in

அன்பின் அரசனே…6

அத்தியாயம்…….. 6

சித்து இறந்த செய்தியை கேட்ட மதி அதிர்ச்சியில், சிலையாக நிற்க, மதியை பார்த்த சிவா… மதிம்மா என்னாச்சு..? ஏன் இப்படி இருக்க..? போன்ல  யார் பேசினது..?  என்று கேட்க, சிவாவின் கேள்வி உறைக்காமல்,  அசையாமல் இருந்த மதியை உலுக்கியவன்.. மதி..! உன்னைத்தான் கேட்கிறேன்.. யார் போன்ல..? என்று அழுத்தமாக கேட்க..

அண்ணா.. அவர்.. அவர்.. அவர் சி.. என்று பேச்சு வராமல் தவிக்க.. சிவா மதியிடமிருந்து போனை வாங்கி பேச.. அந்த பக்கம் இணைப்பு  துண்டிக்க பட்டது.. மதீ உன்னை தான் கேட்கிறேன் போன்ல யாரு..? நீ ஏன் இப்படி பேயறைஞ்ச மாதிரி நிக்கிற..? சிவா சற்று அழுத்தமாக கேட்க.. அதில்  . சுயம் அடைந்தவள்.

அண்ணா.. அந்த சித்து.. ஆக்ஸிடண்ட்ல இறந்துட்டாங்களாம் என்று மதி மிக அழுகையோடு சொல்ல. வாட்..!!? சித்து இறந்துட்டாரா..? சிவா அதிர்ச்சியோடு கேட்டு கொண்டிருக்கும் போதே,, சிவாவின் அலைபேசி சத்தம் எழுப்பியது..அதை காதில் வைத்த சிவா, பேசும்முன் ஹலோ சிவா நான் சித்து பேசறேன்.. இது என் இன்னொரு நம்பர்.. என்றுவிட்டு  ரெண்டுபேரும் சென்னைக்கு போய்ட்டிங்களா..ன்னு கேட்க தான் கால் செஞ்சேன்.. என்று சொல்ல

சிவா குழப்பமானான்.. சித்து ஆர் யூ ஓகே..? உனக்கு ஒண்ணும் இல்லை தான..? குழப்பமாக கேட்க.. ம்.. எனக்கென்ன நான் நல்லா தான் இருகேன்.. என்னாச்சு..? ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு அப்பூக்கு எதாவது.. அவன் படபடப்பாக கேட்க..

ஹேய் ரிலாக்ஸ்.. மதிக்கு ஒண்ணும் இல்லை.. நீ ஏதோ ஆக்சிடெண்ட்ல இறந்துட்டதாக அவளுக்கு ராங்க் இன்ஃபர்மேசன் வந்திருருக்கு.. அதுல அவள் அதிர்ச்சியாகிட்டா.. நீ கொஞ்சம் வீடியோ கால் வந்து பேசறியா..? மதி கொஞ்சம் சரி ஆகிருவா.. என்று சொல்ல, சித்து மறுத்துவிட்டான்.. நான் நல்லா இருக்கேன்.. உன் தங்கச்சிக்கு தான் என்னை பிடிக்கலை.. இனி நான் அவ கூட பேசமாட்டேன்.. மதியை இனி நான் தொந்திரவு செய்ய மாட்டேன்..

நீங்க நல்லபடியாக ஊர் வந்துட்டிங்களான்னு கேட்க தான் உனக்கு கால் செஞ்சேன்.. இனி உன் தங்கைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவளை பத்திரமாக பார்த்துக்க.. என்றுவிட்டு போனை வைக்க போன சித்து.. உன் தங்கச்சிக்கு வந்த அந்த ராங் நம்பரை எனக்கு அனுப்பு.. என்றுவிட்டு போனை அணைத்தான்.. சித்து பேசியதில் சிவாவிற்கு அவன் மேல் கோபம் வந்தது..

அவ்வளவு வசனம் பேசினான்.. கடைசியில மதி சம்மத்திக்கலேன்னு.. எந்த முயறிசும் செய்யாமல் அப்படியே விட்டுட்டான்.. இது தான் இவன் காதலோட..அளவா..? சித்துவை மனதில் வறுத்தெடுத்தவன் இன்னொரு மனதோ.. அவன் கேட்டான் உன் தங்கச்சி மறுத்தாள்.. அதுக்கு மேல அவன் என்ன செய்யணும் எதிர்பார்க்கிற..? ஒரு அண்ணனா நீயே மதி மனசு மாற எதுவும் செய்யாம இருக்கிற.. அப்பறம் ஏன் சித்துவை திட்ற.. என்று கேள்வி எழுப்ப அமைதி ஆனான்..

அதிர்ச்சியில் இருந்த மதியிடம் மதி சித்துக்கு ஒண்ணும் இல்லை.. இப்போ பேசினது அவன் தான்.. உனக்கு வந்தது ஏதோ ராங்க் கால் போல..! என்று சமாதானம் செய்தவன், சரி வா வீட்டுக்கு போகலாம்.. என்று மதியை காருக்கு அழைத்து சென்றான்.. சிவாவிடம் ஆயிரம் முறை சித்துவின் நலத்தை பற்றி கேட்ட பிறகே மதியின் முகம் தெளிந்தது..

இவ்வளவு அக்கறை சித்துமேல வச்சிருக்க.. ஆனால் அவனை கல்யாணம் செஞ்சிக்க ஏன் மறுக்கிற..? சிவா. ஆதங்கத்தோடு கேட்க அக்கறை இருந்தால் உடனே கல்யாணம், செய்யணும் இல்லை.. என்மேல உண்மையான அன்பை காட்டுனவங்க.. அவங்களை வெறுக்க முடியாது.. அதே சமயம் அவரை கல்யாணம் செஞ்சுக்க முடியாது.. என்றவளை ஆற்றாமையோடு பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் அமைதியானான்..

மதியை அவள் வீட்டில் இறக்கி விட்ட சிவா, மதி வீட்டிற்குள் வராமல் சென்றுவிட்டான்..

வீட்டிற்குள் வந்த மதி, அங்கு ஹாலில் இருந்த சித்தப்பாவையும், மாமாவையும் பார்த்தவள் புன்னகையுடன், மாமா, சித்தப்பா எப்ப வந்திங்க..? என்று கேட்டாள்..

நாங்க நேத்து தான் வந்தோம்.. நீ டெல்லிக்கு போறதை எங்கக்கிட்ட சொல்லியிருக்கலாம்ல.. எந்த முக்கியமான வேலை இருந்தாலும், நாங்க அதை விட்டு வந்திருப்போம்.. நீ ஏன் டா இவ்வளவு கஷ்டப்பட்ற..? நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்…?

உனக்கு உதவத்தானே.. நீ அவ்வளவு தூரம் போய்ட்டு.. இப்போ பாரு நீ எவ்வளவு சோர்வா இருக்கிற..? இனிமேல் இந்தமாதிரி நீ போக கூடாது.. வெளி வேலைகள் எல்லாம் நாங்களே பார்த்துப்போம்  என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவளை வெளி வேலைக்கு செல்ல கூடாது என்று மறைமுகமாக சொல்ல,

மதியோ அதை புன்னகையுடன் ஏற்று தலையாட்டினாள்… சிறிது நேரம் அவர்களுடன் பேசி கொண்டிருந்துவிட்டு தன் அறைக்குள் சென்றவளை இருவரும் மனதில் வஞ்சத்துடன் பார்த்திருந்தனர்..சீக்கிரமே இவளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும்..! அதுவும் நம்ம பார்க்கிற மாப்பிள்ளையை.. இருவரும் உறுதி எடுத்து கொண்டனர்..

தன் அறைக்கு வந்த மதி..குளித்துவிட்டு ஃப்ரெஷ் ஆகி வந்தவளுக்கு பசி எடுக்க கீழே சென்றாள்.. அங்கு எதுவும் சமைக்காமல் இருக்க, மதிக்கு பசி வயிற்றை கிள்ளியது.. சிவா வரும் வழியில் உணவருந்த அழைக்க வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன் என்று மறுத்த தன் மடத்தனத்தை நொந்தவாறே.. வெளியே வந்தவள்.. வயிற்றை பிடித்தவாறே சோபாவில் அமர்ந்தாள்..

அம்மா மஞ்சூரியன் ரொம்ப சூப்பரா இருந்தது.. அந்த சிக்கன் கபாப் இன்னும் சூப்பெரா இருந்தது… இவ்வளவு நாள் எப்படி இந்த ஹோட்டல் நம்ம கண்ணுக்கு தெரியாம போனது..?  என்று சலசலத்தவாறே வந்தனர்.. மதியின் மாமா, மற்றும் சித்தப்பா குடும்பத்தினர்.. மதியை பார்த்ததும்  மதி எப்படா வந்த..? நீ வர்றதை எதுவும் சொல்லலை.. என்று சுந்தரி சொல்ல,

நான் வந்து அரைமணி நேரம் ஆச்சு சித்தி..! சாப்பிட எதுவும் இல்ல போல? நீங்க சாப்பிட்டிங்களா..? என்று கேட்க..  நாங்க வெளிய போனோம் ல அங்க சாப்பிட்டோம்டா.. நீ வர்றது தெரியாது.. அதனால வேலைக்காரங்ககிட்ட எதுவும் செய்ய வேண்டாம் என்று சொன்னேன்.. வெளிய போய்ட்டு வந்தது ஒரு மாதிரி இருக்கு நாம நாளைக்கு பேசலாம்டா.. என்றுவிட்டு தன் பிள்ளைகளை அறைக்கு போக சொல்லிவிட்டு தானும் அறைக்கு போக

மிஸ் அன்பு மதி..! யார்?  என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க அங்கு ஒரு பிரபலமான உணவு கம்பெனியின் பெயர் அச்சடிக்கப்பட்ட டீ ஷர்ட் அணிந்த ஒருவர் நின்றிருந்தார்.. யெஸ் நான் தான் அன்பு மதி சொல்லுங்க..? முன் வந்து நின்றாள் மதி..

உங்களுக்கு டின்னர் ஆர்டர் செஞ்சாங்க.. இந்தாங்க.. இந்தாங்க.. என்று மதி கையில் உணவு பார்சலை கொடுத்துவிட்டு சென்றார்.. இவளை ஒரு நேரம் பட்டினி போடலாம்னு பார்த்தால்.. இவ என்ன.. வெளிய வாங்கி சாப்பிட்றா இது இவ பழக்கம் இல்லையே..! தனக்குள் சிந்திதவாறே இது என்ன புது பழக்கம் மதி நீ எப்ப வெளிய வாங்கி சாப்பிட பழகின..? என்று கேட்க

எனக்கு தெரியாது சித்தி இது சிவா ஆர்டர் செஞ்சிருப்பார் நினைக்கிறேன்.. இனி இப்படி செய்ய வேண்டாம் என்று சொல்றேன்.. என்றுவிட்டு மறக்காமல் அந்த உணவை எடுத்து கொண்டு தன் அறைக்கு வந்தாள்..

ஏம்மா உனக்கு மதி அக்கா வர்றது தெரியாதா? யார்கிட்ட பொய் சொல்ற..? நீ சொல்றதை மதி அக்கா நம்புவாங்க.. ஆனால் நான் நம்ப மாட்டேன்.. நீ அவங்க வர்றாங்கன்னு தெரிஞ்சுதான் எங்களை வெளிய கூட்டிட்டு போன..? நீ அவங்களை பட்டினி போடணும் நினைச்சிங்க.. ஆனால் பாருங்க.. கடவுள் இன்னைக்கு மதி அக்காவை உன் வேகாத இட்லில இருந்து காப்பாத்திட்டார்.. நீங்க என்னவோ செய்றிங்க சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்னு சொல்வாங்க.. அது ஒரு நாள் உங்களுக்கு நடக்க போகுது.. என்று எச்சரித்துவிட்டு ரேணு தன் அறைக்கு சென்றாள்..

அறைக்கு வந்த மதி உணவை பிரித்து ஆவலாக உண்டாள்.. உண்டு முடித்ததும்.. சிவாவின் நினைவு வர.. அவனுக்கு போன் செய்தவள் டேய் அண்ணா ரொம்ப தாங்ஸ் டா.. சாப்பாடு சூப்பர்.. ரொம்ப பசியில இருந்தேன்.. இப்ப வயிறு ஃபுல்.. குட்நைட் டா  என்று சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தாள்..

நான் எப்போ சாப்பாடு ஆர்டர் செஞ்சேன்..? இவ வீட்ல இருந்தால் நான் எதுவும் செய்ய கூடாதுன்னு சொல்லி இருக்காளே..! அப்பறம் எப்படி நான் செய்வேன்.. குழப்பத்தோடு நினைத்தவன் சித்துவிற்கு அழைக்க.. அது ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும் சரி எப்படியோ அவ சாப்பிட்டாளே அது போதும்  என்று நினைத்து லேப்டாப்பை எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தான்.. அவனால் முழுதாக வேலையில் கவனம் செலுத்த முடியாமல்.. டெல்லியில் சித்துவின் வீட்டில் சோபாவில் அமர்ந்து அவர்களை வரவேற்ற அந்த பெண்ணின் முகம் நினைவில் வந்து போனது.. திமிர் பிடித்தவள்.. !! மனதில் கருவியபடி வேலையில் கவனம் செலுத்தினான்..

சார்.. சார் நான் தெரியாமல் தப்பு செஞ்சுட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க சார்.. என்று உடலில் காயங்களோடு வலியோடு கெஞ்சி கொண்டிருந்தான் ஒருவன்.. அவன் முன் அமர்ந்திருந்த சித்து,  உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், என் அன்புகிட்ட அப்படி ஒரு பொய் சொல்லுவ..? இது நீயா சொல்லலை.. உன்னை யாரோ சொல்ல சொல்லிருக்காங்க அது யாருன்னு சொல்லு உன்னை விட்றேன்.. முகத்தை கடுமையாக வைத்து மிரட்டினான்

சார்.. என்னை இப்படி சொல்ல சொன்னது அந்த பெண்ணோட மாமாவும், சித்தப்பாவும் தான் சார்.. ஆனால் ஏன் இப்படி சொல்ல சொன்னாங்க தெரியாது சார்.. நான் காசுக்கு ஆசைப்பட்டு இப்படி செஞ்சிட்டேன் சார்.. என்னை விட்ருங்க சார்.. என்று மறுபடியும் கெஞ்சினான்..

ஓ என்று கேட்டு கொண்டவன் சரி நீ போகலாம்.. இங்க நடந்ததை எதாவது வெளிய சொன்ன.. அப்பறம் உன் உயிருக்கு நான் பொறுப்பு இல்லை.. என்று மிரட்டி அவனை அனுப்பியவன்.. யோசனையில் ஆழ்ந்தான்..

நாட்கள்  அதன் போக்கில் இயல்பாக சென்று கொண்டிருந்தது.. மதி டெல்லி போய் வந்து ஒருமாதம் கடந்த நிலையில், என்ன நம்மளும் இவளுக்கு ஒரு மாப்பிள்ளையை தேட்றோம் கிடைக்க மாட்டிங்கிறானே..! என்று இருவரும் புலம்பியவாறே மதிக்கு மாப்பிள்ளை தேடி கொண்டிருந்தனர்..

ஒரு நாள் இரவு மதி அலுவலக வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாள்.. அன்று ஒரு முக்கியமான மீட்டிங் அது முடிந்து வர மிகவும் தாமதமாகி விட்டிருந்தது.. சிவா ஆசிரம விசயமாக.. வெளியூர் சென்றிருந்தான்.. மீட்டிங் இருப்பதாக சொல்லி போக மறுத்தவனை மதி  அந்த அமைச்சரே மனசு வந்து நம்ம ஆசிரமத்துக்கு உதவி செய்யறேன்னு சொல்றார் இது நம்ம ஆசிரமத்துக்கு முக்கியமான தேவை.. பணம் முக்கியமில்லை என்றாலும்.. அவர் நல்ல தலைவர் அவரோட துணை இருந்தால், நம்ம ஆசிரமத்துக்கு நல்லது.. அங்க இருக்கிற குழந்தைகளுக்கு நல்லது அதனால் நீ போய்த்தான் ஆகணும். என்று சொல்ல,,

சிவா மனமே இல்லாமல் ஆயிரம் பத்திரம் சொல்லி நேர நேரத்திற்கு சாப்பிட சொல்லி அறிவுரை சொல்லி கொண்டு, சென்றான்..

மதி நினைத்தது போல் இல்லாமல், மீட்டிங் சற்று நேரமெடுத்தது.. கிளையண்ட் கேள்விகளுக்கு மதி சளைக்காமல் பதில் சொல்ல, அவளை, அவள் மாமாவும், சித்தப்பாவும் வியப்புடன் பார்த்திருந்தனர்.. வீட்டில் அவ்வளவு அமைதியாக இருப்பவள், இங்கு அனைவரையும் ஆட்டுவித்தாள்.. இவளோட உண்மையான முகம் எது..? என்று குழம்பி இருந்தனர் இருவரும்.

ஒருவழியாக மீட்டிங்கை முடித்துவிட்டு வந்தவர்களை அனுப்பிவிட்டு நேரம் பார்க்க அது பத்து என்று காட்டவும்.. மீதி வேலையையும் முடித்து கொண்டு அவசரமாக கிளம்பினாள்.. இன்று பார்த்து டிரைவரின் குழந்தைக்கு உடம்பு முடியாமல் போகவும், அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.. அவர் மறுக்கவும்.. இருக்கட்டும் அண்ணா நான் பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க என்று அவரையும் அனுப்பி வைத்தாள்..

அவளாக காரை ஓட்டி கொண்டு வந்தாள், அவள் வழக்கமாக செல்லும் பாதை தான்.. எப்பவும் ஆள் நடமாட்டம் இருக்கும், இன்று தாமதமாகிவிட்டதால்.. நடமாட்டமின்றி அமைதியாக இருந்தது.. அந்த இருட்டு அவளுக்கு மனதில் சில நினைவுகளை வரவழைக்க.. முகம் முழுதும் வேர்த்து வடிந்தது.. ஸ்டேரிங்கை பிடிக்க முடியாமல் கைகள் நடுங்க மதியால் சமாளிக்க முடியவில்லை.. கார் அவள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது..

மதிக்கு கண்ணை இருட்டி கொண்டு வர, மயக்கத்திற்கு சென்றாள்.. கார் ஒரு மரத்தில் மோதி நின்றது.. கார் நின்ற வேகத்தில் மதி நெற்றி ஸ்டேரிங்கில் பலமாக மோதி ரத்தம் வழிந்தது.. சில நிமிடங்கள் கடக்க யாரோ கார் கதவை திறந்து அவளை வெளியே தூக்கி ஹலோ மேடம்.. கண்ணை திறங்க.. உங்களுக்கு ஒண்ணும் இல்லை.. கண்ணை திறங்க.. என்று மதியின் கன்னத்தை தட்டியவாறே அவளை மயக்க்கத்தில் இருந்து தெளிய வைத்து கொண்டிருந்தது..

மதி லேசாக கண்விழித்து பார்க்க.. முகம் முழுதும் தாடியுடன்.. கண்ணில் லேசான கண்ணீருடனும் பதட்டமாக கேட்டது அந்த குரல்.. மதிக்கு ஏனோ அந்த கண்ணீர் மிகவும் பிடித்திருந்தது.. ஒரு புன்னகையுடன்.. மீண்டும் மயக்கத்திற்கு சென்றுவிட்டாள்..

அதுவரை அந்த ஆடவனின் அருகில் இருந்த அவன் நண்பன்..  டேய் தமிழ் இவங்களை தூக்குடா ஹாஸ்பிட்டல் போகலாம்..  என்று அவசரப்படுத்தவும் அதில் சுயம் அடைந்து மதியை தூக்கியவன் ஒரு நொடி திகைத்து நின்றான்..

டேய் பைக்கில எப்படி கூட்டி போறது..? என்று கேட்க.. நீ முதல்ல உட்கார் நண்பனுக்கு கட்டளையிட்டவன் அவன் பைக்கில் அமர்ந்ததும் மதியை அலேக்காக தூக்கி.. இரட்டை கால் போட்டு அமர்ந்தவன் அவளை வாகாக தன் மடியில் தாங்கி கொண்டான்..

அவன் பார்வை முழுவதும் மயக்கத்தில் இருந்த மதியை பார்த்து கொண்டே இருந்தது..

தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

மௌனத்தின் மனசாட்சி -1

இன்று அன்றி(ல்)லை 29