in

செந்தேன் பூவே…28!!

அத்தியாயம் 28

அதிகாலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்விழித்த, மஞ்சரி தான் ஒரு கதகதப்பான இடத்தில் இருப்பதை உணர்ந்து, திடுக்கிட்டு எழப்போக.. அவளை எழவிடாமல் இரு கரங்கள் அவளை வழைத்திருந்த்து. அவள் அண்ணாந்து பார்க்க.. அவளின் முகத்திற்கு வெகு அருகே அவளின் வினுவின் முகம் இருக்க, அவன் மார்பில் முகம் புதைத்து , தன்னவனின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தாள். கண்மூடி படுத்திருந்தவளுக்கு நேற்று நடந்ததும் நினைவிற்கு வந்தது. ‘என் மடியில தான வினு படுத்திருந்தாங்க.. அப்பறம் எப்படி..இங்க?; என்று யோசித்தவளை.. “ரொம்ப யோசிக்காதடா பப்ளி நான் தான் உன்னை படுக்க வச்சேன்” விபா கண்ணை திறக்காமல் சொல்ல,

”வினு முழிச்சுட்டீங்களா…? காய்ச்சல் இப்ப பரவாயில்லயா..? கேட்டவள் அவன் நெற்றியில கை வைத்து பார்க்க.. “காய்ச்சல் இருக்கான்னு இப்படி பார்க்க கூடாது பப்ளி..” கண்ணை திறக்காமல் சொன்னவன், அவளுக்கு வலை வீச, “ நெத்திலயும், கழுத்திலேயும் தான் கைவச்சு பார்ப்பாங்க… வேற எப்படி பார்ப்பாங்க..?”  என்று கேட்டு, அவன் வலையில அழகாய் சிக்கினாள் மஞ்சரி. “இங்க பக்கத்துல வாடா சொல்றேன்..” ஹஸ்கி குரலில் சொல்ல… “இன்னும் இதுக்கு மேல எப்படி வினூ பக்கத்தில வர்றது..?” அவன் மார்போடு ஒட்டியபடி கேட்க…

 ”முயற்சி செய்டா.. நான் பாவம்ல” பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, “அச்சோ ஏன் வினு ரொம்ப சோர்வா இருக்கா.. அதான் இவ்வளவு மெதுவா பேசறிங்களா..?” கவலையுடன் கேட்டவள்.. அவன் முகத்தருகே தன் முகத்தை கொண்டு சென்றாள்… அவள் சொன்ன காரணத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட அந்த குறும்பன்  “ஆமாடா… ரொம்ப டையர்டா இருக்கு சத்தமா பேச முடியலை…” என்றுவிட்டு..

“சரி பக்கத்தில வா காய்ச்சல் இருக்கான்னு எப்படி பாக்கிறதுன்னு சொல்றேன்.” எனவும்  மஞ்சரி இன்னும் நெருங்கி வந்தாள்..  “கண்ணை மூடு.. பப்ளி..” என்று சொல்ல மஞ்சரியும் கண்மூட , தன் உதட்டை ஈரப்படுத்தி  அவள் உதட்டை நெருங்கும் நேரம்.. “விபா…” என்று அழைத்த படி விஷ்வா கதவை தட்டினான்..”அட கரடி..பயலே…!” விபா சத்தமாக சொல்ல மஞ்சரி வாயை மூடி சிரித்தாள்… “சிரிக்கிற இந்த வாயை…” என்றவாறு மீண்டும் நெருங்க…

”விபா..” இந்த முறை சற்று சத்தமாக குரல் கொடுத்தான். விஷ்வா.. ‘அடப்பாவி.. போன பதிவை படிச்சு ரீடர்ஸ் எல்லாரும் சோகமா இருப்பாங்க… நம்ம கொஞ்சம் ரொமான்ஸ் செஞ்சு அவங்க சோகத்த மறக்க வைக்கலாம்’ என்று நினச்சா விடுதா இந்த பக்கி.. நீ எப்பவுமே செக்கண்ட் ஹீரோ தாண்டா..இது தான் என் சாபம்..” என்று கதவை திறக்க போன நேரத்தில் இத்தனையும் முணுமுணுத்தவன்..  விஷ்வாவிற்கு கதவை திறந்துவிட்டான்..

”என்ன விபா… காய்ச்சல் சரி ஆகிருச்சா?” என்று கிண்டல் குரலில் கேட்டவன், “அது எப்படி சரியாகாமல் போகும்..? நீ ஃப்ராடுன்னு மக்களுக்கு தெரியும்.. பாவம் மஞ்சரிக்கு தெரியலை” என்று கேலி பேசியவனை விபா தீயாய் முறைத்து பார்த்தான்… “அப்பா… உஷ்ணம் ரொம்ப அடிக்குது..” மேலும் கிண்டல் செய்ய “உனக்கெல்லாம் நேரா அறுபதாம் கல்யாணம்தான் நடக்கும்..” என்று சாபம் விட்டவன் குளியலறை நோக்கி சென்றான். முகம் கழுவி வந்த மஞசரி விபாவிற்கும். விஷ்வாவிற்கும் காபி கலந்து கொடுத்து தானும் ஒன்று எடுத்து கொண்டாள்.

விஷ்வா, மஞ்சரிக்கு ஜாக்கிங் செல்லும் உடை கொண்டுவந்திருந்தவன், அதை அணிந்துகொண்டு வர சொல்ல, மஞ்சரி புரியாமல் பார்த்தாள்.. “எதுக்கு விஷ்வா இது..?” கேட்டவளிடம், ”அது… நீ நைட் இங்க..” சிறிது தயங்கினான்..” எதுவா இருந்தாலும் சொல்லுங்க விஷ்வா..” அவனை நேராக பார்த்து கேட்டாள். ” நீ நைட் விபாக்கூட தனியா தங்கி இருந்தேன்னு சொன்னால் வீட்டுல தப்பா நினைப்பாங்க..” ஒருவழியாக சொல்லி முடித்தான். விபாவிற்கு தன்னவளை பற்றி தெரியும்.. எனபதால்.. புன்னகை முகத்தோடு அமைதியாக நின்றிருந்தான்.

“நாங்க தப்பு எதுவும் செய்யலை விஷ்வா.. என்னால பொய் சொல்ல முடியாது..” என்றவள்.. “கொஞ்ச நேரம் வெயிட் செய்ங்க… வினுக்கு டிஃபன் செஞ்சு கொடுத்துட்டு வர்றேன்..” என்றவள் விபாவிற்கு காலை டிஃபன செய்து வத்தவள் அதை ஹாட்பாக்ஸில் வைத்து மூடிவிட்டு, “வினு.. கொஞ்ச நேரம் தூங்குங்க.. அப்பறமா சாப்பிடுங்க..” என்றுவிட்டு செல்லப்போனவள், “உடம்பை பார்த்துக்குங்க வினு..” என்றுவிட்டு சென்றவளை கை பிடித்து  தன்னருகே இழுத்தவன், “கடைசி வரைக்கும் காய்ச்சல் குறஞ்சிருக்கான்னு செக் செய்யவே இல்லை.. பப்ளி..” என்று பாவம்போல கேட்க…

அவள் திகைத்து விழித்தாள்..’இவன் அலம்பலுக்கு ஒரே அளவே இல்லை..’ விஷ்வா முணுமுணுத்து கொண்டே வெளியே சென்றான். அவன் சென்ற மறுநொடி மஞ்சரியின் இதழ்கள் விபாவின் இதழ்களுக்குள் அடங்கி இருந்தது. முழுதாக ஒரு நிமிடம் அவள் இதழ்களுக்குள் தன்னை தொலைத்திருந்தவன், மனமே இல்லாமல் அவளை விடுவித்தான்… போய்ட்டு வாடா பப்ளி எனக்கு காய்ச்சல் சரி ஆகிருச்சு.. எனக்காக இல்லனாலும், உனக்காக என்னை பார்த்துக்கிறேன்..சரியா..!”  மஞ்சரியின் கூந்தலை காதோரத்தில் மென்மையாக ஒதுக்கிவிட்டு சொல்ல, அவள் ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் தலை ஆட்டினாள்.

மஞ்சரியின் கைபிடித்து வெளியே அழைத்து வந்தவன்..”விஷ்வா..மஞ்சரியை யாரும் எதுவும் சொல்லக்கூடாது.. அதுக்கு நீதான் பொறுப்பு…” என்றவன்.. இப்போது  விஷ்வா விபாவை முறைத்தான்.. “வேற வழி..” விஷ்வா முறைத்தபடி சொல்ல..  விபா புன்னகையோடுஅவர்களை அனுப்பி வைத்தான்.. அவர்களை அனுப்பி விட்டு  உள்ளே வந்த விபாவிற்கு வீடு வெறுமையாய் இருப்பது போல் தோன்றியது.. 

ஒரு பெருமூச்சுடன் குளிப்பதற்காக சட்டையை கழட்டப்போவன்.. அதில் தன்னவளின் வாசம் அடிப்பது போல் தோன்ற, குணிந்து தன் மார்பை பார்த்தவன் அதை மென்மையாக நீவிவிட்டான். ‘பப்ளி…! சீக்கிரம் என்கிட்ட வாடா…பதிமூணு வருசம் பொறுத்த என்னால.. உன் காதலை என்கிட்ட சொன்ன நொடியில இருந்து.. என்னால காத்திருக்க முடியலை டா..’ தனக்குள் புலம்பியவன்.. அலுவலகம் கிளம்பி தயாராகி வந்தான்.

மஞ்சரி செய்துவைத்த உணவை ஆசையாக உண்டு முடித்தவன், அலுவலகம் கிளம்ப அவன் அலைபேசியில் அவனவள் அழைக்க…”பப்ளி நான் நல்லா இருக்கேன் என் பப்ளிக்கிட்ட வாங்கின எனர்ஜி டானிக் என்னை புத்துணர்ச்சியா ஆக்கியிருக்கு.. சோ டோண்ட் வொரி” மஞ்சரியை பேசவிடாமல் அவனே பேச.. “வினூ சேட்டை” என்றவள் போனை அணைத்தாள்  விபா உற்சாகமாக அலுவலகம் சென்றான். 

அவன் அலுவலகம் வந்தவன் தனக்கு வந்த மனுக்களை பர்ர்த்துக் கொண்டிருந்தான்.. பார்வை தற்செயலாக..குப்பை கூடையை பார்க்க.. அதில் ஈ மொய்த்து கொண்டிருந்த்து… அதில் முகம் சுளித்தவன்..  வேளையாளை அழைத்து ” இந்த குப்பை கூடையை கூட கிளீன் செய்யாமல் எல்லாரும் என்ன செஞ்சுட்டு இருக்கீங்க..?” என்று சத்தம் போடவும், அவசரமாக ஒரு பணியாள் வந்து அதை எடுத்து செல்ல போக, குப்பை கூடையில் ஏதோ  வித்தியாசமாக இருக்கவும்,

“ஒரு நிமிஷம் நில்லுங்க..எதுக்கு அதுல ஈ மொய்க்கிது… குப்பைஅய் கீழகொட்டுஙக” என்று கட்டளையிட, “அது ஒண்ணும் இல்ல சார் ஏதோ குப்பை இதோ இப்ப கிளீன் செஞ்சிட்றேன் சார்..” அதை பதட்டமாக எடுத்து செல்ல போனவனை.. “நான் அந்த குப்பையை இங்க கொட்ட சொன்னேன்” கைகளை கட்டிக்கொண்டு அழுத்தமாக சொல்ல, அந்த பணியாள் பயத்துடன் அவன் சொன்னதை செய்தான். அதில் ஒரு பேப்பரில் மட்டும் அதிகமாக ஈக்கள் மொய்க்க விபா அதை எடுக்க சொல்ல, ’எங்களை காப்பாத்துங்க..’  என்று ஒரே வரியில் ரத்தத்தால் எழுதியிருந்தது. அத தாளில்.. அதை பார்த்து திகைத்து நின்றவன்.. “இது எங்க இருந்து வந்திருக்கு..? இதை யாரு குப்பையில் போட்டது?” என்று கோபத்தோடு கேட்டவன்.. அந்த தாளை ஆராய்ந்து பார்த்தான்..

“சார் இது யாரோ உங்கக்கிட்ட விளையாட்றாங்க சார். நீங்க டென்சன் ஆகாதிங்க” என்று சொல்ல.. விபாவிற்கு இந்த மாதிரி அனுபவங்கள் நிறைய நடந்ததால், ‘அப்படியும் இருக்குமோ.?’ என்று யோசித்தவன், “ம்ம்.” என்றுவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றான். அவன் அந்தப்புறம் நகர்ந்ததும்.. இங்கிருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர், ”இது யாரு அனுப்பியிருக்காங்கன்னு தெரியலையே.. அவங்கக்கிட்ட சொல்லி எச்சரிக்கையா இருக்க சொல்லணும்’ மனதில் சொல்லிக்கொண்டு..அங்கிருந்த குப்பையை அக்ற்றினான்

இருவரும் வீட்டிற்கு வர, விஷ்வாவின் அன்னை அடுப்படியிலும், மற்றவர்கள் இன்னும் அறையை விட்டு வெளியே வரததால், இவர்களை கவனிக்கவில்லை…  மஞ்சரி வந்ததும் பாட்டியை பார்க்க சென்றவள், அவர் இன்னும் தூங்கி கொண்டு இருக்கவும், தன்னறைக்கு வந்தவள்.. குளித்து முடித்து கீழே வந்தாள். பாட்டியை பார்க்க போனவள் அங்கு சிவாங்கி பாட்டிக்கு உடம்பு துடைத்துவிட்டு கொண்டிருந்தாள். இப்பொழுதெல்லாம் பாட்டிக்கு தேவையானதை இருவரில் ஒருவர் செய்து வந்தனர். 

மஞ்சரி ஷிவாங்கியை பார்த்ததும்  அவளை இறுக அணைத்து.. கொண்டாள். “என்னாச்சுக்கா..?” ஷிவாங்கியும் பதிலுக்கு அணைத்து கொண்டு கேட்க.. “சும்மா உன்னை கட்டிகணும் தோணுச்சு ஏன் செய்யக்கூடாதா..?” என்று கேட்க.. “க்குக்கும்” வாசலில் சத்தம் கேட்க பெண்கள் இருவரும் திரும்பி பார்த்தனர். அங்கு விஷ்வா மஞ்சரியை முறைத்து பார்த்தபடி நின்றிருந்தான். “உன் ஆளு காதுல புகை வருது நான் தள்ளியே நிக்கிறேன்” என்றவாறு பாட்டியின் அருகில் அமர்ந்து அவருடன் பேசி கொண்டிருந்தாள். பாட்டிக்கு இப்போது லேசாக பேச்சு வர ஆரம்பித்திருந்தது. பின்பு இருவரும் பாட்டியை கை தாங்கலாக சக்கர நாற்காலியில் அமர வைத்து ஹாலிற்கு அழைத்து வந்தனர்.

அனைவரும் காலை உணவு உண்டு முடித்ததும், விஷ்வா ஷிவாங்கியை தன்னுடன் பண்ணைக்கு வருமாறு அழைத்தான். “ஷிவா நீ எதுவரைக்கும் படிச்சிருக்க..?”  திடீரென மஞ்சரி கேட்டாள்.. விஷ்வா வரும் வழியில் மஞ்சரியிடம் ஷிவாங்கியை பற்றி சொல்லியிருந்தான்.. ஷிவாங்கி மஞ்சரியிடமும், மீனாட்சியிடமும் தான் ஆசிரமத்தில் வளர்ந்ததை பற்றியும், பிறகு வசந்தியிடம் வந்ததையும் மேலோட்டமாக சொல்லியிருந்தாள். இப்பொழுது விஷ்வா முழுதாக சொல்லவும், ஷிவாங்கி பட்ட கஷ்டத்தை நினைத்து வருத்தம் 

அடைந்தாலும்..தைரியத்தை  நினத்து பெருமையாக இருந்தது…அதனால் தான் வந்ததும் ஷிவாங்கியை அணைத்து கொண்டாள். “நான்.. “ ஷிவாங்கி ஏதோ சொல்லவர..”இப்ப எதுக்கு? அதெல்லாம்” விஷ்வா மறுத்து பேச, “காரணமாகத்தான்” என்றவள் நீ சொல்லு ஷிவா..” எனவும் “நான் பிளஸ்டூ முடிச்சிருக்கேன் அக்கா..” எனவும்

“மேற்கொண்டு படிக்க ஆசை இல்லையா..?” என்று கேட்க.. அவள் கண்களே..  எவ்வளவு ஆசை என்று காட்டி கொடுக்க… “நீ படிச்சு என்ன ஆகணும் நினைச்ச சிவா..” மஞ்சரி ஷிவாங்கியின் மனதை அறிய கேட்க..நான் ஆசிரமத்துல் வளர்ந்த வரைக்கும் எந்த ஆசையும் இல்லைக்கா.. ஆனா வசந்தி அம்மாக்கிட்ட வந்த்தும், நான் தப்பு செய்றவங்க தண்டனை வாங்கி கொடுக்கிற வக்கீலாக ஆகணும் என்று ரொம்ப ஆசை.. லட்சியம்னு கூட சொல்லலாம்…” என்றவளின் பேச்சில் அது நிறைவேறாமல் போன ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது. ”ஏன் ஷிவா அந்த ஆசை இப்ப இல்லையா..?” கேட்ட மஞ்சரிக்கு ஒரு புன்னைகையே பதிலாக தந்தாள்.

“கேள்வி கேட்டால் பதில் சொல்லணும் சிரிக்க கூடாது..” என்று கேலி பேசியவள், விஷ்வாவிடம்.. “என்ன விஷ்வா உங்களை நம்பி, நம்ம குடுமத்தை நம்பி வந்திருக்காங்க… அவங்களை நீங்க படிக்கவைக்க மாட்டீங்களா..?” என்று கேட்க, ”என்னடா இது இந்த விஷ்வாவிற்கு வந்த சோதனை.. ஷிவா நீ சாப்பிட்டு ரெடியா இரு உன்னை காலேஜில சேர்த்துட்டுதான் மறுவேலை…” என்று கட்டளையிட.. ஷிவாங்கி அவன் சொன்னதில் மகிழந்தாலும்,  சங்கடமாக விஷ்வாவின் குடும்பத்தை பார்க்க, “என்ன சிவா அதான் தம்பி சொல்றான்ல சாப்பிட்டு கிளம்பு..”மீனாட்சி சொல்ல, விஷ்வாவின் தந்தையும், தாத்தாவும், ஆமோதிபாக தலை அசைத்தனர்.. ஷிவாங்கிக்கு மகிழ்ச்ச்யில் கண்ணீரே வந்துவிட்டது… யாரும் அறியாமல் விஷ்வா அவள் கையை ஆறுதலாக பிடித்துக்கொண்டான்.

”அப்பறம் இன்னொரு விசயம்..” மீண்டும் மஞ்சரி ஆரம்பிக்க..’என்ன?’ என்று அனைவரும் மஞ்சரியை பார்த்தனர்… “ஷிவா.. உனக்கும் குட்டீஸ்களுக்கும்.. தினமும் சாயங்காலம் தற்காப்பு பயிற்சி கத்துக்கணும்..” என்று சொல்லவும்.. “அடியாத்தி சண்டையா..? அது எதுக்கு..?.. மீனாட்சி அதிர்ச்சியாக கேட்க.. இப்ப இருக்கிற காலத்துக்கு இது ரொம்ப முக்கியம் ஆண்ட்டி.. “ என்றவள்.. “அச்சோ உங்களை விட்டுட்டேனே.. நீங்களும் சிவாக்கூட சேர்ந்து, கராத்தே, குங்ஃபூ எல்லாம் கத்துக்குங்க. அப்பதான் அங்கிளை உங்களால சமாளிக்க முடியும்..” என்று கேளிபேச, “எனகு கார்த்தி தம்பி தெரியும், அது யாரு கண்ணு கராத்தே… அப்பறம் குங்குமப்பூ..பால போட்டு குடிப்பாங்க.. அதை எதுக்கு தனியா கத்துக்கணும்..” என்று அப்பாவியாக சொல்ல.. அவரின் பேச்சில் அனைவரும் வெடித்து சிரித்தனர்..

“ அச்சோ மை ஸ்வீட் ஆண்ட்டி…“ மஞ்சரி கொஞ்ச.. “என்னமோ வாயில வராத பேரா சொல்றிங்க..அது சரி.. ஆனா யார் கத்து கொடுப்பா..?” மீனாட்சி கேட்க, “கிரேட் இன்சல்ட்.. ஆண்ட்டி.. இங்க நான் எதுக்கு இருக்கேன்..”மஞ்சரி கேட்க.. “கண்ணூ உனக்கு சண்டையெல்லாம் போட தெரியுமா..? ஆனால் உன்னை பார்த்தால் அப்படி தெரியலையே..” மீனாட்சி ஆச்சரியமாக கேட்டார். “அது நான் சின்ன வயசிலேயே கத்துக்கிட்டேன் ஆண்ட்டி.. அப்பா கத்துக்கொடுத்தாங்க.. போட்டியிலயும் கலந்திருக்கேன்.. இதுக்காக தனியாக ஸ்கூல் வச்சிருக்கோம்..”என்று சொல்லவும்.. அனைவரும் வம்சியை நினைத்து ஆச்சரியப்பட்டனர்.. அன்றிலிருந்து ஷிவாங்கி கல்லூரிக்கு செல்ல முடிவானது.. அதே சம்யம் மஞ்சரியிடமும் தற்காப்பு கலைகள் கற்று கொள்ள ஆரம்பித்தாள்.

அலுவலகம் முடித்து வீட்டிற்கு வந்த விபா, உணவு உண்டுவிட்டு, வீட்டினரிடமும், மஞ்சரியிடமும் பேசிவிட்டு உறங்க சென்றவனை நித்திரா தேவி தழுவிக்கொண்டாள்… வேலை விசயமாக விபா யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, “வினூ..” மஞ்சரியின் அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன்.. மண்ணில் வீழந்து கிடக்க.. மஞ்சரி வலியால் துடித்து கொண்டிருந்தாள்… “அவன் பப்ளீ என்று கத்திக்கொண்டே..” எழுந்தவன் படுக்கையில் இருந்து கீழே விழுந்தான்.. உடல் நடுங்கி கொண்டிருந்தது

’சே எல்லாம் கனவு.. எவ்வளவு பயங்கரமான கனவு.. என் பப்ளி எதுக்கு அழுதா..?’ என்னை எதுக்கு கீழ தள்ளிவிட்டா..’ என்று யோசித்தவனுக்கு கனவின் தாக்கம் அப்படியே இருந்தது. இப்பவே மஞ்சரியை பார்க்கவேண்டும் போல் தோன்றிய எண்ணத்தை கட்டுப்பத்த முயன்றவனுக்கு முடியாமல் போக.. உடனே தன் காரை எடுத்து கொண்டு தன்னவளை பார்க்க சென்றான்.

 வரும்போதே விஷ்வாவிற்கு அழைத்து தான் வருவதாக சொல்லவும்…எப்பவும் விளையாட்டாக பேசும் விபாவின் குரல் இன்று பதட்டமாக ஒலிக்கவும்.. “என்ன விபா.. எதாவது பிரச்சினையா..?” கேட்டவனிடம்.. ‘வந்து சொல்றேன்..” என்றுவிட்டு போனை அணைத்தான். வீட்டிற்கு வந்ததும்.. விஷ்வா ஏதோ கேட்க வர, “ஒரு கெட்டக்கனவு.. மஞ்சரிக்கு ஏதோ ஆபத்து வந்த மாதிரி.. நான் போய் பப்ளியை பார்த்துட்டு வந்திட்றேன்…” என்றுவிட்டு மஞ்சரியின் அறை நோக்கி சென்றான்.

அங்கு மஞ்சரி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்த பிறகுதான் விபாவிற்கு நிம்மதியான மூச்சு வந்தது… தன்னவளை தனக்குள் புதைத்துக் கொள்ளும் வேகம் எழ.. மஞ்சரியின் தூக்கத்தை களைக்க மனம் வராமல் அவளையே பார்வையால் நிரப்பி கொண்டிருந்தான். சத்தம் செய்யாமல் மஞ்சரியின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டு படுக்க, அவனவளோ அது கனவென்று உணர்ந்து.. “வினூ..” என்றுவிட்டு அவன் மார்பில் முகம் பதித்துக்கொண்டாள்… அவனும் அவளை இறுக அணைத்து உறங்கிவிட்டான்.. மஞ்சரி எழும் முன்னே  எழுந்த விபா.. அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

விஷ்வாவும் அதே சமயம் வர, இருவரும் பேசிக்கொண்டு கீழ இறங்கினார்கள்.. “விபா தம்பி நீ எப்ப வந்த..? நான் உன்னை பார்க்கவே இல்லை..” மீனாட்சி கேட்க.. நேத்து நைட் வந்தேம்மா.. இங்க ஒரு வேலையா வந்தேன்.. ரொம்ப அசதியா இருந்துச்சு.. கார் ஓட்ட முடியலை அதான்.. இங்க தங்கிட்டேன்.. இப்ப கிளம்பிடேன்.. நான் கிளம்பறேன் மா..” என்று கிளம்பியவனை.. “நல்லா இருக்கு நீ பேசறது.. நைட் வந்தேன்னு சொல்ற.. சாப்பிட்டியான்னு தெரியலை.. இப்பவும் அவசரமா கிளம்பற.. இருந்து சாப்பிட்டு போ..” சொல்லவும்.. “இல்லம்மா எனக்கு நிறைய வேலை அங்க இருக்கு நேரம் இல்லை.. நான் வந்தது மஞ்சரிக்கு கூட தெரியாது.. எனக்கு காஃபி மட்டும் கொடுங்க நான் ஞாயிற்று கிழ்மை வந்து சாவகாசமா இருந்துட்டு போறேன்..” என்று சொல்ல அவர் விபாவிற்கு காஃபி கலக்க சென்றார்..

அவர் சென்றதும்.. “விஷ்வா பப்ளியை பத்திரமா பார்த்துக்கடா…” விஷ்வாவிடம் கேட்டு கொள்ள.. அவனும் ”சரிடா.. மஞ்சரியை பத்திரமா பார்த்துக்கிறேன்” என்று சொல்லவும்.. விபா மீனாட்சி கொடுத்த காஃபியை குடித்துவிட்டு சென்றான். விபா காரை செலுத்தி கொண்டிருக்க தூரத்தில் யாரொ ஓடிவருவது போல் இருக்கவும் காரை மெதுவாக செலுத்தியவன்.. அவர் பக்கத்தில் வரவும் அது பெண் என்று உணர்ந்தவன்.. காரை நிறுத்தி வேகமாக அந்த பெண்ணின் அருகில் வர..அந்த பெண்ணும் விபாவை கண்டுவிட்ட்டவளின் கண்கள் திகைப்பில் விரிந்தது.. ஏனெனில் விபா தான் அணிந்ந்திருந்த சட்டையை கழட்டியவாறே அந்த பெண்ணை நோக்கி ஓடினான்..

அந்த பெண்ணின் அருகில் வந்தவன் தான் கழட்டிய சட்டையை அவளுக்கு போர்த்தியபடி..“ஒண்ணும் இல்லமா பயப்படாத..” என்று சமாதானம் செய்ய அதுவரை தன் உயிரை கையில் பிடித்து ஓடி வந்த அந்த பெண் “எங்களை காப்பாத்துங்க அண்ணா..” என்ற சொல்லிவிட்டு மயக்கமடைந்தாள்.. விபா அவள் கன்னத்தை தட்டி.. எழுப்ப அவள் அசையவில்லை… ”பெரிய வள்ளல்…ஏதோ பூவுக்கு தேர் கொடுத்த மாதிரி சார் இவளுக்கு சட்டையை கொடுத்திருக்காரு..” என்று கிண்டல் குரல் கேட்டு நிமிர்ந்தவனின் கண்கள் நெருப்பு போல் ஜொலிக்க விபாவை கிண்டல் செய்தவன் தனையறிமாலயே இரண்டடி பின்னால் சென்றான்.

மயக்கமடைந்த பெண்ணை காரில் படுக்க வைக்க செல்ல “டேய் அவ எங்களுக்கு வேணும்… உனக்கு உன் உயிர் வேணுமின்னா மரியாதையா அவளை எங்கக்கிட்ட  கொடுத்துட்டு போ” என்று மிரட்ட, அவர்களை கண்டு கொள்ளாமல் அந்த பெண்ணை காரில் படுக்க வைத்தவன்.. தன் கைகளை பின்புரமாக கட்டிக்கொண்டு கால்களை அழுத்தமாக ஊன்றி நின்றவன்.. “அதேதான் நானும் சொல்றேன்… உயிர்மேல ஆசை இருக்கிறவங்க அப்படியே ஓடி போயிருங்க…நேத்து நைட்ல இருந்து டென்சனா இருக்கேன்.. கண்டிப்பா நான் உங்களை கொன்றுவேன்.”  என்று எச்சரித்தான்…

 “நீ ஒரு ஆள் எங்க நாலுபேரை கொன்றுவியா..? உன்னை இவ்வளவு நேரம் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறோம் பாரு..” என்றவன் கத்தியை தூக்கியபடி விபாவை நெருங்க.. அடுத்த நொடி அவனின் நாக்கு வெளியே தள்ளி கீழே விழுந்து கிடந்தான்.. “இதுக்கு பேர்தான் நாக் அவுட்.. “ இது மாதிரி யாருக்காவது வேணுமா இல்லை இதைவிட பெஸ்டா வேணுமா..?” கிண்டல் குரலில் கேட்க.. மற்ற மூவரும் ஒரே நேரத்தில் விபாவை தாக்க வர, நேற்று நடந்த கனவின் தாக்கத்தில் இருந்தவன், அதை அனைத்தையும் அவர்கள்மேல் காட்டியவன் அவர்கள் இனி வாழ்நாள் முழுதும் நடைபிணமாக இருக்கும்படி செய்தான்.

அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு வந்தவன், அவளை ஐசியூவில் சேர்த்துவிட்டு.. அவளின் நிலை அறிய அங்கேயே அமர்ந்திருந்தான்.. அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர், ”சாரி அவங்க நிலைமை  மோசமா இருக்கு.. உங்களை பார்க்கணும் சொல்றாங்க… போய் பாருங்க..” என்று சொல்ல, விபா, கனத்த மனதோடு உள்ளே சென்றான்…விபாவை பார்த்ததும், அந்த பெண்ணின் முகம் பிரகாசம் அடைந்தது… விபா அந்த பெண்ணின் அருகில் அமர்ந்து கைபிடித்து “உனக்கு ஒண்ணும் இல்லைம்மா… சரி ஆகிரும்..” என்று ஆறுதல் சொல்ல, 

“அண்ணா… அங்…க என்..னைவிட மோ..வங்க இருக்காங்க… அவங்களை காப்பாதுங்க… முடியுமா.. அண்ணா? அண்ணா நான் சாகிறது எனக்கு சந்தோசம் தான்.. இந்த வலியில இருந்து எனக்கு விடுதலை… ஆனால் இன்..னும் அங்க நி..றய பேர் இருக்…காங்கண்ணா” என்று மூச்சு வாங்க பேச.. “நான் பார்த்துக்கிறேன் மா… நீ..பதட்டப்படாமல் இப்ப போலீஸ் வருவாங்க அவங்கக்கிட்ட சொல்லு… நான் நடவடிக்கை எடுக்கிறேன்..” என்றவன் தன் செல்லை எடுத்து காவல்துறைக்கு அழைக்க விபா  சொன்ன ’போலீஸ்’ என்ற வார்த்தையில் அந்த பெண்ணின் முகம் கோபத்தையும், பயத்தையும் காட்டியது…

“போலீஸ் வே…ண்..டாம்… நீங்க..ளும் போ…லீ..”  “இல்லம்மா நான் போலீஸ் இல்லை… “நீ பயப்படாத என்ன நடந்தது என்கிட்டேயே சொல்லு நான் நடவடிக்கை எடுக்கிறேன்” என்று சொல்ல அந்த பெண்.. அவனை யாரென்று பார்த்தாள்… “நான் இந்த மாவட்ட கலெக்டர் என் பெயர் விபாகரன்..” சொல்லுமா உனக்கு என்ன ஆச்சு..? வேற யார் எங்க இருக்காங்க..”  என்று விசாரித்தவன், அவள் பேசுவதற்கு ரொம்பவே சிரமப்படவும்.. “உன் பேர் உன் முகவரி மட்டும் சொல்லுமா.. மற்றவர்கள் எல்லாரும் எங்க இருக்காங்கன்னு மட்டும் சொல்லுமா…மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்று தைரிய்மூட்டியவன்… 

தன் பெயர் ஸ்வேதா.. என்றுவிட்டு தன் முகவரியை சொன்னவள்… மற்றவர்களை அடைத்து வைத்திருக்கும் இடத்தையும் சொல்லிவிட்டு… “அவங்களை எப்படியாவது காப்பாத்திருங்….”  பேசிக்கொண்டிருக்கும்போதே பாதியிலேயே ஸ்வேதாவின் உயிர் பிரிந்திருந்தது… “ஸ்வேதா.. இங்க பாருமா..ஸ்வேதா..!” விபா அவள் கன்னத்தை தட்ட அவளிடம் அசைவில்லை… “டாக்டர்…‼!” அறை அதிரும்படி கத்தியவன்… அவன் குரலுக்கு அடித்து பிடித்துகொண்டு மருத்துவர்கள் வந்தனர்.. ஸ்வேதாவை பரிசோதனை செய்தவர்கள்.. அவள் உயிர் பிரிந்ததை உறுதி செய்ய…விபாவின் கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர் விழுந்தது…

தன் பி எ வை அழைத்தவன் ஸ்வேதாவின் பெற்றோருக்கு தகவல் சொல்ல சொல்லிவிட்டு… அலுவலகத்தில் பணிபுரியும் யாரையும் நம்பாமல்.. விஷ்வாவிற்கு விஷ்வா போனை எடுத்தும் , அவனிடம் விசயத்தை சொன்னவன், ” உனக்கு நம்பிக்கையானவங்க  போலிஸ் டிப்பார்ட்மெண்ட்ல யாராவது இருக்காங்களா? ” என்று கேட்க.. ” ம் தெரியும்…  எ.சிபி பாரத் இருக்கான் என் கிளாஸ் மேட்.. ஏன் விபா.?”  கேட்டவனிடம்.. ஸ்வேதா வைப்பற்றி சொன்னவன்.. இங்கே பாதிபேர்.. அந்த அரசியல்வாதிக்கு துணையாக இருக்காங்க.. எனக்கு நேர்மையானவங்க வேண்டும்..”

“பாரத்… நேர்மையானவன்தான்… அவனோட நம்பர் தர்றேன்… நானும் அவன்கிட்ட பேசறேன்.. எந்த இடம் சொல்லு நானும் வர்றேன்” எனவும்  “இல்லை வேண்டாம் விஷ்வா…” என்று மறுக்க . “விஷ்வா “விபா எனக்கு இங்கே பாதிபேர் தெரியும்… நான் வந்தால் உனக்கு உதவியாதான் இருக்கும் …மறுக்காதடா.. ”  என்று சொல்ல விபா சம்மதித்தான்.. விஷ்வா கொடுத்த எண்ணில் அழைத்த விபா, அந்த பக்கம் “ஹலோ  எ சிபி பாரத் ஹியர்..”  என்று அழுத்தமான குரல் கேட்க… “நான் விபாகரன்…”  என்று முடிக்கும் முன்

“குட்மார்னிங்  கலெக்டர் சார்…” என்று சொல்ல பாரத் தன்னை கண்டு கொண்டதில் மெச்சியவன்.. “நீங்கள் உடனடியாக உக்கடத்தில் இருக்கும்  அமைச்சர் தங்கபாண்டியன் கெஸ்ட் ஹவுஸ்  வாங்க… நானும் அங்கதான் கிளம்பறேன்.. இது யாருக்கும் தெரிய வேண்டாம்.. உங்களுக்கு நம்பிக்கையானவங்களை மட்டும் கூப்பிட்டு வாங்க..” என்று விட்டு  விபா அங்கு  கிளம்பினான்…  

தொடரும்….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

உன் காதல் என் காவியம் (பாகம் 2) -அத்தியாயம் 9

ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே-8