in , ,

நெஞ்சாங்குழி ஏங்குதடி 30

நெஞ்சம் 30..

“” என்னால முடியல அம்மா…..அரவிந்த் என் கையை விடாதீங்க…பிளீஸ்….” என பிரசவ அறையில் வலியில் துடித்து கொண்டு இருந்தாள் பூஜா…..

” கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ பூஜா…..நம்ம குழந்தை நம்மகிட்ட வாந்துடுவான்…..தைரியமா இரு….” என அவளுக்கு ஆறுதல் கூறுவது போல தனக்கு சொல்லி கொண்டு இருந்தான் அரவிந்த்….

குழந்தைகள் டாக்டர் என விஷ்ணு குழந்தையை பரிசோதிக்க காத்திருக்க…..மஹா அவன் அருகில் அமர்ந்து இருந்தாள்….அவள் முகம் பயத்தோடு இருக்கவும்…
” மஹி நீ என்னோட ரூமில் இரு…நான் குழந்தை பிறந்ததும் உன்னை கூபிடறேன்…..” என அவளை அழைத்து கொண்டு அவன் அறைக்கு சென்று அவளை படுக்க வைத்து விட்டு வந்தான்….அவள் உடன் பூரணி இருந்தார்….

சிறிது நேரத்தில் பூஜா அரவிந்த் மகன் அழகான ரோஜா நிறத்தில் இம்மண்ணுக்கு வந்தான்…..அவனை கையில் ஏந்திய அரவிந்த் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் தனது பிஞ்சின் கையில் விழ…..அது அழகாக புன்னகை சிந்தியது…..
பூஜா மயக்கத்தில் இருந்ததால் அவன் குழந்தையை வெளியில் எடுத்து வந்து செல்வி இடம் கொடுத்தான்….செல்வி தனது மகளை அழைத்து ( பூஜாவின் தாயை) அவர் கையில் குழந்தையை கொடுத்தார்.   .

பூஜா கண் விழித்ததும் அனைவரும் அவளை ஒருவர் பின் ஒருவராக சென்று பார்த்து விட்டு வந்தனர்….

விஷ்ணு குழந்தை பிறந்ததும் மஹா பூரணி இருவரையும் அழைத்து வந்து குழந்தையை பார்க்க செய்தான்….

பிறகு குழந்தையை பரிசோதித்து விட்டு நன்றாக இருப்பதாக கூறினான்….

மூன்றாம் நாள் பூஜா குழந்தையை அழைத்து கொண்டு வீட்டிற்கு செல்ல….செல்வி அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றார்….

குழந்தை வீட்டிற்கு வரவும் அனைவருக்கும் நேரம் சரியாக இருந்தது….

மஹாவிற்கு ஐந்தாம் மாதம் விழா நன்றாக நடைபெற்றது….அவளுக்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பு நடத்த நாளை குறித்தார்கள்….

அன்று இரவு மகாவின் கால்களை அமுக்கி விட்டான் விஷ்ணு…

” போதும் வினு….நீங்க படுங்க….”

” இல்லடி உன் கால் வீக்கமாக இருக்கு பாரு….கொஞ்ச நேரம் இருக்கட்டும்….நீ படுத்துக்கோ….” எனக்கூறி அவளை படுக்க வைத்தான்….

சிறிது நேரத்தில் மகா உறங்கிவிட விஷ்ணு சென்று சுடுதண்ணீர் எடுத்துவந்து…. அவள் காலுக்கு ஒத்தடம் கொடுத்தான்…. 

தாய் தன் மகள் உண்டாயிருக்கும் போது என்னென்ன செய்வாரோ அனைத்தையும் விஷ்ணு செய்தான்….. அவள் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என மனதில் இறைவனிடம் வேண்டி கொண்டான்….

இரவு பாதி உறக்கத்தில் எழுந்த மஹா விஷ்ணு அங்கு அருகில் இல்லாமல் போகவும் அவனை தேடி எழ…. கால் வழுக்கி கீழே விழ பார்த்தாள் அதற்குள் விஷ்ணு அவளை தாங்கி பிடித்து கொண்டான்…

” இப்போ எதுக்கு ஏந்திரிச்ச….” என கேட்க…

” வினு நீங்க எங்க போனீங்க….”

” நான் இங்கே தான் இருந்தேன்….ஏதாவது வேணுமா ??” 

” இல்ல பா…நீங்க என் கூடவே இருங்க பிளீஸ்….”

சரி மா என கூறி அவள் அருகில் சென்று அமர…மஹா அவன் மடியில் தலை வைத்து படுத்து கொண்டாள்….

அவள் எப்போதும் அப்படி எல்லாம் செய்தது இல்லை எனவே விஷ்ணு அவளிடம்…
” என்ன மஹி….என்ன பண்ணுது ” என கேட்க..

” அம்மா நியாபகமாகவே இருக்கு வினு….இப்போ அவங்க இருந்து இருந்தா ரெண்டு பேரையும் நெனச்சு எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பாங்க இல்லையா….’

“இப்போ அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக தான் இருப்பாங்க மகி….அவர்களின் ஆசிர்வாதம் என்னிக்கும் உனக்கும் நம்ம குழந்தைக்கும் கிடைக்கும்…..”

“உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்துகிறேனா…..”

” நீ ஏண்டி இப்படி எல்லாம் நினைக்கிற…. உனக்கு செய்றதுல எனக்கு சந்தோஷம்தான்….. கண்டதையும் யோசிக்காமல் ரிலாக்ஸ்டா இரு….” அவள் தலையை வருடிக் கொண்டே இருந்தவன்….
அவளிடமிருந்த சீரான மூச்சுக்காற்று வெளிப்படவும் அவள் தலையை தலைகாணியில் வைத்து படுக்க வைத்துவிட்டு…. அவனும் அவளை அணைத்தபடியே உறங்கி போனான்…..

காலையில் எழுந்த விஷ்ணு கண்டது மஹா அங்கு புடவையுடன் சண்டை போட்டு கொண்டு இருந்ததை தான்….

” ஐயோ…உனக்கு இன்னைக்கு என்ன….. ஆச்சு….. ஏன் என்னை இப்படி படுத்துற ஒழுங்கா நின்னு தொலையேன் எனக்கு மூச்சு முட்டுது ப்ளீஸ் தயவு செஞ்சு அப்படியே நில்லு டா” என புடவையிடம் பேசி கொண்டு இருக்க…..அதை கண்ட விஷ்ணு எழுந்து அவள் அருகில் சென்று…

” என்னடி என்ன பண்ற….” என கேட்க…

” இங்கே பாரு விஷ்ணு….இந்த புடவை என்னை டார்ச்சர் பண்ணுது….ஒழுங்கா நிக்கவே மாட்டேங்குது….”

” ஏன் மஹா….சுடிதார் போட்டு கொள்ள வேண்டியது தானே…. உனக்கு சௌகரியமாக இருக்கும் இல்ல….”

” எனக்கு புடவை தான் பிடிக்கும்….நீங்க ஒன்னு பண்ணுங்க போய் அத்தையை அனுப்புங்க….அவங்க பிலீட்ஸ் எடுத்து கொடுப்பாங்க….” 

” ஏன் நான் செய்ய மாட்டேன் ” என சொல்லி அவள் கையில் இருந்த புடவையை வாங்கியவன் அவளுக்கு அழகாக அதை உடுத்தி விட….

அவனின் தீண்டலில் தன்னை இழந்தால் மங்கையவள்…..அவன் அவளது மணிவயிற்றில் முத்தமிட்டு புடவையை சரி செய்து எழுந்து நிற்க…. குங்குமம் பூசியது போல இருந்த அவள் முகத்தை கண்ட விஷ்ணு அதை அப்படியே கையில் ஏந்தி அவளது துடிக்கும் இதழை நெருங்கினான்….

அவனது நோக்கம் புரிந்த அவள் ” வினு….நீ இன்னும் பிரஷ் பண்ணல….” என அவனிடம் கூற….

” உனக்கு கொழுப்புடி..என்கிட்ட இருந்து தப்பிக்க வழி தேடுற….”

” என்ன பேசற வினு…..”  என கேட்டவளை அணைத்துக் கொண்டு….. ” லூசு பொண்டாட்டி உன்கிட்ட டேர்ட்டி யா தான் இருப்பேன்….” என சிரிக்க….

” போங்க வினு….” என அவனிடம் இருந்து விலகி நின்றாள்….

” சரி போறேன்…” என கூறிவிட்டு பாத்ரூம் சென்று கதவை அடைக்க….

மஹா அவனின் செய்கையை நினைத்து சிரித்து கொண்டு இருந்தாள்….

அனிதா மஹா அறை கதவை தட்ட….கதவை திறந்த மஹா…அங்கு அனிதா கையில் பாலுடன் நிற்பதை கண்டு….

வாங்க அத்தை….என கூப்பிட…

“முதல்ல இந்த பாலை குடி….” என அதை அவளிடம் கொடுக்க….அவளும் வாங்கி பருக….சரியாக விஷ்ணு வெளியில் வந்தான்….அங்கு அனிதா இருப்பதை கண்டு…இவளை வம்பு இழுக்கலாம் என வந்தா சித்தி இருக்காங்களே….சரி போகட்டும் அப்புறம் பார்த்துக் கொள்கிறேன் உன்னை என நினைத்து கொண்டு அனிதா மகனை கையில் தூக்கி கொண்டு கீழே இறங்கினான்….

கிருஷ்ணா அறையில் உறக்கத்தில் இருக்க…கோமதி சமையல் செய்து கொண்டு இருந்தார்….வர்ஷா அவருக்கு உதவியாக இருக்க…..வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்க….கோமதி யார் என சென்று பார்த்தார்….

அங்கு பக்கத்து வீட்டு பெண்மணி தனது மருமகள் வளைகாப்பிற்கு இவர்களை அழைக்க வந்திருந்தார்….அவரை உள்ளே அழைத்த கோமதியிடம் தனது மருமகள் வளைகாப்பு விழா விற்கு அவரை அழைத்தார்….

நிச்சயம் வருவதாக சொன்ன கோமதி வர்ஷாவை கூப்பிட….. அவளும் வெளியில் வந்தாள்… வேண்டா வெறுப்பாக வர்ஷாவை அழைத்தார் அந்தப் பெண்மணி….

அதைக் கண்டு கொண்ட கோமதி அவரிடம்…”என்ன லட்சுமி ஏன் உன் முகம் இப்படி போகிறது என்ன பிரச்சனை” என கேட்க…

“அதெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா…. என் மருமக கல்யாணமாகி வந்த அடுத்த மாசமே உண்டாகி விட்டாள்…. என் பையனுக்கும் உன் பையனுக்கும் ஒரே நேரத்துல தான கல்யாணம் ஆச்சு…. சொல்லப்போனா உன் பையன் கல்யாணம் நடந்து இருபது நாள் கழிச்சு தான் என் பையனுக்கு கல்யாணம்….. ஆனா இப்ப என் மருமக உண்டாகி வளைகாப்பு கூட நடத்த போறோம்…. உன்னோட மருமக இன்னும் நல்ல செய்தி சொல்லாம இருக்கா… அதைப்பற்றித்தான் யோசிச்சேன்….’ எனக் கூறியதும்….

“லட்சுமி பையனுக்கு கல்யாணம் ஆகி  மருமக அடுத்த மாசமே வாந்தி எடுக்க வேண்டும் என்று நினைக்கிற மாமியார்களும் இந்த உலகத்துல நிறைய பேர் இருக்காங்க….. எத்தனை மாமியார் தன்னோட மகனும் மருமகளும் சந்தோஷமாக இருக்கட்டும் என நினைப்பார்கள்…. அதுவும் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம்… அதில் மூக்கை நுழைப்பது அநாகரிகம்… என்று நினைப்பவள் நான்….. நீ எப்படி…… என் மருமகள் ஒரு டாக்டர் அவளுக்கு தெரியாதது இல்லை…. என்னைப் பொறுத்த வரையிலும் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான் குழந்தையை பற்றி கேட்டு நச்சரிக்க கூடாது கடவுள் அருள் புரியும் போது நிச்சயம் கிடைக்கும்….. என் மருமகளை பற்றி பேச உனக்கு தகுதி இல்லை…. நானும் என் மருமகளும் உன் வீட்டு விழாவிற்கு வரமாட்டோம்….” 

அவர் கூறியதைக் கேட்ட அந்தப் பெண்மணி…”அக்கா ஏன் அக்கா இப்படி எல்லாம் பேசுரிங்க… கண்டிப்பாக நீங்க ரெண்டு பேரும் வரணும்….”

” மன்னிச்சிடு லட்சுமி என் மருமகளை பற்றி நீ பேசியதில் எனக்கு கோபம்… இந்தக் கோபத்தோடு வந்து உன் மருமகளை ஆசீர்வாதம் செய்ய என்னால் இயலாது…. மனதார தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் அவ்வளவுதான்…… நீ கிளம்பு….” என கூறிவிட்டு கிட்செனுக்கு சென்று விட்டார்….

இந்தப் பெண்மணிக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை வர்ஷா விடம் வந்து….  “என்னை மன்னித்துவிடு மா நான் பேசியது தவறுதான்…. எப்படியாவது அக்காவை அழைத்துக் கொண்டு நீங்கள் இந்த விசேஷத்துக்கு வரவேண்டும்….நான்  வருகிறேன்….” எனக் கூறிச் சென்றார்….

வர்ஷா மிகவும் சந்தோஷமாக இருந்தாள்….. தன் அத்தை தன்னைப்பற்றி இவ்வளவு தூரம் நினைத்திருப்பது கேட்ட அவளுக்கு மனம் குளிர்ந்து போனது…. நிச்சயம் நன்றாக இருப்போம் என நினைத்து கொண்டு திரும்ப….அங்கு கிருஷ்ணா அவளை பார்த்தபடி நின்று கொண்டு இருப்பதை கண்டு வேகமாக அவனிடம் சென்றாள்….

கிருஷ்ணா என அழைக்க….

“எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன் வரு….சரியாகிடும்….” என அவள் கைகளை பிடித்து விட்டு சென்றான்….

ஒரு வாரம் கழித்து காலை சமையல் செய்து கொண்டு இருந்த வர்ஷா அப்படியே மயங்கி சரிய….அவளை தாங்கி பிடித்தார் கோமதி….

” கிருஷ்ணா….சீக்கிரம் வா….” என சத்தமிட….அவனும் ஓடி வந்து வர்ஷா மயக்கமானதை கண்டு அவளை தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்று படுக்க வைத்தான்….. வர்ஷாவின் தோழிக்கு போன் செய்து வர்ஷா மயக்கமடைந்து  விட்டதாக கூறி அழைக்க…. அவளும் வீட்டிற்கு வந்து வர்ஷாவை  பரிசோதித்துவிட்டு அவள் தாய்மை அடைந்து இருப்பதாக கூறினாள்…..

கோமதி கிருஷ்ணா இருவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது…. கோமதி வர்ஷாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு…. மென்மையாக அவள் தலையை வருடிக் கொடுத்தார்…. அதில் கண்விழித்த வர்ஷா படுக்கையில் இருப்பதை கண்டு மெதுவாக எழுந்து அமர முயற்சி செய்ய…. அவளை தடுத்து படுக்கச் சொன்னார் கோமதி….
” ரொம்ப சந்தோஷம் வர்ஷா….” என கூற…

வர்ஷா ஒன்றும் புரியாமல் விழிக்க….
” என்னை பாட்டி ஆக்கிவிட்டாய்….”  என கூற….

வர்ஷா கண்களில் ஆனந்த கண்ணீரோடு கிருஷ்ணாவை பார்க்க அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்…. அவர்கள் இருவருக்கும் தனிமையை கொடுத்து கோமதி அறையிலிருந்து வெளியில் வந்தார்….

கிருஷ்ணா வருஷ அருகில் சென்று அவள் நெற்றியில் இதழ் பதித்து ரொம்ப தேங்க்ஸ் வரு என  நெகிழ்ச்சியாக கூற….. அவளும் அவனிடம் வாழ்த்துக்களை கூறினாள்….

வர்ஷாவின் பெற்றோருக்கு அழைத்த கோமதி அவர்கள் தாத்தா-பாட்டி ஆகப்போவதை சந்தோஷமாகப் பகிர்ந்து கொண்டார்…..

அனிதாவிற்கு போன் மூலம் விஷயத்தை கூற…..அனைவரும் வர்ஷாவை வந்து பார்த்து தங்கள் வாழ்த்துக்களை கூறிவிட்டு சென்றார்கள் அதன்பிறகு வர்ஷா வை எந்த வேலையும் செய்ய விடாமல் கோமதி தாங்கினார்……

மஹா விஷ்ணு அணைப்பில் அமர்ந்து இருக்க….அவன் அவளை தோளோடு அணைத்தபடி அமர்ந்து கொண்டு இருந்தான்….

” ரொம்ப சந்தோஷமா இருக்கு மஹி….”

* எனக்கும் தான்….”

” ஹ்ம்ம்…..கிருஷ்ணாவுக்கு நான் பண்ணின காரியத்தால் எவ்வளவு கஷ்டம்….அவனுக்கு ஒரு நல்ல பெண் வாழ்க்கை துணையாக வர வேண்டும் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன்….. அதன்படி வர்ஷா வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது…. ஆனால் பாட்டி அவளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது சங்கடமாக இருந்தது… அவங்க கொஞ்சம் மாறிட்டாங்க என நினைத்து சந்தோஷமாக இருந்தேன் இப்போது அவர்கள் வர்ஷாவை தாங்குவதைப் பார்த்தால் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு…. அவள் பட்ட கஷ்டம் எல்லாம் தீர்ந்து போய்விட்டது…..ஒருபக்கம் என்னுடைய நண்பன் கிருஷ்ணா இன்னொரு பக்கம் என்னுடைய தோழி வர்ஷா இருவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக வாழ வேண்டும்……”

“நிச்சயமா வினு…. அவங்க ரெண்டு பேரு குணத்துக்கு சந்தோஷமாக இருப்பார்கள்….. கோமதி பாட்டியும் கண்டிப்பாக அவளை நன்றாக பார்த்துக்கொள்வார்கள்…. “

“ஹ்ம்ம்…. சரி நீ படு….”

” எனக்கு தூக்கம் வரல…. நாம கொஞ்ச நேரம் வெளியில் நடக்கலாமா….”

“சரி வா…” என அவளை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான்….

அங்கு இருந்த கல் பெஞ்சில் அஜய் அனிதா இருவரும் அமர்ந்திருப்பதை கண்டு விஷ்ணு மகா இருவரும் அவர்களை நோக்கிச் சென்றார்கள்…..

கொங்கு அனிதா கண்களில் கண்ணீரோடு இருக்க…. அஜய் சமாதானம் செய்து கொண்டிருந்தான்….

இவர்கள் இருவரையும் கண்ட அனிதா கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நிற்க….. அஜய் விஷ்ணுவிடம்…”என்னடா என்னாச்சு இந்த நேரத்துல இங்க நிக்கிறீங்க….?’ என கேட்க….

“இவளுக்கு தூக்கம் வரலைன்னு சொன்னா சித்தப்பா….அதனால்தான் கொஞ்சம் நேரம் நடக்கலாம் என வந்தோம்….”

” சரிடா நாங்க போறோம் நீங்க கொஞ்ச நேரம் நடந்துட்டு சீக்கிரம் போய் படுங்க….” வினா நிஷாவின் கையை பற்றிக்கொண்டு திரும்பிய போது….

” ஒரு நிமிஷம் சித்தி….” என விஷ்ணு அனிதாவை அழைக்க….

” என்ன விஷ்ணு….” என சிரித்து கொண்டே அனிதா கேட்க…

” கிருஷ்ணா பாட்ஷா ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க பாட்டி நிச்சயம் அவங்க கூட சந்தோஷமா இருக்காங்க…. பாட்டியை போல் ஒரு மாமியார் கிடைக்க வர்ஷா கொடுத்து வைத்திருக்க வேண்டும்…..நீங்கள் இனியும் அவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் நிம்மதியாக இருங்கள்….” என கூற…

விஷ்ணுவின் கையை பற்றிக்கொண்ட அனிதா….” வயசில சின்னவனா இருந்தாலும் அடுத்தவங்களோட உணர்வுகளை நல்லா புரிஞ்சு பேசற விஷ்ணு…. உண்மையில் நான் இப்போ அழுதது அவர்களை நினைத்து தான்…. எங்கே அம்மா வர்ஷாவை ஏற்றுக் கொள்ளாமல் போய் விடுவார்களோ என பயந்தேன்….தாய் பக்கமும் பேச முடியாமல் மனைவி பக்கமும் பேச முடியாமல் இருக்கும் கிருஷ்ணாவின் நிலைமை கொடுமை…. இப்போதுதான் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது…. சரி நீங்க கொஞ்ச நேரம் நடந்துட்டு சீக்கிரம் போய் படுங்க….” எனக் கூறி விட்டுச் சென்ற அவளை மஹா பார்க்க….

விஷ்ணு மஹா கையை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தான்…..

” என்ன மஹி அப்படி பார்க்கிற சித்தியை….”

” இல்ல வினு…. தன்னோட கஷ்டத்தை அவங்க இதுவரைக்கும் யார் முன்னாடியும் காட்டிக் கொண்டது கிடையாது…. எப்போதும் சிரித்த முகமாகவே வலம் வருவார்கள்…. ஆனால் உங்க கிட்ட மந்திரம் அவங்க நிறைய பேசுவாங்க…. எனக்குத்தெரிந்து கிருஷ்ணாவிடம் கூட இவ்வளவு பேசினது கிடையாது…..’

” ஆமாம்….ஒரு சின்ன விஷயத்தின் காரணமாக சித்தி சித்தப்பா அவருக்கு சண்டை வந்துவிட்டது….. அதன்பிறகு சித்தியிடம் சென்று மன்னிப்பை கேட்டேன் அன்றிலிருந்து அவர்களது பெறாத பிள்ளை ஆனேன் நான்…..” என கூறினான்….

அதற்குமேல் இருவரும் எதுவும் பேசாமல் சிறிது நேரம் நடந்து கொண்டிருக்க….மகா கால் வலிப்பதாகக் கூறவும் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் விஷ்ணு…..

நாட்கள் அழகாக செல்ல….

இதோ இன்றும் மஹா வளைகாப்பு தினம்….

பட்டுப் புடவையை கையில் வைத்துக்கொண்டு அதை கட்ட முடியாமல் நின்று கொண்டிருந்த தன் மனைவியை நெருங்கி அதை அழகாக கட்டிவிட்டான் விஷ்ணு…. சில செல்ல தீண்டல்கள் சீண்டல்களுடன்….

ஏற்கனவே தாய்மையின் பூரிப்பில் இருந்த மஹா…. அவனது செய்கையில் செந்தாமரை பூவாக மலர்ந்து இருந்தாள்…..

அவளுக்கு வளையல் அடுக்கி நலுங்கு வைக்க அழைத்து வந்த அனிதா…அவளை சேரில் அமர செய்து முதல் வளையலை செல்வி இடம் கொடுக்க…. அவர் அரவிந்த் பாட்டியை அழைத்து அவரை போட செய்தார்…. உறவுகள் வளையல் இட…கடைசியில் விஷ்ணு மஹா அருகில் சென்று தன் அன்னையை காண….அவர் அவன் கையில் வளையலை கொடுத்தார்….

அழகான தங்க வளையல்களை தனது மனைவியின் கையில் போட…. அவள் சந்தோசத்துடன் அவனை பார்த்தாள்….அவள் எழுந்து நின்று அனைவருக்கும் வணக்கம் சொல்ல….தங்கள் குழந்தைக்கு முத்தமிட்டான் விஷ்ணு….அனைவரின் முன்பும் அவன் இப்படி செய்ய மஹா வெட்கப்பட…..அந்த அழகிய தருணத்தை கேமிராக்கள் அழகாக படம் பிடித்தது….

அவளுக்கு ஆலம் சுற்றி அவளை அரவிந்த் வீட்டிற்கு அழைத்து செல்ல நேரம் ஆனதும்….அவளது உடமைகளை ஒரு தரம் சரி பார்த்து வருகிறேன் என கூறி அறைக்கு சென்றாள்….

அங்கு அவளுக்கு முன் விஷ்ணு நின்று கொண்டு இருப்பதை கண்ட மஹா கண்களில் கண்ணீரோடு அவனை பார்த்தாள்….

இருகையையும் விரித்த விஷ்ணு கைகளுக்குள் அடங்கி போனாள் அவள்….
அவளது அழுகையை மட்டும் நிறுத்தவேயில்லை…..விஷ்ணு எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை….

அவளை நிமிர்த்தி அவளது அதரங்களை சிறை செய்தான்….அவனது வலியையும் அவளுக்கு உணர்த்தினான்…..அவளும் அடங்கி போனாள்…. மனதே இல்லாமல் அவளை விடுவித்தவன் அவளை அணைத்து கொண்டு….” மஹி உன் தாத்தா பாட்டி ஆசைக்காக போயிட்டு வா….ஒரு வாரம் தான் சீக்கிரம் போயிடும்…..”

” வினு நம்ம குழந்தை பிறக்கும் போது நான் உங்க கூட தான் இருக்கணும் என எனக்கு ஆசையா இருக்கு…..” என சிறு பிள்ளை போல கூற….

” கண்டிப்பா நான் ஒரு வாரம் முடிந்ததும் உன்னை இங்க கூட்டிட்டு வந்துடுவேன் டி….”

சரி என அவள் அரவிந்த் வீட்டிற்கு கிளம்பினாள்….விஷ்ணு அவள் முன் வர கூடாது என செல்வி சொல்லிவிட….அவன் தனது அறை பால்கனியில் நின்று அவர்கள் கிளம்பும் வரை பார்த்தான்…..

மாலை வேளையில் அவளை சென்று பார்ப்பான்…..இரவு வரை அங்கேயே இருப்பான்….இப்படியே ஒரு வாரம் செல்ல….மஹா தனது வீட்டிற்கு திரும்பினாள்….

இரவு தனது கணவனின் அணைப்பில் உறங்கி கொண்டு இருந்தவள் வலி எடுக்கவும் அவனின் கைகளை இறுக்கமாக பிடிக்க….அவளின் அசைவில் விஷ்ணு எழுந்து பார்க்க…..உடனேயே பூரணி அனிதா அஜய் மூவரும் அவளை அழைத்து கொண்டு கீழே செல்ல….விஷ்ணு தனது ஹாஸ்பிடலுக்கு போன் செய்தபடி காரை எடுத்து நிறுத்தினான்….

இரவு முழுதும் மஹா வலியில் துடித்தாள்..

விஷ்ணு அவளோடு தான் இருந்தான்…..காலை சூரியன் பூமியை தொடும்போது விஷ்ணு மஹா புதல்வி இம்மண்ணில் உதித்தாள்…..

தனது மகளை கையில் ஏந்திய விஷ்ணு ரோஜா பூவைப்போல இருக்கும் தனது உயிரை சந்தோசமாக பார்த்தான்….குழந்தையை வெளியில் எடுத்து வந்தவன் செல்வி இடம் குழந்தையை கொடுத்தான்….அனைவரும் குழந்தையை பார்க்க….விஷ்ணு உள்ளே சென்று மஹா கண் விழிக்கும் வரை அவள் அருகிலேயே இருந்தான்….

அவள் கண் விழித்து முதலில் கண்டது தன்னையே பார்த்தபடி அமர்ந்திருக்கும் அவளின் வினுவை தான்…..அவனது கைகளில் அழுத்தம் கொடுத்த மகாவிடம்
தேவதை டி….என சொன்னான்….

அவளது முகம் பூரிப்பை காட்டவும் விஷ்ணு அவளது நெற்றியில் இதழ் பதித்தான்…..

இரண்டு நாட்கள் கழித்து குழந்தையை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தாள் மஹா….

இரவு பூரணி அவர்கள் அறையில் குழந்தையை பார்த்து கொள்ள தங்கி கொண்டார்….

ஒரு மாதம் கழித்து ….

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது…….

குழந்தையை தயார் செய்து பூரணி இடம் கொடுத்து விட்டு மஹா கிளம்ப அறைக்குள் வர…..

கதவு பின்புறம் இருந்த விஷ்ணு அவள் வந்ததும் கதவை தாளிட்டு விட்டு அவள் புடவையை கையில் எடுத்து கொண்டான்…..பாத்ரூம் சென்று விட்டு புடவை மாற்ற வந்த மஹா புடவையை காணாமல் தேட…..கப்போட் மறைவில் இருந்து விஷ்ணு அவளை இழுத்தான்….

அவனை கண்டவள்….” என்ன வினு இது….நீங்க இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க….கீழ எல்லாரும் வெயிட் பண்றாங்க….போங்க….நான் புடவை மாற்றிவிட்டு வரேன்….” என கூற…

” அதெல்லாம் சித்தப்பா இருக்காங்க…..அப்பா அம்மா இருக்காங்க…எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு….அதை முடித்து விட்டு கீழே போறேன்….”

” சரி தள்ளுங்க….நான் சேரி மாத்திட்டு கீழே போறேன்….” என்று நகர போன அவளின் இடையில் கை கொடுத்து தன்னுடன் நெருக்கினான்….

அவனின் அருகாமை அவளை இம்சை செய்ய….அவனிடம் இருந்து விலக பார்த்தவளை நெருக்கி நிறுத்தி அவள் காதில்….” நாம சம்பந்தபட்ட எந்த விசேஷம் என்றாலும் நான் தான் உனக்கு புடவை கட்டி விடுவேன்…. நம் பிள்ளைங்க கல்யாணத்துக்கும் சரி நமக்கு அறுபதாம் கல்யாணம் அன்றும் நான் தான் கட்டி விடுவேன்….” என கூற…..

அவனின் வார்த்தைகளை கேட்ட மஹா மனது வானில் மிதந்து கொண்டு இருந்தது…..

அவளுக்கு அழகாக புடவையை கட்டி விட்டு …..அவளுக்கு பூவை வைத்து விட்டவன்….அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு….. அவளுடன் கீழே இறங்கி வந்தான்…..

தனது மகளை கையில் ஏந்திய அவன் ஒரு கையால் மனைவியை அணைத்தவாறு நிற்க…..

செல்வி அவர்கள் மூவரையும் மனையில் அமர சொல்லி குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா ஆரம்பிக்க ஐயரிடம் சொல்ல…..அவரும் பெயரை குழந்தை காதில் மூன்று முறை சொல்ல சொன்னார்…..

விஷ்ணு தனது மகள் காதில் நேத்ரா என மூன்று முறை கூறினான்…..

பின் மஹா பெயரை சொல்ல….அனைவரும் கூறினார்கள்…..

அனைவரும் சந்தோஷமாக இருந்தனர்…..

அவர்கள் இன்று போல என்றும் காதலுடன் அன்புடன் இருக்க வேண்டும் என கடவுளிடம் கேட்டு கொண்டு நாமும் அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Kalyani Nathan

ஆசிரியையாக இருந்த நான் இப்போது எழுத்தாளராக மாறியுள்ளேன்.....

Story MakerContent AuthorUp/Down VoterYears Of Membership

நெஞ்சாங்குழி ஏங்குதடி 29

இன்று அன்றி(ல்)லை 30