in , ,

இன்று அன்றி(ல்)லை 29

மதிய உணவிற்கு முன், ஜூனியர் பாலா திருமண வரவேற்பு நடக்கும் விடுதிக்கு வந்து சேர்ந்து விட்டாள். ஆனால் தனது கண்ணாமூச்சியை கைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள். சிவாவின் கண்களில் படவே இல்லை.  அவனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதில் ரொம்பவுமே தெளிவாக இருந்தாள்.

ஆனால் அவள் கொடுக்க இருக்கும் அதிர்ச்சி சிவாவுக்கு மட்டுமல்ல சிவாவின் பெற்றோருக்கும், தனது பெற்றோருக்கும் சேர்த்துதான் தான் என்பது இன்னும் அவளுக்கு தெரியவில்லை.

 மாலை ஆறரை மணி சுமாருக்கு மணமக்கள் இருவரும் மேடைக்கு வர, ஆடல் பாடல் என்று குதூகலமாக வரவேற்பு நிகழ்ச்சி ஆரம்பித்தது. வாணி ரஞ்சன் இருவருமே ஒருவரை ஒருவர் தன்னை மறந்த நிலையில் போடும் பாடல்களுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தார்கள். சந்தோஷம் குதூகலம் இரண்டையும் அவர்களால் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அப்பட்டமான அவர்களது காதல் பார்வை, “நீ என்பது நானாக, நான் என்பது நீயாக “அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை ஊரறிய பறைசாற்றியது.

 ரஞ்சன் மற்றும் வாணியின் மிக நெருங்கிய தோழர் தோழிகளின் அலப்பரை களும்கூட அதிகம்தான்.  எல்லோருக்குமே திருமண நிகழ்வில் பங்கு கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல் மணமக்களை சந்தோஷமாகவே  வாழ்த்த வந்திருந்தார்கள்.  திருமணம் என்பது ஒரு விதத்தில் குடும்பங்கள் இணையும் குடும்ப விழா. ஆனாலும்,வாணியை பற்றி அறிந்த அவளது தோழிகளுக்கும் அவளது திருமணம் காதல் திருமணத்தில் சேர்த்திதான் என்பது நம்ப முடியாததாக இருந்தது. அவர்களது கேள்விக்கணைகளை நாணத்துடன் எதிர்கொண்டாள் வாணி. அவளது நாணம் ரஞ்சனுக்கு கர்வம். இந்த நாணத்திற்கு சொந்தக்காரன் அவனல்லவா?

 வாணி இவ்வாறு தனது சந்தோஷங்களை வெளியுலகுக்கு அறியுமாறு காண்பித்துக் கொள்வாள் என்பது அவள் குடும்ப நபர்களுக்கே பெரிய ஆச்சரியம்! வாணி ரஞ்சன் இருவருக்குள்ளும் ஆன ரசாயனம் இன்று நேற்றல்ல அவர்களுடையது காதல் என்று தண்டோரா போட்டது. ரஞ்சனின் திருமண நிகழ்வு ரஞ்சனின் பெற்றோருக்கு பெரிய மகிழ்ச்சி. வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் ஏன் இவ்வளவு சுருக்கமான  விரைவு திருமணம் என்று கேட்டதற்கு ரஞ்சனுக்கு சீக்கிரம் திருமணம்  செய்தாக வேண்டும் எனும் எண்ணம் தான் காரணம் அதனால் அதிகம் யாருக்கும்

அழைக்கவில்லை. வெறும் மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தோம் என்ற பதில்  அவர்கள் வாயடைக்க போதுமானதாக இருந்தது.  வாணி வீட்டிலும் இதே தான். இதனால் வம்புஅளக்கவேண்டும் என்ற நோக்கத்தில் வந்த அவர்களுடைய எண்ணம் அந்த இடத்திலேயே தடைபட்டது.

விருந்தினர் வருகை அதிகரித்துக் கொண்டே செல்ல ஆனந்தனின் மனம் முழுவதும் ரம்யா இன்னும் வரவில்லையே என்று அதிலேயே உழன்று கொண்டிருந்தது. அவன் பார்வை நொடிக்கு ஒரு முறை ரம்யா ராகவியை அழைத்துக் கொண்டு  வருகிறாளா என்று அளவிட்டுகொண்டிருந்தது.  அவனால் வாயிலே விட்டு தன் விழிகளை அகற்ற முடியவில்லை.  நேரம் ஆக ஆக அவன் தவிப்பு கூடியதே தவிர குறையவில்லை. உடன் பணிபுரியும் மற்ற மருத்துவர்களும், சில மருத்துவ மனை ஊழியர்களும், உடன் படித்த நண்பர்களும் வாணியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்ததால் அவனால் தன் உணர்ச்சிகளை எளிதாக வெளியே  காட்ட முடியவில்லை. ஆனாலும் தவிப்பு தவிப்பு தவிப்பு…

 அவனுக்கு இன்னும் தெரியவில்லை ரம்யாவை அவ்வளவு எளிதாக மனமாற்றத்திற்கு உட்படுத்த முடியாது என்று. அவளை திருமண வரவேற்புக்கு வரவழைக்கவே அவன் பிரயத்தனம் செய்தும் பலிக்காத நிலையில் அவன் வார்த்தைகளை கேட்டு அவனை திருமணம் செய்து கொள்வாள் ரம்யா  என்பது நிச்சயம் உர்ஜிதம் செய்ய உரியது அல்ல.

அனு அழைத்ததின் பேரில் அந்தப்  பக்கத்துவீட்டு பெண்மணியும் தனது மகனுடன் மட்டும் வந்திருந்தார்.  மகளை அழைத்து வரவில்லையே என்ற அனுவின் கேள்விக்கு சிரித்தவாறே,’ இல்லை அனு…  என் மருமகளுக்கு துணையிருக்க ஆள் வேண்டும். பேத்தியை கவனிக்கவும் வேண்டும். அதனால் என் மகளை அழைத்து வரவில்லை. அவள் அண்ணிக்கு துணை இருப்பதாக கூறி வீட்டிலேயே தங்கி விட்டாள் என்று வெகு சாதாரணமாக கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். அவனுக்கும் கூட ஏதோ ஒரு வகையில் இது ஏமாற்றம் தான். ஆனால் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் அதற்குமேல் கண்டுகொள்ள முடியாதவளாக அந்தப் பேச்சை விடுத்து வரவேற்பு சம்மந்தமான மற்றும் நிகழ்வுகளில் தன்னை செலுத்திக் கொண்டாள் அனு.

 ஜூனியர் பாலாவை வரவேற்பில் ரஞ்சன் அருகில் பார்க்க பார்க்க ஏதோ ஒன்று புரிவது போல் இருந்தது ராமனுக்கும் பாலாவுக்கும்.  புரிந்த விஷயம் அவர்கள் இருவருக்கும் அவ்வளவு விரும்பக் கூடியதாக இல்லை.  அதை நிரூபிப்பது போல  ரஞ்சனின் அம்மா ஜூனியர் பாலாவை அனு பிரசாத் ராமன் பாலா அனைவரிடமும் ரகுவின் மகள் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால் ஜூனியர்பாலாவை பார்த்த நொடி சிவாவின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.  அவள் ரஞ்சனின் மாமா பெண் என்று அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அவன் மனம் பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.  அவளுடனான திருமணம் கைகூடி விடும் என்று அவன் மனம் ஆயிரம் கணக்குகளைப் போட்டு சந்தோஷப்பட்டது. பெற்றோரின் எண்ணம் வேறுவிதமாக மாறிவிட்டது உனக்கு இன்னும் புரியவில்லை.

வரவேற்பு நிகழ்ச்சி முடியவே இரவு பத்து மணிக்கு மேலாகி விட்டது. வந்தோரை எல்லாம் கிளம்பிச் சென்றபின் வீட்டு நபர்கள் மட்டும் உணவு அருந்த சென்றனர்.

ரகுவும் ஜானகியும் மகளுடன் நேரம் செலவிட விரும்பி இரவே வீட்டிற்கு அழைத்துக்கொண்டு கிளம்பிச் சென்று விட்டார்கள். மற்றவர்களெல்லாம் விடுதியிலேயே தங்கி கொண்டார்கள்.

 பாலா ஒருவாறு சிவா வுடனான தனது காதலை பற்றி இந்த முறை பெற்றோரிடம் பேசி விடவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தாள். மறு நாள் எல்லோரும் கிளம்பி வருவதற்கு தாமதமாகும்  என்று ரஞ்சனியின் அப்பா போன் செய்து சொல்லிவிட்டார்.  ஜூனியர் பாலாவிற்கு இதற்குமேல் தாமதிக்க விருப்பமில்லை. ஒருவாறு தைரியத்தை கூட்டிக்கொண்டு எச்சில் முழுங்கி,

 ‘அப்பா, நான் வந்து அங்க நீங்க சிவாவை பாத்திருப்பீங்க, அவரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். நாங்க ரெண்டு பேரும் ஒன்னா படிச்சு இருக்கும் பெங்களூர்ல. அப்பவே பழக்கமுண்டு ரெண்டு பேருக்கும். ஏறத்தாழ ரெண்டு வருஷத்துக்கு காதல்பா…’ என்று ரகுவை மட்டுமே பார்த்துக்கொண்டு மொத்த விஷயங்களையும் சொல்லி முடித்தாள்.

 பேசி முடிக்கும் வரை அம்மா ஜானகியை கண்கொண்டு பார்க்கும் அவளுக்கு தைரியம் வரவில்லை. அப்போ உருமாறுகிறது தன்மை என்றால் அம்மா பயங்கர  ஸ்ட்ரிக்ட் பேர்வழி. காதல் கத்தரிக்காய் என்பதெல்லாம் அவளுக்கு சுத்தமாக பிடிக்காது.

பாலாவின் வார்த்தைகளைக் கேட்டதாகவும் ஜானகிக்கும் உணர்ச்சிகளை பேரலை தான்.

ஜானகி வார்த்தைகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மிகவும் பிரயத்தனப்பட்டு விழுங்கிகொண்டாள்.

 ரகுவுக்கு வார்த்தைகளால் உணர்ச்சிகளை வடித்து சொல்ல முடியவில்லை. ஜூனியர் பாலா ஏற்கனவே சிவாவின் பெற்றோரை பார்த்து பேசியதையும் அவர்கள் உங்கள் பெற்றோரும் ஒப்புக் கொண்டால் ஒரு வருடம் கழித்து திருமணம் என்ற நிர்பந்தம் சொன்னதையும் சொன்ன விலைக்கு விற்றுவிட்டு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்ற பதைபதைப்பு கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டது. எப்படியும் ரஞ்சனின் மாமியார் வீட்டு உறவினர் தான் சிவாவின் பெற்றோர் என்ற நிலையில் மறுப்பதற்கு ஏதும் வழியில்லை என்பது அவளது எண்ணம். மேம்போக்காகப் பார்த்தால் அது நிஜம்தான்.

 ஆனால் உள்ளே வேறு பல விஷயங்களும் இருக்கிறது இது ஜூனியர் பாலாவுக்கு சிவாவுக்கோ தெரியாதே…

ஒருவர் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு சிவா பற்றி மேலும் விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள் ஜூனியர் பாலாவின் பெற்றோர்.

தங்கள் மகள் தான் ஜூனியர் பாலா என்று தெரிந்த பின்னரும் பாலாவும் ராமனும் சிவாவுக்கு ஜூனியர் பாலாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்வார்களா என்பது சந்தேகமாகவே இருந்தது ரகுவை பொருத்தவரை. அப்படியே அவர்கள் ஒப்புக் கொண்டாலும் பாலாவை எவ்வாறு முகம் நோக்குவது என்று பதைபதைப்பாகவே இருந்தது.

கடந்த காலத்தை கண்டிப்பாக பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. அதற்காக அவர்களது ஆசையை தூக்கி எறியவும் மனதில்லை.

ஒருவரு தங்களைத் ஏற்றுக்கொண்டவர்கள் அடுத்த முறை வரும் பொழுது கண்டிப்பாக ராமன் வீடு சென்று மேற்கொண்ட பேசுவதாக ஜூனியர் பாலாவிடம் சொல்லி தற்போதைக்கு பிரச்சனையை ஒத்தி போட்டார்கள். வரவேற்பு முடிந்து மணமக்கள் வரும் நேரம் சொந்த விஷயம் பேசி உணர்ச்சிக் கொந்தளிப்பில் சிக்க யாருக்கும் அங்கு இஷ்டம் இல்லை.  நிலையை புரிந்து கொண்ட பாலாவும்  ‘நான் உள்ளே போய் ஆரத்தி ரெடி பண்ணுறேன்’ என்று அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். ரகு -ஜானகி இருவரும் பெருமூச்சு எடுத்து சமன் செய்து கொண்டனர்.  காதல் என்று சொல்லிக்கொண்டு வந்து நிற்கும் வயது பெண்ணிடம் சமர் செய்ய பெற்றோருக்கும் இஷ்டம் இல்லை.

பாலாவின் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு, முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு மணமக்களை வரவேற்க தயாராகி விட்டனர் ரகு குடும்பம்.

ஒரு குடும்பத்தில் நடந்த திருமணம் மட்டும் இன்னோர் ஜோடியின் காதலை அங்கீகரிக்க போதுமா?

பாலா – ரகு விஷயம் அவர்கள் பிள்ளைகளுக்கு ரகசியம். நடந்தவை நமக்கு தெரியுமே?

மீண்டும் சந்திப்போம்

தோழி சுகீ 

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Suba Geetha

Story MakerContent AuthorYears Of Membership

அன்பின் அரசனே…6

இழப்பேனென்று நினையாதே நிழலுறவே இரண்டாம் பாகம்-11