in , ,

கனவு தேசம்

கண் விழித்து பார்க்கிறாள் காதம்பரி. 

அவளை சுற்றி எல்லாம் சிவப்பாய் இருந்தது. மரம் செடி கொடிகள் அங்கிருக்கும் அணைத்து பொருட்களும் சிவப்பு மையம் தான்.

இதை கண்ட காதம்பரிக்கு ஒன்றும் விளங்கவில்லை. தலை சுளிர் என்றும் வலி கொடுத்தது.

அதுவும் எல்லாமே இதய வடிவில் அடர் சிவப்பு நிறத்திலேயே தென்பட்டது.

துரத்தில் ஒரு உருவம் வருவது தென்பட்டது. அவளுக்கு அது பரிச்சயம் போல தோன்றியது.

அந்த உருவம் குரல் கொடுத்தது.

“காது நான் தான் டி”

காதம்பரி அந்த குரலை அடையாளம் கண்டுக்கொண்டாள். 

அவளுக்கு அழுவதா சிரிப்பதா இல்லை எப்படி எதிர்வினை (react) புரிவது என்றே தெரியவில்லை.

ஆம். அது காதம்பரியின் கணவர் முகிலன்.

முகிலன் மூன்று வருடங்களுக்கு முன்பே பணியின் காரணமாக அமெரிக்கா சென்று விட்டான்.

அவன் அமெரிக்கா சென்ற போது காதம்பரிக்கு ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தால்.

பணியின் கடினமான இருந்த காரணத்தால் அவன் இன்னும் இந்தியாவிற்கு வரவே இல்லை.

“என்ன காது இப்படி முழிக்குற” என்று அவளிடம் வந்தான்.

“நீங்க எப்படி இங்க ?

எப்ப வந்தீங்க ?

எப்படி வந்தீங்க?

நீங்க வருவத என்கிட்ட சொல்லலையே!!”

என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டால்.

“காதுதுது எதுக்கு இவ்வளவு பதட்டம்?

ஏன் இவ்வளவு கேள்வி உனக்கு?” என்று அவளின் தோள்களை உலுக்கினான்.

காதம்பரிக்கு அவனிடம் ஏதோ துர்நாற்றம் வருவது போல் தோன்றியது.

முகிலன் ஒரு சிவப்பு பழத்தை அவள் கையில் திணித்தான்.

“இந்தா இந்த பழத்தை சாப்பிட்டு நீயும் நானும் இந்த காதல் தேசத்தில் சந்தோஷமா வாழலாம். ம்ம் சாப்பிடு காது”

காதம்பரிக்கு கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

“என்ன சொல்லிட்டு இருக்கீங்க இல்லை நீங்க என்னோட முகிலன் இல்லை என்ன விட்டுரு”

அவனின் வார்த்தைகள் கோபமாய் பயம் வரும் வகையில் இருந்தது.

அவன் மர்மமாக சிரித்துக்கொண்டே

“காது இது தான் ஏலியன்களின் காதல் தேசம்.

இங்கே எந்த பிரச்சனையோ 

நிபந்தனைகளோ இல்லை.

காதல் காதல் காதல் மட்டும் தான்.

வா என்னோடு வா 

நாம சந்தோஷமா வாழலாம்.

இங்கே யாருக்கும் அழிவே கிடைக்கும் 

வெறும் காதல் மட்டும் தான்.

நான் ஏலியனா மாறிட்டேன்.

இந்த நீயும் சிவப்பு lovefruit சாப்பிட்டு 

நீயும் ஏலியனாய் மாறு காது” என்று கத்திக்கொண்டே 

அவள் வாயில் பழத்தை திணிக்க வந்தான்.

“வேண்டாம் வேண்டாம்” என்று காதம்பரி கத்திக்கொண்டே ஓடினாள்.

ஏதோ ஒரு சத்தம் கேட்டது அவளுக்கு.

“அம்ம்ம்மாஆஆஆஆஆ” என்று குழந்தை அழும் சத்தம் கேட்டது.

திடிரென கண் விழித்து பார்த்தாள்.

முகமெல்லாம் வியர்த்து கொட்டி இருந்தது.

காதம்பரியின் முன்று வயது குழந்தை கரண் அழுதுகொண்டு இருந்தான்.

பிறகு, சுயநினைவுக்கு வந்தவளாய் கரணை சமாதானம் செய்து பசிக்கு பாலை காய்ச்சி கொடுத்து மறுபடியும் அவனை தூங்க வைத்தால்.

பின், அமெரிக்காவில் இருக்கும் தன் கணவருக்கு வீடியோ கால் செய்து பகிர்ந்து கொண்டால்.

முகிலன், “காது இது ஒரு கனவு தான் விட்டு தள்ளிட்டு வேற வேலைய பாரு” என்று சமாதானம் செய்து வைத்தான்

இருந்தாலும், காதம்பரிக்கு மனதில் பயம் தான். அதனால் கோவிலுக்கு சென்று வந்தாள்.

பின்,தன் அன்றாட வாழ்க்கையில் முழ்கிப்போனால்.

Urs…

Kani

இந்த மாதிரி மர்ம கதை டிரை பண்ணதே இல்லை.

முதல் முறையா எழுதினேன்.

எப்படி இருக்குனு தெரியல.

உங்க கருத்து என்னவென்று சொல்லுங்கள்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by நிலவின் தோழி கனி

காலேஜ் படிக்கும் பாவை....

பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய

ஐடி: 🌛நிலவின் 🌜 தோழி "கனி"

Story MakerContent Author

உமையாளின் ருத்ரமூர்த்தி..

எல்லாமுமே நீ