in

கடவுள் அமைத்து வைத்த மேடை -17

 அத்தியாயம் 17 

நீங்க ஜே.ஜே கம்பெனி சடகோபன் அங்கிள் பொண்ணுதானே..?” 

“ஆமாம்.. அப்பாவை உங்களுக்கு தெரியுமா..?”

‘ஆமாம், எங்க தாய் மாமா தான் அது.. நான் உங்க மூன்றாவது அத்தை பையன்..” 

“அப்படியா..” என்றாள் ஆச்சரியமாக..

அங்கிருந்த பென்ச் ஒன்றில் அமர்ந்து இருவரும் பேசினர்.. ”எங்க எல்லோர் கல்யாணத்திற்கும் மாமா மட்டும் வந்து இருக்கார்.. முகூர்த்தம் முடிந்ததும் உடனே கிளம்பி விடுவார்.. உங்களை நாங்கள் உங்கள் கம்பெனி பதவி ஏற்பு விழா பேப்பரில் வந்த போது பார்த்தோம். அப்போது மாமாவும் போட்டோவில் இருந்ததால் எங்களுக்கு தெரிந்தது..”

“அம் சாரி.. அப்பா கிட்ட நாங்க கேட்டது கிடையாது.. அதனால் எங்களுக்கு தெரியலை..  உங்க கூடப் பிறந்தது எத்தனை பேர்..?”

“மொத்தம் நாலு அத்தை, உங்களுக்கு. எல்லோருக்கும் ஆண், ஒண்ணு பெண் ஒண்ணு.. மொத்தம் எட்டு பேர்..”

“ஓ.. அப்படியா..”

“ஆமாம் நான் மட்டும் தான் லவ் மேரேஜ் பண்ணி கிட்டேன். மாமாவ பார்த்து எல்லோருக்கும் பணக்கார வீட்டு  பொண்ணு என்றதும் பயந்து போய் என் லவ்வுக்கு பயங்கர எதிர்ப்பு.. ஆனால் அவ அப்படி இல்லை.. அதை எப்படி புரிய வைக்கன்னு தெரியலை….!’

“ஓ..” இப்படி கூட நடக்குமா என்று ஆச்சரியமாய் இருந்தது. அவர்கள் பேசிக் கொண்டு இருக்கையில் பவன் பைக் உள்ளே வந்ததோ, அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றதோ தெரியாது. 

“நீங்க எப்படி இங்கே..?” அவன் ஆச்சரியமாக வினவினான். அவனின் சந்தேகம் புரிந்தது. அம்மாவின் குணத்துக்கு அவள் இங்கே இருப்பது குறித்து விளைந்த ஆச்சரியமே அது..

அவனிடம் “நீங்க உங்க வொய்ப் கூட்டிட்டு கொஞ்ச நேரம் கழித்து எங்க வீட்டுக்கு வாங்க.. உங்களுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருக்கு.. உங்க பொண்ணுக்கு எங்க வீடு தெரியும்..” என்று கூறி  விட்டு  கிளம்பினாள்.

வீட்டுக்கு வந்த போது, பவன், தில்லை  இருவருமே வந்திருக்க பவன் காபி போட முயற்சித்துக் கொண்டு இருந்தான்.

“வந்துட்டீங்களா.. எப்ப..?”

“நாங்க வந்து அரை மணி நேரம் ஆச்சு.. நீதான் ரொம்ப முக்கியமான மீட்டிங்ல இருந்தீங்களே..?”

அவன் பேச்சில் இருந்த குத்தலை கவனிக்காமல் “ஒரு ஆச்சரியமான விஷயம், நம்ம  வீட்டுக்கு எதிர்த்த பிளாட்ல உள்ளவங்க எங்க அப்பாவோட அக்கா  பையன்.. அது எனக்கு இப்பதான் தெரிஞ்சது.. அந்தக் குழந்தையும் அதோட அம்மாவும் தான் எனக்கு தெரியும். இன்னைக்கு அந்தக் குழந்தையை பார்த்தப்போ அவர் அப்பா அறிமுகம் ஆனார். அப்பத்தான் விஷயம் தெரிந்தது.. இப்ப அவங்க இங்க வருவாங்க…”

“ஓ..” என்றவன் வேறு ஒன்றும் பேசவில்லை.. 

தனது காபியை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.. சரி ஏதோ வேலை  இருக்குது போல என்று நினைத்து நீலாவும் அமைதியாய் ஹாலில் வந்து டிவியை ஆன் செய்தாள். தில்லையும், காதுவும் அறையை விட்டு வெளியே வர “என்ன காது இவ்வளவு நேரம் தூக்கம்..?”

“தெரியலை ரொம்ப டயர்ட் ஆக இருந்தது.. நீ என்ன செஞ்சே..?”

 “நான் கொஞ்ச நேரம் கீழே போய் இருந்தேன்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்..”

“என்ன சர்ப்ரைஸ்..?”

“பொறு.. இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்..” என்றதும் அவள் கிச்சனுக்கு சென்று காபி எடுத்து வந்து தில்லையிடம் கொடுத்து விட்டு தானும் குடிக்க உட்கார்ந்தாள்.

அப்போதுதான் அவள் காபி குடிக்காதது நினைவு வந்தது.. பவன் குடித்தானா என்ற கேள்வி மனதில் எழ நேராக அவர்களது அறைக்கு சென்றாள். அங்கு பால்கனியில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டு இருந்தவனிடம் “காபி குடிச்சாச்சா..?” என்று கேட்க..

“ம்ம்..” என்று மட்டுமே பதில் வந்தது.. தனக்கு மட்டும் சேர்த்துக் கொள்ள சோம்பேறித்தனப் பட்டு வெளியில் வந்து திரும்பவும் டிவி முன்னால் அமரப் போகும் போது காலிங்  பெல் ஒலிக்கும் ஓசை கேட்டது. 

விரைந்து சென்று கதவு திறந்தவள் அங்கு நின்ற மூவரையும், “வாங்க, வாங்க..” என்று அழைத்தாள். உட்காருங்க என்று சோபாவை காட்டியவள், உள்ளே சென்று பவனை அழைத்தாள். 

உள்ளே அவளை முறைத்தவன் வெளியே வந்து இன்முகமாய், “வாங்க.. அம் பவன்..” என்று வந்தவனை கைகுலுக்கி வரவேற்றான். அதற்குள் தங்கையை அழைத்து வந்தவள் “இது என்னோட தங்கை காதம்பரி..” என்று அறிமுகப்படுத்த  அவர்கள் திகைப்புடன் இவளை பார்த்தனர்.

“காது, இது நம்ம மூன்றாவது அத்தையோட பையன்.. பெயர்..” என்று அவள் தயங்க..

“வினோத்.. இவள் ரோஷிணி, எங்க ஒரே செல்லம் சங்கமித்ரா…” என்று அறிமுகப் படுத்திக் கொண்டான்.

“இவர் தில்லை.. தங்கை ஹஸ்பண்ட், இவர் என்னுடைய ஹஸ்பண்ட்..” என்று அறிமுகப் படுத்தி வைத்தாள். ஆண்கள் மூவரும் வேலையை பற்றி பேச ஆரம்பிக்க இவர்கள் இருவரும் வந்தவர்களுக்கு காபி போட என்று கிச்சனுக்குள் நுழைந்தனர். 

பின்னாலேயே ரோஷிணியும், குழந்தையும் கிச்சனுக்குள் நுழைந்து விட்டனர். “இப்பத்தான் இவர் வந்து உங்க வீட்டை பற்றி சொன்னார்.. நீங்க எப்படி இங்க தனியா..?” என்று அவள் கேட்க.. “அது தனி கதை.. அதை அப்புறம் பேசலாம்…. காபி குடிங்க..” என்று அவள் கையில் திணித்து விட்டு.. “குட்டிம்மாவுக்கு என்ன வேணும்..?” என்று குழந்தையை தூக்கிக் கொண்டாள்.

காது மற்ற எல்லோருக்கும் காபி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர, இவள் மித்ராவுடன் வந்து அமர்ந்தாள். அவள் மடியில் இருந்து கொண்டு மித்ரா அவளிடம் பேசுவதற்கு பதில் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

ஆண்கள் மூவரும் ஒரே வயது என்பதால் அவர்கள் சீக்கிரம் நண்பர்கள் ஆகி விட்டனர்.. மேலும் வினோத்திற்கு இவர்களைப் பார்த்ததும் ஓரளவு நிலைமையை கணித்து விட்டான்..

“அப்ப நாங்க கிளம்பறோம்..” என்று அவர்கள் கிளம்பினர். ஆனால் மித்ரா கிளம்ப மறுக்கவே தானே கொண்டு வந்து விடுவதாக வாக்களித்தாள்.

காதுவும், நீலாவும் குழந்தையுடன் ஐக்கியமாகி விட  இவர்கள் இருவரும் வெளியில் சென்று வருவதாக கூறி வினோத்தின் வீட்டிற்கு சென்றனர். அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் மூவரும் கூடி தங்களது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

“தேதி மட்டும் என்னைக்குன்னு போன் பண்ணி சொல்றோம்..” என்று சொல்லி கிளம்பி வீட்டுக்கு வந்தனர்..

“காது டார்லிங்..” என்று கத்தி கொண்டே உள்ளே நுழைந்த தில்லையை பார்த்து மித்ரா வாய் பொத்தி சிரித்தது..

‘ஏய் எதுக்கு சிரிக்கிற…?” என்று  மெல்ல மித்ராவிடம் நீலா கேட்க..

“அந்த அங்கிள் லவ் சொல்லி கூப்பிடறார்.. அந்த ஆன்ட்டியை..” என்று காதம்பரியை கையை கட்டியது..

புரியாமல் அக்காவும், தங்கையும் விழிக்க.. ஆன்ட்டி நீங்க இப்போ கோபமா முகத்தை வச்சுக்கோங்க..!” என்று சொல்லி கொடுத்தது.

“அப்படின்னா..!”

“இப்பிடி..” என்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு சோபாவில் திரும்பி உட்கார்ந்து கொண்டது..

“அப்புறம்..”  என்று மித்ராவிடம் கேட்க..

உள்ளே வந்த தில்லை நிஜமாகவே அவள் திரும்பி இருப்பதை பார்த்து, “புஜ்ஜிம்மா, நான் போகும் போது சரியாதானே இருந்தே.. அதுக்குள்ளே என்ன டார்லிங் ஆச்சு..?” என்று கேட்டு அருகில் வந்து அவள் முகத்தை திருப்பினான்.

இன்னொரு சோபாவில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மித்ராவும், நீலாவும் முகத்தை புத்தகத்தில் மறைத்துக் கொண்டு எட்டி, எட்டி பார்த்து சிரிப்பதை பார்த்த பவன், இவர்களது திருவிளையாடலை புரிந்து கொண்டான்.

“வந்த சிரிப்பை கடைவாயில் அடக்கிக் கொண்டு, “”விடுங்க என்னை..?” என்று பிகு பண்ண, உண்மையிலேயே கோபம் என்று நினைத்து “டார்லிங் நீ எப்ப வேணா கோபமா இரு.. ஆனால் நைட் மட்டும் வேண்டாம்.. மாமா பாவம் இல்ல..” என்று பிட்டு போட..

“ஐயோ அங்கிள், மாமா இல்ல.. அத்தான் சொல்லணும்…” என்று மித்ரா இடையில் புக, கலகலவென்று நீலா சிரித்தாள். கூடவே காதுவும், சிரித்துக் கொண்டு திரும்ப, தில்லை முகத்தில் வழிந்த அசடை பாக்க சகிக்கவில்லை.

தனது அருகில் இருந்த துண்டை எடுத்து அவன் முகத்தில் எறிந்த பவன் “துடைச்சுக்கோடா..” என்றான்..

“ஆன்ட்டி அந்த அங்கிள் இந்த மாதிரி உங்களை கொஞ்ச மாட்டாரா..?” என்று கேட்ட குழந்தை, “எங்க அப்பா  வீட்டுக்கு வந்துட்டாலே, எங்க அம்மாவுக்கு கோபம் வந்திடும்.. எங்க அப்பா கொஞ்சிட்டே இருப்பார். அங்கிள் மாதிரி..” என்று தங்கள் வீட்டு கதையை ஒலி  பரப்பியது.

வாசலில் நிழலாட பார்த்தால் வினோத்.. “வாங்க..” என்று பவன் அழைக்க, “இப்பத்தான் உங்க வீட்டு லைவ் ஸ்டோரி கேட்டுட்டு இருந்தோம்..” என்றான் தில்லை  நமட்டு சிரிப்புடன்..

“ஐயோ அதுக்குள்ளே  சொல்லிட்டாளா குட்டிம்மா..?” என்று அழகாக வெட்கப்பட்ட வினோத்து மகளை தூக்கி கொஞ்சிக் கொண்டே, “சரி  வர்றேன்.. குட் நைட்.. சொல்லிட்டு வா மித்து..” என்று மகளிடம் சொல்லி, அவள் சொன்னதும் தூக்கிக் கொண்டு சென்றான்.. 

“அப்பாடி இந்தக் காலத்து பிள்ளைங்க கிட்ட உஷாரா இருக்கணும்..” என்று சொல்லி உப்பென்று வாயை ஊதியவன், “ஏய் உங்களுக்கு விளையாட நான் தான் கிடைச்சேனா… இவன் இல்லை.. இவன் கிட்ட போட்டு பார்க்க வேண்டியதுதானே..”

“அத்தானா  உங்களை மாதிரி உள்ளே வரும் போதே டார்லிங்னு ஜொள்ளிட்டு வர்றார்..” என்று காதுவே அவனை வார.. வேறு வழி  இல்லாமல் “ஹி.. ஹி..” என்ற தில்லை..

“என்னதான் சொல்லு காது வீட்டுக்குள்ளே வரும் போதே கண்ணு ரெண்டும் உன்னை தேடுதே.. அந்த லவ் தான்..” என்று அவன் ஆரம்பிக்கும் போதே..

தலையில் அடித்துக் கொண்டு தனது அறைக்குள் பவன் சென்றான். பின்னாலேயே சென்ற நீலா, ‘அவர் பொண்டாட்டி அவர் கொஞ்சிட்டு போறார்.. உங்களுக்கென்ன..? உங்களுக்குத்தான் அந்தக் குழந்தை சொன்ன மாதிரி கொஞ்ச தெரியலை.. என்ன பண்ணறது..? எல்லாம் என் தலை எழுத்து.. அவங்களாவது சந்தோசமா இருக்கட்டும்..” என்று சொல்லி  கட்டிலில் படுத்து விட்டாள்.

அவள் என்ன சொல்கிறாள் என்று உணராமலே சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்த சரவண பவன் “ஏய் எனக்காடி உன்னை கொஞ்ச தெரியாது.. எல்லா ஆசையையும் கல்யாணமான நாள்ல இருந்து மனசுக்குள்ள புதைச்சிட்டு நடமாடற என்னைப் பார்த்து எல்லாம் சொல்லுவடி.. ஆமா நீ என்ன இங்க நிரந்தரமா தங்கபோறேன்னு உங்கம்மா கிட்ட சொல்லிட்டு வந்தியா என்ன..? என்னமோ என் மேல காதல்ல உருகிக் கரையிறவ மாதிரி பேசறே.. ஐந்தாவது மாதம் நடக்கு.. இன்னும் ஒரே மாதம்.. அப்புறம் நீ யாரோ…? நான் யாரோ..?” என்றவன் கதவை அறைந்து சாத்தி விட்டு வெளியே  சென்றான்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 10 சராசரி: 4.6]

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

என் நித்திய சுவாசம் நீ 17

என் நெஞ்சமே உன் வாழ்வின் எல்லை 13