in , ,

நெஞ்சாங்குழி ஏங்குதடி 29

நெஞ்சம் 29..

மூன்று மாதம் கழித்து ……

பூஜாவுக்கு ஐந்தாம் மாதம் சடங்கு நடைபெற இருக்க….அதற்கு அனைவரும் அரவிந்த் வீட்டிற்கு வந்து இருந்தார்கள்….

அனைவரும் சந்தோஷமாக இருந்தனர்….

பூஜாவை மனையில் அமர வைத்து அவளுக்கு நலுங்கு வைத்து…

அவளோடு அரவிந்தை அமர செய்து….ஐவகை சாதம் ஐவகை பழங்கள் இனிப்புகள் என அனைத்தும் அவர்களிடம் கொடுத்தனர்….அவளுக்கு என எடுத்து இருந்த கருப்பு நிற புடவையை அவளிடம் கொடுத்து கட்டி வர சொன்னார்கள்….அவளுடன் அனிதா சென்று விட….அரவிந்த் பூஜாவை பார்த்து கொண்டே இருந்தான்….தாய்மையின் பூரிப்பில் அழகாக இருந்தாள்….அவனுக்கு தான் மனையாள் மேல் வைத்த கண்ணை திருப்ப முடியவில்லை…..

அவளை அழைத்து வந்து அமர வைத்து விட்டு அவளுக்கு நலுங்கு வைக்க ஆரம்பித்தார்கள்…..அரவிந்த் பூஜா இருவரையும் அமர வைத்து திருஷ்டி கழித்தனர்…..

அதன் பின் தாத்தா பாட்டி மற்றும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்…..

மதியம் அனைவரும் உணவு உண்டு விட்டு ஒய்வு எடுத்து கொண்டு இருந்தார்கள்….

மகாவின் பாட்டி அவளிடம் எப்படி இருக்கிறாய் எனக் கேட்டார்….

” நான் நல்லா இருக்கேன் பாட்டி….’

” உன் முகம் சோர்வாக இருக்கே….உடம்புக்கு முடியலையா….”

” அதெல்லாம் இல்லை பாட்டி…..ஸ்கூல்ல வேலை ஜாஸ்தி…..’

” உடம்பை பார்த்துக்கோ….” என கூறினார்…

இரவு அனைவரும் வீட்டிற்கு சென்றதும்….மஹா பாலை எடுத்து கொண்டு அறைக்கு சென்றாள்….

அப்போது தான் குளித்து முடித்து வந்த விஷ்ணு இவள் ஏதோ ஒரு யோசனையில் அமர்ந்து இருப்பதை கண்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான்….

” மஹி….” என அழைக்க….

வினு என அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்….

” என்ன ஆச்சு ….எதுக்கு அழுகிற….”

” வினு….நமக்கு பாப்பா ஏன் வரல…..” என அழுதாள்…

” என்னடி என்ன ஆச்சு…திடீரென பாப்பா பத்தி கேட்கிற….”

” இல்ல நமக்கு பின்னாடி கல்யாணம் ஆன பூஜா அண்ணி கன்சீவா இருக்காங்க….நான் ஏன் இன்னும் ஆகல….”

” லூசு மத்தவங்க லைஃபோட நம்ம லைஃபை கம்பேர் பண்ணாத முதல்ல….”

” சரி…நான் கம்பேர் பண்ணல….ஆனால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க….”

” நாம ரெண்டு பேரும் சந்தோஷமாக தான இருக்கோம்….கண்டிப்பா பாப்பா வரும்….நீ ரொம்ப யோசிக்கிற….”

” ஹ்ம்ம்….” என அவனின் மார்பில் ஒன்றி கொண்டாள்….

விஷ்ணு யோசித்தான்….ஏன் இன்று இவள் இப்படி யோசிக்கிறா….யாராவது ஏதாவது கேட்டாங்களா….இல்லை இவளாகவே யோசிக்கிறாலா…என்ன என புரியல…. என நினைத்தான்….

ஆனால் அவளிடம் அதை பற்றி கேட்கவில்லை….

” சரி எவ்வளவு நேரமா இப்படியே இருக்கலாம் என ஐடியா மேடம்….” என கேட்க…

” கொஞ்ச நேரம் வினு….” என கொஞ்சினாள்….

அவள் மனதில் இருந்த அலைப்புறுதல் தீரவில்லை….ஏற்கனவே அவளுக்கு திருமணத்தின் போது குலம் தழைக்க ஒரு பூஜை செய்து வந்தனர்….அப்போது ஏதாவது ஜாதகத்தில் தோஷம் இருக்குமோ என எண்ணம்….இப்போது பூஜாவின் விழாவின் போது விஷ்ணு தூரத்து உறவினர் ஒருவர் இவளை பற்றி பேசியது மனதில் பயம் வந்தது….

அவளை அணைத்தபடியே அமர்ந்திருந்த விஷ்ணு அவளிடம் இருந்து சீரான மூச்சுக்காற்று வருவதை கண்டு அவளைப் படுக்கையில் படுக்க வைத்தான்….

விளக்கை அணைத்து விட்டு வந்து படுத்தவன் அவளை அணைத்தபடியே உறங்கினான்…..

இடையில் மஹா ” வினு….நான் உங்களுக்கு ஏற்ற பெண் இல்லையா….அந்த லேடி சொல்லுது….அம்மா குழந்தையை பெத்து போயிட்டு போயிட்டாளாம்….இவள் குழந்தை பெத்துக்கிட்டு போவாளா இல்லை குழந்தை பெறாமலேயே போயிடுவா போல….பாவம் பூரணி ஒரே ஒரு பையன் ராஜாவாக இருக்கான்….அவனுக்கு ஒரு வாரிசு வரணும் என அவளுக்கு ஆசை இருக்காதா….

இந்த பிள்ளைக்கு அந்த பாக்கியம் இருக்குமோ இல்லையோ பாவம் பூரணி… என சொன்னாங்க….

நான் பாவம் பண்ணினவளா….எனக்கு அதிர்ஷ்டம் இல்லையா….எனக்கு குழந்தை பிறக்காதா…. என அழுதாள்…

அவள் அழுதது உறக்கத்தில் அழுவது போல் இல்லாமல் இருக்க விஷ்ணு எழுந்து விளக்கைப் போட்டு விட்டு அவளை பார்த்தான்…. ஆனால் மகா நன்றாக உறங்கிக் கொண்டுதான் இருந்தாள்….

பூஜாவின் விழாவில் ஏதோ நடந்திருக்கிறது என குறித்த கொண்ட விஷ்ணு மறுநாள் கண்டிப்பாக மஹா இடம் இதை பற்றி கேட்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு மகாவிற்கு தட்டிக் கொடுக்க மகா மறுபடியும் நல்ல உறக்கத்திற்கு சென்றாள்…..

மறுநாள் காலையில் எழுந்து விஷ்ணு மகா இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு குளித்து முடித்து கீழே இறங்கி வந்தான்…..

” அம்மா எனக்கு காபி குடுங்க….” என பூரணியிடம் கேட்டவன் டைனிங் டேபிளில் அமர்ந்தான்….

” என்ன ஆச்சு டா மஹா இன்னும் வரல….உடம்புக்கு முடியலையா….” என செல்வி கேட்க…

” இல்ல பாட்டி ….அவள் நல்லா தூங்கறா…அதான் எழுப்பல….”

” ஏண்டா…உடம்பு முடியலையா…. ஏதாவது பிரச்னையா….” என பூரணி கேட்க….

ஒன்னுமில்லை என கூறிவிட்டு காபியை பருகினான்….

ஆனால் அவன் முகத்தில் யோசனையை கண்ட பூரணி அவனிடம் “என்னடா என்ன … சொல்லு….” என கேட்க….

” அம்மா நான் உங்க ரூமில் இருக்கேன்….” என கூறி எழுந்து சென்றான்….

பூரணி அவன் சென்றதும் அவன் பின்னே சென்றார்….அவன் கட்டிலில் அமர்ந்து இருக்க….அவன் அருகில் சென்றவர் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்….அவன்
தலையை கோதி விட்டார் பூரணி….

” அம்மா….” என அவன் மஹா உறக்கத்தில் சொன்னதை சொன்னான்…

” யாரு அப்படி பேசினாங்க தெரியலடா….அவள் ஏற்கனவே அவங்க பெத்தவங்க பத்தி தெரிஞ்சது முதல் ரொம்ப வருத்தமா இருக்கா…..”

” அப்படி எதுவும் இதுவரைக்கும் அவள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாளா…..”

” அவள் யார் கிட்டேயும் அதை பத்தி சொல்லல டா…ஆனா மனசுக்குள்ள வச்சு மருகிறா….அது அவளோட முகத்தைப் பார்த்தால் நல்லா புரியுது….”

” அம்மா அவளுக்கு வேணும்னா கவுன்சிலிங் பண்ணலாமா…..”

” டேய் சும்மா இரு டா…..அவளுக்கு தேவை நம்மோட அன்பு பாசம் தான்….முக்கியமா உன்னோட காதல்….கண்டிப்பா அவள் மாறுவா….நாம் அவளை மாற்றலாம்…..அப்புறம் இன்னொரு விஷயம் சும்மா எப்போ பாரு டாக்டர் மாதிரி பேசாத சரியா….”

” அம்மா அப்படியும் யோசிக்கலாம்….தப்பில்லை…..”

” அவளுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாள்….”

” அதெல்லாம் அவ என்னை புரிஞ்சுக்குவா….”

” இப்படி பேசாத விஷ்ணு…..அவளை நீ விரும்பி கல்யாணம் பண்ணிருக்க வேற….”

அவன் எழுந்து கதவருகில் சென்று வெளியில் நின்று கொண்டு இருந்த மஹா கையை பிடித்து உள்ளே இழுத்தான்…..

ஐயோ வினு…..என அவனின் கையை உதற….அவனோ அவளை தன் அன்னை அருகில் அமர வைத்து விட்டு தன் அன்னைக்கு மறுபுறம் அமர்ந்து கொண்டான்….

” என்ன மஹா இது….” என பூரணி கேட்க…

” அத்தை நான் வேணும்னு வரல…..இவர்தான் எனக்கு மெசேஜ் பண்ணி அம்மா ரூமுக்கு வெளியில் நில்லு என சொன்னார்…..”

” என்னடா இது….” என பூரணி விஷ்ணுவிடம் கேட்க….

“ஒரு நிமிஷம் அம்மா…. இப்போ சொல்லு மகா உனக்கு என்ன பிரச்சனை…” என தன் தாயிடம் ஆரம்பித்து மனைவியிடம் கேட்டான்…..

அவள் சற்று தயங்கி விட்டு….” இப்போ அத்தை சொன்னாங்க இல்ல….அதுதான் என மனதின் காயங்கள்…வேறு ஒன்றும் இல்லை….” என பூரணி மடியில் தலை வைத்து படுத்து கொண்டவளை….

” மஹி நானோ இல்லை அம்மாவோ உன்னை என்னிக்காவது அந்நிய படுத்தி இருக்கோமா….”

” ஐயோ…இல்லவே இல்லை….நீங்க ரெண்டு பேர் மட்டும் இல்லை…..இந்த வீட்டில் யாருமே அப்படி நினைக்கவேயில்லை….”

” உனக்கு அம்மா அப்பா நியாபகம் வருவதுபியல்பு தான் நான் இல்லை என சொல்லவில்லை……நீ யாரோ பேசுவதற்கு முக்கியத்துவம் குடுத்து உன்னை நீயே இப்படி வருத்தி கொள்வது தான் கஷ்டமாக இருக்கு….. நேற்று நீ என்னிடம் குழந்தையை பற்றி பேசினாய்….சரி உனக்கு குழந்தை ஏக்கம் வந்து விட்டது என நினைத்தேன்….ஆனால் யாரோ சொன்னதை கேட்டு தான் இப்படி இருக்கிறாய் என தெரிந்ததும் ரொம்ப உடைந்து போயிட்டேன்…..என் அம்மா உனக்கும் அம்மாதான்…..அது உனக்கு அவங்க செய்கையில் பலமுறை உணர்த்தி இருக்காங்க…..அவங்க உன்னை தப்பா நினைப்பாங்க என எப்படி நினைக்கலாம்….அதுதான் அவங்க மனசுல உன்னை பத்தி என்ன இருக்குன்னு நீ தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்து நான் உன்னை வெளியில் நிற்க சொன்னேன்…..”

அவன் சொன்ன பின் தான் பூரணியை கண்டு….” சாரி அத்தை….அவங்க…..”

பூரணி அவள் வாயை மூடி விட்டு….
” இது உங்க லைஃப் மா….நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமாக இருக்கக் வேண்டும் அதுதான் எங்களுக்கு சந்தோஷம்….நமக்கு நடுவில் மூணாவது மனுஷங்க வந்தா நம்ம லைஃப் போயிடும்….அவங்க என்ன நினைப்பாங்க…இவங்க என்ன நினைப்பாங்க என யோசித்து நம் வாழ்க்கையை நாம் வாழாமல் போயிருவோம்…..இப்போ உங்களுக்கு இன்னும் ஏன் குழந்தை வரல என நான் கேட்டேனா….இல்லை இந்த வீட்டில் யாராவது கேட்டங்களா…. சொல்லு…. இது உங்க ரெண்டு பேரோட விருப்பம்…. கடவுள் அனுகிரகம் கூட……உங்க லைஃப் சந்தோஷமாக வாழுங்கள்….சரியா…..மனசுல எதையும் போட்டு உழப்பாத…..” என அவளை அணைத்து கொண்டார்….

மஹா மனது தெளிவாக இருந்தாள்…. பூரணி வெளியில் சென்று விட….விஷ்ணு அவளை இடித்து கொண்டு அமர்ந்தான்….
அவள் எழுந்து வெளியில் செல்ல ஏத்தனிக்க…அவளது கையை பிடித்து இழுத்து தன் மடியில் அமர வைத்து கொண்டான்…

” வினு….நான் போகணும்….”

” போகலாம்…..இரு….”

” வினு பிளீஸ்……”

” மஹி….இந்த கொஞ்ச மூளைக்கு இவ்வளவு வேலை குடுக்கிற???’ என அவளது கன்னத்தில் முத்தம் இட….

” டேய் நான் ரூமில் இருக்கேன்….” என விஜய் சத்தம் குடுக்க…..இருவரும் பதறி போய் எழுந்து நின்றனர்……

விஜய் குளியலறையில் இருந்து எட்டி பார்த்தார்….மஹா வேகமாக அங்கே இருந்து ஓடினாள்….அவள் சென்றதும் விஜய் வெளியில் வந்தார்….

” டேய் இதெல்லாம் என்ன….”

” சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் அப்பா….” என சிரிக்க…

அவன் முதுகில் செல்லமாக ஒரு அடி போட்டு ” உன் ரூமுக்கு போய் பேசுங்க சார்….” என சிரித்தார்….  அவன் செல்லவும்…
” என் பொண்ணை கண்கலங்காம பார்த்துக்கோடா….” என கூறினார்…

அவனும் சிரித்து கொண்டே சென்றான்….

விஷ்ணு அறைக்கு செல்ல அங்கு மஹா பால்கனியில் நிற்பதை கண்டு….அவளின் பின்னே சென்றவன் அவளை அணைத்து கொண்டு….” மேடம் முதல்ல என்னை கவனிக்க வேண்டும் அப்போதான் எல்லாம் நல்லபடியா நடக்கும்….” என சிரித்து கொண்டே கூற….

” உங்களை நான் கவனிக்கறது இல்லையா…..” 

” இல்லையே…..”

” வினு…..” என காலை தரையில் உதைத்து சொல்ல….

” உண்மைதான் மஹி….வேணும்னா நாம ஒரு ரெண்டு நாள் எங்காவது போகலாமா…..அப்போ நீ என்னை மட்டும் கவனிக்க முடியும்….” என கூற….

” உங்களுக்கு வேற வேலையே இல்லையா….எனக்கு ஸ்கூல் இருக்கு…லீவ் போட முடியாது….”. 

” என்னடி பொசுக்குண்ணு இப்படி சொல்ற…..”

” வினு….என்ன இது….நீங்க ஒரு டாக்டர் இப்படி பேசறீங்க…..”

” ஏன் டாக்டரா இருந்தா இப்படி பேச கூடாது என சட்டம் இருக்கா என்ன???”

” உங்களை விடுங்க…நான் கீழே போறேன்….” என அவனிடம் இருந்து விலக….

” இல்ல….நீ கிளம்பு நாம் வெளியில் போகலாம்….நான் அம்மா கிட்ட சொல்லி விடுகிறேன்…..” என அவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு கீழே சென்றான்….

உன்னை எனக்கு புரியும்…..என மஹா தன் கணவனை நினைத்து பெருமை கொண்டாள்…..

கீழே வந்த விஷ்ணு அஜய் அனிதா இருவரிடமும் மஹா பற்றி கூற….
” பாவம் டா அவள்….அவளை நீ தான் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்….” என அஜய் கூறினான்….

அனைவரிடமும் சொல்லி விட்டு தன் மனைவியை அழைத்து கொண்டு சினிமா சென்றான்….பிறகு ஹோட்டலுக்கு சென்று விட்டு அவளுக்கு சில உடைகள் எடுத்து கொடுத்தான்….இரவு வீட்டிற்கு வந்தவர்கள் பூரணியின் அறைக்கு சென்று அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்கள்….

நாட்கள் அழகாக சென்றது விஷ்ணு மஹா இருவருக்கும்…..

அன்று மஹா வீட்டிற்கு வரும் போது வீட்டில் யாரும் இல்லை….வேலையாள் இடம் கேட்க அனைவரும் கோவிலுக்கு போயிருப்பதாக கூற….சரி என கூறி விட்டு தன் அறைக்கு சென்றாள்…. உடை மாற்றி விட்டு கீழே வந்தாள்…..காபியை கலந்து கொண்டு ஹாலுக்கு வந்தவள் டிவியை ஆன் செய்து பார்த்து கொண்டு இருந்தாள்……

இரவு எட்டு மணி ஆகியும் யாரும் வராததால் பூரணி எண்ணிற்கு அழைத்து பார்க்க….அவர் எடுக்கவில்லை….அடுத்து அனிதாவை அழைக்க அவளும் எடுக்கவில்லை…..பிறகு விஷ்ணுவும் வராததால் அவனுக்கு அழைக்க அவன் போனை எடுத்து ஒரு நர்ஸ் ” மேடம் சார் ஆபரேஷன் தியேட்டரில் இருக்கார்….” என கூறி வைக்க….

மஹா மற்றவர்களை நினைத்து பயந்து போனாள்…..

சிறிது நேரம் கழித்து பூரணி மஹாவிற்கு அழைத்து ….” மஹா நாங்க இங்க மருதமலை வந்து இருக்கோம்….கூட்டம் நிறைய இருக்கு….வர லேட் ஆகும்..நாங்க எல்லாரும் சாப்பிட்டு வரோம்…..நீ சாப்பிட்டு படுத்துக்கோ….” என கூற….

இவள் சரி என கூறினாள்….இரவு பத்து மணி ஆகியும் யாரும் வராததால் ஹாலில் அமர்ந்து கொண்டு இருந்தவள் அப்படியே உறங்கி விட்டாள்….

இரவு யாரோ தன்னை எழுப்புவதை கண்டு எழுந்தவள் அங்கு அனிதா மகன் நிற்பதை கண்டு….” வாடி செல்லம் வாங்க…..” என அவனை அணைத்து கொண்டாள்….

பிறகு தான் தன் சுற்றுப்புறம் உணர்ந்தாள் …சுற்றிலும் இருட்டாக இருந்தது….யாரும் அங்கு இல்லை….எல்லாரும் வந்து விட்டார்களா ….என எழுந்து விளக்கைப் போட போக…..அனைத்து விளக்குகளும் எறிய ஆரம்பித்தது….. அங்கு அனைத்து உறவுகளும் நின்றார்கள்….. மஹாவை அணைத்து கொண்டு விஷ்ணு ” இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பொண்டாட்டி….” என கூற….

பிறகுதான் அவளுக்கு அது நினைவில் வந்தது…. ” தேங்க்ஸ் வினு….” என அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்…

” நாங்க எல்லாம் இங்கே தான் இருக்கோம்….” என அனிதா கூறி கொண்டே அவளிடம் வர….அவனிடம் இருந்து விலகி நின்றாள்….

அனைவரும் அவர்கள் வாழ்த்தை அவளுக்கு கூற….அவர்கள் அன்பில் திக்குமுக்காடி போனாள்…..

விஷ்ணு குடும்பம் தவிர அரவிந்த் பூஜா,தாத்தா பாட்டி கோமதி கிருஷ்ணா வர்ஷா அனைவரும் அங்கு இருந்தார்கள்.  …

மறுநாள் அனைவரும் கோவிலுக்கு சென்று வந்தனர்…. பேரூர் சென்று விட்டு ஹோட்டலுக்கு சென்றார்கள் ….காரில் செல்ல செல்ல மஹா தலை சுற்றுகிறது என கூற….காரின் ஏசியை அணைத்து விட்டு கதவை திறந்து விட்டான்…..அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க….அதை குடித்ததும் அவள் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து வாந்தி எடுக்க…..அவளுக்கு அலைச்சல் ஒத்துக்கொள்ளவில்லை என அவளும் விஷ்ணுவும் வீட்டிற்கே செல்ல….மற்றவர்கள் அவர்களும் வீட்டிற்கு வந்து விட்டார்கள்…..

வாந்தி ஓயாமல் வரவும் அவளை செக் செய்த விஷ்ணு அதை உறுதி செய்து கொள்ள டாக்டரை வர செய்தான் விஷ்ணு…..அவள் அருகிலேயே அமர்ந்து இருந்தான்…. டாக்டர் வரவும் அவரும் அவளை பரிசோதனை செய்து விட்டு அவனிடம்….” கங்கிராட்ஸ் டாக்டர்….” என கூற….அவன் அவரிடம் நன்றி சொல்லி விட்டு தன் மனைவியை ஆசையாக பார்த்தான்….

டாக்டர் அனைவரிடமும் விஷயத்தை சொல்ல அடுத்த நொடி மொத்த குடும்பமும் அவர்கள் அறையில் நின்றது…..பூரணி செல்வி இருவரும் அவளை உச்சி முகர்ந்தனர்….

அவளின் பிறந்தநாள் அன்றே அவள் கருவுற்றிருக்கும் விஷயம் அறிந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்…..இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி விட்டு வெளியில் சென்றார்கள்….

அனைவரும் சென்றதும் விஷ்ணு மஹா மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்…..அவளின் வயிற்றில் இதழ் பதித்து….அவளிடம் ” ரொம்ப சந்தோஷம் மஹி…வாழ்த்துக்கள் மஹி…..நம்ம குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்கு….” என அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்….

மஹா மகிழ்ச்சியுடன் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்…..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Kalyani Nathan

ஆசிரியையாக இருந்த நான் இப்போது எழுத்தாளராக மாறியுள்ளேன்.....

Story MakerContent AuthorUp/Down VoterYears Of Membership

நெஞ்சாங்குழி ஏங்குதடி 28

நெஞ்சாங்குழி ஏங்குதடி 30