in

கடவுள் அமைத்து வைத்த மேடை – 18

அத்தியாயம்  18

 

 ஒரு கெட்டுகெதர் போகணும் என்று சொல்லி, நால்வரும் கிளம்பி வந்து இருந்தனர்.. அங்கு வந்து பார்த்தால் ஒரு சிறிய பங்கசன் போல ஒரு ஹோட்டலில்  ஏற்பாடு பண்ணி இருந்தனர்..

“வாங்க, வாங்க.. “ என்று வினோத் வாயில் வரை வந்து அழைத்து சென்றான்.. உள்ளே அவனைப் போலவே நிறைய இளம் ஆண், பெண்கள் இருக்க எல்லோரயும் அவர்களுக்கு அறிமுகம் செய்தான்.. எல்லோரும் அவர்களின் அத்தை பிள்ளைகள்..  எல்லோரையும் பார்த்து காதுவும், நீலாவும் சந்தோசப்பட, தீபனும், கனிகாவும் வந்தனர்..

அவர்களை முறையாக பவன் அறிமுகப் படுத்தி வைக்க அவர்களும் எல்லோரையும் பார்த்து மகிழ்ந்தனர்.. கடைசியாக வந்தவர்களைப் பார்த்து எல்லோருக்கும் மிக ஆச்சரியம்.. ஆம், நீலாவின் தந்தையும், அவர்களது சகோதரிகளும் வந்தனர், அவர்கள் கணவன்மாருடன்.

தனது உடன்பிறந்தவர்கள் அனைவரையும் குடும்பத்துடன் பார்த்த சடகோபன் எல்லோரையும் பார்த்து கண்ணீர் வடித்தார்.. சகோதரிகளும் கண்ணீர் வடிக்க அங்கு ஒரு பாச மழை உருகி ஓடியது..

“ரொம்ப நன்றி மாப்பிள்ளை.. என் வாழ்நாளில் நடக்காது என்று நினைத்து இருந்த காரியத்தை சாதிச்சுடீங்க.. என்னோட பிள்ளைங்களுக்கு என்னோட உறவே தெரியாம போயிடும்னு நினைத்து கவலையோட தான் இருந்தேன்..

அந்தக் கவலையும் இப்ப தீர்ந்திடுச்சு.. இவங்களை அறிமுகப் படுத்த கூட எனக்கு தைரியம் இல்லாம இத்தனை நாள் இருந்ததை நினச்சு எனக்கு வெட்கமா இருக்கு..”

“அப்படி இல்லை மாமா, உங்களோட நிலமை அப்படி.. அதைப் பத்தி இப்ப எதுக்கு..? இருக்கிற சந்தோசத்தை அனுபவிங்க..”

அதற்குள் அருகில் வந்த நீலாவிடமும், காதுவிடமும் எப்படி இருக்கீங்கம்மா..? என்று அன்புடன் வினவினார்.

ரொம்ப நாள் கழித்து அப்பவைப் பார்த்த இரு பெண்களும் கண் கலங்கினர். அம்மா எப்படி இருக்காங்கபா..?”

“ம்ம்.. அப்படியே தான் இருக்கா.. சரி பார்க்கலாம் இன்னும் கொஞ்ச நாள் போனா என்ன மாற்றம் தெரியுதுன்னு..” 

“நீலா எப்படிம்மா இருக்கே..?’

“இருக்கேன்பா..” மகளின் பதிலில் ஏதோ சுரத்திலாது போலே தென்பட்டது.. அவருக்கு..  ஆனாலும் புருஷன், பொண்டாட்டி விவகாரத்தில் ஓரளவுக்கு மேல் கேட்க முடியாதே, ஆதலால் தயங்கினார்..

எல்லோரும் சாப்பிட அழைக்கவும் அங்கு சென்றனர். பபே முறையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.. மூன்றாவது தங்கையிடம் சென்ற சடகோபன், மருமகனுக்காக பரிந்து பேசினார்..

‘எல்லாரும் அப்படி இருக்கமாட்டாங்க தங்கம்.. நீ கொஞ்சம் உன் மகனை நினைச்சு பாரு… அந்தப் பெண்ணும் நல்ல பொண்ணாத்தான் தெரியுது.. சொல்லப் போனா இன்றைய நம்ம எல்லோரோட சந்திப்பே அந்தப் பொண்ணு, உன் பையன், என்னோட மாப்பிள்ளை இரண்டு பேர் இவங்க எல்லோரும் தான் ஏற்பாடு பண்ணி இருக்காங்க..” என்று சொல்லவும், ஏற்கனவே மகனை பிரிந்த சோகம், அதுவும் மித்ராவை பார்த்ததும், பேத்தி என்ற பாசமும் அலைக்கழிக்க, மகனை அணைத்துக் கொண்டார்.

மருமகளிடமும் இணக்கமாய் பேச, வினோத்துக்கும் ரோஷிணிக்கும் மிகவும் சந்தோசம்.. பவனை கட்டி பிடித்து, “ரொம்ப தேங்க்ஸ் ப்ரதர்.. நீங்க வெளி ஆள் என்றாலும், எனக்கு சமயத்துல உதவிட்டீங்க… இதை நான் மறக்கவே மாட்டேன்.. உங்க பிரச்சினையும் சீக்கிரம் சரி ஆகும்.. கவலைப் படாதீங்க..” என்று சொன்னான்.

வரவர, எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் போவதை பார்த்த நீலாவுக்கு இது தான் தானா என்று இருந்தது.. தன் வாழ்க்கையே இந்த ஆறுமாதத்தில் தலைகீழாக மாறிப் போனதை நினைது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.. தங்கையின் வாழக்கையை அருகில் இருந்து பார்த்த போது கணவன், மனைவியாக வாழும் வாழ்க்கையில் ஆசையும், வினோத், ரோஷிணியை பார்க்கும் போது அந்தப் புரிதலும், அன்யோன்யமும், மித்ராவைப் பார்க்கும் போது தனக்கும் இத்தனை அழகாக, அறிவாக ஒரு குழந்தை இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமும், அண்ணன், கனிகாவை பார்க்கும்போது. தன்  உடன் பிறந்தவனா, இத்தனை அனுசரணையாய்  மனைவியின் உறவினர்களிடத்தில் என்றும், கடைசியாக பவனைப் பற்றி நினைக்கையில், இனி இவனைப் பிரிந்து எப்படி இருப்பது என்ற எண்ணமும் தலை  தூக்க, முதன் முதலாய் தன் மனதில் தோன்றிய எண்ணங்களை மறைக்க முடியாமல் எப்போதும் குழப்பத்துடனே இருந்தாள்.

குழப்பம் வந்தால் தான் தெளிவு வரும் என்று அவளை எப்போதும் தனியாகவே விட்டு விட்டனர், காதுவும், தில்லையும்.. பவனுக்குமே இதற்கு மேல் ஒருத்தியிடம் வாழ்க்கை பிச்சை கொடு என்று கெஞ்ச  அவனது தன்மானம் இடம் கொடுக்காததால், இனி எந்த முடிவு எடுத்தலும் அவளே முதல் அடி வைக்கட்டும், என்று தனது வேலையில் பிசி ஆகிவிட்டான். 

வழக்கம் போல் மாலை மித்ராவை அழைத்து வந்து விளயாட்டு காட்டிக் கொண்டு இருந்தவள், தில்லையும், காதுவும் வெளியே கிளம்புவதை பார்த்து எங்கே என்று கேட்கலாம் என்று வாயை  திறக்க நினைக்கையில், அக்கா, அவசரமா வெளியே போறோம்.. வந்து சொல்றேன்..” என்று கூறி விட்டாள்.

அன்று பார்த்து, பவனும் தில்லையிடம் நான் லேட்டா சாப்பிட்டுதான் வருவேன்.. எனக்காக வெய்ட்  பண்ணவேண்டாம் என்று  சொல்லிடு..” என்று கூறி இருந்தான்.. 

ஆனால் காது சொன்ன விஷயத்தை கேட்ட தில்லைக்கு மற்ற எல்லா விசயங்களும் மறந்து போக, அவன் அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்று விட்டான்.

“கங்கிராட்ஸ் தில்லை..  நீங்க அப்பா ஆக போறீங்க..” வழக்கமாக எல்லா டாக்டரும் சொல்லும் நல்ல விசயத்தை சொல்ல, விட்டால் அங்கேயே மனைவியை இறுக்கி உம்மா கொடுக்கும் உத்தேசத்துடன் பாய்ந்தவனைப் பார்த்து டாக்டர் அலறி, நர்ஸ் உள்ளே வந்து ஏக களேபரம் ஆனது தான் மிச்சம்..

“மேடம் நீங்க உங்க ஹஸ்பண்டை கூட்டிட்டு கொஞ்சம் வெளியே போறீங்களா..? என்று அந்த இளவயது டாக்டர் பயந்து கொண்டே காதுவைப் பார்த்து சொல்ல, “சாரி மேம்.. அவருக்கு என் மேல லவ் கொஞ்சம் ஓவர்..” என்று பெருமையுடன் சொல்லி வெளியே வந்தாள் காதம்பரி..

“என் டார்லிங், புஜ்ஜிம்மா.. தேங்க்யூடா செல்லம்..” மனைவியின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய்வனை பார்த்து மற்றவர்கள் சிரிக்க, “என்னங்க சும்மா இருங்க..” என்று அழகாக காதம்பரி வெட்கப்பட்டாள்..

“அட விடும்மா.. எல்லார் வீட்டிலேயும் நடக்கிறது தான்.. இப்ப நேரா ஹோட்டல்.. அப்புறம் வீட்டுக்கு போவோம்..” என்று அவளை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றான்.. 

அவளுக்கு பிடித்தது எல்லாம் பார்த்து, பார்த்து ஆர்டர் செய்து, சாப்பிட வைத்தான்.. அங்கிருந்தே தனது வீட்டுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லவும் அவர்களும் மிகவும் சந்தோசம் அடைந்தனர்.

“டேய் இந்த நேரம் ரெஸ்ட் எடுக்கணும். அவளை நம்ம வீட்டில கொண்டு வந்து விடு. நான் பார்த்துக்கிறேன்..” என்று அம்மா சொல்ல, “சரி அம்மா.” என்றான்.

வீட்டுக்கு இருவரும் போகும்  போது மணி பத்து.. அது வரை பொழுது போகாமல் டிவியை நோண்டிக் கொண்டு இருந்த நீலா, “காது என்ன விஷயம்..? ஒரே ஹாப்பியா இருக்கிற மாதிரி இருக்குது..”

“அக்கா..” என்று அருகில் வந்து உட்கார்ந்தவள் “நீ பெரியம்மா ஆகப் போறே..” என்று சொன்னதும்..

“ஏய் கங்கிராட்ஸ்.. இதுதானா.. செக் பண்ணிட்டியா.. ?”

“ஆமா.. டாக்டர் கிட்ட போய்ட்டுதான் வாரோம்.. எல்லாம் கன்பார்ம்தான்..”

“ஓ.. அம்மா கிட்ட சொன்னியா..”

“இல்லை.. இனிமேல்தான் சொல்லணும்.. ஆனால் எப்படி எடுத்துப்பங்கன்னு தெரியலை….!” என்று தங்கை சொன்னதும் அவளுக்கும் அது சரி என்றே தோணியது..

அதற்குள் பெட் ரூமில் இருந்து தில்லை அழைக்கும் சத்தம் கேட்டு காது போய் விட்டாள். அடுத்து அவள் சாப்பிட வருவாள் என்று காத்திருக்க அவர்கள் கதவை அடைத்து விட்டு படுத்து விட, இவள் பவனை எதிர்பார்த்தாள். இவளுக்கு தனியா பெரிதாய் எதுவும் சமைக்க தெரியாது. கூட யாரவது கிச்சனில் இருக்க வேண்டும்.. இப்போது பசித்தது.. ஆனால் கூட யாரும் இல்லை.. வெறுப்பாக இருந்தது..

பேசாமல் போய் படுத்து விட்டாள். அப்படியே தூங்கியும் விட்டாள். இரவு ஒரு மணிக்கு வந்த பவனும் அவளை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று நினைத்து அப்படியே படுத்து விட்டான்.

காலையில் செம பசியுடன் எழுந்து வந்தவள் கிச்சனில் பவன் மட்டுமே நிற்பதை பார்த்து, “நேத்து எப்ப வந்தீங்க..?”

“ஒரு மணிக்கு..”

“லேட் ஆகும்னா ஒரு வார்த்தை  சொல்ல மாட்டேங்களா..?’

“ஏன் உன் கிட்ட போன் இருக்குல்ல..” என்றவன் தனக்கு காபி கலப்பதில் முனைய, “காது எங்க..? எழுந்து வரலியா..?”

பதில் சொல்லாமல் நகர முற்பட. “எனக்கு காபி..” என்றாள். அவளையே உற்று பார்த்தவன், “உனக்கு நீயே கலக்கிகோ..”

“நேத்தே சாப்பிடலை..” அவளது குரல் அவனை தடுத்து நிறுத்தியது.. தன கையில் உள்ள காபியை அவளிடம் கொடுத்தவன், “இதைக் குடி.. நான் எனக்கு கலந்துக்கிறேன்..” என்று கலக்க ஆரம்பித்தான்..

“ஹாய் சகலை குட் மார்னிங்.. டேய் ஒரு குட் நியூஸ்டா..” என்றவன் அவனிடம் விஷயத்தை சொல்ல, பவன் அவனை கட்டிக் கொண்டான்.. 

தில்லைக்கு காபி எடுத்துக் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தவன் “சகலை ஒரு விஷயம், எனக்கு ஒரு உதவி வேணும். நான் காதுவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு நினைக்கிறேன்.. இன்னும் கொஞ்ச நாள் தானே.. நீ அண்ணி கூட தனியா  இங்க சமா ளிச்சுக்குவே இல்ல..” என்று கேட்க வேறு வழி  இல்லாமல், “சரி..” என்றான்.

இன்னும் இரண்டு நாளே இருந்தது.. ஆறு மாதம் முடிவு அடைவதற்கு.. நாளை இரவு அவள் வீட்டுக்கு செல்லலாம்.. பவனுக்கு இரண்டு நாளாய் ஒன்றுமே ஓடவில்லை.. அவனிடம் பேச எல்லோருக்கும் தயக்கமாக இருந்தது.

இன்று ஒரு நாள்.. இந்த எண்ணத்தோடு எழுந்தவன் முன்னால் காபியோடு புன் சிரிப்பாய் நின்றாள் நீலா..

“குட்மார்னிங்..”

“குட் மார்னிங்..”

“சீக்கிரம் பிரஷ் பண்ணிட்டு வாங்க.. இன்னிக்கு புல்லா என்னோட ட்ரீட்..” என்றவள், அவனை இழுத்துக் கொண்டு போய் பாத்ரூமுக்குள் தள்ளி விட்டு வந்தாள்.

காபி குடிக்கும் போதே கிச்சனில் அவள் ஏதோ செய்வது தெரிந்தது.. அவன் கிச்சன் பக்கம் வரவே விடவில்லை.. சாப்பிட வந்த போது மேஜையில் எல்லாம் தயாராக இருந்தது..

பூரி, கிழங்கு, இட்லி, சாம்பார், சட்னி.,. பரிமாறி விட்டு “எப்படி  இருக்குன்னு சொல்லுங்க..?” 

அவன் ருசியே அறியவில்லை.. “நல்லா  இருக்கு..” என்று சொன்னான்,

“குத்தாலம் போய் வந்த பிறகு   நீங்க ரொம்ப பிசியாவே இருக்கிற மாதிரி இருக்கு.. இன்னைக்கும் போகணுமா..?”

“இல்லை.. வெளியில் போகலாம்.. லஞ்ச என்னோட ட்ரீட்..” என்றவன் தன்  முகத்தை மறைக்க, அறைக்குள் நுழைந்து கொண்டான்..

மதியமும் முயன்று அவளுக்கு இணையாக பேசி சிரித்தவன், மனதுக்குள் அவளுக்கு வீட்டுக்கு போகும் சந்தோசம் என்று தவறாக புரிந்து கொண்டான்.. 

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 9 சராசரி: 4.6]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

30 நாள், 30 சின்ன கோலங்கள்

ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே-20