in , , , ,

வைரத்தாரகை 9

அத்தியாயம்-9:

கேசியின் அன்னை கண்கள் கலங்குவதை வைஜெயந்தியும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். 

“ரொம்ப நாள் ஆச்சா சிரிச்சு. அதான் பேபிமா.. கண்ணே கலங்கிடுச்சு” ஏன் கண்கள் கலங்குகின்றன என அவள் கேட்கும் முன்பே அவர் சமாளிக்கும் விதமாக பேசிவிட, வைஜெயந்தியால் ஏனோ அதை நம்ப முடியவில்லை. 

ஆனால் இந்த “பேபிமா” என்ற அழைப்பு எங்கோ கேட்ட பரிட்சயக் குரலாக இருக்க, சட்டென்று அவளது தோளில் தட்டினான் கேசி. 

“ஷ்.. அம்மா.. ” தனது தோளை தடவியவள், 

“எதுக்குடா என்னை அடிச்ச டெவில்” என்றவள் தன்னயறியாது அவனது கையை முறுக்கியிருந்தாள். ஆனால் அது அசைய கூட இல்லாது அப்படியே இருக்க, உணர்ந்து நொடியில் விட்டாலும், அவனது பரவச பாவனை ஏனோ அவளுக்கு சரியாக படவில்லை. 

அவனது கையை விடுவித்தவள் வேகமாக திரும்பி கொள்ள, 

“எடுத்துக்கோங்க” சாக்லேட் ஷேக் குவளைகளை கையில் ஏந்தி அவளிடம் நீட்டிய வண்ணம், மராட்டியில் உபசரித்து கொண்டிருந்தாள் அமோலி.

“எடுத்துக்கோம்மா” ஷிவானி உபசரிக்க, தனது கையில் ஒன்றை எடுத்திருந்தாள் வைஜெயந்தி.

“ஆன்டி இந்த ஷேக் நல்லா சூடா இருக்கான்னு அவங்ககிட்ட கேட்டு சொல்லுங்க?” என, ஷிவானியும் அமோலியிடம் கேட்க திரும்ப, தனக்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமில்லாதது போல், தனது அலைபேசியில் வந்த தகவல் ஒன்றை பார்த்து கொண்டிருந்தான் கேசி.

அன்று இந்த ஷேக்கை குடிக்க விடாது அவன் படுத்திய நாடு நினைவுக்கு வர, தனது கையில் ஆவி பறந்து கொண்டிருந்த ஷேக்கை அவன்மேல் கொட்ட போக, நொடிக்கும் குறைவான நேரத்தில் அதை அவள் புறம் தட்டிவிட, வைஜெயந்தியின் காலில் கொட்டியது ஷேக்.

அநிச்சையாக அவள் காலை சற்று விலக்கியிருந்தாலும், ஒரு ஓரத்தில் சூடான பானம் கொப்பளிக்க செய்து விட்டது. 

“ஆ.. எரியுதே” வைஜெயந்தி அலற,

மகனின் செயலில் ஷிவானி அதிர்ந்தவர், ” நீலா என்ன இது? ” பதறிக்கொண்டு அவளது காலை பிடிக்க போக, அவள் காலை தூக்கி தனது மடியில் வைத்திருந்தான் அவன்.

“அச்சோ பேபிமா என்னடா இது? கொப்புளமா ஆகிடுச்சே? முதல்லயே நீ கேட்ட சூடா இருக்கான்னு? நான் கொஞ்சம் நிதானமாக உன்கையில் கொடுத்துருக்கலாம்” என்றவர் அவளது காயத்தில் ஊதியவர், அமோலியை ஐஸ்கட்டிகளை எடுத்து வருமாறு பணிக்க, சிட்டாக பறந்தாள் அவள்.

“ம்மா..ரொம்ப இரக்கப்படாதிங்க. இவ என் கால்ல ஊத்த பார்த்தா நான் திருப்பி விட்டுட்டேன்” அன்னையின் முறைப்பிற்கு அவனது பதில் வர, 

“அட.. இந்த டெவில் உங்களுக்கு மட்டும் பதில் சொல்றான் ஆன்டி” வலியையும் மீறி வைஜெயந்தி தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்த, 

“ஏன்மா நீ கேட்டா பதில் சொல்ல மாட்டானா?” அவளிடம் பேச்சு கொடுத்து கொண்டே அமோலியிடம் பனிக்கட்டிகளை காலில் வைக்குமாறு சைகை செய்ய,

“சுத்த ரோக் ஆன்ட்டி இவன்.அதும் இங்க பாருங்க.. ” தனது நெற்றியை சுட்டியவள், 

“இது இவன் பண்ணதுதான்” என்றவள், ஷிவானியின் கண்களில் ஆதிசிவனின் மூன்றாம் கண்ணை பார்க்க ஆசை கொள்ள, ஆனால் அவரோ அவளது புகாரில் சிரிக்க ஆரம்பித்தார். 

அதில் கோபமுற்றவள் வேகமாக எழுந்து காலை ஊன்ற, தனது காலை தானே இங்கு பிசகாக ஊன்றி மீண்டும் ஒரு அலறிட, அவளை பிடித்து தன்னருகே அமர்த்தி கொண்டார் ஷிவானி.

‘ என்னடா இது?! ஆஃபிஸே என்ன பார்த்தா நடுங்கி நிற்கும். என்னை இவங்க காமெடி பீஸா ஆக்குறாங்களே’ நொந்து போய் அவள் அமர, 

“ம்மா.. இன்னும் இவளை ஏன் பக்கத்துல உட்கார வச்சுருக்கிங்க? விடுங்க.. போற வழில இவளை இவங்க வீட்டுல தூக்கி போட்டுட்டு போறேன்” கேசியின் வார்த்தைகளில்,

“ரூத்லெஸ் டெவில்.. ” என்று ஆரம்பித்து அனைத்து ஆங்கில கெட்ட வார்த்தைகளில் அவனை அர்ச்சிக்க ஆரம்பிக்க,

“அச்சோ போதும் வைஜெயந்தி” காதுகளை மூடிக்கொண்டார் ஷிவானி.

“நீ ரிஷிதாவை வரச்சொல்லுடா? வலியை சரிபண்ணிட்டு தான் அனுப்புவேன்” அன்னையின் பேச்சுக்கு மறுபேச்சு பேசவில்லை அவன். 

அலைபேசியை எடுத்துக்கொண்டு ரிஷிதாவை அழைக்க போக, தனது கைபேசி எடுத்து தனது தந்தைக்கு அழைத்தாள். 

எதிர்புறம் அழைப்பும் ஏற்கப்பட, “டாட்.. டாட்..நீங்க வீட்டுக்கு வந்துட்டிங்களா? ஆர் யூ ஓகே? ” பதறிய அவள் குரலில் எரிச்சலாக வந்தது கேசிக்கு. 

“வைஜெயந்தி நான் சொன்னதை மீறி நீ அந்த கேசி கூடவா கிளம்பி போன?” அவளது கேள்வியை கவனிக்காது, வேலு கோபமாக கேட்க,

“நான் இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடுவேன் டாட். உங்களை சேவ் பண்ணதான் நான் இங்க வந்தேன்” மகளின் தொய்ந்து போன குரலில் என்ன உணர்ந்தாரோ, 

“சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு குட்டிமா. மீட்டிங் கேன்சல் ஆகிடுச்சு. நாளைக்கு நீ வந்து தான் எல்லாத்தையும் ப்ரொசீட் பண்ணனுங்கற ஆர்டரும் கையில் கொடுத்து அனுப்பியிருக்காங்க” இந்த தகவல் புதிது வைஜெயந்திக்கு.

அவள் கேசியை பார்க்க, அவன் அவளை தான் பார்த்து கொண்டு நின்றிருந்தான்.

“ஓ..ஓகே டாட்..‌யூ டேக் கேர்” என்றவள் வைக்கப்போக, அவளது அலைபேசியை பிடுங்கி தனது பாக்கெட்டில் கேசி வைத்து கொள்ள, 

“யூ..யூ..” என்றவள் எழுந்து அவனை துரத்த வந்தாள். தன்னைப்போல் அவள் கால்களை அழுத்தி நடந்திருக்க, கால் சரியாகி இருந்தது.

“கால் சரியாகிப்போச்சு பார்த்திங்களா அம்மா?” ஷிவானியும் அவளை தான் ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தார்.

“இந்த ட்ரிக் அந்த லூசு டாக்டர் சொன்னதா?” வைஜெயந்தி ரிஷிதாவை பற்றி பொரிந்து தள்ள, 

“ரிஷிதாவை உனக்கு தெரியுமா பேபிமா?” ஷிவானி வைஜெயந்தியிடம் கேள்வி கேட்டு கொண்டே, கேசியின் பாக்கெட்டில் இருந்த அவளது அலைபேசியை அவளிடம் கொடுத்திருந்தார்.

“இருக்கட்டும் ஆன்ட்டி. நான் வேற மொபைல் மாத்திடலான்னு இருக்கேன். யா.. ஐ நோ தட் சீப் கேர்ள்” என்றவளின் விமர்சனத்தை ஆட்சேபனையாக பார்த்தார் ஷிவானி.

“எளிமை அவ்வளவு அசிங்கமானதா பேபிமா?” அவர் கேட்டும் விட, அழுத்தம் சுமந்த அக்குரல் வைஜெயந்தியின் குரலை கட்டிப் போட்டது.

“இ..இல்லை ஆன்ட்டி” சற்றே தடுமாறியவள், 

“அதுக்காக என் கருத்தை நான் சொல்லாம இருக்கவும் முடியாது” என்றும் பேச, அவளது விளக்கத்தில் மறைந்த புன்னகை மீண்டிருந்தது ஷிவானியின் முகத்தில்.

“நீ சாப்பிட்டுட்டு தான் கிளம்பனும்” ஷிவானி அவளை டைனிங் ஹாலுக்கு அழைக்க,

“இந்த டெவில் கூட இல்லைன்னா நான் சாப்பிடறேன் ஆன்ட்டி” ஏனோ அத்தனை சீக்கிரம் யாருடனும் இணங்கிப்போவதில் விருப்பமில்லாதவளுக்கு ஷிவானியை பிடித்திருக்க, நிபந்தனையுடன் அவள் உணவுண்ண சம்மதித்ததில்,

“நீலா இன்னைக்கு வைஜெயந்திக்கு மட்டுந்தான் கவனிப்பு” ஷிவானி மகனை பார்க்க, கைகளை மேலே தூக்கி முறித்தவாறு,

“ரொம்ப நிம்மதி” ஹாலிலேயே அமர்ந்து விட்டான் அவன்.

“ஷஷி.. இந்த தடவை மட்டும் நம்ம ஷிப்பிங்க்ல இவ்வளவு தாமதம் பண்ண சொல்றிங்களே?” தலைமை சி.இ.ஓ கேள்வி எழுப்ப,

“அண்ணன் ஆர்டர் தான் சார். வேணுன்னா நீங்க அவர்கிட்ட ஒரு தடவை க்ராஸ் செக் பண்ணிடுங்களே” தெளிவாக வந்த பதிலில் முழித்தார் அவர். 

“நோ..நோ..சார்.. நீங்களும் கேசி சாரும் வேற வேறயா என்ன? யூ கேன் ப்ரொசீட்” என்றுவிட்டு வேகமாக அவர் வெளியில் சென்று விட, அவருக்கு பதிலளித்தவனோ அந்த சி.இ.ஓவை நீக்குவதற்கான கூட்ட அறிவிப்பை கேசிக்கு முதல் வேலையாக மெயில் செய்திருந்தான்.

“வாவ்..இவ்வளவு ஹேன்ட்ஸமா?” உடன் பணிபுரியும் ட்யூட்டி டாக்டர் தோழி, வெளிப்படையாக அவனது அழகை பாராட்ட, கணினியை மூடிவிட்டு எழுந்தாள் ரிஷிதா. 

“என்னடி ஆச்சு?? ஏன் இவ்வளவு டல்லா இருக்க? அந்த ஹான்ட்ஸம் யாரு?” என்று அவள் கேட்க, மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்தது ரிஷிதாவிடம்.

“நானும் பார்த்துட்டுருக்கேன்.. நீ இப்ப சொல்ல போறியா இல்லையா?” அவளை பிடித்து உலுக்க,

“தி கிரேட் நீலகேசியோட தம்பி.. மிஸ்டர்.ஷஷாங்க். போதுமா?” அவளை தள்ளி விட்டு உள்ளே சென்று போர்வையை போர்த்தி ரிஷிதாவை விசித்திரமாக பார்த்து கொண்டிருந்தாள் அவளது தோழி. 

“நல்ல சாப்பாடு ஆன்ட்டி.ரொம்ப நாள் அப்பறம் என் டயட்டை கூட விட்டுட்டு சாப்பிட்டேன்” என்றவள்,

“நான் கிளம்பறேன் ஆன்ட்டி” என்று விடைபற்றுக்கொள்ள திரும்ப, 

“நல்லபடியா போயிட்டு வாம்மா” என்றவர் அமோலியின் கையிலிருந்த வெள்ளித்தட்டை அவள் கைகளில் கொடுக்க,

“நோ ஆன்ட்டி எனக்கு கிஃப்டெல்லாம் வேண்டாம்” அவள் மறுக்க,

“இது ரொம்ப முக்கியமான புடவை பேபிமா. இதோட முக்கியத்துவம் உனக்கு பின்னால் புரியும்” என்றவர் ஜார்ஜை அழைத்து அவன் கைகளில் கொடுத்தவர், 

“இதை வைஜெயந்தியின் வீட்டில் ஒப்படைப்பது உன் பொறுப்பு” என, அதை வாங்கி கொண்டு புறப்பட்டான் அவன்.

“கேசி பால்கனில இருக்கான். நீ அவனோட கிளம்பும்மா” மகனையும் அவர் ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே செல்ல, பால்கனியை நோக்கி நடந்தாள் அவள்.

இயற்கையின் குளுமையுடன் கிட்டதட்ட பெரிய தோட்ட வீட்டை போல் இருந்தது அவனது வீடு.

சில்லென்ற காற்று முகத்தில் மோத, இயற்கையின் கொடையுடன் காட்சியளித்த அவ்விடம் எதையோ ஞாபகப்படுத்தினாலும், அவனை சீண்டும் விதமாக,

“ஏன் கேசி நைட் நல்லா அசந்து தூங்குவியா?” வைஜெயந்தியின் கேள்விக்கு அவன் முகத்தில் ஏன் இந்த கேள்வி? என்ற புருவச்சுருக்கல்கல் மட்டுமே.. 

“இல்லை ஒழுங்கா தூங்கலைன்னா உன்னை மாதிரி அரை சைக்கோவா தான் திரிவாங்களாம்” அவளது விளக்கத்தை ரசித்து சிரித்தவன்,

“இன்ட்ரெஸ்டிங்” என, அவனது இன்ட்ரெஸ்டிங் வழக்கம் போல் எச்சரிக்கை மணியடிக்க, வேகமாக சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு பகீரென்றது.ஏனென்றால் பேசிக்கொண்டே,அவள் வளைவின் விளிம்பில் வந்து நின்றிருந்தாள் அவள். 

அவளை நெருங்கி நின்றவன், “ஏன் வைரா இங்கிருந்து தள்ளிவிட்டா எலும்பு கூட மிஞ்சாது! சுக்கல் சுக்கலா ஆகிடுன்னு இதை கட்டின என்ஜினியர் சவால் விட்டான். அதை இப்போ பரிசோதிச்சு பார்க்கலாமா? இல்லை விழாம நீ என்னை இறுக்க பிடிச்சுக்கிறியா?” இரண்டு தேர்வுளுடன் அவளை நெருங்கி நிற்க,

‘இவனை நான் கட்டி தழுவுவதா?!’ ஆத்திரத்துடன் முறைத்தாள் அவள்.

“அப்போ விழுந்தா தான் சரியா இருக்கும்?” அவளை தள்ள தோளில் கை வைத்தவன், அவன் கீழே குதித்திருந்தான்.

நொடிக்குள் நடந்து விட்ட இந்நிகழ்வில் அன்று கண்ட கனவும் நினைவுக்கு வர, 

“கேசிஈஈஈ..” என்று அலறியவள், வேகமாக குனிந்து பார்க்க, கீழே இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் வசதியாக நின்று அவளை‌பார்த்து சிரித்து கொண்டிருந்தான் கேசி.

“யூ.. டெவில்” அவள் கண்கள் கலங்கி சிரிப்புடன் கத்த,

“எஸ்..மை டியர் டயன்” அங்கிருந்தே தவ்வி குதித்து அவள் முன் இறங்க, மாற்றி மாற்றி அவனது தோள்களில் அடித்தவளின் அடியை சுகமாக வாங்கிக்கொண்டிருந்த மகனை‌ பார்த்து விட்டு ஷிவானி சந்தோஷத்துடன் வீட்டினுள் செல்ல, வைர நாரிகையை தனது நீலத்தால் வளைத்து உருக்கும் பணியை செவ்வனே ஆரம்பித்திருந்தான் நீலமகன்.

தாரகை தடமிடுவாள்🖤🖤🖤…..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 9 சராசரி: 4.7]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ruthivenkat

 

About Author:

 

                  வாசகர்களுக்கு வணக்கம். நான் ருதி வெங்கட். இது எனது புனைப்பெயர். உண்மையான பெயர் உதயா வெங்கட்ரமேஷ். முதுகலை பட்டதாரி, இல்லத்தரசி. கதை படிப்பது மிகவும் பிடித்த விஷயம். அதுவே கதை எழுத ஊக்கசக்தியாக அமைந்து விட்டது. போட்டிக்கதையின் மூலம் எழுத்துப்பயணமும் தொடங்கியது. இதுவரை நான்கு கதைகள் எழுதி முடித்துள்ளேன். முதல்கதை புத்தகமாக  AD பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. முகநூலில் ஓரளவு வாசகர்களுக்கு முகமறிந்த நபர்தான் . எனது கதைகளை தொடர்ந்து படிக்க Ruthivenkat (ருதிவெங்கட்)என்கிற எனது பெயரை FOLLOW செய்யுங்கள். கதைகளை பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்துவிடும்.

               வாசகர்களின் ஆதரவிலும், உற்சாகமூட்டலிலும்தான் கடந்த ஒருவருடத்தில் நான்கு கதைகளை வேகமாக முடிக்க முடிந்தது. உங்களது ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள். 

 

        நன்றி

Story MakerContent AuthorYears Of Membership

9 – 🎶மூங்கில் குழலான மாயமென்ன

அன்பின் அரசனே…10