in

கடவுள் அமைத்து வைத்த மேடை -19

அத்தியாயம் 19

“எல்லாம் எடுத்தாச்சா..? கிளம்பு கொண்டு போய் விட்டுடறேன்..”

அவள் தனது பெட்டியை எடுத்துக் கொண்டு வந்ததும் வாங்கி டிக்கியில் வைத்தவன், காரின் முன் கதவை திறந்து விட்டான்.. மௌனமாகவே காரை ஒட்டிக் கொண்டு வரும் பவனை பார்த்த நீலாவுக்கு, அவனிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.. 

அரைமணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்துக்கு மெல்ல ஒட்டி,  ஓரு மணி நேரத்தில் சென்று அடைந்தவன், காரை அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்தினான்.

“உங்க வீடு வந்துடுச்சு.. இறங்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு வார்த்தை.. நான் ஜட்ஜ் கிட்ட கொடுத்த  வாக்குறுதியை காப்பாத்திட்டேன்னு நினைக்கிறேன்.. ஓகே. குட் பை..” என்று சொன்னவனை இமைக்காமல் பார்த்தாள்..

அவள் பார்வையின் வீரியம் தாங்காமல் கண்ணை திருப்பி ஸ்டீரிங்  வீலை பார்த்தவனை நோக்கி, “அவ்வளவுதானா…?”

“வேறென்ன சொல்லணும்..?” என்று அவளையே புரியாதவன் போல பார்க்க, அவன் பார்வையை தாங்கி நின்றது அவளது விழிகள்.. 

“போகாதேன்னு ஒரு வார்த்தை  சொல்லேன். இப்படியே உன் கூடவே வந்திடறேன்…!” தவித்தன அவளது விழிகள்..

“இப்படியே உங்க கூட வந்திடறேன்னு ஒரு வார்த்தை சொல்லேன்.. அப்படியே அள்ளிட்டு போயிடறேன்….” பரிதவித்தன அவனது விழிகள்.. ஆனால் யார் சொல்வது என்ற ஈகோ தலை  தூக்க, மனதின் ஓசைகளை காதுக்குள் நுழைய விடாமல், அறிவு தடுத்தது…

“அடுத்து.. எப்ப பார்க்கலாம்..?”

“கோர்ட்டில்..” அவனது பதில் தெளிவாக இருந்தது..

‘டேய் மடையா, அப்படியே என்னை தூக்கிட்டு போய் குடித்தனம் நடத்த துப்பில்லை.. உனக்கு பார்வையை பார்.. என்னமோ தேவதாஸ் மாதிரி…’ மனசாட்சி வேறு இவளிடம் இருந்து பிரிந்து அவனுக்கு குரல் கொடுக்க.. ஒரு பெருமூச்சுடன் இறங்கினாள்.

அவள் இறங்கிய அடுத்த நொடி அவனது கார் சீறிப் பாய்ந்தது.. வீட்டுக்குள் நுழையவும் அவள் எதிர்பார்த்திருந்த வடிவு, “நீலா வந்துட்டியாடி..? என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்க.. 

“ஆமாம்மா.. எப்படி இருக்கீங்க..? என்றவள் அம்மா பதில் சொல்லுமுன், “அம்மா டயர்ட் ஆக இருக்கு தூங்கப் போறேன்மா..” என்று மாடியேறி விட்டாள்..

தன்னிடம் வந்து புலம்பிய மனைவியிடம், அவ ஒண்ணும் இன்னும் குஞ்சு இல்லை.. இறக்கை முளைச்ச புதிய கிளி.. அவளோட வாழ்க்கையை அவளை வாழ விட்டு, அதைப் பார்த்து ரசிப்பதுதான் உனக்கு பெருமை.. இன்னும் உன் கட்டுக்குள்ளே வைக்கணும்னு நினைக்காதே..

ஏற்கனவே இரண்டு கிளி பறந்து போயிட்டுது.. இதுவும் அப்படித்தான்..!’ என்றவர் சொல்வது தன் கடமை, நீ கேட்டால் கேளு.. என்பது போல் இருந்து கொண்டார்..

அறைக்குள் சென்ற நீலாவுக்கு இந்த வீடே புதிது போல இருந்தது.. பவனின் சிரிப்பும், தில்லையின் குறும்பும், தங்கையின் பேச்சுமே காதில் ஒலிக்க, அவளுக்கு தூக்கமே வரவில்லை. உடலும், மனமும்  பவனின் அருகாமைக்கும், அவனின் அணைப்புக்கும் ஏங்க, தன்னையறியாது வந்த கண்ணீரை துடைக்க மனமின்றி அமர்ந்திருந்தாள்.

பவனும் நேரே வீட்டுக்கு செல்லாமல், கடற்கரைக்கு சென்று  மணலில் படுத்திருந்தான். கடலில் அலைகள் கரையை தொட்டு, தொட்டு தழுவி செல்வது போல அவனது நினைவுகளும், அவள் நினைவை தொட்டு தொட்டு மீண்டன.

‘அவள் தன்னை தேடி வருவாளா..?’ என்ற மில்லியன் டாலர் கேள்வி மனதில் இருக்க, அவளுடைய பார்வை என்னோவோ வருவாள் என்ற  பதிலை அவனுக்கு தந்தாலும், அவள் அம்மா அதை செய்ய விடுவாரா..? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் தவித்தான்.. எப்படியாகிலும் இனி நம் வாழ்க்கையில் அவள் மட்டும் தான் என்று முடிவு செய்தவன், நள்ளிரவுக்கு மேல் வீடு சென்றான்.

மறுநாள் காலை ஒன்றுமே நடக்காதது போல இறங்கி வந்த மகளைப் பார்த்த வடிவு “என்னம்மா எங்க கிளம்பிட்டே..?” 

“ஆபிசுக்குத்தான்..” 

“அம்மா எப்படி போச்சு கம்பெனி வேலை எல்லாம்..?”

“ம்ம்.. தனியா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.. அதான் இப்ப நீ வந்துட்டியே..?”

ஆனால் ஆபிசுக்கு போய் பார்த்தால் நிலைமை அந்த மாதிரி தெரியவில்லை.. எல்லாமே சற்று தொய்வு ஏற்பட்டார் போல் அவளுக்கு தோன்றிற்று.  சொன்னால் அம்மா பயந்து விடக் கூடும் என்று நினைத்து, எதுவும் சொல்லாமல் தான் இல்லாத போது என்னென்ன வேலைகள் நடந்தது என்பதை செக் செய்ய ஆரம்பித்தாள்.

விளைவு..  தான் இல்லாத போது பழைய மாதிரியே அம்மாவின் முடிவுகள் இருந்ததால் லாபம் அதிகம் இல்லது கம்பெனி வரவு, செலவு சரியாக இருப்பது போல உள்ளது.. என்பது புரிந்தது..

அப்போ கம்பெனிக்கு தேவை தற்போதைய நிர்வாகம் அறிந்த முதலாளி தான்.. அது ஒன்று தானாக இருக்க வேண்டும்.. அல்லது இன்னொரு இளைய தலைமுறையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவள், முதன் முறையாக அம்மாவை கலக்காமல் லாயரையும், ஆடிட்டரையும் தன்னை மட்டும் பார்க்கும்படி செய்தி அனுப்பினாள்.

அவர்கள்  சந்தித்தது ஒரு ஓட்டலில்.. அங்கு வைத்து அவர்களிடம் சில டாகுமென்ட் தயாரித்து, மறுவாரம் தான் சொல்லும் நேரத்தில் சொல்லும் இடத்துக்கு கொண்டு வருமாறு பணித்தாள்.

“நீலா, நாளைக்கு உன்னோட  கேஸ் இருக்கு.. வக்கீல் போன் செய்தார்.. அநேகமா நாளைக்கு கேஸ் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.. நீ கேட்ட மாதிரி டிவோர்ஸ் கிடைச்சிடும்னு நினைக்கிறேன்..”

“டிவோர்ஸ்க்கு அப்புறம் என்ன செய்ய..?”

“ஏம்மா, ஊர்ல உலகத்துல மாப்பிள்ளையா இல்லை..! இவன் இல்லேன்னா, இன்னொருத்தான்..!”

“சரி அவனும் இதே மாதிரி உன்னை எதிர்த்தா என்ன பண்ணுவே..?” நெற்றியடியாய் மகள் கேட்க வடிவு விழித்தார்..

ஆனாலும் சமாளிப்பாக, “ஏய் அது வந்த பிறகு பார்த்துக்கலாம.. அப்படி அவனும் வாலை ஆட்டினா.. இதே கதிதான்..”

“அப்புறம்..”

“என்னடி புதுசா கொஸ்டின் எல்லாம் கேட்கே…?

“இல்ல நீ புதுசு புதுசா சொல்றே..? அப்ப நானும் புதுசு புதுசாத்தான் கேட்கணும்.. ஆமா கல்யாணம் ஆனதும் எல்லா அம்மாவும் பேரன், பேத்தி கொடு அப்படின்னுதான் எல்லா மக கிட்டேயும் கேட்பாங்க.. நீ மட்டும் தான் புதுசா புது மாப்பிளை கொடுன்னு கேட்கிறே..? சூப்பர் மாம் இல்ல..“ என்றவள் சாப்பிடாமலே எழுந்து கைகழுவி செல்ல, முதன் முறையாய் தன் மகளே தன்னை அசிங்கப் படுத்தியது கண்டு நொந்து போனார்.

அம்மாவிடம் “நீங்க, கார்ல  வாங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..“ என்று கைப்பையுடன் ஆட்டோவில் கிளம்பி போன மகளைப் பார்த்து கவலையுடன் நின்றார் வடிவு..

தாங்கள் குடியிருந்த ஏரியாவில் இருந்த கோயிலுக்கு சென்ற நீலா அங்கிருந்த சாமியிடம், ‘கடவுளே இப்பவாவது எனக்கு அறிவு வந்ததே.. அதுக்கு நன்றி சொல்லிட்டு போகலாம்னு உன்னை பார்க்க வந்திருக்கேன்..  என்னோட வாழ்க்கையே என் புருஷன்தான்னு எனக்கு புரிஞ்சு போச்சு.. அதை சொல்ல ஒரு தயக்கம் இத்தனை நாள் இருந்தது.. ஆனால் இப்ப அதுவும் இல்லை.. நன்றி.. கூடிய சீக்கிரம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்து உன் கிட்ட நன்றி சொல்றோம்..’ என்று வணங்கி விட்டு நேராக கோர்ட்டுக்கு சென்றாள்.   

அங்கு பவன் வருவான் என்று காத்திருக்க, ஆனால் அவன் வரவே இல்லை.. “மேடம் கேஸ் ஆரம்பிக்கப் போகுது.. வாங்க..” என்று வக்கீல் உள்ளே கூட்டி சென்ற போது அங்கு ஏற்கனவே அவன் நின்றிருந்தான்.. எப்படி வந்தான் என்றே தெரியவில்லை..

“என்னம்மா ஆறுமாதம் அவரோட தானே இருந்தீங்க..?”

“ஆமாம் மேடம்..?”

“என்ன சொல்றீங்க..?”

“என்ன மேடம்  சொல்றது..?”

“ஏம்மா டைவர்ஸ் வேணும்னு நீங்கதானே கேட்டீங்க..”

“இல்லை மேடம்.. எங்க அம்மாதான் கேட்டாங்க.. ஆனால் கையெழுத்து மட்டும் நான் போட்டேன்.. அதனால இவரை பிடிச்சி நிக்க வச்சுட்டாங்க.. நியாயமா எங்க அப்பாவுக்கு போயிருக்க வேண்டியது..” அவள் சிரிக்காமல் சொன்னதைப் பார்த்து கோர்ட்டில் எல்லோரும் சிரிக்க அந்த ஜட்ஜ் முதற்கொண்டு சிரித்து விட்டார்..

“நல்ல பொண்ணும்மா. சாமர்த்தியமா பதில் சொல்லிட்டே..” என்ற ஜட்ஜ் “வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.. “ என்று தீர்ப்பு சொன்னார்..

அவளது வாயை குறும்புடன் ரசித்துக் கொண்டிருந்த கணவனின் முன்னால் சென்று நின்றவள் “அம் சாரி.. என்னை  உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறீங்களா..?” என்று கேட்டு முடிக்குமுன் அவனது அணைப்பில் இருந்தாள்..

வக்கீல் வரும் அரவம் கேட்டு, தள்ளி சென்று  மனைவியை கை வளைவுக்குள் நிறுத்தியவன், “தேங்க்ஸ் சார்..” என்றான்..

அதற்குள் அங்கு வந்திருந்த தங்களது கம்பெனி வக்கீலிடம் இருந்து பேப்பர்களை வாங்கியவள், தனக்கும் தன் பிறந்த வீட்டு சொத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அத்தனையும் தனது அண்ணனுக்கே சேர வேண்டும் என்று எழுதி இருந்த பத்திரங்களில் கையெழுத்து போட்டு கொடுத்தாள்.

அவள் அம்மாவிடம் வந்து “அம்மா உங்க கூடவே இருந்தவரை நீ செய்த தப்பு எனக்கு தெரியலை.. ஆனால் உங்களை விட்டு பிரிந்து இருந்த ஆறுமாதம் எனக்கு நிறைய விஷயத்தை கத்துக்  கொடுத்தது.. நீங்க நல்ல அம்மாதான்.. ஆனால் நல்ல மனைவி இல்லை.. உண்மையிலேயே  நீங்க அப்பாவுக்கு எதாவது செய்யணும்னு நினைச்சா அவர் கிட்ட எது வேணும்னு கேட்டு செய்ங்க..? நான் சொன்னது காசு, பணத்தை இல்லை..” என்றவள் பவனுடன் திரும்பி நடந்தாள்..

வாழ்க்கையில் தோல்வி என்பதை  அறியாத வடிவு முதன் முதலாய், தன் குழந்தைகளிடத்தில் தோற்று நின்றாள்.. எப்படி வீட்டுக்கு சென்றார்  என்பதே தெரியாமல் வீட்டுக்கு சென்ற வடிவுக்கு சடகோபனின் உண்மையான ஆறுதல் வேண்டி இருந்தது.. அப்போதுதான் தாம்பத்தியம் என்றால் என்ன என்பதை  அறிந்து கொண்ட வடிவு தன்னை  நினைத்து வெட்கமடைந்தார்..

காரில் ஏறியதும் “நேரே பிளாட்டுக்கு போயிடலாமா..?”

“இல்லை வேண்டாம்.. முதல்ல உங்க வீட்டுக்கு போங்க.. அப்புறம் நம்ம  வீட்டுக்கு வரலாம்..” 

‘ம்ம்.. டேய் பவன் இதுவரை இருந்த சுதந்திரம் போச்சு போல இருக்குடா..” என்று தனக்குதானே புலம்பியவன் மகிழ்ச்சியுடன் தங்கள்  அம்மா வீட்டிற்கு சென்றான்..

நீலாவை பார்த்ததும்  பவனின் பெற்றவர்கள் மகிழ்ச்சியடைய,  அவர்களே வியக்கும் வண்ணம் அவர்களுடன் சமமாய் பேசி, இருந்த நீலாவை சந்தோசமாக ஏற்றுக் கொண்டனர்.. மதியம் அங்கேயே சாப்பிட்டு  மாலை ஆனதும் அங்கிருந்து கிளம்பியவர்கள்  நீலாவின் விருப்பத்திற்கு இணங்க சென்ற இடம் காலையில் அவள் சென்ற கோவில்..

அங்கு சென்று, “கடவுளே நான் சொன்ன மாதிரி என் புருசனோட உன் கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்துட்டேன்.. எங்களை நல்லபடியா வாழ வைப்பா..” என்று மனமுருக பிரார்த்தித்தவள், அவனுடன் அவர்களது அபார்ட்மெண்ட் சென்றாள்.

உள்ளே நுழைந்தவள் கண்முன்னால்  அவளது ஆறுமாதம் வலம் வந்து போக, இளம் சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தவளை பின்னால் நின்று இரு கரங்கள் வாரியணைத்தன..

“ஸ்.. என்ன இது..! இது ஹால்.. பெட் ரூம் இல்ல..!” என்றவளின் சிணுங்கலுக்கு, மேலும் பின் கழுத்தில் தன்  உதடுகள் கொண்டு கோலமிட்டவன் ‘அப்புறம்..” என்றான்.

“என்னது அப்புறம்..? நான் சொல்லிட்டே இருக்கேன்.. நீங்க என்னடான்னா..?” என்று மேலும் அவள் நெளிய..

“ஏண்டி இப்ப இங்க யாரு இருக்கா..?”

“ஏன் உங்க பிரண்ட், அப்புறம் என் தங்கை..?” என்று அவள் சொல்ல..

“அவன் நம்ம  முன்னாடி பண்ணாத ரொமான்சா..  இன்னிக்கு நம்மளை பார்த்து ஏங்கி சாவட்டும்..” என்று வேண்டுமென்றே சொல்ல…

“அயோ.. உங்களோட..’ என்றவளிடம்..

“ஏய் லூசு.. இப்ப இந்த வீட்டில உன்னையும் என்னையும் தவிர யாரும் இல்லை.. அதனால எப்படி வேணா இருக்கலாம்..!” என்று சொன்னவன் கண்ணடித்து சிரிக்க.. 

“அப்படியா..” என்றவள் அப்படியே நழுவி பெட்ரூமுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.. “ஏய் எப்படியும் வெளியே வந்து தான் ஆக வேண்டும்..” என்றவன் அங்கிருந்த சோபாவில் சரிந்து டிவியை உயிர்பிக்க..

இவன் வந்து தட்டாது பார்த்து கதவு திறந்து, எனக்கு குளிக்கணும் போல இருக்கு.. ஆனால் ட்ரெஸ் இல்லியே.. என்ன பண்ண..?”

“டோன்ட் வொரி.. நீ குளிச்சிட்டு வா.. நான் உனக்கு புது ட்ரெஸ் வச்சிருக்கேன்..”

“இப்ப கொடுங்களேன்..”

“இப்பவே தரணும்னா ஒரு கண்டிசன்.. நானும் உன்கூட குளிக்க வரேன்..”

“ஐயோ வேண்டாம்.. அப்பா குளிச்சிட்டு வா..”

“இல்லை இந்த ஆட்டத்துக்கு வரலை..”

“சரி ஒரு சத்தியம் பண்ணித் தரேன்.. கதவு திறந்து நீயே  ட்ரெஸ் வாங்கிக்கோ.. நான் உள்ளே வரலை..போதுமா..!”

“இதுல என்ன உள் குத்து இருக்குமோ.. தெரியலியே..”

ஆனாலும் சென்னை வெயில் தாங்காமல் குளித்தவள் வேறு வழியின்றி அவனது குர்த்தாவை அணிந்து பாத்ரூமை விட்டு வெளியில் வந்தாள்..

ஹாலில் இருந்தவனை அழைக்க, பெட்  ரூம் கதவை ஒரு சாய்த்து  கையை மட்டும் வெளியே நீட்டி “ட்ரெஸ்..” என்க..

அவன் சோபாவில் இருந்தே, வந்து எடுத்திட்டு போ.. “ என்று கண்ணால் காட்டினன்.

“ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்று அவளது நாணம் அவளைத் தடுக்க, அவனிடம் முகத்தில் சிவப்பு ஏற  கெஞ்சியவளைப் பார்த்து ட்ரெஸ்ஸை எடுத்துக் கொண்டு கதவு பக்கத்தில் சென்றவன், ட்ரெஸ்ஸை அவளிடம் கொடுக்காமல் விளையாட்டு காட்டினான்.. 

“வேண்டாம் நீங்க வெளியவே இருங்க..” என்று கதவை அடைக்கப் போகும் சமயம் உள்ளே பாய்ந்தவன் அவளிடம், “சாரி செல்லம்.. நான் தான் உள்ளே வந்துட்டேனே.. இனி எதற்கு அது என்று விளக்கையும் அணைத்து அவளையும் அணைத்தான்..

               ——————————

 

ஐந்து மாதங்கள்  கழித்து ஒரே மண்டபத்தில் இரண்டு வளைகாப்பு விழா.. ஒன்று கனிகாவிற்கு.. இன்னொன்று காதம்பரிக்கு.. இரண்டையுமே நான் தான்  செய்வேன் என்று பிடிவாதம் பிடித்து வடிவுதான் செய்தார்.. அவருக்கு ஒரே நேரத்தில் மகன், மகள் இருவருக்கும் குழந்தை பிறக்கப் போகும் ஆனந்தம்.. ஆமாம், இப்போது அவர் மகன் கையில் பொறுப்பை கொடுத்து விட்டு வீட்டில் இருந்து மகளின் பிரசவத்தை பார்க்க போகிறார்..

நண்பர்கள் ஐவரும் உருவாகிய கம்பெனி இந்த வருடம் புதிய வரவு கம்பெனியில் முதலாவது இடத்தை அடைந்து இருக்க, அது வேறு அவருக்கு மிகவும் பெருமையாக இருந்தது.. எல்லாவற்றையும் விட அவர் செய்த எல்லாவற்றையும் மறந்து அவருடன் நட்பு பாராட்டிய அவரது சம்பந்திகளையும், தனது புகுந்த வீட்டு மனிதர் களையும் அவருக்கு பிடித்து போயிற்று..

வழக்கம் போல “ஏண்டா சகலை நீதான் குடும்பத்து மூத்த மாப்பிள்ளை, ஆனால் நான் முந்திகிட்டேன் பார்த்தியா..?’ என்று பவனை வம்புக்கு இழுக்க..

‘நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல.. என்ன நீலா  அடுத்த வருஷம் இரட்டை தானே..? என்று நீலாவிடம் இரண்டு விரல் காண்பித்து கேட்க அந்த இடமே சிரிப்பலையால் குலுங்கியது..

                   வாழ்க வளமுடன்.

                    ——————————–

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 8 சராசரி: 4.9]

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே-22 ( இறுதி அத்தியாயம்)

இழப்பேனென்று நினையாதே நிழலுறவே-20