ  சாப்பாட்டு கேரியர் அங்கிட்டு கொரியர் போகுதா..?  திசைஇந்த பக்கம் திருப்பிருவோம்” என்றவாறே இருவரும் இருந்த அறைக்கு சென்றான்.. அங்கு விதவிதமாக உணவு வகைகள் இருக்க, மாதவனும், வரதராஜனும் ஆசையாக உண்ண போக, “அப்பறம் சாப்பாடு ரொம்ப பலமா இருக்கு போல..‼” இயல்பான பேச்சா அல்லது  கேலியா..? என்று உணர முடியாத ஒரு குரலில் சொல்ல,

மாதவன் “ஆஹா வந்துட்டான் யா..‼”  உள்ளே லேசாக உதறல் எடுக்க

” ஆமா தமிழ்..! எங்களுக்கு ஹோட்டல் சப்பாடு அவ்வளவா ஒத்துக்காது..  எப்பையாவது தான் வெளில சாப்பிடுவோம்..  மத்தபடி எங்களுக்கு எப்போதும் வீட்டு சாப்பாடு தான் “

என்று சொல்ல,

“ ஓ.. அப்போ மதி எங்க சாப்பிடுவாங்க..? என்று கேட்க ”அவளுக்கு அந்த சிவா பையன் வாங்கி கொடுப்பான்.. இல்லன்னா அவ எப்படியாவது சமாளிப்பா..” என்றுவிட்டு “நீ சாப்பிடலயா..? இப்ப இது லஞ்ச் டைம் தான போய் சாப்பிட்டு வா..!” ஒரு பேச்சுக்காக கூட மதியை தங்களுடன் உணவருந்த அழைக்காமல் அவனை துறத்த…

”சாப்பிட்த்தான் வந்தேன் மிஸ்டர் மாதவன்..!” என்றுவிட்டு அவர் கையில் இருந்த உணவை தான் எடுத்து கொண்டான்.. வரதராஜன் பக்கம் இருந்த உணவையும் எடுத்துக் கொண்டவன்.. “இப்ப பேச நேரம் இல்லை வந்து பேசறேன்..” என்றுவிட்டு அவசரமாக மதி இருக்குமிடம் வந்தான்..

அங்கு  சிவா உணவை முடித்திருக்க, மதி தொண்டையில் இருந்த உணவை கஷ்டப்பட்டு விழுங்கினாள்… மீண்டும் உணவை எடுக்க போனவளை ஒரு கரம் தடுக்க, மதி நிமிர்ந்து பார்த்தாள்.. தமிழ் மதியின் கையை பிடித்தவாறு நிற்க நிமிர்ந்த மதிக்கு முதலில் பட்டது  தவிப்போடு இருந்த தமிழின் கண்கள்..

அவன் தன் கையை பிடித்திருப்பதை உணராமல்,  எதற்காக இந்த தவிப்பு ?” என்று மதி யோசித்துக் கொண்டிருக்க, சிவா தமிழின் கையையும், தமிழையும் முறைத்துக் கொண்டிருந்தான்.. தமிழிடம் இருந்து, மதியின் கையை பிரிப்பதற்காக எழ,

தமிழ் பேசினான்  

 பிடித்த கையை விடாமல், “ மேடம் நான் இங்க வேலைக்கு வரணும் என்றால் ஒரு கண்டிஷன் இருக்குன்னு சொன்னேன்ல..?” என்று கேட்க.. மதி ஆம் என்று தலை அசைக்க, “அதை இந்த கையை விட்டுட்டு சொன்னால் தான் என்ன..! என் முன்னாடியே என் மதிம்மா கையை பிடிச்சிட்டு இருக்கானே..” மனதில் தமிழை அர்ச்சித்தவன்

“மிஸ்டர் தமிழ்..! நீங்க எது பேசறதாக இருந்தாலும் மேடம் கையை விட்டுட்டு பேசுங்க..” அழுத்தமாக சொல்ல, “சார் என்ன சொல்றிங்க மேடம் கையை என்ன புடிச்சேனா..!!? இல்லையே..” என்று மறுத்தவனை பொசுக்கிவிடுவதுபோல் பார்த்த சிவா, இருவரின் கையை பார்க்க அது எப்பவோ விலகி இருந்தது..

சிவா திகைத்து தமிழை பார்க்க அவன் மதி அறியாமல் சிவாவை பார்த்து  குறும்பாக கண்சிமிட்டினான்..

மதி “தமிழ் என்ன சொல்ல வந்திங்க..? என்ன கண்டிஷன்? என்று கேட்க, அது ஒண்ணும் இல்லை மேடம் இனி நீங்க மதியம் லஞ்ச் நான் கொண்டுவர சாப்பாட்டை தான் சாப்பிடணும்..! தினம் எனக்கு ஒரு ஆளுக்கு சமைக்கிறது போரா இருக்கு ( அடப்பாவி.. இப்படி ஆகாச புழுகா புழுகிறியே..) அதே இன்னொரு ஆளுக்கு சேர்த்து சமச்சா அந்த அலுப்பு தெரியாது..

“ என்றுவிட்டு ஆன் மச்… சிவா சார் அழைப்பு உங்களுக்கும் தான் இனி மதியம் லஞ்ச் நானே வீட்ல இருந்து கொண்டுவருவேன்.. இதுக்கு நீங்க சம்மதிச்சா நான் வேலைக்கு வர்றேன்,, இல்லைன்னா உங்க இஷ்டம்..” என்று தோளை குலுக்கினான்.. இருவரும் அமைதியாக இருக்க..

மறுபடியும் சொல்றேன்.. இனி மேல் தினமும் மதியம் நான் கொண்டுவரும் சாப்பாடை நீங்க சாப்பிடணும் இது தான் என்னோட கண்டிஷன்..” என்று சொல்ல மதி என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க..

“நோ மிஸ்டர் தமிழ்..! இரு சரிவராது..” சிவா மறுத்தான்… “ஏன்..?” தமிழ் கேட்க  ”நீங்க  மதிக்கு உதவி செஞ்சதை அட்வாண்டேஜ்ஜா எடுத்துக்கிறிங்க மிஸ்டர் தமிழ்..! “ சிவா கண்டிக்க..  மதி அமைதியாக நின்றாள்..

” ஒ கே மேனேஜர் சார்..” என்றுவிட்டு மதியிடம்.. “மேடம் நான் இதுக்காகத்தான் வேலைக்கு சேர யோசிச்சேன்.. எனக்கு சரி என்று பட்டதை நான் செய்ய தயங்க மாட்டேன்.. என் மனசில தோணுவதை சொல்லவும் தயங்க மாட்டேன். எனக்கு உங்களை பார்த்தால் வேற யாரோ மாதிரி தெரியலை..” என்று நிறுத்தி இருவரையும் பார்க்க

” உங்களை பார்த்தால் தோழி மாதிரி தோணுது..” என்றுவிட்டு சரி மேடம் நான் கிளம்பறேன்..” என்றுவிட்டு கிளம்ப, சிவா தமிழை வெற்றி களிப்புடன் பார்க்க.. அவன் அருகில் வந்த தமிழ்.. “என்ன் மச்சான் என்னை துரத்திட்டேன்னு சந்தோச பட்றியா..? நான் வெளிய போய்ட்டா இன்னும் எனக்கு வசதி தான்..‼” சுதந்திரமாக இருப்பேன் என் அன்புவை என் பக்கம் ஈஸியா இழுத்துக்குவேன்.. என்று சிரிப்புடன் சொல்ல,

 தமிழ் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்த சிவா.. “சரி.. சரி.. இனி நாங்க மதியம் நீங்க கொண்டு வரும் சாப்பாட்டையே சாப்பிட்றோம்.. இப்போ நாங்க சாப்பிட்டாச்சு.. நீங்க கொண்டு வந்ததை எடுத்துட்டு போங்க..” என்று வெற்றிகரமாக பின்வாங்கினான் சிவா..

“உங்களை பார்த்தது தெரிஞ்சிருச்சு நீங்க ஃபுல் கட்டு கட்டிட்டீங்கன்னு தெரியுது…‼ ஆனால் மேடம் இப்பொதான் சாப்பிட உட்கார்ந்திருக்காங்க சோ அவங்க சாப்பிடட்டும்.. “ என்றுவிட்டு மாதவனிடம் இருந்து பிடுங்கி வந்த உணவை மதிக்கு  பரிமாறினான்..

சாம்பார் சாதமும், உருளை கிழங்கு வறுவல், அப்பளம் ஊறுகாய்.. ரசம், தயிர் என பட்டியல் நீண்டு கொண்டே செல்ல மதி அனைத்தையும் சாப்பிட திணறினாள்.. சிவா மதியை உற்று கவனித்தான், தமிழின் செயல்கள் கண்டு,  அவள் முகத்தில் பிடித்தமின்மை தெரிகிறதா?’ என்று.. ம்ம்கூம் தமிழ் பரிமாற மதி ஆசையாக சாப்பிடுவதை பார்த்து.. சிவாவிற்கு லேசாக கண்கலங்கியது..

“மதிம்மா நீ சாப்பிடு நான் நம்ம கொடவுன் வரை போய்ட்டு வர்றேன்..” என்றுவிட்டு வெளியே வந்தான்..

“தமிழ் நிஜமாவே இது நீங்க சமச்சதா..? ரொம்ப சூப்பரா இருக்கு..‼  வீட்டு சாப்பாடு சாப்ட்டு ரொம்ப நாள் ஆச்சு..!” என்றவாறே உணவை ரசித்து ருசித்து உண்ண.. தமிழுக்கு மதியை தன் வயிற்றோடு கட்டிக் கொள்ள கைகள் பரபரத்தது.. மதியின் எதிர்புறம் வந்து அமர்ந்தவன்.. மதிக்காக சிவா வாங்கி வந்த உணவை குப்பையில் போட போக,

“அச்சோ சாப்பாட்டை கீழ போடாதிங்க…” மதி அவசரமாக தடுக்க.. “இல்ல மா இது ஆறி போச்சு யாரும் சாப்பிட மாட்டாங்க.. அதான் கீழ போடலாம்னு.. எடுத்தேன்” என்று சொல்ல,

 தமிழ் அவ்வாறு சொல்லவும் மதியின் முகம் வருத்தம் காட்டியது  ” ஏன் தமிழ்..  சாப்பாடு ஆறி போச்சுன்னா கீழ போடணுமா..?  அதை திரும்ப சூடுபண்ணி சாப்பிட கூடாதா..? இந்த சாப்பாடு கூட கிடைக்காம எத்தனை குழந்தைங்க இருக்காங்க தெரியுமா..?” ஏதோ நினைவில் சொல்ல,

“ அன்பு மேடம்.. இப்போ என்ன இந்த சாப்பாடை கிழ கொட்ட கூடாது அவ்வளவு தான..  இதை நம்ம பியூன் கிட்ட கொடுக்கலாம்..” மதியை சமாதானம் செய்த மறுப்பாக தலை அசைத்தாள்..

”இன்னும் என்னமா அதான் சாப்பாட பியூனுக்கு கொடுத்திட்றேன் சொல்லிட்டேனே..‼ நீ சாப்பிடு..” கனிவாக சொல்ல

 தமிழ் தன்னை ஒருமையில் அழைத்ததை கவனியாதவளாக “ இல்லை அரசு..‼ நமக்கு மாதிரி தான அவங்களுக்கும் இருக்கும்..‼ அப்படி அவங்களுக்கு குடுக்கிறதாக இருந்தா நல்ல சாப்பாடா வாங்கி கொடுங்க..!   நம்ம வேண்டாம்னு ஒதுக்கி வச்ச உணவை கொடுக்க கூடாது..ன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க..” என்று சொல்ல

”இப்ப இதை என்ன செய்யணும் சொல்ற..?”  தமிழ் அவளிடமே தீர்வு கேட்க. “அதை அப்படியே என்கிட்ட கொடுத்திருங்க..! நான் நைட் சூடு செஞ்சு சாப்ட்டுக்கிறேன்..” என்றவளை தமிழ், அதிர்ச்சியாக பார்த்தான்.. ” ஏன் இப்படி..!!? “ என்றவன்  அந்த உணவை தானே சாப்பிட..

“அரசு வேண்டாம்.. எனக்கு இது பழக்கம் தான்.. நீங்க இப்படி கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டாம்.. பிளீஸ் அரசு என்கிட்ட கொடுத்துருங்க..” என்று உணவுக்காக கை நீட்ட.. ஒற்றைக் கண் சிமிட்டி அந்த உணவை முழுதாக உண்டு முடித்தபிறகே நிமிர்ந்தான்.. “ ஏன்  அரசு..இப்படி..?”  மதி ஆதங்கமாக கேட்க, “ நீங்க சொன்னது என் மனசில பதிஞ்சிருச்சு,,

இனி நானும் சாப்பாடு வீணாக்காமல் இருக்க பழகிக்கிறேன்.. “ இப்போ நான் கிளம்பறேன்..” என்றுவிட்டு அவன் கொண்டு வந்த பாத்திரங்களை எடுத்து கொண்டு மாதவன் அறைக்கு சென்றான்..

அங்கு இருவரும் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருப்பதை பார்த்தவன்.. “இப்போ எந்த கப்பல் கவிழ்ந்து போச்சுன்னு கன்னத்துல கை வச்சு உட்கார்ந்து இருக்கிங்க..?” கேட்டவாறே உள்ளே வந்தவன் கொண்டு வந்த பாத்திரங்களை வைத்துவிட்டு சாப்பாடு ரொம்ப சூப்பர்..!! அன்பு  ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டா..” சந்தோசமாக சொன்னவனை வரதராஜன் முறைத்துப் பார்த்தார்..

”அவளுக்கு அந்த சிவா சாப்பாடு வாங்கி தருவான்ல நீ எதுக்கு எடுத்துட்டு போற ? அதுவும் எங்க சாப்பாட்டை எடுத்து கொடுக்கிற..!! உனக்கு அக்கறைன்னா நீ உன் காசு போட்டு வாங்கி கொடு..!! இனி இப்படி செய்யாத..!!” என்று உத்தரவிட..

“அப்படியா..? கேட்டுவிட்டு தமிழ் தன் தாடையை தடவ..

அவன் பாவனையில் சுதாரித்த மாதவன்.. “ வரது.. நான் அன்னைக்கே உன்கிட்ட சொல்லிருக்கேன்ல நம்ம் தமிழ் எது செஹ்ன்சாலும் அதுல ஒரு விசயம் அடங்கி இருக்கும்.. இப்போ சாப்பாடு கொடுத்த்து கூட எதாவது ஒரு காரணம் இருக்கும் நீ அவசரப்படாத..” என்று சொல்ல வரதராஜன் மாதவனை முறைத்துபார்த்து அமைதி ஆனார்..

” நீங்கதான் என்னை சரியா புரிஞ்சு வச்சிருக்கிங்க..” என்று பாராட்டியவன்.. “ அன்பை நெருங்க இது ஒரு வாய்ப்பு.. நான் அன்புக்கிட்ட நெருங்க ஒரு சின்ன வாய்ப்பு கிடச்சாலும் அதை இறுக்கமா பிடிச்சுக்குவேன்.. அப்படிப்பட்ட வாய்ப்புதான் இது..

மதிக்கு வீட்டு சாப்பாடு சாப்பிடனும் என்று ஆசை இப்ப நான் கொண்டுபோய் கொடுத்தேன்ல இப்போ என்மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும்.. அந்த சாஃப்ட் கார்னரை என் பக்கம் சாய வைக்கணும்.. அதுக்காகத்தான் இதெல்லாம்.. நீங்க என்ன செய்றிங்கன்னா.. இனி தினமும் எங்க மூணுபேருக்கும்  மதிய சாப்பாடு சேர்த்தே கொண்டுவந்துருங்க,,

முதல்ல நான் மதியோட வயித்தை குளிர்விக்கிறேன் அப்பறம் அவ மனசை கொள்ளையடிக்க்கிறேன்..!! என்று விளக்கம் அளித்த தமிழி மாதவன் புன்னகையோடு பார்த்திருந்தார்.. சரி எனக்கு வெளில்ல முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்பறேன்.. என்றுவிட்டு வெளியே சென்றான்..

“நான் தான் சொன்னேன்ல தமிழ் எது செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு..” தமிழை பாராட்டியபடி இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டார்.. “நீ அவனை ரொம்ப நம்புற.. எதுக்கும் அவன்கிட்ட கவனமா இரு..” வரதராஜன் எச்சரித்துவிட்டு கேண்ட்டினை நோக்கி சென்றார்..

மதியிடம் சொல்லிக்கொண்டு காரை எடுத்து வந்த சிவா பெரும் குழப்பத்தில் இருந்தான்.. ’ சே இந்த தமிழ் பயனை வெளிய துறத்த வாய்ப்பு கிடச்சும் மிஸ் பண்ணிட்டேனே..! அவன் வில்லங்க புடிச்சவனாக இருக்கானே.. இவன்கிட்ட இருந்து நான் மதியை எப்படி பாதுகாக போறேன்..? இவன்கிட்ட இருந்து மதியை காப்பாத்தினாலும், மதிக்கிட்ட இருந்தே அவளை யார் காப்பாத்துவாங்க..

இப்போ மதிக்கு தமிழ் மேல நlல்ல அபிப்ராயம் இருக்கு..!! இதுவே காதலாக மாறிவிட்டால்.., மதி கேட்டு என்னால எதுவும் மறுக்க முடியாதே..! சித்து நீ வாய்ல சொல்லிட்டே இருக்க.. ஆனால் இந்த தமிழ் பையன் ஸ்கோர் எடுத்துட்டு இரூக்கான் டா.. !! அவன்கிட்ட இருந்து நான் மதியை பாடுகாப்பேன் ஆனால் அவன் மதி மனசுல இருந்தா என்னால எதுவும் செய்ய முடியாது..

அவன் மதி மனசுக்குள்ள வரு முன் நீ வந்துருடா..” என்று மனதில் சில பல குழப்பங்களோடு சித்துவை அழைக்க..

சிவா மனதில் அழைத்தது சித்துவிற்கு கேட்டது போல அவனே சிவாவை அழைத்து அருகில் இருக்கும் காஃபீ ஷாப் வர சொன்னான்..

அங்கு இவனுக்காக  ஏற்கனவே காத்திருந்த சித்து.. தான் கொஞ்ச நாட்கள் இங்கு தங்க போவதாக சொல்ல.. சிவாவிற்கு.. அப்பாடா..” என்றிருந்தது.. சிவாவின் முகத்தில் இருந்த நிம்மதியை பார்த்து..என்னவென்று கேட்க..  இருவருக்கும் உள்ள பந்தயத்தை மட்டும் சொல்லாமல்,

தமிழின் அட்டகாசங்களை பட்டியலிட.. முகம் இறுக கேட்டிருந்த சித்து.. விடு நான் வந்துட்டேன்ல இனி நானா.. அவனான்னு பார்க்கிறேன்..” தாடையை தடவியபடி சொல்ல..

“ஹேய் சித்து அந்த தமிழ் கூட உன்ன மாதிரிதான் டா இப்படி தாடையை தடவுவான்,,” என்று வியப்பாக சொல்ல சித்து திரு திருவென முழித்தான்…

அரசன் ஆள்வான்…              

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

"தமிழ்"

10 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன